Advertisement

அத்தியாயம் -33(2)

“என் அண்ணன் எவ்ளோ பெரிய ஆள்… அவர் இடம் இது. அவர் ஒரு பார்வை பார்த்தாலே என்னவோ ஏதோன்னு அலறுவாங்க எல்லாரும். ஆனா என்னால அவமான பட்டுட்டார். ஆபரேஷன் லேட் பண்ணிட்டார்ங்கிறது தப்புதான். அதுக்கு முன்னாடி அவர் செஞ்சு கொடுத்த ஃபெஸிலிட்டி எல்லாம் ஒண்ணும் இல்லாம போயிடுச்சுல்ல? எனக்காக பொறுத்து போற என் அண்ணனை எல்லார் முன்னாடியும் விட்டு கொடுத்திட்டீங்க” என குற்றம் சாட்டினாள்.

“என் நிலைமையைதான் சொல்றேனே மிரு. நேர்ல பார்த்து சாரி கேட்டிடுறேன்”

“உங்கண்ணி அண்ணன் ஹாஸ்பிடல் ஸ்டாஃப்ஸ் எல்லார் முன்னாடியும் வச்சு போன்னு சொல்லுவீங்க. மன்னிப்பு மட்டும் ரகசியமா கேட்பிங்களா?”

“மிரு… உனக்கு தேவையானப்போ மட்டும் டீப்பா திங் பண்ணுவியா? எல்லார் முன்னாடியும் சாரி கேட்கிறதுல எனக்கொன்னும் கவுரவ குறைச்சல் இல்ல. வர சொல்லு உன் அண்ணனை, நானும் என் அண்ணன் அண்ணிய வர சொல்றேன்”

உச்சு கொட்டி சலித்தாள்.

“ட்ரமாட்டிக்கா இருக்கும்னு புரியுதா? ரியலி ஐ ஃபீல் சாரி, ஆனா உன் அண்ணன் பேசியிருக்க கூடாது” என்றான்.

“உங்கண்ணி பேசினது எல்லாம் சரியா? கேட்டுகிட்டு அமைதியா நிக்கணுமா?”

“என்கிட்ட சொல்லியிருந்தா இப்ப அண்ணன் கூட அனுப்பின மாதிரி அப்பவே வெளில அனுப்பி வச்சிருப்பேன்”

“அப்பவும் அவங்ககிட்ட எதுவும் கேட்டுக்க மாட்டீங்க?”

“இப்படி எல்லார்கிட்டேயும் பாயிண்ட் பாயிண்டா பேசிட்டு இருக்க முடியாது மிரு. என்ன லாபம்? உடனே புரிஞ்சுக்கிட்டு தப்ப அக்ஸெப்ட் பண்ணிகிட்டு சாரி கேட்க போறாங்களா? சில சமயம் கண்டுக்காம விடுறதுதான் புத்திசாலித்தனம்”

“என் அண்ணனை மட்டும் கேள்வி கேட்பீங்க?”

“காலைல ஆபரேஷன் டிலே பண்ணினது சரி கிடையாது. தனியா அழைச்சிட்டு போய்தான் இனிமே இப்படி எதுவும் செய்யாதீங்கன்னு சொன்னேன்”

அவள் அமைதியாக இருக்க, “எப்ப சென்னை போகணும் நீ?” எனக் கேட்டான்.

“இல்ல இப்ப போகல நான். அத்தை வீட்டுக்கு வரட்டும், அப்புறம் முடிவு செய்யலாம்”

“ஸ்டோரி டிஸ்கஸன் ஏதோ போகணும்னு சொன்ன?”

“ம்ம்… பரவாயில்ல”

“என்ன மிரு, என்ன நினைக்கிற சொன்னாதானே தெரியும்”

“உங்க கோவத்தை என்னால ஈஸியா ஃபேஸ் பண்ண முடியலை விஷ்ணு” சொல்லும் போதே அவளது முகம் கலங்கி சிவந்தது.

“உன்கிட்ட யோசிச்சு யோசிச்சு பழகறது இல்ல மிரு. உடனே ரியாக்ட் பண்ணிடுறேன்”

“ஓஹோ! அப்ப நானும் கோவப்படுறேன்”

“என்கிட்டதான் நீ பர்ஸ்ட் அவுட் ஆகணும். அந்த நேர கஷ்டம்னாலும் நான் பொறுத்துப்பேன். அந்த உரிமை கூட உனக்கு கிடையாதா என்கிட்ட?”

“நல்லா பேசி சமாளிக்கிறீங்க”

“சாட்டர் பாக்ஸோட ஹஸ்பண்ட் இந்தளவு கூட பேசலைனா நல்லா இருக்காது” அவளை அவன் கல கலப்பாக முயன்றாலும் அவள் முகத்தின் கலக்கம் குறையவில்லை.

“தெளிவா யோசிக்கணும் மிரு. உன்னால இங்க தங்க முடியாதுன்னு எனக்கு நல்லா தெரியும். என் வருத்தம் நேத்து நைட் நீ போனதுதான். இன்னிக்கு காலைல பெட் பாத், ட்ரெஸ் சேஞ்ச் பண்ணும் போதெல்லாம் தெரிஞ்சவங்க யாரும் கூட இல்லாம அம்மா ரொம்ப எம்பாரஸ் ஆகிட்டாங்க. அழுதிருக்காங்க மிரு. நீ இருந்திருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்?”

“ரியலி சாரி விஷ்ணு. இருன்னு நீங்க சொல்லியிருக்கலாம்ல? வேணும்னு போகல நான்”

தான் சொல்லியிருக்க வேண்டுமோ என விஷ்ணுவுக்கும் தோன்ற, நீண்ட மூச்சு எடுத்துக் கொண்டவன் “சென்னை எப்ப போற?” என மீண்டும் கேட்டான்.

இரண்டு நாட்களில் சென்னையில் இருக்க வேண்டும் என அவள் தெரிவிக்க, “நாளைக்கு நைட் கிளம்பிடு. நான் வர்ற வரை காந்தி அக்காவை உன் கூட ஸ்டே பண்ண சொல்லிடு” என்றான்.

“ஹாஸ்பிடல்ல லீவ் சொல்ல போறீங்களா?”

“அம்மா எழுந்து நடமாட சில மாசங்கள் ஆகும் மிரு. யாரு பார்த்துப்பீங்கன்னு என் அண்ணன் அண்ணிங்க கூட எல்லாம் அம்மாவை ஏலம் விட முடியாது. அம்மா சென்னை வர ஒதுப்பாங்களா தெரியலை. தெரியலை என்ன தெரியலை… அவங்க வர மாட்டாங்க. அவங்க சௌகர்யம்தான் மிரு ஃபர்ஸ்ட் பிரையாரிட்டி. யோசிச்சுதான் முடிவு செய்யணும்” என்றான்.

அத்தைக்கு சரியாகும் வரையில் இங்குதான் இருக்க போகிறான், முகத்தில் அடித்தது போல சொல்லாமல் பதமாக சொல்லி மெல்ல தன்னை தயார் படுத்துகிறான் என்பது மிருணாவுக்கு விளங்கியது.

“நான் பிரேக் எடுத்துக்கிறேன் விஷ்ணு. நீங்க இல்லாம நான் எப்படி இருப்பேன்? அத்தையையும் கவனிக்கலைன்னு கில்ட் ஆகாது எனக்கு” என்றாள்.

