Advertisement

அத்தியாயம் -33(3)

“அவ்ளோ சீரியஸ் இல்நெஸ் இல்லையே. சிக்ஸ் மன்த்ஸ்ல திரும்ப இங்க வந்திட போறாங்க. உங்க ஃப்ளாட், மிருணா ஃப்ளாட் எதுவும் வசதி படாதுன்னா சென்னைல மிருணா பேர்ல அஞ்சு ஏக்கர்ல பெரிய வில்லா இருக்கு. அங்க போயிட்டீங்கன்னா அத்தைக்கு போர் அடிக்காது. அவங்கள எங்கேஜ்டா வச்சுக்க என்ன செய்யணுமோ செய்திடலாம்”

“நான் வந்த வேலை முடிஞ்சிடுச்சு. தேவையில்லாம உங்க டைம் வேஸ்ட் பண்ண விரும்பல, நான் வர்றேன்” என சொல்லி எழுந்து கொண்டான் விஷ்ணு.

“எனக்கு தெரியாம பெரிய ஹீரோயிசம் பண்ணி மிருணாவை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கல்ல? அந்த ஹீரோயிசத்தை இப்பவும் காட்டுங்க. அம்மா கோண்டு ஆகாதீங்க. நான் வேணாம் எந்த சொத்தும் வேணாம் நீங்கதான் வேணும்னு என்னை எதிர்த்து உங்களை மேரேஜ் பண்ணிக்கிட்டா என் சிஸ்டர். அவளை கஷ்ட படுத்த போறீங்களா? உங்க அண்ணனுங்க யாரும் அவங்க குடும்பத்தை விட்டுட்டு வந்து பார்க்க தயாரா இல்லையே. ஏன் நீங்க மட்டும் இப்படி ஒரு டெசிஸன் எடுக்குறீங்க? நான் கேள்வி கேட்டா ஒழுங்கா எக்ஸ்பிளைன் பண்ணாம என்னை அலட்சிய படுத்திவீங்களா?” கோவப்பட்டான் பிரவாகன்.

“ஒழுங்கா கேட்டா சொல்லலாம். நீங்க நினைக்கிறத என்னை செய்ய வைக்க நினைச்சா அப்படித்தான் அவாய்ட் பண்ணுவேன்” என்றான் விஷ்ணு.

மலர் தலையில் கை வைத்துக்கொண்டாள்.

இன்னும் கொஞ்சம் வாக்குவாதம் ஆனது இருவருக்குள்ளும். அண்ணா… என்னங்க… என இருவரையும் மாறி மாறி அழைத்து பொறுமை காக்க வைக்க முயன்றாள் மலர். ஆனால் பலனில்லை. அவளுக்கு கண்களை கட்டிக் கொண்டு வர மேசையில் தலை சாய்த்து விட்டாள். பின்னர்தான் இருவரும் அமைதி அடைந்தனர்.

விஷ்ணுவை அமர சொன்னவள் பிரவாகனை வாயை திறக்க கூடாது என சொல்லி விட்டு, “உங்க பிளான் அண்ணிக்கு தெரியுமா? அவங்களுக்கு ஓகே வா?” எனக் கேட்டாள்.

அவளிடம் பேசி விட்டதாக சொன்னவன், “அவ ஒத்துக்குவா” என்றான்.

“இன்னும் ஒத்துக்கலையா அண்ணி?” எங்க கேட்டாள் மலர்.

“நான் சொன்னதை மைண்ட்ல பிராசஸ் பண்ணிட்டு இருக்கா. அதெல்லாம் ஓகே சொல்வா” என்றான் விஷ்ணு.

மலரையும் விஷ்ணுவையும் முறைத்துக் கொண்டிருந்தான் பிரவாகன்.

“அவங்க பேசி முடிவு பண்ணட்டும். அண்ணி ஏதும் உங்ககிட்ட சொன்னா அப்ப நீங்க கேட்கலாம்” என கணவனிடம் சொன்னாள் மலர்.

“அறிவு சுடர் மாதிரி ரெண்டு பேரும் பேசக்கூடாது. கல்யாணம் ஆகி நாலு மாசம்தான் ஆகுது, ரெண்டு பேரும் தனி தனியா இருக்கிறத நான் விரும்பல, நான் விட மாட்டேன் அதுக்கு” என உறுமினான் பிரவா.

“உங்களால முடிஞ்சத பாருங்க” என சிலிர்த்துக் கொண்டு எழுந்த விஷ்ணு, மலரை பார்த்து, “சாரி மலர், இதுக்கு மேல பொறுமையா இவர்கிட்ட பேச முடியாது. மாசத்துல பத்து நாள் மிரு என் கூட இருக்கிறது இல்ல, அப்பவும் நாங்க தனி தனியாதான் இருக்கோம். இந்த பிரிவு மிருவுக்கு மட்டும்தான் கஷ்டமா? எனக்கில்லையா? என் அம்மாவுக்காக சில மாசங்களுக்கு இந்த ஏற்பாடு. மிரு ஃப்ரீயா இருக்கிறப்போ இங்க வர போறா. எதுக்காக இவ்ளோ கோவப்படுறார் இவர்?” எனக் கேட்டான்.

