Advertisement

5

இந்த உலகில் எப்போதும் நிலைத்திருக்கும் சக்தி உண்மைக்கு தான் உண்டு.
                – புத்தர்

            கல்யாணப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி பத்து நாட்கள்  கடந்திருந்தது.,

       இப்போது அவளைப் பார்ப்பதற்காக அவள் வேலை செய்யும் கம்பெனிக்கு அருகில் உள்ள ஐஸ்கிரீம் பார்லரில் அவளின் வரவுக்காக காத்திருந்தான் பிரசாத்.

         அலுவலகத்தில் இருந்து கிளம்ப வேண்டிய ஹேமாவோ  “இவங்கள எல்லாம் என்னதான் செய்ய.., என்ன நினைச்சுட்டு இப்படி பண்றாங்கஎன்று சொல்லி தன் தாயையும் தந்தையும் திட்டிக்கொண்டே வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.,

          அருகில் வந்த குழலி தான்ஹேமா கிளம்பு நேரம் ஆகுது.,  அப்பா சொல்லியே அஞ்சு நிமிஷத்துக்கு மேல தாண்டிருச்சி.,  நீ இன்னும் இங்க இருந்து கிளம்புற மாதிரி கூட இல்லை.,  கம்ப்யூட்டர கட்டிக்கிட்டு உட்கார்ந்து இருக்கிறத விட்டுட்டு போய்.,  உன்னை கட்டிக்க போறவரை பார்த்துட்டு வா“.,  என்று  சொன்னாள்.

        அவள் கோபமாக திரும்பிப் பார்த்த ஹேமாவோ., “நீ ஏன் குழலி இப்படி பேசுற, யோசிக்கவே மாட்டியா., அம்மா தான் யோசிக்கவே இல்ல.,  உனக்கு எங்க போச்சு.., அவங்க என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்சு தான் பேசுறியா.., முதல்ல அரசியல்ல ஆனா ஆவன்னா கூட தெரியாத என்னைய கொண்டு போய் ஒரு அரசியல் குடும்பத்தில் கொடுக்க  நினைக்கிறதே தப்பு..,

       அதுமட்டுமில்லாம அவங்க குடும்பத்துக்கும்.., நம்ம குடும்பத்துக்கும் ஒத்து வரவே வராது.., அது கண்டிப்பா தெரியும்., பழக்கவழக்கத்தில்  ஆகட்டும் நடைமுறையாகட்டும்., எல்லா விஷயத்துலயும் அவங்களோட நமக்கு ஒத்துவராது.., 

           எனக்கு தெரிஞ்சி இது ஒத்துவரும் ன்னு தோணல., அதனால எனக்கு பிடிக்கலை.,  இதை நான் எத்தனையோ தடவை வீட்டில் பேசும் போதெல்லாம் சொல்லிட்டேன்., யாரும் காதுல வாங்கிக்கலை, என்ன நெனச்சிட்டு இருக்காங்கன்னு தெரியல.., அவங்க இஷ்டத்துக்கு தான் எல்லாம் பண்றாங்க“., என்று பட படவென பொரிந்தாள்.,

       “ஹேமா ஏன் இவ்வளவு கோபப்படுற., போட்டோ பார்த்திருக்க தானே“., என்றாள் குழலி.

            “எலக்சன்  சீட் கிடைத்து இருக்கு இல்ல., அதனால கூகுள் போட்டாஸ் மட்டும் இல்லாமல்.,  யாரு என்னன்னு மொத்த  டீடெயில்ஸ் ம் வந்தது., அது தான் பேப்பர்ல இரண்டு நாளைக்கு ஒரு தடவை நியூஸ் வருதே., சோ பார்த்து இருக்கேன்“.,  என்றாள்.

         “ஆள் நல்லா தானே இருக்காங்க.,  இதுக்கு மேல என்ன எதிர்பார்க்கஎன்று குழலி வினாவினாள்.

           “ஆள் நல்லா இருந்தா  மட்டும் போதாது.., நமக்கு ஒத்து வருமா.,  நம்ம குடும்பத்துக்கு செட்டாகுமா., இது தான் யோசிக்கணும்., அவங்க எப்படி இருக்காங்க., நல்லா இருக்காங்களாஎன்ன பதவி வருமானம் இதெல்லாம் நமக்கு முக்கியம் கிடையாது.,

       நம்மள பொறுத்த வரைக்கும் நம்ம வீட்டுக்கு ஒத்துப் போகுமா.,  நம்மால் அங்கே நிம்மதியா சந்தோஷமா இருக்க முடியுமா., எல்லாரோடையும் ஒத்துபோகுமா., இந்த மாதிரி நிறைய விஷயங்களை யோசிக்கணும்., சும்மா விரும்பி வந்து கேட்காங்க ன்னு சொல்லுறதாலையோ., ஜாதகம் பொறுந்தி போகுது ன்னு பேசினா மட்டும் சரிவராது புரிஞ்சுக்கோ“., என்று பதிலுக்கு ஹேமா சொன்னாள்.

            “நீ சொல்லுறது எல்லாம்  சரினே இருக்கட்டும்., இங்கே சொன்னதை நிதானமா அங்க வெயிட் பண்ணிட்டு இருக்கிறவர்  கிட்ட போய் சொல்லு.,

         அவர் வந்து ஏதோ ஐந்து நிமிஷம் கழிச்சு தான்., நான் உன்கிட்ட பேச வந்தேன்., இப்ப பேசியே அஞ்சு நிமிஷம் கழிச்சு போச்சு., அப்பா போன் பண்ணி சொல்லி பத்து நிமிஷம் ஆகுது., நீ ஏன் உன் போன் நம்பர் கூட கொடுக்க கூடாது ங்கிற., பாவம் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க“., என்று சொன்னாள் குழலி.

      “போன் நம்பர் தேவை இல்ல., போன் நம்பர்  யாருக்கும் கொடுக்கனும் என்ற கட்டாயமும் கிடையாது“., என்று மீண்டும் படபடப்பாக பொரிந்தாள்.

         “ஓகே ஓகே., உன் போன் நம்பர் யாருக்கும் கொடுக்க வேண்டாம்., போ போயிட்டு பேசிட்டு நீ என்கிட்ட படப்பட ன்னு பொரிஞ்சத., நிதானமா சொல்லு அவங்களும் புரிஞ்சுபாங்க“.,  என்று சொன்னாள்.

            அவளை முறைத்துக் கொண்டே அங்கிருந்து  வேகமாக நகரவும். “ஹேமா  முகத்தை பிரஷ் பண்ணிட்டு போயேன். கொஞ்சம் டல்லா தெரியுற., மணி 3 ஆக போகுது.,  முகம் என்னவோ மாதிரி இருக்கு வா“.,  என்று குழலி அழைத்தாள்.

         “ஒன்னும் தேவை இல்லைஎன்று திட்டியவள்., “பக்கத்தில் வந்திராத நான் இப்படியே இருக்கேன்., போதும் போதும்“., என்று சொல்லிவிட்டு கோபமாக அங்கிருந்து நடக்க தொடங்கியிருந்தாள். அருகில் இருக்கும் ஐஸ் கிரீம் பார்லர் நோக்கி..,


       மதிய உணவு இடைவேளையில் தான் ஹேமாவின் தந்தையிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்திருந்தது., “பிரசாத் கட்சி விஷயமாக சென்னை வந்திருப்பதாகவும்., வேலை முடிந்ததால் மாலை அங்கிருந்து கோயம்புத்தூர் கிளம்புவதற்கு முன் உன்னைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என வருகிறார்., உன் அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஐஸ்கிரீம் பார்லருக்கு வந்தவுடன் எனக்கு போன் செய்வார்., நான் சொன்ன பிறகு., நீ அங்க போய் பாரு“., என்று சொன்னார்.

