Advertisement

அத்தியாயம் -17(2)

“எனக்கு மூணு வருஷம் டைம் கொடுங்க” என்றாள்.

“எனக்கு அப்பா ஆகுற வயசு வந்திடுச்சு மலர். குழந்தை உன்னை எந்த வகையில ஸ்டாப் பண்ணும், பத்து கேர் டேக்கர்ஸ் போட்டு பார்த்துப்பேன் என் பேபிய. நோ மோர் டெம்பரரி ஃபேமிலி பிளானிங் மெத்தட்ஸ், ஐ வாண்ட் டு ஸ்டார்ட் அவர் ஃபேமிலி!” என்றான்.

“உங்ககிட்ட சொன்னது தப்பா போச்சு!” என்றாள்.

அதட்டி மிரட்டி இவளை சம்மதிக்க வைக்க இயலாது என்பதால் கடினத்தை கைவிட்டு அவளை அணைத்துக் கொண்டான்.

அவளது ஆடை விலக்கி வயிற்றில் கை வைத்து மெல்ல அழுத்தியவன், “உன்னை மாதிரியே பேபி வேணும். வீட்டுக்கு வந்ததும் என் குழந்தை முகமும் குரலும் என்னை வரவேற்கணும். மாட்டேன்னு சொல்லாத மலர்” என மென்மையான குரலில் மெலிதான சத்தத்தில் கேட்டான்.

அவன் கண்களை ஊடுருவி பார்த்தவள், “அட்லீஸ்ட் ஒரு வருஷமாவது…” என சொல்லிக் கொண்டிருக்க, மென்மையாக அவள் இதழ்களில் முத்தமிட்டு அவளின் பேச்சை நிறுத்தி அவளது கண்களை உற்று பார்த்தான்.

“என் உலகத்தை அழகாக்கியிருக்க, இன்னும் கூட அழகா, அர்த்தமா மாத்தி தா மலர்” என்றான்.

“சிறுத்தை ஏன் இப்போ பூனை வேஷம் போடுதுன்னு தெரிஞ்சுக்கலாமா?” எனக் கேட்டாள்.

அவளை தன்னோடு இன்னும் நெருக்கிக் கொண்டவன், “ம்ஹூம்? அப்படியா! நான் சிறுத்தையா? உன் உடம்புல எங்கேயாவது காயம் இருக்கா? ஸ்க்ராட்ச் இருக்கா? சொல்லு சிறுத்தை நீயா நானா?” எனக் கேட்டு அவளின் காது மடலை வலிக்காமல் கடித்து விட்டான்.

அவள் வலுக்கட்டாயமாக அவனிடமிருந்து விலகிப் போக, “மலர் ப்ளீஸ்…” என்றான்.

அவளை சம்மதிக்க வைத்து விடுவது என முடிவு கட்டி விட்டவன் இன்னும் கூட இறங்குவதற்கு தயாராக இருக்க, அதற்கெல்லாம் அவசியமில்லை என்பது போல மலர்ந்து சிரித்தாள் மலர்.

பிரவாகனும் சிரித்தவன் அவள் வாய் மொழி உறுதிக்காக காத்திருக்க, “உங்களுக்கு இவ்ளோ ஆசை இருக்கும்னு தெரியாம போச்சு. ம்ம்… நாம ஹார்ட் ஒர்க் பண்ணலாம்” என சொல்லி இரண்டு கண்களையும் சிமிட்டி சிரித்தாள்.

அவளை மீண்டும் அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினான். பின் மின்விளக்கை அணைத்து விட்டான்.

அடுத்த நாள் மருத்துவமனை வந்தவன் உர் என இருந்தான்.

வேறு ஒன்றுமில்லை, தர்மேந்திரன் இரண்டு அறக்கட்டளை உறுப்பினர்களை சந்தித்து மலருக்கு எதிராக தூண்டி விடும் வகையில் பேசியிருந்தார். தாங்கள் சொல்லா விட்டாலும் நிச்சயமாக விஷயம் பிரவாகன் காதுக்கு போய் சேரும் என்பதை அறிந்திருந்தவர்கள் தற்காப்பு செயலாக அவர்களாகவே பிரவாகனுக்கு தகவல் தந்து விட்டனர்.

“என்ன சார் ஏன் காலையிலேயே கோவம்? மேடம் கூட சண்டையா?” அக்கறையாக விசாரித்தான் தமன்.

“ஏன் டா ஏன்? எப்ப எங்களுக்குள்ள சண்டை வரும்னு காத்துக்கிட்டே இருப்பியா?”

“சேச்ச… ஆனா சண்டை இல்லாம எப்படி ஸ்மூத்தா உங்க லைஃப் போகுதுன்னு ஆச்சர்யமா இருக்குங்க சார்”

“தமன்!”

“நான் அந்த பேச்சை விட்டுட்டேன் சார். இப்ப உங்க கோவத்துக்கு யார் சார் காரணம்?”

“அந்தாள்… அதான் என் சித்தப்பா, வர சொல்லு அவரை” என்றான்.

“எதுக்கு சார்?”

“நீ ஒண்ணு பண்ணு, கேள்வி கேட்காம சொல்ற வேலைய மட்டும் ஒழுங்கா செய்ற பி ஏ தேவைன்னு விளம்பரம் கொடு”

தமனின் முகம் சின்னதாகிப் போக “கால் ஹிம் இமீடியட்லி!” என்றான் பிரவா.

“இல்லைங்க சார், அவரை பல் பிடுங்கின பாம்பு ஆக்க மேடம் முடிவு பண்ணிட்டாங்க. உடனே அவரால வர முடியது”

பிரவா கடுப்பாக பார்க்க, “அங்க ஹாஸ்பிடல் ஸ்டாஃப்ஸ் கூட மேடம் மீட்டிங்ல இருக்காங்க சார், அவரும் மீட்டிங்ல இருக்கார். முடிஞ்சாதான் அவர் வரலாம் இங்க” என்றான் தமன்.

“டேய் நேத்திக்கு காலைலதானடா பதவிக்கு வந்தா?”

“என்னமோ திடீர்னு வந்த மாதிரி சொல்றீங்க சார். வரப் போறோம்னு முன்னாடியே தெரியும்தானே? என்ன செய்யணும் செய்யக் கூடாது அவங்க கைல இருக்க பவர் என்னன்னு தெரிஞ்சு வச்சுகிட்டு இறங்கி நின்னு அடிக்கிறாங்க சார்”

திருமணம் ஆனதிலிருந்து தன்னுடனே அவளை வைத்திருக்க இதற்கெல்லாம் எங்கிருந்து நேரம் கிடைத்தது இவளுக்கு என எரிச்சலாக நினைத்தவன், “இப்ப நடக்கிற மீட்டிங்ல என்ன பேசிட்டு இருக்கா?” எனக் கேட்டான்.

“லைவ் பார்க்குறீங்களா, முடிஞ்சது ரெகார்ட் ஆகியிருக்கு, அதை பார்க்குறீங்களா?” எனக் கேட்டான் தமன்.

வாயை குவித்து மூச்சு விட்ட பிரவா, சட்டையின் மேல் பட்டனை கழட்டி விட்டு இருக்கையில் தளர்வாக சாய்ந்து கொண்டே, “லைவ்…” என்றான்.

தமன் ஏற்பாடு செய்ய, அந்த அறையில் இருந்த எல் இ டி திரையில் தெரிந்தாள் மலர்.

நோயாளிகளுக்கான வெல்ஃபேர் ஃபண்ட் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருந்தாள். அதற்கான விண்ணப்பத்தில் இனி நிர்வாகி, சூப்பரிடெண்ட்டண்ட் போன்றோரின் கையெழுத்துக்கள் அவசியமில்லை எனவும் டியூட்டி டாக்டரின் ஒப்புதல் போதுமானது எனவும் சொன்னாள்.

ஒப்புதல் மட்டும் போதாது, உடனடி பணம் தேவைப்படும் என தெரிவித்தான் கிஷோர்.

அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் அதற்கேற்ப வழிவகை செய்து தரப்படும் என்றவள் அதனை குறித்துக் கொண்டாள்.

“என் ஜாப் டிஸ்கிரிப்ஷன் என்னன்னு சொல்லிடுங்க, என் வேலையையும் சேர்த்து நீங்க பார்க்குறீங்களே அதனால சொன்னேன்” கிணடலாக சொன்னார் தர்மேந்திரன்.

“அதானே…” என்றார் ஏகாம்பரம்.

“எத்தனை வருஷமா இங்க இருக்கீங்க? உங்க ஜாப் டிஸ்கிரிப்ஷன் என்னன்னு தெரியாதா?” என நக்கலான சிரிப்போடு கேட்டாள்.

அவர்கள் இருவரும் அவளை முறைக்க, “நீங்க செய்ய வேண்டியதை செய்யாம போனதாலதான் நான் செய்ய வேண்டியதா இருக்கு. பட், கவலை படாதீங்க உங்க சேலரில பங்கு கேட்க மாட்டேன்” என்றாள்.

மௌனமாக மற்றவர்கள் சிரிக்க, தர்மேந்திரன் கோவமாக வெளி நடப்பு செய்ய பார்த்தார். அவரை வால் பிடித்துக்கொண்டு எழுந்து நின்றார் ஏகாம்பரம்.

“தாராளமா போலாம், ஆனா இங்க என்ன நான் சொல்றேனோ ஃபாலோ பண்ணனும். இன்னொரு முறை உங்களுக்கு தனியா சொல்ற அளவுக்கு என்கிட்ட டைம் இல்லை, அண்ட் என் ஹஸ்பண்ட் இங்க நடக்கிறதை வாட்ச் பண்ணிட்டு இருக்கார்” என்றவள் அந்த ஹாலில் இருந்த கேமராவை சுட்டிக் காட்டினாள்.

பற்களை நெறித்துக் கொண்டு கருமை படிந்த முகத்தோடு இருவரும் அவர்களின் இருக்கைகளில் அமர்ந்தனர்.

அந்தந்த துறைகளின் மருத்துவ நிர்வாகிகளிடம் தேவையானவை லிஸ்ட் தயாரிக்கும் படி கூறினாள். நோயாளிகளின் சேவைக்கே முன்னுரிமை என முழங்கினாள்.

புருவங்கள் உயர ஒரு புன்னகையோடு மனைவியை பார்த்திருந்தவன், “எல்லா கட்சியிலேயும் ஸ்டார் ஸ்பீக்கர் இருப்பாங்கதானே? அவங்க ரேஞ்சுக்கு பேசுறாய்யா இவ” என்றான்.

“அட போங்க சார், நம்ம மேடம் முன்னாடி தோத்தாய்ங்க சார் அத்தனை பேரும்!” என்றான் தமன்.

“நம்ம மேடமா? உனக்குத்தான் மேடம், எனக்கு பொண்டாட்டி”

“ரொம்ப பெருமை படறீங்க சார், அவங்க உங்க லெஃப்ட் காதுல கம்பி வுட்டு ரைட் காது வழியா வெளிய எடுக்கிறாங்க சார். போக போக காதுக்குள்ள வுடற கம்பி மூக்கு வழியா வந்தா கூட ஆச்சர்ய படறதுக்கு இல்லை” என்றான்.

“வித்தை காட்டுறாங்கிறியா?”

“இந்த நேரத்துல கூட நகைச்சுவையா பேசுற உங்களை பாராட்டாம இருக்க முடியலைங்க சார்” சலிப்பாக சொன்னான் தமன்.

அலட்சியமாக சிரித்த பிரவா, “மீட்டிங் முடிஞ்சதும் அந்தாள வர வை, இப்போ வேற வேலை இருக்கா” எதற்கும் அசர மாட்டேன் என்பதாக தன்னை காட்டிக் கொண்டான்.

“மெடிக்கல் காலேஜ்ல படிக்கிற என் ஆர் ஐ ஸ்டூடெண்ட்ஸ் வெல்ஃபேர் செகரட்டரி வந்திருக்கார் சார்” என தமன் சொல்ல, அவரை உள்ளே அனுப்ப சொன்னான்.

என் ஆர் ஐ மாணவர்களின் விடுதிகளில் சில சிறப்பம்சங்களை சேர்ப்பது பற்றி ஆலோசனை நடத்தி அனுப்பி வைத்தான்.

அரை மணி நேரத்தில் தர்மேந்திரன் வந்து சேர்ந்தார். உடனடியாக சந்திக்க அழைத்தவன், “மீட்டிங் எப்படி நடந்தது?” எனக் கேட்டான்.

“என்ன பிரவா நடக்குது? உனக்கு தெரிஞ்சுதான் உன் வைஃப் இப்படிலாம் மீட்டிங்ல பேசுதா? நிர்வாகி நானா உன் மனைவியான்னு தெரியலை” என அதிருப்தியை வெளிப் படுத்தினார்.

“நீங்க ஒழுங்கா பார்த்திருந்தா அவ ஏன் உங்களை கிழிச்சு தொங்க விட போறா?” எனக் கேட்டான்.

“இப்படியே விட்டா உனக்கும் குடைச்சல் வரும்கிறதை மறந்திடாத. கண்டிச்சு வை பிரவா” என்றார்.

“என் வைஃப்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு சொல்லி தாங்கன்னு கேட்க கூப்பிடல உங்களை” என கடின தொனியில் அவன் கூற, உள்ளுக்குள் அவனை திட்டிக் கொண்டே அமைதியானார்.

“மலருக்கு உங்களால அங்க எந்த ப்ராப்லமும் வரக்கூடாது”

“நான் ஏம்ப்பா அப்படி செய்ய போறேன்?”

நேற்று மாலையில் அவர் சந்திக்க சென்றிருந்தவர்களின் வீடு இருந்த இடங்களை சொன்னவன், “அங்கெல்லாம் எதுக்கு போனீங்க? ஊழல்ல பெருத்த உங்க தொந்திய குறைக்கலாம்னு அவங்க வீட்ல போய் மசாலா தோசையும் மணிக்காரா பூந்தியும் சாப்பிட்டு வந்தீங்களா?” எனக் கேட்டான்.

அசடு வழிய சிரித்தவர், “அந்த பக்கமா போனேன், அப்படியே அவங்க வீட்டுக்கு போய் ஒரு விசிட் அடிச்சிட்டு வந்தேன்” என்றார்.

“ட்ரஸ்ட் மெம்பர்ஸ் யாரையாவது கைக்குள்ள போட்டுக்கிட்டு அவளுக்கு எதிரா நடக்கணும்னு ஏதாவது செய்ய நினைச்சீங்கன்னா இந்த ஸ்டேட் இல்லை நாட்டுலேயே உங்க பொழப்பு ஓடாத படி செய்திடுவேன். ஜாக்கிரதை!” என்றான்.

நான் ஏன் அப்படியெல்லாம் செய்ய போகிறேன், எனக்கே நிறைய உடல் தொந்தரவுகள் செய்கிறது, மலர் சொல்வதை கேட்டு நடக்கிறேன் என்றெல்லாம் சொல்லி விட்டு கிளம்பி சென்றார் தர்மேந்திரன்.

“மேடமை சமாளிக்கத்தான் இவரை வர சொன்னீங்கன்னு நினைச்சேன் சார்” என்றான் தமன்.

“எதுவா இருந்தாலும் அது எனக்கும் அவளுக்கும். கண்டவனையும் அவ கூட மோத விடுவேனா?” எனக் கேட்ட பிரவாகனை விசித்திரமாக பார்த்தான் தமன்.

“யாரையும் எதுவும் செய்ய விடாம எல்லாத்தையும் நீங்களே செய்ய போறேங்கிறீங்களா? வேணாம் சார். இப்போதான் உங்க முகத்துல ஒரு களை தெரியுது. மேடம் ரொம்ப நல்லவங்க சார், அவங்களை கஷ்ட படுத்தாதீங்க. அவங்ககிட்டருந்து மறைக்கிற…” பிரவாகனின் முறைப்பில் வாயை மூடிக் கொண்டு வெளி நடப்பு செய்தான் தமன்.

தனது வக்கீலுக்கு அழைத்த பிரவா, “இனிமே எதுவா இருந்தாலும் தமன் மூலமா எனக்கு வர வேணாம். யாரையும் நம்புறதா இல்லை நான். என் பெர்சனல் நம்பருக்கு கூப்பிடுங்க” என சொன்னான்.

சற்றுமுன் மலர் நடத்தி முடித்திருந்த ஆலோசனை கூட்டத்தின் காணொளியை இன்னொரு முறை பார்க்க ஆரம்பித்திருந்தவனின் மனதில் என்ன ஓடுகிறது என கணிக்க முடியாத படி இருந்தது அவனின் முக பாவம்.

Advertisement