Advertisement

அத்தியாயம் -27(3)

பெய்ட் பிளாக் மருத்துவமனை ஊழியர்களுடனான மதிய மீட்டிங் பற்றி பத்மநாதன் நினைவு படுத்த, “நீங்களே பார்த்துக்கோங்க அங்கிள். வீக் எண்ட் ரெண்டு பேட்ச்சா பிரிச்சு எங்கேயாவது அவுட்டிங் அழைச்சிட்டு போக ஏற்பாடு பண்ணுங்க. மேனேஜ்மெண்ட் ஸ்பான்சர் பண்ணிடும்” என்றவன் தமனிடமும், “யாரையாவது பொறுப்பான ஆள் டை அப் பண்ணி விடு” என்றான். பத்மநாதன் சென்று விட்டார்.

 அவனது அலுவலக அறைக்கு வந்தவன் இலவச பிரிவுக்கு தேவையானவை என தயாரிக்க பட்ட லிஸ்ட் எடுத்துக் கொண்டு உடனடியாக வரும் படி கிஷோரை பணித்தான். இலவச பிரிவின் புதிய நிர்வாகி கோதண்டத்தையும் வரச் செய்தான்.

முதல் முறையாக சில நிமிடங்கள் நேரம் ஒதுக்கி அந்த லிஸ்ட்டை வாங்கி பார்த்தான் பிரவாகன்.

எதுவும் முக்கியமில்லை என பிரவாகனுக்கு தோன்றவில்லை.

“எல்லாமே அவசியம்தானே கிஷோர்?” எனக் கேட்டான்.

“ஆமாம் சார், ஆனா ஒரே நேரத்துல வாங்குற அளவுக்கு ஃபண்ட்ஸ் இல்ல. அதனால இப்படி மூணு லிஸ்ட்டா பிரிச்சிருக்கோம்” என்றான்.

விரல்களால் மேசையில் தட்டிய பிரவாகன் ஏதோ யோசித்தான். முழுதாக இரண்டு நிமிடங்கள் அமைதியாக கழிந்தன.

“இந்த லிஸ்ட்ல உள்ள எல்லாத்துக்கும் எவ்ளோ காஸ்ட் ஆகும்னு எஸ்டிமேஷன் இருக்கா?” என கிஷோரிடம் கேட்க அவனும் சொன்னான். சற்றே பெரிய தொகைதான்.

 நிமிர்ந்தமர்ந்த பிரவாகன், “ஹாஸ்பிடல்ல பேஷண்ட்ஸ் பார்க்கிற டியூட்டிலேருந்து டெம்ப்ரரியா உங்களை ரிலீவ் பண்ண சொல்றேன். இந்த லிஸ்ட்ல உள்ளதை ப்ரொக்யூர் பண்ற டீம் ஹெட் நீங்கதான். உங்க டீமுக்கு எவ்ளோ பேர் தேவைப்படுவாங்க, யார் வேணும் எல்லாம் உங்க முடிவு. ட்ரஸ்ட் ஒப்புதல் பத்தி கவலை படாதீங்க, அதை நான் பார்த்துக்கிறேன். நீங்க ரிப்போர்ட் பண்ண வேண்டியது எனக்கு மட்டும்தான், இடையில யாரும் இல்லை, புரிஞ்சுதா?” என்றான்.

கிஷோரால் நம்பவே முடியவில்லை. உற்சாகத்தோடு சரி என்றான்.

கோதண்டத்திடமும், “இவர் ஒர்க்ல யாரும் இண்டர்ஃபியர் ஆகக் கூடாது. இவர் கேட்கிறதுக்கு நீங்க நோ சொல்லக்கூடாது. இட்ஸ் மை ஆர்டர் அண்ட் சரத் மஸ்ட் ஸ்டே அவே ஃப்ரம் ஹிம்” என்றான்.

தான் பார்த்துக் கொள்வதாக சொன்ன கோதண்டம் கிஷோருடன் சென்ற பிறகு, “கிஷோர் இப்பதான் எம் பி பி எஸ் முடிச்சிட்டு வந்திருக்கார். அவர்கிட்ட இவ்ளோ பெரிய பொறுப்பை ஒப்படைக்குறீங்க சார்?” எனக் கேட்டான்.

“வயசுக்கும் புத்தி சாலித்தனத்துக்கும் என்ன சம்பந்தம். நான் இங்க வரும் போது என் வயசு தெரியாதா உனக்கு? சின்ன பையன்னு எனக்கு கோ ஆபரேட் பண்ணாம எவ்ளோ சண்டித் தனம் செஞ்சாங்க. சமாளிச்சு இப்ப எல்லாரையும் கண்ட்ரோல்ல வச்சிக்கல நான்?” எனக் கேட்டான்.

உண்மைதான். அந்த சமயம் பிரவாகன் எதிர்கொண்ட சவால்கள் அதிகம். அப்போதே அவனின் உதவியாளராக சேர்ந்தவன் தமன். முதலாளி உதவியாளன் என்பதை தாண்டிய உறவு அவர்களுடையது. அதன் காரணமாகத்தான் தமனும் சில சமயங்களில் சலுகையாக பேசுவான், பிரவாகனும் தவறாக எடுத்துக் கொள்வதில்லை.

“நிறைய சமயம் என் பொண்டாட்டிக்கு ஸ்க்ரூ கொடுக்கிறதே இந்த கிஷோர்தான். ப்ரைனி… சொன்ன வேலையை நல்லா செய்வான்” என்றான் பிரவா.

 “என்ன சார் இதெல்லாம்? ஒரு நாள்ல இப்படி தலைகீழா நிக்குறீங்க? ஹாரிஸாண்டல் பொஸிஸன்ல பறக்குறீங்க…” என்றான் தமன்.

ஒரு சிரிப்புடன் நேரத்தை பார்த்த பிரவா, “மலருக்கு க்ரேப்ஸும் மேங்கோவும்தான் ஃபேவரைட் ஃப்ரூட்ஸ்” என்றான்.

“புரிஞ்சுது சார்…” என்ற தமன் அகல போக, “தமன்…” என அழைத்து அவனை நிறுத்தினான். அடுத்து பிரவாகன் சொன்னதில் தமனின் வாய் பிளந்து கொண்டது.

அதிர்ச்சி நீங்கி, “சார்?” என்றான் தமன்.

“வாட்?”

“மேடம் மேலே உங்களுக்கு எவ்ளோ லவ் இருந்தா ஃப்ரீ பிளாக் மேல அக்கறை வந்திருக்கும். என்னென்ன மாதிரிலாம் அவங்கள இம்ப்ரெஸ் பண்றீங்க? உங்க லவ் பார்த்து ஷாக் ஆகுது சார் எனக்கு?”

“நீ என்ன நினைச்சிட்டு இருக்க? திடீர்னு எனக்கு ஃப்ரீ பிளாக் மேல அக்கறை பொத்துக்கிட்டு வந்திட்டுன்னா? பார்க்க உனக்கு அப்படியா தெரியுது?” என பிரவா கேட்க ஆம் என தலையாட்டினான் தமன்.

“நான் மாறல, அப்படியேதான் இருக்கேன். கோடி கோடியா செலவு பண்ணி நகை புடவைனு எல்லாம் அவளை ஹேப்பி ஆக்க முடியாதுன்னு புரிஞ்சு போச்சு. ஃப்ரீ பிளாக் டெவலப் பண்ணல நான், கோடிக் கணக்கா செலவு பண்ணி அவளை சந்தோஷ படுத்துறேன். இப்ப செய்றது எல்லாமே அவளுக்காக மேன்”

“எல்லாத்துக்கும் லிமிட்ஸ் இருக்கும் இருக்கும்னு சொல்வீங்களே சார்? பியாண்ட் த லிமிட்ஸ் போயிட்டிருக்குங்க சார் உங்க லவ்” என கிண்டல் செய்தான் தமன்.

“டோண்ட் செட் எனி லிமிட்ஸ் டு எக்ஸ்ப்ரஸ் யுவர் லவ் (உன் அன்பை வெளிப்படுத்த எந்த வரம்பையும் அமைத்துக் கொள்ளாதே)” கண்களை சிமிட்டி சொன்னான்.

“எப்போலேருந்துங்க சார் இந்த புது கொள்கை?”

“யோவ் போய்யா!” என்ற பிரவாகனுக்கு இரட்டைக் குழந்தைகளோடு மலர் நிற்கும் காட்சி கற்பனையில் விரிய மனது நிறைந்தது.

மலரை பார்க்க வந்திருந்த கிஷோர் பிரவாகனின் ஏற்பாட்டை பற்றி கூறி அவளை டீலக்ஸ் வார்டு செல்லும் படி கூறினான்.

தான்தான் தன் கணவனின் பலவீனம் என்பதை உணர்ந்து கொண்டிருந்த மலர் இப்படி எதையாவது எதிர்பார்த்தாள்தான். ஆனால் இத்தனை விரைவாக அல்ல.

“இன்னும் எதுவும் நடக்கலைதானே கிஷோர். நான் இங்க இருக்கிறதால நல்லது நடக்கும்னா இருந்திட்டு போறேன்” என சொல்லி அவனை அனுப்பி விட்டாள்.

முன் மாலையில் பிரவாகன் மலரை காண சென்ற போது அவள் உறங்கிக் கொண்டிருந்தாள். சற்று நேரம் வேண்டாம் என அவள் கேட்டுக் கொண்டதன் பெயரில் ட்ரிப்ஸ் நிறுத்தியிருந்தனர்.

வாந்தி ஓரளவு மட்டு பட்டிருந்ததாகவும் ஓய்வறை உபயோகிக்க போனவள் மீண்டும் வாந்தி எடுத்ததாகவும் சொன்னார் விமலா.

ஏசி மாட்ட வந்தவர்கள் சுவரில் பொருத்த முயன்ற போது அந்த சத்தம் தலைவலியை உண்டாக்குவதாக மலர் சொல்ல அந்த வேலை நின்று விட்டது.

மலரை உற்று பார்த்தான் பிரவா. அயர்ந்து போய் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். இதற்கு மேலும் இவளை இங்கு வைப்பது உசிதமல்ல என நினைத்தான்.

விமலாவிடம் சத்தம் செய்யாதீர்கள் என எச்சரிக்கை செய்தவன் மலரை அலுங்காமல் கையில் எடுத்து தோளில் போட்டுக் கொண்டான்.

விமலாவும் அங்கிருந்த செவிலியர்கள் மற்றும் நோயாளிகளும் ஆ என பார்த்திருக்க நிதானமாக வாரடை விட்டு வெளியேறினான்.

தமன் லிஃப்ட்டை திறந்து வைத்து விட்டு காத்திருக்க அவன் மலரோடு லிஃப்ட்டில் நுழைந்தான். விமலாவும் தமனும் கூட நுழைந்தனர். லிஃப்ட்டின் கதவு மூடிய சத்தத்திற்கு லேசாக தலையை புரட்டினாள். ஆனால் அவளது உறக்கம் கலையவில்லை.

தரை தளம் வந்த பின் லிஃப்ட்டின் கதவு திறக்க பட அந்த சத்தத்தில் நன்றாக விழித்துக் கொண்டவள் கணவனிடமிருந்து விடு பட திமிறினாள்.

லிஃப்ட்டின் வெளியே வந்து இறக்கி விட்டவன் அவள் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டே, “கூட்டம் அதிகம் இல்லைனாலும் ஆளுங்க இருக்காங்க. எனக்கொன்னும் இல்லை, நீதான் எல்லார் முன்னாடியும் தூக்கிட்டு போய் எம்பாரஸ் பண்றேன்னு சொல்வ. காப்ரா பண்ணாம ஒழுங்கா நான் சொல்றதை கேட்டா நல்லது” என மிரட்டலாகவே சொன்னான்.

அவனை கோவமாக பார்த்தவள் கையை உதறினாள். இப்படி பார்த்து பார்த்து எல்லாம் செய்யும் மாப்பிள்ளையிடம் ஏன் இத்தனை முரண்டு பிடிக்கிறாள் என கோவம் கொண்ட விமலா மகளை திட்டினார்.

“விடுங்கத்தை, பேசுறதெல்லாம் வேஸ்ட்!” என்ற பிரவா தமனை பார்க்க, “பேட்டரி கார் ரெடியா நிக்குதுங்க சார்” என்றான்.

மலரை மீண்டும் அவன் தூக்க போக நடந்தே வருகிறேன் என ஒத்துக் கொண்டாள்.

“நடக்க உன்கிட்ட தெம்பு இல்ல” என்றவன் வீல் சேரில் அழைத்து போய் பேட்டரி காரில் அமர வைத்து அவனும் ஏறிக் கொண்டான். வாகனம் புறப்பட்டது. இன்னொரு வாகனத்தில் தமனும் விமலாவும் வந்தனர்.

“எவ்ளோ சேட்டை பண்ற? என் பசங்க வரட்டும், உன்னை எப்படி படுத்தி வைக்கிறாங்கன்னு மட்டும் பாரு” என்றான்.

‘உங்கள விடவா?’ எனும் பார்வை பார்த்தாள்.

“கரெக்ட்தான் என்னை விட என் பசங்களால கூட உன்னை படுத்தி வைக்க முடியாது, லவ் பண்ணவும் முடியாது” அவளுக்கு மட்டும் கேட்கும் படி சொன்னான்.

அவளுக்கு தலை சுற்றுவது போலிருந்தது. அவளது மடியிலேயே தலை கவிழ்த்துக் கொள்ள போனவளை தடுத்து தன் மடியில் சாய்த்துக் கொண்டான் பிரவாகன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement