Advertisement

திருமணத்திற்கு முதல் நாள் மாலையிலேயே இரு வீட்டினரும் மண்டபத்திற்கு வந்துவிட வரும் உறவினர்களுக்கு தங்குவதற்கு வசதியாக இருக்கும் என்று அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மேனேஜ்மென்ட் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன, இரவு பெண்ணுக்கு நலங்கு சடங்குகள் என அனைத்தும் முடிந்து காலை ஆறு மணிக்கு முகூர்த்தம் என்பதால் சீக்கிரம் உறங்கி எழ வேண்டும் என்று இரவு உணவை முடித்து கொண்டு அனைவரும் உறங்க சென்று விட்டனர்  
நிரஞ்சனா நளாவின் தோழிகள் இருவரையும் கேலி செய்து கொண்டிருக்க நிரஞ்சனா எதையோ சிந்தித்த வண்ணம் அமர்ந்திருந்தாள் முகத்தில் சிறு கலக்கம் கூட அனைத்தும் சரியாய் வருமா என்று உறக்கத்தை தொலைத்து அமர்ந்திருக்க “இங்க பாருடி இப்பவே மாப்பிள்ளைய நினைச்சு ஏங்கிட்டு இருக்கா பாவம் மாப்பிளை சார பாக்கமுடியலன்னு ரொம்ப தவிச்சு போய் இருக்கா, ஏய் நிரு நா வேணா மாப்பிளை சார் வந்துட்டாரான்னு கேட்டுட்டு வரவா” என்று தோழிகளில் ஒருத்தி கிண்டல் செய்ய
“ப்ச் இவ வேற இருக்குற மனநிலை என்னன்னு தெரியாம லூசு மாதிரி கிண்டல் பண்ணிட்டு அந்த நெடுமாட பாக்க தவிச்சு போய் தான் உக்காந்துட்டு இருக்கேன் பெரிய அழகன்” என்று மனதில் பொறுமி கொண்டிருந்தாள் நிரஞ்சனா
மணமகள் அறைக்கு வந்த அருணா “என்னம்மா இன்னும் தூங்கலையா நேரம் ஆச்சு காலையில சீக்கிரம் எந்திரிக்கணும்னு பேசுனது போதும் தூங்குங்க” என்றவர் “நிரு மாப்பிளை உன்கிட்ட பேசனுமா மேல அவரோட ரூம்ல வெய்ட் பண்ராரு இப்போ தான் வந்தாரு பாவம் ரொம்ப களைச்சு போன மாதிரி இருக்கு வா என்னன்னு கேட்டுட்டு வந்துரு அப்டியே போகும் போது சாப்பாடு கொடுத்து விடுறேன் கொண்டு போய் கொடுத்துரு” என்றவர் “சமையல்கட்டுல இருக்கேன் சீக்கிரம் வா” என்று கூறிவிட்டு முன்னே செல்ல
தோழிகளின் பார்வை மொத்தமும் அவள் மீது படிந்திருப்பதை உணர்ந்தவள் அவர்களின் நமட்டு சிரிப்பில் ஆள்காட்டி விரலை காட்டி எச்சரித்து விட்டு சென்றாள்
உணவை எடுத்து கொண்டு அறைக்கு சென்றவள் கதவை தட்டி அனுமதி கேட்க அவள் காலடி சத்தமும் சன்னமாய் ஒலிக்கும் கொலுசின் ஒலியும் அவன் காதுகளுக்கு தெளிவாகவே கேட்டது “திறந்து தான் இருக்கு சனா உள்ள வா” என்று குரல் வந்ததும், “தான் வந்தது அவருக்கு எப்படி தெரியும் அதுவும் சனா ரத்தின சுருக்கமாக பெயரையும் சுருக்கியாயிற்று” என எண்ணியவள் உள்ளே எட்டி பார்த்தாள் 
“ஆள் யாரும் இல்லை பின்ன சத்தம் மட்டும் எங்க இருந்து வந்தது” என்று யோசனை செய்துகொண்டிருக்க குளியறையில் தண்ணீரின் சத்தம் கேட்டு “ஓ உள்ள இருக்காறா!” என்று அறை வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள்
முகம் துடைத்து கொண்டே வெளிய வந்தவன் வாசலில் நிரஞ்சனா நின்று கொண்டிருப்பதை கண்டு “உள்ள வா சனா ஏ வெளிய நிக்கிற பாக்குறவங்க ஏதாவது நினைச்சுக்க போறாங்க” என்றதும் உள்ளே வந்தவள் “உங்களுக்கு சாப்பாடு கொடுத்து விட்டாங்க” என்று தட்டை நீட்ட 
“ம் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்!, அதுக்கு முன்னாடி சாப்ட்டுகிறேன் செம்ம பசி மதியம் சாப்பிடவே இல்ல” என்றதும் “ப்ச் பாவம்” என்று கனிவு உண்டாக பேசமால் அமைதியாக இருந்தாள்
அவசர அவசரமாக உண்பதிலேயே தெரிந்தது சரியான பசி என்று உண்டு முடிக்கும் வரை திரும்பி நின்றவளை பார்த்து கொண்டே உண்டு முடித்தவன் “ம் சனா” என்ற அழைப்பில் திரும்பியவள் “என்ன!” என பார்க்க
“சாரிம்மா சீக்கிரம் வரணும்னு தான் நினைச்சேன் ஆனா ரொம்ப வேலை அதான் முடியலை அம்மா சொன்னாங்க நீ என்ன தேடினன்னு அதான் படுக்க போறதுக்கு முன்னாடி உன்ன பாத்து பேசலாம்னு வர சொன்னேன், அப்றம் அம்மையார் என்ன தேடுனத்துக்கு காரணம் என்னன்னு தெரிஞ்சிக்கலாமா” என்று புருவம் உயர்த்தி அவள் கூறும் பதிலை கேட்க்கும் ஆவலோடு அவள் முகத்தை பார்க்க
“நா இவர தேடினேனா கடவுளே இந்த மனுஷன் இருக்க கூடாதுன்னு தானே பாத்துட்டு இருந்தேன் இப்டி அர்த்தம் புரிஞ்சுகிட்டா என்ன பண்றது” என நொந்து கொண்டிருக்க 
“என்ன மேடம் ஆழ்ந்த சிந்தனையில இருக்குற மாதிரி இருக்கு என்னன்னு சொன்னா நானும் யோசிப்பேன்ல” என சாதரணமாக இயம்பினாலும் அவன் சிரிப்பை மறைப்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது 
“இல்ல.. ஒன்னுமில்ல” என திக்கி திணற அவள் திணறலை கண்டு ரசித்தவன் “சரி உக்காரு” என்று எதிரில் இருந்த சேரை காட்ட 
“இல்ல எதுனாலும் சீக்கிரம் சொல்லுங்க அம்மா சீக்கிரம் பேசிட்டு வர சொன்னாங்க எனக்கு தூக்கம் வருது!” என்று  இல்லாத தூக்கத்தை இருப்பது போல கண்களில் காட்டி கொள்ள
சன்னமாய் புன்னகைத்தவன் குரலை சீர்படுத்தி கொண்டு பேச தொடங்கினான் “இப்போ.. அதுவும் விடிஞ்சா கல்யாணம்! இப்போ கேக்க கூடாது தான் இருந்தாலும் என்னோட மன திருப்திக்காக கேக்குறேன் நிஜமாவே உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் தானா உனக்கு என்ன பிடிச்சிருக்கா” என்றவன் அவள் முகத்தை ஆழ்ந்து நோக்க
‘என்ன பதில் கூறுவது காலம் கடந்த கேள்வி! கேட்க வேண்டிய நேரத்தில் இடத்தில் கேட்டிருந்தால் நிச்சயம் விருப்பம் இல்லை என்று கூறியிருப்பேன் நாளை திருமணம் இப்போது வந்து திருமணத்தில் விருப்பமா என்றால் என்ன கூறுவது விருப்பம் இல்லை என்றால் திருமணத்தை நிறுத்தி விடுவாறா’ என்ற ஏளனம் தோன்ற 
‘ச்சே என்ன இது கல்யாணம் பண்றதே அவரோட தேவைக்காக கல்யாணம் பிடிக்கலன்னா நிறுத்தவா போறாரு, பிடிவாதம் ஜாஸ்தின்னு சொன்னாறே அப்பா பாவம் இவரோட மனசுல என்ன இருக்குன்னு தெரியாம அவரும் வலையில விழுந்து என்னையும் விழ வைக்க போறாரு’ என விட்டில் பூச்சியாய் மனம் தவித்தது 
“என்ன ஒரே யோசனை மயமா இருக்கு நா ஒன்னும் கஷ்டமான கேள்விய கேக்கலையே உன்னோட மனசுல இருக்குறத கேக்குறேன் அதுக்கு எதுக்கு இவ்ளோ தயக்கம் எதுனாலும் சொல்லு நா ஒன்னும் சொல்ல மாட்டேன்” என்று கூற
நிமிர்ந்து அவனை நேராக நோக்கியவள் “கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொன்னா நிறுத்திருவிங்களா!” என்று மனதில் தோன்றியதை பட்டென கேட்டுவிட
“ஹா ஹா ஹா” என உரக்க சிரித்தவன் “நிச்சயமா நிறுத்த மாட்டேன் வர்ற மகாலட்சுமிய யாராவது எட்டி உதைப்பாங்களா நா மாட்டேன் கண்டிப்பா கல்யாணம் நடக்கும்” என்று கூறிவிட்டு ஓரக்கண்ணால் அவளை பார்க்க
கோபத்தை அடக்குவது அப்பட்டமாய் தெரிந்தது ‘பின்ன எதுக்கு கேட்டானம் என்ன பாத்தா இவனுக்கு எப்டி இருக்கு’ என மனதில் பொறுமியவள் “எனக்கு நேரம் ஆச்சு நா கிளம்புறேன் அம்மா காத்துட்டு இருப்பாங்க” என்று வேகமாக எட்டு வைத்து நடந்தவளை 
“ஒரு நிமிஷம் இப்போ போ ஆனா நாளைக்கு நா தூங்க போறேன் எனக்கு தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு இருக்க கூடாது” என்று சீண்ட 
அவனின் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளில் முகம் சிவக்க அவனை முறைத்து விட்டு வேகமாக சென்றாள் அவளின் வேக நடையை கண்டு குலுங்கி சிரித்தவன் ‘சினுப்பாகோழி இருக்கு உனக்கு எனக்கு உரிமையா சொந்தமான பிறகு உன்ன வச்சுக்கிறேன் என்ன பிடிச்சுருக்கான்னு கேட்டா அவ்ளோ யோசனை, ம் இருக்கட்டும் நாளைக்கு எப்டி ஒடுறன்னு நானும் பாக்குறேன்’ என்று மனதில் எண்ணியவன் அவளின் நினைவிலேயே படுக்கையில் விழுந்தான்
அறைக்குள் நுழைந்தவளை ஒரு பாடு படுத்திவிட்டனர் தோழிகள் “ஏய் என்ன சொன்னாரு! என்ன பேசுனாறு! அவரு கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொன்ன! ரொமான்ஸ் எதுவும் நடந்துச்சா!” என்று ஆளாளுக்கு கேள்வியாய் கேட்டு துளைத்தெடுக்க 
‘அய்யோ கொஞ்ச நேரம் தனியா இருக்க விடுறீங்களா’ என கத்த வேண்டும் போல தோன்றியது நிரஞ்சனாவிற்கு கோபத்தை அடக்கி வலிய புன்னகையை வரவழைத்து கொண்டவள் “அது எங்க ரெண்டுபேருக்கு உரிய பர்சனல் மேட்டர் அத உங்க கூட சேர் பண்ண முடியாது சாரி கைஸ்” என்று கூறிவிட்டு அவர்களிடம் இருந்து தப்பித்தாள் போதும் என போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு படுக்க
“ஏய் ட்ரெஸ் மாத்திட்டு படுடி அன்கம்பர்ட்டபிளா” இருக்கும் என்றவளின் பேச்சு நலிந்து போனது 
அதிகாலை இரண்டு மணிக்கே எழுந்துவிட்ட அருணா ஒவ்வொருவரையும் கிளப்பி கொண்டிருக்க பெண்ணின் அறையில் அனைவரும் உறங்கி கொண்டு இருந்தனர் சற்று நேரம் உறங்கட்டும் நான்கு மணிவாக்கில் எழுப்பிவிட்டால் கிளம்ப சரியாக இருக்கும் என்றெண்ணியவர் மற்ற வேலைகளை கவனிக்க தொடங்கினார் 
மூன்று மணிக்கு அலாரம் எழுப்பிய சத்தில் அனைவரும் விழித்துவிட மணப்பெண்கள் இருவர் மட்டும் உறங்கி கொண்டிருந்தனர், “யாருக்கோ கல்யாணம்ன்ற மாதிரி தூங்கிட்டு இருக்காங்க ரெண்டுபேரும்” என்ற ஆத்விகா “சரி ஒவ்வொருத்தரா குளிச்சிட்டு வாங்க அவங்க கொஞ்ச நேரம் தூங்கட்டும்” என்று கூறிவிட மடமடவென குளித்து முடித்து தயாராகி கொண்டிருந்தனர் தோழிகள்
சந்திரசேகர் மூர்த்தி இருவரும் பரபரப்புடன் வேலைகளை கவனித்து கொண்டிருக்க ரவீந்திரன் ஐயரை அழைத்து வர சென்று விட்டான், மாப்பிளை வீட்டினருக்கு எந்த வேலையும் வைக்காமல் பெண் வீட்டாரே முழு ஈடுபாட்டுடன் செய்து கொண்டிருக்க
“எங்கள வேலை செய்ய விடமா நீங்களே எல்லாத்தையும் பாத்து பாத்து பண்ணிட்டு இருக்கீங்க எங்களுக்கும் இதுல பங்கு இருக்கு சம்பந்தி நாங்களும் வேலை பாக்குறோம்” என்ற தனபதியை
“இருக்கட்டும் சம்பந்தி முடிச்சிருச்சு இனி வர்றவங்கள கவனிக்க வேண்டியது தான் நாங்க என்ன வேலை பாத்தோம் அதா மேனேஜ்மென்ட் ஆளுங்களே எல்லாத்தையும் பண்ணிட்டாங்க சும்மா மேற்பார்வை பாத்துட்டு இருந்தோம் அவ்ளோ தான்!” என பேசி கொண்டிருக்க அருணா காபியை கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்தார்
மாப்பிள்ளை அறையில் இரு மணவாளன்களும் தயாராகி கொண்டிருக்க “டேய் அண்ணா இந்த வேஷ்டியை மட்டும் கட்டிவிடுடா என்னால முடியல!” என்று பாவமாக பாலா நிற்க
சிரித்து கொண்டே “இதையெல்லாம் எப்போ கத்துக்க போற ஸ்கூல் பையன் மாதிரி சொல்ற!” என்றவாறே வேஷ்டியை கட்டிவிட்டான் வம்சி
“ஏய் நிரு எந்திரிடி டைம் ஆச்சு பாரு நளா குளிச்சிட்டு வந்துட்டா எந்திரி” என ஆத்விகா எழுப்பி கொண்டிருக்க “ப்ச் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேனே ப்ளீஸ்ப்பா தூக்கம் தூக்கமா வருது!” என்று உறக்கத்திலேயே கூற
“ஏய் உனக்கு இன்னைக்கும் கல்யாணம் எந்திரிடி இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறாளம்” என எழுப்பி குளியறையில் தள்ளி கதவை சாத்தினால் ஆத்விகா உறக்கத்துடன் காக்க குளியலை முடித்துவிட்டு வெளியே வந்தவளை புடவை கட்டி அலங்காரம் என்ற பெயரில் பார்லரில் இருந்து வந்த பெண் படுத்தி கொண்டிருந்தாள், உறக்கம் கண்களை விட்டு அகல மறுத்தது இரவு முழுதும் சிந்தனையில் மூழ்கி இருந்தவள் அதிகாலை அருணா எழுப்ப வருவதற்கு சற்று முன்னர் தான் உறங்கினாள்
ஒருவாறு அலங்காரத்தை முடித்து அமர்ந்திருக்க “அம்மா பொண்ண கூட்டிட்டு வாங்க” என்று குரல் வரவும் இரு பெண்களையும் தோழிகள் அழைத்து செல்ல “செம்ம லக் போ, ரெண்டுபேரும் எப்பவும் பிரியாம இருக்க போறீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க தாண்டி நீங்க எனக்கே பொறாமையா இருக்குன்னா பாத்துக்கோயே” என்று தோழிகளில் ஒருத்தியானா வான்மதி கூற
“ஏய் கொஞ்சம் நிமிர்ந்து பாரு மாப்பிளை சார் உன்ன தான் பாத்துட்டே இருக்காரு” என்றதும் நிமிர்ந்தவளின் பார்வை சட்டென தாழ்த்தி கொண்டது
யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்பதுபோல பாலாவை பார்த்து கொண்டே நளா  நடந்து வர பாலாவும் அவளை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான் இருவரையும் மேடையில் அமர வைத்துவிட்டு தோழிகள் ஒதுங்கி நிற்க 
“அழகா இருக்க நளா” என்றதும் மீ டு வை “மெட்டு” என நாணத்துடன் கூற
“உனக்கு வெக்கப்பட தெரியும்னு இப்போ தான் தெரியும் அழகா இருக்கு உன்னோட கன்னம் லேசா சிவந்திருக்கு!” 
“நீங்க ரொம்ப ஐஸ் வைக்கிறீங்க புகழ வேண்டியது தான் அதுக்காக இப்டியெல்லாம் சொல்ல கூடாது கருப்பு கன்னத்துல சிவந்திருக்காக்கும்” என சடங்குகளை செய்து கொண்டே பேசி கொண்டிருக்க
“கண்டுபிடிச்சிட்டியா பரவாயில்ல நான் உண்மைய தான் சொல்லிருக்கேன் எனக்கு தெரியுது கன்னம் சிவந்திருக்கிறது என்னோட பொண்டாட்டிய நா சொல்லாம வேற யார் இப்டி சொல்லுறதாம்” என்று கிசுகிசுக்க சிரித்த வண்ணம் குனிந்து கொண்டாள் நளா
ஒரு ஜோடி திருமணத்தின் ஒவ்வொரு தருணங்களை ரசித்தபடி சடங்குகளை செய்து கொண்டிருக்க மற்றோரு ஜோடி எதுவும் பேசாமல் கடமையே கண்ணாக சடங்குகளை செய்து கொண்டிருந்தனர் “கொஞ்சம் சிரிமா ஏ முகத்தை இப்டி வச்சுருக்க உன்ன நாடுகடத்தவ போறாங்க கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்கு தானே அனுப்பி விடுறாங்க” என்றவன் “உன்னோட அமைதியான முகத்துலயும் ஒரு அழகு இருக்கு” என்று வம்சி ரசனையோடு கூற
தப்பியும் நிரஞ்சனா நிமிர்ந்து பார்க்கவில்லை காரணமும் தெரியவில்லை கண்கள் குளம் போல தேங்கி இருந்தன, நிமிர்ந்தாள் கண்கள் காட்டி கொடுத்து என்ன ஏது என்று கேள்விகளை வேறு கேட்டு தொலைப்பான் எதற்கு வம்பு என குனிந்தபடி இருக்க
“நீ நிமிர்ந்து என்ன பாக்கல அப்றம் பொண்ணு யாருன்னு தெரியாம வேற யார் கழுத்துலயாவது கட்டிட போறேன்” என்றதும் சட்டென நிமிர்ந்தவள் அவன் முகத்தில் எதை கண்டலோ மீண்டும் கீரீயை போல தலையை குனிந்து கொண்டாள்
நமட்டு சிரிப்புடன் கண்களில் ரசனையுடன் அவளின் செயலை கண்டவன் அமைதியாக சடங்குகளை செய்தான் தாலியை ஆசிர்வதித்து ஐயர் அவனிடம் நீட்ட நிரஞ்சனாவின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்து மூன்று முடிச்சுகளை அவிழ்க்க முடியாதபடி தன் வாழ்வில் அவளை பிணைத்தான் 
‘இனி என் வாழ்வு முழுதும் நீ தான் நிறைந்திருப்பாய் உன் விருப்பங்கள் அனைத்தையும் நீ இம்மெனுமுன் செய்து முடிப்பேன் கண்மணி’ என மனதில் நினைத்தவன் உச்சி வகுட்டில் திலகத்தை இட நிரஞ்சனாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது உதட்டை கடித்தபடி குனிந்து அமர்ந்திருந்தவளுக்கு காரணம் தெரியவில்லை 
‘புதிய வாழ்வில் அடியெடுத்து வைக்க போகும் என்ற ஆனந்த கண்ணீரா இல்லை பாசத்தை கொட்டி வளர்த்த பெற்றவர்கள், கவலை அனைத்தையும் மறந்து ஆட்டம் பாட்டம் என பொழுதுகளை கழித்த இல்லம் இவற்றை விட்டு பிரிய போகும் என்றா அல்லது இவரோடு பிணைக்கப்பட்ட வாழ்வை சகித்து வாழ வேண்டும் என்ற எண்ணமா’ என மனம் காரணமின்றி பந்தய குதிரையின் வேகத்தில் சிந்திக்க கடைசி எண்ணத்தை தவிர்த்தது அவள் மனம் 
‘இல்லையே! இவரை பிடிக்காமல் இல்லையே பிடிக்கவில்லை என்றால் யார் என்று முகம் அறியா போதிலும் காணும் ஆவல் தோன்றியதே!, அதன் காரணமாக அவருடைய பெண் தோழி என்று சற்றும் யோசிக்கமல் கூறினேனே அவர் நடந்து கொண்ட விதம் பிடிக்கவில்லை தான் இருந்தாலும் அவர் மேல் கோபம் ஏற்படவில்லை மாறாக என் செயலை எண்ணிதானே நொந்து போனேன்’ என தனக்கு தானே விளக்கம் அளித்து கொண்டிருந்தாள்
“சனாம்மா” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தவள் விழிகள் விரிய வம்சியை பார்க்க கைக்குட்டை கொண்டு கண்களை துடைத்து விட்டவன் “எல்லாரும் நம்மள தான் பாக்குறாங்க அழுகாத” என்று கூற
அப்போது தான் அனைவரையும் பார்த்தாள் கூடவே தன் மார்பில் புதிதாய் சரடு போல தொங்கிய மஞ்சள் கயிறை பார்த்தவளுக்கு இனி தான் நிரஞ்சனா சந்திரசேகர் அல்ல நிரஞ்சனா வம்சி கிருஷ்ணன் என நினைத்ததும் மனதில் வலி தோன்றியது..

Advertisement