Advertisement

பேரன்பு பிரவாகம் -18

அத்தியாயம் -18(1)

அன்று இரவு வீடு வந்த பிரவாகன் மலரின் கையில் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை கொடுத்து, “நாளையிலேருந்து ஸ்டார்ட் பண்ணு” என்றான்.

அசுவாரஷ்யமாக அதை வாங்கி வைத்தவள் கிளிப்பில் அடங்கியிருந்த முடியை விரித்து விட்டு படுக்கையில் அமர்ந்தாள்.

அவள் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டவன், அவள் கையை எடுத்து மார்பில் வைத்துக்கொண்டு, “இங்க கிடைக்கிற நிம்மதி வேறெங்கேயும் கிடைக்கிறது இல்லை” என்றான்.

“ஷ் ஹப்பா! எழுந்திரிங்க முத” என்றாள்.

“என்ன நீ எப்பவும் ஆசையா படுத்தா கொஞ்சுவதானே? இன்னிக்கு கொஞ்சாட்டாலும் போகுது, எதுக்கு காயுற?”

“கொஞ்சிட்டாலும்…”

“என்ன மலர்?”

“ப்ச்…”

“சொல்லாட்டா போ. உன் பின்னால தொங்கிட்டே இருக்க முடியாது” என்றவன் கண்களை மூடிக் கொண்டு அவள் மடியிலேயே புரண்டு படுத்துக் கொண்டான்.

சில நிமிடங்கள் அமைதியாக செல்ல, “நான் கொடுத்தேன்னு வீம்பு பண்ணிகிட்டு டேப்லெட்ஸ் எடுக்காம இருக்காத. உனக்கு தெரியாதது இல்லை, ப்ரெக்னன்சி பிளான் பண்றப்போ எடுத்துக்கிட்டா நல்லதுதானே? நம்ம ஹாஸ்பிடல் கைனகாலஜிஸ்ட்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டுத்தான் வாங்கி வந்தேன். ஸ்கிப் பண்ணாம போட்டுக்கணும் நீ” என்றான்.

அவள் ம் என்றாள்.

“என்ன மலர், எதுக்கு மூஞ்சிய தூக்கி வச்சிருக்க?”

“தெரியாதா உங்களுக்கு?” என கோவமாக கேட்டாள்.

ட்ரஸ்ட்டின் கணக்கு வழக்குகளை அறிந்து கொள்ள வேண்டும் என மலர் நினைக்க அது நடக்கவில்லை. மொத்தமாக வரவு இவ்வளவு செலவு இவ்வளவு என சொல்லப் பட்டதே தவிர விவரங்கள் எதையும் இவளால் அறிந்துகொள்ள முடியவில்லை.

“நீ ஜெட் ஸ்பீட்ல போக நினைக்கிற. முதல்ல ஹாஸ்பிடலை சுத்தமாக்கு. அப்புறம் அக்கவுண்ட்ஸ் பார்க்கலாம்” என்றான்.

“எல்லாத்துக்கும் டீம் போட்ருக்கேன், நாளையிலேருந்து அவங்கவங்க பொறுப்பை சரியா செய்வாங்க. மேன் பவர் எவ்ளோ தேவை படுதுன்னு டூ டேஸ்ல தெரிஞ்சிடும். இப்போதைக்கு ஹவுஸ் கீப்பர்ஸ் கான்ட்ராக்ட் பேசிஸ்ல எடுக்கிறதா இருக்கேன். பத்மா சார் என்னென்ன சஜ்ஜஸ்ட் பண்ணியிருந்தாரோ அதையெல்லாம் எப்படி காஸ்ட் எஃபக்டிவா இம்ப்ளிமெண்ட் பண்ணலாம்னு சீனியர் டாக்டர்ஸோட டிஸ்கஷன் போயிட்டு இருக்கு. உங்க சித்தப்பா மட்டும்தான் எதுக்கும் ஒத்து வர மாட்டேங்குறார், சர்தான் போய்யா ன்னு அவர்கிட்ட எதையும் சொல்லாமலே செய்ய போறேன்” என்றாள்.

“அதெப்படி முடியும் மலர்? அவர்தான் அங்க சீஃப் எக்ஸிக்யூட்டிவ்” என்றான்.

“அந்தாளை பார்த்தாலே கடுப்பாகுது. கொஞ்சம் கோ ஆபரேட் செய்ய சொல்லி அவர்கிட்ட நீங்க பேசுங்களேன்” என்றாள்.

 “உனக்காக பேசுறேன். ஆனா குளறுபடிகளை பார்க்கிறேன்னு ஏற்கனவே நான் செஞ்சு வச்சிருக்க ஏற்பாடுகளை மாத்த வேணாம் மலர். அதுல நிறைய சிக்கல் இருக்கு. மாமா கம்பெனியிலிருந்தே எப்பவும் போல மெடிசின்ஸ் சப்ளை ஆகட்டும். விஷ்ணு அப்பாக்கு கொடுக்க போறதா இருக்க கான்ட்ராக்ட் அவருக்கே போகட்டும். இன்னும்…” பிரவாகன் பேசிக் கொண்டிருக்க அவனது இதழ்களில் ஒரு விரல் வைத்து பேசாதே எனும் படி கண்களால் கட்டளை இட்டாள்.

அவன் என்ன என பார்க்க, “நான் ஆசைப்பட்டேன்னு ட்ரஸ்ட்டீ ஆக்கிட்டீங்க, மத்தது எல்லாம் என் சமத்து. நீங்க உங்க ஜே சி ஐ செர்டிஃபிகேஷன்ல மட்டும் கான்சென்ட்ரேட் பண்ணுங்க” என்றாள்.

தன் உதடுகளில் இருந்த அவளது விரலில் ஒரு முத்தம் வைத்து விலக்கி விட்டவன், “என் சித்தப்பாகிட்ட பேச சொன்ன, வேணாமா?” எனக் கேட்டான்.

“முடியாதுன்னு நீங்க சொன்னாலும் கவலையில்லை. வேற வழில பார்த்துக்கிறேன் அவரை”

“மலர்… அதிக ஆர்வத்துல தடைகள் விளைவுகள் பத்தி யோசிக்காம கண் மண் தெரியாம ஓடுற. எண்ட் ஆஃப் த டே மோசமான அனுபவமா இருக்கும் உனக்கு” கடினமாக சொன்னான்.

அவள் முகம் சுருக்க, உடனே தன்மையான தொனியில், “சொன்னா கேளு மலர், சித்தப்பாவை நான் பார்த்துக்கிறேன். ஃப்ரீ பிளாக் டெவலப் பண்ணு, ஆனா சில விஷயங்கள் நான் சொன்னது மாதிரியே இருக்கட்டும். சேஞ்சஸ் வேணாம்” என்றான்.

“ட்ரஸ்ட்ல இருக்க பணத்திலேருந்துதான் எல்லாமே நடக்கற மாதிரி கணக்கு காட்டுவீங்க. உங்க மாமா கம்பெனிக்கே எப்படிங்க எப்பவும் கான்ட்ராக்ட் கொடுக்கிறது? சும்மாவா ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் ஃபாலோ பண்றாங்க? தனிப்பட்ட முறையில யாருக்கும் ஃபேவர் பண்றதுக்காக இல்லை ட்ரஸ்ட். நடுநிலைமை ரொம்ப முக்கியம் இல்லயா?”

“ஹாஸ்பிடலுக்கு தேவையானது உனக்கு கிடைக்கும் போது இதையெல்லாம் ஏன் நோண்டுற நீ?”

“இப்படிலாம் தில்லு முல்லு பண்ணினா சிக்கல் வரும். ட்ரஸ்ட்டே இல்லாம போகலாம், கவர்மெண்ட் அண்டர் டேக் செய்யலாம். எந்த அரசியல்வாதியாவது இதுல எப்படி லாபம் பார்க்கலாம்னு பார்ப்பான். இப்ப இருக்க நிலைமை விட இன்னும் மோசமாகும். அங்க எல்லாமே நேர் வழில நடக்கிறதுதான் சரி” என வாதாடினாள்.

“எந்த சிக்கலும் வராது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. அதை நான் கவனிச்சிக்கிறேன்”

“எதை கவனிப்பீங்க? லஞ்சம்தானே? அப்படி தண்டம் அழறதுக்கு இங்க எல்லாத்தையும் சரியா செஞ்சிட்டு போகலாம் இல்லயா?”

கோவத்தோடு அவளின் மடியிலிருந்து எழுந்தவன், “ஏய் சொன்னா உனக்கு புரியாது? எல்லாத்திலேயும் நிறைய இண்டர் லிங்க்ஸ் இருக்கு. ஒண்ணு ஒண்ணையும் யோசிச்சுதான் அங்க எல்லா ஏற்பாட்டையும் நான் பண்ணியிருக்கேன். அகவுண்ட்ஸ்லலாம் கை வைக்க நினைக்க கூடாது நீ. மெடிக்கல் காலேஜ், டெண்டல் காலேஜ், பாரா மெடிக்கல் காலேஜஸ், பெய்ட் பிளாக் ஹாஸ்பிடல்ஸ்னு எல்லா டிபார்ட்மெண்ட் பிராஃபிட்ஸேலேயும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்றோம். ஸோ ஹாஸ்பிடலை மட்டும் டெவலப் பண்ணு, வேற எதிலேயும் மூக்கு நுழைக்காத” என கத்தினான்.

அவனை கடினமாக பார்த்தவள், “முடியாதுங்க, பல வருஷங்கள் முன்னாடி நடக்கிற ஸ்கேம் கூட திடீர்னு ஒரு நாள் பூதாகரமா வெடிக்கிறது இல்லயா? எதுவும் ஆகாதுன்னு நினைச்சு நாம செய்ற ஒரு தவறு ஃப்யூச்சர்ல இந்த ட்ரஸ்ட்டை இல்லாம ஆக்கிடலாம்ங்கிறது உங்களுக்கு தெரியலையா? எத்தனை உயர்ந்த எண்ணத்தோட ஆரம்பிக்க பட்டது இது? இது செயல்படாமலோ ஒண்ணுமே இல்லாமலோ போக நீங்க காரணம் ஆகணுமா? வேணாங்க”

“இது வரை நடந்த எதையும் கிளறாம நான் விட்டுடுறேன். இனிமே தவறுகள் நடக்காம பாருங்க. உங்க பெனிஃபிட்ஸுக்கு ட்ரஸ்ட் யூஸ் பண்ணாம வேற வழி பார்த்துக்கோங்க. ஒரு வருஷம் டைம் எடுத்துக்கோங்க, எல்லாத்தையும் நீங்க சரி பண்ணிக்கோங்க. அட் எனி காஸ்ட் ட்ரஸ்ட் சுதந்திரமா செயல்படணும்” என்றாள்.

“ட்ரஸ்ட்லேருந்து ஒரு பைசா என் சுயலாபத்துக்காக நான் பயன்படுத்தறது இல்லை மலர். மாறா பல கோடிகள் நான்தான் கொடுக்கிறேன் அங்க. எனக்கும் ஏதாவது ஒரு வகையில அது பிரயோஜன பட வேணாமா? ஆதாயம் இல்லாம எதையும் நான் வச்சிக்கிறது இல்லை” என்றான்.

“நம்ம கல்யாணம் கூட ஏதோ ஆதாயத்துக்காகதானே நடந்தது?”

“எங்கேருந்துடி இப்படிலாம் பேச கத்துக்கிற? ஆமாம், ஆதாயத்துக்குத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதனாலதான் நீ ஆசை பட்டது எல்லாம் செஞ்சு தர்றேன். கோவம் வர்ற மாதிரி நீ பேசினாலும் நடந்தாலும் வெட்கங்கெட்டு போய் கொஞ்சிக்கிட்டு இருக்கேன்”

“அது கூட ஏதோ ஆதாயத்துக்குத்தான்!” சீறினாள் மலர்.

“யூ டாமிட்! மிருகம் ஆக்காத என்னை” என அலறினான்.

“மிருகமா இருக்கிற உன்னை மனுஷன் ஆக்க பார்க்கிறேன். எங்க… நீதான் அப்படித்தான் இருப்பேன்னு அடம் பிடிக்கிறியே” ஒருமையில் கத்தினாள்.

“நான் மிருகமா? அப்ப இந்த உலகமே மிருங்கள் மட்டும் நிறைஞ்சதுதான். எவன் சரியா இருக்கான் இங்க? சினிமா தியேட்டர்ல தண்ணி ஃப்ரீயா கொடுக்கணும்னு ரூல் இருக்கு, மால்ல உள்ள சினிமா ஹால்ல வாட்டர் பாட்டில்ஸ் மட்டும் எவ்ளோ சேல்ஸ் பண்றான் தெரியுமா? ரெஸ்ட்டாரண்ட்ஸ்ல சாப்பிட போகாதவங்க கூட அங்க உள்ள ரெஸ்ட் ரூம்ஸ் யூஸ் பண்ணிக்கலாம், தண்ணி குடிச்சுக்கலாம். எத்தனை ஸ்டார் ஓட்டல்ஸ்ல இப்படி அலோ பண்றாங்க? என்கிட்ட மட்டும் நீதி நியாயம் நேர்மைனு பேசிக்கிட்டு… எல்லாத்துக்கும் லிமிட்ஸ் இருக்கு மலர், நீதி நேர்மைக்கு கூட…” என்றான்.

“அவன் இப்படி இருக்கான் இவன் அப்படி இருக்கான்னு சொல்றதை ஸ்டாப் பண்ணுங்க. நீங்க ஒழுங்கா இருங்க. மாற்றம் யாராவது ஒருத்தவங்க கிட்டருந்து ஸ்டார்ட் ஆகணும்”

“வேற எவனையாவது ஸ்டார்ட் பண்ண சொல்லு. ஏன்னா நான் இல்லை அந்த இளிச்சவாயன். நான் என்ன செய்யணும் செய்யக் கூடாதுன்னு நான் மட்டும்தான் முடிவெடுக்கலாம். உனக்கு அந்த அதிகாரம் கிடையாது” என்றாள்.

“ஓ! என் விஷயத்துல மட்டும் நீங்க முடிவெடுக்கலாமா? உங்களுக்கு மட்டும் அந்த அதிகாரம் இருக்கா?” என அவளும் கத்தினாள்.

“அஃப்கோர்ஸ் மிஸஸ் பிரவாகன்!” ஆணவமாக சொன்னான்.

வேகமாக கப்போர்ட் திறந்தவள் கர்ப்பத் தடை மாத்திரை எடுத்து விழுங்க போனாள். அதி வேகமாக அவளிடம் வந்தவன் அவளது கையை தட்டி விட மாத்திரை எங்கோ போய் விழுந்தது. சீற்றத்தோடு இன்னொரு மாத்திரை எடுக்க பார்க்க, மாத்திரை அட்டை அவனது கைக்கு வந்து விட்டது.

மூச்சு வாங்க அவள் அவனை வெறிக்க ‘என்னை மீறி எதுவும் செய்ய முடியாது உன்னால்’ எனும் அகங்கார பார்வை பார்த்திருந்தான்.

“நான் ஃபோலிக் ஆசிட் டேப்லெட் எடுக்கிறதும் கான்ட்ராசெப்டிவ் பில்ஸ் எடுத்துக்காததும் நீ அப்பா ஆகிடறதை தீர்மானிச்சிட முடியும்னு நினைக்கிற உன் முட்டாள்தனத்தை எந்த வார்த்தை வச்சு பாராட்டுறதுன்னு தெரியலை. ஆஃடர் ஆல் டேப்லெட். அவசரத்துல நான் யாருங்கிறதை மறந்திட்ட போல. நீ அப்பா ஆகணும்னா… அஃப்கோர்ஸ்… என் மூலமா நீ அப்பா ஆகணும்னா நான் மனசு வைக்கணும். காட் மை பாயிண்ட்?” நிதானமாக கேட்டாள்.

“ச்சீ பொண்ணாடி நீ? நாம ஹஸ்பண்ட் அண்ட் வைஃப், என்கிட்ட இப்படி பேச வெக்கமா இல்லை உனக்கு?”

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement