Advertisement

6


தீமையை  நன்மையால் வெல்லுங்கள். பொய்யினை உண்மையால்  வெல்லுங்கள்

             – புத்தர்

           அலுவலக வேலையில் தன்னை முழுதாக ஈடுபடுத்திக் கொண்ட ஹேமாவை பார்க்கும் போது குழலிக்கு சற்று யோசனையாக இருந்தது.,

       ‘என்ன இது மாப்பிள்ளை என்று சொல்லி வந்தவன்., பார்த்து விட்டு சென்று ஒரு வாரம் ஆகிறது., இவள் வீட்டில் இருந்து எந்த தகவலும் வரவில்லை., ஹேமாவும் மும்மரமாக அவள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறாள்., வீட்டில் இருந்து எந்த அலைபேசி அழைப்பு வந்தாலும் அதில் திருமணத்தை பற்றிய எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை வரவில்லை., எப்படி இவளிடம் கேட்பது, கேட்டால் கோபப்படுவாள்‘., என்ற எண்ணத்தோடு அமர்ந்து தன் வேலையை பார்க்காமல்., அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

           அவள் வேலையில் கவனம் செலுத்தாமல் இருப்பதை கண்ட ரதி தான்குழலி ஏன் இப்படி யோசிச்சிட்டு இருக்கிற.., அவங்க பேரண்ட்ஸ் க்கு தெரியாததா., ஏதாவது விஷயம் இருக்கும்., எதுவும் இல்லாம இருக்காது இல்லை“.,  என்று கூறி அவள் தோளில் கை வைத்தபடி பேசினாள்.

              குழலியும்ஆமா  ரதி  எனக்கும் அதுதான் யோசனையா இருக்குஎன்று சொல்லி.,  அவன் பெண் பார்க்க என்று வந்து விட்டு சென்ற அந்த நாளை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

            “மாப்பிள்ளை என்று சொல்லி அவர் வந்து பார்த்துட்டு போன அன்னைக்கு தான்., முதன் முதலாக  இவ அவ்வளவு டென்ஷனா இருந்து நான் பார்த்தது.,
இவ வந்து  ஆபீஸ்ல உட்கார்ந்தது கூட தெரியாம உட்கார்ந்திருக்கா., பேய் அறைந்த மாதிரி இருந்தவ., வீட்டுக்கு போறவரைக்கும் வாய் திறந்து எதுவுமே சொல்லல., அமைதியா தானே வந்தா.,  ஆனா வீட்டுக்கு வந்தவுடனே எல்லாத்தையும் உடைச்சு போட்டு மொத்தமா சொன்னா…,

             கடைசியாக அவர் சொல்லிட்டு போனது.,  எனக்கு உன்ன பிடிச்சிருக்கு ன்னு சொல்லி இருக்காரு.,  இவ புடிக்கலைன்னு சொல்லுங்க.., கல்யாணத்தை நிறுத்துங்க.., ன்னு சொல்லி இருக்கா…,  ரெண்டு விதமா பேச்சுவார்த்தை ஓடி இருக்கு., என்ன நடக்குதுன்னு தெரியல பாப்போம்“., என்றாள் குழலி

       ரதியோநீ சொல்றதெல்லாம் சரி தான்., ஆனா எனக்கு இப்ப வரைக்கும் ஒரு சந்தேகம்“., பாத்து பேசிட்டு போயி ஒன் வீக் ஆகுது., இப்ப வரைக்கும் அவங்க வீட்ல இருந்து கல்யாண பேச்சை பேசின மாதிரி காட்டிக்கல..,  அந்த மாப்பிள்ளை வந்துட்டு இவள பாத்துட்டு போறவரைக்கும் கல்யாணத்தை பத்தி பேசின,