“முத உட்காருங்க ண்ணா. ஏன் இவர்கிட்ட மட்டும் இவ்ளோ ஆவேச படுறீங்க? இவர் நேச்சர் இப்படித்தான், உங்க பொறுமையான நேச்சர் என்ன ண்ணா ஆச்சு?” மலர் கெஞ்சலாக கேட்க, தலையை கோதி விட்டுக் கொண்டே அமர்ந்தான் விஷ்ணு.

“ரெண்டு பேருமே இதுல சம்பந்த பட்ட அண்ணியும் ஆன்ட்டியும் அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கல. நீங்களாவே இப்படித்தான் அவங்க நினைப்பாங்கன்னு முடிவு பண்ணி பேசிட்டு இருக்கீங்க” இருவருக்கும் கொட்டு வைத்தாள் மலர்.

“தெரிஞ்சுக்கலாம். மிரு ஓகே சொன்னாதான் இந்த ஏற்பாடு” என்றான் விஷ்ணு.

“கேட்டுகிட்டீங்க ல்ல? அண்ணிக்கு ஓகேன்னா நீங்க பேசக்கூடாது” என கணவனிடம் சொன்னாள் மலர்.

“மிருணாகிட்ட நானே கேட்டு தெரிஞ்சுக்கிறேன். அவளுக்கு மட்டும் இந்த ஏற்பாட்டுல விருப்பம் இல்லைன்னு தெரியட்டும், அப்புறம் நான் யாருன்னு காட்டுறேன் உங்களுக்கு” என பிரவா சொல்ல, சலிப்பாக மலரை பார்த்தான் விஷ்ணு.

“விடுங்களேன் ண்ணா, அண்ணிக்கு ஓகே ன்னா ஒரு பிரச்னையும் இல்ல என் வீட்டு காரருக்கு. அப்புறம் என்ன?” எனக் கேட்டாள்.

மிருணா ஒத்துக் கொள்ள மாட்டாள், அப்போது வைத்துக்கொள்கிறேன் என் கச்சேரியை என பிரவாகனும் என்னை புரிந்து கொண்டு என் மனைவி ஒத்துக் கொள்வாள், அப்போது எங்கே முகத்தை வைத்துக்கொள்வார் என பார்க்கிறேன் என விஷ்ணுவும் நினைத்தனர்.

“நீ என்ன இவருக்கு இவ்ளோ இடம் கொடுக்கிற? இப்படி இருந்தா உன் அண்ணிலாம் எனக்கு நாலு போட்டு விட்ருவா” என மலரிடம் சொன்னான் விஷ்ணு.

“ஏது… ஹலோ சின்ன மாப்ள… உங்க தங்கச்சி நாப்பது நாலாயிரம் எவ்ளோ அடி போட்டாலும் என்னை விட்டு அனுப்ப மாட்டேன்” என்றான் பிரவா.

“உங்க அடக்குமுறைலாம் எனக்கு தெரியாது பாருங்க, நீங்க தனியா வேற சொல்லணுமா?” என்றான் விஷ்ணு.

“ஹ்ம்ம்… அன்புக்கு பேரு அடக்குமுறை! இருந்திட்டு போகட்டும். நீங்க ஏன் மிருணா உங்களை விட்டு ஷூட்டிங் போறான்னு கவலை படுறீங்க? சீக்கிரம் என்னை மாமான்னு கூப்பிட புது ஆள் கொண்டு வாங்க, அப்புறம் அவ வீட்டை விட்டு எங்க போக போறா? வெயில் மழைன்னு பார்க்காம கஷ்ட பட்டு என்னை டென்ஷன் பண்ணாம குழந்தைய பார்த்திட்டு வீட்லேயே இருந்துப்பா” என்றான் பிரவாகன்.

இனி எந்த விளக்க உரையும் உனக்கு நான் தரப் போவதில்லை என விஷ்ணு அயர்ந்து போனவனாக அமர்ந்திருக்க, கணவனை கண்களால் பொசுக்கி கொண்டிருந்தாள் மலர்.

தண்ணீரை அவள் பக்கம் தள்ளி வைத்த பிரவா, “இங்கதான் இருக்க போறீங்கன்னா எங்க பிராக்டீஸ் பண்ணலாம்னு இருக்கீங்க?” என அடுத்த விஷயத்தை ஆரம்பித்தான்.

