Advertisement

புல்லாங்குழல் தள்ளாடுதே 20

 

                          விமானத்தில் ஷ்யாமின் அருகில் அமர்ந்து கொண்டு வெளியில் தெரிந்த மேகக்கூடங்களில் பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தாள் கன்யா. விமானம் தரையிறங்க இன்னும் மூன்று மணிநேரங்கள் இருக்க, சற்று முன்னர் தான் தூக்கத்திலிருந்து விழித்திருந்தாள் அவள். அவளையும் அறியாமல் ஷ்யாமின் தோளில் சாய்ந்து தூங்கி இருக்க, சுகமான உறக்கம் தான் அந்த நொடிகளில்.

 

                          அவன் செயல்களில் அத்தனை கோபம் ஒருபுறம் வந்தாலும், ஏனோ அவனின் இந்த அருகாமையும், அக்கறையும் மிகவும் பாதித்தது அவளை. அவளுக்கு தெரிந்து அவள் அன்னையை தவிர யாரும் அவளிடம் பெரிதாக நெருக்கம் கிடையாது. இவள் நெருங்கவும் விட்டது கிடையாது என்பது பொருத்தமாக இருக்கும்.

 

                           அப்படியிருக்க, இவள் கச்சேரிகள், பயணங்கள் என்று அத்தனையும் தனியாகவே தான். இப்படி ஒருவன் அவளை தேடி வந்து அவளுக்காக பார்த்து பார்த்து எல்லாம் செய்து, அவளை அழைத்து வருவது எல்லாம் யோசித்ததே இல்லை. ஆம்அப்படி கவனித்துக் கொண்டான் ஷ்யாம் அவளை.

 

                             காலை வற்புறுத்தி அவளை கிளப்பியதாகட்டும், அவள் பொருட்களை அடுக்கி முடித்து அவளுக்காக காத்திருந்து அழைத்து வந்தவன் வழியிலேயே அவளை சாப்பிட வைத்திருந்தான். அத்தனை நிறைவாக உணர வைத்திருந்தான் அவளை. குட்டி குட்டி செய்கைகளில் அவளை கொள்ளையிட்டுக் கொண்டிருந்தான் அவன்.

 

                               அவன் மீது இருந்த கோபத்தை கூட, முயன்று இழுத்து பிடித்திருந்தாள் அவள். ஆம், சற்று நெகிழ்ந்த நிலையில் இருந்தாள் பெண். இதுவரை தனியாக இருக்கிறேன், கவனமாக இருக்க வேண்டும்என்று மனனம் செய்து கொண்டு அதன்படியே அத்தனை கவனமாக இருப்பாள் தன் செயல்களில். ஆனால் இன்று அவன் எதையுமே யோசிக்கவிடாமல் முழுவதும் தன்னைக் கொண்டு நிரப்புகிறான் அவள் நினைவுகளை.

 

                            வெறுப்புக்கும் விருப்புக்கும் நூலிழைதானே தூரம். இவளுக்கு வெறுப்பு இல்லையென்றாலும், விருப்பும் இல்லையென்று தான் சொல்லிக் கொண்டாள் இத்தனை நாளும். ஆனால் அவனோ ஒரே நாளில் அடித்து உடைத்திருந்தான் அவள் ஊசலாட்டத்தை.

 

                            இதோ விமானம் பொறுமையாக தரையிறங்கிக் கொண்டிருக்க, அடுத்து என்ன?? என்பது போன்ற பார்வை தான் அவளிடம். நிச்சயம் செல்லும்போது இருந்த வெறுமை இப்போது இல்லை. ஆனால் அன்றைக்கும், இன்றைக்கும் பெரிதாக எந்த மாற்றமும் கூட இல்லை எதிலும்.

 

                            நிகழ்ந்த ஒரே மாற்றம் அவளின் தனிமை அவளிடம் இருந்து பறிக்கப்பட்டது தான். அதை சாதாரணமாக நிகழ்த்தி இருந்தான் அவன்.

 

                          விமானம் அமைதியாக தரையிறங்க,வழக்கமான நடைமுறைகளை முடித்து இருவரும் வெளியில் வர, அங்கு பத்திரிக்கைகளும், மீடியாவும் யாரையோ எதிர்பார்ப்பதுபோல் நிற்க, யாரோ அரசியல்வாதியோ, சினிமா பிரபலமோ வருகிறார் போலும் என்று நினைத்துக் கொண்டாள் அவள். ஏனோ அவர்களே பிரபலம் தான் என்பது அப்போது நினைவில் இல்லை அவளுக்கு.

 

                        அமைதியாக அவர்களை பார்த்துக் கொண்டே அவள் விலகி நடக்க, ஷ்யாம் அவள் பின்னால் வந்து கொண்டிருந்தவன் சட்டென அவளை நெருங்கி அவள் பக்கவாட்டில் வந்து இணைந்து கொண்டான். அங்கிருந்த சில கேமராக்களின் கவனம் இவர்கள் புறம் திரும்பஷ்யாம் கிருஷ்ணா தானே! மினிஸ்டர் பொண்ணு!! கர்நாடிக் சிங்கர்,,” என்று அவர்களுக்குள் உறுதி செய்து கொண்டவர்கள் அடுத்த நிமிடம் இவர்களை சூழ்ந்து கொண்டனர்.

 

                      கன்யா இவர்களை கண்டதும் ஏற்பட்ட ஒவ்வாமையால் தான் விலகி நடந்ததும் கூட. ஷ்யாம் பின்னால் வந்து கொண்டிருக்க அவள் சற்று வேகமாகவே முன்னால் நடந்திருந்தாள். ஆனால் அவன் திடீரென்று அருகில் வந்ததும், அடுத்து இவர்கள் சூழ்ந்ததையும் நம்பவே முடியவில்லை அவளால்.

 

                       அதிர்ச்சியாக திரும்பி அவனை பார்க்க, இதற்குள் கேமரா பிளாஷ் மின்னிக் கொண்டிருந்தது தொடர்ச்சியாக அவர்களை நோக்கி. நிருபர்களும் முந்தியடித்து அவர்களிடம் கேள்வி கேட்க முற்பட, ஷ்யாம் கன்யாவை சுற்றி கையை போட்டு அவளை அணைத்து பிடித்து தன்னோடு நிறுத்திக் கொண்டான்.

 

                        அவன் செயலில் அவர்களுக்கு ஏதோ புரியஎன்ன ஷ்யாம் சார்.? எப்போ கல்யாணதுக்கு எங்களை கூப்பிட போறீங்க? என்று ஒருவர் கேட்க

                    ஷ்யாம் தனது அக்மார்க் புன்னகையுடன்என்ன அவசரம் கைஸ்.. இப்போதான் லவ் பண்ணவே ஆரம்பிச்சு இருக்கோம்.” என்று கூற

                      “மேம்.. நீங்க மினிஸ்டர் ஆதிநாராயணன் சார் பொண்ணு தானே. நீங்க சொல்லுங்க மேம். நீங்களும் ஷ்யாம் சாரும் எவ்ளோ நாளா லவ் பண்றிங்க?” என்று அவளிடமும் கேள்வியெழுப்ப

 

                      ஷியாம் அவளை பிடித்திருந்த கைகளை ஒருமுறை அழுத்திவிட்டுஇங்க பாருங்க பிரெண்ட்ஸ். இவங்க ஸ்ரீகன்யா. தி கிரேட் கர்நாடிக் சிங்கர், இப்போ என் வருங்கால மனைவி. கிருஷ்ணா குரூப்ஸ் மருமகளா வர போறாங்க. நிச்சயமா உங்களுக்கு தேவையான செய்தி உங்களை தேடி வரும் கைஸ். இப்போ இது எங்களுக்கான நேரம். சோ ப்ளீஸ்என்றவன் அதற்குமேல் தாமதிக்கவே இல்லை.

                        கன்யாவை தன் அணைப்பிலேயே வைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்துவிட்டான். கன்யாவின் மனநிலை சொல்லமுடியாததாய் இருந்தது அந்த நொடிகளில். அமைச்சரின் மகளா என்று கேட்ட நொடி மனம் கலங்கியதென்னவோ உண்மை. ஆனால் அடுத்த நிமிடம் அவன் பொறுப்பாக பொறுப்பெடுத்துக் கொண்டாலும் இதெல்லாம் இவன் வேலையோ என்று ஒரு எண்ணம் எழுவதையும் தடுக்கவே முடியவில்லை அவளால்.

                         ஷ்யாமை அவள் திரும்பி திரும்பி பார்க்க அவள் பார்வையை சந்திக்காதவன் அவளுடன் விமான நிலைய வாசலுக்கு வர, அங்கே இவர்களுக்காக மாரி தயாராக நின்றார். ஷ்யாம் ஏற்கனவே அவரிடம் பேசி இருக்க, முன்னதாகவே வந்துவிட்டிருந்தார். தன் பாப்பாவை பார்த்ததும் அவர் புன்னகைக்க, அவருக்கு பதிலாக லேசான புன்னகையை கொடுத்தவள் அமைதியாக காரில் ஏறி இருந்தாள்.

                      அந்த நிமிடம் அவளிடம் வார்த்தைகள் இல்லை என்பது நிச்சயம். ஏதாவது பேசினாலும் எங்கு சென்று முடியுமோ என்று அச்சமாக இருக்க, அமைதியாக கண்மூடி இருக்கையில் சாய்ந்துவிட்டாள். ஷ்யாம் ஏறினானா இல்லையா ? உடன் வருகிறானா ? என எதையுமே கண்டுகொள்ளாமல் கண்களை மூடிக் கொண்டாள் அவள்.

 

                     ஷ்யாமுக்கு அவள் நிலை புரிந்தாலும், வேறு வழி தெரியவில்லை அவனுக்கும். அவள் பயத்தை போக்க தங்கள் திருமணம் ஒன்றுதான் வழி என்று நினைத்தவன் அவள் ஒளிந்திருந்த ஏழு நாட்களில் அதற்கான பாதி வேலைகளை முடித்து விட்டிருந்தான். அவளை சமாளித்து வழிக்கு கொண்டு வருவது தான் அவனுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்க, தன் மீது நம்பிக்கையை கொடுக்க நினைத்தே அவளை தன் மனைவி என்றும், தங்கள் குடும்பத்தின் மருமகள் என்றும் அறிமுகம் செய்து வைத்துவிட்டான்.

                       அவன் வரையில் அது சரிதான். ஆனால் அவள் மனநிலை எப்படி இருக்கிறதோ என்று அவன் தவிக்க, அவளோ கண்களை திறக்கவே இல்லை. கண்ணீரும் கூட வரவில்லை அவளுக்கு. சொல்லமுடியாத, வெளிப்படுத்த முடியாத ஒரு மோனநிலை.

                     அவளுடையது. ஷ்யாமின் இந்த செயல் அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை அவளால். ஏனோ ஷ்யாம் தன்னை கத்தி முனையில் நிறுத்துவதாகவே பட்டது அவளுக்கு.

                       மனம் எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்க, நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தாள் அவள். ஒரு கட்டத்தில் கார் நிற்கவும் கண்களை திறந்து பார்க்க, அவள் வீட்டின் முன் தான் நின்றிருந்தது. காரிலிருந்து இறங்கியவள் யாரையுமே ஏறெடுத்து கூட பார்க்கவில்லை. நீராக வீட்டினுள் நுழைந்து மாடியேற அவள் பின்னால் ஓடினான் ஷ்யாம்.

                        ஆனால் அவனிடம் அந்த நிமிடம் பேசவே தயாராக இல்லை அவள். வேகமாக தன் அறைக்குள் நுழைந்து கொண்டவள் தன் அறையின் கதவை அறைந்து மூட முயற்சிக்க, கதவின் இடுக்கில் தன் காலை நுழைத்திருந்தான் அவன். இப்போதைக்கு அவளை திசை திருப்புவது முக்கியமாக பட, கதவு காலில் பிடித்துவிட்டது போல்ஆஆஅம்மா  என்று சத்தமாக கத்தி இருந்தான். அவன் கத் தவும் பதறியவளாக அவள் கதவிலிருந்து கையை எடுத்து அவன் முகம் பார்க்க, அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அறைக்குள் வந்தவன் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து விட்டான். கையை கட்டிக்கொண்டு அவனை அசையாமல் அவள் பார்க்க,

                     “வேணும்ன்னு பண்ணல கன்யா. ப்ளீஸ் புரிஞ்சிக்கோஎன்று தொடங்கிவிட்டான் அவன்.

        அவனை நேர்பார்வையாக பார்த்தவள்புரிஞ்சிக்க எதுவுமே இல்லை ஷ்யாம். எனக்கு இப்போ எதுவுமே பேச வேண்டாம் கிளம்புங்கஎன்று கூறிவிட, அவளை எப்படி சமாதானம் செய்வது என்றே புரியவில்லை அவனுக்கு.

                        எழுந்து அவள் அருகில் வந்தவன்கன்யாப்ளீஸ். கொஞ்சம் என்னை புரிஞ்சிக்க ட்ரை பண்ணேன். நீதான சொன்ன. நீ மினிஸ்டர் பொண்ணு இல்லன்னு, அதனால தான் உன்னை என் பொண்டாட்டி ன்னு காட்டிக்க நெனச்சேன். நீ சொன்ன அதே விஷயம் தான் கன்யா. உனக்கு உன் அப்பாவோட அடையாளம் வேண்டாம். ஓகே

                      “ஆனா எனக்கு என் கன்யாவோட அடையாளம் வேணும். உன்னை என்னோட மனைவி ன்னு தான் எல்லாருக்கும் தெரியணும், இனி நீ என்னை விட்டு எங்கேயும் போறத பத்தி யோசிக்ககூடாது, இனிமே இப்படி உன்னை தனியா தவிக்கவிட என்னால முடியாது ன்னு தோணிடுச்சு கன்யா.”

                    “நான் அங்கே சொன்ன விஷயங்களுக்கு அது ஒண்ணுதான் காரணம். அது தப்புன்னு இப்போ வரைக்கும் எனக்கு தோணவே இல்லை. ஆனா உன்னை காயப்படுத்திட்டேன்னு புரியுது. சாரி. இது அங்கே உன்னை கேட்காம பேசுனதுக்கு மட்டும்தான். நான் பேசின விஷயத்துக்கு இல்ல.  புரியுதாஅவன் அழுத்தமாக கேட்க

                  “அங்கே சரியா நாம வெளியே வரும்போது ப்ரெஸ் எப்படி வந்தாங்க?” என்று அவள் நிதானமாக கேட்க

 

           “உனக்கு என்ன தோணுது.” என்று அவன் அதையும் விட அமைதியாக கேட்க. அந்தக்குரல் சொன்னது அவன் செய்யவில்லை என. அதற்குமேல் பேச விருப்பமில்லாமல் அவள் அமைதியாக இருக்க  

                      “டோன்ட் பீ சில்லி கன்யா. உனக்கு என்ன தோணுது. நான் அவங்களை கூப்பிட்டு இருப்பேன்னா. எனக்கு சொல்லணும் ன்னு தோணிட்டா இவங்க எல்லாம் தேவையே இல்ல. ஒரே ட்வீட்ல முடிச்சு இருப்பேன். இப்போவும் அதைதான் செய்யறதா இருந்தேன். ஆனா அவங்களை பார்க்கவும் என் பிளான் மாறிடுச்சு. சொல்லிட்டேன். என்ன இப்போ?? எப்போ இருந்தாலும் இதுதான் நியூஸ்.”

                  “அதை நான் கொடுத்ததால ஒன்னும் ஆகிடாது. பார்த்துக்கலாம், இல்லை…  பார்த்துக்கறேன். ஒழுங்கா சாப்பிட்டு தூங்கி ரெஸ்ட் எடு.” என்றவன் அவளை கைபிடித்து அழைத்து சென்று அங்கிருந்த சோஃபாவில் அமர்த்த மறுப்பே இல்லாமல் அமர்ந்து கொண்டாள் அவள். அருகிலிருந்த தண்ணீரை எடுத்து அவளிடம் கொடுக்க தேவையாக இருக்கவே அவளும் வாங்கி கொண்டாள்.

                    அவள் குடித்து முடிக்கும்வரை அமைதியாக இருந்தவன், அவள் ஏதாவது பேசுவாள் என்று அவள் முகத்தையே பார்க்க அவன்மீது கடுப்பில் இருந்தவளோ அந்த டம்ளரில் மீதம் இருந்த நீரை அவன் முகத்திலேயே கொட்டிவிட்டாள்.

                   ஆனால் உடனே என்ன செய்வானோ என்று பயமும் வந்துவிட, கண்களை மூடிக் கொண்டிருந்த அவனை சிறிது பயத்துடனே பார்த்தாள் அவள். ஆனால் கையால் முகத்தை வழித்து கண்களை திறந்தவன் அங்கிருந்த குவளையை அவளிடம் கொடுக்க, அவனை முறைத்தவள் அதையும் வாங்கி அவன் தலையில் கொட்டிவிட, அவள் முடிக்கவும்  அமைதியாகஇப்போ ஓகேவாஎன்று கேட்டிருந்தான் அவன்.

                       அவனின் இந்த நிதானத்தில் கண்கள் கலங்கிவிட, “ஹேய் என்ன? இன்னொரு ஜார் தண்ணி வேணுமா?” என்று அவன் நக்கலாக கேட்க, மறுப்பாக தலையசைத்தாள் அவள். ஆனால் கண்களில் இன்னும் கண்ணீர் தான்.

                            தன் கைகளால் அவள் முகத்தை தாங்கி கொண்டவன்கன்யா.. ப்ளீஸ்டா அழாத.. என்னாலதான்னு குற்ற உணர்ச்சியா இருக்குடி. அழாத.” என்று கூற

               “உங்களால தான் அழறேன்.. நீங்கதான் அழ வைக்கிறிங்க ஷ்யாம்.. பயமா இருக்கு..” என்று குற்றம் சொல்ல

                 “சரி ஓகே, சொல்லு.. என்ன பயம் உனக்கு..” என்று அவன் வினவ

       “தெரியல.. ஆனா.. இப்படி உடனே உடனேஏத்துக்க முடியல ஷ்யாம். எல்லாத்துக்கும் மேல வேதாம்மா….நான்.. எப்படி ஷ்யாம்என்றவள் மீண்டும் அழ, “இவளுக்கு அவங்க வேண்டாமாம், பைத்தியக்காரிஎன்று கொஞ்சிக் கொண்டவன் அவள் அருகில் மண்டியிட்டு அவளை கட்டிக் கொண்டான்.

                       அவள் அப்போதும் அமைதியாகவே இருக்கநான் சொல்றேன்ல கன்யா.. உன்னை யாரும் எதுவும் கேட்கமாட்டாங்க.. எதுவும் சொல்லவும் மாட்டாங்க.. அதுக்கு நான் பொறுப்பு. ஓகேவா ?” என்று அவன் அவளை பார்த்து கண்ணடிக்க, அவளுக்கு புரியவே இல்லை.

                     இவன் எப்படி பொறுப்பாவான் ?? வேதாம்மா என்னை தானே கேட்பாங்க? என்று அவள் யோசிக்கஹேய் கன்யாகுட்டிபோதும்டி.. உன் மூளை அளவை தாண்டி யோசிக்காத.. இவங்க அத்தனை போரையும் நான் சமாளிக்கிறேன். நீ அமைதியா மட்டும் இரு. அப்பப்போ வேணும்னா எனக்கு ஏதாவது கொடுக்கலாம். இந்த பூஸ்டர் மாதிரி. அதுபோதும்டா..” என்றான் அவன்.

                அவள் முறைக்கவும்சரி சொல்லு.. எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்???” என்று கேட்க

            அவனை நக்கலாக பார்த்தவள்அதுவும் நீங்களே முடிவு பண்ணி இருப்பீங்களே. சொல்லிடுங்க…”

        “சேச்சே.. கண்டிப்பா கல்யாணம் உன் முடிவு தான் கன்யாநீ சொல்ற தேதில தான் கல்யாணம்.அதுக்கு நான் கியாரண்டிஎன்று கூறியவன்இப்போ ஓகேவாஎன்று அவளை கேட்க

                “சத்யமா தெரியல..”

       “சரி.. தெரிய வேண்டாம்.. ஆனா ஒன்னு, இப்போதைக்கு எதுவுமே யோசிக்காத. அமைதியா தூங்குஎதுவா இருந்தாலும் நைட் கால் பண்ணும்போது பேசுவோம்..” என்று கூறியவன்

              “ஓகே.. இப்போ நான் கிளம்புறேன்.. ரொம்ப நேரமாச்சு.” என்றவன் எழுந்து கொள்ள, அவன் சட்டையெல்லாம் ஈரம். அதை கண்டவள்சாரிஎன்று மெல்லியதாக முனக,

               “ஹேய் குட்டிப்பொண்ணு.. எனக்கு சாரியெல்லாம் வேண்டாம். வேணும்ன்னா வேற ஏதாச்சும் கொடுஎன்று வம்பிழுக்க, ” நீங்க கிளம்புங்கஎன்று அவனை  துரத்தி விட்டாள் அவள்.

அவன் சென்றதும் குளித்துவிட்டு அவள் கீழே வர, நிச்சயம் அன்னம் ஏதாவது கேட்பார் அல்லது சொல்லுவார் என்று நினைத்தாள் அவள். ஆனால் அன்னம் அமைதியாக உணவை பரிமாறியவர்அவள் உண்டு முடிக்கவும் எழுந்து கிட்சனுக்குள் சென்று மறைந்து கொண்டார்.

                 அவள் அவர் பின்னால் செல்ல, கண்களை துடைத்துக் கொண்டிருந்தார் அவர். “அன்னம்மா.. என்ன ஆச்சு. ஏன் ஏதோபோல இருக்கீங்கஎன்று கேட்க

                 “ஒண்ணுமில்லையே ஸ்ரீம்மா.. நீங்க போங்க..” என்றுவிட்டு அவர் தன் வேலையை பார்க்க

     அவரை திருப்பியவள் என்ன அன்னம்மா.. என்ன விஷயம். சொல்லுங்கஎன்று பிடிவாதமாக கேட்க

             “நான் வேலைக்காரிதானே பாப்பா. என்கிட்டே ஏன் கேட்குறீங்க. நான் அழுதா என்னன்னு தானே சொல்லாம கூட கிளம்பி போனீங்க. இப்போவும் ஷ்யாம் தம்பி பத்தி என்கிட்ட சொல்லவே இல்ல.” என்று குறைபட்டு கொள்ள, அவரிடம் அனைத்தையும் மேலோட்டமாக எடுத்துக் கூறி, இப்போது ஷ்யாம் வந்ததுவரை கூறி முடித்து அவரை சமாதானம் செய்தவள் உறங்குவதற்காக தன் அறைக்கு வந்தாள்.

                       பயணக்களைப்பு தீர நன்றாக ஒரு உறக்கம். உறக்கம் வராது என்று நினைத்தே படுத்தவள் சில நிமிடங்களில் உறங்கிவிட, இருட்டும் நேரத்தில் தான் விழிப்பு வந்தது அவளுக்கு. எழுந்து முகத்தை கழுவி கீழே வர ஹாலில் இருந்த சோஃபாவில் வேதவதி அமர்ந்திருந்தார். அவருக்கு சற்று தள்ளி ஸ்ரீதர் தன் மொபைலை நோண்டிக் கொண்டு அமர்ந்திருக்க அவளுக்கு மயக்கம் வராத குறைதான்.

                    இவர்கள் வரவிலேயே அவள் அதிர்ந்தவளாக, கீழிறங்கி வர அடுத்த அரைமணி நேரத்தில் ஷ்யாமின் பாட்டி தேவகி, அவனின் அம்மா பத்மினி, வசுமதி, அனுபமா என்று அடுத்தடுத்து ஒரு பெண்கள் பட்டாளமே நுழைந்தது அவள் வீட்டுக்குள்.

                      ஷ்யாம் சொல்லி சென்றநான் பார்த்துக்கறேன்இப்போது  நினைவு வந்தது அவளுக்கு. அவன் வார்த்தைக்கான அர்த்தமும் முழுதாக புரிவது போல் இருந்தது…………..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                             

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                            

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement