Advertisement

சாப்பிட்டாச்சு தம்பிஎன்று சொன்னாள்.

        பானு பதிலுக்குஅதெல்லாம் நேரத்துக்கு நேரம் கொட்டிக்கிறாங்க., அதுக்கெல்லாம் வெட்கம் மானம்“., என்று பேச தொடங்கவும்.,

        பிரசாத் அவளை திரும்பி பார்த்தவன்.,  “அத்தான் ஊருக்கு போயிட்டாரே., நீ என்ன இன்னும் ஊருக்கு போகாமல் இருக்க“., என்று கேட்டான்.

       “ஏன்டா இத்தனை நாள் நான் இங்க வந்துட்டு நாள் கண்கா  இருந்திட்டு  தான் போறேன்., இத்தனை நாள்ல என்னை பார்த்து யாரும் எந்த வார்த்தையும் கேட்டதே கிடையாது.,  இப்போ உன் பொண்டாட்டி சொல்லி கொடுத்தாளா“., என்று கேட்டாள்.

        “பொண்டாட்டி சொல்லி கொடுக்கல.,  நான் தான் கேட்கிறேன்., அவ உங்க யாரை பற்றியும் பேசமாட்டா.., ஆனா உங்களுக்கு எதுக்கு அவளை பத்தின பேச்சு., அவளை பத்தி பேசுறதா இருந்தாநீ இனிமேல் இங்கே இருக்கவேண்டாம்., இடத்த காலி பண்ணு.,  இல்ல அம்மா வீட்டுக்கு வரேன் அம்மா அப்பாவோட உறவு கொண்டானும்., என் அண்ணன் தம்பியோட உறவு எப்பவும் இருக்கனும்அப்படின்னு நினைச்சா  வந்துட்டு போ.., இல்ல அண்ணன் பொண்டாட்டி., தம்பி பொண்டாட்டி யை குறை சொல்லிகிட்டே இருப்பேனா எடத்த காலி பண்ணு“.., என்று சொன்னான்.

           “ஏன்டா ரொம்ப பேசுற., பெரிய மனுஷன் ஆயிட்டோம் ன்னு நினைப்போ“., என்று கேட்டாள்.

         நான் உன்னை விட ஒரு வயசு தான் குறைவு., என்னமோ உன்னை விட  ரொம்ப சின்னவன் நினைச்சி பேசுறீயோ., ரொம்ப சின்னவனா இருந்தா., அப்புறம் ஏன்மா  எதுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க.,  எனக்கு கொடுக்கிற மரியாதையை என் பொண்டாட்டிக்கும் கொடுக்கிறதா இருந்தா., இப்ப போல எப்பவும் இங்க வந்து போய் இருக்கட்டும்.,   இல்லன்னா இவ வர்றப்ப சொல்லுங்க., நான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு எங்காவது வெளியூர் போய்ட்டே இருப்பேன்“., என்றான்.

      தயாளன் தான்பிரசாத் சாப்பிட்டுட்டு போ., நான் பேசிக்கிறேன்., நீ பேசினா பிரச்சனை பெருசாகும்“., என்று சொன்னார்.

              அமைதியாக எழுந்தவன் தன் அம்மாவையும் அக்காவையும் முறைத்துக் கொண்டே சென்றான். இது எதுவும் தெரியாதவளோ மாடி பால்கனியில் இருந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

         அவன் அறைக்கு உள்ளே வந்தவன்., “அவங்க பேசுறது ஏதாவது நீ என்ட்ட சொல்றியா“., என்று வந்தவுடன் கோபமாக கேட்டான்.

        அவனது கோபத்தில் அதிர்ந்துபோய் எழுந்தவள்., தன்னை நிதானப்படுத்திக் கொண்டு., “என்ன சொல்லணும்“., என்று கேட்டாள்.

              “அண்ணி சொன்னாங்க., நீ பதிலே சொல்லலையாம்., இத்தனை நாள் நீ கீழே போய் சாப்பிடல., இனிமே ஒழுங்கா கீழே போய் சாப்பிடு.., அவங்க என்ன சொல்றது இந்த வீட்ல உனக்கு எல்லா உரிமையும் இருக்கு..,  நீ உன் உரிமைய மறந்துடாத“., என்று சொன்னான்.

      “இப்படி எல்லாம் பேச்சு வரும் தெரிஞ்சு தான்.,  நான் இந்த கல்யாணமே வேண்டாம்னு சொன்னேன்.., ஆனா யாராவது நான் பேசுறத காது கொடுத்து கேட்டீங்களா., இல்ல இல்லஎல்லாரும் அமைதியா இருங்க..,  நான் தானே திட்டு வாங்க போறேன்.., பேசாம போங்க“.,  என்று அவளும் பிரசாத்திடம் பேசினாள்.,

      “நீ என்னோட வொய்ப் அதாவது ஞாபகம் இருக்கா இல்லையா“., என்று சொன்னான்.

      சற்று நேரம் அமைதி காத்தவள்., பின்புஅது நியாபகம் இருக்கு“., என்று சொன்னாள்.

         அவளை பார்த்துக்கொண்டே குளியல் அறைக்கு சென்றான்., தன்னை ரெப்பரஷ் செய்து கொண்டு வரும் போது அவள் எப்போதும் போல அவளிடத்தில் படுத்திருந்தாள்.,

        விளக்கை அணைத்தவன் சற்று நேரம் அமைதியாக படுத்திருந்தவனுக்கு மனதில் ஆயிரம் எண்ணங்கள்., ‘இந்த எண்ணம் எப்போதும் சரிவராது.,  இவளுக்கு ஏன் இப்படி மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மை‘., என்ற எண்ணத்தோடு இருந்தவன் அவளை நெருங்கி அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

       முதலில் சற்று படபடப்பாய் அவனை விலக முயற்சி செய்தாலும்., அவனின் பிடி அழுத்தமாக இருக்க., மெதுவாக விடி விளக்கின் வெளிச்சத்தில் அவனை திரும்பிப் பார்த்தாள்.,

           அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்., அவளோஎன்னஎன்று கேட்டாள்.,

        அவனோ., “ஆனால் உனக்கு என்  வொய்ப் ன்றது அப்பப்ப மறந்து போகுதா“., என்று கேட்டான்.

      “எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்குஎன்று சொன்னாள்.,

           “அப்புறம் என்ன அவங்க பேசினா.,  பதிலுக்கு பதில் உனக்கு கொடுக்க தெரியாதா“., என்று கேட்டான்.,

           அவனையே பார்த்தபடி இருந்தவளுக்கோ., அவன் பார்வையின் அர்த்தம் புரிந்ததோ என்னவோ., அமைதியாக அவன் பார்வையை எதிர் கொண்டாள்.

          அவள் தன் மனைவி என்பதை அவளுக்கு அழுத்தமாக நினைவுக்கு வரும் படி நெற்றி முத்தத்தில் ஆரம்பித்தவன்., அவளை முழுதாக தன்னவளாக மாற்றிய பிறகும் அவளை அணைத்து இருந்தான்.

          சற்றுநேரம் அவளை தன் கைக்குள் வைத்திருந்தவன்., அவளிடமிருந்து எந்த பேச்சும்  இல்லை என்றவுடன்., சற்று நேரம் அவளையே பார்த்து இருந்து விட்டு பின்புகோபமா“., என்று கேட்டான்.

         இவளோ., இல்லை என்னும்படி தலையசைத்தவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.,

           “ஹேம் புரிஞ்சுக்கோ., பத்து நாள் இல்ல 15 நாள் ஆயிருச்சு., இப்ப வரைக்கும் நான் உன்கிட்ட ஜாலியா பேசிட்டு  தான் இருந்தேன்., நீ யாரோ எவரோ மாறி இந்த வீட்டிலே இருக்கிறது எனக்கு புடிக்கல.., நீயும் இந்த வீட்டோட மருமக தான்., உனக்கான உரிமை இந்த  வீட்ல எல்லாமே இருக்கு., அவங்க என்ன சொல்றது.,  நீ ஓங்கி பேசு.., ஏன் உன்னால பேச முடியாதா., நான் இருக்கேன்., பதிலுக்கு பதில் நீ பேசு நான் பார்த்துக்கிறேன்“..,  என்று சொல்லி அவளை இன்னும் இறுகி அணைத்துக் கொண்டான்.

           “இப்போவும் உன் பெர்மிஷனோடு தான் உன்ன முழுசா என்னவளா மாற்றிக்கிட்டேன்., அதுல எனக்கு நம்பிக்கை இருக்கு“.,என்று சொன்னான்.

       அவளும் அமைதியாக அவன் நெஞ்சில் முகம் புதைத்தபடி படுத்திருந்தாள்., அவன் சொல்வது எதற்காக என்பதும் புரிந்து கொண்டாலும்., எதிர்த்து பேசினால் சண்டை வரும் என்ற பயத்தோடு தான் அவள் அமைதியாக இருந்தாள்., இங்கு பதிலுக்கு பதில் பேசவில்லை என்றால் பிரச்சினைகளால் அதிகமாகும் என்பதையும் ஓரளவுக்கு தெரிந்து கொண்டவளுக்கு., அதன் பின்பு அவன் ஏன் தன்னை பதில் பேச சொல்கிறான் என்பதும் ஓரளவுக்கு புரிந்தது.

               தூக்கம் வராமல் இருவருமே விழித்திருக்க மீண்டும் அவளிடம்நீ இந்த வீட்டு மருமகள் என்பதில் உறுதியாய் இரு., அது எப்போதும் மாறாது“.,  என்று சொன்னவன்

      விடியவிடிய அவளிடம் பேச வேண்டிய விஷயங்களை பேசியதோடு இடையிடையே அவள் தன்னவள் என்பதை அவளுக்கு அழுத்தமாக  நிரூபித்தான்.

      காலை சற்று தாமதமாக எழுந்தவன் அப்பாவிடம்ஒரு பதினோரு மணிக்கு மேல் கிளம்புவோம்“., என்று சொல்லி விட்டு மீண்டும் படுக்கையில் விழுந்து விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.

          இவளுக்கோ ஏற்கனவே ஏதாவது குறை சொல்லும் மாமியார் நாத்தனார் இன்னும் தாமதமாக இறங்கி சென்றால் வேறு ஏதேனும் குறை சொல்வார்கள் என்ற எண்ணத்தோடு அவசரமாக குளியலை முடித்துக்கொண்டு அறையை சுத்தம் செய்துவிட்டு கீழே இறங்கினாள்.

      அதுவும் அவன் நேற்று சொன்னதினால்  தான்இனி உன்னோட ஆபீஸ் வொர்க் கூட கீழே உட்கார்ந்து பாரு.,  கீழே அண்ணி., பிள்ளைகளோடு சேர்ந்து இரு., யார் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்“., என்று சொல்லியிருந்தான்., அதை நினைத்து கொண்டே கீழே  சென்றாள்.

      கீழே இருந்தவர்களுடன் காபி குடித்து கொண்டிருந்த கலா .,  அவள் வருவதை பார்த்தவுடன் சுந்தரி அம்மாவிடம் சொல்லி காப்பி எடுத்துக் கொடுக்க சொன்னார்.,  அதை பார்த்த பானு தான் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

      ஏற்கனவே நித்யானந்தன்  “ஹேமாவிற்கு எல்லாவற்றையும் வீட்டில் பழக்கி கொடு., தனியே இருக்க விடாதேதம்பி வருத்தப்படுவான்“., என்று சொல்லியிருந்தான்.

       அதன்பிறகு வந்த நாட்களில் பிரசாத் தயாளன் தேர்தல் வேலையாக வெளியே சென்றாலும்., ஹேமாவை தன்னோடு அழைத்து வீட்டில் மற்றவற்றை பழக்கி கொடுத்துக் கொண்டிருந்தாள்.

      இதைப்பார்த்த சொர்ணத்திற்கு தான் தாங்க முடியவில்லை., பானு ஊருக்கு கிளம்பி சென்றாலும், நன்றாக தாய்க்கும் சொல்லிக் கொடுத்துவிட்டு சென்றிருந்தாள்.,

       இப்போது சொர்ணத்திற்கு தான் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல தகதகவென்று எரிந்து கொண்டிருந்தார்.

       நாட்கள் அதன் பிறகு சுமூகமாக கடக்க பிரசாத் ஹேமாவிற்கு இடையே நெருக்கமும் சற்று அதிகரிக்கத்தான் செய்தது.,

          ஹேமா கொஞ்சம் கொஞ்சமாக பிரசாத்தின் அன்பிலும் அரவணைப்பிலும் பழைய ஹேமாவாக மாற தொடங்கி இருந்தாள்.,

            வீட்டில் அனைவரிடமும் தினமும் பேசிக் கொண்டாலும் தோழிகளுடனும் தினமும் பேசிக்கொண்டாள்., அவள் ஆரம்ப சில நேரங்களில் இருக்கமாக இருந்தது போல இல்லாமல்., இப்போது சற்று தளர்வாக பழைய துறுதுறுப்புடன் மாற தொடங்கியிருந்தாள்.

          அன்று எலக்சன் வேலை முடிந்து மதியம் வீட்டிற்கு வந்த தயாளனும்., பிரசாத்தும் சற்று சோர்வாக இருந்தனர்.

        அன்று அதிக அலைச்சல் என்று சொல்லிவிட்டு சாப்பிட்டுவிட்டு மாடிக்கு சென்றவனிடம்., “பிரசாத் நல்ல தூங்கி எழுந்து வா., ஈவ்னிங் இன்னும் வேலை இருக்கிறது., இன்னும் இரண்டு நாள் தான் தேர்தல் பிரச்சாரம்., அதன் பிறகு பிரச்சாரம் இருக்காது“., என்று தயாளன் சொன்னார்.

           அதிகமான சோர்வில் முகமும் வாடிப்போய் இருக்க., ஹேமா தான் அவனுக்கு முகத்திற்கு போடுவதற்காக கொஞ்சம் முட்டை வெள்ளைக் கருவோடு தேன், எலுமிச்சை சாறு கலந்து எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றாள்.,

       அவனோஎன்ன இது“., என்று கேட்டான்.,  இன்னைக்கு உங்க முகம் ரொம்ப டல்லாயிருக்கு“., என்று சொல்லியபடி அவனுக்கு முகத்திற்கு அந்த கலவையை பூசினாள்.

       அவனோநான் தூங்கணும்என்று சொன்னான்.

        “பத்து நிமிஷம் மட்டும் போடுங்க.,  அப்புறமா முகத்தை கழுவிட்டு படுங்க.,  முகமும் பிரஷ்ஷா இருக்கும்., அதுவும் நீங்க தூங்கி எழுந்திருக்கும் போது இன்னும் பளிச்சின்னு இருக்கும்., என்று சொன்னாள்.

            அவனும்பர்பெக்ட் பொண்டாட்டியா மாறிட்டஎன்று சொல்லி அவளை கிண்டல் செய்து கொண்டிருந்தான்.

       அவளோ சிரித்தபடிநீங்க மாற்றிட்டீங்கன்னு சொல்லுங்க“., என்று சொன்னாள்.,

       அவளை பார்த்து சிரித்து கொண்டேஎன் பொண்டாட்டி பதிலுக்கு பதில் பேசுவது பெரிய விஷயம் போல“., என்று சொல்லிக் கொண்டிருந்தான்.,

        அப்போதுதான் அவனிடம் வேலையைப் பற்றி விசாரிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் முகம் கழுவி விட்டு வந்தான்.

          “இப்ப தூங்குங்க“., என்று சொன்னாள்.

        “கொஞ்ச நேரம் என் பக்கத்திலேயே இரு“., என்று சொல்லியவன்.,

     அவளை இழுத்து தன் அருகில் அமர்த்தி கொண்டு உறங்க தொடங்கினான்.,

               அவன் தூங்கும் வரை அவன் கைகளிலே தன் கை  இருந்ததால் அவன் தூங்கிய பிறகு மெதுவாக எழுந்து நகர்ந்து அங்கிருந்து சென்றாள்.,

       வாழ்க்கையை அழகாக சென்று கொண்டிருப்பதாக தான் தெரிந்தது.,

   விதி என்ன வைத்திருக்கிறது என்று தெரியாதவரை நாம் போகும் பாதை நமக்கு சமதளமாக தான் தெரியும்.,  போகப் போகத்தான் மேடு பள்ளங்களும்., கல்லும் முள்ளும்.,  நம்மை மிரட்ட தொடங்கும்., விதி வலியது தான்.,

உன் கைகளை மொத்தமாக
தொலைப்பேன்
என்று தெரிந்திருந்தால்.,
எனக்குள் மொத்தமாக
புதைத்திருப்பேனடி.,

தொலைந்த கைகளை
தேடி அலையும்
என் விரல்களின்
வேதனை அறிவாயா.,

Advertisement