Advertisement

திருமணம் இனிதாய் முடிய வந்திருந்த விருந்தினர் உறவுகாரர்களை பெரியவர்கள் கவனித்து கொண்டிருந்தனர் தோழிகள் ஒன்றாய் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டிருக்க வம்சி அலைபேசியில் அழைப்பு வந்ததும் பேச சென்றுவிட்டான் பாலா நளா இருவரையும் வைத்து தோழிகள் கூட்டம் கேலி செய்து கொண்டிருக்க 
நிரஞ்சனாவை யாரோ ஒரு பெண் அழைப்பதாக அங்கிருந்த சிறுவன் கூறிவிட்டு செல்ல தோழிகளிடம் கூறிவிட்டு யாராயிருக்கும் என சென்றவள் பேசிவிட்டு திருப்பி வரும் பொழுது முகத்தில் அதிர்ச்சியின் ரேககைகள் படர்ந்திருந்திருந்தது சிறு கலக்கமும் சேர்ந்து மனதை அமைதியிழக்க செய்யும் விதமாக சிந்தனைகள் தாறுமாறாக ஓட எதையும் ஒதுக்கி வைக்க முடியாமல் தவித்து போனாள் நிரஞ்சனா 
‘மெய்யாலுமே  அவள் கூறிய அனைத்தும் உண்மை தானா அவள் குரலிலும் முகத்திலும் இருந்த உறுதி’ அது தான் நிரஞ்சனாவின் அமைதியை இழக்க செய்தது சுற்றி நடப்பது ஒன்றும் புரியவில்லை இந்த வாழ்க்கை தேவைதானா இப்டி ஒரு வாழ்க்கை ச்சே என்ன மாதிரியான வாழ்வு தன் எதிர்கால வாழ்வு என்ன மாதிரி அமைய வேண்டும் இருக்க வேண்டும் என எண்ணி எண்ணி அகமகிழ்ந்த காலங்களை நினைக்கையில் கண்கள் நனைய காத்திருந்தன முயன்று அடக்கியவள் அமைதியாக வந்து அமர 
“என்ன!” என அங்கிருந்தவர்கள் கேட்க ஒன்றுமில்லை என சமாளித்தவளின் மனதில் வண்டை போல எண்ணங்கள் குடைய ஆரம்பித்தன போன் பேசிவிட்டு வந்த வம்சி நிரஞ்சனாவின் முகத்தை காண எதையும் கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதை விட அவள் வேறு ஒரு பிரதேசத்தில் மனதில் சஞ்சலத்துடன் பயணித்து கொண்டிருந்தாள் என்று கூறலாம் 
“சனா” என இரண்டு முறை அழைத்து பார்த்து பயனற்று போக அவள் கரங்களை தன் கரங்களுக்குள் அடக்கியவன் “சனா” என அழைக்க தொடுதல் உணர்ந்து அவனை விளங்கமால் பார்த்தவள் தன் கரங்களை மெதுவாக உருவினாள் “என்ன யோசனை பண்ணிட்டு இருக்க” என்றதும் “ஓ.. ஒன்னுமில்ல சும்மா தான்” என சமாளித்தவளின் குரல் கரகரத்தது பெற்றோரை பிரிய போகிறோம் என்று கலங்குறாள் என நினைத்தவன் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை 
உறவுகள் ஒருசிலரை தவிர அனைவரும் சென்றிவிட மண்டபத்தில் இருந்து நேராக கிளம்பி மாப்பிளை இல்லம் வந்தனர் ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்று பூஜை அறையில் சென்று விளக்கேற்றி மணக்களுக்கு பால் பழம் கொடுத்து என சம்பிரதாயங்கள் முடிய பெண்கள் மதிய உணவை தயார் செய்வதில் ஈடுபட்டிருந்தனர் ஆண்கள் வேலை விஷயமாக பேசி கொண்டிருந்தனர்,
சற்று நேரத்தில் உணவு தயாராக ஆண்கள் முதலில் உண்டு எழ அதன் பின் பெண்கள் உணவருந்த அமரவும் பாலாவும் வம்சியும் அவரவர் பதியின் அருகில் அமர “ஓ இதுக்கு தான் பசியில்ல அப்றமா சாப்பிடுறோம்ன்னு சொன்னிகளா சரியான கேடிங்கடா நீங்க!” என்று பல்லவி கூற
“அத்தைம்மா தனியா விட்டு சாப்ட்டா மனசு வருத்தப்படுமா இல்லியா அதான் சேர்ந்து சாப்பிட முடிவு பண்ணோம்” என்ற வம்சியை பார்த்து முறுவலித்த பல்லவி “யார் மனசு” என்றதும் “இதோ இவன் மனசு” என பாலாவை கைகாட்ட
உணவை வாயில் அடைத்திருந்தவனுக்கு புரை ஏறியது “டேய் மெதுவா சாப்பிடு என்ன அவசரம்” என்ற ரஞ்சனி மகனின் தலையில் தட்ட 
“அப்டியில்ல சித்தி இப்டி தட்டனும்” என்று இருமுறை தட்ட “டேய் போதும் இன்னொரு தடவை தட்டுன பூமிய பிளந்துகிட்டு உள்ள போயிடுவேன்” என்றவனை அடக்கிய ரஞ்சனி “பேசமா சாப்பிடு” என்றதும் அமைதியானான், ஒரு வாய் எடுத்து வைத்தவளுக்கு உணவு செல்ல மறுத்தது தொண்டையில் வலி ஏற்படுவது போல உணர்வு கடினப்பட்டு பெயருக்கு உண்டு எழுந்தவள் சோபாவில் வந்து அமர கண்கள் இடுங்க அவளையே கவனித்து கொண்டிருந்த வம்சி பிறகு பேசி கொள்ளலாம் என சாதரணமாக விட்டுவிட்டான் 
மாலை மூன்று மணிக்கு மணமகள் வீட்டிற்கு சென்றவர்கள் சுப நேரம் முடிவதற்குள் கிளம்ப வேண்டும் என்றதால் நிரஞ்சனா தேவையான உடைகளை எடுத்து வைத்து கொண்டிருக்க மகளின் அறைக்குள் வந்த சந்திரசேகரும் அருணாவும் “என்னம்மா எல்லா எடுத்து வச்சிட்டியா தேவையானது மட்டும் எடுத்து வச்சுக்கோ மறுவீடு வரும் போது எல்லாத்தையும் எடுத்துக்கலாம், போற இடத்துல பாத்து சூதனமா நடத்துக்கோ அவங்க மனசு கஷ்டப்படுற மாதிரி எதுவும் பண்ணிறாத நம்ம வீட்டுல இருக்குற மாதிரி இருக்க கூடாது பொறுப்பா இருக்கணும் சரியா! நாளைக்கு நானும் அப்பாவும் வீட்டுக்கு வர்றோம் என்னடா” என பேசி கொண்டே இருந்தவரின் பேச்சு சட்டென தடைபட்டது
மகளின் முகத்தை பார்த்தவர் “என்னம்மா நா பேசிட்டே இருக்கேன் நீ அமைதியா இருக்க” என்றதும் “அம்மா” என அருணாவை கட்டி கொண்டு அழ பெற்றவர்கள் இருவருக்கும் கண் கலங்கியது
“என்னடா இது பக்கத்துல தானே இருக்கோம் உன்ன பாக்கணும்னு தோணுச்சுன்னா நாங்க வர போறோம் இதுக்கு போய் அழுதுகிட்டு” என்றவர் “சொல்லே” அருணா என்று சந்திரசேகர் கூற
“அதானே பக்கத்துல தானே இருக்கோம் அழுக கூடாது கண்ணை தொடச்சுக்கோ” என தேற்றி கொண்டிருக்க “என்ன அருணா கிளம்பியாச்சா நேரம் ஆச்சு கிளம்பலாமா?” என்று சோபனா கேட்க 
“ஆ முடிஞ்சிருச்சு அண்ணி இதோ கூட்டிட்டு வறேன்” என்றவர் “நிரு வா” என்று அழைத்து கொண்டு வர ஒருமுறை இருந்த இடத்தில் நின்றவாறே வீட்டை சுற்றி பார்த்தவளுக்கு அழுகை முட்டி கொண்டு வந்தது வம்சி எதுவும் கூறவில்லை நடப்பதை அமைதியாக பார்த்து கொண்டிருந்தான் 
“ப்ச் இப்போ எதுக்கு அழுகுற கிளம்பும் போது அழுக கூடாதும்மா போ போய் முகத்தை கழுவிட்டு வா கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு” என்று பல்லவி கூறி அனுப்பினார், குளிர் நீரில் முகத்தை நனைக்க கண்ணீர் சற்று மட்டுபட்டது நளா பாலா முன்னே சென்று விட அனைவரிடமும் விடைபெற்று கொண்டு காரில் ஏறியவள் தாய் தந்தையின் முகத்தை ஏக்கத்துடன் பார்த்தவாறே கையசைத்து விடைபெற மகள் சென்றதும் சந்திரசேகர் அழுது விட்டார் 
திருமணம் என்ற பேசுச்சு எழும் வரை மகள் அடுத்த வீட்டிற்கு சென்றுவிடுவாள் என்ற எண்ணம் வந்ததில்லை நிச்சயம் முடிந்த அன்று இரவு அருணாவிடம் தனியாக புலம்பி தீர்த்தார் “இன்னும் ஒரு மாசம் தான் இந்த வீட்டுல நிரு இருப்பா அப்றம் கல்யாணமாகி போயிருவ, எவ்ளோ டென்ஷன் இருந்தாலும் வீட்டுக்கு வந்து அவ முகத்தை பாத்தா போதும் எப்பேர்ப்பட்ட கோபனாலும் மறைஞ்சிறும் ஒரு மாசத்துக்கு அப்றம் அப்டி பாக்க முடியாதில்ல அருணா!” என மனதில் உள்ள அழுத்தத்தை கூற
“ப்ச் என்ன இது பொண்ணா பிறந்தா கல்யாணமாகி வேற வீட்டுக்கு போய் தான் ஆகணும் ஏ நா கல்யாணமாகி பிறந்த வீட்ட விட்டு உங்க கூட குடும்பம் நடத்த வரல! எங்க அம்மா வீட்டுலயே அவங்க கூடயே இருக்கேன் உங்க கூட வர முடியாதுன்னு சொன்னா நீங்க சும்மா விட்டுருப்பிங்களா பொண்ண பெத்தா தான் தெரியும் போல மக பிரிஞ்சு போற கஷ்டம் என்னன்னு” என்றதும் “என்ன அருணா ஏதோ மனசு அரிச்சுகிட்டே இருந்துச்சுன்னு உன்கிட்ட சொன்னா நீ இப்டி பேசுற!” என்றார் சந்திரசேகர்
“பின்ன என்னங்க உண்மைய தானே சொல்றேன் உங்க கூடவே கடைசி வரைக்கும் வச்சிருக்க போறீங்களா” என்ற அருணா “அவ முன்னாடி எதுவும் இந்த மாதிரி உன்ன பிரிய கஷ்டமா இருக்குன்னு பேசி வச்சிறாதிங்க அவள சமாதனம் பண்ண முடியாது” என மடித்த துணிகளை பீரோவில் அடுக்கியவாறே கூறியவள் “கண்டதையும் நினைச்சு மனச போட்டு குழப்பிக்காம படுங்க ரொம்ப நேரமாச்சு” என அப்போதைக்கு கூறிய அருணா மகள் சென்றதும் தானும் கணவருடன் சேர்ந்து அழ ஒருவரை ஒருவர் தேற்றி கொண்டனர் 
இரவு நளாவை அனுப்பி விட்டு நிருவை தன் அறையில் படுத்து கொள்ளுமாறு பல்லவி கூற முதலில் புரியாமல் விழித்தவள் விஷயத்தை கூறியதும் “ஹப்பாடா” என்றிருந்தது அவனை தனியாக சந்திக்கும் போது என்ன பேச என்ன சொல்ல என மண்டையில் குடைந்த குடைச்சலுக்கு சற்று இதம் அளிப்பதாக இருந்தது, ‘ஒரு வாரம் அவன் கூட இருக்க வேண்டிய அவசியமில்ல ஆனா ஒரு வாரத்துக்கு அப்றம்?’ என நினைத்தவள் “அத அப்போ பாத்துக்கலாம் அதுவரைக்கும் தப்பிச்சோம்! சிக்க கூடாது நிரு கையில சிக்க கூடாது’ என உருப்போட்டு கொண்டவள் மனம் குதுகலத்தில் குத்தாட்டம் போட அடுத்த நொடி அந்த பெண்மணி கூறிய விஷயம் நினைவு வந்து  மகிழ்ச்சி வடிந்து குழப்பமும் கோபமும் அப்பி கொண்டது
வம்சியின் ஜாதகப்படி கட்டம் சரியில்லை என்ற காரணத்தினால் ஒரு வாரம் கழித்து வைத்து கொள்ள சொல்லிவிட பாலா நளாவிற்கு மட்டும் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர் வம்சியிடம் விஷயத்தை கூறியதும் அவனுக்கு கோபம் தான் முன்னமே இதை கூறுவதற்கு என்ன என்று வெளியே காட்டி கொள்ளவில்லை இருந்தாலும் கிணற்று தண்ணீர் எங்கே போக போகிறது என மனதை தேற்றி கொண்டான், அவளை பார்க்கும் நேரம் மட்டும் கள்ள சிரிப்புடன் நகர்ந்து சென்றுவிடுவான் 
பல்லவியின் அறையில் படுத்தவளுக்கு உறக்கம் சிறிதும் வரவில்லை அம்மா அப்பா உறங்கியிருப்பார்களா என்ற யோசனை ஒருபுறம் யாரிடம் கேட்கலாம் சரியான பதிலை கூறுவர்களா என்ற யோசனை மறுபுறம் என யோசனைகள் உறக்கத்தை எடுத்துக்கொள்ள புரண்டு புரண்டு படுத்தாள்
அரவம் கேட்டு எழுந்த பல்லவி “என்னம்மா தூக்கம் வரலையா! புது இடம் அப்டி தான் இருக்கும் போக போக பலகிடும்” என்றவர் “இந்தா தண்ணி குடி” என்று பாட்டிலை நீட்ட
தயக்கத்துடன் வாங்கி பருகியவள் “பெரியம்மா உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கணும்!” என்று இழுக்க
“என்ன விஷயம்? சொல்லு!” 
“இல்ல அவருக்கு ஏற்கனவே கல்யாணம்..” என இழுக்க அவளை ஆழ்ந்து நோக்கியவர் “அத எதுக்கும்மா இப்போ கேக்குற அத நினைச்சு பாத்தா கூட கோபம் அப்டி வருது பேசாம தூங்கு மணி பன்னெண்டு” என விளக்கை அணைத்து விட்டு படுத்து கொண்டார், ‘அவள் கூறியது போலவே சொல்கிறார்களே எதுவும் கூறாமல் படுத்து கொண்டாள் என்ன அர்த்தம் அவள் கூறியது உண்மை தானா அப்படி என்றால்’ என நினைத்தவள் தலையை உழுப்பி கொண்டு சோர்வுடன் படுக்க சிந்தனை செய்த வண்ணம் உறங்கி போனாள்
அலைபேசி எழுப்பிய சத்தத்தில் பதறி அடித்து கொண்டு எழுந்தவள் திரையில் மின்னிய எண்ணை கண்டு என்னவோ ஏதோ என உயிர்ப்பிக்க “நிரு அம்மா பேசுறேன் எந்திரிச்சுட்டியா நீ தூங்கிட்டு இருப்பன்னு தான் போன் பண்ணேன்!” என்று விஷயத்தை கூற
“ச்சே போம்மா பயந்துட்டேன் இந்த நேரத்துல போன் பண்ணவும் நானே அலாரம் வச்சுட்டு தான் தூங்குனேன் நீயே எழுப்பி விட்டுட்டு! எதுனாலும் முன்னமே சொல்லிரு பதருது என்னமோ ஏதோன்னு” என பயத்துடன் பேச
“இங்க கொடு!” என்ற சந்திரசேகர் “நான் அப்பவே சொன்னேன்டா கண்ணா கொஞ்ச நேரம் கழிச்சு கால் பண்ணுன்னு அம்மா தான் பொறுப்பு பருப்புன்னு சொல்லி போன் பண்ணிட்டா ரொம்ப பயந்துட்டாய!” என்று கனிவுடன் கேட்க
ஆமாம் என வாய் வரை வந்த வார்த்தைகளை அடக்கியவள்  “இல்லப்பா” என்றவிட்டு “நீங்க எப்போ வர்றிங்க!” என்று ஏக்கத்துடன் கேட்க
“காலையில ஒன்பது மணிக்கு வர்றோம் கடைக்கு போகணும் இல்லையா அம்மா மட்டும் கொஞ்ச நேரம் அங்க இருப்பாங்க என்னால இருக்க முடியாதுடா!” என்று காரணத்தை கூற
“சரிப்பா சீக்கிரம் வாங்க உங்கள பாக்கணும் போல இருக்கு” என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டு திரும்ப புன்னகைத்த வண்ணம் பல்லவி அவளையே பார்த்து கொண்டிருந்தார் “என்ன பெரியம்மா?” 
“இல்ல ஒன்னுமில்ல சும்மா தான்” என்றவர் “சரி போய் குளிச்சிட்டு வா கோவிலுக்கு கிளம்பனும் அப்டியே சோபாகிட்ட காஃபி கொண்டுவர சொல்லு” என கூற
“சரிங்க பெரியம்மா” என்றவள் “அத்தை” என்றவாறே சமையலறை செல்ல” ஒரு நிமிஷம் அங்கயே நில்லு” என்றதும் கால்கள் பிரேக் போட்டது போல சட்டென நின்றன ‘என்ன’ என சோபானவை பார்க்க 
“தப்பா எடுத்துக்காதடா சமையல் கட்டு எனக்கு பூஜை அறை மாதிரி குளிச்சிட்டு தான் வருவேன் அதனால!” என்று தயங்க 
“அய்யோ இவ்ளோ தானா அத்தை நா கூட என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன் அம்மா கூட இப்டி தான் குளிச்சிட்டு தான் அடுபடிக்குள்ளயே போவாங்க” என்றவள் “அத்தை பெரியம்மா காஃபி கேட்டாங்க போட்டுட்டீங்கன்னா நா கொண்டுபோய் கொடுக்குறேன்” என்றவளை “அதெல்லாம் வேணாம் குளிச்சிட்டு சீக்கிரம் வா கோவிலுக்கு போகணும் நானே காஃபிய கொண்டு போய் குடுத்துகிறேன்” என்று கூறி அனுப்பி வைக்க வேகமாக படியேறியவளின் கால்கள் அறை வாசலில் தயக்கத்துடன் நின்றன 
‘அய்யோ உள்ள படுத்திருப்பாரே என்ன பண்றது நேத்து நைட்டே மாத்து துணி எடுத்துட்டு போயிருக்கலாம் பேசிட்டு இருந்ததுல மறந்து போனேனே!’ என அறை வாயிலில் நின்று கொண்டிருந்தவள் மெதுவாக கதவை திறக்க உள்ளே யாரும் இல்லை வெளியே இருந்தவாறே அறையை சுற்றி பார்வையால் அலசி ஆராய்ந்தவள் வம்சி இல்லை என்பதை அறிந்து பின்ன எங்க போயிருப்பாறு என்றெண்ணி பால்கனியில் பார்வையை பதிக்க ஆழ்ந்த உறக்கத்தில் குறுகி படுத்திருந்தான் சோபாவில், அவனின் உயரத்திற்கு சோபாவின் நீளம் கம்மி தான் இருந்தாலும் இப்படி உறங்குவதற்கு உள்ளே மெத்தையில் படித்திருக்கலாமே ‘ச்சே அவரு எப்டி தூங்குனா என்ன நாம வந்த வேலைய பாப்போம்’ என அறைக்குள் சென்றாள் நிரஞ்சனா
இரவு வெகுநேரம் உறக்கம் வராமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தவன் அறையில் உறங்க மனம் இல்லாமல் வெளியே பால்கனியில் வந்து படுத்துகொண்டான்
அவன் எழுவதற்குள் அறையை விட்டு சென்றிட வேண்டும் என துணிகள் அடங்கிய பையில் துழாவி கைக்கு அகப்பட்ட புடவையை எடுத்தவள் அதற்கு ஏற்ற இன்ஸ்கட்டை தேடி கொண்டிருக்க பின்னிருந்து அவளை யாரோ அணைத்ததும் திடுக்கிட்டு திரும்பி பார்த்தவளுக்கு உடல் வெடவெடத்தது, கன்னத்தில் குழி விழ புன்னகை முகமாய் ஆறடி உயரத்தில் நின்று கொண்டிருந்தவனை விழிகள் விரிய பார்த்தவளுக்கு மூச்சு விட கூட மறந்து போனது 
“என்ன சினுப்பாகோழி நா வருவேன்னு எதிர்பாதிருக்க மாட்டியே!” என்றவன் “பாத்தேன் ரொம்ப உசாறு தான் என்னமா ஆராய்ச்சி பண்ற இருக்கானா இல்லையான்னு இருந்தாலும் புருசனுக்கு இவ்ளோ பயப்பட கூடாதும்மா” என்றவன் “நேத்து நைட்டு கண்ணுலயே படமா என்னமா ஆட்டம் காட்டுனா அதுக்கு இப்போ தரவேணாம்! நீ மேல ஏறி வரும்போதே எனக்கு முழிப்பு வந்துருச்சு யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே ன்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா?” 
“உன்னோட கொலுசு சத்திலேயே முழிச்சுட்டேன் இருந்தாலும் வர்றது யாருன்னு தெரிய வேணாமா அதான் தூங்குற மாதிரி நடிச்சேன்” என்று சிரித்தவன் மருண்ட விழிகளில் இதழ் ஒற்ற கண்களை இறுக மூடி கொண்டாள் 
“கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே” என்ற மெல்லிய குரலில் திடுக்கிட்டு அவனை ஏறிட கண்கள் இதழ் இரண்டிலும் குறுஞ்சிரிப்பை தேக்கி கொண்டு அவள் வதனத்தை ரசித்து கொண்டிருந்தான் வம்சி அவனை விட்டு விலகி செல்ல முயன்றாள் நிரஞ்சனா
இருக்கைகள் கொண்டு அவளை அவன் அணைத்திருக்க “நா போகணும் அத்தை சீக்கிரம் குளிச்சிட்டு வர சொல்லிருக்காங்க ப்ளீஸ்!” என்று குரலில் நடுக்கத்துடன் கூற
“அப்டின்னா ரெண்டுபேரும் சேந்தே குளிக்கலாம்” என நமட்டு சிரிப்புடன் கூறியவன் “நேத்தே அம்மா சொன்னாங்க கோவிலுக்கு போகணும்னு நீ தனியா போய் குளிச்சு அப்றம் நா போய் குளிச்சு எதுக்கு டைம் தான் வேஸ்ட் ஆகும் ரெண்டுபேரும் சேந்து குளிச்சா நேரம் மிச்சமாகும்” என்றதும் அவள் உடல் நடுங்க தொடங்கியது பயத்துடன் அவனை பார்க்க கண்களில் சிரிப்புடன் முகத்தை சாதரணமாக வைத்து அவளையே பார்த்து கொண்டிருந்தான் வம்சி
“இல்ல முடியாது இதெல்லாம் தப்பு நா போகணும் ப்ளீஸ் விடுங்க வசி அப்றம் அன்னைக்கு மாதிரி கடிச்சு வச்சிருவேன்” என்று கூற
அவள் பெயர் சுருக்கத்தில் திகைத்தவன் பின் “பாருடா ஜான்சிராணி எட்டி பாக்குறாங்க!” என சிலாகித்தவன் “ம் பரவாயில்ல வலிய பொறுத்துகிறேன் ஆனா நா என்னோட முடிவ மாத்திக்க மாட்டேன்” என்று கூற 
“நிரஞ்சனா” என்று சோபனா கீழிருந்து குரல் கொடுக்க “அய்யோ அத்தை கூப்பிடுறாங்க ப்ளீஸ் நா போகணும்” என்றவளுக்கு கண்கள் குளம் போல தேங்கியது 
“அப்டின்னா ஒரு கிஸ் கொடுத்துட்டு போ!” என்று சொல்லியதும் “என்ன!” என அதிர்ந்தவள் “முடியாது நா மாட்டேன் ப்ளீஸ் விடுங்க வசி” என கரகரப்பானா குரலில் கூற 
என்ன நினைத்தானோ சட்டென அவளை பிணைத்திருந்த கைகளை விடுவிக்க விட்டால் போதுமென சிட்டாய் பறந்து விட்டாள் நிரஞ்சனா சிரிப்பை அடக்க மாட்டாமல் வாய் விட்டு சிரித்தவன் அவள் செல்வதையே பார்த்து கொண்டிருக்க
கீழே வந்தவளின் முகம் வெளிறி இருப்பதை கண்டு “என்னம்மா என்னாச்சு!” என்றவர் மேலே பார்த்துவிட்டு சிரித்தபடி “சீக்கிரம் குளிச்சிட்டு வா” என கூறிவிட்டு செல்ல அப்போதுதான் சீராக மூச்சு விடுவதையே உணர்ந்தவள் மேலே பார்க்க அவளை தான் சிரித்தபடி பார்த்து கொண்டிருந்தான் வம்சிகிருஷ்ணா 

Advertisement