Advertisement

சரி சுற்றுவட்டாரத்தில் சொந்தத்தில் சொல்லி வைக்கலாம்., திருமண தகவல் நிலையத்திலும் பதிந்து வைக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தனர்.

       பாட்டி கேட்டுக் கொண்டே இருந்தவர் இன்னும் வேறு எந்தெந்த கோயில்களுக்கு இவளை போய் வர சொல்லலாம் என்பதை பற்றி யோசனையோடு இருந்தார்., அவள் கோயிலுக்கு செல்வது பற்றியும்  அவளுடைய விரதங்களை பற்றியும் பாட்டி அறிந்திருந்தால்., இன்னும் அதிர்ச்சியாகி இருப்பார்.,

        ஏனெனில் அவளை பற்றி தெரிந்த அவள் தோழிகளுக்கு மட்டும் தானே தெரியும்., என்ன விரத நாள் என்று பார்த்து பாட்டி சொன்னாலும் காலையில் சென்று சாமி கும்பிட்டுவிட்டு வருபவள்.,  பகல் வேளையில் விரதத்தை எதையும் கடைபிடிப்பது எல்லாம் கிடையாது என்பது., இருந்தாலும் இதை தெரியாத பாட்டி  திட்டங்கள் போட்டுக் கொண்டு இருந்தார்.,  பேத்தி தன் பேச்சை தட்டமாட்டாள் என்ற நம்பிக்கையோடு.,

        இப்படியாக ஒருவாரம் கழிந்து இருக்க., தற்செயலாக தயாளன் போன் செய்து ஜோசியரிடம் பேசுவதாக சொல்லிக்கொண்டிருந்தார்.,

      ஏனெனில் குடும்ப ஜோசியர் என்ற முறையில் அவர் சொன்னதை தயாளன் நம்பினாலும் சொர்ணம் நம்ப தயாராக இல்லை., 

     ஏற்கனவே இரண்டு மூன்று ஜோசியர் வரை சென்று பார்த்துவிட்டு வந்தவருக்கு சற்று கவலை அதிகரிக்கவே தொடங்கியிருந்தது., சிலரும் கிட்டத்தட்ட இதே பலன்களை சொல்ல.., மற்றவர்களோநீங்கள் வேறு பெண்களை திருமணம் செய்து வைத்தாலும் அந்த வாழ்க்கை நிலைக்குமா என்று தெரியாது அதையும் பார்த்துக் கொள்ளுங்கள்‘., என சில வார்த்தைகளை விட்டிருக்க சற்று கவலை தோய்ந்த முகத்தோடு சுற்றிக் கொண்டிருந்தார்.,

       எனவே இன்று மீண்டும் தங்கள் குடும்ப ஜோசியரிடம் விவரங்களை கேட்டுக் கொள்ளலாம் என்று தயாளன் அழைக்க போவதாக சொன்னார்., குடும்ப உறுப்பினர்கள் அங்கு தான் இருந்தனர்.

           பிரசாத்எது வந்தாலும் விதிப்படி நடக்கட்டும்., தினமும் வீட்டில் பஞ்சாயத்து சந்திக்க வேண்டும் என்று விதி இருந்தால் யாரால் மாற்ற முடியும்‘., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

       ஆனாலும் அவனால் அதை அவ்வளவு சுலபத்தில் ஏற்க முடியவில்லை.,  ஏனெனில் வளர்ந்த விதம் அப்படி இருக்க அவன் மனமும் அடித்துக்கொண்டது.,  என்ன செய்வது என்று தெரியாமல். இப்போது அவனுக்கு இருந்த ஒரே எண்ணம் தான் அரசியலில் பெரிய ஆளாக வரவேண்டும்., கடமைக்காக ஒரு திருமணம் செய்து கொள்ளலாம்., ஆனால் வரப்போகும் பெண்ணின் மனநிலை தெரியவில்லை., இது கடமைக்காக செய்யும் திருமணம் ஆக இருக்கட்டும்., கடமைக்காக வாழும் வாழ்க்கை ஆக இருக்கட்டும் என்று மனதில் நினைத்து கொண்டான்.

           கடமைக்காக திருமணம் என்று நினைத்துக் கொண்டாலும் போக போக சரியாகி விடும் என்று நம்பிக்கையோடு இருந்தான்., அவனால் அவன் நண்பர்கள் சொன்னது போல எல்லாம் நடந்து கொள்ள முடியாது என்பது அவனுக்குத் தெரியும்., அவன் மன கவலையோடு ஒரு நாள் பேசிக் கொண்டிருப்பதை நண்பர்கள் கேட்டுவிட்டு அனைவரும் ஜாதகம் பார்த்த மறுநாள் கூடி பேசினர்.

         அப்போது நண்பர்களில் ஒருவன் தான்கல்யாணம் பண்றது பண்ணிக்கோ.,   ஊர்ல  தெரியாமல் மற்றபடி யாரும் இல்லையா அந்த மாதிரி நீ பாத்துக்கோ., உனக்கு புடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கை ஏற்படுத்திக்கோஎன்று சொல்ல முதலில் சற்று நேரம் அமைதியாக இருந்தவன்.,

         பின்பு அவனிடம்என்னால் அப்படி எல்லாம் ஒரு வாழ்க்கை வாழ முடியாது., அப்படி ஒரு வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைத்து இருந்தாலோ., இல்லை பிற பெண்கள் மேல் தவறான எண்ணங்கள் வந்திருந்தாலோ என் வாழ்க்கை இதற்குள் திசைமாறி போயிருக்கும்., ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் வாழ்க்கை என்பது ஒருத்தியோடு தான்“., என்றான்.

       “அப்படின்னு நீ யோசிக்க., ஆனா உங்க அம்மா வேற மாதிரி யோசிப்பாங்க., அதை யோசிச்சியா“., என்று கேட்டனர்.

       “தெரியும் தெரியும்., அம்மா ஜோசியர் இருக்கும் போதே அப்படித்தான் கேட்டாங்க., பார்மாலிட்டி கல்யாணம் பண்ணிட்டு., அதுக்கப்புறம் வேற பார்த்துக்கலாம்., என்று சொன்னப்ப தான்.,  ஜோசியர் கோவப்பட்டு நம்புனா நம்புங்க நம்பாட்டி போங்க ன்னு சொல்லிட்டாரு“., என்றான்.

         நல்லுள்ளம் கொண்ட மற்றொரு நண்பனும்பெண்பாவம் பொல்லாதது அதையும் பார்த்துக்கோங்க“., என்றான்.

         “ஆமா., அம்மா ட்ட அதையும்  அந்த ஜோசியர் சொன்னாரு., பெண் பாவம் பொல்லாதது இல்லாத சாபம் எல்லாம் வாங்கி விடாதீர்கள்., என்று சொன்னாரே“.,  என்று சொன்னான்.

       “சரி விடு எதைப்பற்றியும் யோசிக்காத.,  எல்லாம் நல்லதாகவே நடக்கும்“., என்று நண்பர்கள் ஆறுதல் சொல்லி இருந்தனர்.,

           அதை தற்போது நினைத்துக் கொண்டவன். ‘கடவுள் கடைசில எனக்கு இப்படி ஒரு  டார்கெட் வச்சிருக்கான் எனக்குத் தெரியாதே‘., என்று நினைத்தான்.

      வரப்போகும் வாழ்க்கை  சாபமா வரமா என்று தெரியாமலேயே.

          தயாளன் ஜோசியருக்கு அழைக்கவும்.,

        ஜோசியரும்என்ன ஆயிற்று.,என்ன விஷயம்“., என்று சாதாரணமாக கேட்டார்.

          “இல்ல அன்னைக்கு நீங்க சொல்லிட்டு போன அந்த மாதிரி ஜாதகம் அமைய மாட்டேங்குதே., நாங்களும் ரெண்டு மூணு இடத்துல கேட்டு பார்த்தோம்., எதுவும் அமையலை.,  அன்னைக்கு என்னோட மனைவி வாங்கி வைத்திருந்த ஜாதகமும் பொருந்தவே இல்லை., நீங்க சொன்னீங்க.,  பார்க்காமலேயே  தூக்கி போட்டீங்க இந்த ஜாதகம் பொருந்தம் இல்லை ன்னு., அதே மாதிரி வெளியே போய் பார்க்கும் போது ஜாதகப் பொருத்தமில்லை., இந்த பொண்ணுங்கள முடிக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க.., இப்ப என்ன செய்ய“.,  என்று கேட்டார்.

