Advertisement

9

உங்கள் வாழ்க்கை எந்த திசையில் செல்ல வேண்டும், என்பதை சரியாக நீங்கள் தீர்மானித்து விட்டால்,அந்த வானத்தையும் நீங்கள் எட்டலாம். உங்களை யாராலும் தடுக்க முடியாது. ஆகையால், உங்கள் குறிக்கோள் என்ன என்பதை உணருங்கள்!
                          – புத்தர்

           பிரசாத்தின் வீட்டிற்கு அழைத்து சென்ற பிறகு., சொர்ணத்தின் நடவடிக்கைகளை கண்ட கலா தான் ஹேமாவை மாடி அறையிலேயே இருக்க வைத்தாள்.,

            அது மட்டும் அல்லாமல் அவளுக்கு தேவையான உணவு மற்றும் குடிப்பதற்கு பானங்களை அவளே கொண்டு மேலே கொடுத்து விட்டு வந்தாள்., 

       அதற்கும் சொர்ணம்ஏன் நீ தான் செய்யணுமா“., என்று கேட்டார்.

        “அத்தை ஹேமா கீழே வந்தா., நீங்க ஏதும் பேசுவீங்கன்னு தான்.,  நான் மேலே கொண்டு போய் கொடுத்திட்டு வாறேன்.,  இப்போ ஒன்னும் இல்ல ஹேமாவ கீழே வர சொன்னா தாராளமாக வருவா., ஆனா நீங்க எதுவும் பேசிறக்கூடாது, என்பதற்காக தான் மேலே போய் கொடுத்திட்டு வர்றேன்“., என்று சொன்னாள்.

      “அந்த அளவுக்கு தெரியுதா., எனக்கு புடிக்காம இருக்கிறது., இப்பதான் தெரியுது போல., கல்யாணத்துக்கு முன்னாடி தெரியலையே“., என்று வேண்டுமென்றே விதண்டாவாதமாக பேசினார்.

         தயாளன் தான்வாய மூடிட்டு இருதேவையில்லாம பேசாதே“., என்று சொல்லி அவர் வாயை அடக்கி கொண்டிருந்தார்.

    பிரசாத் இதையெல்லாம் பார்த்துக் கொண்டே தான் இருந்தான்., ஆனால் பிரசாத்தை காணும் போது மட்டும் சொர்ணம் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு பேசினார்.

          மற்றபடி அவரின் நடவடிக்கைகளை அவன் கவனித்துக் கொண்டிருந்தாலும் எதுவும் அதிகமாகப் பேசாமல் அமைதியாக இருந்து கொண்டான்.,

           ‘எலக்சன் முடியும் வரை எதைப்பற்றியும் பேச முடியாதுஎன்று அவனுக்கும் தெரியும்., ‘அது மட்டுமல்லாமல் கண்டிப்பாக இந்த எலக்ஷனில் தான் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமும் இருக்கிறது.,  ஜெயிக்காமல் போனால் நிச்சயமாக அவளை இதை சொல்லியே பேசுவார்கள்‘., என்று அவனும் அறிந்து தான் இருந்தான் அதனால் மேற்கொண்டு எதுவும் பேசாமல் எலக்சன் முடியும் வரை அமைதி காக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான்  இருந்தான்..

               அன்று நண்பர்கள் வந்திருக்க அவர்களோடு பேசிவிட்டு வருவதற்கு முன் ஹேமா தூங்கிப் போயிருந்தாள்.

          மறுநாள் ரிசப்ஷனுக்கு தயாராக பார்லர் இருந்து ஆட்கள் வந்து விட்டதாக கலா வந்து ஹேமாவிடம் சொல்லி சென்றாள்.,

           “இந்த ட்ரஸ் தான் உனக்கு ரிசப்ஷனுக்கு எடுத்தது., இதை போட்டுக்கோ“., என்று சொன்னவள்.,
இப்ப  அவங்க வந்து மேக்கப் பண்ணி டிரஸ் பண்ணி விடுவாங்க.,  இன்னைக்கு ஒரு நாளைக்கு உனக்கு பிடிக்காம இருந்தாலும் அஜெஸ்ட் பண்ணிக்கோ“.,  என்று சொன்னாள்.

          அவளும் சிரித்தபடி கலாவிடம் தலையாட்டினாள்.

         அதுவரை ஹேமாவோடு  இருந்த குழந்தைகளை கிளப்புவதற்காக அழைத்துக் கொண்டு சென்றாள்.

         பார்லர் ஆட்கள் வருவார்கள் என்று அறையில் காத்திருந்தாள் ஹேமா., ஆனால் வந்து நின்றது என்னவோ பிரசாத் தான்.,

         “ஹேம் இதை குடிச்சிக்கோ“., என்று ஒரு ஜூஸ் டம்ளரோடு வந்து நின்றான்., 

      “இல்ல இப்ப வேண்டாம்“.,என்று சொன்னாள்.