பிரவாகன் ஏதோ சொல்லப் போக, “ஸ்டாஃப்ஸ் அவ்ளோ பேர் ரிசைன் பண்ண இருக்காங்க, உங்க சித்தப்பா பண்ணின குளறு படி ஒன்னொண்ணா இப்போதான் வெளி வருது. இங்க இவ்ளோ பிரச்சனை இருக்க நீங்க என்னடான்னா…” சலித்தாள் மலர்.

விஷ்ணு என்னவென மலரிடம் விசாரிக்க அவள் விவரமாக சொன்னாள்.

“இவர் மீட்டிங் போட்டு பேசினா மட்டும் மனசு மாறி வேலை விட்டு போகாம இருப்பாங்களா? அவங்க ஒர்க் லோட் குறைக்கணும்” என்றான் விஷ்ணு.

புது ஆட்கள் எடுத்தால்தான் வேலை பளு குறையும், இந்த சமயம் அப்படி எடுப்பதில் உள்ள சிக்கலை சொன்னாள் மலர்.

“வெரி சிம்பில் மலர். ஆளுங்க ரெக்ரூட் பண்ணாம சமாளிக்க முடியாது. புது பேட்ச் பழைய பேட்ச்னு ரெண்டு பேட்ச் இருக்கட்டும். ஆல்ரெடி ட்ரைன் ஆனவங்க மட்டும் ஜே சி ஐ ஆடிட் அப்போ பார்ட்டிஸிபேட் பண்ணட்டும். புது பேட்ச்ல உள்ளவங்க இப்போ ஒர்க் லோட் குறைக்க யூஸ் ஆவாங்க. ஒன் வீக் இன்ஸ்பெக்ஷன் அப்ப மட்டும் ஒர்க் ப்ரெஷர்னா ஒர்க்கர்ஸ் ஹேண்டில் செய்துப்பாங்க” என்றான் விஷ்ணு.

மலர் விழிகள் விரித்து, “சூப்பர் அண்ணா, நல்ல ஐடியா!” என்றாள்.

தன் மாப்பிள்ளையின் புத்தி சாதுர்யமான யோசனையை கேட்டு மனதில் சிலாகித்த பிரவாகன், “ம்ம்… நல்ல யோசனைதான்” என்றான்.

“ஓகே ப்ரொசீட் பண்ணுங்க, மிரு வருவா, அவகிட்டேயும் பேசுங்க” என்ற விஷ்ணு கிளம்பி விட்டான்.

அவன் சென்றதும் “எப்படி எப்படி ஒரு பொண்ணுக்கு குழந்தை பொறந்தா… அவ வீட்லேயே இருக்கணுமா? எவ்ளோ நாஸ்டி மைண்ட் உங்களுக்கு?” கணவனை பிடித்துக் கொண்டாள் மலர்.

“இதுல என்ன நாஸ்டியா திங் பண்ணிட்டேன்? நடைமுறை இதுதானே?”

எரிச்சலை அடக்கிக் கொண்டு சிரித்தவள், “நீங்க எதையும் சரியான கோணத்துல பார்த்தாதான் நான் ஷாக் ஆகணும், வர்றேன்” என சொல்லி கிளம்பி விட்டாள்.

“புதுசு புதுசா குறை கண்டுபிடிச்சு சண்டை போடாத, கடுப்பாகுது. மொத்தமா ஒரு நாள் சண்டை போட்டு முடிச்சிடு. ஃப்யூச்சர்ல சண்டை போடணும்னாலும் அதிலிருந்து டாலி பண்ணிக்கலாம்”

கோவமாக ஏதோ சொல்ல திரும்பியவளின் கைப்பேசிக்கு விமலா அழைத்தார். அம்மாவிடம் பேசி விட்டு வைத்தவளின் முகத்தில் இரத்தம் வடிந்து விட்டது.

 பயந்து போனவன் அவளருகில் சென்று என்னவென கேட்க, “இந்த இடம் அப்பா உங்களுக்கு எழுதி கொடுத்தது வச்சு அக்காவுக்கும் மாமாவுக்கும் சண்டையாம்” என்றாள்.

“ஓ அவ்ளோதானா? சால்வ் பண்ணக்கூடிய சின்ன விஷயம் மலர்”

“எது சின்ன விஷயம்? அகிலா கோச்சுக்கிட்டு குழந்தையோட வீட்டுக்கு வந்திட்டாளாம்” என்றாள்.

“இப்ப என்ன… பணம் கொடுத்து சுமூகமா முடிக்கலாமா? இல்ல… பொண்டாட்டி வீட்ட விட்டு போற அளவுக்கெல்லாம் சண்டை போடக்கூடாதுன்னு உன் மாமாவுக்கு வேற பாஷைல சொல்லி புரிய வைக்கலாமா? எதுவா இருந்தாலும் சிறப்பா செஞ்சிடலாம், சாய்ஸ் இஸ் யுவர்ஸ்” என்றான் பிரவாகன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement