Advertisement

கூட்டத்தில் இருந்ததாலோ என்னவோ குழந்தை அழுதுகொண்டே இருந்தான்., ஹேமாவும் தோளில் போட்டு தட்டி கொடுக்க முயற்சி செய்தாள். ஆனால் அவன் அழுகை மட்டும் நிற்கவே இல்லை.

   பாட்டி சற்று கை வைத்தியம் பார்க்க அழுகை மட்டுப்பட்டு சிணுங்கலில் வந்து நின்றது.

       ஆனாலும் அவ்வப்போது வீறிட்டு அழுதான் அவளும் சாப்பாடு ஊட்ட முயற்சி செய்ய தட்டிவிட்டான்., பசி அமர்த்த அவள் முயற்சி செய்தும் அப்போது அவனிடம் அழுகை மட்டுமே பதிலாக கிடைத்தது., மீண்டும் ஒருமுறை பாட்டி கை வைத்தியம் செய்ய ஓரளவிற்கு அவனுக்கு அழுகை குறைந்தது.

    அப்போதும் ஹேமாவை விட்டு  நகராமல் இருந்தான்., மற்றவர்கள் வாங்க முயற்சி செய்யும் போது அவள் உடையோ அல்லது முடியை பிடித்து இழுத்து அழத் தொடங்கிவிட்டான் எனவே யாரிடமும் கொடுக்காமல் மடியில் போட்டு தட்டிக் கொடுத்துக் கொண்டே அவனை தூங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

            ஹேமாவின் அம்மா தான்., “பிள்ளையை பார்க்கிறது எல்லாம் சரிதான்., நீ கொஞ்சமாவது சாப்பிடலாம் இல்ல“., என்று சொல்லி அவளை சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

       அவளோஇவன் முதல்ல தூங்கட்டுமா.,  அப்புறமா சாப்பிடுகிறேன்., இப்ப என்ன அவசரம்“., என்றாள்.

        “நீ காலையில் சாப்பிட்டது தான்.,  இப்ப வரைக்கும் சாப்பிடாம இருக்க., ஈவ்னிங் ஆயிருச்சு., கொஞ்சமாவது யோசிக்க மாட்டியா ஹெல்த் என்னாகும்“., என்று சத்தம் போட்டார்.

       அதேநேரம் கலா நித்தியானந்தன்.,  தயாளன்., கலாவின் பிள்ளைகள் சுந்தரி அம்மா எல்லோரும் கிளம்ப தயாராக இருந்தனர்.

அவர்களுக்காக டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்து ஹேமாவின் அம்மா டீ பரிமாறிக் கொண்டிருந்தார்.

அதேநேரம் தட்டில் சாப்பாட்டை போட்டு பிசைந்தபடி வந்துகொண்டிருந்தான் பிரசாத்.

நித்யானந்தன் தான்ஏண்டா நீயும் இப்ப தான் சாப்பிட்ட போறீயா“., என்று கேட்டுக்கொண்டிருந்தான்.

        “இல்லையேஎன்று பதில் சொல்லி அவன் பிசைந்த சாதத்தை கையில் எடுத்து ஹேமாவின் முன் நீட்டிக் கொண்டிருந்தான்., அவனை அவள் நிமிர்ந்து பார்க்கவாயைத் திறந்து வாங்குஎன்று சொன்னவன் அவளுக்கு ஊட்டி விட தொடங்கியிருந்தான்.

         அவள் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு நன்றாக ஊட்டி விட்டான்.

          அதற்குள் குழந்தையும் தூங்கி இருக்க., “அவனை தூங்க வெச்சிட்டு.,  நீயும் கொஞ்ச நேரம் தூங்குஎன்று சொல்லி அவளை அனுப்ப முயற்சி செய்து கொண்டிருக்கும் போது.,

        பாட்டி தான் அவன் கை கழுவுவதற்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து கையை கழுவ சொல்லி தட்டையும் வாங்கிக்கொண்டு சென்றார்.

     உடனே கலா நித்யானந்தனிடம் வம்பு வளர்ப்பதற்காகநானும் ரெண்டு குழந்தை பெத்த எடுத்து வளர்த்து விட்டு இருக்கேன் .,  என்னிக்காவது எனக்கு இதே மாதிரி ஊட்டி இருக்கீங்களாஎன்று கேட்டார்.

      நித்யானந்தனோஏன்டா வீட்டுக்குள்ள சண்டை இழுத்து விடுற“., என்று கேட்டான்.

     “நீ என்ன பண்ணு., வீட்டுக்கு போய் அண்ணிக்கு ஊட்டிவிடு தப்பே இல்ல., நீ கோடி கோடியாக சம்பாதிக்குறது எல்லாம் இரண்டாவது.,  முதல்ல போய் ஊட்டுற வேலையை பாரு“., என்று சொன்னான்.

டேய்என்றான்.

      “அண்ணி அவன் உங்களுக்கு ஊட்டலை னா போன் பண்ணுங்க.,  நம்ம பஞ்சாயத்து கூட்டுவோம்“., என்று பதிலுக்கு பிரசாத் சொன்னான்.

       “சரிடா ஊட்டுறேன்.,  அதுக்காக பஞ்சாயத்து எல்லாம் கூப்பிடாதிங்க“.,  என்று நித்யானந்தன் சிரித்துக்கொண்டே சொல்ல.

         அவன் பிள்ளைகளும் அப்பா எங்களுக்கும் சேர்த்து“., என்று கண்டிஷன் போட்டனர்.

          இதையெல்லாம் பார்த்து சிரித்துக்கொண்டே பிள்ளையைக் தூக்கிக் கொண்டு அங்கிருந்து எழுந்தாள்., அதேநேரம் நித்தியானந்தன் நான் மூன்று பேருக்கு ஊட்டனும்.,  நீ ஒரு ஆளுக்கு ஊட்டி எஸ்கேப் ஆகுறீயா“.,  என்று கேட்டான்.

    “ஊட்டலாம் தப்பில்லை.,  நானும் இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சு மூன்று பேருக்கு ஊட்டுறனோ.,  இல்ல நாலு பேருக்கு ஊட்டுறனோ.,  யாருக்கு தெரியும்“., என்று சொன்னான்.

          நித்தியானந்தன்டேய் நீ என்ன சொல்றேன்னு தெரியுதா“.,  என்று கேட்க அங்கு அனைவரும் சிரிப்போடு பேசிக்கொண்டிருந்தனர்., இதை அனைத்தையும் கேட்டபடி நடந்தவளுக்கும் சிரிப்புதான் வந்தது..

               ‘இந்த ஒரு குழந்தையில் கிடைக்க வேண்டிய சந்தோஷத்தை அவனுக்கு., இன்னும் எத்தனை குழந்தை வந்து கொடுத்தாலும் கிடைக்குமா எனத் தெரியாது., ஆனால் அவன் எத்தனை குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னாலும் நிச்சயமாக பெற்றுக் கொள்வேன்‘., என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

       தயாளன் பிள்ளைகளின் சந்தோஷமான சிரிப்பை நீண்ட நாட்களுக்குப் பிறகாக பார்ப்பது போலவும்., கேட்பது போலவும்., மகிழ்ந்து போனார்.

      கடவுளிடம் வேண்டுதல் வேறு வைத்தார்., என் பிள்ளைகளை எப்போதும் இப்படியே வைத்திரு என்று

        நாட்கள் வேகமாக நகர தொடங்கியது போல இருந்தது.,  திருமணத்திற்கு போய் வந்த பிறகு எண்ணெயிட்ட சக்கரம் போல வாழ்க்கை நிதானமாக சூழல தொடங்கியிருந்தது.,

        வாழ்க்கை சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிரம்பி இருந்தது போல தோன்றியது., பிரசாத் இப்பொழுதெல்லாம் மனம் விட்டு சிரிப்பது அடிக்கடி நடந்தது.

        அன்று பத்திரிக்கையில் பிரசாத்தை பற்றி எழுதியிருந்தது தாடியோடு இருந்தவன்.,  சற்று ட்ரிம் செய்து அழகாக தன் தோற்றத்தை மாற்றியிருக்க.,  கல்லூரி மாணவன் போல தோற்றமளிக்கும் எம்எல்ஏ என்றும்.,

       இப்பொழுதெல்லாம் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களின் ஃபேவரைட் ஹீரோ போல எம்எல்ஏ பிரசாத் பேசப்படுவதாக எழுதியிருந்தது.

       சில பெண்கள் இத்தனை அழகான அம்சமான., நல்ல எண்ணம் கொண்ட ஒரு எம்எல்ஏ என்றால்., அரசியல் வாதியாக இருந்தால்  கூட திருமணம் செய்து கொள்ளலாம் என சொல்லி இருந்ததாக பத்திரிக்கையில் எழுதி இருந்தது.

         அதை படித்து ஹேமா அவன் முன் இடுப்பில் கை வைத்தபடி பத்ரகாளியாக நின்றாள்..

        “என்னடி வந்ததும் வராததுமா இப்படி நிக்குறஎன்று கேட்டான்.

          “ஏன் நான் இப்படி நிற்கிறது நல்லா இல்லையா“., என்று கேட்டபடி அவனை நெருங்கி வந்தாள் .

       அவனோஇல்லையே நான் என்ன அப்படியா சொன்னேன்“., என்றவன்.,
எங்க பிரணவ்“., என்றான்.

       “ம்ம்., ம்ம் உங்க பிள்ளை தூங்குறான்என்று சொன்னாள்.

      “என்னடி பேச்சு எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு“.,  என்று கேட்டான்.,

         “மார்க்கமா இருக்காஎன்று நிறுத்தியவள்., “இனி அப்படி தான் இருக்கும்என்று சொன்னாள்.

          குரலின் ஒலி மாறுபட்டு ஒலிக்கஹேமா என்ன ஆச்சுஎன்று கேட்டான்.

          “எதுவும் ஆகிற கூடாது அது தான் இப்ப பிரச்சினை“.,  என்று சொன்னவள் அவன் சட்டையை இழுத்து பிடித்துநான் கேக்குறதுக்கு ஒழுங்கா பதில் சொல்லுங்கஎன்று கேட்டாள்.

         “ஏன் ஹேமா கோபப்படுற“., என்று பரிதாபமாக அவனும் கேட்டான்..

       “கோபப்படுறத நிறுத்தி விட்டேன் என்று சந்தோஷப்படுங்க., இருக்கிற கடுப்புல கழுத்தை நெரித்து விடுவேன்“.,  என்று சொன்னாள்.

       “என்னது கழுத்தை நெரிப்பியா“., என்று கேட்டான்.

          “இது என்னதுஎன்று பேப்பரை அவன் முன் தூக்கிப்போட்டு கேட்டாள்., “அழகான எம் எல் வா நாளையிலிருந்து உங்க மூஞ்சில மாஸ்க் போட்டு தான்  சட்டமன்றத்துக்கு அனுப்பனும்“., என்றாள்.

       “நான் என்னடி பண்றது., எவனோ எழுதினா அதற்கு நானா பொறுப்பு“.,  என்று கேட்டான்.

       ” இனிமேல் எங்க போறீங்க.,  எங்க வாறீங்க ன்னு சொல்லிட்டு போகனும்“.,  என்று சொன்னாள்.

            அவனாஐயோ சாமி.,
யாரையும் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன்., எனக்கு நீ மட்டும் தான் டி“.,  என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

         அவளோஇவ்வளவு நாளா நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன்.,  ஆனால் பேப்பர்ல இந்த மாதிரி எழுதி இருப்பதை பார்க்கும் போது பக்குனு இருக்கு., இன்னொரு தடவை பேப்பர்ல இப்படி வந்துச்சு எழுதினவன் அடிவாங்குவான்.,  எழுத காரணமாயிருந்த நீங்களும் அடி வாங்குவீங்க“.,  என்று சண்டைக்கு சென்றாள்.,

         “அப்படி எல்லாம் எதுவும் இல்லை., ஆனால் ஒன்னு என் பொண்டாட்டி நல்ல சண்டை போட்டுவா.,  இதை வெளியே சொன்னால் யாராவது நம்புவார்களா“.,  என்று கேட்டான்.

     இவளோ அவனை முறைத்துப் பார்க்க.,

        அவன்இவ்வளவு நாளா இந்த வெடுக்கு ன்னு பேசுற வாயெல்லாம் எங்க வச்சு இருந்த“.,  என்று கேட்டான்.

      “எல்லாம் இங்கே தான் இருக்குஎன்று அவனை முறைத்துக் கொண்டே சொன்னாள்.

       “இன்னுமா ஆத்தா மலை இறங்கலைஎன்று கேட்டவன். அவளுக்குள் குடியேறிய கோப ஆத்தாவை மலை  இறக்க தெரிந்தவனாக அவள் இதழில் இதழ் கொண்டு அழுத்தமாக மூடினான்.

       அவனிடமிருந்து தன் இதழ்களை பிரித்துக் கொள்ள போராடியவளுக்கு தோல்வியே மிஞ்சியது.,

        அவனை தன்னிலிருந்து பிடித்து தள்ள முயன்றவளுக்கும் தோல்வி தான்., 

        அவனிடம் இருந்து கஷ்டப்பட்டு பிரிந்து நின்றாள்.,  தன் இதழ்களை அவன் சட்டையிலேயே துடைத்தபடிஎன்ன பண்ணி வச்சு இருக்கீங்கஎன்று கேட்டாள்.,

          “ரொம்ப நாள் ஆச்சு இல்ல அது தான் மறந்திருச்சு., லேசா ஞாபகப் படுத்திக்கிட்டேன்“.,என்றவன்  சிரித்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

       “இப்ப சண்டை போடு., எனக்கு சமாதானப்படுத்தும் வழி தெரிஞ்சிருச்சு“.,  என்று சொல்லி அவனை தன்னோடு சேர்த்து இருக்கிக்கொண்டான்.

    அவளோ கோபத்தில் அவன் முதுகில் அடிக்க அந்த அடி எல்லாம் கொசு தட்டுவது போலவே அவனுக்குத் தோன்றியது.

அவளின் கோபத்தை மகிழ்வாக ரசித்திருந்தான்.

          அவன் சொன்னது போலவே தன் மகனின் முதல் பிறந்தநாளை தன் வீட்டில் வைத்து சிறப்பாக கொண்டாடினர்.,

         அனைவரும் வந்திருந்தாலும் திருத்த முடியாத ஜென்மங்கள் என்று இருப்பவர்களை எப்போதும் திருத்த முடியாது.,  அவர்கள் 2 பேரும் உறவுகள் முன் சாதாரணமாக காட்டிக் கொள்ள சேர்ந்து நின்றாலும் விலகல் அவர்களின் நடவடிக்கைகளில் தெரிந்தது., ஆனால் யாரும் அவர்களை கண்டுகொள்ளவே இல்லை.

அன்று உடை அணியும் விதத்திலும் அக்கறை காட்டியிருந்தார்கள்.,  கலாவும் ஹேமாவும்.

      அண்ணன் தம்பி இருவரும் ஒரே போல உடையணிந்து இருக்க.,  பிள்ளைகள் மூவருக்கும் ஒரே நிறத்தில் உடை அணிவித்து இருந்தனர்.,

        கலாவும் ஹேமாவும் ஒரே நிறத்தில் புடவை அணிந்திருக்க., அவர்கள் இருவரும் குடும்பம் மட்டும் தனியே தெரிந்தனர்.

வந்தவர்கள் அதை தனியே சொல்லி தயாளனை பாராட்டியே சென்றனர்.

          வேண்டும் என்று வந்தவர்களில் ஒருவர்நித்யானந்தா.,  உன் தம்பிக்கு பையன் வந்தாச்சு., உனக்கு ரெண்டும் பொம்பள புள்ளையா போயிருச்சே“.,  என்று கேட்டார்.

             அவர் பேசுவதை கேட்ட பிரசாத் தான் பேசினான்., “என்ன தாத்தா நிறைய விஷயம் தெரிஞ்சு பேசுறீங்க போல“.,  என்று சொன்னவன்.

       “ஆனா உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியல போல“., ஏன்னா எங்க அண்ணனோட பொண்ணுங்க இரண்டையும் நான் எடுத்துக்கிட்டேன்.,  இதோ  பையனை என் அண்ணன் கையில் கொடுத்துட்டேன்.,

       இப்பவும் சொல்றேன் இந்த மூன்று பிள்ளைகளும் எங்க நாலு பேருக்கும் பொதுவான பிள்ளைங்க தான்., இதுல உன் பிள்ளை என் பிள்ளைங்க ன்னு.,  பிரிச்சி பார்க்கமாட்டோம்., இப்படித்தான் தாத்தா எங்க வீட்டிலே இருக்கும்.,  ஒரு வேளை இன்னும் ஒரு பிள்ள வந்தாலும் கூட அந்த நான்கு பிள்ளைகளும்.,  எங்க நாலு பேருக்கும் பொதுவான பிள்ளைகள் தான்., நாங்க இதுல பிரிச்சு பார்க்க மாட்டோம்“., என்று சொன்னான்.

          அதைக் கேட்ட பெரியவர்சரிப்பா நல்லது தான்., அதான் பாரப்பா.,  நீ அரசியலுக்கு வந்த பிறகு எல்லாத்தையும் கரெக்டா பேச ஆரம்பிச்சுட்ட“., என்று சொல்லி பாராட்டி விட்டு சென்றார்.,

       ஹேமாவும் கலாவும் அந்த நேரத்தில் சற்று தள்ளி நிற்க.,  அண்ணன் தம்பி இருவரும் தான் 3 பிள்ளைகளோடு சேர்ந்து நின்றனர்., தயாளனும் தன் பிள்ளைகள் எப்போதும் இதே ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு., மன நிம்மதியோடும்., இருந்தார்.

         வாழ்க்கை ஒருமுறை தான்., இதில் போட்டி போட்டு ஜெயிக்க போவது இல்லை.,  தோற்றுப் போக எதுவுமில்லை., அங்கு நாம் ஜெயிப்பதற்கும் தோற்று போவதற்கும் காரணம் நம்மை சுற்றி இருக்கும் உறவுகள் தான்., முடிந்தவரை உறவுகளை உடையாமல் கட்டிக் காப்பாற்ற பார்க்கலாம்.


எல்லோரும் இன்புற்று இருக்க இறைவனை வேண்டி நாமும் விடை பெறுவோம்.,

வாழ்க்கை என்றாலே துன்பங்களும் துயரங்களும் இருக்கத் தான் செய்யும்.
அது தான் நியதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
                             – புத்தர்

Advertisement