Advertisement

இன்னொரு வீட்டில் வாழப்போகும் பெண்ணான தன் பேத்திக்கு உட்கார்ந்து அறிவுரை சொல்லத் தொடங்கினார். கோபம் வந்தாலும் அமைதியாக கேட்டுக் கொண்டவளுக்கு கடுப்பு தான் வந்தது.,  ‘எதற்கெடுத்தாலும் விட்டுக்கொடுத்து போ.,  விட்டுக்கொடுத்து போ ன்னு சொன்னால் என்ன அர்த்தம்., நான் என்ன அவன் அடிமையா‘., என்று தோன்றினாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.,

          அவள் முகம் மாறுவதை கண்டு கொண்ட ரதி., குழலிக்கு ஹேமாவை காட்டிய படி பாட்டியிடம்  பேச்சை மாற்றி., மற்ற விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்க தொடங்கினார்கள்.,

          அதன் பின்பு தனியே இருக்கும் போது குழலி தான்.,  “ஒரு வார்த்தை போன் பண்ணி அந்த அண்ணா தான் இவகிட்ட பேசுனா என்ன“., என்று ரதியிடம் சொன்னாள்.

         ஹேமாவோ அவளை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.,  “சத்தமில்லாமல் இருஎன்று ரதி சொன்னவள்., “இவளை பற்றி எல்லாம் தெரிஞ்சு தான்  இந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை போல“., என்று சொன்னாள்.

        “வந்தா கழுத்தைப் பிடிச்சு நெறிச்சிருவேன்என்று ஹேமா பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.

       அங்கு வந்த பிறகு நாட்கள் வேகமாக ஓடியது போல இருந்தது.,

        திருமணத்திற்கு முதல் நாள் மாலை அவர்கள் முறைப்படி பெண் வீட்டின் கல்யாணமாக மண்டபத்திற்கு செல்ல அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர்., 

           சந்திரசேகரும் மாப்பிள்ளை வீட்டுக்கு விட்டுக்கொடுக்காமல் பெரிய மண்டபம் ஆகவே பிடித்திருந்தார்.,  முழுக்க முழுக்க .சி செய்த பெரிய மஹால்  அமைந்திருந்தது.

        ஆறு மணிக்கெல்லாம் மாப்பிள்ளை அழைப்பு இருக்கும் என்பதால் சீக்கிரம் கிளம்புங்கள் என்று அவசரப்படுத்தி கொண்டிருந்தார்.

        இவள் ஒரு சாதாரண சுடிதாரில் கிளம்பியிருக்க., ஹேமாவின் அம்மாவிடம் சென்றவர்என்ன ஆச்சு அவ  டிரஸ் மாத்தலையா“., என்று கேட்டார்.

         “இல்ல பார்லர் பொண்ணுங்க மண்டபத்துக்கு வராங்க., அங்க வச்சி அவளுக்கு டிரஸ் சேஞ்ச் பண்ணனும்.,  மேக்கப் எல்லாம் முடிச்சுட்டு, அதனால  அங்க வச்சு மாத்திக்கலாம்“., என்று சொன்னார்.

      சரி என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதன் பிறகு வேக வேகமாக சென்று மண்டபத்தில் மாப்பிள்ளை அழைப்பில் தான் நின்றது நேரம்.

              மாப்பிள்ளை அழைப்பு வெகுவிமர்சையாக வெளியே நடந்து கொண்டிருக்க., உள்ளே ஹேமாவை நிச்சயதார்த்தத்திற்கு தயார் படுத்திக் கொண்டிருந்தனர்., அழகு நிலைய பெண்கள்.,

        பாட்டி மட்டும் அவளோடு இருக்க.,  தோழிகள் மாப்பிள்ளை அழைப்பு பார்க்க வெளியே சென்றுவிட்டனர்.

        மாப்பிள்ளை அழைப்பு முடிந்து., மேடையில் இரு வீட்டினரும் இருக்க நிச்சயதார்த்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அனைத்தையும் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த ஹேமாவின் பெற்றோர்கள் ஹேமரெடி யார் என பார்க்க சொல்லி குழலியிடம் சொல்ல அறைக்கு வந்த சூழலி ஒரு நிமிடம் அசந்து தான் போய் விட்டாள்.

        அழகு நிலைய பெண்களின் கைவண்ணத்தில் ஹேமாவை அத்தனை நிறைவாக அழகுபடுத்தி இருந்தனர்.

         ஏற்கனவே அவள் அழகில் தான் ஒருவன் மயங்கி கிடக்கிறான்., சிரிக்கும் போது சேர்ந்து சிரிக்கும் அவளுடைய கண்கள் இப்பொழுதெல்லாம் சிரிக்க மறந்து இருந்தது.,

        ஆனாலும் இன்றைய மேக்கப்பே அவளுக்கு வெட்கம் வந்ததோ., என்னவோ கண்களில் மீண்டும் நீண்ட நாளுக்கு பிறகு சிரிப்பு எட்டிப்பார்த்தது.

அவளுடைய கோதுமை நிறத்தை சந்தன நிறமாக மாற்றியிருந்தனர்.

        தோழிகள் இருவரும் அவளுடைய அழகை பற்றி பேசி., அவளை கண்ணம் சிவக்க வைத்துக் கொண்டிருக்கும் போதே.,  பெற்றோர்களும் உடன் பிறந்தவனும் வந்து பார்த்துவிட்டு மகிழ்வோடு அவளோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

        வினோத் அவளை தன் தோளோடு சேர்த்து ஒரு செல்பி எடுத்துக் கொண்டுஅவளிடம்நீ எப்போதும் இதே சந்தோஷத்தோடு இருக்கணும்.,அதுதான் எங்களுக்கு வேணும்.,  உனக்கு நாங்க நல்லது தான் செஞ்சிருக்கோம் ன்னு., நீயும் ஒருநாள் புரிஞ்சிப்ப“., என்று சொல்லி ஒரு அண்ணனாக அறிவுரை செய்தாலும்.,

             பெற்றவர்களுக்கும் உடன் பிறந்தவனுக்கும் இன்று நம் வீட்டுப் பெண் இன்னொரு வீட்டுப் பெண்ணாக மாற போகிறாள் என்ற கலக்கம் இருக்கத்தான் செய்தது.,

      தன் குடும்பத்தினரின் சந்தோஷத்தை குறைக்க விரும்பாமல் அவளும் சிரிக்க முயன்ற படி தயாராக இருந்தாள்.

      நிச்சயதார்த்த வேலைகள் நடந்து கொண்டிருக்க.,  அவளை அழைத்து வரும்படி சொன்ன பிறகு அவளை அழைத்துச் சென்று அங்கு அனைவருக்கும் மத்தியில் அமர வைத்தனர்.

       அவளை அன்று தான் நேரில் அவர்கள் குடும்பத்தினர் பார்ப்பதால் அத்தனை பேருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி.,  அது மட்டுமல்லாமல் சொந்தபந்தம் என அனைவரும் அதுவரை கிசுகிசு பேசிக் கொண்டிருக்க., அனைவரின் வாயும் அவளின் வருகைக்கு பிறகு அடைக்கப்பட்டது.

        பானுவின் கணவனோஏன் உன் தம்பிக்கு இதைவிட நல்ல பொண்ணா கிடைச்சுடும் னா., நினைச்சிட்டு இருக்கீங்க, நம்ம சொந்தத்தில்  பாக்குற பொண்ணு விட., இந்த பொண்ணு நல்லா தான் இருக்கு.., பேசாம இரு உங்க அம்மாவுக்கு தூண்டி விட்டுட்டு இருக்காதா“., என்று சொல்லி பானுவை அடக்கிக் கொண்டிருந்தார்.

        அவளுக்கோ சற்று பொறாமையை தூண்டும் விதமாக மற்றவர்கள் அவளைப் பாராட்டுவது கடுப்பாக இருந்தது.

      ஒருவழியாக நிச்சயதார்த்தம் முடிந்து., தாம்பூலம் மாற்றி., அவனது தேர்வில் அவன் எடுத்திருந்த புடவையை மறுபடி அணிந்து வந்து., சபையில் அனைவரின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டாள்.

       மாலையைக் கொடுத்து இருவரும் மாலை மாற்றிக் கொள்ள சொல்லும் போது., ஏதோ அவளிடம் ஒரு நடுக்கம் ஓடி மறைந்ததை அவளே உணர்ந்தாள்., வேறு வழியின்றி அவன் முகம் பார்க்காமல் மாலையை போட்டுவிட்டு தலை நிமிராமல் இருந்துகொண்டாள்.

        அவள் கழுத்தில் மாலை அணிவித்தன்., அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக.,  அவளிடம் புடிச்சிருக்கா என்று  கேட்டான்.

          நிமிர்ந்து கூட பார்க்காமல் குனிந்து இருந்தவளுக்குஎப்ப வந்து எதை கேட்க்குது பாரு லூசு., அப்படியே பிடிக்கலை ன்னு சொன்னா விட்டுட்டா போகப் போறாங்க“., என்று நினைத்துக்கொண்டாள்.

             பிறகு தனியாக பேசிக் கொள்ளும் சந்தர்ப்பம் அவனுக்கு வாய்க்கவில்லை.,  நண்பர்களும் உறவினர்களும் புடைசூழ நிச்சயதார்த்தம் முடிந்து., உணவருந்தி விட்டு அறைக்கு சென்ற பிறகும் அவளிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும்.,  அவனால் பேச முடியவில்லை.

           யாருக்கும் காத்திராமல் நேரம் வேகமாக ஓடிக் கொண்டிருக்க., காலை நேரம் அழகாக விடிந்தது., திருமண வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்க.,

      அக்கினி குண்டத்தின் முன் வேஷ்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்தான் பிரசாத்., அதன் பிறகு ஐயர் சொல்லும் மந்திரங்களை கவனமாக கேட்டு சொல்லிக் கொண்டிருந்தாலும்., அவன் கண் என்னவோ ஹேமாவின் அறையை தொட்டு தொட்டு மீண்டு வந்தது.,

      அவன் அவசரம் புரிந்தோ என்னவோ ஐயரும் அவளை அழைத்து வர சொல்ல.,  அவன் தேர்ந்தெடுத்து இருந்த பட்டில் தேவதையாக வந்து அவனருகில் அமர்ந்தவளை ஒரு நிமிடம் கண் இமைக்க மறந்து பார்த்துவிட்டு..,  பின்பு ஐயர் சொல்வதில் கவனம் வைத்து சொல்லத் தொடங்கினான்.

            முதல் வரிசையில் அமர்ந்திருந்த சொர்ணத்திடம் சொந்தக்கார பெண்சும்மா சொல்லக்கூடாது பொண்ணு அருமையா பாத்திருக்கீங்க“.,  என்று சொல்லவும் மனதிற்குள் ஒரு புறம்அப்போ சரி தானோஎன்று தோன்றியது.

       பானு அம்மாவின் கையை சுரண்டிஅடுத்தவங்க சொல்றதெல்லாம் யோசிக்காதீங்க  நமக்குன்னு ஒரு தகுதி இருக்கு.,  நம்ம அதை தான் யோசிக்கனும்., நம்ம தகுதிய மட்டும் பாருங்க“., என்று தாயிடம் சொன்னாள்.

        மகளிடம் தலையாட்டிக் கொண்டவருக்கு.,  சொந்தத்தின் முன் எதுவும் வாய்திறக்க முடியாத சூழ்நிலை.

              அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கப்பட்ட திருமாங்கல்யம் பிரசாத்தின் கைக்கு வந்து சேர ஐயர் மந்திரம் சொல்லி தாலியை எடுத்து கையில் கொடுத்தார்.,

        பிரசாத் அவள் கழுத்தின் அருகே கொண்டு சென்றதும் கட்டாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

       கண் முன்னே திருமாங்கல்யத்தோடு அவன் கையை கண்டவள்.,  என்ன ஆச்சு என்று யோசனையோடு  நிமிர்ந்து அவனைப் பார்க்க., அவன் அவள் கண்ணையே பார்த்தபடி இருந்தான்.

        அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சுற்றி முற்றி மெதுவாக கண்ணை சுற்றி அனைவரையும் பார்த்து விட்டு., அவனை கேள்வியாக பார்த்தாள்.

       அவன் உதட்டில் புன்னகையோடு அவள் கழுத்தில் திருமாங்கல்யத்தை  அணிவிக்கும் போது.,  இருவர் கண்களும் ஒன்றை ஒன்று பார்த்தபடியே இருந்தது.,

            அதன் பிறகு மற்ற சடங்குகள் வேகவேகமாக நடைபெற., அவள் கைப்பற்றி அக்னி வலம் வந்தவன்., அவள் கையை தன் கைகளுக்குள் அழுத்தமாக அடக்கிக் கொண்டான்.

        ஏனோ திருமண மேடை வரை வரும் போது கூட.,  பதட்டம் ஹேமாவின் மனதில் இருந்துகொண்டே இருந்தது., ஆனால் தாலி கட்டும் முன் அனுமதி கேட்கும் விதமாக அவன் கண்ணை பார்த்தது  பார்த்த படி இருக்க.,  தன் கண்களால் அவனிடம் என்ன என்று கேட்டு., அவனும் எதுவும் பேசாதிருக்க..,

         தன்னையறியாமல் உதடுகள் சிறு புன்னகையுடன்  பிரிந்த பிறகு தான்., மாங்கல்யத்தை அவள் கழுத்தில் கட்டினான்.,

அவளுக்கு என்ன நினைப்பதென்றே தெரியவில்லை., நிச்சயமாக இவன் தன்னை காயப்படுத்த மாட்டான்.,  என்ற எண்ணம் மனதில் ஓரத்தில் துளிர்விடத் தொடங்கியிருந்தது., அந்த எண்ணத்தோடு தான் அவன் கைக்குள் தன் கை அடங்கியிருப்பதை பார்த்தபடி அவனை பின்பற்றி அக்னி வலம் வந்து கொண்டிருந்தாள்.

     விதி வலியது., விதியின் வழியில் தான் நம்  மதி மட்டுமல்ல.., நம் கால்களும் அடி எடுத்து வைக்கிறது.

          அக்னி சாட்சியோடு
        மணவாழ்க்கை என்னும்
         கடலில் அடி எடுத்து
        வைக்கிறேன்.

       எத்தனை அலைகள்
       வந்து நம்மை
      குழைத்து போட நினைத்தாலும்
        நம்ம அன்பு என்னும்
        தோணிக்கொண்டு
        வாழ்க்கை கடலை
         கடந்து விடலாம்.,

           நம் மனம்
          ஒற்றுமையாய்
          நிற்கும்போது.,

          வேறுப்பட்டால்
           நீயும்., நானும்????

 

Advertisement