Advertisement

பூ (2)
  சமையலில் மும்முரமாக சோபனா ஈடுபட குளித்து முடித்து வந்த ரஞ்சனி “சாரி க்கா ரொம்ப நேரம் தூங்கிட்டேன் ஒரே அலுப்பு எந்திரிகவே முடியல உடம்பு வேற செம்ம வலி அதான்..! என மன்னிப்பு வேண்ட
“ப்ச் ஒரு நாள் தானே விடு” என்றவர் “நளா எந்திரிச்சிட்டாளா!, எந்திரிகலன்னா போய் எழுப்பி விடு கோவிலுக்கு போகணும் நல்ல நேரத்துக்குள்ள ரெண்டு ஜோடிகளுக்கும் அர்ச்சனை பண்ணனும்” என்று அனுப்பி விட
பாலாவின் அறை கதவை தட்டினார் ரஞ்சனி “இதோ வந்திட்டேன்!” என குரல் கொடுத்தவள் கதவை திறக்க “என்னம்மா குளிச்சிட்டியா சீக்கிரம் கிளம்பி வா” என கூற “சரிங்கத்தை” என்றவள் பாலாவை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டாள் 
“என்னங்க எந்திரங்க நேரம் ஆச்சு” என்று எழுப்ப “ப்ச் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேனே!” என்று நளாவையும் இழுத்து அணைத்து கொண்டு உறங்க “டேய் அழுக்கு பையா எந்திரிடா நா இப்போ தான் குளிச்சிருக்கேன் மறுபடியும் குளிக்க வச்சுறாத” என அவனிடம் இருந்து திமிற “மறுபடியும் குளிக்கிறதில தப்பே இல்ல” என்று இறுக அணைத்தபடி உறங்கலானான்
அவனிடம் இருந்து விடுபட போராடியவள் “ப்ளீஸ் பாலா நேரம் ஆச்சு!” என்று கெஞ்ச சற்று கைகளை தளர்த்தியதும் வேகமாக எழுந்து அவனையும் எழுப்பி தள்ளாத குறையாக குளியறைக்கு அனுப்பி வைத்தாள் நளாயினி 
மற்றவர்களின் கவனத்தை ஈர்க்காத நிறத்தில் சிறு வேலைப்பாட்டுடன் கூடிய புடவையை கட்டியவள் இடைவரை நீண்ட கூந்தலை பின்னலிடாமல் இருபக்கமும் சிறு அளவிலான கற்றை  முடிகளை எடுத்து கிளிப் மாட்டி கொண்டு வெளியே வர ரஞ்சனி “இந்தாம்மா பூ வச்சுக்கோ” என்று கூந்தலில் மல்லிகையை சூட்டி “ஏ கண்ணே பட்டுடும் போல அழகா இருக்க!” என நெட்டி முறித்தவர் பூஜை அறை சென்று விட 
வம்சி வர சொன்னதை நினைவு படித்தி கொண்டு அறைக்கு சென்றாள் குளித்து முடித்தவன் கண்ணாடியை பார்த்து  கொண்டே 
‘அழகைச் சுமந்து வரும் அழகரசி
அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது…’ என பாடலை முணுமுணுத்தபடி தலை வாரி கொண்டிருக்க அவனின் பக்கவாட்டு தோற்றத்தை பார்த்தவாறு அறைவாசலிலேயே நின்றாள் சந்தன நிறத்திலான சட்டையும் வெண்ணிற வேஷ்டியும், அடங்க மறுத்து போக்கு காட்டி கொண்டிருந்த அடர்ந்த கேசத்தை! சீர்படுத்தி கொண்டிருக்க கணவனின் செயலை ரசித்தவாறு நின்றிருந்தாள்
வாசலில் அரவம் உணர்ந்து திரும்பி பர்த்தவனின் விழிகள் விரிந்தன “வா சனா ஏ வாசல்லயே நிக்கிற!” என்றவன் “நீ வேற யாரோ இல்ல பர்மிஷன் கேட்டு உள்ள வர்றதுக்கு என்னோட மனைவி இது என்னோட ரூம் இல்ல இனி நம்ம ரூம் தயங்கிட்டு வாசல்ல நிக்க கூடாது சரியா!” என பொய் கோபம் கொள்ள
