Advertisement

4

உண்மைக்கு மகத்தான சக்தி உண்டு. அதை எவராலும் மாற்றிடவோ மறைத்திடவோ இயலாது. உண்மையை அழிக்கும் சக்தி எவருக்கும் இல்லை.
                     – புத்தர்



                கார் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது.,  காரில் வேகமாக டிரைவ் செய்து கொண்டிருந்தான் பிரசாத்.,  அவனுக்கு துணையாக அவனது நண்பன் இருந்தான்.

           எதுவும் பேசாமல் பிரசாத் ரோட்டை மட்டும் பார்த்தபடி காரை ஒட்டிக்கொண்டு இருந்தான்.,

         பிரசாத்தின் நண்பனுக்கு தான் நண்பனின் முகம் இப்படி இருப்பது தாங்காமல்பிரசாத் வண்டிய ஓரமா நிறுத்து.., சொல்றேன்ல“.,  என்று சொன்னான்.

         “எதற்கு“., என்று கேட்டபடி ஒரமாக நிறுத்தினான்.

       அவனிடம்இந்த பக்கம் வந்து உட்காரு., நான் ஓட்டுறேன்“., என்று சொன்னான்.

        “வேண்டாண்டா., கொஞ்ச நேரம் ஓட்டுறேன்“., என்று சொன்னான்.

          “இல்ல., உன் மனசு சரியில்ல.,  அதனால நீ இப்படி வந்து உட்காரு.,  நான் ஓட்டுறேன், எதுவா இருந்தாலும் பேசி நம்ம பேசிக்கலாம்“.., என்று சொன்னான்.

           நண்பன் கைக்கு கார் மாறிய உடன் அமைதியாக வந்தான்.

                நண்பனுக்காக அவனும் நிதானமாகவே காரை ஓட்டினான்.,  “சொல்லுடா., உன் மனசுல என்னவோ குழப்புது“., என்று கேட்டான்.,

           “இல்ல எத்தனை பேரு எனக்கு சாபம் கொடுத்து இருப்பாங்க“., என்று கேட்டான்.

      “ஏன்டா இப்படிலாம் பேசுற“., என்று கேட்டான்.,

              “இல்ல நான் தகுதி குறைந்து பழக மாட்டேன்., வசதி குறைந்தவங்கட்ட  பேசமாட்டேன்., ன்னு இப்படி எல்லாம் நான் எத்தனை வட்டம் போட்டு விலகி இருந்து இருப்பேன்., ஸ்கூல் காலேஜ்ல எல்லார்ட்டையுமே இப்படி தானே இருந்தேன்., அதுக்கு தானோ என்னவோ தெரியல கடவுள் எல்லாரையும் குறைச்சே எடை போடத., நீயும் ஒன்னா இருந்து பழகிக்கோ ன்னு.,  வாழ வச்சிட்டார் போல., என் ஜாதகம் எப்படிடா அப்படி அமைந்தது.,

       அம்மா ஏத்துக்க மாட்டாங்க..,  அதுவும் ரொம்ப பார்ப்பாங்க., கண்டிப்பா வசதி குறைவான பொண்ண ஏத்துக்க மாட்டேங்குறாங்க.., அப்பா ஜாதகத்தை முழுசா நம்பராங்க., அவங்க வசதி பற்றி யோசிக்க வேண்டாம் பொண்ணு நல்லா இருந்தா போதும் ன்னு யோசிக்கிறாங்க.,  அண்ணி  தான் பொண்ணு நல்லா இருந்தா போதும்.,  தம்பி லைஃப் நல்லா இருந்தா போதும் ன்னு சொல்றாங்க..,

        நாள பின்ன அண்ணி அவங்க குடும்பத்து முன்னாடி வசதி காரணங்காட்டி ஒதுக்க மாட்டாங்க ன்னு என்ன நிச்சயம்., இந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கு இல்லடா“..,  என்று சொன்னான்.

        நண்பனுக்கு புரிந்துவிட்டது., அவன் அப்பா கிட்ட தட்ட ஜோசியர் சென்ற பிறகு அரை மணி நேரமாக இவனுக்கு மூளை சலவை செய்தது வேலை செய்து விட்டது.,  என்று அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.

       கிட்டத்தட்ட ஜோசியர் சென்ற பிறகுபணம் என்பது இரண்டாம் பட்சம்.,  உன்னுடைய பதவி., உன்னுடைய தொழில் இதைப் பற்றி யோசி.,  மணப்பெண் நல்லவளாக இருந்தால் போதும்., அவளுடைய ராசி நட்சத்திரம் உன்னை உயர்த்தும் எனும் போது வசதி எதற்காக பார்க்கனும்“.., என்று அவர் பிடிவாதமாக நிற்க கடைசியில் வேறு வழியின்றி அவர் பேச்சுக்கு இவனும் தலையாட்டும் படி ஆயிற்று.,

          ஆனால் சொர்ணம் அப்படி எல்லாம் நடக்க விடமாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருக்க., நித்யானந்தம் என்னமோ செய்யுங்கள் போங்க என்று சொல்லிவிட்டு அவன் தொழிலைப் பார்க்க கிளம்பிவிட்டான்.,

            மனதிற்குள் வேண்டாம் என்று தோன்றினாலும்., அம்மாவுக்கும் வரப்போகும் பெண்ணுக்கும் நிச்சயமாக ஒத்துப்போகாது என்று தோன்றினாலும்.,  கலா வீட்டின் முன் தம்பி எதுவும் வருத்தப்பட்டு விடுவானோ என்ற எண்ணமும் இருந்தது.,

        ஆனால் தயாளனின் பிடிவாதம் நித்தியானந்தனுக்கு தெரியும் ஆதலால் அவனை தலையாட்ட வைத்திருந்தது., 

        “என்ன பெரிய வசதி  பொண்ணுக்கு நாம நகை போட்டு கல்யாணம் பண்ணிக்குவோம்.,  இதில் என்ன இருக்கு., நம்ம வீட்டுக்கு வர்ற பொண்ணு நம்ம பொண்ணு அப்படி ன்னு நினைச்சிப்போம்., என்ன இப்ப அடுத்து ஏதாவது சொத்து வாங்கினா., அந்த பொண்ணு பேர்ல வேணா வாங்கி போடுவோம்., வந்த பொண்ணுக்கு சொத்து இருக்கனும் மத்தவங்க முன்னாடி நீ பெருமையா சொல்லிக்க நினைச்சா., நமக்கு எவ்வளவோ வருமானம்., எப்படி எப்படி எல்லாமோ வருது., அதுல ஏதோ ஒன்னு அந்த பொண்ணு பேர்ல செய்வோமே“., என்று சொன்னார்.

         சொர்ணமோ., “ஏன் அப்படி  நாம வர்றவ பேர்ல வாங்கனும்.., நான் பானு ட்ட சொல்றேன்“., என்று பானுவிற்கு போன் செய்தார்.

           பானு ஒரு பாடு பேசி முடித்து.,  முடியாது என்று அங்கிருந்து சொல்ல இப்படியாக பிரச்சனை பெரிதாக தொடங்கவும் தான்., பிரசாத் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

          நண்பனும் அவனோடு கிளம்பி விட்டான்., இப்போது அதைப் பற்றி பேசிக்கொண்டே இருக்க., பிரசாத் யோசனைக்கு சென்றாலும் அவன் மனம்பார்க்கலாம் வாழ்க்கை என்ன வைத்திருக்கிறது என்றுஎன்ற யோசனையோடு அமைதியாக அமர்ந்து விட்டான்.

            அவன் மனம் முழுவதும் தான் மற்றவர்களிடம் ஒதுக்கம் காட்டியது தான் இன்று தனக்கு சாபமாக மாறி விட்டதோ என்று நினைத்தான்.,

           அப்போது அவனுடைய நண்பன்ரொம்ப யோசிக்காத டா., எல்லாமே நல்லதுக்கு தான்னு நினைச்சி பாரேன்., லைஃப்ல எல்லாமே எல்லாருக்கும் ஒன்னு போல அமைந்துவிடுவது இல்ல., நீ இப்படி யோசிச்சிப் பாரேன்., எவ்வளவு தான் வசதியான வீட்டில் பிறந்து வளர்ந்தாலும்., பப்., பார்ட்டி., பார்லர் ன்னு சுத்துற பொண்ணுங்க இருக்காங்க., அதே மாதிரி அப்படி சுத்தாத பொண்ணுங்களும்  இருக்காங்க.,

      அப்படி தான்டா நார்மல் லைஃப் இருக்குற பொண்ணுங்களுக்கு ., குடும்பத்தில் அட்ஜஸ் பண்ணி போக தெரியும்., பிடிவாதம் பிடிக்காதவங்களா இருப்பாங்க.,  குடும்பம் என்றால் என்னவென்று புரிந்து நடந்துப்பாங்க.,

      இதே இது வசதியான பொண்ணுங்க னா., நானும் வசதியா தான் வாழ்ந்தேன்.,  நான் மட்டும் எதுக்கு உங்க வீட்டு ஆட்களுக்கு அட்ஜஸ்ட் பண்ணனும் சொல்லிட்டு எதிர்த்து பேசுவதற்கான வாய்ப்பு இருக்கு., ஆனா  நார்மலா வளர்ந்த பொண்ணுங்க அட்ஜஸ்ட் பண்ணிடுவாங்க.., அப்படி யோசிச்சு பாருடா“.., என்று சொன்னான்.

          அவன் மனதிற்குள் பார்க்கலாம் என்ற எண்ணம் வர., முதல் முறையாக நண்பனிடம்நான் இப்ப அதைப்பற்றி யோசிக்கலைடா.,  அதுக்கப்புறம் என் தலை உருளும் அது தான் யோசிச்சிட்டு இருக்கேன்., அப்படி ஒரு பொண்ணு மட்டும் வந்துச்சுன்னா., எங்க அம்மா கண்டிப்பா டெய்லி வீட்ல ஒரு பஞ்சாயத்தை கூட்டிடுவாங்க.,

         அப்பா பாதிநாள்  டெல்லில இருப்பாங்க., சப்போஸ் எனக்கு சீட் கிடைச்சு ஜெயிச்சா., நான் அடிக்கடி சென்னை போக வேண்டியது இருக்கும்.,  அப்ப வீட்ல யோசிச்சு பாரு அண்ணன் பாவம் தான்., சில நேரம் கண்டுக்க  மாட்டாங்க., அப்புறம் அம்மாவுக்கும் என்னைய கட்டிக்க போறவளுக்கும் தினம் ஒரு பஞ்சாயத்து நடக்கும்., 

      தினமொரு சண்டை வரும்., அப்புறம் போன் வரும்., அம்மா ஒரு பக்கம் பேசுவாங்க.,  அந்த பொண்ணு ஒரு பக்கம் பேசுவாங்க.,  நானும் அப்பாவும் தலையை பிச்சுக்க வேண்டியது தான்., வீட்டிலுள்ள ஆம்பளைங்க நிலைமை ரொம்ப மோசமாகி விடும்“.., என்று சொன்னான்.

         “நீ ரொம்ப யோசிக்காத டா விடு., எல்லாம் நல்லபடியாக நடக்கும்., என்று நம்பு“.., என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தனர்.

        அதே நேரம் அங்கு ஹேமாவின் அப்பா ஜாதகத்தை எடுத்துக்கொண்டு தன் நண்பன் அழைத்தார் என்று சொல்லி ஜோசியரை பார்க்க சென்றார்.,

        மாலை நேரம் அதே ஜோசியரை சென்று அவர்கள் பார்க்க ஹேமாவின் ஜாதகம் ஜோசியர்  கையில் சென்று சிக்கியது., அவருக்குகாலையில் பார்த்த பிரசாத்தின் ஜாதகத்தோடு இந்த பெண்ணின் ஜாதகம் ஒத்துப் போகுமோஎன்ற எண்ணம் வந்தவுடன் பொதுவான பலன்கள் சொல்லி நல்லபடியாக வாழ்க்கை அமையும் என்று சொன்னவர்.,

         “அவளுடைய கிரகங்களின் கால நேரத்திற்கு எல்லாம் நல்லபடியா அமைந்தாலும்.,  ஆரம்பகட்ட வாழ்க்கையில் ஒரு சில வருடங்கள் அதாவது முதல் இரண்டு வருடங்கள் சில பிரச்சனைகளை சந்தித்து., சில குழப்பங்களோடு வாழ வேண்டியது இருக்கும்.,அதன் பிறகே அவள் வாழ்க்கை சாதாரணமாக மாறும்“., என்று சொன்னார்.,

       பரிகாரம் ஏதாவது உண்டா என்று கேட்டார்., ஹேமாவின் அப்பா.

           “அதற்கு தெய்வ வழிபாடு மட்டுமே போதும்“., என்று சொல்லி அவளுடைய ஜாதக கட்டத்தை வரைந்து வைத்துக் கொண்டு.., அவர்களுடைய தொடர்பு எண்ணையும் வாங்கி வைத்துக் கொண்டு அனுப்பி வைத்தார்.,

       ஏனென்றால் அவர்களும் ஹேமாவின் திருமணம் சம்பந்தமான கேள்விகளை கேட்டு இருந்தனர்ஜோசியர் பிரசாத் வீட்டில் காலையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை யோசித்துக் கொண்டே சொல்வதற்கு தயங்கினார்.,

         பின்பு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து அவரும் அமைதியாகி விட அதன் பிறகு அதைப் பற்றி பேசிக் கொள்ளவில்லை.

          ஹேமாவின் குடும்பம் அப்பர் மிடில் கிளாஸ் என்னும் சொல்லும் வகையில் நடுத்தர வர்க்கத்தில் சற்று மேல்தட்டு அவ்வளவு தான்.,

      அப்பா பேங்க் மேனேஜராக இருக்க.,  அம்மா ஒரு தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார்.,  கட்டுக்கோப்பான குடும்பம்., கட்டுப்பாடாக வளர்க்கப்பட்ட பிள்ளைகள் ஹேமா இரண்டாவது பெண்ணாக இருக்க..,  மூத்தது ஹேமாவின் அண்ணன் அவனும் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி கஸ்டம்ஸில் அதிகாரியாக இருக்கிறான்.,

          இப்போது முதலில் ஹேமாவுக்கு முடித்தால் தான் அடுத்து ஹேமாவின் அண்ணனான வினோத்திற்கு முடிக்க முடியும்.., வினோத்திற்கு ஏற்கனவே தாய்மாமா மகளை பேசி வைத்திருக்கிறார்கள்.,

       எனவே இவளுக்கு முடித்து விட்டு தான் அவனுக்கு முடிக்க வேண்டும் என்பதற்காக பாட்டி முதலில் ஹேமாவின் ஜாதகத்தை எடுக்க வேண்டும் என்று சொன்ன காரணத்தினால் தான்., இப்போது ஹேமாவின் ஜாதகம் வெளியே எடுக்கப்பட்டது.,

     சொந்தமா ஒரு வீடு மாடியும் கீழுமாக இருக்க.,  வீட்டைச் சுற்றி சிறிய இடத்தில் அழகான தோட்டம் மகிழ்ச்சியான குடும்பம்., அந்த குடும்பத்தில் தான் ஜாதகம் பார்த்து வந்தது பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

        வினோத் தான்எதுக்கும் வேறு ஒரு ஜோசியரிடம் பார்ப்போமா., அது என்ன முதல் இரண்டு வருடங்கள் பிரச்சனை இருக்கும் என்று சொன்னால்., நாம் எந்த மாப்பிள்ளை வீட்டை பார்த்தோம் என்றாலும்., நமக்கு சற்றும் பயம் தானே கொடுக்கும்“., என்று சொன்னான்.

           “அவளுடைய கிரக சூழ்நிலைகள் அப்படி இருப்பதால் அப்படி சொல்கிறார்கள்“., என்று அப்பா சொன்னார்.

           அப்போதுஅப்படியானால் 2 வருடங்கள் கழித்து திருமணம் வைத்துக்கொள்ளலாமா“.,என்று ஹேமாவின் அம்மா கேட்டார்.

         அப்பா தான்இல்லை அதையும் கேட்டேன்., அவள் திருமணம் ஆனபிறகு 2 வருடம் என்று சொல்லியிருப்பதால் எப்போது திருமணம் செய்தாலும்.,  இதுதான் நிலை போல..,  அதனால் இப்போதே பார்க்க தொடங்குவோம்“., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

         

Advertisement