             அப்பாவிடமும் பொரிந்து தான் தள்ளியிருந்தாள்., “நான் வேண்டாம் ன்னு சொன்னா.,  நீங்க வேணும்னு சொல்றீங்க அப்ப நீங்களே கட்டிக்கோங்க“., என்று அவள் அப்பாவிடம் கத்தவும்.

              அப்பாவும் சிரித்துக்கொண்டே  “என்னடா இப்படி பேசுற., அப்பா உனக்கு என்ன கெடுதலா செய்வேன்.., அவங்களா வந்து விரும்பி கேட்கிறாங்க., நான் என்ன பண்ண முடியும்“., என்று சொல்லி அங்கு நடந்த விவரங்களை அவளிடம் விரிவாக சொல்லிக் கொண்டிருந்தார்.

          “ஒரு அஞ்சு நிமிஷம் போன வை.,  அந்த தம்பிக்கு போன் பண்ணி சொல்லிட்டு., உனக்கு திருப்பி கூப்பிடுறேன்“., என்று சொல்லிவிட்டு வைத்தவர் மீண்டும் அழைத்திருந்தார்.

               அப்போதுதான் அங்கு நடந்த விவரங்களை எல்லாம் ஏற்கனவே சொன்னதை மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார்.

           ஜோசியர் கொடுத்த அலைபேசி எண்ணை வைத்து அழைத்து பேசியிருந்தனர்., நம்பர் வாங்கிய அன்றே பேங்கில் இருக்கும் போதே அழைத்து பேசி.,  அப்போது தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

        எங்கள் மகனின் ஜாதகத்தோடு.,  உங்கள் மகளின் ஜாதகம் ஒத்துப்போவதாக இந்த ஜோசியர் சொன்னார்., என்று ஜோசியர் பெயரை சொன்னார்கள்.,

     அதுமட்டுமின்றி ஜோதிடர் தான் போன் நம்பர் கொடுத்தார்., அதனால் உங்களை நேரில் பார்க்க விரும்புகிறோம்., எப்போது உங்களை பார்த்து பேசலாம் என்று கேட்டுக்கொண்ட பிறகே நித்தியானந்தன் மற்றும் தயாளன் இருவரும் மறுநாள் காலை அவரை வங்கியில் சென்று சந்தித்தனர்.,

       அவருக்கும் தயாளன் அரசியலில் பெரும் புள்ளி என தெரியும்., இருந்தும் தன் மகளை கேட்கிறார்களே என்று நினைத்து அவரும் முதலில் வசதியை காரணம் காட்டி பேச..,  அவர்களோ அதை எல்லாம் பெரிய பொருட்டே கிடையாது.., எங்களுக்கு ஜாதகம் நல்லபடியாக ஒத்துப் போய் இருப்பதால் தான்.., உங்கள் மகளை கேட்கிறோம் என்று பேசியே சந்திரசேகரை சம்மதிக்க வைத்திருந்தார்.,

            பல வருடங்களாக அரசியலில் காலூன்றி நிற்கும் சிறந்த அரசியல்வாதி என்பதை அழகாக பெண் கேட்கும் நிகழ்ச்சியிலும் நிரூபித்து இருந்தார் தயாளன்.,

          அவரும்சரி நான் வீட்டில் கேட்டுவிட்டு சொல்கிறேன்“., என்று சொன்னார்.

        “நாளை நாங்கள் மீண்டும் வருகிறோம்., அல்லது மாலை வரவா எப்போது பெண்ணின் ஜாதகமும் போட்டோவும் கிடைக்கும்“., என்று கேட்டார்.

            அவர்களிடம் அவரும்ஒரு நிமிடம் இருங்கள்“., என்று சொல்லிவிட்டு மனைவியிடம் தெரிவித்து விட்டு.,  மகனுக்கும் அழைத்துப் பேசினார்.

          அவனும் சற்று யோசித்தவன்.,  “சரிப்பா நான் மத்தியானம் வீட்ல போய்., போட்டோவும்., அவளோட ஜாதகத்தையும் பாட்டிட்ட வாங்கிட்டு வரேன்., அதை கொடுத்துறலாம்., அவர்களை ஈவ்னிங் வர சொல்லுங்க.,  நான் ஈவினிங் வந்துடுறேன்“., என்று சொல்லி விட்டு வைத்தான்.

          அதையே சொல்ல மீண்டும் மாலை நேரம் வங்கி அருகில் உள்ள ஹோட்டலில் வைத்து நால்வரும் சந்தித்து பேசிக் கொண்டனர்.

            சந்திரசேகர் மற்றும் வினோத்தின் நடைமுறைகள் நித்யானந்ததிற்கும்.,  தயாளனுக்கும் திருப்தியாக இருக்க.,  சந்தோஷமாக ஹேமாவின் ஜாதகத்தையும் போட்டோவையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தனர்.,

              அதன் பிறகு இரண்டு மூன்று நாட்களில்எங்களுக்கு மிகவும் திருப்தி., இரண்டு மூன்று ஜோதிடரிடம் நாங்களும் ஜாதகத்தை பார்த்து விட்டோம்., நீங்களும் பார்த்துக்கொள்ளுங்கள்“., என்று சொன்னார்கள்.

      அதே நேரத்தில் இவர்களும் இரண்டு மூன்று ஜோதிடரிடம் கேட்டிருந்தனர்.,  இவர்களுக்கும் திருப்தியாகவே இருந்தது.,

           அதுமட்டுமல்லாமல் தற்சமயம் எம்எல்ஏ சீட் அவனுக்கு கிடைத்து இருப்பதாக ஏற்கனவே சொல்லி இருந்தார்., அவர் ஜாதகத்தை வாங்கும் முன்பே கட்சியின் மேலிடம் அவனுக்கு சீட்டு தருவதாகவும்., இந்த முறை ஜெயித்து விட்டால் அடுத்த முறையும் அவனுக்கே  தருவதாக சொல்லி விட்டனர்.

      இந்த முறை எப்படியும் ஜெயித்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு தயாளன் களத்தில் இறங்கியிருந்தார்.,

      ஆனால் அதற்கு முன் ஹேமா பிரசாத் இருவருக்கும் திருமணத்தை முடித்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார் தயாளன்.,

     எனவே தான் வேகவேகமாக ஜாதகம் பார்க்கும் படலமும்., அதன்பிறகான இந்த பேச்சு வார்த்தைகளும்..

        சற்று வேகமாக திருமண விஷயங்கள் நடைபெறுவது போல இருந்தாலும் பெற்றவர்களாக அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் தான்.,

        தயாளனிடம் வேகமாக செல்வது போல இருக்கிறது என்று சொன்னார்.

              அவரும்அப்படி எல்லாம் யோசிக்காதீர்கள்., எலக்சனுக்கு முன் திருமணத்தை முடிக்க வேண்டும்.,  எலக்ஷன் முடிந்த பிறகு என்றால் சொந்தங்களின் எதிர்பார்ப்பு வேறு மாதிரி ஆகிவிடும்“., என்று சொல்லி தன் சொந்தங்களை வைத்து காயை நகர்த்த தொடங்கியிருந்தார்.,

         சந்திரசேகரோ ஒருவேளை சொந்தத்தில் உள்ளவர்கள் அவன் எலக்ஷனில் ஜெயித்து விட்டால் பெண் கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்களோ.,  கட்டாயப் படுத்துவார்களோ., என்று யோசித்தாலும் அவருக்கும் இந்த வரனை விடுவதற்கு மனமில்லாமல் சரி என்று சம்மதித்தார்.

      எந்த தகப்பனுக்கு தான் தன் மகள் நல்ல படியாக வாழ்வது பிடிக்காமல் போய்விடும்., அந்த எண்ணத்திலேயே அவர் சொல்லவும்  இவர்களும் சம்மதித்தனர்.

       இதை சொல்லியே ஹேமாவை இந்த பத்து நாள்களாக ஆளாளுக்கு மூளைச்சலவை செய்ய முயற்சி செய்தாலும்., ஹேமா பிடிவாதமாக வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.,

        அவன் புகைப்படத்தையும் எத்தனை முறை பேப்பரில் பார்த்து இருக்கிறாள்.,  அண்ணன் மூலமாக வாட்ஸ் அப்பில் போட்டோ வந்தாலும் ஏனோ அவளுக்கு அப்படி ஒன்றும் திருமணம் என்ற விஷயம் மனதில் பதிவது போல தோன்றவில்லை.,

         ஆழப் பதியா விட்டாலும் அவளுடைய எண்ணம் எல்லாம்அவனுடைய பதவியும்., அவர்களுடைய அரசியல் செல்வாக்கு மட்டுமே.., அது மட்டுமல்லாமல் அரசியலில் உள்ளவர்களை பற்றிய சில பல விஷயங்களைக் கேள்விப்பட்டு..,

       அவளுக்கு இவனும் அதுபோல் மாற மாட்டான் என்று என்ன நிச்சயம்“.,  என்ற பயமே முதல் பயமாக இருந்தது., அதனாலேயே வேண்டாம் என மறுத்து கொண்டிருந்தாள்.

        அப்படியும் வீட்டில் உள்ளவர்கள் கட்டாயத்தின் பேரில்., இப்போது அவன் பார்க்க வந்திருப்பதாக சொல்ல வேறுவழியின்றி படிகளில் இறங்கி கொண்டிருந்தவள்., வாசலுக்கு வரும் போதே நன்றாக முகம் வாடி., வியர்ந்து போய் தான் இருந்தாள்.

             எதையும் யோசிக்காமல் முகத்தைக்கூட அதிகமாக துடைத்துக் கொள்ளாமல்., லேசாக ஒற்றி எடுத்தவள் நிதானமாக நடந்து அந்த ஐஸ்கிரீம் பார்லருக்கு வந்து சேரும் போது அவள் தந்தை சொன்னதிலிருந்து 15 நிமிடங்கள் கழிந்து இருந்தது.

          அங்கு காத்திருந்த பிரசாத்தும் வீட்டில் நடந்தவைகளை தான் யோசித்துக் கொண்டே இருந்தான்.,

        அருகில் நண்பர்கள் இருந்தாலும் அவன் மௌனமாக அமர்ந்திருப்பது எதையோ யோசித்துக் கொண்டே இருக்கிறான் என நண்பர்கள் புரிந்துகொண்டனர்.

           கட்சி விஷயமாக வந்திருந்தாலும் இவளைப் பார்க்க வேண்டும் என்று முடிவு ஏற்கனவே எடுத்திருந்ததால்.,  நண்பர்களை அழைத்துக் கொண்டு வந்தான்.,

             தன் தந்தையிடம் மட்டும் அவளை நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்லி இருந்தால் வீட்டில் மற்ற யாருக்கும் இவன் பார்க்க வந்தது தெரியாது.

        ஜோசியர் சொன்ன இரண்டாம் நாள் மாலையே பெண்ணின் ஜாதகம் புகைப்படத்தோடு தந்தையும் அண்ணனும் வந்து அமரவும்., அம்மா மட்டும் முகம் தூக்கிக் கொண்டிருந்தார்.