கூச்சத்துடன் சற்று முன் வரை தான் இருந்த நிலையை எண்ணி வெக்கம் கொண்டாள் நிரஞ்சனா ‘என்ன நினைத்திருப்பான் பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பது போலல்லவா பார்த்து கொண்டிருந்தேன்’ என நெளிந்தவள் 
அமைதியாக அவன் முன் நிற்க ரசனையோடு தன் பதியை உச்சி முதல் பாதம் வரை பார்வையால் அளந்தான் கருமையான கூந்தல் நீளத்திற்கு ஏற்ப அடர்த்தி, தமாரை போன்ற செவி மடல்கள் ஒருபக்கத்தின் காதோரம் அடங்க மறுத்த சிறு முடி கன்னத்தை வருடி கொண்டிருந்தது செயற்கை பூச்சுக்கள் ஏதுமற்ற முகம் நாணத்தில் கன்னங்கள் இரண்டும் செம்மை படர்ந்திருந்தன அளவான உதடு என அவள் கீழ் உதட்டை வருட 
மேலும் உடல் கூச்சத்தில் நெளியலானாள் சங்கு கழுத்திலே மஞ்சள் நிற கயிறு கழுத்துக்கு பாந்தமாக அவளின் அழகை மேலும் மெருகேற்றி இருந்தது ‘மஞ்சள் கயிறு மஞ்சள் கயிறு” தான் என எண்ணியவன் தன் எண்ணப்போக்கை உணர்ந்து தலையை சிலுப்பி கொண்டு
“உனக்கு ஒன்னு வாங்கி வச்சுருக்கேன் பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன் தேடி தேடி பார்த்து பார்த்து வாங்கினது” என்று டிராயரில் இருந்து சிறு பெட்டியை எடுத்து அவளுக்கு திறந்து காட்டினான் 
“பிடிச்சிருக்கா?” என கேட்டு அவளை சேரில் அமர வைத்து கீழே தானும் அமர்ந்து அவள் பாதத்தை எடுத்து தன் மடியில் வைக்க பதறி போனாள் நிரஞ்சனா “என்ன பண்றிங்க வசி ப்ளீஸ் கால விடுங்க ப்ச் எனக்கு ஒரு மாதிரி இருக்கு விடுங்க” என பாதத்தை உறுவ
“ப்ச் பேசாம இரு அப்றம் கிஸ் பண்ணிருவேன்” என்று மிரட்ட நெளிந்தபடி “ப்ளீஸ் வசி விடுங்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு நானே போட்டுகிறேனே!” என்று சங்கடத்துடன் கூற
“வாங்கிட்டு வந்த எனக்கு போட்டு விட தெரியாதா! பேசாம இரு” என கொலுசை  அணிவித்து இரு பாதங்களையும் ஒன்றாக வைத்து பார்த்தவன் “நல்லா இருக்கு சரியா செலக்ட் பண்ணிருக்கேன் பிடிச்சிருக்கா?” என்று கேட்க
“ம் ரொம்ப…ஆனா உங்களுக்கு எப்டி தெரியும் இந்த அளவு எனக்கு சரியா இருக்கும்னு!” என புரியாமல் கேட்க
“தெரியும் இது கூட தெரிஞ்சு வச்சுகலன்னா எப்டிம்மா” என்றவன் “இந்த கொலுசுல ஒரு விசேஷம் இருக்கு இதுல இருக்குற முத்துகுள்ள இன்னொரு சின்ன முத்து செட் பண்ணி செய்ய சொன்னேன் அதுவும் இந்த தமாரை பூ டிசைன் பாத்தும் பிடிச்சு போச்சு உன்னோட காலுக்கும் பொருத்தமா இருக்கும்னு தோணுச்சு நடந்தா ஆர்ப்பாட்டம் இல்லாத அதே சமயம் தெளிவா தனியா கேக்கும் அது தான் இந்த கொலுசோட ஸ்பெஷாலிட்டி” என கண்சிமிட்டினான் 
“உங்கள நா வசின்னு கூப்பிடலாம் தானே!” என்றவளை “தாரளமா ஆனா அம்மா அப்பா முன்னாடி இந்த மாதிரி வேணாம் ஏன்னா அம்மா அப்பாவோட பேர் சொல்லி பொது இடம்ன்னு இல்ல ஏ முன்னாடி கூட கூப்பிட மாட்டாங்க சோ அந்த ஒன்னு மட்டும் எனக்காக” என்று கேட்க
” ம் சரி” என தலையாட்டியவள்  “கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க ஏதாவது என்கிட்ட மறைக்கிறீங்களா? அதாவது யாரையாவது லவ் பண்ணிருக்கிங்களா?” என்று தயங்கி ஒரு வழியாய் கேட்க
அடக்கமாட்டாமல் அவுட்டு சிரிப்பு சிரிக்க ‘இப்போ என்ன கேட்டுட்டேன்னு இந்த சிரிப்பு ஆமா இல்லன்னு சொல்ல வேண்டியது தானே அத விட்டுட்டு’ என உள்ளூர மண்டிய எரிச்சலை அடக்கியவள் “எதுக்கு சிரிக்கிறீங்க?” என கோபமாக கேட்க
“நீ கேட்ட கேள்வி அந்த மாதிரி இருக்கு சிரிப்ப அடக்க முடியல நா என்ன பண்ண! யாரையாவது லவ் பண்ணிருந்தேன்னா நா எதுக்கு உன்ன கல்யாணம் பண்ண போறேன்” என்றதும் வெடுக்கென முகத்தை திருப்பி கொண்டாள் நிரஞ்சனா 
அவள் கோபத்தில் சிரித்தவன் “முதல் முதல லவ் பண்ணது உன்ன தான் முதல் சந்திப்பிலேயே உன்ன எனக்கு பிடிச்சு போச்சு அதான் உன்ன சீண்டி பாத்தேன் ஆனா உனக்கு பிடிக்காம போயிருக்கும் தெரியாத பொண்ணுகிட்ட இப்டி நடந்துகிறானேன்னு!” என்று அவள் விரல்களை பிடித்து விளையாடியபடி கூற “அப்டி இல்ல எனக்கும் பிடிச்சிருந்துச்சு” என்றவள் சட்டென நாக்கை கடித்து கொண்டாள் 
சன்னமாய் புன்னகைத்தவன் “உன்கிட்ட மறைகிறதுக்கு எதுவும் இல்ல சனா உன்கிட்ட மறைக்கவும் மாட்டேன் அப்டி உனக்கு நா எதையாவது மறைக்கிறேன்னு துளி சந்தேகம் வந்தாலும் என்கிட்ட கேக்கலாம் நீ கேக்குற கேள்விக்கு என்கிட்ட பதில் இருக்கும்!, நீ இப்டி கேக்குறதா பாத்தா யாரோ என்ன பத்தி பல்க்கா பத்த வச்சுருக்காங்க போல என்ன யாராவது ஏதாவது சொன்னாங்களா?” என்று கேட்க
“இல்ல கேக்கணும்னு தோணுச்சு அதான் கேட்டேன் வேற யார் என்ன சொல்ல போறாங்க சரி வாங்க கீழ போலாம்” என்றவளை தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தவன்” நா இன்னும் பேச வேண்டியது இருக்கு பேசி முடிச்சிட்டு போகலாம்” என்றவன் “சொல்லு என்ன முதல் முதல ஆபீஸ்ல தான் பாத்த நானும் உன்ன முன்ன பின்ன பாத்ததே இல்ல அப்டி இருக்குறப்போ எப்டி கொஞ்சம் கூட யோசிக்காம என்னோட கேர்ள் பிரெண்டுன்னு சொன்ன!, மேனேஜர் வந்து சொன்னதும் செம்ம ஷாக் தெரியுமா யாருடா நம்மளுக்கு தெரியாத கேர்ள் பிரெண்டுன்னு” என கேட்க
“அது.. அது.. வந்து!” என திணறியவள் என்ன சொல்வது எப்படி சொல்வது என சற்று தயக்கமுற “பரவாயில்ல சொல்லு நானும் தெரிஞ்சுகிறேன், நீ தயங்குறத பாத்தா ஏதோ பெருசா இருக்கும்னு நினைக்கிறேன்” என அவளை மேலே சொல்ல சொல்லி ஊக்கினான்
கிருஷ்ணா ஸ்டோர்ஸின் கடை விஸ்தரிப்புக்கு விசாலமான அதே சமயம் சற்று அருகில் இருப்பது போன்ற இடம் தேவை என்ற காரணத்தால் எதிரில் இருந்த கடையின் தோற்றத்தை கண்டு சந்திர சேகரிடம் கடையை வாங்குவது பற்றி பேசினான் வம்சி அந்த மாதிரியான எண்ணம் தற்சமயம் இல்லை என கூறிவிட 
“பரவாயில்ல சார் யோசிச்சு பதில் சொல்லுங்க இப்போவே பதில் சொல்லணும்னு அவசியமில்ல ஏ சொல்றேன்னா நீங்க கேக்குற ரேட் கொடுக்க நா தயாரா இருக்கேன் கடையோட அமைப்பும் அட்டகாசமா இருக்கு இப்போ விட்டுட்டீங்கன்னா பின்னாடி விக்கிற மாதிரியான எண்ணம் வரும் போது நா கொடுக்குறேன்னு சொன்ன ரேட்டுக்கு யாரும் வாங்க மாட்டாங்க கம்மியா தான் கேப்பாங்க உங்க நல்லத்துக்கு தான் சொல்றேன், வர்ற பணத்துல உங்க பொண்ணுக்கோ பைய்யனுக்கோ கல்யாண செலவுக்கு பாதி செலவழிச்சிட்டு மீதிய உங்க அக்கவுண்ட்ல போட்டு வச்சுக்கோங்க மாச மாசம் இன்ரஸ்ட் வரும் சிரமமில்லாம குடும்ப நடத்தலாம்!” என சொற்பொழிவாற்ற 
“நீங்க சொல்ற ஐடியா நல்லா தான் இருக்கு தம்பி ஆனா… நா மட்டும் இல்ல என்னோட மனைவியும் சேந்து இந்த கடைய கஷ்டப்பட்டு உருவாக்குனோம் இது வெறும் கடை இல்ல தம்பி என்னோட குடும்பத்துக்கு படி அலக்கிற தெய்வம் தப்பா எடுத்துக்காதீங்க கடைய விக்கிற எண்ணம் இப்போதைக்கு இல்ல” என்று புன்னகைத்த வண்ணமே மறுத்துவிட்டார் சந்திரசேகர்
“ஓகே சார் அப்றம் உங்க விருப்பம் இதுல நா சொல்றதுக்கு ஒன்னுமில்ல இருந்தாலும் வெய்ட் பன்றேன் உங்க பதிலுக்காக” என கூறிவிட்டு வம்சி சென்றுவிட்டான்
இரவு சோர்வுடன் இல்லம் வந்த சந்திர சேகரிடம் என்ன என விசாரிக்க நடந்த அனைத்தையும் கூறியவர் “பாக்க ரொம்ப நல்ல பையனா இருக்கான்மா பேசுரத பாக்கணும்மே அவன் பேசுறதுல கடைய எழுதி கொடுகாம வந்தேனே அதுவே ஆச்சர்யம் தான் மரியாதை தெரிஞ்ச பையன் அந்த மாதிரி பையன் நம்ம பொண்ணுக்கு மாப்பிளையா வந்தா நம்ம பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவ” என அருணாவிடம் சிலாகித்தவர் 
“மறுபடியும் வருவான்னு நினைக்கிறேன் கொஞ்சம் பிடிவாத குணம் மாதிரி தெரியிது அவ்ளோ சுலபத்தில விடுற மாதிரி தெரியல மறுபடியும் வந்தான்னா விக்கிறதுக்கு ஒத்துகிட்டாலும் ஒத்துகிடுவேன்” என்றதும் 
‘அப்டிபட்டவன பாத்தே ஆகணும்’ என்ற எண்ணம் துளிர்விட இரவே முடிவு செய்துவிட்டாள் மறுநாள் அவனை பார்ப்பதற்கு தந்தை கூறிய செய்தியை சாக்காக வைத்து அவனை சந்திக்க வேண்டும் என சந்திர சேகர் யாரையும் இந்த அளவுக்கு ஆஹா ஓஹோ என பெருமையாக கூறி நிரஞ்சனா கேட்டதில்லை தந்தையே சிலாகிக்கும் அளவுக்கு உள்ளவனை காண வேண்டும் என ஆர்வம் அதிகமானது
அவசர அவசரமாக கிளம்பி கடைக்கு வந்தவளை பார்க்க முடியாது என்று கூறவும் இதுவரை வந்து பார்க்காமல் திரும்புவதா என்ற எண்ணம் மேலோங்க சட்டென கேர்ள் பிரெண்ட் என கூறிவிட்டாளே ஒழிய மனம் நெருட தான் செய்தது உத்தம சீலனை காணாமல் போக கூடாது என்ற பிடிவாதமும் அதிகமாக இருந்தது, முதல் சந்திப்பு அச்சு பிசராமல் மனதில் பதிந்து இருந்ததே மறக்க முடியுமா அவனை பார்க்க வந்த நாளை, காரணத்தை கூறியவள் “உங்கள பாக்கணும் பாத்தே ஆகனும்ன்னு தோணுச்சு அதான் அந்த மாதிரி பொய் சொன்னேன்” என்க அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான் வம்சி 
“நிரஞ்சனா!” என்ற குரல் கேட்டு “சரி வாங்க போகலாம் இப்டியே பாத்துட்டு இருந்தது போதும்” என்று எழ 
“சரி போகலாம் அதுக்கு முன்னாடி ஒரு சின்ன கிஸ் மட்டும் ப்ளீஸ்!” என்று முகம் சுருக்கி கேட்க
“மாட்டேன் முடியாது நா போறேன் நீங்க வர்றதா இருந்தா வாங்க” என நகர்ந்தவளின் கைப்பற்றி இழுத்தவன் “ஒன்னு தானடி கேட்டேன் சினுப்பாகோழி வசி பாவம் இரக்கப்பட்டு ஒன்னே ஒன்னு மட்டும்” 
“நா மாட்டேன்” என்னும் போதே “நிரஞ்சனா அம்மா அப்பா வந்துருக்காங்க வாம்மா” என்று மீண்டும் அழைப்பு வரவும் “அப்பா அம்மா வந்துருக்காங்க ப்ளீஸ் விடுங்க வசி நா போகணும் ஏதாவது நினைச்சுக்க போறாங்க” 
“கேட்டத கொடுத்துட்டு போ விடுறேன் தப்பா எதுவும் நினைக்க மாட்டாங்க உன்ன பாத்து சிரிக்க வேணா செய்வாங்க இப்டியே அடம்பிடிச்சா நேரம் தான் ஆகும் அப்றம் உன்னோட விருப்பம்” என்று அசைட்டையாக கூறியவன் சற்றும் அசைந்து கொடுப்பதாக இல்லை 
கடவுளே என நொந்தவள் “சரி கொடுக்குறேன் ஆனா ஒன்னு! நீங்க கண்ண மூடனும் அப்ப தான் கொடுப்பேன்” என்று சிணுங்க 
“நீ ஓடிட்டா” என்று புருவம் உயர்த்தி கேட்க
“ஓட மாட்டேன் நம்பிக்கை இல்லன்னா போங்க” என்று திரும்பி கொள்ள 
“சரி சரி கண்ண மூடுறேன்” என்றவன் ஒரு கையால் கண்களை மூடி கொண்டான்
கன்னத்தில் கொடுப்பது போல போக்கு காட்டியவள் கையில் தந்துவிட்டு அவனிடம் சிக்காமல் அறை வாசலில் சென்று நின்று கொள்ள 
“இது போங்கு நா ஒத்துக்க மாட்டேன்” என்றதும் “நீங்க கிஸ் கொடுக்கணும்னு தான் சொன்னிங்க எங்க கொடுக்கணும்னு சொல்லலேயே” என கண்சிமிட்டியவள் “கொடுக்க சொன்னிங்க கொடுத்துட்டேன்” என தோளை குலுக்க “கையில் சிக்கின சினுப்பாகோழி என்ன பண்ணுவேன்னு தெரியாது?” 
“தெரியாத ஒன்னு தெரியாமலே போகட்டும் அப்றமா வந்து பேசிக்கலாம் நா கீழ போறேன் வாங்க” என பழிப்பு காட்டி சென்றுவிட ‘உன்ன அப்றமா வச்சுக்கிறேன் கையில சிக்காமலா போயிருவ’ என மனதில் நினைத்தவன் கிளம்பி கீழே வந்தான்
அருணா சந்திரசேகர் மகளிடம் வாளாவி கொண்டிருக்க “வாங்க மாமா இப்போ தான் வந்திக்களா?” என கேட்டவன் மாமானரின் அருகில் அமர 
“ஆமா மாப்பிள்ளை அனுப்பி வச்சோமே தவிர பாக்காம இருக்க முடியல அதான் கடைக்கு போறதுக்குள்ள கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்னு வந்துட்டோம்” என கூற மற்றவர்கள் கோவிலுக்கு செல்ல தயாராகி வந்தனர்
அனைவரும் கிளம்பி அருகில் இருந்த அம்மன் கோவிலுக்கு வர அவர்களுக்கு முன்னதாக நளா குடும்பத்தினர் காத்திருந்தனர் முன்னமே அர்ச்சனை அபிஷேகத்திற்கு முன்பதிவு செய்து வைத்திருக்க கண்குளிர தரிசனத்தை கண்டு இரு ஜோடிகளின் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு புதுமண தம்பதிகள் கோவில் வாயிலில் இருந்த ஆதரவற்றோர்க்கு உணவும் உடையும் அளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி இல்லம் வந்தனர்
அறைக்கு வந்தவன் கடைக்கு செல்ல கிளம்பி கொண்டிருக்க பின்னோடு வந்த நிரஞ்சனா உம்மேன முகத்தை வைத்து கொண்டு நாற்காலியில் அமர்ந்தாள் தன் பதியின் முகவாட்டத்தை கண்டு உள்ளூர மகிழ்ந்தவன் “என்ன! மேடம் ரொம்ப சோகமா இருக்கீங்க” 
“ப்ச் போகனுமா இன்னும் ரெண்டு நாள் கழிச்சு போகலாமே எனக்கு இந்த வீடு இன்னும் சரியா பழகல ப்ளீஸ், மாமா தான் போறேன்னு சொல்றாரே நீங்க இருங்க வசி” என்று அவ கைபிடித்து கேட்டாள்
வரும் வழியிலேயே கடையிலிருந்து அழைப்பு வர தனபதியை இருக்க சொல்லிவிட்டு தான் செல்வதாக கூறிவிட்டான் வம்சி
“ப்ச் இல்லடா அப்பாவுக்கு அலைச்சல் ஒத்துக்காது அதனால தான் நா போறேன்னு சொன்னேன் ஆல்ரெடி நிறைய நாள் லீவ் போட்டாச்சு அப்பா தான் எல்லாத்தையும் கவனிச்சிட்டு இருந்தாரு, நா போனா தான் சரியா இருக்கும் ஆடிட்டிங் ஒர்க் வேற நெருங்குது  நா தாண்டா பாத்துக்கணும் அதான் மதியம் லன்ச்க்கு வறேன்னே அப்றம் என்ன?, இப்போ சிரிச்ச முகமா இரு அப்டின்னா தான் நா போய் ஒழுங்கா வேலைய பாக்க முடியும் உம்முனு வைக்காத நல்லாவே இல்ல” என்று அவள் மூக்கை பிடித்து ஆட்ட
அவன் கையை தட்டிவிட்டவள் “சரி வாங்க உங்களுக்கு டிஃபன் எடுத்து வைக்கிறேன் அப்பாவும் கிளம்புறேன்னு சொல்லிட்டு இருந்தாரு” என்று கூற இருவரும் கீழே இறங்கி வந்தனர்
காலை உணவை முடித்து கொண்டு மாமனாரும் மருமகனும் கிளம்பி சென்று விட நளா பாலா இருவரையும் மறு வீடு அழைத்து செல்வது பற்றி வீட்டில் இருந்தவர்கள் பேச தொடங்கினர்…

Advertisement