மாளிகையின் பின்புற தோட்டம்..
“அவங்க போறாங்க… அவங்க போறாங்க“, என அம்ஜத் முணுமுணுத்துக் கொண்டு இருக்க… அங்க வந்த ஆர்யன், “அண்ணா” என அழைத்தான்..
“ஆர்யன்”
“நீங்க ஓகே தானே!.. ஏன் இங்க இருக்கீங்க?”
அம்ஜத் செடிகள் தொட்டிகளுடன் இருந்தவன், “ஏன்னா அவங்க போறாங்க… நாம சொன்னாலும் அவங்க இருக்க மாட்டாங்க.. அவங்க போறாங்க… அவங்க எப்பவும் போயிட்டே இருக்காங்க..” என உளறலாய் திரும்ப திரும்ப பேச…
“அண்ணா என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லயா?” என ஆர்யன் ஆற்றுப்படுத்த முயல… அம்ஜத் கேட்டான் “ஏன் அவங்க போறாங்க, ஆர்யன்?“
“போகட்டும்.. நான் இருக்கேன்.. உங்களுக்காக.. இங்க.. யார் போனாலும் நான் இருக்கேன்ல?”
தம்பி கையை பிடித்து “யாரையும் போக விடாதேயேன்… யெஸ், ஆர்யன் இருப்பான் எனக்காக… கடைசி வரை இருப்பான்.. ஆர்யன் அவன் அண்ணனுக்காக இருப்பான்.. ஆர்யன் இருப்பான்” என ஆசுவாசமானான் அண்ணன்…
-
– – – – – – – –
அப்பாவும் மகளும் அழுது கொண்டிருக்க…. அருகே அமர்ந்து ஆறுதல் சொல்லி கொண்டிருந்தார், மயானத்தில் துணை நின்ற அதே பெண்மணி பர்வீன்..
“என் மகள் என்ன செய்தாளோ… என்ன சாப்பிட்டாளோ…. சந்தோஷமா இருந்தாளா… எப்படி வாழ்ந்தா.. எப்படி இறந்தா.. எதுவும் தெரியலயே… எல்லாம் என்னால தான்“, என்று சென்ற மகளை நினைத்து பெரியவர் புலம்ப…
“நீங்களே உடம்பு சரியில்லாதவர்.. உங்களை இப்படி வருத்திக்காதீங்க…” என பர்வீன் தேற்ற…
அங்கு வந்த ருஹானா தன் கழுத்திலிருந்து சங்கிலியை கழற்றி லாக்கெட்டை காட்டியபடி, ”அப்பா!!! இது யார் பாருங்க?“ என்று கூற…. அவர் யோசிக்கவும்..
“உங்க பேரன் இவான், அப்பா” என ருஹானா சங்கிலியை நீட்ட… இவான் தாத்தா கைகளில் வாங்கி கண்ணீருடன் பார்த்தவரின் முகம் கனிந்தது, பேரனை பார்த்து…
பர்வீனும் படத்தை எட்டி பார்த்து, ”அல்லாஹ் அருள் என்றும் கிடைக்கட்டும்.. உங்கள போலவே இருக்கான்” என நெகிழ்ந்து கூற…
“அக்கா என்னை நம்பி அவனை விட்டுட்டு போயிருக்கா.. என் அக்காவின் வாரிசு, அவன்… எப்படியாவது அவனை இங்க கொண்டு வருவேன்” என ருஹானா சூளுரைத்தாள்…
-
– – – – – – – – – –