       “இல்லஇல்ல.,  குடி மேக்கப்  முடிக்க டயமாகும்., அப்புறம் அங்க போய் ரிசப்ஷன்ல நிக்கனும்.,  டயர்டா இருக்கும்அதனால இப்ப குடிச்சுக்கோ“., என்று சொன்னான்.

             “இல்லநான் கிளம்பிட்டு கூட குடிச்சுக்கறேன்“., என்றாள்.

        ” இப்ப நீ குடிக்கிற“., என்று அழுத்தமாக அவன் சொன்னதும்., அவளை சென்னையில்  பார்க்க வந்திருக்கும் போது பேசியது போலவே இருந்தது.,

          அவனை பார்த்தவள், மனதிற்குள்எப்ப எப்படி பேசுவாங்க ன்னு தனியா டியூஷன் எடுத்துக்கனும் போலஎன்று நினைத்த படி., அவனிடம் இருந்து  வாங்கியவள் இரண்டு வாய் குடிக்கவும்..,

            அவளிடமிருந்து டம்ளரை வாங்கியவன்., அவளைப் பார்த்தபடி நின்றான்.

            “ஏன்., இப்ப என்ன குடுங்கஎன்று சொல்லி அவனிடம் டம்ளரை வாங்கப் போனவளிடம் எதுவும் பேசாமல்.,

       ஜூஸை கீழே வைத்துவிட்டு அருகில் வந்தவன்., அவள் இதழில் அழுத்தமாக முத்தம் கொடுக்கவும்., ஒரு நிமிடம் திணறிப் போய் அவனை தள்ள முயன்றவளுக்கு தோல்வியே கிடைத்தது.,

          சில நொடிகளில் நிகழ்ந்த முதல் முத்தத்தை ஏற்கவே அவளுக்கு சில நொடிகள் தேவைப்பட்டது.,

       முத்தமிட்டு முடித்தவன் அவளிடம்.,  “உன்ன பார்க்க வந்திருக்கும் போது., இதே ஜூஸ் தான் உனக்கு ஆர்டர் பண்ணினேன்., உன்ன கடைசியா கட்டாயப்படுத்தி தான் குடிக்க வச்சது.,  அப்படி நீ குடிக்கும் போது., எனக்கு அப்போ அந்த நிமிஷம்.,  அங்க வச்சு தோணுனது.., யாருமே பக்கத்துல இல்லாம இருந்திருந்தா., இதே மாதிரி பச்சக்கென்னு  ஒரு முத்தம் கொடுத்து இருக்கலாமே அப்படின்னு தான் தோணுச்சு.., அதனால தான் இன்னைக்கு கொடுத்துறனும் அப்படி ன்கிற முடிவுடோ வந்தேன்“.,என்று கண்ணை சிமிட்டிய படி சொன்னான்.

      அவனைப் பார்த்தவளுக்கு., பட்டாம்பூச்சி பறக்கும் வித்தியாச உணர்வு எழுந்தது., ஆனாலும் இவள் முறைக்க முயன்று தலைகுனிந்தாள்.

         அவனோ மீண்டும் அவள் அருகில் வந்து., அவளை தன்னோடு சேர்த்து அணைத்தவன்., அவளின் காதோரம்  ரிலாக்ஸா இரு., டென்ஷனாகாத நீ டென்ஷன் ஆனா., யார் இருக்கா ன்னு எல்லாம் பார்க்க மாட்டேன்., மறுபடியும் கொடுத்திடுவேன்.,ரிலாக்ஸா இரு“.,  என்று சொன்னவன்.,அவள் முதுகிலும் தோளிலும் லேசாக அழுத்தி அவள் நெற்றியில் மீண்டும் ஒரு முத்தம் வைத்து விலகினான்.,

      பின்பு அந்த ஜூஸ் டம்ளரை  எடுத்து அவள் கையில் கொடுத்தவன்குடிச்சிட்டு உட்காரு., ஆள்கள் வர்றாங்க., நான் அந்த ரூம்ல கிளம்புறேன்“., என்று சொல்லி அவனுக்கான உடைகளை எடுத்துக்கொண்டு அடுத்த அறைக்கு சென்றான்.,

       கையிலிருந்த ஜூஸை பார்த்துக் கொண்டிருந்தவளின் மனம் பலவாறு குழம்பவும் செய்தது., அதேநேரம் கடவுளிடம் வேண்டுதலையும் வைக்க தவறவில்லை.,

        ‘ஐயோ என்னை ஏன் இப்படி குழப்புற உண்மையில் இவரை நினைச்சி எப்படி  பேசறதுன்னு தெரியல., அவரு வேற என்னைய அன்பாலே கொல்லுறாருஎன்று கடவுளிடம் முறையிட்டால் பின்பு அமைதியாக அமர்ந்திருந்தாள்.

          அதேநேரம் பார்லர் ஆள்களும் வந்துசேர அவசரமாக அந்த ஜூசை வாயில் சரித்துக் கொண்டவளுக்குஎப்போதும் இந்த ஜூஸை மட்டும் இப்படித்தான் குடிக்க வேண்டுமா‘., என்றும் தோன்றியது.

      அதன் பிறகு வந்தவர்கள் கையில் தன்னை ஒப்படைத்து விட்டு அமைதியாக அமர்ந்தாள்.,  சரியான நேரத்திற்குள் அவளை அழகு தேவதையாக தயார் செய்திருந்தனர்.

           ஏற்கனவே அழகிதான் பார்லர் பெண்களின் கைவண்ணத்தில் மீண்டும் அழகாக ஜொலிக்க., அவளை அழைத்து செல்ல வந்த கலா தான்., ‘இன்னைக்கு எத்தனை பேர் கண்ணு பட போகுதோஎன்று நினைத்து கொண்டவளுக்கு நாத்தனார் பானுவின் நினைவு வந்தது.

       ‘என்னென்ன பிரச்சனை எல்லாம் உண்டு பண்ணப் போறாளோஎன்ற எண்ணமும் மனதில் வந்து சென்றது.

             பிரசாத்தின்  உறவினர்கள் நண்பர்கள் சூழ அந்த வரவேற்பு நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது., அவ்வப்போது அவனின் பார்வையில் முகம் சிவக்க தலைகுனிந்து தன் வெட்கத்தையும்., படப்படப்பையும் மறைத்து கொண்டாள்.

       வீட்டிற்கு வந்தவுடன் மிகவும் சோர்ந்து போய் இருந்தவளை பார்க்கும் போதே பிரசாத்துக்கு வம்பு இழுக்ககூட தோன்றவில்லை., ஆனாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவள் உடை மாற்றி வரும்போது அவளுக்கான பால் டம்ப்ளரை அவள் கையில் வைத்துகுடிச்சிட்டு தூங்குஎன்று அழுத்தமாக சற்றே குரல் உயர்த்தி சொன்னான்.

        அவனை அதிர்ந்து பார்க்ககுடிச்சிட்டு தூங்கு., நான் ஒன்னும் மதியம் பண்ணின மாதிரி பண்ண மாட்டேன் பயப்படாத., மதியம் எனக்கு அந்த ஜூஸை பார்த்தவுடனே உன் ஞாபகம் தான் வந்தது., அதுதான் எடுத்துட்டு  வந்தேன்“., என்று சொன்னவன்

         லேசாக கண்ணடித்து சிரித்துவிட்டு நான் சொன்ன பத்து நாள் அப்படியே தான் இருக்கு என்று சொல்லிவிட்டு அவனும் ரெப்பிரஷ் செய்து கொள்ள குளியலறைக்கு சென்றான்.

        கையில் தந்து சென்றிருந்த பாலை குடித்துவிட்டு படுத்துவிட்டாள்., சற்று நேரத்தில் உறங்கியும் போய்விட., அவள் அருகில் வந்தவன் அப்படி ஒரு தூக்கத்திலிருக்கும் அவளையே பார்த்துக் கொண்டிருந்ததை  பற்றி ஹேமாவிற்கு தெரியவில்லை.

        அன்று மாலை ரிசப்ஷன் நிகழ்வில் முழுவதும் பானு தன் தாயின் அருகிலேயே இருந்தாள்., உறவினர் யாரும் மருமகளை பற்றி பெருமையாக சொல்லி அம்மாவின் மனதை மாற்றி விடுவார்களோ என்ற எண்ணத்தில் தான்., அதை அறிந்தும் வீட்டில் உள்ளவர்களுக்கும் பானுவின் கணவனாலும் எதுவும் செய்யமுடியவில்லை.

         ரிசப்ஷன் முடிந்த 2 நாளில் தேர்தல் வேலையை தொடங்க வேண்டும் என்று வீட்டில் பேச்சு நடைபெற்றுக் கொண்டிருந்தது.,

         பிரசாத்தின் அப்பா வழி உறவினர் பாட்டி ஒருவர் வீட்டிற்கு வந்து இருந்தவர் தான்குலதெய்வம் கோயிலுக்கு போயிட்டு வாங்க“., என்று சொன்னார்.

         பிரசாத்தின் வேலையைப் பொறுத்து குலதெய்வம் கோவிலுக்கு செல்கிறோம் என்று வீட்டினர்களும் பேசிக் கொண்டிருந்தனர்.,

         அதன் பிறகு தயாளனும்., பிரசாத்தும் தேர்தல் வேலையில் மும்முரமாக இறங்கி விட்டனர்., வீட்டில் கலா ஹேமாவை கவனித்துக் கொண்டாள்.,

        முடிந்த அளவு பிள்ளைகளை அவளிடமே விட்டு அவளுக்கு தனிமையே உணராத வண்ணம் பார்த்துக் கொண்டாள். சில நேரங்களில் அவளும் தன்னுடைய லேப்டாப்பை எடுத்து வைத்துக்கொண்டு அலுவலக வேலை சம்பந்தமாக அமர்ந்து விடுவாள்., அந்த நேரங்களில் குழந்தைகள் அவளோடு அவள் அறையில் விளையாடிக் கொண்டே இருப்பார்கள்., அவளின் கண் பார்வையிலேயே.

       ஹேமாவிடம்  வந்த கலாஇந்த வாரம் குலதெய்வம் கோயிலுக்கு போகலாம் என முடிவு செய்து இருக்கின்றனர்“., என்றாள்.

       ஹேமாவோ., “இல்ல இந்த வீக்“., என்று சொல்லி தயங்கினாள்.

         புரிந்து கொண்ட கலாவோ., “அப்படியா சரி நான் சொல்லிக்கிறேன்., நெக்ஸ்ட் வீக் போலாம்“., என்று சொன்னாள்.

அவளும் தலையை ஆட்டினாள்., கலா வீட்டில் பெரியவர்களிடம் சொல்லும் விதமாக சொல்லி அடுத்த வாரத்தில்   கோயிலுக்கு செல்வதற்கு நாளைக் குறித்துக் கொண்டனர்.,

          பிரசாத் தான் அவள் வாடிப்போய் இருப்பதை பார்த்து விட்டுஎதுவும் வேண்டுமாஎன்று கேட்டான்.

           இல்லை எனும் விதமாக தலை ஆடியவளை தனியே விடாத வண்ணம் முடிந்த அளவு அவன் இருக்கும் நேரம் எல்லாம் அவளிடம் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பான்.,

         அவளிடம் இருந்து சில நேரம் சரியான பதில் வராவிட்டாலும்.,  பேசிக்கொண்டே இருப்பான்.,

           ஓரளவுக்கு ஹேமாவும் இதுதான் வாழ்க்கை என்று ஏற்றுக்கொள்ள தொடங்கியிருந்தாள்.

                 அவளுக்காக நாள்களை தள்ளிப்போட்டு குலதெய்வம் கோயிலுக்கு சென்று பொங்கல் வைப்பதாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்., அதன் பிறகு இன்னும் சில நாட்கள் தான் பின்பு எலக்சன் வந்துவிடும் என்ற எண்ணத்தோடு இருந்தனர்.

        எலக்சன் முடிந்து இரண்டே நாட்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்பதால் அனைவருமே சற்று படபடப்புடன் இருந்தனர்.,

         அன்று குலதெய்வம் கோயிலுக்கு கிளம்பி வந்தவளை பார்த்த பானுவிற்கு  மனதிற்குள்இவ இப்படி இருந்தா பிரசாத் அப்படியே போயிருவானே என்ன செய்ய‘, என்று யோசிக்க தொடங்கியிருந்தாள்.,

      கோவில் சென்று  திரும்பும் வரை எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்றது.

      அன்றே மாலை வீட்டிற்கு வந்த பிறகும் தேர்தல் பிரச்சாரம் விஷயமாக தேர்தல் அலுவலகத்திற்கு தயாளனும்.,  பிரசாத்தும் சென்று விட்டனர்.

       இரவு உணவு முடித்துவிட்டு தான் அறைக்கு வந்தனர்., அன்று அனைவரும் கீழே அமர்ந்து சாப்பிட சொர்ணம் மூஞ்சியை திருப்பி கொண்டு இருந்தார்.,

     வேண்டுமென்றே பானுவும் சொர்ணமும் அவர்களோடு அமர்ந்து உண்ணாமல் ஜாடை பேச்சு பேசுவது போல பேச.,

      கலா தான் ஹேமாவை அமர வைத்துசாப்பிடு முதல்லஎன்று சொல்லி சாப்பிட வைத்தாள்.

         அதற்குள் கலாவின் மூலம் நித்யானந்ததிற்கு விஷயம் போனது.

        நித்தியானந்தம்  தயாளனிடம் சொல்லி., “பானுவையும் அம்மாவையும் சத்தம் போட்டு வையுங்கள்“., என்று சொன்னான்.

      அந்த விஷயம் பிரசாத்தின் காதுக்கும் சென்றது., பிரசாத் வீட்டிற்கு கோபமாக வந்தான்., டைனிங் அறையில் உட்கார்ந்து சாப்பிட துவங்கும் போது வேண்டுமென்றே கலாவிடம்.,

      “அண்ணி ஹேமா சாப்பிட்டாளாஎன்று கேட்டான்.

       

Advertisement