      அம்மா அப்பா அண்ணன் எல்லாரும் அதுக்கு அப்புறம் கல்யாணத்தை பற்றி ஒரு வார்த்தை கூட பேசல., ஏன் பாட்டி கூட கல்யாணத்துக்கு முன்னாடி பெரிய இடம் எப்படி நமக்கு ஒத்துப்போகும்., அந்த குடும்பத்துக்கு நம்ம குடும்பத்துக்கு ஏணி வைத்தால் கூட எட்டாது., அப்படின்னு இவ கூட சேர்ந்து சொன்னாங்க.,  அவங்க அம்மா அப்பா அண்ணன் மூன்று பேரும் அந்த மாப்பிள்ளைக்கு தான் கொடுக்கணும்ன்னு பேசினா..,  பாட்டி அதுக்கு ஆப்போசிட் ஆஆ  கொடுக்கக் கூடாதுன்னு பேசி கிட்டு இருந்துச்சு..,

     இப்போ பாட்டி பழையபடி  கோவிலுக்கு போறியா., விரதம் இருக்கியா சாமி கும்பிட்டயா ன்னு இது மட்டும் தான் கேட்கிறாங்க.,  மத்தபடி அவங்க வந்து பார்த்துட்டு போறதுக்கு முன்னாடி ஹேமா வீட்டுல ஆளாளுக்கு கல்யாணத்தை பேசி பேசி இவளை டென்ஷன் ஆகுன மாதிரி..,

        இப்போ எந்த டென்ஷனும் யாருமே படுத்தலை., ஒருவேளை இவளை பயமுறுத்த சும்மா சொல்லிட்டு., டென்ஷன் பண்றதுக்காக பேசிட்டு.., அங்க போய் ஹேமா சொன்ன மாதிரி தான் சொல்லியிருப்பாங்களோ..,

            ஒருவேளை பொண்ணுக்கு கல்யாணத்தில் இஷ்டமில்லை அப்படின்னு சொல்லி இருந்திருக்கலாம் இல்லையா..,  அதனால கூட ஹேமா வீட்டிலுள்ள உள்ளவங்களுக்கு கோவமா இருக்குமோ., அதனால தான் கல்யாண பேச்சு எடுக்கலையோ“.., என்று தோழிகள் பேசிக்கொண்டனர்.,

      ஆனால் அவர்களும் ஹேமாவிற்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தால் சந்தோஷம் என்ற நிலையில் தான் இருந்தனர்.

           ஹேமாவே தன் வேலையில் மூழ்கி இருக்க குழலியும் ரதியும் எழுந்து ஹேமாவின் அருகே வந்து ஆளுக்கு ஒரு இருக்கையை பக்கத்திலிருந்து இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தனர்.

         ஹேமாவிடம் அவர்களுக்குள்ள சந்தேகங்களையும்., பேச்சுகளையும் மீண்டும் அவளிடம் கேட்டனர்.

          அவளோ அவர்களை  முறைத்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

           “இப்ப தான் நிம்மதியா இருக்கேன் உங்களுக்கு பொறுக்கலையா.,அப்பாடா பேச்சுவார்த்தை இல்லை அப்படிங்கிற நிம்மதியையும் சந்தோஷத்தையும் அனுபவிச்சிட்டு இருக்கேன்., பொறுக்காத உங்களுக்குஎப்படி டா இவள அடுத்த பிரச்சினையில் மாட்டி விடலாம்னு பாக்குறீங்க அப்படித்தானே.,

       நான் நிம்மதியா இருந்துட்டு போறேன்  மா.,  தயவுசெய்து போங்க, போய்  உங்க வேலைய பாருங்க“., என்று சொல்லி தோழிகளை வேலை பார்க்கும் படி அறிவுறுத்தி கொண்டிருந்தாள்.

        இப்படியே இரண்டு நாட்கள் கழிந்து இருக்க அன்று மதிய உணவை அனைவரும் சேர்ந்து உண்டு கொண்டிருக்கும் போதே..,  எப்போதும் அவர்களோடு அமர்ந்து அரசியல் பேசும் நண்பர்கள் கூட்டமும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

        அதில் முதல் முதலில் பிரசாத்தை பற்றி., ‘சிறு வயது எம்எல்ஏ., உங்க ஊர்ல இருந்து வாராமே‘., என்று பேச்சைத் தொடங்கி வைத்திருந்த நண்பன் அன்றும் பேசத் தொடங்கினான்.

                “உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா நான் சொன்ன உங்க ஊரில் இருந்து வர்ற எம்எல்ஏ.., அவருக்கு சீட் கிடைச்சது பற்றி அன்னைக்கு தான பேசிட்டு இருந்தோம்.,  அவரைப்பற்றி இன்னைக்கு ஒரு டீடெயில்ஸ் வந்து இருக்கு“.,  என்று சொன்னான்.

          குழலி தான்என்ன பா இது., பிடித்த பொண்ணுங்களையும்., நடிகர்களையும் நடிகைகளையும்., பத்தி நியூஸ் கலெக்ட் பண்ற மாதிரி., நீ அவரை பத்தி நியூஸ் கலெக்ட் பண்ணிட்டே  இருக்கிற“.,  என்று வேண்டுமென்றே போட்டு வாங்கினாள்.

            அவனும் அப்படிலாம் இல்ல., ஒரு கிரஷ் ன்னு கூட வச்சுக்கோங்க.., ஏதாவது நல்லது செய்வாங்க அப்படின்னு ஒரு நம்பிக்கை.,  நம்ம வயசை ஒத்த ஒரு ஆளு அரசியலில் பதவியில் வந்து உட்கார போறாரு.,  அப்படி இருக்கும் போது ஏதாவது செய்ய மாட்டாங்களான்னு,

        ஒரு சின்ன எதிர்ப்பார்ப்பு இருக்கும் தானே.,  அப்படி ஒரு எதிர்பார்ப்பு தான்.,  அதனால தான் அவரை பத்தி நியூஸ் கலெக்ட் பண்ணி கிட்டு இருக்கேன்“..,  என்று சொன்னான்.

            “சரி அப்படி என்ன நியூஸ் கலெக்ட்  பண்ண.,  இப்ப அப்படி என்ன நியூஸ் வந்துச்சு“., என்று கூறி வேண்டுமென்றே மறுபடியும் கேட்டாள்.

          அதற்கு பதிலாக அவன்இதுகுள்ள கோயம்புத்தூர் ஆட்களுக்கு நியூஸ் வந்து இருக்கனுமே., ஆனா பாரு நான் தான் முதல்ல கண்டுபிடித்திருக்கேன்., இன்னைக்கு தான் அவரை பத்தின ஒரு சின்ன நியூஸ் செய்தி ஊடகங்களுக்கு கசிந்து இருக்கு..,

       அவருக்கு மேரேஜ் பிக்ஸ் ஆயிடுச்சு.,  எலக்சனுக்கு முன்னாடி கல்யாணம்.,  அவங்க வகைல பொண்ணு தான் போல சொந்தம் ன்னு சொல்லி இருக்காங்க..,  அவங்க  சொந்ததுல  பொண்ண பார்த்து பேசி முடிச்சுட்டாங்க..,

            ஆனா பொண்ணு பத்தின சின்ன விஷயம் கூட வெளியே குடுக்கல,,  பொண்ண பத்தின டீடெயில்ஸ் கேட்டதற்கு., அவர் சொல்லி இருக்காரு எனக்கு மனைவியா வரப்போறவங்க ஃப்ரீ யா இருக்கனும்., எந்த வகையிலும் அரசியல் ரீதியாகயோவோ., அரசியல் பின்புலத்தோடு இருக்கிற ஒருத்தருக்கு மனைவி அப்படிங்கற மாதிரி வெளியே காட்டிக்க விரும்பல.., 

          அவங்க சாதாரண மக்களோடு மக்களாக சாமானிய மக்களை போல இருக்கட்டும்.., அப்படி இருக்கும் போது தான் வெளியே இருக்கிற நல்லது கெட்டது எல்லாமே எனக்கும் தெரிய வரும்., அதனால நான் யாரையும் எந்த பத்திரிக்கை காரர்களை கூப்பிட மாட்டேன்., அதே மாதிரி மேரேஜ் ஆனாலும் என்னோட மனைவியோட போட்டோவை நான் வெளியே கொடுக்க மாட்டேன்., என் மனைவி வெளியே யாரும் தெரிஞ்சுக்கணும்னு அவசியமில்லை..,   சில இடங்களில் அவங்களை தெரிய வேண்டியது இருக்கலாம்., அப்படி ஒரு சிட்டுவேஷன் வரும் போது அவங்க வந்து என்னோட பாதுகாப்பில் இருக்கிற மாதிரி பார்த்துப்பேன்., இப்போ  அவங்க எப்படி இருக்காங்களோ அதே மாதிரி கல்யாணத்துக்கு அப்புறமும் இருக்கலாம்.,  அதை நான் எந்த விதத்திலும் தடை பண்ண மாட்டேன்.,

            இப்படித்தான் இருக்கணும் அப்படிங்கிற எந்தவித கட்டுப்பாடுகளும் என்னோட மனைவிக்கு இருக்காது.,  அதனால என்னோட மனைவியோட புகைப்படத்தை நான் வெளியே தர மாட்டேன்., அப்படின்னு சொல்லி இருக்காரு.,  அதுமட்டுமில்லாமல் சின்ன க்குழு கூட குடுக்கல.,  டீடெயில்ஸ்.,  ஃபேமிலி எதைப்பத்தியும் சொல்லல.,  ஆனா கூடிய சீக்கிரம் கல்யாணம் ன்னு சொல்லியிருக்காங்க.., செமயில்ல இந்த மனுஷன்“., என்று சொன்னான்.

      ரதியோ சும்மா இருக்காமல்ஏன் பொண்டாட்டிய வெளியே தெரியக்கூடாது ன்னு நினைக்கிறது நல்லதா., என் மனைவி இவங்க தான் அப்படின்னு  அறிமுகப்படுத்தி வைக்க வேண்டியது தானே“., என்று வேண்டுமென்று கேட்டாள்.

      அவனோயோசித்து தான் பேசுறியா.,  அவர் இப்பதான் பொலிடிகல்  க்குள்ள வர்றாரு.,  ஜெயிக்கிறாரா அல்லது தோற்று போறாரா.,  என்பது வேற விஷயம்.,

         தோற்றுப் போனாலும் அந்த கல்யாணம் பண்ற பொண்ண யாரும் எதுவும் மனசு ஹட் பண்ற மாதிரி பேசிற கூடாது..,  இன்னொன்னு அவளுடைய பிரீடம் னு ஒன்னு இருக்கு., அந்த பொண்ணோட ஃப்ரீடம் எந்த விதத்திலும் பாதிக்ககூடாது..,

        மே பி ஜெயிச்சி நல்லது செய்கிறார்களோ., இல்லை ஏதோ ஒரு சின்ன பிரச்சனை ஆனாலும்., நாளைக்கு  குடும்பத்த வச்சி பிளாக் மெயில் பண்ண கூடாது அப்படின்னு கூட இருக்கலாம்.,  அதான் என்னோட மனைவி அவங்க அவங்களாவே  இருக்கட்டும் ன்னு சொல்றது என்ன தப்பு.,  ஒரு நல்ல மனுஷனா இதுதானே அழகு.,

            என் மனைவி அவளோட விருப்பங்களை., அவளோட காரியங்களை ஃப்ரீ யா செய்யட்டும்.,  அவளுக்கான இடம் அப்படியே தான் இருக்கும்., அவளை நான் எந்த விதத்திலயும் கட்டு படுத்த  மாட்டேன் னு சொல்றாரு., இதில் என்ன இருக்கு.,  கரெக்டா சொல்றாரே., நீங்க அப்படி சொன்னாலும் தப்பு கீங்க., இப்படி சொன்னாலும் தப்பு கீங்க., என்ன பா பொண்ணுங்க நீங்க“., என்று அவன் சொன்னான்.

         குழலி தான்அப்படி என்னத்த சொன்னோம்.,  உண்மையை தானே கேட்கிறோம்“., என்று சொன்னாள்.

            அதற்கு அருகில் இருந்த நண்பன் தான்., “ஏய் அப்படி இல்லப்பா., அவன் சொல்ல வர்றது உங்களுக்கு புரியலையா.,  உங்களை ஃப்ரீ யா உங்க இஷ்டத்துக்கு நீங்க நீங்களா இருங்கன்னு விட்டாலும் தப்பு கீங்க.,  அதை இது இல்ல நீ இப்படி அடங்கியிரு., அப்படி அடங்கி இரு ன்னு கண்டிஷன் போட்டாலும் தப்பு கீங்க., அப்ப எப்படி தான் இருக்கணும் ன்னு  கேக்குறாங்க..,  வேற ஒன்னும் இல்ல“.,  என்றான்.

    ஓஓ., இது தான் விஷயமா என்று பேசி அதன் பிறகு தங்கள் வேலை விஷயம் என்று பலவாறாக பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருந்தது.

         இது யாவையும் கவனித்தாலும் எதையும் கண்டுகொள்ளாதது போல அமர்ந்திருந்தாள் ஹேமா., அவளுக்கு மனதில் ஒரு புறம் நிம்மதியாக இருந்தது.,

           ‘அப்ப மனுஷன் வேற யாரையோ கல்யாணம் பண்ண பிக்ஸ் பண்ணிட்டாரு.,  இனிமேல் நம்ம நிம்மதியா இருக்கலாம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தாள்.,

         நிம்மதியாக உணர்ந்தவளுக்கு., அந்த நிம்மதி  மூன்று நாட்களுக்குக் கூட நீடிக்கவில்லை., மூன்றாம் நாள் மாலை வீட்டிலிருந்து அழைப்பு வரவும் அப்போது தான் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்தவள்.,

         “சொல்லுங்கம்மாஎன்று எடுத்தவுடன் தாயை அழைத்தாள்.

      தாயாரோசரி நீ உன் வேலையை விடுற பார்மலிடீஸ் எப்படிடா“., என்று கேட்டார்.

     “என்னது வேலையை விடனுமா.,  எதுக்கு ஏன்“., என்று கோபமாக கேட்டாள்.

      “சரி இப்ப வேலைய விட வேண்டாம்.,  இப்பதிக்கு ஒன் மன்த் லீவ் போடு.,  அப்புறமா வேலையை விடுவதைப் பற்றி யோசிக்கலாம் என்ன“., என்று சொல்லி முடிக்கும் முன்.,

          “அம்மா எதுக்கு விடனும்., அத கரெக்டா சொல்லுங்க“., என்று கேட்டாள்.

           “ஏண்டி உன்னய செய்ய., நல்ல வளர்த்துருக்கேன்னு  சொல்லுவாங்க.,  நீ தான் கல்யாண பேச்சு பேச மாட்டேங்குற..,  அதுக்காக நாங்க அமைதியா இருந்தோம்., நீ உன் இஷ்டத்துக்கு நினச்சுப்பீயா., கல்யாணத்துக்கு முதல் நாள் தான் ஊர் வந்து சேர போறியா என்ன“., என்று கேட்டார்.,

              சற்று அதிர்ச்சியாகஎன்னது கல்யாணமாஎன்றாள் கோபமாக.,

       

Advertisement