Advertisement

அத்தியாயம் 10

 

                       தன் அறையில் கட்டிலுக்கு அருகில் இருந்த தன் தாயின் சிறிய படத்தை பார்த்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் ஸ்ரீகன்யா. இருகால்களையும் மடித்து கைகளை கட்டிக்கொண்டு தன் கால்களில் முகத்தை புதிது இருந்தவள் அவள் அன்னையின் புகைப்படத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். அன்று மதியம் நடந்தவை அவள் நினைவில் வலம்வர நான் என்ன செய்யறதுமா? என்று கேட்பது போல இருந்தது அவள் செய்கைகள்.

                        காரில் வரும்போதே மாரிஎன்ன நடந்தது பாப்பா, உங்க முகமே சரியில்லையே, என்ன விஷயம்என்று கேட்டிருக்க

                              “அதெல்லாம் ஒண்ணுமில்ல மாரிண்ணாஎன்று அவள் கூறவும் 

              “அந்த ஷியாம் தம்பி எதுவும் தொந்தரவு கொடுக்கறாரா பாப்பா, எதுவா இருந்தாலும் அண்ணன்கிட்ட சொல்லுங்க. மறைக்காதீங்கஎன்று கேட்க

                “மாரிண்ணா நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல. அவர் வந்தது வேற விஷயமா, நீங்க நீங்களா ஒன்னை நெனச்சு யார்கிட்டயும் சொல்லி வைக்காதிங்கஎன்று அழுத்தமாக கூறவும்

                  “உங்க முகமே சரி இல்லை பாப்பா, நீங்க நல்லா இருந்தா நான் ஏன் கேட்கப்போறேன்??” என்று பாவமாக கேட்க 

                       “எனக்கு தலை வலிக்குது மாரிண்ணா. அன்னம்மா கையாள ஒரு காஃபி குடிச்சா சரியாகிடுவேன், இதுக்கு இவ்வளவு யோசிப்பீங்களா நீங்கஎன்று கேட்டு அவரை அடக்கி இருந்தாள். சொன்னதுபோலவே வீட்டிற்குள் நுழைந்ததும், அன்னம்மாவிடம் காஃபியை வாங்கி குடித்தவள் அவரிடமும் தலை வலிப்பதாகவும், உறங்கப்போகிறேன் என்றும் கூறிவிட்டு அறைக்கு வந்துவிட்டாள். 

                      இப்போது தன் அறையில் வந்து அமர்ந்துவிட்டவளுக்கு நிஜமாகவே தலை வலி வந்துவிடும் போல் இருந்தது ஷ்யாமின் நடவடிக்கைகளால். போனில் பேசும்போதே அவனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் இனி என்ற எண்ணம்தான் அவளிடம். தனக்கு இது ஒத்துவராது என்பதில் அத்தனை தெளிவாக இருந்தாள் அவள்.

                       ஆனால் அவள் எதிர்பார்க்காதது அவன் அடுத்த அரைமணி நேரத்தில் எதிரில் வந்து நிற்பான் என்பது. அதோடு அவன் பேசிய விதமும், அவன் குரலில் இருந்த அழுத்தமும் அவன் உறுதியை உணர்த்திவிட, இவனை எப்படி எதிர்கொள்வது என்று குழம்பித்தான் போனாள் அவள்.

                      எப்படியாவது தன் நிலையை அவனுக்கு உணர்த்தி விடும் நோக்கில் இருந்தவள் தன் அன்னையை பற்றி பேசிவிட்டது அவளுக்கே அதிர்ச்சிதான். அவனுக்கு புரியவைத்து விடும் வேகத்தில் பேசிவிட்டிருக்க,அதன்பிறகே பேசியதை உணர்ந்தாள் அவள். அவள் பேசியதே அதிர்ச்சி என்றால் அதைவிட அதிர்ச்சி அவன் தன்னைப் பற்றி எல்லாம் தெரியும் என்று கூறியது.

                       அவள் அன்னை அத்தனை நேர்மையாக வாழ்ந்து மறைந்தும் கூட, இன்றுவரை அவர் பெயரை சொன்னவுடன் பலரின் பார்வை ஏளனமாகி மாறிவிடும். அதன்பொருட்டே வெளியிடங்களில் கூட பெரும்பாலும் தனியாகவே இருக்க பழகி கொண்டாள் அவள். அப்படி இருக்க இன்று அவன் அத்தனையும் தெரிந்தபிறகும் தன்னை மணக்க கேட்டிருப்பது ஆச்சர்யமான உண்மை தான் அவளுக்கு. 

                   அந்த ஒரு காரணத்திற்காகவே அவன் மீது சிறிது நல்லெண்ணமும் ஏற்பட்டிருந்தது. ஆனால் அதற்காக எல்லாம் அவனை திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதில் ஏனோ அத்தனை தெளிவாக இருந்தாள் அவள். அன்னையின் வாழ்வு கண்முன் பாடமாக இருக்க, யாரையும் நம்பி தன் வாழ்வை ஒப்புவிக்கும் எண்ணத்தில் அவள் இல்லை. 

                                 இப்போது என்று இல்லாமல் எப்போதுமே அவள் திருமணத்தை பற்றி பெரிதாக யோசித்ததே இல்லை, தனக்கு திருமணம் வேண்டாம் என்பதில் உறுதியாக தான் இருந்தாள். இன்று ஷ்யாமிடம் அதை தெளிவாக சொல்லிவிட்ட போதும், அவன் நடந்து கொண்ட விதம் அவளை மிகவும் பாதித்து இருந்தது.

                    எந்த தைரியத்தில் இவன் தன்னிடம் இப்படி நடந்து கொள்கிறான் என்று புரியவில்லை அவளுக்கு. அவன் இதழ் தீண்டிய இடம் வேறு உறுதிக்கு கொண்டே இருக்க, சிறுபிள்ளைகள் முத்தமிட்டாள் கன்னத்தை துடைத்துக் கொள்வதை போல அழுத்தமாக அத்தனை முறை துடைத்துவிட்டாள். ஆனால் அப்போதும் நெஞ்சின் ஓரத்தில் ஏதோ குறுகுறுப்பு இருந்துகொண்டே இருந்தது அவளுக்கு. 

                          அதையும், இதையும் நினைத்து அவள் தனக்குள் உழன்று கொண்டிருந்த நேரம், அன்னம்மா கையில் உணவுத்தட்டுடன் அறைக்குள் நுழைந்தார். எப்போதும் அனுமதி கேட்பதில்லை என்பதால் அவர் அப்படியே வந்திருக்க, அவர் கண்டது கண்கள் கலங்கி முகம் சிவந்து அமர்ந்து இருந்தவளை தான். 

                         “என்ன ஆச்சு பாப்பா, தலை ரொம்ப வலிக்குதா ஸ்ரீம்மாஎன்று அவர் பதறி அருகில் வர, “கொஞ்சம் வலி இருக்கு அன்னம்மா, பீவர் வரும்போல இருக்குஎன்றவள் தன் கண்களை துடைத்துக் கொண்டுபசிக்குது, சாப்பாடு கொடுஎன்று கையை நீட்ட

                     அவருக்கு மற்றவை மறந்து போனது. அவள் அருகில் அமர்ந்தவர் அவளுக்கு உணவை கொடுக்க, கையில் வாங்கி உண்ண ஆரம்பித்தாள் அவள். 

                      உண்டு முடித்து விட்டு படுக்கையில் விழுந்தவள் உறங்கும்வரை அன்னம் உடனிருக்க, அன்று இரவு உணவு நேரம் வரையும்கூட அவள் அறையை விட்டு வெளியே வரவில்லை.அன்னம் அவளை எழுப்புவதற்காக வந்தவர் கண்டது காய்ச்சலில் அனத்திக் கொண்டிருந்த ஸ்ரீம்மாவை தான் . பதறிப்போய் அவர் மருத்துவருக்கு அழைக்க,அவர் வந்துபார்த்துவிட்டு காய்ச்சல் குறைய ஊசியும் போட்டுவிட்டு கிளம்பினார். 

                  அவர் கொடுத்த மருந்துகளின் தயவில் ஆழ்ந்து உறங்கியவள் அடுத்த நாள் காலை தான் எழுந்துகொண்டாள். அன்னம் முந்தின நாள் இரவே வேதவதிக்கு போன் செய்து சொல்லி இருக்க, அந்த இரவு நேரத்தில் ஸ்ரீதரை அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தார் அவர். ஸ்ரீதருக்கு உடன் செல்வதில் விருப்பம் இல்லை என்றாலும் தன் அன்னையை அந்த இரவு நேரத்தில் யாரோடும் தனியே அனுப்ப மனமில்லாதவன் தானே அழைத்து வந்திருந்தான்

                    வேதவதி வீட்டிற்குள் அழைத்த போதும் அவரை முறைத்துவிட்டுஅரைமணி நேரத்தில திரும்ப வருவேன், என்னோட கெளம்புறீங்கஎன்று வார்த்தைகளை கடித்து துப்பிவிட்டு அத்தனை வேகமாக காரை கிளப்பிக் கொண்டு சென்றிருந்தான் அவன். 

                     அவன் செல்வதை பார்த்திருந்தவர் ஒரு பெருமூச்சோடு வீட்டிற்குள் நுழைய அங்கே சுயநினைவில்லாமல் கிடந்தாள் ஸ்ரீகன்யா.அவளை பார்த்தவருக்கு விலகும் எண்ணம் வராமல் போக அவள் அருகில் அமர்ந்துவிட்டவர் மகனை மறந்துவிட்டார் அந்த நொடிகளில். 

                  சுற்றுப்பயணத்திற்காக வெளியூர் சென்றிருந்த தன் கணவரிடம் ஸ்ரீகன்யா நலமாக இருப்பதை தெரிவித்தவர் தான் அவளோடு இருந்து பார்த்துக்கொள்வதாகவும் சொல்லிவிட்டார். பின்னே அத்தனை முறை அழைத்திருந்தாரே அவர். இவள் நிலை தெரிந்தால்தான் மனிதர் நிம்மதியாக இருப்பார் என்று வேதவதிக்கு புரிந்திருக்க, அவரிடம் தெரிவித்துவிட்டார்.

                                அடுத்த அரைமணி நேரத்தில் சொன்னதுபோலவே வந்துவிட்டான் ஸ்ரீதர். அந்த வீட்டின் வெளிவாசலில் நின்று அவன் அன்னைக்கு அழைக்க, அவர் அழைப்பை எடுக்கவும்வெளில வாங்க.”என்றவன் அழைப்பை துண்டிக்க போகஸ்ரீ,ஸ்ரீஎன்று அவன் அன்னை கத்தவும் மீண்டும்சொல்லுங்க ம்மா.”என்று கூறினான். 

            அவரோஸ்ரீம்மாக்கு காய்ச்சல் ரொம்ப அதிகமாயிருக்கு ஸ்ரீ. என்னால இப்போ வரமுடியாது, நீ கெளம்பி வீட்டுக்கு போ. நான் காலையில உனக்கு கூப்பிடுறேன்என்று கூற

                 ” ம்மா…. என்ன நினைக்கறீங்க நீங்க? உங்களை இங்கே விட்டுட்டு நான் போவேன்னா, மொதல்ல வெளியே வாங்கஎன்று அவன் கத்தவும். “ஸ்ரீ ஏன் கத்துற இப்போ, அவளுக்கு முடியலடா. புரிஞ்சிக்கவே மாட்டியா நீ,” என்று கேட்டுவிட 

                 “ம்மா பர்ஸ்ட் நீங்க என்னை புரிஞ்சிக்கோங்க, உங்களுக்கு என்ன தலையெழுத்து அவளுக்கு சேவகம் பண்ணனும்ன்னு, என்னை கோபப்படுத்தாம வெளியே வாங்க நீங்கஎன்று அவன் கத்திவிட

             அவன் அன்னை பதிலே பேசவில்லை, எதிர்முனையில் அவன்அம்மா.. அம்மாஎன்று கத்தி கொண்டிருக்க, லைனில் இருந்தவர் வாயே திறக்கவில்லை. வேதவதிக்கு கோபம் வரும் தருணங்கள் மிகவும் அரிது. ஆனால் அப்படி கோபம் வந்துவிட்டால் இப்படித்தான் வார்த்தையே வராது அவரிடமிருந்து. திரும்பிக்கூட பார்க்கமாட்டார்.

                      இப்போது ஸ்ரீதருக்கு அவன் அம்மாவின் கோபம் புரிந்துவிட, தணிந்தவனாகம்மாப்ளீஸ் பேசுங்க, ஏன் இப்படி பண்றிங்க.” என்று அவன் அமைதியாக கேட்கவும், “நீ வீட்டுக்கு கெளம்பு ஸ்ரீதர். மார்னிங் டிரைவர வர சொல்லு. நான் வந்திடுவேன்என்று அவர் முடிவாக சொல்லிவிட

                       “உங்களுக்கு எப்பவுமே என்னைவிட அவதான் முக்கியம்ன்னு இன்னொருமுறை எனக்கு புரிய வச்சிருக்கீங்கமா. தேங்க்ஸ் பார் தட்என்றவன் போனை அணைத்து விட்டான். காரை அத்தனை வேகமாக இயக்கி அவன் கிளம்ப, அவன் மனம் அந்த காரின் வேகத்திற்கு சற்றும் குறையாமல் கொதித்துக் கொண்டிருந்தது. 

                       ஸ்ரீதர் முழுவதுமாக அவன் தாத்தாவின் வளர்ப்பு, ஆதிநாராயணன் மகளின் பின் அலைந்தவர் மகனின் வளர்ப்பில் கோட்டைவிட வேதவதி தாயாக தாங்கிக்கொண்டாலும் அவன் நேரங்கள் பெரும்பாலும் கழிவது அவன் தாத்தா திருவேங்கடத்துடன் தான். குறிப்பிட்ட வயது வரை அவன் தந்தையின் விஷயங்கள் அவன் காதுக்கு வந்ததே இல்லை என்பதை விட வரவிட்டதில்லை வேதவதி.

                    தன் கைக்குள் அடைகாத்துக் கொண்டார் அவனை.ஆனால் அவன் வளர வளர தாயுடன் செலவழிக்கும் நேரம் குறைந்து போகவும், திருவேங்கடம் தான் அந்த இடத்தை பிடித்துக்கொண்டவர் ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீகன்யா வை பற்றி அவனிடம் கீழ்த்தரமாக கூறி அவன் மனதில் அந்த வயதிலேயே விஷத்தை விதைத்திருந்தார் அவர். 

                      அவர் கூடவே சுற்றிக் கொண்டிருப்பவனும் வீட்டில் நடப்பதை உற்று கவனிக்க ஆரம்பிக்க, தன் அன்னைக்கு அநியாயம் நடப்பதாகவே உணர்ந்தவன் அப்போதே ஸ்ரீகன்யாவை வெறுக்க ஆரம்பித்திருந்தான். அவன் அன்னையிடம் இதை பற்றி கேட்டபோது அவர் நடந்தது அனைத்தையும் அவனிடம் தெளிவாக கூறியிருக்க, பொய்யை சுலபமாக நம்பியவன் அன்னை கூறிய உண்மையை ஏற்க மறுத்துவிட்டான்.

                       அவர் எவ்வளவோ எடுத்துக்கூறியும் இவர்கள் தன் அன்னையை ஏமாற்றிவிட்டார்கள் என்ற அவன் எண்ணம் மாறவே இல்லை. ஸ்ரீரஞ்சனியின் மரணத்தின் போதே அவன் அன்னைக்காக அவன் மனம் துடிக்க இதெல்லாம் என் அன்னைக்கு எத்தனை வேதனை கொடுக்கும், இந்த மனிதருக்கு என் அன்னை ஒன்றுமே இல்லையா ? இவர் மனைவி என்றால் என் அன்னை யார் ? என்று ஏகப்பட்ட கேள்விகள் அவன் மனதிற்குள். 

                     ஆனால் அவன் பேச முற்பட்ட நேரம் அவனை தடுத்து விட்டதும் வேதவதிதான்.”அங்க படுத்திருக்கிறது என்னோட அக்கா ஸ்ரீ. உன் அப்பா எல்லா சடங்கையும் செய்யிறது தான் எனக்கும் திருப்தி. அந்த மனுஷன் அவங்களை விரும்பினதை தவிர வேற எந்த பாவமும் செய்யல, அவருக்கு இந்த ஒரு நிம்மதியாவது கிடைக்கட்டும், என் வயித்துல பொறந்த நீ அவரோட நிம்மதிய தொலைச்சிடாதஎன்று அழுத்தமாக கூறிவிட அதற்குமேல் ஒன்றும் செய்யத் தோன்றாமல் அவர்களை விட்டு விலகியவன் அங்கு ஓரமாக நின்று நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்தான். 

                                 அதன் பின்பும் தனியாக இருந்த ஸ்ரீகன்யாவிடம் இன்னும் பலதும் அவன் பேசி வைத்திருக்க, இவர்களை விட்டு அவள் முற்றிலும் விலகிப்போக முக்கிய காரணமாக அமைந்தது அவன் பேச்சு.

                                 அவள் தங்களோடு வராமல் போகவும் நிம்மதியாக உணர்ந்தவன் அவளை எப்போதுமே ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை. அவள் எந்த விதத்திலும் அவன் குடும்பத்துடன் ஒட்டிக்கொள்ள முயலாமல் தனியாக நின்றுவிட்டது அவனை பொறுத்தவரை மகிழ்ச்சிதான்.

                                 அவள் தாயின் இறுதி காரியங்களுக்கு பிறகே அவன் தன் தந்தையுடன் முழு நேரமும் தன்னை இணைத்துக் கொண்டது. அவளின் பெயர் எங்கும் வராதபடி அத்தனையும் அவனாகவே இருக்க ஆசைப்பட்டவன் அதை ஓரளவுக்கு நிறைவேற்றியும் இருந்தான் இந்த நாட்களில். கட்சிக்காரர்கள், தொழித்துறை நண்பர்கள் அத்தனை பேருக்கும் அவனே ஆதிநாராயணனின் மகன் என்று பிரகடனப்படுத்தி இருந்தான் கிட்டத்தட்ட.

                     அவன் இல்லாமல் அவன் தந்தையிடம் ஒரு வேலையும் ஆகாது. மந்திரியை பார்க்க வேண்டுமா?? ஸ்ரீதர் தம்பிய பார்த்தா முடிஞ்சிடும். என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு இருந்தது அவன் செயல்கள். தொழிலும் அவன் புரிதலுக்கு வந்திருக்க ஆறுமாதமாக கிட்டத்தட்ட அத்தனையும் அவன் ஆட்சி தான்.

                      அதேபோல ஏதாவது கட்சி நிகழ்ச்சிகள், விழாக்கள், உறவு,நட்புகள் திருமணம் என்று எதுவாக இருந்தாலும் தன் அன்னையை முன்னிறுத்த தொடங்கி இருந்தான். அமைச்சரின் மனைவியாக வேதவதி மட்டுமே அடையாளம் காணப்பட வேண்டும் என்பதில் அத்தனை தெளிவாக இருந்தான் அவன். 

                 இப்படி ஒவ்வொன்றாக அவன் திட்டமிட்டு பார்த்து பார்த்து காய் நகர்த்திக் கொண்டிருக்க, அவன் அன்னையே அவளை தாங்கி கொள்வதை தான் அவனால் தாங்க முடியவில்லை. ஒரே பிள்ளையாக அணைத்து பாசமும் தனக்கு மட்டுமே என்று வளர்ந்திருந்த அவனால் திடீரென்று முளைத்துவிட்ட இந்த அக்காவை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.              

               அதிலும் தன் அன்னையும் அவளுக்கு ஆதரவாக இருக்க அத்தனை வெறுப்பும் மொத்தமாக ஸ்ரீகன்யாவின் மீது திரும்பி இருந்தது. அந்த வகையில் திருவேங்கடத்தின் வாரிசு என்பதை நிரூபித்தான் அவன்.

             திருவேங்கடம் உடல்நிலை காரணமாக வீட்டில் முடங்கிய நேரம் அவரின் மொத்த துவேஷத்தையும் இவனுக்கு கடத்தி இருக்க, அவனும் அவரின் தாளத்திற்கு தப்பாமல் தான் ஆட தொடங்கி இருந்தான். ஆனால் இந்த ஒரு விஷயத்தை தவிர்த்து விட்டு பார்த்தால் அவன் மொத்தமாக வேதவதியின் வளர்ப்பு தான்.

                 அவரின் மனது காயப்படும் எந்த விஷயத்தையும் எப்போதும் அவன் செய்ய துணிய மாட்டான். அவருக்காக மட்டுமே அவனின் இந்த கோபங்களும், வருத்தங்களும், இவர்கள் பிரச்சனையில் ஏன் என் அன்னையை அலைக்கழிக்க வேண்டும், என் அன்னை என்ன தவறு செய்தார் என்பது மட்டுமே அவன் எண்ணமாக இருக்க, எப்போதுமே வேதவதியின் உரிமைகள்,அவருக்கான மரியாதைகள் இதுவே அவன் தேடலாகி போனது. 

                 அவன் முன்னால் யாரும் வேதவதியை ஒருவார்த்தை கூட சொல்லிவிட முடியாது. அது அவன் தந்தையாக இருந்தாலும் சரி, அந்த வீட்டின் பெரியவர்களாக இருந்தாலும் சரி. எப்போதாவது திருவேங்கடத்தின் மனைவி அவனின் பாட்டி அவன் அன்னைக்கு விவரம் பத்தவில்லை, புருஷனை கையில் வைத்துக் கொள்ள தெரியவில்லை என்று வாய் விடுவதுண்டு. அப்படி ஒருமுறை அவன் இருப்பதை கவனிக்காமல் அவர் வாயை விட்டுவிடஉங்க பையன் வண்டவாளம் தெரிஞ்சும் என் வாழ்க்கையை ஏன் நாசம் பண்ணுனீங்கன்னு என் அம்மாதான் சத்தம் போடணும், அவங்க அமைதியா இருக்காங்கன்ற ஒரே காரணத்துக்காக நீங்க பேசிட்டே இருப்பிங்களாஎன்றவன்  ” என் அம்மாவை பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு. உங்க மகனை நீங்க ஒழுங்கா வளர்த்திருந்தா, எங்க அம்மா ஏன் இப்படி கஷ்டப்பட போறாங்க. உங்களுக்கு ரொம்ப அசிங்கமா இருந்த உங்க மகன்கிட்டயே கேளுங்களேன். ஏன் இப்படி பண்றாருன்னுஎன்று அவன் ஆடி தீர்த்திருக்க, அவன் பாட்டியின் முகத்தில் ஈயாடவில்லை. 

                 அவர் அதிர்ந்து போய் நின்றிருக்க, வேதவதி தான் மகனை கண்டித்து வெளியே அனுப்பி வைத்தார் அந்த நேரம். அதன்பிறகு அவர் இறக்கும் வரை அவர் வேதவதியை ஒரு வார்த்தை கூட பேசியதில்லை என்றாலும் ஸ்ரீதரும் அவரிடம் பேசியது இல்லை. அவர் இறுதி நேரத்தில் மட்டுமே அவரிடம் ஓரிரு வார்த்தை பேசி இருந்தான் அவன். 

                        அவன் பிடிவாதத்தை அளவு என்ன என்பதை முழுமையாக அறிந்தவரும் வேதவதி தான்.அதை உடைக்கும் கருவியும் வேதவதிதான். அதை அவரும் உணர்ந்தே இருந்ததால் தான் இத்தனை பிடிவாதம், கோபம், வெறுப்பு என்று அத்தனை உணர்வுகளும் இருந்தாலும் அவன் மனிதனாக இருக்கிறான். 

                      ஒரு அன்னையாக ஸ்ரீதர் அவரின் பெருமைதான். எந்த கேட்ட பழக்கமும் கிடையாது. வேண்டாத செய்கைகளோ, நட்புகளோ எதுவுமே கிடையாது அவனுக்கு. ஸ்ரீகன்யாவின் விஷயத்தை மட்டும் தவிர்த்து விட்டால் அக்மார்க் நல்லவன் தான் அவன். அவள் மீதான அவனின் பயமே அவனை இந்த அளவிற்கு கொண்டு வந்திருந்தது.

                        ஆனால் இவனுக்கு யார் சொல்வது இவனே இரத்தின கம்பளம் விரித்து வரவேற்றாலும் ஸ்ரீகன்யா என்பவள் இவர்களை திரும்பி கூட பார்க்கமாட்டாள் என்று. அவள் இவன் செய்து வைத்திருக்கும் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவள். இவன் அன்னையின் உரிமைகளுக்காக போராட நினைத்தால், அவளோ என் அன்னை தூக்கி போட்டது எனக்கும் வேண்டாம் என்று சொல்லும் ரகம்.

                       அப்படி இருக்க அவள் எப்படி இவனுக்கு போட்டியாவாள் ?? இந்த மடையன் இதையெல்லாம் உணர்வது எப்போது ??

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                      

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement