Advertisement

அவள் அதிர்ந்து அவன் முகம் பார்த்தவளிடம்., “கன்னத்தில் தானே முத்தம் கொடுத்தேன்., என்னமோ லிப்ஸ் கொடுத்த மாதிரி.,  உன் முகம் இப்படி போகுது“., என்று சொன்னான்.

           அவன் கையை கஷ்டப்பட்டு தள்ளிவிட்டவள்., “பொய் சொல்லி., சீட்“., என்றாள்.

           “நீ என்ன இப்படி சொல்லிட்ட.,  நான் சொன்ன வார்த்தையை காப்பாற்றுவேன்“.,  என்று சொல்லியவன்.,  அவளிடம் காலையிலேயே விளக்க தொடங்கினான்.

         அவளோ அவனை பார்த்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து செல்ல துவங்கவும்., கையை பிடித்து அருகில் இழுக்க.., நிதானித்து நின்றாள்.,

        “நான் உனக்கு நிறைய விளக்கம் சொல்லுறேன்“., என்று சிரிப்போடு பேசத் தொடங்கவும்., ஏதும்  ஏடாகூடமாக பேசிவிட கூடாது என்று கையை உருவி கொண்டு., அவசரமாக குளியலறைக்குச் சென்று கதவைப் பூட்டிக் கொண்டவளுக்கு ஐயோ என்று இருந்தது.,

        ‘அவன் தன்னை அணைத்து இருப்பது கூட தெரியாமல்., அப்படி என்ன தூக்கம்‘., என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டவள்.,  ‘ஒருவர் தன் மேல் கை போட்டுக் இருப்பது கூடவா தெரியாமல் தூங்கி இருக்கிறோம்என்று எண்ணியவளுக்கு கோபம் தான் வந்தது.,

    ‘நல்லவேளை அத்தோடு நின்றதுஎன்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள்., “இனி எப்பவும் அழார்ட் இருக்கணும் ஹேமாஎன்று  கண்ணாடி முன் நின்று தன்னை பார்த்தே சொல்லிக் கொண்டாள்.,

            ஆனாலும் அவன் எல்லாத்தையும் விளையாட்டு போக்கில் வாழ்க்கையில் ஜாலியாக இருப்பதை பார்த்தவளுக்கு.,  ‘இவர் எப்பவுமே இப்படித்தானா., இல்லை என் கிட்ட மட்டும் தான் இப்படி இருக்கானாஎன்று மனதிற்குள் அவனையும் நினைத்துக் கொண்டாள்.

      அதன் பிறகு அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு குளித்து கிளம்பி கீழே வந்தாலும்., இவள் அமைதியாக இருப்பதைப் பார்த்தவன், ‘நம்ம கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ‘., என்று நினைத்துக் கொண்டான். ‘இல்லை இவளை இப்படியே விட்டால் சரி செய்ய முடியாதுஎன்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

            கீழே வந்தவளை தோழிகள், உறவினர்கள் என குறுகுறுவென்று பார்ப்பது போல தோன்ற பாட்டியின் அருகில் சென்று அமைதியாக அமர்ந்து கொண்டாள்., 

       அதன் பிறகு காலை உணவை முடித்து விட்டு அருகிலுள்ள கோயிலுக்கு மட்டும் சென்று விட்டு வரும்படி சொன்னார்கள்.,

        அவர்கள்  சென்றுவிட்டு வந்த உடனே., மதிய உணவிற்கு பிறகு பிரசாத்தின் வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.,

                அதுபோலவே மதிய விருந்து முடித்துக்கொண்டு பிரசாத்தின் வீட்டிற்கு முதலில் பிரசாத்  ஹேமாவும் மட்டும் கிளம்பினர். அவர்களோடு தோழிகள் இருவர் மட்டும் சென்றனர்.,

           வீட்டினர் உறவினர் எல்லாம் பின்னால் கிளம்பி வருவதாக  சொன்னார்கள்., எனவே தோழிகள் இருவரும் உடன் வருவதால் ஹேமாவும் பிரசாத் தோடு கிளம்பினாள்.

       அவர்களை அழைத்து செல்ல வந்தது பிரசாத்தின் அண்ணனும்., அண்ணன் மனைவியும் தான்., அவர்களோடு ஒரு உறவினர் வந்திருக்க அவர்களோடு கிளம்பி சென்றனர்.

          அவள் எதுவும் பேசாமல் கிளம்பி இருக்க அழகான பட்டுப்புடவையில்.,  தலைநிறைய பூவோடு திருமண பெண்ணிற்கே உரிய வகையில்., நகையும் பூவும் அவளை மேலும் அழகாக காட்ட பிரசாத் அவ்வப்போது திரும்பிப் பார்த்துக் கொண்டான்.,

        அவள் முகம் சற்று வாடினார் போல இருந்தது., ஏற்கனவே காலையில் அவள் அமைதியான பிறகு அவளிடம் வம்பு வளர்ப்பதே சற்று தள்ளி வைத்திருந்தான்., 

        இப்போது அவளும் யோசனையோடு வர பிரசாத்தின் வீடு வந்து சேர்ந்திருந்தனர்., அதேநேரம் வீட்டிற்கு வந்தவர்கள் காம்பவுண்டுக்குள் காரில் வந்துவிட்டாலும்.,

         கீழே இறங்கியவர்களை வீட்டிற்குள் அடியெடுத்து வைக்காமல் நிறுத்தியிருந்த முக்கிய உறவினர் ஒருவர்.,

       பிரசாத்தின் சகோதரியை அழைத்துஆரத்தி சுற்றி உள்ளே அழைத்து போஎன்று சொன்னார்.

          அவளோஎன் தகுதிக்கு நான் இவளுக்கு ஆரத்தி எடுக்கிறதாஎன்று பேச முதன் முதலாக நிமிர்ந்து பிரசாத்தின் சகோதரியை பார்த்தவளுக்கு தோன்றியது., ‘பிரச்சனை தொடங்கி விட்டதுஎன்று

      அதே எண்ணத்தோடு தோழிகளை திரும்பிப்பார்க்க தோழிகளும் சற்று அதிர்ச்சியுடன் நின்றனர்.,  அதே நேரம் ஹேமாவும் மனதிற்குள்நல்ல வேளை இன்னும் வீட்டினர் வரவில்லை., இதற்கு தானே திரும்பத் திரும்பச் சொன்னேன்., வேண்டாம் என்று‘., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

             அவள் தோழிகளை நிமிர்ந்து பார்ப்பதை பார்த்தவுடன் பிரசாத்திற்கு தான் சற்று வருத்தமாக இருந்தது.

        தன் சகோதரி மற்றவர்கள் முன் இப்படி பேசுவாள் என்று அறியாமல் அதிர்ந்து போய் நின்றான்., அதே நேரம் வீட்டின் பெரியவர் ஒருவர் சொர்ணத்தை அழைத்து ஆரத்தி எடுக்க சொன்னார்.,

        அவரோ  “முடியாது“., என்று சொன்னார்.

        ‘சரி தான் வீட்டில் நம்மைப் பிடிக்காமல் இரண்டு பேர் இருக்கிறார்கள்.,  போகப் போகத்தான் தெரியும் இன்னும் எத்தனை பேர் என்று‘.,  என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தாள்.

      சுந்தரி அம்மா ஆரத்தி தட்டை வாசலில் வைத்துக் கொண்டே நின்றார்., அவர்கள் இருவரும் வாங்கவில்லை என்ற உடன் நித்யானந்தன் மனைவி வாங்கிநான் எடுக்கிறேன்.,  தப்புன்னு இல்ல இல்ல“., என்றாள்.

       பெரியவரோ., நீ  அண்ணி முறை இல்ல.,  எடுக்க கூடாதுன்னு சொல்லுவாங்க“., என்று இழுத்து சொன்னார்.,

    “பரவால்ல நான் எடுக்கிறேன்“., என்று கலா சொல்லிவிட்டு ஆரத்தி சுற்றி இருவருக்கும் பொட்டு வைத்து., “வலது கால் எடுத்து வச்சு வீட்டுக்குள்ள வாங்கஎன்று நித்யானந்தன் மனைவி சொன்னாள்.

        அதைக்கேட்ட பானுவோஇவ எந்த காலை எடுத்து வைத்து வந்தால் என்னஎன்று வேண்டுமென்றே சொன்னாள்.

      அதைக்கேட்ட அவள்வேண்டுமென்றே இடது காலை எடுத்து வைத்து செல்வோமா‘., என்று நினைத்தாள்.

        அதேநேரம் தோழிகளோ அவள் என்ன நினைப்பாள் என்று புரிந்து கொண்டவர்கள்., அவளிடம்ஹேமா பொறுமையா இருஎன்று அமைதியாக சொன்னார்கள்.

       பிரசாத் அவள் கையை அழுத்தமாகப் பிடித்தபடி அவளை திரும்பி பார்த்தவன்.,  “வலது காலை எடுத்து வைஎன்று சொன்னான்.,

        ஏனெனில் அவனும் புரிந்து கொண்டான்., ‘அவள் வேண்டுமென்றே மாற்றி வைத்து விடுவாள் என்று  தோன்றியதோ என்னவோஅவன் அப்படி சொல்லவும் வேறுவழியின்றி வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றாள்.

          வீட்டில் விளக்கேற்ற  குடும்பத்தின் பெரியவர் தயாளன் வழி உறவினர் ஒருவர் சொன்னார்.,

          “விளக்கேற்ற சொல்லுங்கஎன்று சொல்லும் போதே அதற்குள் ஹேமா வீட்டு ஆள்களும் வர., ஏதோ கண்டுகொள்ளாதது போல பானு பின்புறமாக நகர்ந்து சென்றாள்.,

       அப்போதும் கலா தான் அழைத்து சென்று விளக்கேற்ற வைத்தாள்.

      பின்பு மாடியில் இருந்த பிரசாத்தின் அறைக்கு அழைத்துச் செல்லும் போது., அவள் தோழிகளையும் கலா கையோடு அழைத்து சென்றாள்.,

     “நீங்க இருங்க“., என்று சொல்லிவிட்டு வந்தவர்களை கவனிக்க கலா சென்று விட்டார்.

         தோழிகள் பின்பு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர்., “மனதில் எதையும் போட்டுக்காத., எல்லாம் சரியாயிடும் அவங்க ரெண்டு பேர் தானே இப்படி இருக்காங்க., வீட்ல மீதி யாரும் எனக்கு தெரிஞ்சி அப்படி இல்ல., கொஞ்சம் பொறுமையா இரு“.,  என்று சொன்னார்கள்.

       அவர்களை முறைத்து பார்க்க.,  “ப்ளீஸ் சொன்னா புரிஞ்சுக்கோ“., என்று மீண்டும்  சொன்னார்கள்.

      அவளும்இதுக்கு தாண்டி படிச்சு படிச்சு சொன்னேன்நமக்கு தகுந்த இடத்தில் தான் நம்ம இருக்கணும்னு., இப்போ புரியுதா நான் எதுக்கு சொன்னேன்“.,  என்று சொன்னவள்

          மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக., ரதியும் குழலியும் அவளை அமைதிப்படுத்தி விட்டு கீழே வந்தனர்.

      அதற்குள் அங்கிருந்த உறவினர்கள் சீர் செய்த பெண் வீட்டை நன்கு கவனித்தனர்.,  அதற்குள் ஹேமா வீட்டினரும் கிளம்ப தயாராகதங்கள் மகளை அவர்கள் வீட்டில் விட்டு செல்வது ஒருபுறம் மனம் கலங்க.,நின்றவர்கள்.,

             கண்கலங்கும் அவளை அங்கு விட்டுவிட்டு அவள் வீட்டினர் கிளம்பினர்.,  அவர்கள் கிளம்பும் போதே தயாளன்ரிசப்ஷனுக்கு கண்டிப்பாக எல்லோரும் காலையிலேயே வந்து விடவேண்டும்என்று சொன்னார்.

      அவர்களோஇல்லை சரியான நேரத்திற்கு நாங்கள் மண்டபத்திற்கு வந்து விடுவோம்“.,என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்றனர்.,

            அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக பார்த்து கொண்டே நின்றாள்.,

          கலா தான் பிள்ளைகளை அவளோடு அனுப்பி மாடியில் அவள் துணையாக இருக்கும்படி பார்த்துக் கொண்டாள்., அவள் தனிமையை உணர்ந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் அனுப்பினாள்.

      அவளை வீட்டிற்குள் ஒருத்தியாக கொண்டுவர முயற்சி செய்தவள் கலா மட்டுமே.

    தயாளன்.,  நித்யானந்தன் இருவரை பொருத்தவரை எப்படியோ திருமணம் முடிந்துவிட்டது என்ற எண்ணத்தோடு நடமாடினர்.

       பிரசாத் தன் வீட்டில் உள்ளவர்கள் இப்படி எல்லாம் உறவினர்கள் முன்னிலையில் நடந்து கொள்வார்கள் என்று நினைக்காததால்., அதை யோசித்து அவ ஏற்கனவே பொருந்தாது என்று  ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே இருப்பாள்., அவளை எப்படி சரிக்கட்டுவது என்று யோசனையோடு இருந்தான்.,

       இன்னொரு மனமோ., ஹேமாவிற்கு கட்டிபிடி வைத்தியம் பார்., ஒரு முறை வைத்தியம் பார்த்தாலே., பயந்துபோய் மேற்கொண்டு வாயை திறக்கமாட்டாள் என்று நினைத்து கொண்டான்.

       மனசாட்சியோ., கட்டிபிடி வைத்தியம் தேவை படுவது  உனக்கா அவளுக்கா என்று கேள்வி கேட்டது., இன்னொரு மனமோ., நாளையில் இருந்து சாப்பாட்டில் உப்பை குறைத்து கொள் பிரசாத் என்று கட்டளையிட்டது.

விதி விதவிதமாக விளையாட்டை தொடங்கி வேடிக்கை காட்ட போகிறது என்று படைத்தவனை அன்றி யாரரிவார்.

உனை கலங்க விடாமல்
காக்க நினைத்தேனே.,
மொத்தமாக நான்
கலங்க போவதை
அறியாமல் போனேனே.,

ஒற்றை வார்த்தை
சொல்லவில்லையே.,
உனை உயிராக எண்ணிய
எனை உயிரோடு
தீயில் இறக்கவா.,

Advertisement