Advertisement

அத்தியாயம் -18(2)

“இந்த சாத்தான் கூட வேதம் சொல்லுமா?”

“நான் நினைச்சா உன் அனுமதி இல்லாமலே இன்னும் பத்து மாசத்துல உன் மூலமா என் குழந்தையை இந்த உலகத்துக்கு வரவைக்க முடியும். ஆனா அவ்ளோ கேவலமானவன் இல்லை நான்”

“அவ்ளோ இல்லைனா கொஞ்சம் கேவலமானவன்தான்னு ஒத்துக்கிறியா? எப்படி என் பெர்மிசன் இல்லாம அம்மா ஆக்குவியா என்னை?”

“அப்படி செய்ய மாட்டேன்னு சொன்னேன்”

“புடலங்காய்! உன் மைண்ட் எவ்ளோ டர்ட்டி, என்ன நினைச்சு அப்படி சொன்ன? பொண்ணுன்னா அவ்ளோ இளக்காரமா இருக்கா? எப்டி எப்டி… எப்டி என் பெர்மிஸன் இல்லாம அம்மா ஆக்குவ நீ? சொல்லு எப்படின்னு சொல்லு, அதையும் சொல்லு… சொல்லு…” முகம் சிவக்க அலறிக் கொண்டே ஆங்காரமாக அவனை நெருங்கி வந்தாள்.

பின்னால் நகர்ந்தவன், “ஏ ஏ ஏய்… சொல்லு சொல்லுன்னா ஒரு ஃப்ளோல சொல்லிட்டேன். அது மாதிரி எதுவும் பிளான் இருந்தாதானே எதுவும் யோசிச்சிருப்பேன். அந்த பிளான் இல்லை” என்றான்.

மூச்சு வாங்க நின்றிருந்தவள், “போடா! உனக்கு புள்ளையெல்லாம் பெத்து தர முடியாது. போ இங்கேருந்து” என்றாள்.

போடா என்றதில் கோவமடைந்தவன் “ஹேய்…” என கத்தி, பின் அவள் நின்றிருந்த கோலத்தில் நிதானித்தான்.

“சும்மா நீயும் கத்தி என்னையும் கத்த வச்சிட்டு. சண்டைல இப்படி யோசிக்காம ஏதாவது பேசறதுதானே? நீயும்தான் உன் மூலமா அப்பா ஆகறதுன்னு எல்லாம் சொன்ன? அது தப்பில்லையா? என்ன இருந்தாலும் இந்த மலரை தவிர வேற யார்… ஏன் அப்சரஸே வந்தாலும் தப்பா பார்க்க மாட்டான் உன் ஹஸ்பண்ட். எது செய்யலாம் எது செய்யக் கூடாதுன்னு ஐ ஹேவ் மை ஓன் பவுண்டரீஸ் ஹனி பன்” என சமாதான படலத்தில் இறங்கினான்.

“என் கால்லேயே விழுந்தாலும் நான் சமாதானம் ஆக மாட்டேன்” என்றாள்.

“ஹ ஹ… ரொம்ப ஆசைடி உனக்கு. கீழ விழுந்தாலும் மல்லாக்க விழற ஆள் நான். என் பார்வை ஆகாயத்துல இருக்கும். மண்ண கவ்வுற மடையன் இல்லை”

“தட்ஸ் இட். இனி உன் கூட பேசறதா இல்லை நான். இதான் நான் கடைசியா உன்கிட்ட பேசுறது, கெட் லாஸ்ட்!” சீறி விட்டு படுக்கையில் விழுந்தாள்.

கடுங்கோவத்தோடு கையிலிருந்த மாத்திரை அட்டையை தூக்கி தரையில் வீசியெறிந்தவன் வேகமாக அறையை விட்டு வெளியேறினான்.

ஒரு மணி நேரம் கடந்த நிலையில் அறைக்கு வந்தான் பிரவாகன். ஒற்றை சோஃபாவில் குத்துக் காலிட்டு சுவரை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் மலர்.

அவளருகில் வந்தவன் அவளை அப்படியே தூக்கிக் கொண்டான். அவள் திமிற, “பெட்ரூம்ல நாம பேசக்கூடாத விஷயத்தை பேசினதால வந்த வினை இது. இனிமே ஹாஸ்பிடல் மேட்டர்ஸ் இங்க பேசிக்க வேணாம். இந்த சண்டைலாம்… ஓ… மலர்… டிஸ்கஸ்டிங்… எனக்கு வீட்டுக்கு வந்தா நிம்மதியா இருக்கணும்” என்றான்.

“விடுங்க என்னை”

“மரியாதையா பேசுற! கோவம் போய்ட்டுச்சா?”

உச்சு கொட்டி அவனை முறைத்தாள்.

“நீ செய்றதை செஞ்சுக்க. ஃப்ரீ பிளாக் விஷயத்துல இதை செய் அதை செய்யாதன்னு இனிமே சொல்ல மாட்டேன். எங்கிட்டேயும் இதை செஞ்சு தா அதை செஞ்சு தாங்கன்னு நீயும் கேட்காத” என்றான்.

“இப்படி சொல்லிட்டு அப்புறம் வந்து உங்க மாமா, விஷ்ணு அண்ணாவோட அப்பாக்கு லாம் சப்போர்ட் செய்ய கூடாது” என்றாள்.

“சொன்னா சொன்னதுதான். உன்கிட்ட எதுவும் பேச மாட்டேன்”

“பிராமிஸ் செய்யுங்க”

“பிராமிஸா? ஏய் இந்த பிரவா மலர்கிட்ட ஒண்ணு சொல்லிட்டான்னா பிராமிஸஸே ஷாக் ஆகுற அளவுக்கு ஸ்ட்ராங்கா இருப்பான்”

“அலப்பறைய குறைங்க” என்றவளின் தலையை செல்லமாக முட்டியவன், “சமாதானம்?” எனக் கேட்டான்.

“ம்ம்ம்…” என்றாள்.

“நாக்கு தள்ளுது மலர். ஹிஸ்டீரியா வந்தவ மாதிரி கத்தின” என சொல்லிக் கொண்டே படுக்கையில் விட்டான்.

“ஆமாம் இவர் வாயே தொறக்காம அழுதுகிட்டே நின்னுட்டு இருந்தார்”

“இன்னிக்கு ரொம்ப பேசியாச்சு, இதுக்கு மேல பேசுறதுல எனர்ஜி வேஸ்ட் பண்ணாத. ஸேவ் யுவர் எனர்ஜி!” என கிறங்கிய குரலில் சொன்னான்.

அவள் முடியாது எனும் படி பார்க்க, அவளுக்கு மிகவும் நெருங்கிய நிலைக்கு வந்தவன், “பேசி பேசி வாய்க்கும் கேட்டு கேட்டு காதுக்கும் வலி எடுத்திருக்காம். லெட் அஸ் ட்ரீட் தெம் வித் டீப் கிஸஸ், சீக்ரெட் மோனிங்ஸ் அண்ட் க்யூட் விஸ்பர்ஸ் (ஆழமான முத்தங்கள், ரகசிய முனகல்கள், செல்ல கிசு கிசுப்புகள் கொண்டு அவற்றுக்கு சிகிச்சை அளிப்போம்)” என மயக்கத்திற்கு அழைத்து செல்லும் குரலில் சொன்னான்.

மலர் ஆழமாக பார்க்க, “லவ் யூ மலர்!” என்றான்.

“இது இல்லை லவ். லவ் ரொம்ப சிம்பில், அன்பான வார்த்தையும் உண்மையான பார்வையும் போதும் லவ் பண்ண” என்றாள்.

“என்கிட்ட அன்பும் உணமையும் இல்லைங்கிறியா?”

“இருக்குங்கிறீங்களா?”

“சரி இல்லாமலே போகட்டும். என்கிட்ட இல்லாததை நீ தா மலர். பேசி பேசி டைம் வேஸ்ட் செய்யாத” என்றவன் அடுத்து அவளை பேச விடவில்லை.

பிரவாகன் சொன்னது போலவே மருத்துமனை தொடர்பாக அவள் எடுக்கும் முடிவுகளை பற்றி அவளிடம் விவாதிப்பதை நிறுத்தி விட்டான்.

அந்த வார இறுதியில் மலரின் வீட்டில் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

“அங்க வசதி படுமா மலர்? நம்ம வீட்லேயே ஃபங்ஷன் அரேஞ் பண்ணலாமே?” எனக் கேட்ட பிரவாகனை, “என் பேரெண்ட்ஸும் அவங்க சார்புல எனக்கு ஏதாவது ஃபங்ஷன் பண்ண ஆசை பட மாட்டாங்களா? சிம்பிளாதானே செய்றோம், எல்லாம் அங்க வசதி படும்” என சொல்லி சம்மதிக்க வைத்திருந்தாள் மலர்.

அகிலாவை தவிர வேறு யாருக்கும் சொல்ல வேண்டாம் என தன் பெற்றோரிடம் பிடிவாதம் செய்தாள் மலர். கூட்டம் கூடுவது அவளுக்கு பிடிக்கவில்லை போலும், அல்லது அவளது பெற்ற தாயின் பேச்செடுத்து அவளின் திருமணத்தின் போது யாரும் எதுவும் பேசி விட்டனரோ என்றெல்லாம் யோசித்த விமலாவும் மலரின் முடிவுக்கு ஒத்துக் கொண்டு கணவரையும் ஒத்துக் கொள்ள செய்து விட்டார்.

அகிலாவை தவிர விஷ்ணு வீட்டினரை மட்டும் தங்கள் பக்கத்திலிருந்து அழைத்திருந்தார் விமலா.

கீர்த்தி அவளது கணவன் மற்றும் பிள்ளைகளோடு வந்திருந்தாள். அவளது மாமனார் மாமியாரை அழைத்த போது, “அந்த பொண்ணு வீட்ல நடக்குதே… நாங்க வந்தா உட்கார இடம் இருக்குமா அந்த புறாக் கூண்டுல?” என இடக்காக கேட்டார் கவிதா.

இந்த முறை எந்த பதிலடியும் தராமல், “சரிங்க த்தை, நீங்க ரெஸ்ட்டா இருங்க, நாங்க மட்டும் போயிட்டு வர்றோம்” என சொல்லி முடித்து விட்டாள் அவர்கள் வராமல் இருப்பதே நன்று என நினைத்த கீர்த்தி.

மிருணா முதல் நாள் இரவே வந்து விட்டாள். இளஞ்சிவப்பு வண்ண பட்டு உடுத்தி பதற்றத்தோடு வளைய வந்த தங்கையை கவனிக்க தவறாத பிரவா தமனுக்கு அழைத்து, “இன்னிக்கு விஷ்ணு எங்க இருக்கான்?” எனக் கேட்டான்.

கோவை வந்திருப்பதாக அவன் தகவல் தர நக்கலாக சிரித்துக்கொண்ட பிரவா, “என் தங்கையோட ஒவ்வொரு மூவ் வும் கண்காணிப்புல இருக்கணும். சென்னைல ஒண்ணும் பண்ண முடியலைன்னு ஏதோ பிளானோடதான் இங்க வந்திருக்காங்க. எந்த ரெஜிஸ்டர் ஆஃபீஸ்லேயும் கோயில்லேயும் நடக்க போறதில்லை மிருணா கல்யாணம். அவ மேரேஜ் டேட் நான் ஃபிக்ஸ் பண்ணுவேன்” என்றான்.

“புரிஞ்சது சார், செக்யூரிட்டீஸ் அலர்ட்டா இருக்காங்க” என சொல்லி வைத்தான் தமன்.

அனைத்தும் தயாராக இருக்க மலரையும் பிராவாகனையும் அருகருகே அமர வைத்தனர். கண்களுக்கு நிறைவை தரும் பொருத்தத்தோடு அமர்ந்திருந்தனர் தம்பதியினர்.

பெரியவர்கள் இருவருக்கும் நலங்கு செய்தனர். பின் கீர்த்தி உதவி செய்ய தேவகிதான் தாலி செயினில் கோர்க்க வேண்டியவற்றை கோர்த்து பிரவாகனின் கையில் கொடுத்தார்.

அவன் குறும்பு சிரிப்போடு மனைவியை பார்க்க, ‘இந்த முறை எல்லார் முன்னாடியும் முத்தம் கித்தம்னு ஏதாவது போக்கிரித் தனம் செஞ்சீங்க வாயிலேயே பட்டு பட்டுன்னு வச்சி விட்ருவேன்!’ என முன்கூட்டியே தனிமையில் மிரட்டியதை இப்போது கண்களால் சொன்னாள்.

வம்பெதுவும் செய்யாமல் நல்ல பையனாக அவள் கழுத்தில்தாலி சரடை அணிவித்தவன, தன் சட்டை பாக்கெட்டில் இருந்த விலை உயர்ந்த மரகத மாலை ஒன்றையும் அவளின் கழுத்தில் போட்டு விட்டு சிரித்தான்.

“அதானே பார்த்தேன். ஏதாவது ஷோ ஆஃப் பண்ணிடனும் உங்களுக்கு?” சின்ன குரலில் கேட்டாள்.

“ஷோ ஆஃபா… சிம்பல் ஆஃப் லவ் மலர். ப்யூர் எமரால்ட், ஜஸ்ட் சிக்ஸ்டி லேக்ஸ்” என்றான்.

‘நீ திருந்தவே மாட்ட’ எனும் பார்வை பார்த்து திரும்பிக் கொண்டாள்.

இருவரும் பூஜை அறையில் விழுந்து வணங்கிய பின் பெரியவர்கள் அனைவரையும் சேர்ந்து நிற்க வைத்த கீர்த்தி அனைவருக்கும் பொதுவாக விழுந்து வணங்குமாறு சொன்னாள். அவர்களும் அப்படியே செய்து நிமிர, அந்த ஹாலில் பட்டு வேஷ்டி சட்டையில் புன்னகை முகமாக நின்றிருந்தான் விஷ்ணு.

‘இவன் எப்போது இங்கு வந்தான்?’ என பிரவா யோசித்துக் கொண்டிருக்க, விஷ்ணுவின் அருகில் போய் நின்றாள் மிருணா.

 என்ன நடக்கிறது என பிரவாகன் கணிக்கும் முன் எங்கிருந்தோ பூ மாலைகளை எடுத்து வந்து அவர்களிடம் தந்தாள் கீர்த்தி.

மின்னல் வேகத்தில் ஒருவர் மற்றவர் கழுத்தில் மாலைகளை போட்டுக் கொண்டனர். அவர்களிடம் விரையப் போன பிரவாகனின் கையை அழுந்த பிடித்துக்கொண்டாள் மலர்.

அவளது கையை உதறி விட்டு தன் தங்கையை தன்னிடம் இழுத்து நிறுத்தும் எண்ணத்தோடு “மிருணா நோ…” என கத்திக் கொண்டே பிரவாகன் பாய்ந்து வர, “மாமா நில்லுங்க, வேஷ்டி தடுக்கிட போகுது” என சொல்லி இடை மறித்தான் பரத்.

பற்களை நெறித்து அவனை விலக்கி விட்ட பிரவா முன்னேறி செல்ல, அதற்குள் அனைவரின் முன்னிலையிலும் மிருணாவின் கழுத்தில் தாலி அணிவித்து அவளை தன் மனைவி ஆக்கியிருந்தான் விஷ்ணு.

அனைவரும் திகைத்திருக்க, மிருணாவின் கையை பிடித்தழைத்துக் கொண்டு பெரியவர்களை நெருங்கி வந்த விஷ்ணு, “எங்களையும் ஆசீர்வாதம் பண்ணுங்க” என சொல்லி அவளோடு சேர்ந்து தரையில் விழுந்து வணங்கினான்.

மலர் அட்சதை தட்டை எடுத்து வந்து நீட்ட, பெரியவர்கள் இன்னுமே அதிர்ச்சியிலிருந்து மீளாமல் ஸ்தம்பித்து போயிருக்க, பிரவாகனோ கோவத்தின் உச்சத்தில் நின்றிருந்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement