Advertisement

அத்தியாயம் -25(2)

மலர் அவளது பிறந்த வீட்டில் நுழைய, அவளுக்கு முன் அங்கு காத்திருந்தான் பிரவாகன். அவளது பெற்றோரும் கவலை தாங்கிய முகங்களோடு இருந்தனர். அக்காவை பாவமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் பரத்.

மலர் குழப்பமாக அவளது அப்பாவை பார்க்க, “இன்னிக்கு ஹாஸ்பிடல்ல உன்னை அட்டாக் பண்ண வந்த வீடியோ எல்லாம் மாப்ள காட்டினார் மா. அவர் உன் நல்லதுக்குத்தானே ம்மா சொல்றார்? ஏற்கனவே உன் ப்ரெக்னன்ஸில ஒரு பிரச்சனை வந்து எங்ககிட்ட கூட சொல்லாம எவ்ளோ வருத்த பட்ருக்கீங்க ரெண்டு பேரும்? எந்த பொறுப்பும் உனக்கு வேணாம் மலர், உன் நன்மைக்காக எங்க நிம்மதிக்காக ரிசைன் பண்ணிடு” என்றார்.

மலர் கோவமாக தன் கணவனை பார்க்க, “அவரை ஏன் டி முறைக்கிற? உன் நல்லதுக்குத்தானே அவர் சொல்றார்?” என ஆரம்பித்த விமலாவும் மலரை அவளது பொறுப்பிலிருந்து விலக வலியுறுத்தினார்.

பிரவாகன் முன்னிலையில் பெற்றோரை எதிர்த்து பேச விருப்பமில்லாமல் அறைக்குள் சென்று விட்டாள். செல்வமும் விமலாவும் மலரை விடவில்லை. இறுதியாக அவளது பெற்றோரை வைத்தே வற்புறுத்த செய்து கடிதத்தில் அவளது கையொப்பம் பெற்றுக் கொண்டான் பிரவாகன்.

காரில் அவர்களது வீடு செல்லும் போது கணவனின் பக்கம் திரும்பக் கூட இல்லை மலர். வீடு வரவும் அவனை கண்டு கொள்ளாமல் இறங்கி நடந்தாள்.

கீர்த்தி அவளது பிள்ளைகளுடன் வந்திருந்தாள். வெளியில் இருந்த தோட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

“வா மலர், உன்னை பார்க்கத்தான் வந்தோம். உனக்கு பாப்பா வரப் போகுதுன்னதும் பசங்க ரொம்ப எக்ஸைட் ஆகிட்டாங்க. அவங்கள விட்டுட்டு உன்னை பார்க்க வந்திட்டேன்னு ரொம்ப கோவம். இன்னிக்குத்தான் இவங்கள ஃப்ரீ பண்ணி அழைச்சிட்டு வர முடிஞ்சது” என்றாள்.

வீட்டுக்குள் செல்லாமல் அவர்களுடனே அமர்ந்து பேச ஆரம்பித்து விட்டாள் மலர். பிரவாகன் வரவும் ஹ்ருதிக் ஓடி சென்று மாமனை கட்டிக் கொண்டான். குழந்தையை அவன் தூக்கிக் கொள்ள மாமன் காதில் எதுவோ சொன்னான் ஹ்ருதிக்.

கைப்பேசி எடுத்து ஏதோ காண்பித்து அவனிடம் பிரவாகன் பேசிக் கொண்டிருக்க, கவனித்த கீர்த்தி, “என்ன கேட்கிறான் உன்கிட்ட பிரவா? வாங்கித் தராத” என அதட்டல் போட்டாள்.

“டாய்ஸ் வாங்க கூட ரெஸ்ட்ரிக்ஷன்ஸா க்கா?” ஹ்ருதிக் நெற்றியில் மோதி விளையாடிக் கொண்டே கேட்டான்.

“கேட்டதெல்லாம் உடனே உடனே வாங்கி தரணும்னு இல்ல பிரவா”

“நீ கண்ட்ரோல்டா வச்சுக்க க்கா. என்கிட்ட கேட்டா கிடைக்கும்னு நம்பிக்கையோட கேட்கிறான். முடியாதுன்னு என்னால சொல்ல முடியாது” என்றவன் வீட்டில் இருக்கும் உதவியாளரை உடனே அழைத்து விட்டான். குழந்தை ஆசையாக கேட்ட விலையுயர்ந்த ரிமோட் ஹெலிகாப்டரை கைப்பேசியில் காட்டி உடனே வாங்கி வரும் படி உத்தரவிட்டான்.

மாமனுக்கு கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு “தேங்க்ஸ்” என சொல்லி இறங்கிக் கொண்டான் ஹ்ருதிக்.

உடனே அவனது மருமகள்களும் மாமனிடம் செல்ல எரிச்சலாக பார்த்தாள் கீர்த்தி.

“இப்போல்லாம் எதுவும் வாங்கி தர முடியாதுன்னு சொன்னா பிள்ளைங்க அலட்டிக்கிறதே இல்லை. இவன்கிட்ட கேட்டு வாங்கிக்கலாம்னு நினைக்குதுங்க. எதுவா இருந்தாலும் இவன் செய்வானா? ஃப்யூச்சர்ல இந்த பிள்ளைங்க ஏதாவது ஃபெயிலியர் வந்தா எப்படி ஃபேஸ் பண்ணுவாங்க?” என்றாள் கீர்த்தி.

எப்போதாவது இப்படி என்றால் பரவாயில்லை. ஆனால் மலர் கவனித்திருக்கிறாள், அக்காவின் பிள்ளைகள் எது கேட்டாலும் அது எத்தனை விலை மதிப்புடையது என்றாலும் வாங்கித் தந்து விட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பான்.

“இங்க வரும் போதுதானே அண்ணி, வீட்ல நீங்க அட்வான்டேஜ் கொடுக்கிறது இல்லைதானே, விடுங்க அண்ணி” சமாதானமாக சொன்னாள் மலர்.

பிள்ளைகள் விளையாட சென்று விட, இவர்களின் பக்கம் வந்தவன், “மிடில் கிளாஸ் பிள்ளைகளைதான் அப்படி ஃபெயிலியர் ஃபேஸ் பண்ண தயார் படுத்தணும். என் வீட்டு பிள்ளைங்களுக்கு நினைச்சத எப்படி நடத்திக்கணும்னு சொல்லி தந்து வளர்க்கணும். என் அக்கா பசங்களுக்கு எங்க கேட்டா காரியம் ஆகும்னு நல்லா தெரியுது. தே ஆர் வெரி ஸ்மார்ட்!” என்றான்.

“என் பசங்க உன்னை மாதிரி எப்படியாவது காரியம் சாதிச்சுக்கிறவங்களா வளர வேணாம்” என்றாள் கீர்த்தி.

“சரி உன்னை போல அறிவாளிங்களாவே வளரட்டும். என்னை போல வளர ஆள் வரப் போகுது” என்றான் பிரவா.

திகைத்துப் போன மலர் சட்டென எழுந்து நின்றாள்.

“ஹேய் என்ன?” என பிரவாவும், “மெல்ல எழக் கூடாதா மலர்?” என கீர்த்தியும் ஒரே நேரத்தில் கேட்டனர்.

சின்ன மகளிடம் கைப்பேசியில் பேசிக் கொண்டே வந்த அரசி, மிருணா தொடர்பில் இருக்கும் போதே, “பாரு கீர்த்தி, உன் தங்கைக்கு கழுத்து சுளுக்காம், கை வைத்தியம் என்ன செய்யன்னு கேட்குறா” என்றார்.

“விஷ்ணு வீட்ல இல்லயா?” எனக் கேட்டாள் கீர்த்தி.

“விஷ்ணு வர நைட் ஆகிடுமாம், மாப்ள தம்பிய டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு என்கிட்ட கேட்குறா” என்றார்.

“அவளுக்கு தேவை படற நேரத்துல அவர் வீட்ல இருக்க மாட்டார்” கடுப்பாக சொன்னான் பிரவாகன்.

“நீ ஆரம்பிக்காத ப்பா, சும்மா சின்ன வலிதானாம், கொஞ்சம் டிஸ்கம்ஃபோர்ட்டா இருக்குதாம்” என மகனிடம் சொன்ன அரசி, மருமகளிடம், “என்ன செய்யலாம் மலர்?” எனக் கேட்டார்.

கைப்பேசியை தான் வாங்கிக் கொண்ட மலர் மிருணாவிடம் பேசினாள். வாட்ஸ் ஆப்’பில் ஸ்ப்ரே மற்றும் மாத்திரையின் பெயர் அனுப்பி வைப்பதாக சொன்னாள்.

கேட்டுக் கொண்டிருந்த பிரவா, “அவளே வலில இருக்கா, எப்படி போய் வாங்குவா? எனக்கு வாட்ஸ் ஆப் பண்ணு மலர், நான் அரேஞ் பண்ணி கொடுக்கிறேன்” என்றான்.

ஏற்கனவே இவனது தலையிட்டால் அங்கு கணவன் மனைவிக்குள் சல சலப்பு வருகிறது என மாமியார் மூலமாக அறிந்திருந்த மலர், “அங்க செக்யூரிட்டி யாரும் இருப்பாங்க, அண்ணியே பார்த்துப்பாங்க” என்றாள்.

“எனக்கு அனுப்புன்னு உன்கிட்ட சொன்னேன்” என பிரவா சொல்ல, மாமியார் மற்றும் நாத்தனாரின் முகங்களை பார்த்தாள் மலர்.

“நான் பேசினா எனக்கு பதில் சொல்லு, அவங்க ஃபேஸஸ் ஏன் பார்க்கிற?” எனக் கேட்டான்.

“ஏன் பிரவா இரிடேட் ஆகுற? அவ்ளோ எமர்ஜென்ஸி இல்லையே இது. மிருணா மேனேஜ் பண்ணிக்குவாடா” என்றாள் கீர்த்தி.

“ஓ என் சிஸ்டருக்கு நான் எதுவும் செய்ய அவளுக்கு எமர்ஜென்சி சிச்சுவேஷன் வரணுமா?” அக்காவிடம் கோவம் கொண்டவன், மலரிடம், “எனக்கு அனுப்புறியா? இல்லைனா மிருணாவை பார்க்க வேற டாக்டரை அங்க அனுப்பி வைக்கவா?” எனக் கேட்டான்.

“இவனுக்கே அனுப்பு மலர், அவளும் வலின்னு சொல்றாளே” என்றாள் கீர்த்தி.

அவனது கைப்பேசிக்கு அனுப்பி விட்டு வீட்டிற்குள் சென்று விட்டாள் மலர். அரசி பேரப் பிள்ளைகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.

மருந்துகள் தங்கைக்கு சென்று சேரும் படி செய்த பிரவா எழ, “உனக்கும் விஷ்ணுவுக்கும் டெர்ம்ஸ் சரியில்லை. கொஞ்ச நாள் ஒதுங்கி இரேன் பிரவா” என்றாள் கீர்த்தி.

உடனே அக்காவின் முன் சட்டமாக அமர்ந்து கொண்டவன், “ஓகே… ஒரு விவாதத்துக்கே வச்சுப்போம். இப்ப எனக்கு கால்ல முள் குத்திடுச்சுன்னு வை. சின்ன பிராப்லம்தான், மலர் வந்து பார்க்கட்டும்னு நீ வேடிக்கை பார்ப்பியா க்கா?” எனக் கேட்டான்.

“உன் கால்ல உள்ள முள்ளை எடுக்கதான் எனக்கும் தோணும் பிரவா. ஆனா அதை நான் ரிமூவ் செய்றதால உனக்கும் மலருக்கும் பிராப்லம் வரலாம்னு தெரிஞ்சா நான் முள்ளை எடுக்க மாட்டேன். அஞ்சு நிமிஷம் நீ கஷ்ட படறதால உங்களுக்குள்ள சண்டை வராதுன்னா சின்ன சின்ன விஷயங்கள்ல தலையிடாம போயிடுவேன். என் தம்பி லைஃப் ஸ்மூத்தா போறதுதான் எனக்கு முக்கியம்” என்றாள் கீர்த்தி.

“அப்படி ஏன் போகணும் நீ? என் தம்பி கஷ்ட படறதை பார்க்க முடியாம ஹெல்ப் பண்ணினா உனக்கு ஏன் கோவம் வருது, நீ ஏன் என் தம்பி கூட சண்டை போடுறேன்னு மலர்கிட்ட கேட்கணும்தானே நீ? ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் மட்டும் இல்ல லைஃப். பேரெண்ட்ஸ் சிப்லிங்க்ஸ் எல்லாரும் சேர்ந்து நல்லா வாழறதுதான் லைஃப்” என்றான்.

“இல்லேன்னு எங்க சொன்னேன் பிரவா? முதல்ல உனக்கும் விஷ்ணுக்கும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வரட்டும். இப்ப மலருக்கு தேவையானதை நீ செய்றதானே… உனக்கு எந்த சான்ஸும் தராம பரத்தே மலருக்கு எல்லாம் செஞ்சா உனக்கும் இரிடேட் ஆகும்தானே …” என கீர்த்தி கேட்க, அவனிடம் நக்கல் சிரிப்பு.

“என்னடா?”

“மலருக்கு பரத் செய்ற சான்ஸ் நான் எங்கக்கா தர்றேன்? என்ன பிஸியா இருந்தாலும் மலருக்கு வேணுங்கிறப்போ நான் அவ பக்கத்துல நிப்பேன். மிருணா சென்னைல நம்மள விட்டு தூரமா இருக்கா, அப்போ விஷ்ணு அவளை நல்லா கவனிச்சுக்கணும் தானே? என் சிஸ்டருக்கு நான் செய்ய விஷ்ணுதான் எனக்கு சான்ஸ் தர்றார், உனக்கு புரிஞ்சுதா க்கா?” என்றான்.

“ஒரு வார்த்தை வச்சு மடக்குவ டா. நீயும் விஷ்ணுவும் ஒண்ணு இல்ல. உங்க ஒர்க் நேச்சர் வேற வேற. உட்கார்ந்த இடத்திலேருந்து எல்லாம் தெரிஞ்சுக்க முடியும் உன்னால. அவருக்கு எப்படி சாத்திய படும்? என்ன வேலை செய்யணும்னு உன் சபார்டினேட்ஸுக்கு ஆர்டர் போட்டுட்டு உடனே மலர்கிட்ட ஓடலாம் நீ. விஷ்ணு ஒரு பீடியாட்ரிஸியன். பேஷண்ட்டை பாதி ட்ரீட்மெண்ட்ல விட்டுட்டு அவரால போக முடியுமா?” எனக் கேட்டாள்.

அதற்கும் அவன் ஏதோ பதில் தர போக, “போதும் டா, நாம இன்னிக்கு இத்தோட நிறுத்திக்கலாம். இப்ப உன்கிட்ட ஆர்க்யூ பண்ற மூட்ல இல்ல நான். போய் மலரை பாரு, உன்னை மாதிரியே பேபி வரப் போகுதுன்னு ஷாக் ஆகிட்டா”

அக்காவை நெருங்கி அமர்ந்தவன் ரகசிய குரலில், “அது பேபி மேல ரொம்ப பாசமா பேசுறேனா… எங்க அவளை விட குழந்தையை அதிகமா லவ் பண்ணிடுவேனோன்னு பயம் அவளுக்கு. இட்ஸ் கால்டு பொஸஸிவ்நெஸ்” என்றான்.

கீர்த்தி “நம்பிட்டேன் நம்பிட்டேன் போடா” என கிண்டலாக சொல்ல, “நம்புக்கா, ஷீ லவ்ஸ் மீ பியாண்ட் த வேர்ல்ட் (அவள் என்னை இந்த உலகத்தை தாண்டி நேசிக்கிறாள்)” என சிரிப்போடு சொல்லி வீட்டுக்குள் செல்ல நடந்தான்.

“போன வேகத்துல அடி வாங்கிட்டு திரும்பி வராத” என்ற கிண்டலான கீர்த்தியின் குரல் பிரவாகன் காதில் விழ, “அடி வாங்கினாலும் எங்களுக்குள்ள ரகசியமா வச்சுப்போம். வெளிய கசிய விட மாட்டேன்” என சொல்லிக் கொண்டே சென்று விட்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement