Advertisement

8

ஆகாயத்திற்குச் சென்றாலும்,
நடுக் கடலுக்குச் சென்றாலும்,
மலையின் இடுக்கில் மறைந்து கொண்டாலும்,
எங்கு சென்று ஒளிந்து கொண்டாலும்,
தீய செயலைச் செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது.
               – புத்தர்

            திருமணம் முடிந்து உறவினர்கள்.,  நண்பர்கள்., என அனைவரும் செல்லவே நேரமாகி விட்டது., ஏற்கனவேபிரசாத்  வீட்டிற்கு மணமக்களை அழைப்பதை நாளை வைத்துக்கொள்ளலாம் என்றும்.,  நேரேஅவர்கள் வீட்டுக்குப் செல்லட்டும்“.,  என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததனர்.

          நித்தியானந்தன் நேரில் வந்து ஹேமாவின் பெற்றவர்களிடம்இன்று நேரமாகிவிட்டதால் நாளையே எங்கள் வீட்டிற்கு வரும் நிகழ்வை வைத்துக்கொள்ளலாம்., இன்று நல்லநேரம் முடிவதற்குள் உங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள்“., என்று சொன்னான்.

        அதன் பிறகே  ஹேமாவின் வீட்டினருக்கும் நிம்மதியாக இருந்தது.,  ஏனெனில் ஏற்கனவே நேரம் கடந்து இருக்க.,  இனி அங்குமிங்கும் அலைந்தால் சரி வருமா என யோசித்துக் கொண்டிருக்கும் போதே., நித்யானந்தன்  வந்து சொல்லி விட.,

               அதன்படி நாளை பிரசாத்தின் வீட்டிற்கு செல்லலாம் என முடிவாயிற்று.,  அதேநேரம் பிரசாத்தின் அக்காவின் கணவர் சடங்கு சம்பிரதாயங்களுக்கு ஹோட்டலில் ரூம்  ஏற்பாடு செய்யப்போவதாக பேசிக்கொண்டு இருந்தார். அதைக் கேள்விப்பட்ட பிரசாத்தும் அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

        பின்பு மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் முன் அருகில் இருந்த கோயிலுக்கு அழைத்துச் சென்று விட்டு.,  அதன் பிறகு ஹேமாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.,

      அவனை மாடியிலிருந்த ஹேமாவின் அறையில் ஓய்வெடுக்க சொல்ல., இவளோ கீழே பாட்டியின் அறையில் படுத்து தூங்கிவிட்டாள்.,

        பாட்டிதான்இந்த பிள்ளையை  வைத்து கொண்டு என்ன செய்ய., அந்த தம்பிக்கு ரூம் வசதி எப்படி இருக்கு., ஏதாவது  குடிக்க வேணுமா ன்னு எதுவும் கேட்காமல்., படுத்து தூங்குறா., இவள என்ன பண்ண“., என்று பாட்டிப் பேசிக் கொண்டிருக்கும் போதே

         வினோத் தான்நான் பாத்துக்குறேன்., அவ தூங்கட்டும்“., என்று சொல்லிவிட்டு மாடிக்கு சென்றான்.

         அங்கு பிரசாத் ரெப்பிரஷ் செய்து விட்டு  அமர்ந்திருந்தான்., வினோத் அவனிடம் பேச்சு கொடுக்கும் பொருட்டுநீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க“., என்று சொல்லிக் கொண்டிருந்தான்.,

            அவனோஅதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லை“., என்று சொல்லி விட்டு கீழே இறங்கி அவனோடு ஹாலுக்கு வந்து அமர்ந்தவன் அனைவரிடமும் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தான்.,

          வீட்டிற்கு வந்த உறவினர்களுக்கு தான்பரவால்ல பையன் நல்லவனா இருக்கான்., சாதாரணமா பேசி பழகி நல்லா இருக்கான்என்று நினைத்துக் கொண்டிருந்தனர். இது எதுவும் அறியாதவளோ நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

       தூங்கி எழுந்தவளோ  கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் தூங்கியிருந்தாள்.,

          அவளை எழுப்பிய பாட்டியோ., “இப்படியா பொறுப்பில்லாமல் இருப்ப“., என்று சத்தம் போட்டவர்.

       மாலை காபிக்கு பிறகுசற்றுநேரம் மாப்பிள்ளையோட பேசிக் கொண்டிரு“.,  என்று சொன்னார்.

          அவள்நான் என்னத்த பேச“., என்று சொன்னாலும் வேறு வழியின்றி அவனோடு மொட்டை மாடியில் சென்று நின்றிருந்தாள். அவளும் ரெப்ரெஷ் செய்து உடைமாற்றி இருந்தாள்.,

       அவன் அமர்ந்திருந்த இடத்திற்கு பக்கவாட்டில் சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள்.,  அவன் தான் சாதாரணமாகஎவ்வளவு நாள் லீவ் போட்டு இருக்க“., என்று கேட்டான்.

      இவளோ ஆச்சரியமாக அவனை பார்க்க.,

       “கண்டிப்பா வேலையை விட்டு இருக்க மாட்டேன்னு தெரியும்.,  அதான் எவ்வளவு நாள் லீவ் போட்டு இருக்கேன்னு கேட்டேன்“.,  என்று சொன்னவன்., “எதுவா இருந்தாலும் எலக்சன் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் நான் முடிவு சொல்ல முடியும்., அதனால அதுவரைக்கும் கொஞ்சம் வீட்டிலிருந்து ஒர்க் பண்ற மாதிரி பார்த்துக்கோ., கூட கொஞ்சம் டைம் கூட வொர்க் ப்ரம் ஹோம் வாங்கிக்கோ“., என்று சொன்னான்.

        அவனையே ஆச்சரியமாக பார்த்தாளே தவிர வேறு எதுவும் சொல்லாமல்., ம்ம்ம் ம்ம்ம் என்று மட்டும் பதில் அளித்துக் கொண்டிருந்தாள்.

          சற்றுநேரம் அவன் சாதாரணமாக தோழமைகளை பற்றி கேட்டு அவளையும் பேச்சில் இணைத்து கொண்டான்.

           இரவு உணவுக்குப் பிறகு அவள் அறைக்கு செல்ல தயங்கியபடி இருந்தவளை அவளின் அத்தை தான் இழுத்துக்கொண்டு போய் விடாத குறையாக விட்டார்.,

         சில நிமிடம் வாசலில் நின்றவள் மெதுவாக தன்னறைக்கு சென்றாள். அறையிலோ அவன் இல்லை சற்று நிம்மதி பெருமூச்சு விட்டபடி உள்ளே வந்தவள் என்ன செய்வது என்று தெரியாமல்., தன்னுடைய லேப்டாப்பை திறந்து வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டாள்.,

           வேலை இருக்கிறதோ இல்லையோ எதையாவது செய்து கொண்டு இருப்போம் என்ற எண்ணத்தோடு.,  ஏனெனில் பகலில் தூங்கியது., இப்பொழுது அவளுக்கு தூக்கம் வருமா என்று தெரியவில்லை., அப்பவே இந்த விஷயத்தை பற்றி எப்படி யோசிக்காமல் போனோம் என்று நினைத்தவளுக்கு சற்று படப்படப்பாகவே இருந்தது., ஆனாலும் நிச்சயமாக தன் அனுமதியின்றி எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையும் அவளிடத்தில் இருந்தது.

      அவள் நினைத்தது உண்மை என்பது போலவே உள்ளே வந்தவன்., கதவை தாழிட்டு விட்டு அவளை பார்த்தான்.,

            அவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் லேப்டாப்பில் தான் புதையல் இருப்பது போல பார்வையை அதிலேயே வைத்திருந்தாள்.,

           அவளைப் பார்த்து அவனுக்கு சற்று சிரிப்பு வந்தாலும் எதுவும் சொல்லாமல் தன்னை ரெப்பிரஷ் செய்து கொண்டு வந்தவன்., இலகுவாக எப்போதும் வீட்டில் அணியும் ஷார்ட்ஸ்.,  டிஷர்ட் போல அணிந்து கொண்டு வந்தவன்.,

      கட்டிலில் அவள் அமர்ந்திருந்தற்கு மறு பக்கமாக வந்து அமர்ந்தவன்., எவ்வளவு நேரம் இதை உத்து பார்த்துட்டே உட்கார்ந்து இருப்ப., தூங்கப் போறதில்லையா“., என்று கேட்டான்.

       கண்டிப்பாக பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள்., “தூக்கம் வரும் போது படுப்பேன்“., என்று சொன்னாள்.

         அவள் தன்னிடம் சண்டை போடுவாள்., ஏதாவது கத்துவாள் என்று எதிர்பார்த்திருக்க., எதுவுமே பேசாமல் இருந்தவளின் கவனத்தை திருப்பும் பொருட்டு பேச தொடங்கினான்.

          “நீ லேப்டாப் புதையல் எடுத்தது போதும்., மீதியை நாளைக்கு எடுத்துக்கலாம்., இப்ப வா.,  உன்கிட்ட கொஞ்சம் பேசணும்“., என்று சொன்னான்.

         எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தவள்., பின்பு அவன் பேசியதற்கான பதிலை எதிர்பார்த்துக் காத்திருப்பது புரிந்து கொண்டவள்., மெதுவாக லேப்டாப்பை  மூடிவைத்து விட்டு லேசாக திரும்பி அமர்ந்தாள்.,

        அவள் புடவையில் அமர்ந்திருப்பதை பார்த்தவன்டிரஸ் சேஞ்ச் பண்ணனுனா பண்ணிக்கோ“., என்று சொன்னான்.

        அவள் வீட்டில் இருக்கும்போது நைட் பேண்ட்ஸ் தான் போடுவாள்., அதை யோசித்து விட்டு இப்பொழுது எப்படி போட்டுக் கொள்வது என்று யோசனையோடு., “இல்ல வேண்டாம் நான் பாத்துக்கிறேன்“., என்று சொன்னாள்.

             “நீ எப்பவும் எப்படி இருப்பீயோ அப்படியே இரு.,  ரொம்ப யோசிக்காதே எதையும் போட்டும் ரொம்ப குழப்பிக்காதஎன்று சொன்னவன்.,

          “நீ இப்போ என் மேல பயங்கர கடுப்பில் இருப்ப ன்னு தெரியும்.,  கோபத்தில் இருப்பேன்னு தெரியும்.,  அதனால தான் நான் தள்ளியே இருக்கிறேன்., கண்டிப்பா அதுக்காக நான் எப்பவும் இப்படியே இருப்பேன்னு  சொல்ல மாட்டேன்., இப்போது ஜஸ்ட் உனக்கு ஒரு டென் டேஸ் டைம் எடுத்துக்கோ.,  அதுக்கப்புறம் இது நமக்கான வாழ்க்கை., நம்ம வாழ்க்கையை நாம தான் வாழ்ந்தாகணும்.., அப்படியே விட முடியாது., நம்ம லைஃப்  நாம பார்த்துக்கலாம்“., என்று சொன்னான்.

              அவனிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவளிடம் சற்று அவன் அழுத்தமாகஎன்ன பதிலே இல்லைஎன்று கேட்டவுடன் அதிர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தவளை பார்க்கும் போது இவள் அதட்டி பேசினாலே பயந்து விடுவாள் போலயே.,  பேச்செல்லாம் வெறும் வெளி பூச்சு தான் என்று நினைத்தாலும்.,

             அவள் முன் முகத்தில்  எதையும் காட்டாமல்என்ன புரிஞ்சுதாஎன்று மறுபடியும் கேட்க மெதுவாக தலையை ஆட்டியவள்.,

          அவனிடம்அந்த பத்து நாளை  ஒரு மாசமா மாத்திக்கலாமா“., என்று கேட்டாள்.

         “ஏன் ஒரு மாசம் லீவ் போட்டு இருக்க.,  அது முடிஞ்ச அப்புறம்  ஊருக்கு  போகலாம்ன்னு பார்த்தயா“., என்று கேட்டான்.

         அவனை பார்த்து முறைத்துக் கொண்டே திரும்பி படுக்கப் போனவளைஒரு நிமிஷம் இரு., நீ கொண்டு வந்திருக்குற பாலை குடிக்கிறது என்னால முடியாது., ஏற்கனவே நல்ல சாப்பிட்டாச்சி., அதுனால ஆளுக்குப் பாதி பாதி., நீ குடிச்சிட்டு தூங்கு.,

               அது வேற காலையில் இருந்துச்சுன்னா., அதுக்கும் நீ தான் பதில் சொல்லனும்“., என்று சொன்னான்

           இவளோ மனதிற்குள்அப்பாடா  நான் பேசி பேசி போராட வேண்டியது இருக்கும்னு நினைச்சேன்.,  நல்ல வேளை நான் பேச வேண்டியது இல்லை.,  அவரே ஒரு முடிவு பண்ணி., ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் சந்தோஷம்‘., என்று நினைத்துக்கொண்டாள்.

          காலையில் தூக்கம் கலைந்தவளுக்கு தன்னை யாரோ அமுக்கிப் பிடித்து இருப்பது போல தோன்றியது., கனவில் தான் போல என்று முதலில் நினைத்துக் கொண்டவளோ.,  அவளுக்கு அருகில் படுத்திருக்கும் தோழி என நினைத்துக் கொண்டுபிசாசு எப்போ என் பக்கத்தில் வந்து படுத்துச்சி‘.,  என்ற யோசனையோடு மெதுவாக திரும்பி படுத்தவள்.,

      தன் முகத்தின் அருகே பிரசாத்  முகத்தைப் பார்த்தவுடன் ஒரு நிமிடம் பதரி., பின்பே நேற்று பேசியது அனைத்தும்  நினைவுக்கு வந்தது., தான் எந்த இடத்தில் படுத்தாளோ அதே இடத்தில் இருக்க., அவன் தான் நெருங்கி வந்திருந்தான்.

          ‘இந்த லூசு நேற்று நம்மட்ட  நல்ல பிள்ளை மாதிரி பத்து நாள் டைம் எடுத்துக்க ன்னு சொல்லுச்சு., காலையில் இப்படி பிடிச்சிருக்குஎன்று யோசித்தப் படி.,  மெதுவாக அவனிடமிருந்து விலக முற்பட்டாள்.

             அவனோ இன்னும் அழுத்தமாக பிடித்துக் கொண்டான்., அவனின் அழுத்தமான அணைப்பே அவன் விழித்து தான் இருக்கிறான் என்பதை உணர்த்தியது.,

         அப்போது தான் அவளுக்கும் புரிந்தது., அவன் தன் இடுப்பை பிடித்துக் கொண்டிருப்பதை., அவள் அவன் கையை தட்டிவிட முயற்சித்த படி., “நல்ல பிள்ளை மாதிரி சொன்னிங்க, பத்து நாள் டைம் எடுத்துக்கலாம் ன்னு.,  முயற்சியை கை விடாமல் தள்ளி விட..,

         அவனோபத்து நாள் டைம் தானே சொன்னேன்., இப்படி இடுப்பில் கை போட மாட்டேனா சொன்னேன்., என்ன  முதலில் உன்ட்ட சொல்லல, அவ்வளவு தான்., 

     இனி எனக்கு ஒர்க் ஜாஸ்தி இருக்கும்.,  நாம வீட்டுக்கு போன அப்புறம் ரிசப்ஷன்., விருந்து அது எல்லாம் முடிச்ச பிறகு குலதெய்வம் கோயிலுக்கு போகனும்.,  அதனால் அது முடிக்கிற வரைக்கும்., அலைச்சலும்.,  டயர்டா இருக்கும்., அதுக்கு தான்  உனக்கு இந்த டைம் கொடுத்தது., பின்ன உனக்காக டைம் கொடுத்தேன் நினைச்சியா“., என்று சொன்னான்.

       கண்ணை விரித்து அவனை ஆச்சரியமாக பார்க்க., 

      அவனும்அப்புறம் என்ன டைம் தரேன்னு தானே சொன்னேன்., உன்னை கட்டி பிடிக்க மாட்டேன்., உன்னை தொட மாட்டேன்., உன்ன இப்படி பண்ணமாட்டேன், அப்படி ன்னா  சொன்னேன்“.,  என்றபடி அழுத்தமாக அவள் கன்னத்தில் முத்தம் பதித்தான்.

      

Advertisement