       அமைதியாக இருக்கும் போது ஜாதகம் போட்டோ அடங்கிய கவரை பிரித்து பார்க்காமல் கையில் வைத்திருந்த தயாளன்., “இங்க பாரு தம்பி  ஜாதகமும் போட்டோவும் கையில வாங்கிட்டு வந்து இருக்கேன்., இன்னும் பிரிச்சு கூட பாக்கல., ஜாதகம் பொருந்தி இருக்குன்னு சொல்லி இருக்காங்க.,

          அப்படியும் ஒரு ரெண்டு மூணு ஜோதிடரை பார்க்க தான் போறோம்., நம்ம குடும்ப ஜோசியர் சொன்னாலும்.,  அதை தவிர இன்னும் வெளியே  பார்த்துட்டு தான் நம்ம முடிவு பண்ணுவோம்.,

           அதனால நான் எடுத்தோம்.,  கவுத்தோம் ன்னு முடிக்க வேண்டாம்,   இப்பவும் பேசிட்டு வந்திருக்கோம்.,  ஜோசியருக்கு போன் பண்ணி சொல்லி இருக்கேன்., அவரு இப்ப வரேன்னு சொல்லி இருக்காரு., ஜோசியர் வந்து ஜாதகத்தை பார்க்கட்டும் அதுக்கப்புறம் நம்ம பொண்ணு போட்டோவை பார்த்தா போதும்“., என்று சொன்னார்.

        அனைவரும் அமைதியாக இருந்தனர் அதன் பின் சற்று நேரத்தில்  ஜோசியர் வந்து விட ஜாதகத்தை மட்டும் எடுத்து அவர் கையில் கொடுக்க., அவரும் இருவர் ஜாதகத்தையும் பார்த்து விட்டு., சோவி போட்டு பார்த்துவிட்டு அவர் கணித்த பலன்களை சொல்ல தொடங்கியிருந்தார்.

          “ஏற்கனவே சொன்னது தான் இந்த ஜாதகம் நன்றாக பொருந்தி வருகிறது.,  இந்த பெண்ணின் ராசிப்படி நீ அமோகமாக வாழ்வாய்., நீ ஆசைப்பட்டது கிடைக்கும்., தொட்டதெல்லாம் துலங்கும்.,  எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்.,  ஆனால் உங்கள் வீட்டிற்கு உள்ள அதே ராசி தான் இந்தப் பெண்ணுக்கும் இருக்கிறது., முதல் இரண்டு மூன்று வருடங்கள் சற்று குழப்பம் பிரச்சனை எல்லாமே இருக்கத்தான் செய்யும் விட்டுக்கொடுத்து போக முடியுமா என்று பார்த்துக்கொள்ளுங்கள்“., என்று சொன்னவர். “தாராளமாக முடிக்கலாம்என்று சொல்லிவிட்டார்.

         “என்ன உங்கள் பையனுக்கு சீட்டு கிடைத்ததா“.,  என்று தயாளன் இடம் கேட்டார்.

             தயாளன்நாங்க ஜாதகம் வாங்கறதுக்கு முன்னாடியே கட்சி ஆபீஸ்ல பேசிட்டோம்., தர்றேன் ன்னு சொல்லிட்டாங்க“.,  என்று சொன்னார்.

      எல்லாம் நல்ல முறையில் நடக்கும் என்று ஜோசியர் சந்தோஷமாக கிளம்பிவிட்டார்.,

        ஆனாலும் இதில் திருப்தி இல்லாத சொர்ணம்வெளியே பார்க்க வேண்டும்“., என்று சொன்னார்.

          ஜாதகத்தை கையில் கொடுத்தவர்நன்றாக பார்த்துக்கொள்., எத்தனை ஜோசியரை வேண்டுமானாலும் போய் பார்த்துக் கொள்“., என்று கையில் கொடுத்துவிட்டு போட்டோ இருந்த கவரை பிரசாத் கையில் கொடுத்துநீயே பொண்ண பாரு“., என்று சொன்னார்.

       அவனும் பார்ப்பதற்கு தயங்கியபடி கையிலே வைத்துக் கொண்டிருக்க.,

     கலா தான்தம்பி நீங்க பார்க்கிறீங்களா., இல்ல நான் பார்க்கவா“., என்று கேட்டார்.

           கவரை பிரிக்காமல் கலாவின் கையில் போட்டோவை கொடுத்து விட்டான்., கலா போட்டோ கவரில் இருந்து எடுத்துப் பார்த்தவள் சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு.,

       

Advertisement