Advertisement

7

உன் வாழ்வில் உண்மையும் அன்பும் நிறைந்திருந்தால், எப்போதும் உன் வாழ்வு மகிழ்ச்சியாகவே இருக்கும்.
   – புத்தர்

        கல்யாண வீட்டிற்கான கலை இருவர் வீட்டிலும் வந்திருந்தது.,  வீட்டில் உறவினர்களும் நண்பர்களும்  வருவதும் போவதுமாக இருக்க வீடு கல்யாணத்திற்கு உரிய கலையோடு ஜேஜே என்றிருந்தது.
   
         ஹேமாவின் வீட்டில் ஹேமாவின் அம்மா ஹாலில் அமர்ந்து இருக்கும் போது., “ஏங்க இந்தப் பிள்ளை எப்ப வருவான்னு தெரியலையேஎன்று கேட்டார்.

        பாட்டி தான்வருவா., வராமல்  எங்க போக போறா.,  குழலி கூட்டிட்டு வருவா., அவளுக்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும்., இப்ப எனக்கும் தான் கஷ்டமா இருந்துச்சு., நம்மள விட வசதியான இடத்தில் கொடுக்குறோம் ங்கிறதே கொஞ்சம் பயம் தானே., நீங்க ஈஸியா சொல்லுவீங்க., இப்ப எல்லாம் சரியா போயிடும், இப்ப யாரும் அப்படி எல்லாம் ரொம்ப பாக்குறது கிடையாது ன்னு.,  நாளைக்கு நம்ம புள்ளைக்கு ஏதோ ஒரு சின்ன பிரச்சனை ஆனாலும்.,  அப்ப கஷ்டப்பட்ட போறது நம்ம பிள்ளை தானே..,  நம்ம பிள்ள கஷ்டப்பட்ட நாம மட்டும் சந்தோஷமாக இருக்கவா முடியும்“., என்று சொன்னார்.

         ஹேமாவின் அப்பாவோஅம்மா நீங்க பேசாம இருங்க., அதெல்லாம் ஒன்னும் இல்ல., நல்லா இருப்பாநீங்க வேணா பாருங்க அவங்க வீட்ல எப்படி பார்த்துக்கறாங்க ன்னு“.,  என்று அவர் சொன்னார்.

           “நான் என்னத்த  பார்த்தேன்., நல்லா இருந்தா சரி தான்“., என்றார் பாட்டி .

         ஹேமாவின் அண்ணன் வினோத்பாட்டி அன்னைக்கு மாப்பிள்ளை பார்த்து பார்த்து சாரி எடுத்தாரு., நாம செலக்ட் பண்ணி இருந்தா கூட இந்தளவு தேடி எடுத்திருப்போமா ன்னு தெரியல.,  நிச்சயதார்த்த சாரி ஒரு வகையான பட்டுனா.,  கல்யாணத்திற்கு வேறுவகை.,  மறுவீட்டுக்கு  வேறு.,  ரிசப்ஷன் எடுத்தது வேறு., ஒன்னு ஒன்னும் பார்த்து பார்த்து அவ்வளவு அழகா செலக்ட் பண்ணி இருக்காரு..,

        அவங்க அண்ணி கூட அவங்க அண்ணன் ட்ட  சொல்லுறாங்க.,  என்னைக்காவது நீங்க எனக்கு இந்த மாதிரி ஒரு தடவையாவது சேலை செலக்ட் பண்ணி இருக்கீங்களா ன்னு கேக்குறாங்க.,

          ஏன் இந்த நம்ம வீட்டுக்கு வர போற மாமா மகளே.,  அதை தான் கேட்குறா.,  உங்களுக்கு இந்த மாதிரி சேலை செலக்ட் பண்ண தெரியுமா ன்னு கேட்குறா.,  நம்ம வீட்டு பிள்ளை தான் புரிஞ்சு நடந்துக்கணும் ன்னு பயந்துகிட்டு இருக்கேன்., எனக்கு தெரிந்து மாப்பிள நல்லா தான் பாத்துப்பாரு., இவ வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்கணும்., எதற்கெடுத்தாலும் சட்டுன்னு பேசிட்டு.,  பிரச்சினை வரக்கூடாது“., என்று சொல்லிக்கொண்டு இருந்தான்.

       பாட்டியோஅதெல்லாம் இல்ல ஹேமா அடக்க ஒடுக்கமா எல்லாத்துக்கும் விட்டுக்கொடுத்து போற மாதிரி தான் இருப்பா.,  என்ன வசதி நம்மள விட கூட வேண்டாம் தானே சொன்னா.., இப்படி பாரு, அப்படி பாருனா கண்டிஷன் போட்டா“., என்றவர்., “சரி சரி எல்லாம் நல்லபடியாக நடந்தால் சரிதான்., போய் வேலையை பாருங்க“., என்று சொல்லிவிட்டு அவர் அறைக்கு சென்றுவிட்டார்.

            பிரசாத்தின் வீட்டிலும் நண்பர்கள் வருகை.,உறவினர் வருகை., கட்சி ஆட்கள் என்று ஒவ்வொரு விதமாக வந்து போய் கொண்டிருந்தாலும்., வேலைகள் நல்லபடியாக நடந்து கொண்டிருந்தது.,

    சேலையை எடுத்து  வந்த அன்றே தயாளன் சொர்ணாவை தனியை அழைத்து சொல்லியிருந்தார்.,

          “உன் மகன் முழுமனதோடு தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியருக்கிறான்., நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டு எதையும் போட்டு குழப்பிக்காத புரிஞ்சதா.,  சேலை எடுக்கும் போது கவனிச்சியா“., என்று சொன்னார்.

           பிரசாத் ஹேமாவிற்கு  சேலை தேர்ந்தெடுத்ததே  இருவர் வீட்டிலும் பேச்சாக இருந்தது., சொர்ணமும் வேறு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

      தயாளன் அந்தப்பக்கம் நகரவும்.,  அருகில் வந்து அமர்ந்த அவர்களின் செல்வ புதல்வி பானுஏன்மா உனக்கே இது நியாயமா.,  தம்பிய கேட்கவே மாட்டீங்களா., பொண்ணு அழகா இருந்தா இப்படியா மயங்கி இருப்பான்“.,  நேரம் பார்த்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி செய்தாள்.,

         மீண்டும் தன்னை குழப்பிக் கொண்டு இருந்த சொர்ணத்திற்கு தயாளன் சொன்னது மனதை ஏதோ  சமப்படுத்த நினைத்தாலும்.,  பானுவின் பேச்சைக் கேட்ட பிறகு சுத்தமாக மனம் குழம்பி விட்டது.

      சென்னையில் குழலி தன் பேச்சை தொடங்கியிருந்தாள்., “நீ எங்க கூட ஊருக்கு வரியா“., என்று யாரிடமோ கேட்பது போல கேட்டாள்.

        லேப்டாப்பில் கவனத்தை வைத்து வேலை செய்வது போல் அமர்ந்திருந்த ஹேமாவிற்கு இவர்கள் ஊருக்கு கிளம்புவதற்கு தான் பேசுகிறார்கள் என்ற எண்ணம் இருந்தாலும் எதுவும் பேச மனசு வரவில்லை.,

           எப்படி இருந்தாலும் போகத்தான் வேண்டும்.,  ‘போகாமல் இருந்தால் தன் குடும்ப மரியாதை என்னாவது.,  இத்தனை வருடங்கள் கட்டிக் காப்பாற்றிய கௌரவம் போய்., பிள்ளைகளை நல்லா வளர்த்திருக்கிறார்கள் என்றபெயர் போய் விடுமே‘., என்ற எண்ணமும் இருந்தது.,

               “ஹேமா தேவையானதெல்லாம் எடுத்து வச்சுக்கோ.,  மீதி இங்கே இருக்கட்டும்.,  லீவு முடியும் அப்ப பாத்துக்கலாம்., நம்ம இன்னைக்கு நைட்டு கெளம்புனா கரெக்டா இருக்கும்.,  நாளைக்கு காலைல அங்க போய் சேர்ந்தா சரியா இருக்கும்.,

        இங்க தான் இருப்பேன்.,  எதுவும் வர மாட்டேன் ன்னு அடம் பண்ணலாம் ன்னு நினைக்காதே., கையை காலை கட்டியாவது தூக்கிட்டு போவோம்“., என்றவள்.,   “இன்னைக்கு நைட்டு கெளம்புற.,  உன்னோட முக்கியமான திங்ஸ் மட்டும் எடுத்து வச்சுக்கோஎன்று சொன்னாள்.

      அமைதியாக இருந்து வேலை பார்த்து கொண்டிருந்தவளிடம்.,  “என்னடி பதிலே இல்ல., பதில் சொல்றியா இல்லையா“.,   என்று சொன்னாள்.,

      “வந்து தொலையுறேன்“.,  என்றாள் ஒற்றை வார்த்தையாக.,

          அதன்பிறகு அவர்களுக்கான வேலைகள் வேக வேகமாக ஓட.,  கிளம்பும் நேரத்திற்கு சரியாக கிளம்பியிருந்தனர்.,

        இவர்கள் மூவருமே லீவில் கிளம்பி செல்ல அலுவலகத்தில் என்ன என்று கேட்டனர்.

         திருமணம் என்ற விஷயம் அலுவலகத்தில் சொல்லப்படவே இல்லை.,  “ஊரில் திருவிழாவிற்கு செல்ல வேண்டியது இருப்பதால் செல்கிறோம்என்று மட்டுமே சொல்லி இருந்தனர்.,

         அதனால்  யாரும் தோண்டித்  துருவவில்லை.,  ரயிலில் ஏறி அமர்ந்த பிறகு தோழிகளின் அருகே அமர்ந்திருந்த இருந்தவளிடம் மெதுவாக குழலி தன் பேச்சைத் தொடங்கினாள்.,

         “உனக்கு அதிக வசதி., அரசியல்.,  இரண்டையும் தவிர அந்த அண்ணனிடம் ஏதாவது குறை கண்டாயா., அவரை  சாதாரணமாக  மனிதனாக பார்த்தால் உனக்கு மதிக்க கூடியவராகவும்.,  மனதிற்கு பிடிக்கக் கூடியவராகவும்., தெரியவில்லையா“., என்று சொல்லும் போது அமைதியாக இருந்தாள்.

             அவள் அமைதியே சம்மதத்தை தெரிவிக்க., மீண்டும் அவளை தேற்றும் விதமாக நிதானமாக எடுத்துக்கூற தொடங்கியிருந்தாள் குழலி.,

            “இங்க பாரு நீ  உன்னை மட்டும் யோசிக்காமல் சுற்றி இருக்குறவங்களையும் யோசி.,  இப்ப நீ எனக்கு சொல்ல வேண்டாம்.,  இதுதான் வாழ்க்கை அப்படின்னு வீட்ல முடிவு பண்ணிட்டாங்க.,  யார் எவர் என்றே தெரியாத ஒருத்தர் தான் கல்யாணம் பண்ணிக்க போற..,  எப்படினாலும் அந்த கல்யாணம் பண்ண போறவர் இவரா இருக்கட்டுமே.,  நல்லா யோசிச்சு பாரு..,

     அவரைப் பார்த்த  உனக்கு ஏத்த ஜோடியாதான் இருக்கு., எனக்கு தெரிஞ்சு நல்ல மேட்சாக தான் இருக்கும்., நீ வேணா பாரேன் கல்யாணத்தப்ப எத்தனை பேரு உங்க ஜோடிப் பொருத்தத்தை பாராட்ட போறாங்கன்னு“.,  என்று கூறி பேசிக்கொண்டிருந்தாள்.

          ஹேமாவும் மனதிற்குள்மனப்பொருத்தம் வேண்டாமா., வெறும் ஆள் பொருத்தம் பார்த்தால் போதுமா‘., என்று எண்ணிக்கொண்டவள் மீண்டும் வேறு எதுவும் தோன்றாமல் பேசாமல் அமர்ந்துகொண்டாள்.,

       அவர்களது பயணம் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் ஏதாவது பேச இருந்த சூழலில் வேறு எதுவும் பேசத் தோன்றாமல் இருந்தாள்., ஆனால் குழலியும் ரதியும் தங்களது தோழிக்கு  சில பல அறிவுரைகளை மட்டுமே சொல்லிக் கொண்டே இருந்தனர்.

       வீட்டிற்கு வந்த பிறகு உறவினர்களின் பேச்சும் கிண்டலும் ஒருபுறம் இருந்தாலும் மனதை ஒருநிலைப்படுத்த ஹேமா மிகவும் கஷ்டப்பட்டால்.,  ஏனெனில் ஆளாளுக்கு பேசியதெல்லாம் பிரசாத்தை பற்றியும் வரும் எலக்சன் பற்றியும் என அரசியல் சார்ந்து இருந்ததால்.,  அவளால் பதில் பேச முடியவில்லை.

       முக்கால்வாசி நேரம் குழலியோடு இருப்பது போல பார்த்துக்கொண்டாள்.

       அதன்பின்பு பார்லரிலிருந்து ஆட்கள் வீட்டிற்கே வந்து அவளுக்கு பேசியல்., திரட்டிங் என சில வகை வேலைகளை செய்து விட்டு சென்றார்கள்.,  இரண்டு நாள் முன்னதாக வந்து கையில் மெஹந்தி வைத்து அவளை மேலும் அழகு படுத்தி விட்டு  சென்றனர்.

        அவளுக்கு கல்யாணக் களை வந்துவிட்டது என வீட்டில் உள்ளவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.,

       அவளோ  ‘இஷ்டமே இல்லாம கல்யாணம் பண்ற எனக்கு கல்யாணம் கலையாஎன்று நினைத்துக் கொண்டவளுக்கு கண்ணாடி முன் நிற்கும் போது தான் தோன்றியது.,

     முழங்கை வரை வைத்திருந்த மெஹந்தியும் பார்லரில் இருந்து வந்தவர்கள் செய்து விட்டுப் போன பேஷியல் திரட்டிங் ம்  அவள் முகத்தை இன்னும் சற்று  அழகாக காட்டியது.,

           இவள் வந்தது தெரிந்தும் பிரசாத் இந்த பக்கம் வரவில்லை.,  அவனுக்கு தெரியும் வந்தால் இவள் இப்பொழுது இருக்கும் கோபத்தில் என்ன வேண்டும்னாலும் செய்வாள் என்று.,

      நண்பர்களே பிரசாத்திடம்  “பொண்ணு வந்து ரெண்டு நாள் ஆகுது.,  நீ போய் பார்க்கலையாஎன்று கேட்டனர்.

          அவனும்ஏன்டா உங்களுக்கு இப்படி ஒரு நல்ல எண்ணம்., நான் இப்போ போனா கண்டிப்பா ஒன்னு அடி விழும்., இல்ல கழுத்த பிடிச்சி நெறிக்க போறா.,  கண்டிப்பாக கோவத்துல இருக்கான்னு தெரிஞ்சே  ஏன்டா வம்புல மாட்டி விடுறீங்க“., என்று கேட்டான்.

           நண்பர்களோஇல்ல போயிட்டு இப்பவே அடி வாங்கிட்டு வந்துட்டா  நல்லது தானே..,  நிச்சயதார்த்தம் அப்ப ஏதும் பிரச்சனை வந்துறக்கூடாது அதுக்கு தான் சொல்றோம்என்றனர்.

             “கல்யாணத்துக்கு முதல் நிச்சயதார்த்தம்., அப்புறம் மறுநாள் காலையில கல்யாணம்., உங்க வீட்டுக்கு வந்துட்டு., அப்புறம் அவங்க வீட்டுக்கு போய்ட்டு., இரண்டு நாள்ல உங்க வீட்டு சைடு ரிசப்ஷன் ன்னு நிறைய வேலை இருக்கு இல்ல., இதுல எந்த இடத்திலும் பிரச்சனை வரக்கூடாது இல்ல“., என்று மற்றொரு நண்பன் சொன்னான்..,

           அவனும்வேண்டாண்டா வம்பே வேண்டாம்., நான் அவள பாத்துக்குறேன்.,  அன்னைக்கி எதுவும் அவங்க அப்பா அம்மா மீறி பண்ணமாட்டா., அந்த தைரியம் தான்“., என்று சொன்னான்.

        பிறகு நண்பர்கள் சிரித்துக்கொண்டேஆனால் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம்  அவங்க அப்பா அம்மா பேச்சு கேக்க மாட்டாங்க இல்ல., உன்ன வச்சு செய்யப்போறாங்க பாரு“., என்றனர்.

         “அதெல்லாம் நான் ஹேன்டில் பண்ணிடுவேன் டா.,  அவ என்ன வச்சு செய்யாம நான் பார்த்துக்கிறேன்“., என்று கண்சிமிட்டி சிரித்துக் கொண்டே செல்லவும்.,

           நண்பர்கள்எப்படியோ அவன் வாழ்க்கை சரியாக அமைந்தால் அதுவே போதும்என்று நினைத்துக் கொண்டனர்.

          குழலி அவளோடு அமர்ந்து பேசிக் கொண்டிருக்க..,  அவளது அறைக்கு வந்தார் பாட்டி.,

        

Advertisement