            ஜோசியரும் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.,  உங்க பையன்  நல்ல நேரமா இல்ல அவனுக்கு கல்யாணம் நேரம் கூடி வந்திடுச்சா ன்னு தெரியாது.,  உங்க வீட்ல ஜாதகம் பார்த்து வந்த அன்னைக்கு சாயங்காலமே என்ட்ட தற்செயலா ஒரு பாங்க் மேனேஜர் அவர் பொண்ணு கல்யாணத்துக்காக ஜாதகம் பார்க்க வந்திருந்தார்., அந்த ஜாதகம் உங்க பையன் ஜாதகத்தோடு நல்ல ஒத்து போவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கு.,  நான் சொன்ன ராசி லக்னம் நட்சத்திரம் எல்லாம்  இருக்கு.., அந்த பொண்ணோட ஜாதகப்படியும்., கிரக சூழ்நிலையும்., உங்க குடும்பத்துக்கு வந்த அதே நேரம் காலம் எல்லாம் அந்த பொண்ணுக்கும் இருக்கு.,

         நான் உங்களுக்கு சொன்னேன் இல்ல., ரெண்டு மூணு வருஷத்துக்கு குழப்பங்கள் சிறு பிரச்சினைகள் இருக்கும் ன்னு., அதே மாதிரி அந்த பொண்ணு ஜாதகமும் இருக்கு., அதனால அந்த ஜாதகம் உங்க குடும்பத்தோட ஒத்து போற மாதிரி எனக்கு தோணுச்சு.,

          ஆனாலும் அதை எப்படி நான் உங்ககிட்ட சொல்ல முடியும்., அதனால அந்த பேங்க் மேனேஜரோட போன் நம்பர் மட்டும் வாங்கி வச்சிருக்கேன்“., என்று சொல்லி அவர் குடும்ப விபரங்களை சொன்னார்.

           இவரும்நீங்க போன் நம்பர் குடுங்க நான் முதலில் நேரில் பேசிப் பார்க்கிறேன்.,  அதுக்கப்புறமா பேசுவோம்“.,  என்று சொன்னார்.

     “சரி  இருங்க தர்றேன்என்றவர் பேப்பரில் எழுதி வைத்த பேங்க் மேனேஜர் அலைபேசி எண்ணை கொடுத்து விட்டு., குறிப்பிட்ட பிரபல அரசு வங்கியை சொல்லி அந்த வங்கியின் தலைமை அலுவலக மேனேஜர் என்றும் அவரது பெயர் சந்திரசேகர் என்றும் குறிப்பிட்டார்.

          பின்பு குடும்ப விவரங்களாக வினோத்தை பற்றியும்., ஹேமாவின் அம்மா கவிதாவை பற்றியும் சொல்லியவர்., அவர்களது குடும்பத்தை பற்றிய சிறுகுறிப்போடு முடித்துக்கொண்டார்.,  நீங்களே பேசி முடிவு பண்றதுனாலும் முடிவு பண்ணிக்கோங்க., இல்ல நீங்க பேச முடியாதுன்னா சொல்லுங்க., என் கிட்ட கூட்டிட்டு வந்த ஆளை விட்டு  பேச சொல்றேன்“.,என்று சொன்னார்.

          “இல்ல எதுவா இருந்தாலும் நம்ம நேரில் பேசுவோம்.,  இது கல்யாண விஷயம் இல்லையா“., என்று சொல்லி விட்டு மற்றவற்றை பேசிக்கொண்டிருந்தனர்.

       பின்பு ஜோசியரிடம் நன்றி சொல்லி போனை வைத்தவர் குடும்பத்தில் விபரத்தை சொன்னார்.

          நித்தியானந்தம்அப்பா ரொம்ப குறைஞ்ச  ஃபேமிலி இல்லப்பா., பேங்க் மேனேஜர் தானே., ஒன்னும் பிரச்சனை இல்ல., ஓரளவுக்கு நல்ல படியாக  வளர்ந்தவர்களா தான் இருப்பாங்க., 

         என்ன நம்ம அளவுக்கு பணம் அந்த மாதிரி பழக்கம் இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு நல்ல லெவலில் தான் இருந்திருப்பார்கள்., மேனேஜர் னா கேட்கவா செய்யணும்., நல்ல படிப்பு நல்ல ஸ்கூல் ன்னு  எல்லாமே நல்லாதான் இருந்திருக்கும்.,

      அவங்க அம்மா வேலைப்பார்ப்பதா நீங்க சொல்ற ஸ்கூல் வந்து நம்ம ஊரிலேயே பாப்புலரான ஸ்கூல்., அந்த ஸ்கூல்ல பிரின்ஸ்பல் அப்படி இருக்கும் போது இன்னும் ஒரு அளவுக்கு ஸ்டடிஸ்.,  ஒழுக்கம் எல்லாமே கரெக்டா இருக்கும்“.,  என்று சொன்னான்.

        பின்பு அவளது அண்ணனாக இருக்கும் கஸ்டம்ஸ் அலுவலக அதிகாரி பற்றி சொன்னார்.

       “அப்பா ஓகே பா., எல்லாமே நல்ல செட் ஆகுது., பொண்ணு..?”.,  என்று கேட்டான்.,

பி.  முடிச்சு இருக்கும் போல.,  சென்னையில் ஏதோ  கம்பெனில ஒர்க் பண்ணுறதா  சொன்னாங்க“., என்றார்.

     “பழக்கவழக்கம்.,  பேச்சு நடவடிக்கை எல்லாமே ஓரளவுக்கு நல்ல டீசண்டான குடும்பம் தான்., நம்ம மேற்கொண்டு பேசலாம்“., என்று நித்யானந்தன் சொல்லும் போதே பிரசாத்தை பார்த்தான்.

          பிரசாத் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருக்கும் போதுஏன்டா உனக்கு ஓகேன்னா சொல்லு., இல்லாட்டி பேச வேண்டாம்“.,  என்று மீண்டும் நித்தியானந்தன் பிரசாத்திடம் பேசினான்.

       பிரசாத்அதெல்லாம் ஒன்னும் இல்ல.,  பாருங்க பார்க்கலாம்., அப்பா நீங்க முதல்ல ஜாதகம் வாங்கி பாருங்க.,  ஜோசியர் சொன்ன அது இதெல்லாம் ஒத்துப்போகுதா ன்னு பார்த்துட்டு அதுக்கப்புறம் பேசுங்க., அதுவரைக்கும் அவசரப்படாதீங்க“., என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

        அவரும்சரிடா முதல்ல உன்னோட சீட்க்கு பேசுறேன்., அப்புறம் ஜாதகம் எல்லாம் ஒத்து போறதா இருந்தா மட்டும் தான் மேற்கொண்டு பேசுவோம்“., என்று சொன்னார்.,

         “ஜாதகம் ஒத்துப்போய் எல்லாமே சரியா இருக்கு னா தான்டா பண்ண போறோம்.., ஜோசியர் சொன்னாரு என்ன நட்சத்திரம்., ராசி., லக்னம் எல்லாம் அதே மாதிரி இருக்கு., கிரக சூழ்நிலை உங்க குடும்பத்துக்கு ஒத்துப்போற ஜாதகம் ன்னு எல்லாம் சொல்லி இருக்காரு.,  இன்னொரு முறை பார்த்துருவோம்.,  பார்த்துட்டு தான் முடிவு பண்ணனும்“.,  என்று சொன்னார்.

        சொர்ணம் மட்டும் பதில் சொல்லாமல் அழுத்தமாக முகத்தை வைத்துக் கொண்டு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருந்தார்., அவர் பானுவிற்கு போன் செய்து அனைத்து விஷயங்களும் ஒப்பிக்க., அம்மாவிற்கு தப்பாத மகளாக அவளுக்கு இஷ்டமில்லை என்பதை தெளிவாக உரைத்தாள்.,

        ஆனாலும் வீட்டில் பேச்சுவார்த்தை ஓடிக்கொண்டு தான் இருந்தது., கலா மட்டும் தான்அந்த ஜோசியரிடம் பார்க்கிற மாதிரியே இன்னும் ரெண்டு பேர்ட்ட  கேட்கனும்  மாமா.,   யார் என்ன சொல்றாங்க ன்னு பார்த்துக்கலாம்“.,  என்று சொன்னாள்.

       “ஆமாமா.,  ஓரிடத்தில் பார்த்து முடிக்க போறது  கிடையாது., இரண்டுமூன்று பேர்ட்ட  பார்ப்போம்., எல்லாம் நல்லபடியா நடக்கும் ன்னு நம்புவோம்“., என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே

     நித்தியானந்தன் அப்பா எதுக்கும் கட்சி ஆபீஸ்ல கூட பேசி என்ன முடிவுன்னு உறுதியா பார்த்துக்கோங்க., இன்னும் சீட் பத்தி அவங்க ஏதும் பதில் சொல்லலை“., என்றான்.

      “சரிடா பார்த்துக்கிறேன்“., என்று அவரும் சொல்லிக்கொண்டிருந்தார்.

      எங்கு சுற்றினாலும் விதியின் வழி தான்., நம் பாதைகளில் கல்லும் முள்ளுமா.,  அல்லது  பூவும் பஞ்சுமா., என்று தீர்மானிப்பது.,  விதி வலியது.

   
     எப்போது புரியும்.,
     யாரையும் நினைக்காத
     இடத்தில் தான்
     உன்னை வைத்திருக்கிறேன்.,

        நீ மட்டும் அறியவும் முடியும்
       நுழையவும் முடியும்.,
       அங்கு நீ மட்டும் தான்
        உரிமையானவள்.,
        என் உடமையானவள்.,

Advertisement