Advertisement

பின்பு தயாளனே நோக்கிமாமா நம்ம சொந்தத்துல  பார்த்திருந்தால் கூட இந்த அளவுக்கு அழகான பொண்ணு கிடைச்சிருக்காது., அவ்ளோ அழகா இருக்கு பொண்ணு., எந்தவித மேக்கப்பும் இல்லாமல் அவ்வளவு நல்லா இருக்கு.,  பார்த்தாலே தெரியுது துளி மேக்கப் கூட கிடையாது., ரொம்ப நிறம் ன்னு  சொல்ல முடியாது.,  நிறம் கம்மி ன்னு சொல்ல முடியாது., ரொம்ப அழகா இருக்கு மாமா..,  எப்படி சொல்றதுன்னு தெரியல., ஆனால் பொண்ணு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு“., என்று சொன்னாள்.

             நித்யானந்தனோ  “நீ நெஜமாதான் சொல்றியா., இல்ல கிண்டலுக்கு சொல்லுறீயா., ஏன்னா ஒரு பொண்ணு இன்னொரு பொண்ண பார்த்து அழகா இருக்கான்னு சொல்றது பெரிய விஷயம்.,  அதுவும் ஒரே வீட்டில் வாழ போறவங்க ஒருத்தர ஒருத்தர் பாராட்டுறது அதைவிட பெரிய விஷயம்., அதனால தான் கேட்டேன்“., என்றான்.

       அவளும் அவனை பார்த்து முறைத்த படிஎல்லாருமே உங்க தங்கச்சி மாதிரி இருப்பாங்களா“., என்று அவசரத்தில் வார்த்தையை விட்டவள்., பின்புசாரிஎன்று சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

        ஏனெனில் பானுவை பொருத்தவரை எல்லாருமே ஏதாவது குறை உள்ளவர்களாக  தான் தெரிவார்கள்., அப்படித்தான் சொல்லவும் செய்வாள்.,

        தான் மட்டும் தான் நிறைவான அழகுள்ளவள் என்றும் மற்றவர்கள் எல்லாம் அவளை விட குறைவு என்றே சொல்லிக்கொள்வாள்.,

       இத்தனைக்கும் முழு மேக்கப் போட்டு தான் வெளியே கிளம்புவாள்.,  அது பெரிய விஷயமாக அங்கு பேசப்படுவதில்லை., பொதுவாக இப்போது உள்ள பெண்கள் எல்லோரும் மேக்கப் போட்டுக் கொண்டு தான் வெளியே சென்று வந்து கொண்டு இருக்கிறார்கள்.., அதனால் அது யாருக்கும் பெரிதாகத் தெரிவதில்லை.,

       போட்டோ ஒவ்வொரு கையாக மாறி சொர்ணம் கைக்கு வர சொர்ணமும் அமைதியாக ஒரு நிமிடம் இருந்தவர்.,  பின்புஇந்த அழகை வைத்து என்ன செய்ய“., என்று சொல்லி போட்டோவை கோபத்தில் டீபாயில் குப்புற வைத்து விட்டு சென்றார்.,

         தயாளன்நீ என்ன சொன்னாலும் இதுதான் நடக்கப் போகுது., அப்புறம் என்ன ஏத்துக்க பழகிக்கோ“.,  என்று சொன்னார்.
     அதற்குநடக்கிறதா நடக்கும்போது பார்ப்போம்“., என்று கோபமாக சொல்லிவிட்டு சொர்ணம் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

         நித்தியானந்தனோநீ பாருடாஎன்றான்.,  அவனும் அப்புறமாக பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு அமைதியாக அமர்ந்து கொண்டான்.

         பின்பு ஒவ்வொருவராக வெளியே செல்ல இவன் மெதுவாக எடுத்து போட்டோவை பார்த்ததும் சற்று நேரம் பார்த்தது பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

        அத்தனை அழகாக இருந்தாள்.,  அவனுக்கு ஏனோ மனதிற்குள் சின்ன சந்தோஷம் எட்டிப்பார்த்தது., ‘பணம் என்ற ஒன்றை தவிர வேறு எதிலும் தன் அம்மா அவளை குறை சொல்ல முடியாது‘., என்ற எண்ணம் மனதிற்குள் பெரிதாக அவனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.,

      மனமோ அவள் போட்டோவில் இருந்து கண்ணை எடுக்க முடியாமல் தவிப்பதை கண்டு அவனுக்கு அவனே கிண்டல் செய்து கொள்ள., சுற்றுமுற்றும் அவசரமாக பார்த்தவன் அவசரமாக தன் செல்லில் அந்த போட்டோவை ஒரு போட்டோ எடுத்துக்கொண்டு அங்கேயே வைத்து விட்டு வெளியேறினான்.

           அதன்பின் எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருக்க., இன்று கட்சி சம்பந்தமாக நேரில் கட்சித் தலைவரை சந்திப்பதற்காக வந்திருந்தான்.,

            ஏனெனில் எலக்சனுக்கு சீட்டு கிடைத்திருக்க அது சம்பந்தமான சில கையெழுத்துக்களை போடுவதற்காக தலைவரை சந்திக்க வந்திருந்தவன் அப்படியே இங்கு வந்தான்.,

                மாலை 7 மணிக்கு மேல கோயம்புத்தூருக்கு பிளைட்டில் செல்ல வேண்டும்., என்ற நிலையில் அவளை ஒருமுறை நேரில் பார்த்து பேசிவிட்டு செல்லலாம்., என்ற நினைவோடு இங்கு வந்த அமர்ந்திருந்தான்.

          அவளோ அவன் தந்தையிடம் சொல்லிய 15 நிமிடங்கள் ஆகியும் இன்னும் வராமல் இருக்க..,

          நண்பர்கள் தான்என்னடா அந்த பொண்ணு இன்னும் வரவில்லை“., என்று கேட்டனர்.

          “ஆபீஸ்ல ஏதாவது வேலையா இருக்கும்., வரட்டும் பார்த்து பேசிட்டே போவோம்“., என்று சொல்லிவிட்டு மணியை பார்த்தபடி வாசலை பார்த்தான்.


      அப்போது தான்  வந்து கொண்டிருந்தாள்., முகம் வாடினார் போல., லேசாக வியர்வை அரும்பியது போல இருக்க., உள்ளே வரும் போதே அவளை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தெரிந்தது.,

     நண்பர்களும்நீ சொன்னது நிஜம் தான் போல ஏதோ ஒர்க்கில் இருந்திருக்கும் போல“., என்று சொல்லி அவர்கள் ஒரு தவறான புரிதலை வைத்திருக்க அவளோ வேண்டுமென்றே தாமதமாக வந்திருந்தாள்.

        அங்கு வந்தவளுக்கோ சற்று மனம் தடுமாற தான் செய்தது., ஏனெனில் தாமதமாக வந்ததற்கு அவன் முகம் ஏதாவது வித்தியாசம் காட்டும் என்று நினைத்தால் சிரித்த முகமாக அவள் வருவதை பார்த்து கொண்டிருந்தவனை பார்த்த போது அவளுக்கு அவனை நேர்கொண்டு பார்க்க முடியவில்லை..,

       இருந்தாலும் வந்து விட்டோம் என்ற எண்ணத்தோடு., லேசாக உதடு இழுத்து வைத்து சம்பிரதாய சிரிப்போடு ஹாய் என்று சொன்னவள் அவன் நண்பர்கள் சூழ இருக்க அவனுக்கு எதிர்த்தார் போல் இருந்த இருக்கையை சற்று தள்ளி இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.,

               அவள் செய்கைகள் எல்லாம் நண்பர்களும் சரி., அவனும் சரி பார்த்துக் கொண்டிருந்தனர்.

      அவன் தான்என்ன சாப்பிடுறஎன்றான்.,

          இவளோஇல்ல எதுவும் வேண்டாம்.,  இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் லன்ச் முடிச்சோம்., நோ தேங்க்ஸ்“.,  என்றாள்.

          “எங்களுக்கு வேண்டுமேஎன்று சொன்னான்.

            “ஓகே நீங்க சாப்பிடுங்கஎன்றாள்.

         அவனும்இல்ல உன்ன பார்க்க வந்திருக்கோம் இல்ல.,  நீதான் ஏதாவது வாங்கித் தருவ ன்னு எதிர்பார்த்தோம்., நீ என்ன இப்படி சொல்லிட்ட“., என்று சாதாரணமாக அவளை ஒருமையில் அழைத்தான்.,

         அவளுக்கு தான் என்னவோ போலிருந்தது..,”ஓஓஓ.,  சாரி அப்படி ஒன்னு இருக்கா.,  ஓகே., உங்களுக்கு என்ன வேணுமோ ஆர்டர் பண்ணிக்கோங்க“.,  என்று சொன்னாள்.

         அவனும் சிரித்தபடிஜஸ்ட் ஜாலிக்கு தான் சொன்னோம்.,  நாங்களும் லன்ச் முடிச்சிட்டு தான் வந்தோம்“., என்று சொல்லி அவர்களுக்கு ஜூஸ் மட்டும் ஆர்டர் செய்தான்.

         ஜூஸ் வந்த உடனே மற்றவர்கள் அருந்தி கொண்டிருக்க., அவளுக்காக வரவழைக்கப்பட்ட ஒரு ஜூஸை கட்டாயப்படுத்தி அவளை அருந்துமாறு சொல்லிக் கொண்டிருந்தான். அவளோ அந்த ஜூஸை பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள்.

               வந்ததிலிருந்து அவளது நடவடிக்கையே பார்த்துக் கொண்டிருந்தவன்., அவள் சற்று படபடப்பாக இருந்தது  தெரிந்தாலும் எதுவும் கண்டுகொள்ளாதது போல அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தான்.

            அவளாக பேச தொடங்குவார்கள் என்று பார்த்தால் அவள் எதுவும் சொல்லாமல் தன் நகத்தை பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருப்பதை பார்த்தவன்.,

        “என்ன ஆச்சு., எதுவும் பேச மாட்டியாஎன்று கேட்டான்.

       அவனை நிமிர்ந்து பார்த்தவள்இல்ல எனக்கு தெரிஞ்சி பேசுறதுக்கு எதுவும் இல்ல ன்னு தான் தோணுச்சு..,  நான் எங்க வீட்டில் ஓபனாக சொல்லிட்டேன்., எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை ன்னு, ஆனால் யாரும் கண்டுக்க மாட்டீக்காங்க“., என்று  சொன்னாள்.

      அவன் நண்பர்கள் அதிர்ச்சியாக அவனை பார்த்தனர்.

      அவனோ நிதானமாகஏன் இஷ்டம் இல்ல., நீ யாரையாவது லவ் பண்றியா“.,  என்று கேட்டான்.

         அவனை அதிர்ச்சியாக  பார்த்தபடிசாரி எனக்கு அந்த மாதிரிலாம் எதுவும் கிடையாது.,  பட் இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை அவ்வளவு தான்“., என்று சொன்னாள்.,

           “அதான் ஏன்“.,  என்று அவன் மறுபடி கேட்டான்.

             “இல்ல உங்களுக்கும்., எனக்கும் எந்த விஷயத்துலயும் ஒத்து வராது.,  அது மட்டுமில்லாம கண்டிப்பா ஸ்டேடஸ் வைய்ஸ் கண்டிப்பா ரெண்டு பேருக்கும் பிரச்சினை வரும்., இரண்டு  ஃபேமிலியும் ஒன்று போல இருக்காது.,  என்னால உங்க வீட்ல ப்ரீயா இருக்க முடியாது..,  உங்களால எங்க வீட்ல ப்ரீயா இருக்க முடியாது.., சோ இந்த கல்யாணம் நடக்காமல் இருந்தால் இரண்டு பேர் சைடும் நிம்மதியா இருக்கும்ன்னு நினைக்கிறேன்..,

         அதே மாதிரி கல்யாணம் அப்படி போச்சுன்னா.., ரெண்டு பேரும் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.,   அது தான் சொல்றேன்.., ப்ளீஸ் இந்த கல்யாணம் வேண்டாம்., உங்க வீட்ல நீங்களே வேண்டாம் ன்னு., சொல்லிடுங்க“.,என்று சொன்னாள்.,

          அவனும்அது எப்படி., இப்படி தான் இருக்கும் ன்னு இவ்வளவு உறுதியா சொல்ற“., என்று அதிலேயே நின்றான்.

     இவளோஉங்களுக்கு புரியலையா இல்ல.,  புரியாத மாதிரி பேசுறீங்களா ன்னு எனக்கு தெரியல., எனக்கு அரசியல் னா புடிக்காது ஒன்னு.,  அது மட்டுமல்ல அரசியலைப்பற்றி ஏபிசிடி கூட தெரியாது.,  அப்புறம் அரசியல இருக்குற எல்லாருமே நல்லவங்க ன்னு நான் சொல்ல தயாரா இல்ல., 

       அது மட்டுமில்லாமல் என்று சற்று தடுமாறியவள்.,  எப்படி சொல்றதுன்னு தெரியல., ஆனா எல்லா பொண்ணுங்க மாதிரி தான் எனக்கும் கல்யாணம் பற்றிய சில கனவு இருக்கும்.,  எனக்கு வர்ற ஹஸ்பென்ட் எப்படி இருக்கணும்னு யோசிச்சு இருக்கேன்., என்னோட பீல்ட் னா பெட்டரா பீல் பண்ணுவேன்..,  முக்கியமாக அரசியல் பர்சனாலிட்டி எனக்கு வேண்டாம்.., அது மட்டும் தான் என்னால் சொல்ல முடியும்“.., என்று  சொன்னாள்., அவள் சொல்ல வருவதை புரிந்து கொண்டவன்.

             “ஏன் அரசியலில் மட்டும் தான் கெட்டவங்களா இருப்பாங்களா., ஏன் அரசியல்வாதிகள் மட்டும் தான் தப்பானவனா  இருப்பானா., வெளியே இருக்கிறவன் எல்லாம் நல்லவன் நினைக்கிறாயா.,  ஏன் உன் கம்பெனியிலே போய் பாரு..,  எத்தனை பேர் முகமூடி போட்டு கிட்டு நடமாடுறாங்க ன்னு தெரியும்.,

           உங்ககிட்ட ஒரு பேஸ் காட்டுவாங்க.,  உங்களுக்கு பின்னாடி ஒரு பேஸ் காட்டுவாங்க.., எல்லா இடத்திலேயும் தப்பான ஆட்கள் இருக்கத்தான் செய்றாங்க.,  நல்லவங்களும் இருக்கத்தான் செய்றாங்க..,  நீ இப்படி யோசிச்சிப் பாரேன்.., நான் ஒரு நல்ல அரசியல்வாதியா இருக்க மாட்டேன்னு நினைக்கிறாயா“., என்று கேட்டான்.

         அவளுக்கு தான் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை..,  ஆனாலும் அவள் ஸ்டேட்டஸ் என்ற ஒரே காரணத்தை வைத்து.,  அவனிடம்இல்ல நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்துப் போகாது“.,  என்று அதிலேயே பிடிவாதமாக நின்றவள்.,

         அவன் வாங்கிக் கொடுத்த ஜூசை குடிக்காமல் கிளம்ப பார்க்கவும்., அவன்ஹேம் முதல்ல குடிச்சிட்டு  போ”  என்று சொன்னான்.

        ” இல்ல எனக்கு வேண்டாம்“., என்று சொன்னாள்.

      “நான் போய் எங்க வீட்ல நீ சொன்ன பதில் சொல்லணும்.,  உனக்கு சாதகமான பதில் சொல்லனும் நினைச்சா குடி“., என்று சொன்னான்.

        அதை எடுத்து வேகவேகமாக குடித்து முடிக்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின்  பார்வை மாறுவதை நண்பர்கள் உணர்ந்து கொண்டுடேய் என்னடா இப்படி பார்க்குற“., என்று அருகில் இருந்தவன் மெதுவாக கிசுகிசுத்த படி அவன் கையை பிடித்தான்.

            அவனும் சிரித்துக் கொண்டே நண்பனை பார்த்து கண் சிமிட்டி விட்டு., “சரி இப்போ சொல்லு., வீட்டில என்ன சொல்லணும்“.,  என்று அவளிடம் கேட்டான்.,

      அவளோகல்யாணம் வேண்டாம்னு சொல்லுங்க.., புடிக்கலைன்னு சொல்லிடுங்க“., என்று சொல்லும் போது அவள் முகத்தை மட்டுமே வட்டமிட்டுக் கொண்டிருந்த அவன் விழிகள் அவள் இதழில் வந்து நின்றது.,

       அவள் பேசும் போது அவள் உதடசைவதையே பார்த்துக் கொண்டிருந்தவன்., “சொல்கிறேன் கண்டிப்பா சொல்லுறேன்என்றவன் 

        அவள் எழவும் இவனும் கூடவே எழுந்தவன் நண்பர்களிடம் பணத்தை கொடுத்துபே பண்ணிட்டு வாருங்கள்என்று சொல்லிவிட்டு அவளோடு வெளியே வந்தான்.

        அவளிடம்கண்டிப்பா போன உடனே சொல்லிடுவேன்“., என்று சிரித்தபடி சொன்னான்.

          இவளோ அவன் சிரிப்பை கேள்வியாக பார்த்துக்கொண்டே இருந்தாள்.,

       நண்பர்கள் வந்தவுடன் நண்பர்களை அருகில் வைத்துக்கொண்டே அவளிடம்உன்ன ரொம்ப புடிச்சி இருக்குன்னு சொல்லி விடுறேன்“.,  என்று சொல்லி அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிவதையும்., ஏதோ பேச துடித்த உதடுகளையும் பார்த்துக் கொண்டிருந்தவன்.,

            நண்பர்கள் பார்த்துக் கொண்டே இருந்தாலும் ஒற்றைக் கண்ணை சிமிட்டி அவளிடம்கல்யாணத்தப்ப பார்ப்போம்என்று சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து நண்பர்களோடு கிளம்பினான்.,

         இவளோ அதன்பிறகு எதையோ பார்த்து பயந்த குழந்தை போல.,  அதிர்ச்சியில் எப்படி அலுவலகம் வந்து  சேர்ந்தாள்., எப்படி வந்து அவள் இருக்கையில் அமர்ந்தாள்  என்பது கூட தெரியாத அளவிற்கு  இருந்தாள்.

         இவ்வளவு சொல்லியும் அவன் ஏன் இப்படி சொல்லி விட்டு போனான்.,  என்ற அதிர்ச்சியோடு அமைதியாக இருந்தவளுக்கு தெரியவில்லை விதி தன் விளையாட்டை தொடங்கிவிட்டது என்று.

தலையெழுத்தை மாற்றி எழுத யாருக்கும் உரிமை இல்லை., அது விதியின் படி தான் எழுதப்பட்டிருக்கிறது.,

   என் நிழல் கூட
   உன் நிழல் தேடுகிறது
   கைகோர்க்கும் நேரமெல்லாம்
    உன் விரல்கள் கூறிய
    ஆறுதல்  உணர்வை
    இப்போது என் கைகள்
    தேடி தேடி தனியே
    விறைத்து நிற்கிறது.,
    விரல் கோர்க்க
    உன் விரல் வேண்டும்
     என்று

Advertisement