Advertisement

அத்தியாயம் -24(2)

“நீ சாப்பிடு, எனக்கு வேணாம்” என்றான்.

“சாப்பாடு மேல கோவப்படாதீங்க விஷ்ணு. எனக்கு சமையல் சுத்தமா வராதுன்னு அண்ணனுக்கு தெரியும், அதான் காந்தி அக்காவை வேலைக்கு வச்சுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோமே. அத சொன்னா இனிமே இப்படி செய்ய சொல்ல மாட்டார். அண்ணாக்காக நான் சாரி கேட்டுக்கிறேன்”

அவளை பிடித்து அருகில் இழுத்துக் கொண்டவன், “உன் அண்ணனுக்காக நீ ஏன் சாரி கேட்கணும்? நார்மலா ரிலேட்டிவ்ஸ்க்குள்ள இப்படி ஊருக்கு போயிட்டு வந்தா எல்லாம் ஹெல்ப் பண்ணிக்கிறது நார்மல்தான். ஆனா உன் அண்ணா… எப்படி சொல்ல… வலுக்கட்டாயமா நம்ம மேல திணிக்கிறார்” என்றான்.

“எனக்கு புரியுது விஷ்ணு, நான் சார்ட் அவுட் பண்றேன்” என சொல்லி அவனை சாப்பிட அழைத்து சென்றாள்.

சாப்பிட்டுக் கொண்டே இந்த வார இறுதியில் நெய்வேலி செல்ல போகும் விஷயத்தை சொன்னான் விஷ்ணு.

“ஓ நோ விஷ்ணு. படத்தோட எடிட்டிங் ஒர்க் இருக்கும், நான் சென்னைலதான் இருக்கணும்” என்றாள்.

“வர்றேன்னு சொல்லிட்டேன் மிரு, வேற ஏதாவது ஆல்டர்நேட் செய்ய முடியாதா?”

“நான் இல்லைனா கூட ஒர்க் நடக்கும், பட் இருக்கிறது எனக்கு நல்ல ஆப்பர்ச்சுனிட்டி. விருந்தெல்லாம் காரணம் காட்டி அதை இழக்க விரும்பல நான். நெய்வேலி ப்ரோக்ராமை நீங்கதான் தள்ளி வைக்கணும்” என்றாள்.

அவன் யோசனையாக, “பிராப்லம் ஆகுமா? ஆனாலும் நெய்வேலி வர்றது முடியாது விஷ்ணு” இயலாமையோடு சொன்னாள்.

“உன்கிட்ட டிஸ்கஸ் பண்ணாம ஓகே சொன்ன எம்மேலதான் தப்பு மிரு. வீக் எண்ட்தானே, ஒரு நாள்ல போயிட்டு வந்திடலாம்னு நினைச்சு சொல்லிட்டேன். முன்னாடியே முடியாதுன்னா சொன்னா அது வேற மாதிரி, இப்ப சொன்னா வேற மாதிரி பேச்சு போகும்” என்றான்.

அவள் குழப்பமாக பார்க்க, “நீ சொன்னதை கேட்டுட்டுதான் வரல, யாரையும் மதிக்க மாட்டேங்கிறோம் அப்படினு பேச்சு போகும்” என்றான்.

“நான் சொன்னதாலதான் கேன்சல் பண்றீங்க. ஆனா இதுல டிஸ்ரெஸ்பெக்ட் எல்லாம் எங்கேருந்து வருது?”

“லீவ் இட் மிரு, நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்” என விஷ்ணு சொல்ல, அத்தோடு அந்த பேச்சை முடித்துக் கொண்டனர்.

உணவுக்கு பின் அண்ணனின் தலையீடு எங்கள் வாழ்க்கையில் அதிகம் இருக்க வேண்டாம் என அக்கா அம்மா இருவரிடமும் பேசி அவர்களின் வக்காலத்துடன் காந்திமதி அக்கா எங்கள் வீடு வந்து சமைக்கட்டும் என பிரவாகனின் சம்மதத்தை பெறுவதற்குள் மிருணாவுக்கு கண்களை கட்டிக் கொண்டு வந்தது.

“இதை முன்னாடியே உன் ஹஸ்பண்ட் செய்யலைதானே? நல்லா பார்த்துப்பேன் நல்லா பார்த்துப்பேன்னு பாரா பாராவா டயலாக் பேசினா மட்டும் போதாது” குறையாக சொன்னான் பிரவா.

“அவர் என்னை நல்லாத்தான் பார்த்துக்கிறார். சென்னை வந்த அன்னிக்கே நான் இங்கேருந்து போயிட்டேன், இன்னிக்கு சமைக்க ஆள் வைக்கலாம்னு சொல்லிட்டார், ஆம் வெரி மச் ஹேப்பி வித் ஹிம் அண்ணா, டோண்ட் ஸ்பாயில் அவர் ஹார்மோனியஸ் ரிலேஷன்ஷிப்(எங்களுடைய மனதிற்கு இசைவான உறவுநிலையை கெடுக்காதே)”

“நான் ஸ்பாயில் பண்றேனா? நேத்து கூட அரை மணி நேரம் உன் கார்ட்(பாதுகாவலர் ) அமைதியாதான் இருந்தார். நீ யாருக்கோ கால் பண்ணி அவங்க அட்டெண்ட் பண்ணல, டென்ஸ்டா இருக்கேன்னு அவர் சொல்லவும்தான் உன்னை வீட்ல விட சொன்னேன்”

“பிஸியா இருக்கும் போது என் கால் எப்படி அட்டெண்ட் பண்ணுவார்? இதெல்லாம் நார்மல் அண்ணா. அவரோட பிரையாரிட்டி அப்போ பேஷண்ட் அண்ணா”

“என் வீட்டு பிரின்சஸ் கல்யாணம் பண்ணிக்கிட்டா அவதான் எப்பவும் ஃபர்ஸ்ட்டா இருக்கணும். மிட்நைட்ல உன்னை ஒரு இடத்துல தனியா அவர் விட்டது சரின்னு ஆர்க்யூ பண்ணாத”

“ஆள் நடமாட்டம் உள்ள பிளேஸ்லதான் நான் இருந்தேன்”

“பத்து நாளா டே அண்ட் நைட் ஹார்ட் ஒர்க் பண்ணிட்டு தூங்கி வழிஞ்சிட்டு உட்கார்ந்திருந்த”

“ஆம் டயர்ட் அண்ணா” சோர்வாக சொன்னாள் மிருணா.

“ஏன் டயர்ட்? எதுவும் வீட்டு வேலை செய்ய சொல்றாரா உன் ஹப்பி?”

“என் டைரக்டர்கிட்டேருந்து கால் வருது, உனக்கு நான் அப்புறமா பேசுறேன் ண்ணா” என்றவள் அழைப்பை துண்டித்து விட்டாள்.

தனக்கு முக்கியமான மெடிக்கல் கான்ஃப்ரன்ஸ் இருப்பதை மறந்து விட்டு விருந்துக்கு சரி என சொல்லி விட்டேன், இந்த வாரம் நெய்வேலி வர இயலாது, பின்னொரு சமயம் பார்க்கிறேன் என விஷ்ணு தன் அண்ணனிடம் சொல்ல, அடுத்தடுத்து அவனது அத்தை, அப்பா, அண்ணி போன்றோரிடமிருந்து வரிசையாக அழைப்புகள்.

மிருணாவின் பெயரை இழுக்காமல் நிஜமாகவே தன்னால்தான் விருந்துக்கு வர முடியவில்லை என தம் கட்டி பேசி ஓரளவு அவர்களை சரி கட்டிய விஷ்ணு அலைபேசியை வைக்க அவனது நாக்கு ஒட்டு மொத்தமாக உலர்ந்து போயிருந்தது.

எதற்கும் அம்மாவிடம் இது பற்றி சொல்லி விடலாம் என நினைத்தவன் தேவகிக்கு அழைக்க அவரோ, “சென்னை போன அன்னிக்கு உன் பொண்டாட்டி என்கிட்ட பேசினா. அப்புறமா ஒரு முறை கூட எனக்கு கூப்பிடல. பாசம் இருக்கோ இல்லையோ தர்ஷணியும் ஸ்வேதாவும் தினம் ஒரு முறை போன் போட்ருவாங்க. எம்மேல என்னடா கோவம் மிருணாவுக்கு?” என புலம்பினார்.

தளர்ந்து போனவளாக மிருணா அறைக்குள் வர, அவள் முன்னிலையில் அம்மாவிடம் எதுவும் பேசி அவள் தப்பர்த்தம் கண்டு பிடித்து விடுவாளோ என பயந்த விஷ்ணு கைப்பேசியோடு பால்கனி சென்றான்.

அப்படி எதுவும் இல்லை, அவளது அம்மாவிடமே பேசினாளோ என்னவோ? என்னிடமே சில நிமிடங்கள் மட்டுமே பேசுவாள், நேற்றுதான் சென்னைக்கே வந்தாள், இனிமேல் பேசுவாள் என அம்மாவை சமாதானம் செய்தான்.

“அவ உன்னை விட்டுட்டு இப்படி அடிக்கடி ஊர் பயணம் போய்டுவாளா? சாப்பாட்டுக்கு என்னடா பண்ணுவ? என்கிட்ட பேசாட்டா போறா, உன்னையாவது ஒழுங்கா பார்த்துக்கணுமா இல்லயா?” என கவலையாக கேட்டார் தேவகி.

“என்னை என்னம்மா அவ பார்க்கணும்? நான் குழந்தையா? என்னை பத்தி கவலைபடாம உன் உடம்ப பாத்துக்கோ. அவகிட்ட பேசும் போது அவ வருத்த படற மாதிரி எதுவும் பேசிடாத ம்மா” என்றவன் இன்னும் சமாதானமாக ஏதேதோ பேசி உரையாடலை முடித்து திரும்ப, திகைத்து போனவளாக நின்றிருந்தாள் மிருணா.

அவன் பின்னாலேயே வந்திருந்த மிருணா அனைத்தையும் கேட்டிருந்தாள்.

“மிரு… அது… அது… அம்மா ரொம்ப இன்னொஸண்ட், நான் பேசிட்டேன்… நீ அவங்கள மட்டும் தப்பா நினைக்காத ப்ளீஸ்…” என்றான்.

கணவனின் பயத்துடன் கூடிய தடுமாற்றத்தில் சிரித்து விட்டவள், “கல்யாணம் பண்ணி ஒரு நாள் நிம்மதியா இருக்க முடியுதா நம்மளால? கொஞ்சம் ஃப்ரீ ஆனதும் நெட்ஒர்க் இல்லாத பிரதேசத்துக்கு உங்களை கிட்னாப் பண்ணிட்டு போறேனா இல்லையான்னு பாருங்க” என்றாள்.

“இந்த பூலோகத்துல புகை நுழைய முடியாத இடத்துக்கு கூட உன் அண்ணன் வந்திடுவார், வேற கிரகத்துக்குதான் போகணும் நாம” என கிண்டலாக சொல்லி சிரித்தான் விஷ்ணு.

“செவ்வாய் கிரகம் ஓகேவா உங்களுக்கு?” என தீவிர தொனியில் மிருணா கேட்க, அதற்கும் சிரித்தான்.

“வாட் அபௌட் ஜூபிட்டர்?” எனக் கேட்டவளின் தலையில் முட்டி சிரித்தவன், “இதே மாதிரி எல்லா சமயமும் நமக்குள்ள ஸ்மூத்தா போயிடாது, நாம ஆளுக்கொரு கிரகம் ஆகிடாம சேர்ந்து இருக்கணும்” என்றான்.

“பார்த்துக்கலாம் பாஸ்…” என்றாள் மிருணா.

இலவச பிரிவு மருத்துவமனையின் அக்கவுண்ட்ஸ் பிரிவில் இருந்தாள் மலர். அந்த மாதம் ட்ரஸ்ட்டுக்கு வந்த பணம் இவளது கவனத்துக்கு வந்திருந்தது. அதில் என்னென்ன வாங்க வேண்டும் என தலைமை கணக்கரிடம் கூறியவள், “மத்த மெம்பெர்ஸ் அப்ரூவல் கொடுத்தப்புறம் என்கிட்ட சைன் வாங்கி ஃபண்ட் ரிலீஸ் பண்ணுங்க” என்றாள்.

தலைமை கணக்கர் தயக்கத்தோடு தர்மேந்திரன் என்ன கணக்கு எழுத சொல்லியிருக்கிறார் என்பதை தெரிவிக்க, “அவர் ஆயிரம் சொல்வார்? ஃபைனல் பண்ற அத்தாரிட்டி எனக்குத்தான் இருக்கு. நான் சொல்றதை செய்ங்க” என உத்தரவாக சொன்னாள்.

அங்கிருந்த தர்மேந்திரனின் கை கூலிகள் அவருக்கு தகவல் தந்து விட்டனர்.

தலைமை கணக்கர் என்ன செய்ய என நிற்க, தர்மேந்திரனும் ஏகாம்பரமும் வந்து விட்டனர். தான்தான் நிர்வாகி, எனக்குதான் இங்கு அதிகாரம் அதிகம், சின்ன பெண் நீ, உனக்கு விவரம் போதாது, உன் கணவனுக்கு தெரிந்துதான் நடக்கிறது என தர்க்கம் செய்ய ஆரம்பித்தார் தர்மேந்திரன்.

‘நிலைமை சரியில்லை’ என கிஷோருக்கு ரகசிய தகவல் அனுப்பினார் தலைமை கணக்கர்.

“நான் அமைதியாதானே பேசுறேன், ஏன் நீங்க இவ்ளோ சவுண்ட்டா பேசுறீங்க? எவ்ளோ சவுண்ட் போட்டாலும் நீங்க பேசுறது நியாயம் ஆகிடாது. பத்தாயிரம் இருபதாயிரம் புழங்குற பொட்டிக்கடை இல்லை இது இஷ்டத்துக்கு கணக்கு எழுத. கோடிக் கணக்கான பணம் சம்பந்த பட்ட ஆர்கனைஸேஷன்…” தர்மேந்திரனிடம் சொன்னவள், “நாளைக்கு மெம்பெர்ஸ் வருவாங்க இங்க, நீங்க நான் சொன்ன படி ஸ்டேட்மென்ட் ரெடி பண்ணுங்க. ஹ்ம்ம்!” என கணக்கரை பார்த்து கட்டளை இட்டாள்.

தர்மேந்திரன் விடாமல் கோவமாக பேச, மலரும் அவருக்கு அசராமல் பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள். கிஷோர், சீனியர் மருத்துவர்கள் கிருஷ்ணகுமார், கமலவேணி போன்றோர் மலருக்கு ஆதரவாக அங்கு வந்து விட்டனர்.

அங்கு வேலை பார்க்கும் தர்மேந்திரனின் எடு பிடிகளும் வந்து விட்டனர். காரசாரமாக வாக்குவாதம் போய்க் கொண்டிருக்க, தர்மேந்திரனின் கண்ணசைவுக்கு கட்டுப்பட்ட ஒருவன் மலரை தாக்குவது போல வந்தான்.

நொடிகளில் எங்கிருந்தோ இருவர் வந்து மலரை தாக்க வந்தவனை அடித்து வீழ்த்தி விட்டு மலருக்கு பாதுகாப்பாக நின்றனர். கீழே விழுந்து கிடந்தவனை அலேக்காக தூக்கி சென்றனர் இருவர்.

“உனக்கு எதுவுமில்லையே மலர்?” பதற்றத்தோடு கேட்டான் கிஷோர்.

‘அடிக்க வரும் அளவுக்கு இவர்களுக்கு எப்படி துணிச்சல் வந்தது?’ என அதிர்ந்து போயிருந்த மலர் ‘இல்லை’ என்பதாக தலையசைத்தாள்.

“இது ஹாஸ்பிடல், நியாயத்துக்கு போராடுற டாக்டர்ஸ் நாங்க, ஒரு டெக்கோரம் இல்ல?” கோவமாக சொன்னார் கிருஷ்ணகுமார்.

“மலருக்கே பாதுகாப்பு இல்லைனா நம்மை எல்லாம் என்ன வேணா செய்வாங்க சார்” அதிருப்தியாக சொன்னார் கமலவேணி.

“எனக்கெதிரா நடக்கிறவங்களுக்கு இங்க வேலை இல்ல. யாரும் அவ்ளோ பயந்துகிட்டு இங்க இருக்க வேணாம்” என தர்மேந்திரன் கத்த, அதையே வேறு வார்த்தைகள் போட்டு சொன்னார் ஏகாம்பரம்.

“யாருக்கு இங்க வேலை இல்லாம போகுதுன்னு நான் பார்க்கிறேன்” சீற்றமாக சொன்னாள் மலர்.

 இறுமாப்பாக பார்த்த தர்மேந்திரன், “உன் பப்பு வேகுற காலம் முடிஞ்சு போய் ரொம்ப காலம் ஆகிப் போச்சு” என நக்கலாக சொல்லி ஓரடி முன்னெடுத்து வைத்தார்.

அவர் நெஞ்சில் கை வைத்து பின்னுக்கு தள்ளிய மலரின் பாதுகாவலர், “மேடம்கிட்டேருந்து நாலடி தள்ளி நின்னுதான் நீங்க பேசணும். முத தடவ மட்டும்தான் வார்னிங் கொடுப்போம், ரெண்டாவது தடவ வாயால பேச வேணாம்னு எங்களுக்கு ஆர்டர், ப்ளீஸ் கோ ஆபரேட்” என்றனர்.

கிஷோரும் மற்ற மருத்துவர்களும் குழப்பமாக மலரை பார்க்க, சின்ன குரலில், “என் ஹஸ்பண்ட் வேலையா இருக்கும்” என்றாள்.

முகம் மலர்ந்த கிஷோர், “பிரவாகன் சாரை கூப்பிடுவோம், அவர் வரட்டும். நடந்ததை சொல்வோம், நாம சொல்லலைன்னாலும் சி சி டி வி கேமரா சொல்லும். யாருக்கு இங்க வேலைனு அவரே சொல்வார்” என்றான்.

“ஹ்ம்!” அலட்சியமாக நகைத்த தர்மேந்திரன், “வர சொல்லு அவனை” என்றார்.

“சாரை கூப்பிடு மலர்” என்றான் கிஷோர்.

“இல்ல வேணாம் கிஷோர். இவர் பொய் கணக்குல நான் சைன் பண்ண மாட்டேன், இவரால ஆனதை பார்க்கட்டும்” என ஏதோ யோசனையுடன் சொன்னாள் மலர்.

தர்மேந்திரனும் ஏகாம்பரமும் எகத்தாளமாக பார்க்க, மலரும் மற்றவர்களும் அவர்களை அருவருப்பாக பார்த்தனர்.

யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டே பார்வையை மட்டும் மலரிடம் நிலை நிறுத்தி, வேக நடை போட்டு அந்த இடம் நோக்கி வந்து கொண்டிருந்தான் பிரவாகன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement