Advertisement

3

நிம்மதிக்கான இரண்டு வழிகள். விட்டு கொடுங்கள். இல்லை விட்டு விடுங்கள்.
– புத்தர்

காலை தூக்கம் கலையும் முன் அலைபேசியின் அழைப்பு ஹேமாவை அழைக்க.., தூக்க கலக்கத்தோடு எடுத்து ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து பார்த்தவளுக்கு., அது தன் வீட்டிலிருந்து வரும் அழைப்பு என தெரிய போனை எடுத்து காதில் வைத்து தூக்க கலக்கத்தோடு “ஹலோ”., என்றாள்.

மறு பக்கமோ பாட்டியின் பேச்சுக்குரல் கேட்டது.,  “இன்னுமா தூங்குற”  என்று கேட்டார். பாட்டி.

“இன்னைக்கு லீவு தானே”., என்று பாட்டியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

“ஒருநாள் இடையில் லீவு வந்துரக் கூடாதே.,  உடனே இதுதான் சாக்குன்னு நல்ல இழுத்து மூடி தூங்கு.,  இன்னைக்கு காலைல கொஞ்சம் கோயிலுக்கு போய்ட்டு வா”.,  என்றார் பாட்டி.

“போகலாம் பாட்டி.,இன்னைக்கு லீவு தானே”., என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

பாட்டியோ “அதெல்லாம் தெரியாது., நீ காலைல கோயிலுக்கு போற., அவ்வளவு தான்., என்று சொன்னார்.

“போறேன் போறேன்., மெதுவா எந்திரிச்சு., மெதுவா தான் போவேன்.,  ஒருவேளை போக முடியலை னா., ஈவ்னிங்  தான் போவேன்.,  நீங்க நினைச்சு நினைச்சு சொல்லுவீங்க.., நீங்க நினைச்சதுக்கு எல்லாம் நான் போகமுடியாது”.,  என்று தூக்கக் கலக்கத்தோடு பேசிக்கொண்டிருந்தாள் காலை 7 மணி அளவில்…

“சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்காதே ஹேமா இன்னைக்கு தான் உங்க அப்பா உன் ஜாதகத்தை எடுக்கலாம் ன்னு பேச்சு ஆரம்பிச்சிருக்கான்., காலையிலேயே நல்ல சகுனமா இருக்கு.,  அதனால கோயிலுக்கு போயிட்டு வந்துரு”., என்று சொன்னார்.

“என் ஜாதகத்த ஒன்னும் யாரும் எடுக்க வேண்டாம்., அது பேசாம பீரோக்குள்ளேயே தூங்கட்டும்., எனக்கு வேலையில் முன்னேறனும் இப்ப தான் எம்பிஏ எக்ஸாம் முடிய போகுது.,  இப்போதைக்கு எதுவும் பேசக்கூடாது.,  நான் கோயிலுக்கெல்லாம் போக மாட்டேன்”., என்று கோபமாக பேசிவிட்டு தன் அலைபேசியை சுவிட்ச் ஆப் செய்து அருகிலிருந்த புத்தகத்தின் மேல் போட்டாள்..

இவளின் கோபமான பேச்சு சத்ததிலேயே தோழிகள் இருவருக்கும் தூக்கம் கலைய அதன் பிறகு அவர்களும் என்ன என்று கேட்டனர்.,

தூக்க கலக்கத்தோடு தோழிகள் பேசிக்கொண்டிருந்தனர்., தூங்குவதற்கு முன்பு தூக்க கலக்கத்தோடு எப்படி ஒரு கதை ஓடுமோ.., அதுபோல தான் இப்போது தோழிகளும் காலை எழுந்தபோது ஹேமாவின் கோபத்திற்க்கான  காரணங்கள் கதையாக ஓடியது., அதன் பிறகு நிதானமாக எழுந்து காலை உணவிற்கான வேலையை பார்த்துக்கொண்டனர்.

மதியத்திற்கு சூடாக செய்து சாப்பிடலாம் என்று பேசியபடி வேலையை பார்த்தனர்.

குழலி தான் “ஹேமா சொன்னா கேளு.,  பாட்டி ஏதோ சொன்னாங்க தானே., நீ  கோயிலுக்கு போயிட்டு வா” என்று சொன்னாள்.,

“சாயங்காலம் போய்க்கலாம் விடு., இன்னைக்கு வெள்ளிக்கிழமை தானே ஈவ்னிங் நல்லாயிருக்கும்”., என்று சொல்லிவிட்டாள்.

அன்றைய விடுமுறையை சரியாக உபயோகித்துக் கொண்டனர்., சரி எப்படி என்றாலும் இவளை சாய்ந்திரம் கோயிலுக்கு கிளப்பி அனுப்பி விட வேண்டும் என்ற எண்ணத்தோடு குழலி இருந்தாள்.,

அதே நேரம் கோயம்புத்தூரில் தயாளன் அவரின் வீட்டில்., தயாளனின் பிஏ வந்து சார் ஜோசியர் காலையில பத்து மணிக்கு கரெக்டா வீட்ல இருக்குற மாதிரி வரேன்னு  சொல்ல சொன்னாங்க.,   என்று சொல்லி விட்டு மற்ற அலுவலக சம்பந்தமாக பேச்சுகளைப் பேச தொடங்கினார்.,

தயாளன் தன் மனைவியை சொர்ணா.,  என்று சத்தமாக அழைக்க அவரும் என்ன என்று கேட்டபடி வந்து நின்றார்.

“10 மணிக்கு ஜோசியர் வருவாங்க”.,  என்றார்.

பின்பு அவர்கள் வீட்டில் அன்றாட வேலைகள் எப்பொழுதும் போல நடந்து கொண்டிருந்தது.,  அவரும் காலை சுத்த பத்தமாக குடும்பத்தினர் குளித்து வந்தவுடன் ஜாதகத்தை எடுத்து பூஜை அறையில் வைத்து கும்பிட்டு விட்டு ஜோசியர் வருவதற்காக காத்திருந்தனர்..

ஜோசியர் வந்தபிறகு என்னென்ன கேட்க வேண்டும் என்று குடும்பத்தினர் பேசிக்கொண்டிருக்க ஏனோ பிரசாத்தின் மனம் மட்டும் வித்தியாசமாக உணர்ந்தது..,  இது நல்லதா., கெட்டதா.,  என்று தெரியாமல் அவன் இதயத்துடிப்பு தாறுமாறாக ஏறியது போல உணர்ந்தான்.,

பெரிதாக அவனுக்கு கடவுள் மேல் எந்த நம்பிக்கையும் இல்லை என்றாலும்..,  தன் தந்தை எந்த ஒரு காரியத்தையும் ஜாதகம் பார்த்து தொடங்குவதை அவன் சில இடங்களில் மட்டும் நம்பினான்.,  ஏனெனில் அவன் தந்தையின் பழக்கம் அப்படி..,  அதை பற்றி அடிக்கடி வீட்டில் பேசி பேசி பிள்ளைகள் மனதில் சிறு நம்பிக்கை வந்து இருந்தது.., ஆனாலும் ஏன் தனக்கு இன்று இப்படி ஒரு படபடப்பான மனநிலை என்ற எண்ணம் மனதிற்குள் வந்து சென்றது., அது எலக்சன் சம்பந்தப்பட்டது என்று எண்ணியதோடு நிறுத்திக் கொண்டான்.,

எல்லோரும் எப்போதும் போல சாப்பிட்டாலும்., அவன் அவனுக்கான உணவை எடுத்துக் கொண்டாலும் ஏனோ மனதிற்குள் ஒரு பதட்டம் இருந்தது.,  சாப்பிட்டாலும் சாப்பிட முடியாத மனநிலை போல ஏதோ ஒரு குழப்பமும் சூழ்ந்து அவனை பதட்டப்பட வைப்பதாக உணர்ந்தான்.,

அவன் அறியாமல் எது நடந்தாலும் நன்மைக்கே என்ற எண்ணத்தை மனதிற்குள் திரும்ப திரும்ப உருப்போட்டு கொண்டே இருந்தவன்., நண்பனுக்கு அழைத்து பேசினான்.,

“திடீரென மனம் ஒரு மாதிரி இருக்கிறது”., என்று சொன்னான்.

நண்பன் தான் “அதெல்லாம் ஒன்னும் இல்ல., நேத்து நாம எல்லாம் பேசினோம் இல்ல.,  கல்யாணம் அது இதுன்னு.,  உனக்கு அது ஒரு மாதிரி இருந்திருக்கும்.,  ஒன்னும் இல்லடா., அப்புறம் ரொம்ப யோசிக்காத எல்லாமே நல்லதே நடக்கும்”.,  என்று சொல்லி ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தான் அவனின் கூடவே இருக்கும்  முக்கிய சினேகிதன்.

சரியாக ஜோசியர் வரவும்., அதே நேரம் பிரசாத்தின் நண்பனும் வந்து சேர்ந்தான்., பிரசாத் அவனை கேள்வியாக பார்க்க.., “நீ பொலம்பிட்டு இருந்தியா மனசு கேக்கல., அதான் வந்தேன் வேற எதுவும் இல்லை., எல்லாமே நல்லபடியா நடக்கும் அப்படி மட்டும் யோசி”., என்று சொல்லி விட்டு அவனோடு வீட்டின் உள்ளே வந்தான்.

வீட்டிலும்  நல்ல பழக்கம் என்பதால் அவன் உரிமையோடு மற்றவர்களோடு பேசியபடி அங்கேயே அமர்ந்தான்.,

பிரசாத்துக்கு மிக நெருங்கிய நட்பு என்பதால் அவனிடம் எல்லாவற்றையும் சொல்லி விடுவான் என்று தெரிந்ததே.,  அவன் சொல்லி தான் வந்திருப்பான் என நினைத்து அனைவரும் எதுவும் சொல்லவில்லை..,

அதே நேரம் ஜோசியர் வந்த பின்பு குடும்பத்திற்கு மிகவும் தெரிந்தவர்., மிகவும் வேண்டியவர் என்ற முறையில் சில பல நல விசாரிப்புகளுக்கு பிறகு ஜாதகங்களை கையில் வாங்கிக் கொண்டு இறைவனை வணங்கி ஜாதகங்களை பார்க்க தொடங்கினார்.

அதேநேரம் வீட்டு வாசலில் சொர்ணம்  சொல்லி வைத்திருந்த ஆளும் 3 ஜாதகங்களோடு வர தயாளன் சொர்ணத்தை கேள்வியாக பார்த்தார்.,

அவரோ “சொல்கிறேன்”., என்றபடி அந்த ஜாதகங்களை மட்டும் வாங்கிக்கொண்டு உள்ளே வந்து அமர்ந்தார்.,

ஜோசியர் பேப்பரில் கட்டங்களை வரைந்தபடி ஜாதகங்களை கணித்தப்படி பார்த்துக்கொண்டிருந்தார்.,

தயாளன்  ஜாதகத்தில் மீண்டும்  அரசியலில் தோல்வியின்றி வருவார் என்பதை மட்டும் சொன்னவர்., அமைச்சர் பதவி கிடைக்குமா என்று கேட்டதற்கு வாய்ப்பு இருக்கிறது., இல்லாமலும் போக வாய்ப்பும் இருக்கிறது ஏனெனில் நேர காலங்கள் சாதகமாக அமைவதைப் பொறுத்தே எல்லாவற்றையும் சொல்லமுடியும்., என்றார்.

தனக்கு எப்படி  இருந்தாலும் சரி.,  இன்னும் ஐந்து வருடம் மட்டும் மத்திய அரசு எம்பியாக இருந்து விட்டால் போதும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்., அதன் பிறகு அரசியலில் இருந்து விலகிக் கொள்ளலாம்.,

ஆனால் அதற்குள் சின்னவனுக்கு ஏதாவது ஏற்பாடு செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு மனதில் நினைத்துக் கொண்டிருந்தார்.

“பெரியவனின் ஜாதகத்தைப் பாருங்கள்”., என்று சொர்ணம்மாள் சொன்னார்.

அவரும் எடுத்து பார்க்கத் தொடங்கினார்., பெரியவனின் குடும்பம் நல்லபடியாக இருக்கும் மனைவி ஜாதகம் பிள்ளைகள் ஜாதகம் என அனைத்தையும் பார்த்து அனைத்துமே நல்ல நிலையில் இருப்பதால் தொழில் நல்லபடியாக செல்லும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.,

ஆனால் குடும்பத்தில் சில குழப்பங்கள் நேரும்., கொஞ்சம் அனுசரித்து செல்வது நல்லது., என்றார்.

அப்போது தயாளன் தான் “எதுவும் சரியில்லையோ” என்று ஜோசியரை பார்த்து கேட்டார்.

“சில ஜாதகங்கள் எப்போதும் ஒன்று போல அமையாது., அது போல நேரம் காலம்., திசை விடுதி என பார்க்கும் போது கிரக சஞ்சாரங்கள் படி உங்கள் குடும்பத்திற்கு சில கஷ்டங்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது., ஒரு மூன்று வருடங்கள் அப்படியும் இப்படியுமாக அலைக்கழிப்பு இருக்க தான் செய்யும்., அதன் பிறகு தான் எல்லாம் சரியாகும் ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் கிரகங்கள் சரியில்லாததால் அப்படி இருக்கிறது.,

ஆனால் உங்கள் பதவிக்கோ.,  செல்வாக்குக்கோ., உங்கள் வீட்டின் தொழில் வளர்ச்சிக்கோ எந்தவித குறையும் இருக்கப்போவதில்லை.,  அதனால் தைரியமாக இருங்கள்.,  சில கஷ்டங்களும் மனஸ்தாபங்களும்., சில குழப்பங்களும் குடும்பத்திற்குள் வரத்தான் செய்யும்.., ஏனெனில் அனைவருமே சில சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது..,  தெய்வத் துணையோடு எல்லாவற்றையும் வெற்றிக்கொள்ள முடியும்”., என்று அனைவருக்கும் பொதுவாக பலன் சொன்னார்.,

அதன்பின் பிரசாத்தின் ஜாதகத்தை கையில் எடுத்தார்., ஏனெனில் அவனுக்காக தானே இப்போது வந்திருக்கிறார்., எனவே அவனுடைய ஜாதகத்தை எடுத்து அதிக நேரம் அதில் செலவிட்டவர்., பின்பு சோவியை எடுத்து அதையும் குலுக்கிப் போட்டு பார்த்தார்.

எதுவுமே சரியாக இல்லாமல்.,  தயாளனை  பார்த்த படி வாய்ப்பு “கிடைக்க வழி இருக்கிறது., ஆனால் சின்னவனின் ஜாதகப்படி இல்லை., அவனுடைய மனைவியாக வருபவளின் நேரம் நன்றாக இருந்தால்., தம்பியின் ஜாதகத்திற்கு தகுந்தாற் போல ஒரு ஜாதகம் கிடைத்தால்., சின்னவனின் வாழ்வு அமோகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

அதே நேரம் சரியான ஜாதகத்தில் பெண் அமையாவிட்டால்., அவனது வாழ்க்கை மிக சாதாரணமாக போவதற்கான வாய்ப்பு இருக்கிறது.,  கிடைக்கும் பெண்ணை பொறுத்து தான் அவனது வாழ்க்கையை நிர்ணயம் செய்ய முடியும்.,  மற்றபடி உங்களின் மகன் என்ற செல்வாக்கோடு., தொழில்முறை பணவசதி குறைவில்லாமல் இருந்தாலும் அவனது மன நிம்மதியும்., அவனது தனிப்பட்ட வளர்ச்சியும்., அவனுக்கு வரும் மனைவி பொறுத்தே அமையும்”., என்று ஜோசியர் சொல்லி விட்டார்.

அனைவருக்கும் வருத்தம் தான்.,  ஆனாலும் தயாளன் “எப்படிப்பட்ட பெண் அமையும்., எந்த  திசையிலிருந்து வரும் என்பதை நன்றாக பார்த்து சொல்லுங்கள்.,  அதற்கு தகுந்தார் போல் பெண் பார்ப்போம்”., என்று அவரும் கேட்டார்.

சொர்ணம் தான் “எங்க சொந்தத்தில் முறை உள்ளவங்க கிட்ட ஜாதகம் வாங்கிட்டு வரச் சொல்லியிருந்தேன்.,  இந்த ஜாதகம் அமையுதா ன்னு பாருங்க” என்று ஜாதகத்தை எடுத்துக் கொடுத்தார்.

பொருத்தம் பார்ப்பதற்கு முன் அந்த ஜாதகத்தை கையில் எடுத்து பார்த்தவர் பிரித்து பார்க்காமலேயே சொன்னார்.,

“இந்த பெண்கள் உங்க அளவுக்கு வசதி உள்ளவர்களா”., என்று ஜோசியர் கேட்டார்.

சொர்ணமும் “ஆமா” என்று சொன்னார்.

“அப்படி என்றால் நிச்சயமாக இந்த ஜாதகங்கள் உங்கள் மகனுக்கு பொருந்தி வராது., நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் சென்று கேட்டுக் கொள்ளுங்கள்., அது தான் உண்மையான நிலவரம்., உங்கள் மகனின் ஜாதகப்படி அவனுக்கு வரும் பெண் உங்கள் அளவுக்கு வசதி இருக்காது., நடுத்தர குடும்பத்து பெண்ணாக தான் அமையும்.,

அவளுக்கு வீட்டின் உடன் பிறப்பாக ஒரு ஆண்மகன் மட்டுமே இருக்க முடியும்.,  அது மூத்தவனாகவோ.,  இல்லை இளையவனாகவோ இருக்கலாம்., ஆனால் ஒற்றை பெண்ணாக தான்., அந்த வீட்டில் அப்பெண் வளர்ந்து இருப்பாள்.

அப்படிப்பட்ட பெண்தான் சின்னவனின் ஜாதகப்படி மனைவியாக அமையக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது”., என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே..,

சொர்ணம்  “இந்த ஜாதகத்தில் கூட ரெண்டு பொண்ணுங்க ஒத்த பொண்ணு தான்., கூட பிறந்தது ஒரு தம்பி ஒரு பொண்ணுக்கு., ஒரு பொண்ணுக்கு ஒரு அண்ணன்”., என்று சொன்னார்.

Advertisement