Advertisement

அத்தியாயம் -14(2)

“நீங்க கிளம்புங்கண்ணா ஃபர்ஸ்ட்” என விஷ்ணுவிடம் சொன்னாள் மலர்.

“ஓய் டாக்டர்… உங்க நொண்ணனை எதுவும் ஃப்ரை பண்ணி வித்திட மாட்டேன். பயப்படாம போங்க நீங்க” என்றான் பிரவா.

“வாங்க ண்ணி போலாம். இவர் பேச்சுக்கு மிரட்டலுக்கு எல்லாம் அடி பணியிற ஆள் இல்லை விஷ்ணுன்னு அண்ணா தெரிஞ்சுக்கட்டும்” என்ற மிருணா மலரின் கையை பிடித்தழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றாள்.

தமனை தாண்டிக் கொண்டு இரு பெண்களும் செல்ல, “மேடம் நீங்க…?” என மலரை பார்த்து விட்டு அதிர்ந்தவன், “கேப் விட்டு கேப் விட்டு அடிங்க மேடம், நான் குடும்பஸ்தன், மிடில” என்றான்.

“நீங்கதான் என்னை போட்டு கொடுத்ததா? இருங்க உங்களுக்கு இருக்கு” மிருணா கோவமாக சொல்ல, “விடுங்க நாம போலாம்” என சொல்லி அவளை இழுத்து சென்றாள் மலர்.

பிரவாகனும் விஷ்ணுவும் நேருக்கு நேர் பார்த்த படி நின்றிருந்தனர்.

“நிஜமா மலரை விரும்பித்தான் கல்யாணம் செய்றீங்களா?” எனக் கேட்டான் விஷ்ணு.

“இல்லைனா என்ன செய்றதா இருக்கீங்க?” எகத்தாளமாக கேட்டான் பிரவா.

“மலர் அற்புதமான பொண்ணு, அவளோட வேல்யூ தெரியாம ஏதாவது செஞ்சா நான் பார்த்திட்டு இருக்க மாட்டேன். அதை விட அப்படி செஞ்சதுக்காக பின்னாடி நீங்களே ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க. உங்களை வார்ன் பண்றேன்… ஏதாவது கெட்ட எண்ணம் இருந்தா இப்பவே மாத்திக்கோங்க”

“ஐயோ என் புள்ளைய காணோமே’ ன்னு உங்கம்மா வீட்ல பயந்திட்டு இருக்க போறாங்க விஷ்ணு, போங்க போங்க…போய் உங்க மம்மி கொடுக்கிற ஹார்லிக்ஸ் குடிச்சிட்டு வாய தொடைச்சிட்டு தூங்குங்க சார்” நக்கலாக சொன்னான் பிரவாகன்.

அவனது நக்கலை ஏளனமான புன்னகையால் எதிர் கொண்ட விஷ்ணு, “என்னை பத்தின உங்க கணிப்பு எவ்ளோ தப்புன்னு சீக்கிரம் புரிய வைக்கிறேன்” என்றான்.

“மலர், மிருணா ரெண்டு பேரும் என்னை சேர்ந்தவங்க. தே ஆர் மை கேர்ள்ஸ், மலரோட உன்னோட பாசமலர் ட்ராமா தொடரணும்னாலும் சரி, மிருணாவோட கல்யாண மாலை கல்யாண மாலைன்னு பாடணும்னாலும் சரி நான் மனசு வைக்கணும். உன்னை பத்தி நான் கணிக்கிறது இருக்கட்டும், என்னை பத்தி நீ சரியா தெரிஞ்சுக்க, இப்ப இடத்தை காலி பண்ணு” என்ற பிரவா விறு விறுவென அங்கிருந்து சென்று விட்டான்.

இந்த திருமணத்தில் ஏதோ உண்மைத்தன்மை குறைவதாக உணர்ந்த விஷ்ணு சஞ்சலமான மனதோடும் பிரவாகன் மீதான கோவத்தோடும் அங்கிருந்து புறப்பட்டான்.

மலர் அங்கு வந்ததை கவனிக்காமல் விட்டதற்காக பிரவாகனிடம் சரமாரியாக திட்டு வாங்கிய தமன், “சார் வர வர நிறைய திட்டுறீங்க. நானும் மனுஷன் சார், எனக்கு ரெண்டு கண்ணு, ரெண்டு கை, ரெண்டு கால் தான் இருக்கு. எல்லாத்தையும் கவனிக்கணும்னா எல்லா ஆர்கன்ஸும் எக்ஸ்ட்ரா வேணும் சார்” என்றான்.

சிரித்து விட்ட பிரவாகன், “விஷ்ணு எப்படி போனான்?” எனக் கேட்டான்.

“குகன் சாரை விட்டு பேச வச்சு கார்ல அனுப்பி வச்சாச்சுங்க சார்” என்றான்.

“போ அவ்ளோதான், காலைல பார்க்கலாம்” என சொல்லி தன் அறைக்கு செல்ல திரும்பினான் பிரவாகன்.

“விஷ்ணு சாரைதான் உங்க சிஸ்டருக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதா முடிவு பண்ணிட்டீங்கதானே சார்? கொஞ்சம் அவர் கூட ஸ்மூத்தா போக கூடாதா?” எனக் கேட்டான் தமன்.

தமனை அழுத்தமாக பார்த்து, “அப்படி அவன் கூட நான் ஸ்மூத்தா போனா என் பேச்சை எப்படி கேட்பான்? முன்னாடி விஷ்ணு வீட்ல பார்த்த மாப்பிள்ளை. நான் கொஞ்சம் பேசி ஆசை காட்டி கரெக்ட் பண்ண வேண்டியிருந்துச்சு. அவ்ளோ ஆஃபர்ஸ் கொடுத்தும் முறுக்கிட்டு போனான்ல? இப்போ அவன் மிருணாவை லவ் பண்றான். நான் சொன்னதை கேட்டாதான் பொண்ணுன்னா ஒத்து வந்துதானே ஆகணும். நினைச்ச பழம் நினைச்ச நேரம் விழணும்னா எங்க தட்டணும்னு தெரிஞ்சிருக்கணும் தமன், இல்லைனா…” கட்டை விரலை கீழ் நோக்கி காட்டி தலையை இட வலமாக அசைத்தான்.

“திரும்ப கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டார்னா?”

சிரித்த பிரவா, “எங்க சொல்ல சொல்லு பார்ப்போம்” அலட்சியமும் அசட்டையும் நிறைந்த குரலில் சொல்லி விட்டு அறைக்கு சென்று விட்டான்.

பொன் மஞ்சள் நிற பட்டில் ஆபரணங்கள் அலங்கரிக்க தெய்வீக அழகோடு மண மேடைக்கு நடந்து வந்தாள் அன்புமலர். மூச்சு விட மறந்து அவளை பார்த்திருந்த பிரவாகன் தன் பக்கத்தில் அவள் அமரவும், “யூ ஆர் ஜஸ்ட் ஸ்டன்னிங்!” என்றான்.

அவன் பேசியது காதில் விழாதது போல இருந்து கொண்டாள்.

அவளின் காதோரம் குனிந்தவன், “என்னை அலட்சியம் பண்ணினா ஏன் டா அப்படி செய்தோம்னு நினைக்க வைப்பேன் மலர்” சிரிப்புடன் சொன்னான்.

பதிலுக்கு மலர்ந்த சிரிப்புடன் அவனது காதில், “ஹோம புகை எரிச்சலே எனக்கு போதும், அதிகமா இரிடேட் பண்ணினா நான் என்ன செய்வேன்னு எனக்கு தெரியாது. தவளை தான் வாயால கெட்ட கதைய நினைவு வச்சுக்கோங்க” என சொல்லி பழைய படி இருந்து கொண்டாள்.

பார்ப்பவர்களுக்கு மணமக்கள் அவர்களுக்குள் மகிழ்ச்சியாக ஏதோ பேசிக் கொள்வது போலவே இருந்தது.

பிரவாகன் மீது சந்தேகம் கொண்டிருந்த கீர்த்தி, விஷ்ணு இருவரும் கூட குழம்பிப் போயினர்.

பட்டும் நகைகளுமாக வளைய வந்த மிருணாவை மகனுக்கு சுட்டிக் காட்டிய கோபால், “அங்க பாருடா… அதான் நீ வேணாம்னு சொன்ன சீதேவி, இப்ப கூட ஒண்ணுமில்ல, ம் னு சொல்லு, அடுத்த மாசத்துல இதே போல விமரிசையா உன் கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்” என சொன்னார்.

அப்பாவை முறைத்து பார்த்த விஷ்ணு எழுந்து, நான்கு இருக்கைகள் தள்ளிப் போய் அமர்ந்து கொண்டான்.

கெட்டி மேளம் முழங்க தாலி சரடை மலரின் கழுத்தில் அணிவித்தான் பிரவாகன். அட்சதை தூவப் பட்டுக் கொண்டிருக்க சட்டென மலரின் திரு முகத்தை தன்னை பார்க்க நிமிர்த்திய பிரவாகன் அவளது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு விலகினான்.

மேடையில் இருந்தவர்கள் வெட்கப்பட்டு சிரிக்க, கீழே அமர்ந்திருந்தவர்கள் சிரிப்பாக தங்களுக்குள் பேசிக் கொள்ள தன் புதுக் கணவன் தலையில் நங் நங் என கொட்ட வேண்டும் போல மலருக்குள் ஆத்திரம் மூண்டது. யார் முகத்தையும் நிமிர்ந்து காண முடியாத அளவுக்கு கூச்சம் தடை செய்ய அவன் முதல் முத்தமிட்ட கன்னத்தை அனிச்சையாக தொட்டு பார்த்தாள்.

“இன்னொரு கன்னத்துக்கும் வேணும்னு கேட்குறா போல” குறும்புக் கார உறவுப் பெண் யாரின் குரலோ ஒலித்தது.

“போதும் நிறுத்திக்கோங்க, மத்தது தனிமைல… எனக்கு மந்திரம்லாம் மறந்து போறது” கண்டிப்பா கிண்டலா என புரியாத வகையில் சொன்னார் புரோகிதர்.

புரோகிதரின் அசிஸ்டெண்ட், “அண்ணா… இதெல்லாம் இப்போ சகஜம், விடுங்கோ” என்றார்.

“ம்ம்…” என உறுமியவர் பிரவாகனிடம் குங்கும சிமிழை நீட்டி, “பொண்ணு தோளை சுத்தி கையை கொண்டு வந்து அவ நெத்தியில வச்சு விடுங்கோ” என்றார்.

அவ்வாறே குங்குமத்தை வைத்து விட்ட பிரவாகன், “எந்த தவளை தன் வாயால கெட்டதுன்னு இப்போ தெரிஞ்சதா?” எனக் கேட்டான்.

எதுவும் சொல்ல முடியாமல் கோவத்தில் சிவந்த முகத்தோடு அமைதி காத்தாள் மலர்.

“ஹேய் நார்மலா இரு, சும்மா விளையாடினேன். என்ன இப்போ நான்தானே?” அவளை சமாதானம் செய்ய முயன்றான்.

“சடங்கையெல்லாம் முடிச்சிட்டு சாவகாசமா அவாகிட்ட பேசுங்களேன் தம்பி” தன்மையாக புரோகிதர் சொல்ல, பின் சடங்குகள் அனைத்தும் தடையின்றி நடந்தன.

மணமக்கள் மணமகனின் அறையில் இருந்தனர். ஏசி அறையாக இருந்ததால் கதவு வெறுமனே சாத்தப் பட்டிருந்தது. வீட்டுக்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தனர் அனைவரும்.

“நமக்கு கல்யாணம் நடந்திருக்கு மலர், தாலி போட்டு விட்டு ஆசையா ஒரு கிஸ் கொடுத்தது ஒண்ணும் அவ்ளோ பெரிய மிஸ்டேக் இல்லை, மூஞ்சிய நல்லா வை” என்றான் பிரவாகன்.

“கொஞ்சமாச்சும் அறிவிருக்கா? அப்படியே காதல் மன்னன்னு நினைப்பு? மேனர்ஸ்னா கிலோ என்னன்னு கேட்குற ஆளுகிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்? தவளைன்னு ஒரு வார்த்தை சொன்னதுக்கு என்னை யார் மூஞ்சியும் நிமிந்து பார்க்க முடியாத அளவுக்கு செய்வியா… யூ கன்னிங் ராஸ்கல்!” என திட்டினாள்.

மூடியிருந்த கதவை பார்த்தவன் சட்டென அவளை இழுத்து இதழ்களில் முத்தமிட்டு விலகி, “யூ ஸ்வீட் ஹனி பன்!” என்றான்.

அழுவது போல முகத்தை சுருக்கியவள் உதடுகளை அழுந்த துடைத்துக் கொண்டே, “தள்ளி போங்க” என்றாள்.

“ஹையோ கொல்றியே மலர், இப்படி உன்னை பார்க்கையில எப்படி என்னால தள்ளி போக முடியும்?” கேட்டுக் கொண்டே மீண்டும் அவன் அவளருகில் வர, அவசரமாக எழுந்தவள் தள்ளி சென்றாள்.

அவனும் எழுந்து கொண்டு அவளை நெருங்கி வர, தன்னிடம் வர முடியாதபடி அவனை அவள் பிடித்து தள்ளிக் கொண்டிருந்தாள்.

தன் முழு பலத்தையும் அவன் உபயோகிக்கவில்லை. தற்போதைக்கு இன்னொரு முத்தம் கொடுக்கவும் விழையவில்லை. ஒரு விளையாட்டாக எண்ணி அவளிடம் வம்பு வளர்ப்பதற்காக வேண்டுமென்றே அவளை முத்தமிட நெருங்குவது போல பாவனை செய்தான்.

மலருக்கு இந்த திருமணமே கட்டாயத்தில் நடக்கிறது. அனைவர் முன்னிலையில் முத்தமிட்டதையும் இப்போது தனிமையில் கொடுத்த முத்தத்தையும் ஏற்க முடியவில்லை.

நொடி நேரம் தன்னிலை மறந்தவள் கைக்கு அகப்பட்ட பெர்ஃப்யூம் பாட்டிலை கொண்டு அவன் தலையில் அடித்து விட்டாள்.

“ஆ…” என்ற அலறலோடு விலகினான் பிரவாகன்.

தான் செய்த காரியம் புரிய, திகைத்துப் போனவளாக கையில் பெர்ஃப்யூம் பாட்டிலோடு மலர் நிற்க, தலையை தடவிக் கொண்டும் வலியில் முகத்தை சுளித்துக் கொண்டும் நின்றிருந்தான் பிரவாகன்.

அமைதியாக அந்த பாட்டிலை இருந்த இடத்தில் வைத்தவள் அவனருகில் வந்து நின்று அவன் தடவிக் கொடுத்து கொண்டிருந்த கையை விலக்கி விட்டு அவளே தேய்த்து விட்டாள்.

கோலி குண்டு அளவிற்கு புடைத்து விட்டது. நெற்றியில் புரண்ட அவனது கேசம் மறைத்ததால் யாரும் பார்க்க வாய்ப்பில்லை என்றாலும் நல்ல வலி கொடுக்கும் என்பது மலருக்கு புரிய, “சாரி” என்றாள்.

கடுங்கோவத்தில் இருந்தவன், “எதுக்காக இப்படி பண்ணின… இது வேணாம்னுதானே…” எனக் கேட்டவன் அவளுக்கு மீண்டும் முத்தமிட ஆரம்பித்திருந்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement