Advertisement

பின்ன என்னடி பேசுற., அறிவுகெட்ட தனமா என்ன கேக்குற.,  கல்யாணம் தான் பேசிட்டு இருக்கோம் ன்னு தெரியும் இல்ல.., பேச்சுவார்த்தை போய்ட்டு இருக்குன்னு தெரியும் தானே..,

      அதை பற்றியே பேசினா., உனக்கு ஒரு மாதிரி இருக்குமே ன்னு., உனக்காக தான் அதை பத்தி பேசாம இருந்தோம்.,  உடனே அப்படியே விட்டுட்டாதா உன் நினைப்பா..,  எல்லாம் நல்லபடியா போய்கிட்டு இருக்கு.., கல்யாணத்துக்கு தேதி பிக்ஸ் பண்ணியாச்சு., இத்தனாம் தேதி கல்யாணம்“., என்று சொல்லி தேதியை சொன்னார்.

            அவளுக்கு நெஞ்சை அடைப்பது போலவே இருந்தது., இன்னும் 15 நாட்களில் திருமணம் என்னும் நிலையில் அம்மா இப்போது சொல்லஎன்னம்மா நினைச்சிட்டு இருக்கீங்க., இப்ப வந்து சொல்றீங்க“.,  என்று சொன்னாள்.

        “என்னடி இப்ப வந்த சொல்றோம் ங்க.,  அந்த பையன் உன்ன வந்து பார்த்து பேச வந்தாரு தானே., கேட்காமல் ஏதாவது பண்ணினோமா, இல்ல இல்ல., உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு தானே பண்றோம்“., என்று சொன்னார்.

        “ஆமாமா சொன்னீங்க.,  ஆனா அது இன்ஃபர்மேஷன் தான்., என்கிட்ட வந்து நீங்க யாரும் பெர்மிஷன் கேட்கல., சரியா ஜஸ்ட்  இன்ஃபர்மேஷனா., இது இது பண்றோம்., உனக்கு இப்படி மாப்பிள்ளை பார்த்து இருக்கோம்., அப்படி தானே சொன்னீங்க.,  உனக்கு பிடிச்சிருக்கா பிடிக்கலையா அப்படின்னு ஏதாவது கேட்டீங்களா., நான் பிடிக்கலைன்னு சொன்னதுக்கு யாராவது மரியாதை கொடுத்தீங்களா“., என்று கேட்டாள்.

       “இங்க பாரு., உனக்காக பார்த்து பார்த்து தான் எல்லா ஏற்பாடும் பண்ணுறோம்., அத பத்தி எல்லாம் பேசாத.,  எல்லாம் பேசி முடிச்சாச்சு“., என்றார்.

         “எங்கம்மா பேசினீங்க., வீட்டுக்கு வந்தாங்களா.,  வந்து இருக்க மாட்டாங்களே“., என்று கேட்டாள்.

        “யார்டி சொன்னா வரலைன்னு.,  அதெல்லாம் வந்தாங்க வந்தாங்க., என்ன உன் மாமியாருக்கு மட்டும் கொஞ்சம் இஷ்டம் இல்ல போல., அவங்க மட்டும் பட்டும் படாமலும் இருந்துட்டு போனாங்க.,  மத்தபடி வீட்டில் உள்ள எல்லாரும் தங்கமான குணமா இருக்காங்க“., என்று சொன்னார்.

        “ஏம்மா உங்களுக்கு இப்படி சொல்லும் போது ஒண்ணுமே தோணலியா ம்மா.., எங்கேயோ  புடிச்சு தள்ளி விட்டா போதும் ன்னு., நினைத்து தள்ளிவிட போறீங்களா“., என்று கோபமாக கேட்டாள்.

        “உனக்கு தாண்டி லூசு பிடித்து இருக்கு., நாங்க இங்க எல்லாம் நிதானமா டே பை டே பார்த்து பார்த்துதான் எல்லாம் செஞ்சுகிட்டு இருக்கோம்., நீ அங்க எதுவுமே தெரியாம அமைதியா உக்காந்துட்டு.,  எங்களை கேள்வி கேட்காத.,  எந்த மாமியார் தான் நல்ல மாமியாரா இருப்பா..,  எல்லா மாமியாரும் கெட்ட மாமியார் தான்., மனசுக்குள்ள சின்ன பொறாமை வஞ்சம் எல்லாம் இருக்கத்தான் செய்யும்.., எவ்வளவுதான் நல்ல மருமகளா இருந்தாலும் பிடிக்காமல் தான் இருக்கும்.,  அதுக்காக  மாமியார் இருக்க வீட்டுக்கே போக மாட்டேன்னு சொல்ற மாதிரி இருக்கு., நீ பேசுறது.,  ஒரு மாசத்துக்கு லீவ் போடு அப்புறம் பார்த்துக்கலாம்“., என்று சொன்னார்.

        “ம்மா என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா“., என்று மீண்டும் சத்தமாக பேச தொடங்கவும்.

         “அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்., நீ வேலையை பாரு., சரி எத்தனை பத்திரிக்கை வேணும் ன்னு மட்டும் சொல்லு“., என்றார்.

      “ஒரு பத்திரிக்கையும் எனக்கு வேண்டாம்., நானே வரமாட்டேன்னு சொல்லுறேன்.,  கல்யாண பத்திரிகை தான் இப்ப கொறச்சல்“.,  என்று கோபமாக கத்தி விட்டு போனை வைத்து விட்டாள்.

          அதன் பிறகு சற்று நேரத்தில் குழலி எண்ணுக்கு அழைத்து பேசினார்.,

        குழலியும்நான் பாத்துக்குறேன் மா.,  ஆனால் கல்யாண பத்திரிக்கை அவ பெர்மிஷன்  இல்லாம ஆபீஸ்ல நாங்க யாருக்கும் கொடுக்க முடியாது.,  அது நல்லா இருக்காது வேண்டாமா.,  அதுமட்டுமில்லாம அந்த அண்ணன் ரெண்டு நாளைக்கு முன்னாடி ஏதோ பத்திரிகையில் பேட்டி கொடுத்தாங்க போல., எங்க ஆபீஸ்ல தான் பேசிட்டு இருந்தாங்க.,  ஏதோ என் வைஃப் பத்தின டீடெயில்ஸ் வெளியே தெரிய வேண்டாம்.,  அப்படிங்கற மாதிரி சொல்லி இருக்காங்க“.,  என்று சொன்னாள்.

      பதிலுக்கு அங்கிருந்து ஹேமாவின் அம்மா வும்  “ஆமா இந்த பொண்ணு புரிஞ்சிக்கிறாளா பாரு., அந்த பையன் இவ ஃப்ரீயா இருக்கட்டும்.,  அவளுக்கு எந்த விதத்திலும் டிஸ்டர்பன்ஸ் வரக்கூடாது நெனைக்கிறாரு..,

          ஆனா இவ பேசறத பாரு.,  என்ன பேச்சு பேசுற“., என்று சொன்னார்.,

        “சரி மா விடுங்க., பார்த்துக்கலாம்., நான் அவளிடம் கையெழுத்து வாங்கி ஒரு மாசம் லீவு  அப்ளை பண்ண வைக்கிறேன்.,  நானும் ரதியும் மட்டும் தான் வருவோம் மா.,

      ” நான் எப்படி அவள கரக்டா ஒன் வீக் முன்னாடி கூட்டிட்டு வந்துட்டுவோம்என்று சொன்னாள்.

      “ஒன் வீக் முன்னாடி ன்னு கூட இல்லை., ஐந்து நாள் முன்னாடி வந்தாலும் சரிதான்., அவளை அப்படியே தள்ளிட்டு வந்துருங்க.,  இங்க வந்து ஏதும் பிரச்சனை பண்ணி ., வம்பு பண்ணி சண்டை போட்டுட்டு இருக்கக்கூடாது..,

          அதனால நீங்க அங்கேயே பார்த்துக்கோங்க., அஞ்சு நாள் முன்னாடி இங்க வர்ற மாதிரி செட் பண்ணுங்க.,  அந்த நேரத்தில் தான் சொந்தக்காரங்க எல்லாம் வீட்டுக்கு வர ஆரம்பிப்பாங்க“.,   என்று சொன்னார்.

         “சரிமா நான் நேரம் பார்த்து பேசுறேன்.,  ஆனா அவட்ட இப்ப இத பத்தி பேசினா., கண்டிப்பா சண்டை போடுவா.,  கோபப்படுவா., அதனால இப்போதைக்கு நான் பேசலை., பார்த்துக்கிறேன் மா“.,  என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டாள்.

           மாலை அம்மாவிடம் இருந்து வந்த போனிற்கு பிறகு ஹேமாவிற்கு  கோபத்தில்  முகம் சிவந்து போய் அமர்ந்திருந்தாள்.,  இருந்த கோபத்திற்கு யாராவது வந்து பேச்சுக் கொடுத்தால் அவர்களிடம் கத்தி தீர்த்து இருப்பாள்.,

      அவள் கோபத்தை உணர்ந்த தோழிகள் இருவரும் விலகியே இருந்தனர்.,  சற்று நேரம் அமைதியாக இருந்தவள் பின்பு மன அழுத்தம் தாங்காமல் பாத்ரூமிற்கு சென்று கண்ணீர் விட்டு அழுது விட்டு வெளியே வந்தாள்., அதன் பிறகு மனசு சற்று லேசானது போல  உணர தொடங்கியிருந்தாள்.

       மனம் முழுவதும் பிரசாத்தை திட்டிக் கொண்டே இருந்தது., லூசு இடியட் மாடு என்று வாயில் வரும் வார்த்தைகள் அனைத்தையும் வைத்து அவனுக்கு அர்ச்சனை செய்து கொண்டு இருந்தாள்.,

        ‘எத்தனை தடவை சொன்னேன் வேண்டாம் ன்னு., நல்ல பிள்ளை மாதிரி சரி சரி னுட்டு.,  அப்புறம் போகும் போது புடிச்சிருக்குன்னு சொல்லுச்சு., ஒரு வாரம் எந்த பதிலும் இல்லை ன்னு.,  அப்பாடா ன்னு நிம்மதி மூச்சு விட்டேன்., நான் நிம்மதியா மூச்சு விட்டது கூட பிடிக்கலையா., உடனே எப்படி வந்துச்சு இன்னும் பதினைந்து நாள்ல கல்யாணம்.,  ஐயோ கடவுளே‘.,என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.

      தோழிகளின் கட்டாயத்தின் பேரில் ஏதோ உணவை கொறித்து விட்டு போய் படுக்கையில் விழவும் தோழிகளும் அவசரஅவசரமாக கிச்சனை கிளீன் செய்துவிட்டு வந்து அவளோடு படுத்துக்கொண்டனர்.,

அவளை எந்த வேலையும் செய்யவிடாமல்  இருவரும் மாற்றி மாற்றி செய்து கொண்டனர்., அவள் மனதை சமாதான நிலைக்கு கொண்டு வந்தாலும் அவளால் இந்த திருமணத்தை ஒத்துக்கொள்ள முடியவில்லை என்பது இருவருமே உணர்ந்தனர்.

      பின்பு அவளாகவே அம்மாவிடம் பேசிய அனைத்து விஷயங்களையும் சொல்லி விட்டுமாமியார்னா அப்படித்தான் இருப்பாங்க ன்னு., எவ்வளவு அசால்ட்டா சொல்றாங்க தெரியுமா., போய்க் கஷ்டப்பட போறது நான்தானே., இவங்களுக்கு என்ன“.,  என்று சொன்னாள்.ம்ஹீம் புலம்பினாள்.

            “ரதி தான் லூசு மாதிரி பேசாதடி., மாமியார் நல்லவங்களா இருந்து என்ன செய்ய., கட்டினவன் நல்லவனா இருந்தா போதாதா., மாமியார் நல்லவங்களா இருந்து., ஹஸ்பண்ட் மோசமா இருந்தா என்ன செய்ய முடியும்.,  அப்படி யோசிச்சு பாரு“., என்றாள்.

              எனக்கு இந்த தொல்லையே வேண்டாம் ன்னு தானே சொல்லுறேன்., நார்மல் பேமிலியா பார்த்து இருக்கலாம் இல்ல“., என்று சொன்னாள்.,

          “சரி அதை அப்புறம் யோசிக்கலாம்.,  இப்ப நீ ரொம்ப டென்ஷன் ஆகாம இரு..,  இப்ப நீ வேலை எல்லாம் விடப் போறதில்ல., ஒன் மன்த் ஜஸ்ட் லீவு தான் போட போற.,  அப்புறம் பார்த்துக்கலாம்மாமியார் எப்படி.,  குடும்பத்தில் உள்ளவங்க எப்படின்னு, தெரியும் அப்புறமா நீ வேலைய விடுறதா.,  வேண்டாமா ன்னு பேசலாம்.,  அவசரப்படாத என்ன.,  நல்லதே நடக்கும்“.,  என்று ப்ரண்ட்ஸ் சொன்னார்கள்.,

    வீட்டில் பெரியவர்கள் அதன் பிறகு தினமும் திருமணத்தைப் பற்றி பேச எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தாலும்., அதன் பிறகு தன் மனதை ஜென்  மன நிலைக்கு மாற்றிக் கொண்டாள்.,

         யாரிடமும் எதுவும் பேசுவதில்லை.,  எப்படி பேசினாலும் இவர்கள் செய்யப்போவதை தான் செய்ய போகிறார்கள்., என்று மனதை ஒருநிலைப்படுத்தி கொண்டாள்.

            அன்று அலுவலகத்தில் இருக்கும் போது அறியாத எண்ணிலிருந்து அழைப்பு வர.,  ‘நாம் தான் எல்லா நம்பரையும் ஸ்டோர் பண்ணி இருக்கோமே.,  இது யார் நம்பர் ராங் நம்பரா இருக்குமோஎன்று முதல்முறை எடுக்காமல் விட்டாள்.

           அடுத்து உடனே அதே எண்ணில் இருந்து மீண்டும் அழைப்பு வரயாருன்னு தெரியலையே., ஏதோ அவசரமோ., சரி அப்படியே னாளும் எடுத்து ராங் நம்பர் சொல்லிவிடலாம்‘., என்ற எண்ணத்தோடு அட்டன் செய்து காதில் வைத்துஹலோஎன்று சொன்னாள்.

      சற்று நேரம் அந்த பக்கம் எந்த சத்தமும் இல்லாமல் போகஹலோஎன்று மீண்டும் சத்தமாக அழைக்கவும்.,

        “எப்படி இருக்க“., என்று கேட்டான்.

        இப்போது  அமைதியாக இருப்பது இவள் முறை ஆயிற்று., ‘இந்த குரல் இதற்கு முன்பு கேட்டு இருக்கிறோமேஎன்ற எண்ணத்தோடுயாரு., யாரு வேணும் உங்களுக்கு“., என்று கேட்டாள்.

         “ஹேமா தானேஎன்று கேட்டான்.

       “ஆமாஎன்றாள்., அந்தப்புறம்

       “நான் உன் புருஷன் பேசுறேன்., இப்ப  ஒழுங்கா பேசு“., என்று சொன்னான்.

         சற்று நேரம் அமைதியாக இருக்க., “என்ன யாருன்னு தெரியுதா“., என்று அவன் மீண்டும் பேச்சை எடுத்தான்.,

      “என் போன் நம்பர் எப்படி கிடைத்ததுஎன்று இவள் வேகமாக கேட்டாள்.

         அவனோஉங்கப்பா உன்னையே எனக்கு தர்றாரு., இதுல போன் நம்பர் தரமாட்டேன்னா சொல்லப் போறாரு“., என்று சொன்னான்.

             இந்தபுறம் அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை., என்றவுடன்..,

           “என்ன ஆச்சு பதிலே இல்லை“., என்றான்.

      “ஒன்னும் இல்ல இப்போ எதுக்கு கூப்பிட்டீங்க“., என்றாள்.,

    அவனோஎன்ன ஆச்சு நான்  சொல்லிட்டுத்தானே வந்தேன்., எனக்கு புடிச்சிருக்க போய் தான் சொன்னேன். உன்ட்ட கூட கல்யாணத்தப்ப பார்ப்போம்ன்னு சொல்லிட்டுத்தானே வந்தேன்., அப்புறம் என்ன இவ்வளவு ஷாக்“., என்று சொன்னவன்

        “சரி உனக்கு என்ன கலர் பிடிக்கும் ன்னு சொல்லு“., என்று கேட்டான்.

         அவளோஎனக்கு ஒரு கலரும் பிடிக்காது“., என்றாள்.

                “நெஜமாவா சொல்ற., பொண்ணுங்கன்னா நிறைய கலர் பிடிக்கும் ன்னு சொல்லுவாங்க., இந்த கலர் பிடிக்கும்., இந்த கலர்ல சேலை வாங்கனும்., அந்த கலர் சுடி வாங்கணும்.,  இந்த கலர்ல வாங்கினா தான் நல்லா இருக்கும் ன்னு நிறைய லிஸ்ட் போடுவாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன்., நீ என்ன எந்தக் கலரும் பிடிக்காது ங்கிற“.,  என்றான்.

           “இப்ப எனக்கு எந்த கலர் பிடிச்சா உங்களுக்கு என்ன., பிடிக்காட்டி உங்களுக்கு என்ன.,  இப்ப எதுக்கு கேக்குறீங்க“., என்றாள்.

        “இங்க பாரு நான் இப்ப பட்டு எடுக்குற இடத்தில் வெளியே நின்னு பேசிட்டு இருக்கேன்., எல்லாரும் உள்ள போயிட்டாங்க., நீ என்ன கலர் புடிச்சி இருக்குன்னு சொன்னா, உனக்கு பிடிச்ச கலர்ல நான் புடவையை செலக்ட் பண்ணுவேன்.,  இல்ல னா  அவங்க இஷ்டத்துக்கு எடுத்துருவாங்க பாத்துக்கோ., கல்யாணம் புடவை வாங்குறது., லைஃப்ல ஒரு தடவை தான் வாங்க முடியும்., அதனால உனக்கு பிடிச்ச கலரா  இருந்தா இன்னும் நல்லா இருக்கும்னு யோசிச்சேன்., வேற ஒன்னும் இல்ல சொல்லு“.,  என்று சொன்னான்.

          “அவளோ எனக்கு எந்த கலருமே பிடிக்காதுஎன்றவள். “எனக்கு புடிச்சி தான் எல்லாம் நடக்குதா., இதுல கலரு மட்டும் எனக்கு பிடிச்ச மாதிரி இருக்கனும் ன்னு எந்த அவசியமும் கிடையாது“., என்று சொன்னாள்.

        “நெஜமா தான் சொல்றியா.,  பேச்சு மாற மாட்டீயே“.,என்றான்.

        “பேச்செல்லாம் மாறமாட்டேன்“., என்று சொன்னாள்.

          “அப்போ எனக்கு புடிச்ச கலர் ., எனக்கு புடிச்ச மாதிரி டிசைன்ல., எனக்கு புடிச்ச சேலையை  நான் வாங்குறன்.,  அதை நீ கட்டிக்கோ“., என்று சொன்னான்.

        இவளோ., ‘எப்படி பால் போட்டாலும்  சிக்ஸர் அடிக்கிறானேஎன்று மனதிற்குள் நினைத்தவளுக்குஅடேய் உன்ன என்ன செய்யஎன்று மனதிற்குள் புலம்ப மட்டுமே முடிந்தது.

         அவளிடம் இருந்து பதில் இல்லை என்ற பிறகு  “சரி எனக்கு புடிச்ச கலரில் புடவை எடுக்குறேன்., மீதி பங்ஷன்க்கு வாங்குறது எல்லாம் எனக்கு பிடிச்ச கலருல வாங்கட்டு மா“., என்று கேட்டான்.

         இவள் இந்தபுறம் இருந்து பதிலே சொல்லவில்லை என்றவுடன்., ஹேம் என்று மீண்டும் அழைக்க..,

        “லைன்ல தான் இருக்கேன்., நீங்க சொல்றதெல்லாம் கேட்டுட்டு தான் இருக்கேன்.., போன் நம்பர் கொடுத்த  அப்பாவ சொல்லணும்“., என்றாள்.

           “அதுதான் சொல்லிட்டேனே உன்னையே குடுக்குறாரு., போன் நம்பரை மட்டும் வைத்து அவர் என்ன செய்யப் போறார்.,  இத பத்தி ரொம்ப பீல் பண்ணாத ஜாலியா இரு..,  நீ நாலு நாள் முன்னாடி தான் வருவ ன்னு., உங்க அம்மா சொல்லிட்டு இருந்தாங்க., பிளைட் டிக்கெட் போடவா“., என்று கேட்டான்.

      “ஒரு மண்ணும் வேண்டாம்., எனக்கு வர தெரியும்“., என்று கோபமாக பேசிவிட்டு போனை அணைத்து வைத்தாள்.

            அந்தப்புறம் போனை பார்த்துக் கொண்டிருந்தவனோ முகம் நிறைய சிரிப்பு மட்டுமே இருந்தது.,

     சற்று தள்ளி நண்பர்கள் நின்று இவனை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்., போனில் பேசுவது தெரிந்தவுடன் சற்று விலகி இருந்து அவனுடைய முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க.,

      அவனோ சிரித்த முகமாக அவளோடு பேசிக் கொண்டிருந்தான்இந்தப்பக்கம் நண்பர்களும்அந்த பொண்ணு அங்க திட்டிட்டு இருக்கும்., என்னமோ இவன கொஞ்சிகிட்டு இருக்க மாதிரி சிரிச்சுகிட்டு இருக்கான் பாரு“.,என்று சொன்னான்.

         “அவன் போட்டோ பார்த்த அப்பவே தலைசுத்தி போய் நின்னான்., பொண்ண நேரில் பார்த்த உடனே மொத்தமா விழுந்துட்டான்“.,  என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

      இவனும்  எந்த நினைப்பும் இல்லாமல்பிளைட் டிக்கெட் போடவா ன்னு கேட்டா.,  ஒரு மண்ணும் வேண்டாமா..,  உன் வாயால, உங்கள பிடிச்சிருக்கு ன்னு சொல்ல வைக்கிறேன்‘., என்று மனதிற்குள் நினைத்தபடி சிரித்தவன்.,

     ‘எப்படியோ எனக்கு வரத் தெரியும் ன்னு அவ வாயாலேயே சொல்ல வைச்சாச்சி அது போதும்‘., என்று நினைத்தபடி சிரித்துக்கொண்டே புடவை எடுக்க கடைக்குள் நுழைந்தான்.

அவனை ஆட்டிப் படைக்கும் விதியாக அவளும்., அவளை ஆட்டிப்படைக்கும் விதியாக அவனும்.,  மாறப் போவது விதியின் செயல் தானே.,


    உனை நினைக்காத நேரம்
     எல்லாம் என்
     இதயம் துடிப்பதில்லை
     என்பதை அறிவாயா.,

      உன்னை மறக்க
      நினைக்கும் ஒரு நொடி
      கூட என் மரணத்தின்
     வாசலை முத்தமிட்டு தான்
     திரும்பி வருகிறேன்.,

     உன் நினைவுகளோடு
     வாழ்ந்துவிட வேண்டும்
     என்று உன்னோடு
     வாழ்ந்த  நினைவுகளை
     என் மூச்சாக
     சுவாசிக்கிறேன்.,

Advertisement