“உனக்கு கில்ட் எல்லாம் ஆக வேணாம், முடிஞ்சப்போ இங்க வா. பிரேக் அது இதுன்னு பேசாத. என்னிக்கும் உன் கனவுக்கு தடையா இருக்க எதையும் நான் செய்ய மாட்டேன், உன்னையும் செய்ய சொல்ல மாட்டேன். என்ன… நாம கொஞ்ச நாள் பிரிஞ்சு இருக்கிற படி வருது. மேனேஜ் பண்ணிக்குவோம் மிரு”

சரி என மிருணாவால் உடனே சொல்ல முடியவில்லை. வெளியூர் படப் பிடிப்பு என்று நாள் கணக்கில் பிரிந்து செல்வாள்தான். இப்போது மாதக் கணக்கில் ஒரு பிரிவு எனும் போது சட்டென ஏற்க முடியவில்லை.

“ரொம்ப யோசிக்காத. ப்ரெக்னண்ட் ஆகிட்டியா இல்லையான்னு கொஞ்ச மாசத்துக்கு நீயும் டென்ஷன் ஆக வேணாம்” என விளையாட்டாக சொன்னான்.

அவள் பாவமாக பார்க்க, “உனக்கும் பாதகமில்லாம அம்மாவையும் நெக்லெட் பண்ணாம வேற என்ன முடிவு எடுக்கலாம்னு நீயே சொல்லு மிரு” எனக் கேட்டான்.

தேவகியை அலைக்கழிக்கவெல்லாம் அவள் விரும்பவில்லை. அவன் சொன்னதை தவிர்த்து வேறு வழியும் தெரியவில்லை. அமைதியாகவே இருந்தாள்.

பின் அவளோடு சேர்ந்து சாப்பிட்டவன் அம்மாவை சென்று பார்த்து விட்டு அப்பாவை ஓய்வெடுக்கும் படி சொல்லி அனுப்பி வைத்தான். அம்மாவின் பக்கத்தில் மிருணாவை இருத்தி விட்டு சற்று நேரத்தில் வருவதாக சொல்லி வெளியேறி விட்டான்.

மதிய உணவுக்கு பின் கழிவுகளின் மேலாண்மை பற்றிய வகுப்பு எடுக்க சென்றிருந்த மலர் அதை முடித்து விட்டு மிருணாவை பார்த்து வர நினைத்து வருகையில் விஷ்ணுவை எதிர்கொண்டாள்.

தேவகி பற்றி விசாரித்தறிந்தவள் மிருணாவுடனும் சமாதானமாகி விட்டான் என்பதை அறிந்து கொண்டாள். உன் கணவனை காணத்தான் சென்று கொண்டிருக்கிறேன் என விஷ்ணு கூற, அவர்களை தனியாக சந்திக்க விட விரும்பாமல் மலரும் அவனோடு இணைந்து கொண்டாள்.

தன்னை தேடி வந்து ‘விசாரிக்காமல் கோவப்பட்டு விட்டேன், மன்னித்து விடுங்கள்’ என சொல்லும் விஷ்ணுவை வியப்பாக பார்த்தான் பிரவாகன்.

“உங்க தங்கைக்கு யாரும் ஆர்டர் போடக்கூடாதுன்னு நீங்க நினைக்கிற மாதிரிதான் நானும் என் வைஃபுக்கு யாரும் ஆர்டர் பண்ணக் கூடாதுன்னு நினைக்கிறேன். நாம ரிலேட்டிவ்ஸ், ஆனா வேற வேற ஃபேமிலி. தப்பு நடக்கும் போது நான் கேட்கிறதுக்கும் நீங்க கேட்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கும். மிரு விஷயத்துல என்னை மட்டும் கேள்வி கேளுங்க, மத்தவங்கள இக்நோர் பண்ணிடுங்க” என பொறுமையாக சொன்னான் விஷ்ணு.

“உங்க அண்ணிய நீங்க கேட்ருந்தா நான் ஏன் கேட்க போறேன்? நீங்க சொல்ற மாதிரி மிருணாவை வேற யாரும் பேசினா இக்நோர் பண்ண முடியாது விஷ்ணு. உங்க ஃபேமிலி மெம்பர்ஸ்கிட்ட மிருணாவை பத்தி தேவையில்லாம ஒரு வார்த்தை பேசக்கூடாது, ஒரு பார்வை பார்க்க கூடாதுன்னு வார்ன் பண்ணி வைங்க, தட்ஸ் பெட்டர்” என்றான் பிரவா.

“நான் சொன்னா கேட்டுக்குவாங்களா? அவங்க பேசினா மிருணா பதில் கொடுக்கட்டும், அவளால சமாளிக்க முடியாதப்போ நான் பார்த்துக்குவேன்”

“நீங்க ஏன் இன்னிக்கு பார்க்கல, அதனாலதான் நான் இடையில வந்தேன்”

“எனக்கு அண்ணி பேசினது தெரியலை, கேட்காதது தப்புதான், அதனாலதான் சாரி கேட்க வந்திருக்கேன் நானும்” என்றான்.

“இட்ஸ் ஓகே. அத்தையை டென் டேஸ்ல டிஸ்சார்ஜ் பண்ணிடலாம் சொல்லியிருக்காங்க. என்ன பிளான்ல இருக்கீங்கன்னு சொல்லுங்க, வேணும்கிறத அரேஞ் பண்ணி தர்றேன்” என்றான் பிரவா.

“தேங்க்ஸ், நான் பார்த்துக்கிறேன்” என்றான் விஷ்ணு.

“மிருணாவை எமோஷனலா கார்னர் பண்ணக்கூடாது, அவளால உங்க அம்மாவை கேர் பண்ணிக்க முடியாது. நான்…”

“போதும், பார்த்துக்கிறேன்னு நான்தான் சொல்றேனே… விடுங்களேன்”

“என்ன ஐடியா வச்சிருக்கீங்கன்னு சொல்லுங்க, நான் மிருணாவோட அண்ணன், யூ ஆர் ஆன்சரபில் டு மீ” எரிச்சல் அடைந்து விட்டான் பிரவா.

“என்னங்க… பொறுமையா பேசுங்க” என்றாள் மலர்.

“அட என்ன மலர் நீ? என் தங்கை…” என பிரவா ஆரம்பிக்க, “மிரு நாளைக்கு நைட் சென்னை போறா, நான் இங்க இருந்து என் அம்மாவை அவங்களுக்கு சரியாகுற வரை பார்த்துக்குவேன். போதுமா?” எனக் கேட்டான் விஷ்ணு.

“வாட்!”

மீண்டும் ஒரு முறை விளக்கமாக சொன்னான் விஷ்ணு.

“அதெப்படி! நீங்க இல்லாம மிருணா கஷ்ட படுவா. வேணும்னா உங்கம்மாவை சென்னைக்கு அழைச்சிட்டு போங்க. அத்தை ஷிஃப்ட் ஆக எவ்ளோ கம்ஃபர்ட்டா எல்லாம் பண்ண முடியுமோ நான் பண்ணி தர்றேன்” என்றான் பிரவா.

“என் அம்மாவை சென்னைக்கு அழைச்சிட்டு போக முடியாத அளவுக்கு கூட பொருளாதார வசதி இல்லாம இல்லை நான். எங்கம்மா கல்யாணம் முடிச்சு வந்ததிலிருந்து இந்த ஊர்ல இருக்காங்க. நான் பொறந்த வருஷம் இந்த வீட்டுக்கு வந்தாங்க. இதெல்லாம் அவங்க உணர்வோட கலந்த விஷயம். பகல் பொழுது எல்லாம் நானும் மிருணாவும் வீட்ல இல்லாம ஒரு கேர் டேக்கரோட சென்னை ஃபிளாட்ல அவங்கள அடைச்சு வைக்கிறது நியாயம் கிடையாது. அவங்க உணர்வுகளை மதிக்கணும், பணம் வச்சே எல்லாரையும் சேட்டிஸ்ஃபை பண்ணிட முடியாது” பொறுமையாக சொன்னான் விஷ்ணு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement