Advertisement

புல்லாங்குழல் தள்ளாடுதே 17

 

                 அந்த இரவில் ஸ்ரீகன்யாவின் மொபைலுக்கு அழைக்க முயன்று ஓய்ந்து போயிருந்தான் ஷ்யாம். அத்தனை முறை அவன் விடாமல் அடித்திருக்க, அழைப்பு எடுக்கப்படவே இல்லை. எங்கிருக்கிறாள்?? என்ற விவரமும் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தவன் தன் அறையில் இருந்த தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்தான்.

                 அதில் மருத்துவமனை காட்சிகள் நேரலையில் ஓடிக் கொண்டிருக்க, ஸ்ரீகன்யா மருத்துவமனைக்குள் நுழைவதும் ஒளிபரப்பானது. அவள் முகத்தை கண்டுவிட்டவனுக்கு அங்கு நிலைகொள்ளாமல் போக, என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான் அவன். ஆதி நாராயணன் அவனுக்கு அத்தனை நெருக்கமானவர் எல்லாம் இல்லை.

                 இப்போது போய் நின்றால் அவனையும் உள்ளே இழுத்து தேவையில்லாத செய்திகள் வெளியே வரும் என்று நினைக்கையில் அதற்காக இப்படியொரு நிலையில் அவளை தனியாக விட உன்னால் முடியுமா ? என்று கண்டித்தது அவன் மனசாட்சி. நீண்ட நேரமாக தனக்குள் போராடியவன்என்ன இப்போ?? ஏதாவது பேசினா நான் கன்யாவை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லிக்கறேன்என்று முடிவெடுத்துக் கொண்டு அவன் அறையிலிருந்து வெளியேறினான் அவன்.

                   அவன் வெளியேறிய நேரம் அவன் தந்தை அந்த மாடி ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்து இருக்க, அவர் அருகில் சென்றவன்என்னப்பா?? தூங்காம இங்க என்ன பண்றிங்க.. என்ன ஆச்சு?” என்று சாதாரணமாக கேட்க

 

                   அவரோநான் கேட்கணும் ஷ்யாம்.. இந்த நேரத்துல தூங்காம எங்கே கிளம்பிட்ட??” என்று விசாரிக்க

               “கன்யாவை பார்க்க போறேன்ப்பாநிச்சயமா இந்த நிலைமையில நான் அவகூட இருக்கணும்..” என்று தீர்மானமாக உரைக்க

                    “ஓஹ்ஆனா இந்த நேரத்துல நீ ஹாஸ்பிடல்ல போய் நின்னா என்னென்ன பேச்சு வரும் ன்னு யோசிச்சியா??? இத்தனைக்கும் அந்த அமைச்சர் நமக்கு தொழில் ரீதியாக கூட நெருக்கம் இல்ல.”

                “இப்போ பிரச்சனை அமைச்சரை பத்தி இல்லப்பாஅவரை பார்த்துக்க அங்கே நிறைய பேர் இருக்காங்க. தனியா நிற்கிறது கன்யா, அவளுக்கு துணையா நான் இருக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டேன். அங்கே தேவையில்லாம ஏதும் பேச்சு வந்தாலும் கூட என்னால சமாளிக்க முடியும்.”

                 “என் வாழ்க்கைக்கு கன்யா தான்னு நான் முடிவெடுத்துட்டேன் அவ்ளோதான். அதுக்கு பிறகும் ஊரை பத்தி நான் ஏன் கவலைப்படணும். யாரும் கேட்டாலும் அவளை தான் கட்டிக்க போறேன்னு சொல்லிடறேன்என்று முடிவாக அவன் கூறிவிட

                     “ரொம்ப சந்தோஷம் ஷ்யாம்அதுவரைக்கும் பரவால்ல, பெத்தவன் காத்திருக்கேன்னு தகவலாவது சொல்லிட்டியே இப்போவே.” என்று எழுந்து கொண்டவர்நீ என்ன நினைக்கிறியோ அதை செய். இந்த குடும்பத்தை பத்தி கவலைப்பட வேண்டாம்என்றுவிட்டு தன்னறைக்கு செல்லப்பா…” என்று அழைத்துக் கொண்டு அவர் பின்னால் சென்றான் மகன்.

                    அவர் முகம் அத்தனை வலியை காட்ட, தாங்கி கொள்ளவே முடியவில்லை மகனால். தப்பு செய்த சிறுவன் போல் அவர் பின்னால் சென்று கொண்டிருந்தான். தன் அறையின் வாயிலில் நின்றவர் அவனை திரும்பி பார்க்க அவரை அணைத்து கொண்டவன்ப்ளீஸ் டாடிஇப்படி பண்ணாதீங்கஎன்று அவர் தோளில் முகம் புதைக்க, அவனை தட்டி கொடுத்தவர் அமைதியாகவே நின்றார்.

               சில நொடிகளில் விலகி நின்றவன் அவர் முகத்தையே பார்க்கஅதான் முடிவு பண்ணிட்டியேஅப்புறம் எதுக்கு இந்த ட்ராமா ஷ்யாம்.” என்று அவர் கேட்க

                  “உங்களுக்கு தெரியும்ப்பா…. சொல்லுங்க நான் என்ன பண்ணட்டும்.” என்று கேட்டு நிற்க, அந்த பிடிவாதக்காரனின் முன்னால் அவரின் வறட்டு கௌரவம் நிற்க முடியவில்லை.

                   மகனின் முகம் பார்த்தவருக்கு அவனின் மகிழ்ச்சிதானே முக்கியம் என்று தோன்றிவிட, தன்னை மாற்றி கொள்ள முடிவெடுத்தவர் அவன் தோளை தட்டிபோயிட்டு வா.. ஆதி நாராயணனுக்கு சரியானதும் பேசுவோம்.” என்று கூறிவிட அவரை மீண்டும் கட்டிக் கொண்டவன்தேங்க் யூப்பா.. தேங்க் யூ சோ மச்என்று நெகிழ்ச்சியாக கூற அவன் தோளில் தட்டி கொடுத்தவர் அவனை அனுப்பிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தார்.  

                               தந்தையிடம் பேசிவிட்டு வெளியே வந்தவனின் மனம் மகிழ்ச்சியில் திளைத்து இருந்தாலும் கூட கன்யாவின் நிலை அதை முழுதாக அனுபவிக்க விடவில்லை அவனை. என்ன செய்து கொண்டிருக்கிறாளோ?? என்று நினைத்துக் கொண்டவன் காரை முழுவேகத்தில் செலுத்தி அடுத்த அரைமணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்தான்.

               முன்னதாகவே அங்கு இருந்த காவல் உயரதிகாரிக்கு அவன் அழைத்து பேசிவிட, இவன் செல்லும் நேரம் இவனுக்கு வழி செய்து கொடுத்தவர் தன்னுடனே அவனை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். ஆதி நாராயணன் அனுமதிக்கப்பட்டிருக்கும் தீவிர சிகிச்சை பிரிவு வரை அவனுடன் வந்தவர் அதன் பிறகே விலகி செல்ல, அந்த நீண்ட காரிடாரில் ஐசியூ வார்டுக்கு முன்னால் இருந்த இருக்கையில் தலையை கைகளால் தாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தவன் ஸ்ரீதர்.

                 அவனை அந்த நிலையில் பார்க்க, என்னவோ போலானது ஷ்யாமுக்கு. அவன் அருகில் சென்றவன்ஸ்ரீதர்என்று அழைக்க, அப்போதுதான் நிமிர்ந்து பார்த்தான் அவன். முகம் வாடி, கண்கள் சிவந்த நிலையில் அவனை கண்டவனுக்கு கஷ்டமாக இருக்க, அவன் தோளில் தட்டி கொடுத்தவன்சரியாகிடும் ஸ்ரீதர்… ” என்று ஆறுதலாக உரைக்க

                ஸ்ரீதரும் அப்போதுதான் தெளிந்தான். முகத்தை துடைத்துக் கொண்டவன் நிமிர்ந்து அமர, “டாக்டர்ஸ் என்ன சொல்றாங்க ஸ்ரீ. அப்பா எப்படி இருக்காருஎன்று ஷியாம் விசாரிக்கவும், அவரின் உடல்நிலையை பற்றி கூறியவன்ஆஞ்சியோ பண்ணி இருக்காங்கஇப்போதைக்கு பயப்பட எதுவும் இல்ல. நல்லா இருக்காருஎன்று மருத்துவர் சொன்னதை அப்படியே ஷ்யாமிடம் சொல்லி முடித்தான்.

             அவரின் உடல்நிலையில் நிம்மதி அடைந்தவனாக ஷ்யாம்எதுவும் சாப்பிட்டியா.. ” என்று ஸ்ரீதரின் சோர்ந்த முகத்தை பார்த்து கேட்க, உண்டுவிட்டதாக தலையசைத்தான் அவன். திருப்தி ஆகாதவனாக எழுந்து சென்ற ஷ்யாம் அங்கிருந்த மருத்துவமனை கேன்டீனில் அவனுக்கு டீயை வாங்கி வந்து கொடுக்க, மறுக்காமல் வாங்கி கொண்டான் ஸ்ரீதர்.

                     பின்னிரவு நேரத்தில் அந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருக்க, இப்போது கிட்டத்தட்ட மணி இரண்டை தொட்டுக் கொண்டிருந்தது. நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் முற்றிலும் ஓய்ந்து போயிருந்தான் அவன். இதில் குற்றவுணர்ச்சி வேறு. வேதாவை தாங்கி கொள்ள கன்யா இருந்திருக்க, அந்த நொடி தனிமையை உணர்ந்திருந்தான் அவன். தனக்குள் போராடிக்கொண்டு ஏதேதோ யோசனைகளில் அவன் மூழ்கியிருந்த அந்த நேரத்தில் ஷ்யாமின் வரவும், அவன் செயல்களும் ஆதரவாக இருந்தது ஸ்ரீதருக்கு.

                   ஒரு நல்ல தோழமையை அந்த சில மணித்துளிகளில் உணர தொடங்கி இருந்தான் ஸ்ரீதர். அதே நேரம் அவனுக்கு அனுவின் நினைவும் சேர்ந்தே வர, முணுக்கென்ற வலி நெஞ்சின் ஓரம். ஷ்யாம் அமைதியாக அமர்ந்து இருந்தாலும், அவன் யோசனை முழுவதும் கன்யாவிடம் தான். எங்கே போயிருப்பா?? என்று யோசித்துக் கொண்டவன் அருகில் இருந்தவரிடம் கேட்க மனமில்லாமல் அமைதியாக இருக்க,

                    ஸ்ரீதர் சற்று நேரம் கழித்து அவனேஅம்மாவை பார்த்திட்டு வரேன்.” என்று எழுந்து கொள்ள

            “என்னாச்சு அவங்களுக்கு..” என்று எதுவும் தெரியாதது போல கேட்டான் ஷியாம். ஸ்ரீதருக்கு தான் அவனை தெரியுமே, எனவேஅழுதழுது மயக்கமாகிட்டாங்க. இங்க இன்னொரு ரூம்ல இருக்காங்க. ஸ்ரீகன்யா அவங்களோட இருக்கா.” என்றுஅவன் கேட்காத தகவலையும் கொடுத்துவிட்டான்.

               அவனுடன் எழுந்து கொண்ட ஷ்யாம், தானும் வேதாவின் அறைக்கு செல்ல, இவர்கள் உள்ளே சென்ற நேரம் வேதா உறங்கி கொண்டிருக்க, அவரின் வலது கையை தன் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு அவரின் கட்டிலிலேயே தலை வைத்து குழந்தையாக உறங்கி கொண்டிருந்தாள் கன்யா.

 

              பார்த்த இருவருக்குமே அவள் கண்களின் ஓரம் கரை கட்டி நின்றிருந்த கண்ணீர் துளிகளும், கன்னத்தில் இருந்த கண்ணீர் கரைகளும் அவள் நிலையை உணர்த்திவிட, அவள் உறங்கி வெகுநேரம் ஆகவில்லை என்று புரிந்தது. அவளையும் அறியாமல் அழுதுகொண்டேகண்ணசந்து இருக்கிறாள் என்பது புரிய அவர்களை தொந்தரவு செய்யாமல் அமைதியாக வெளியே வந்து விட்டனர் இருவரும்

                    ஆனால் இவர்கள் கதவை திறக்கும்போதே லேசாக உறக்கம் கலைந்திருந்தது கன்யாவிற்கு. மெல்ல விழித்தவள் கண்டது அறையிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தவர்களை தான். முழுவதுமாக விழித்து விட்டவள் அதே அறையில் இருந்த குளியலறையில் முகம் கழுவி கண்களை துடைத்துக் கொண்டு வெளியே வந்தவள் தந்தையை வைத்திருந்த அறையை நோக்கி நடக்க, ஷ்யாம் தான் முதலில் கவனித்தான் அவளை.

                         அவளைக் கண்டவுடன் எழுந்து அவன் அவள் அருகில் செல்ல, “ஷ்யாம்..” என்று அழைத்தவளுக்கு என்ன முயன்றும் கண்கள் கலங்கி விட்டது. அவள் கண்கள் கலங்கவுமே எட்டி அவள் கையை பற்றிக் கொண்டவன் அவளை அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்த்தி அவள் அருகில் மண்டியிட்டவன் அவள் கையை விடவே இல்லை.

               அவன் அவனை பார்த்ததும் அதுவரை கட்டுப்படுத்தி இருந்த கண்ணீர் கண்களை மீற, அப்படி அழுதாள் அவள். அவள் இருகைகளையும் பிடித்துக் கொண்டவன்கன்யாஹேய் என்னப்பா இதுஅப்பாக்கு தான் சரி ஆகிடுச்சே.. ஒண்ணுமில்லடா.” என்று குழந்தைக்கு சொல்வதை போல அவன் எடுத்து சொல்ல, கட்டுப்படுத்தவே முடியாமல் அழுது கொண்டிருந்தாள் அவள்.

 

           அருகில் ஸ்ரீதர் இருப்பதால் அவளை அணைத்துக் கொள்ளவும் வழி இல்லாமல், அவள் கண்ணீரையும் துடைக்க முடியாமல் தன் நிலையை அறவே வெறுத்தவன் ஸ்ரீதரை ஒதுக்கி அவள் முகம் நிமிர்த்தி அவள் கண்ணீரை அழுத்தமாக துடைத்துவிட்டான்.                  

                           அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் நிறையச்சு. கன்யா சும்மா அழக்கூடாதுடா.. அவர் எழும்போது இப்படி அழுதிட்டே அவர் முன்னாடி போய் நிற்பியா. அங்க பாரு, ஸ்ரீ வேற உன்னையே பார்த்திட்டு இருக்கான். இப்படி அழுதழுது அவனையும் அழ வைப்பியாஎன்று கேட்டவன் இன்னும் அவள் முகத்தை தாங்கி இருந்த கையை எடுக்கவே இல்லை.

                   அவன் ஸ்ரீதரின் பெயரை சொன்னதும்தான் சற்றே சுதாரித்தவள், சற்றே பின்னால் நகர்த்தி கொண்டாள் முகத்தை. அவளை புரிந்தவனாக கைகளை ஷ்யாம் இறக்கி கொள்ள, அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்து கொண்டாள் அவள். ஷ்யாமை விட்டும் அவள் விலகி நிற்க, ஷ்யாம் அவள் தெளிந்து விட்டாள் என்பதை உணர்ந்தவனாக ஸ்ரீதரை நோக்கி நடந்துவிட்டான்.

                ஆனால் கன்யாவுக்கு தான் அவன் முன்னிலையில் ஷ்யாமுடன் இப்படி நின்றிருந்தது சங்கடமாக இருந்தது. அவனுக்கு அவளை பிடிக்காமல் போனாலும் அவள் தம்பி அவன். அவளை விட வயதில் சிறியவன். அவன் முன்னால் தான் இப்படி ஷ்யாமோடு என்று நினைத்தவளுக்கு தவறு செய்ததாகவே தோன்றியது. அவர்கள் இருக்குமிடம் செல்லவும் தயங்கியவளாக அவள் மீண்டும் அதே இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.

                         ஷ்யாம் அமைதியாக ஸ்ரீதரின் அருகில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொள்ள, ஸ்ரீதருக்கு அப்போது தான் தன் தவறு உரைத்தது. ஷ்யாமின் கண்களில் கன்யாவிற்கான காதல் அத்தனை அப்பட்டமாக தெரிய, தான் அனுவிடம் கேட்டது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்று உணர்ந்தவனுக்கு கன்யாவின் நிலையம் அப்போதுதான் கண்ணில்பட்டது.

 

               அவள் அழுததையும், அதன் பிறகான அவள் தயக்கத்தையும் பார்த்தவனுக்கு அது தன்னால் தான் என்று தோன்றிவிட, அமைதியாக தானும் இருக்கையில் அமர்ந்தவன் அவர்களை பார்க்கவே இல்லை என்பதுபோல கண்களை மூடி சாய்ந்து விட்டான்.

 

                   விடியல் தொடங்கும் நேரம்வரை மூவருமே அவரவர் சிந்தனையில் அமர்ந்திருக்க, இவர்களை இப்படி காத்திருக்க வைத்த ஆதிநாராயணன் அடுத்த நாள் காலை தான் கண்விழித்தார். அவருக்கு விழிப்பு வந்ததும் அருகில் இருந்த செவிலி இவர்களை அழைக்க, ஸ்ரீதர் முதலில் உள்ளே நுழைய அவனுக்கு பின்னால் கன்யா அந்த அறைக்குள் நுழைந்தாள்.

 

             ஸ்ரீதர் தன் தந்தையை கண்டவனுக்கு கண்கள் கலங்க, உதடு துடித்தது அழுகையில். அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆதி நாராயணன் அவனை அருகில் வருமாறு கையசைத்து அழைத்தவர் அவன் அருகில் வரவும் அவன் கைகளை பற்றிக் கொண்டார். அவனை பார்த்து ஆதுரமாக அவர் புன்னகைக்க, ஸ்ரீதர்சாரிப்பா..” என்று வாய்க்குள் முணுமுணுத்தவன் அவர் கையை இறுக்கமாக பிடித்துக் கொள்ள,

 

                   அவரின் பார்வை அறையின் வாயிலில் நின்றிருந்த அவர் மகளை நோக்கி பாய்ந்தது. அவளை அசையாமல் பார்த்தவர் லேசாக தலையை அசைத்து அவளை அழைக்க, அவள் அவரின் மறுபுறம் வந்து நிற்கவும் தனது இடக்கையை உயர்த்தியவர் மகளின் கையை அழுத்தமாக பற்றிக் கொண்டார்.

 

                    இருவரையுமே எந்த நிலையிலும் விட்டுவிட மாட்டேன்என்பது போல இருந்தது அவர் செய்கை. கன்யாவிற்கு அவர் எண்ணம் புரியாவிட்டாலும் அவர் அப்படி அழைத்துக் கொண்டது ஆறுதல் தான். நேற்று இரவிலிருந்து என்ன பாடு பட்டுவிட்டாள் என்பது அவள் மட்டுமே அறிந்த உண்மை அல்லவா.

     கன்யாவின் கலங்கிய கண்களை பார்த்த ஆதிநாராயணன்பயமுறுத்திட்டேனாடா ஸ்ரீமா..” என்று கேட்க, ஆமோதிப்பாக தலையசைத்தவள் கண்களிலிருந்து கண்ணீர் வழியஉன் வேதாம்மா எங்கே. என்ன ஆச்சு அவளுக்கு ?” என்று அவளிடமே கேட்க

 

               ஸ்ரீதரை பார்த்தவள் தன் தந்தையிடம்அழுதிட்டே இருந்தாங்க.. தூங்கறதுக்கு மருந்து கொடுத்து தூங்க வச்சிருக்கோம்.” என்று கூற

 

                தலையசைத்துக் கொண்டவர்அவளைத்தான் பதற வச்சிட்டேன்என்று தன்னையே நொந்துகொள்ள, “நல்லா இருக்காங்கப்பா. நான் பார்த்துக்கறேன். ஒண்ணுமில்லஎன்று அவசரமாக கூறினான் ஸ்ரீதர். அவன் பேச்சில் அவனை பார்த்தவர் அவன் கன்னத்தை நோக்கி கையை உயர்த்தி அவன் கன்னத்தை தடவிசாரிடா…” என்று அவனிடமும் கூறப்பா..” என்று பதறியவன்என்ன பண்றிங்கப்பாநான்தான் சாரி சொல்லணும்ப்பா. அப்போ கோபத்துல அறிவில்லாமசாரிப்பாஎன்று என்று அவர் கையை கன்னத்தோடு அழுத்தி பிடித்துக் கொண்டான் மகன்.

                            தூரமாக நின்று இவர்களை பார்வையால் அளந்து கொண்டிருந்த ஷ்யாம் அப்போதுதான் முன்னால்வர,ஆதிநாராயணன் அவனை ஆச்சர்யமாக பார்க்க அவர் பார்வையை உணர்ந்தவனாக புன்னகைத்தவன்எப்படி இருக்கீங்க அங்கிள்.. இப்போ ஓகேவாஎன்று கேட்க

 

                “நல்லா இருக்கேன் தம்பிஎன்று அவனிடம் கூறியவர் கேள்வியாக மகளைப் பார்க்க, அவர் பார்வையை சந்திக்கவில்லை அவள். அவர் பார்வையை உணர்ந்தவனாக ஷ்யாம் அவரிடம்சரியாகி வாங்க அங்கிள். பொண்ணுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும் இல்லையா??” என்று அவரையே கேட்க

 

              அவருக்கு புரிந்தது போல. திருப்தியாக அவர் ஷ்யாமை பார்த்து புன்னகைக்க, அவருக்கு இசைவாக தலையசைத்தான் அவன். இவர்களின் சங்கேத பேச்சு வார்த்தையில் கன்யாவிற்கு தான் அங்கு நிற்க முடியாத நிலை. அவள் திருமணத்திற்கு தயாரா என்று அவளுக்கே புரியாத நிலையில் அவளை எங்கோ இழுத்து சென்று கொண்டிருந்தான் அவள் நாயகன்.

                                 ஸ்ரீதர் அங்கு நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தானே தவிர, ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதுவும் கன்யாவிற்கு தலையிடியாகத் தான் இருந்தது. ஏற்கனவே எங்கள் குடும்பத்தில் நுழைய முயற்சிக்காதே, நீ உரிமையற்றவள், உன் பிறப்பு முறையற்றது என்று பேசி இருந்தவன் அவன். இப்போது அவன் முன்னால் இந்த பேச்சு வார்த்தைகள் அதுவும் அவள் ஆதி நாராயணனின் மகள் என்று குறிப்பிடும்படியான பேச்சு வார்த்தைகள் தேவையா என்றுதான் தோன்றியது அவளுக்கு.

                         அவர் மகளாக எந்த உரிமையும் எடுக்கமாட்டேன் என்று அவள் முன்பே அவனிடம் கூறியிருக்க, அப்படியிருந்தும் கூட அவளை வார்த்தைகளால் குத்தி கிழித்திருந்தவன் அவன். அவனிடம் அன்று பேசியது தான் கடைசி, அதன் பின்பு அவன் முகத்தை கூட சரியாக பார்த்தது இல்லை கன்யா. இப்போதும் அவரின் மகளாக உரிமை கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் அங்கே வரவில்லை.

            அதுவும் படுக்கையில் இருக்கும் திருவேங்கடம் நடக்கும் நிலையில் இருந்தால், தான் இங்கே அனுமதிக்க பட்டிருக்கவே மாட்டோம் என்பதும் அவளுக்கு புரிந்து தான் இருந்தது. அவரின் நேர்வாரிசாக வளர்ந்து நிற்கும் இவனும் அன்னைக்காக தான் தன்னை பொறுத்துக்க கொண்டிருக்கிறான் என்பது அவள் எண்ணம்.

                அப்படியிருக்க, அவன் முன்பு ஷ்யாமின் இந்த வார்த்தையாடல் அவளுக்கு உகந்ததாக இல்லை. அதே நேரம் உடல்நலமில்லாத அவரின் முன்பு வெட்டிப் பேசவும் மனதில்லாமல் அவள் அமைதியாக நின்றுவிட்டாள். யாரையும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

                   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

               

 

 

 

 

 

 

 

 

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement