Advertisement

  23
  
       நீ செய்த செயல்கள் ஒவ்வொன்றும்  உன் நிழல் போல உன்னை தொடர்ந்து
வந்து கொண்டே இருக்கும். அது நல்லதாக இருந்தாலும் சரி., கெட்டதாக இருந்தாலும் சரி.
                                                  – புத்தர்

       பாட்டி ஊருக்கு கிளம்பி சென்ற பிறகு வீட்டில் அனைத்து தேவைகளையும் பார்த்து பார்த்து கவனிக்க தொடங்கியிருந்தாள்.

     பிரசாத் க்கும் வேலைகள் அழைத்துக் கொள்ள.,  அவனுடைய சட்டமன்ற கூட்டத்தொடர் இருக்கும் நாட்களிலும் அரசியல் சம்பந்தமான வேலை இருக்கும் நாட்களிலும் சற்று மெதுவாகத்தான் வருவான்.,

       அவனுடைய வேலைகளையும் இப்பொழுதெல்லாம் அவள் புரிந்துகொள்ள தொடங்கி இருந்ததால்.,  அவனிடம் எதுவும் கேட்பதில்லை அவன் வெளியே சென்று வருவதை அமைதியாக கவனித்துக் கொள்வாள்.

          சில நாள்களில் அலைபேசி அழைப்புகளில் அவன் பேசுவதை வைத்து அவன் வேலையில் தன்மையும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.,

         ‌அரசியல் என்பதும் சாதாரணம் இல்லை அதிலும் மக்களுக்காக செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருப்பதை அறிந்து கொண்டாள்.,
லாபம் மட்டும் தான் நோக்கம் என்று நினைக்கும் அரசியல்வாதிகளுக்கும்.,  மக்களுக்காக செய்ய நினைப்பவர்களுக்கும் இதில் வித்தியாசம் உண்டு.

     கூப்பிட்ட உடனே வேலைக்கு ஆட்கள் வருவார்கள் தான் ஆனாலும் உடனிருந்து கவனிக்க வேண்டியவற்றை பிரசாத் இருந்து கவனிப்பது அவனது பழக்கம்.

     வீட்டில் அவனுக்கு தேவையானவை அனைத்தையும் ஹேமாவே செய்யத் தொடங்கியிருந்தாள்.,  அவனுக்கான உணவு உடை வரையில் அவள் கவனம் செலுத்த தொடங்கி இருந்தாள்.

     அன்று மாலை இரவிற்கான உணவு எல்லாம் செய்து வைத்துவிட்டு சமையல் செய்யும் அம்மா கிளம்புவதாக இருந்தது.,

       அவர்கள் ஹேமாவிடம்., “நீங்க முடிச்சிட்டு எல்லாத்தையும் எடுத்து ஒதுக்கி மட்டும் போடுங்க., நான் காலைல வந்து பார்த்துக்கிறேன்“., என்று சொன்னார்.

    சரி என்று சொன்னவள்., அவர்களை வழியனுப்பிவிட்டு கதவை பூட்டி விட்டு குழந்தையோடு ஹாலில் அமர்ந்து விட்டாள்.

               குழந்தைக்கு தேவையான விளையாட்டுப் பொருள்களை எடுத்து போட்டு., அவனை தரையில் விளையாட விட்டுவிட்டு அவளும் குழந்தையோடு தரையில் அமர்ந்து காலை நீட்டி உட்கார்ந்தாள்., அப்போது தான் தோன்றியது தன் வீடு தன் குடும்பம் என்பது என்னவென்று..

      அன்று தற்செயலாக சீக்கிரம் வீட்டிற்கு வந்தவன் அவள் தனியே இருப்பதைப் பார்த்துவிட்டுஅந்தம்மா போயிட்டாங்களா என்ன“., என்று கேட்டான்.

           “ஆமா காலையிலேயே வெளிய போகணும்னு பெர்மிஷன் கேட்டாங்க.,  நீங்க பிஸியா இருந்ததால தான்.,  நான் உங்க கிட்ட சொல்லல“.,  என்று சொன்னாள்.

         “இதுக்கெல்லாமா என்கிட்ட கேட்கனும்., நீ தனியா இருந்துப்பியாஎன்று கேட்டவன்., ஏதோ சொல்ல வாயை திறந்து பின்பு கட்டுப்படுத்திக் கொண்டான்.,

    அவளுக்கு புரிந்தது ஆனாலும் எதுவும் இவளும் காட்டிக்கொள்ளவில்லை.

       பின்பு அமைதியாக மீண்டும் பேச்சை தொடர்ந்தாள்., “அவங்க எல்லாம் செஞ்சு வச்சுட்டு போறேன் அப்படின்னு சொன்னாங்க.,  அதனால தான் நானும் சரி போய்க்கோங்க., என்று சொல்லிட்டேன்“., என்றாள்.

        தன்னை ரெப்ரெஷ் செய்து கொண்டு வந்தவன் அவளருகில் தரையிலேயே அமர்ந்துவிட்டான்

        சற்று நேரம் குழந்தை விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டே இருந்தான்., இவனை பார்த்த குழந்தை அவனிடம் தவழ்ந்து வந்து அவன் மடியில் ஏற.,  அவனை தன்னோடு சேர்த்து வைத்து பிடித்திருந்தவன் சற்று நேரம் அமைதியாகவே இருந்தான்.

      பின்பு மீண்டும் குழந்தை இறங்கி விளையாட சென்றுவிட.,  “ஹேமா கேட்டா தப்பா நினைக்க மாட்டியேஎன்று கேட்டான்.

      “இல்ல நினைக்க மாட்டேன் என்ன சொல்லுங்க“.,  என்றாள்.

         “ஏன் உனக்கு என்கிட்ட ஃப்ரீயா பேசணும்., மனசு விட்டு பேசணும் அப்படின்னு தோண மாட்டேங்குது“., என்று கேள்வியாக கேட்டான்.

          “அப்படி எல்லாம் இல்ல., நான் சாதாரணமா தான் இருக்கேன்.,  நீங்க ஏன் இப்படி நினைக்கிறீங்க“.,  என்றாள்.

     “சாதாரணமா இருக்கிறதுன்னா எப்படி சொல்ற., இந்த சமைச்சு வைக்கிறத., எனக்கு எடுத்து பருமாறுரீயே அதுவா இல்ல.,  எனக்கு டிரஸ் எல்லாம் எடுத்து வைக்கிறீயே அதுவா., இல்ல எனக்கு புடிச்ச சாப்பாடு எது ன்னு பார்த்து செய்ய சொல்லுவீயே அதுவா“., என்று கேட்டான்.

         அவள் அமைதியாக அவனை பார்த்தபடி இருந்தாள்., பின்பு மெதுவாக அவன் கைக்குள் கையை விட்டு விரல்களை கோர்த்தபடி அவன் தோல் புஜத்தில் தலை சாய்த்தவள்., சில விஷயம்  இப்ப வரைக்கும் எனக்கு புரியல ன்னு கூட வச்சுக்கோங்க., மற்றபடி நான் நார்மலா தான் இருக்கேன்“.,என்று சொன்னாள்.

     “ஹேமாஎன்று அவள் தலையில் தன் கன்னம் வைத்தவன் அவள் கோர்த்திருந்த விரல்களை இருக்கமாக பற்றிக்கொண்டுஎன்கிட்ட
ஃப்ரீயா பேச தொடங்கு.,  மனசுக்குள்ள எதையும் போட்டு குழப்பிக்காத“., என்று சொன்னான்.

        அவன் புஜத்தில் தன் தலையை அழுத்தமாக சாய்த்து கொண்டவள்., “அப்புறம் ரொம்ப பீல் பண்ணுவீங்க.,  ஏன்டா இவளை ப்ரீயா பேச சொன்னோம் ன்னு யோசிப்பீங்க பரவாயில்லையா“., என்று கேட்டாள்.

அவன் சிரித்துக்கொண்டே அவள் தலையில் முத்தம் பதிக்க., மெதுவாக அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் கண்களை பார்த்தபடியேரியலி வெரி சாரி., என்ன மன்னிச்சிடுங்க., நான் பண்ணினது தப்புதான் நான் அப்படி போய் இருக்க கூடாது“.,  என்று சொன்னாள்.

       “ஏய் நான் என்ன சொன்னேன்., நீ என்ன பேசிட்டு இருக்க“., என்றான்.

            “நான் சரியாதான் சொல்லிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன்“., முதலில் நான் பண்ணதுக்கு சாரி கேட்கிறேன். இனி நீங்களே என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் உங்க கழுத்த கட்டிக்கிட்டு போக மாட்டேன் சரியா“., என்றாள்.

               அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்., எங்கம்மா பண்ணது எவ்வளோ பெரிய தப்பு ன்னு எல்லாருக்கும் தெரியும்., ஏன் அதை நீ இதுவரைக்கும் என்கிட்ட கம்ப்ளைன்ட் கூட சொல்லல“., என்று கேட்டான்.

            “எனக்கு எங்கம்மா எவ்வளவு முக்கியமோ.,  அதே அளவு உங்களுக்கு உங்க அம்மா ரொம்ப முக்கியம்., நான் வந்து ரெண்டு வருஷம் தான் ஆகப்போகுது., ஆனா உங்கம்மா உங்கள 29 வருஷமா பார்த்துக்கிட்டாங்க.,  அப்போ அவர்களுக்கான உரிமையும் பொஸசிவ்நஸ்சும் அதிகமா தான் இருக்கும்., இதுல நான் நடுவுல வந்தது உங்க அம்மாவுக்கு கொஞ்சம் வருத்தம்.,

      மே பி மாமியார் நாலே அப்படித்தான் இருப்பாங்களோ என்னவோ.. சோ லீவ் இட் தி மேட்டர்“., என்று சொன்னாள்.

      “அப்ப அவங்களை பத்தி என்கிட்ட சொல்ல மாட்ட அப்படி தானே“., என்று கேட்டான்.

          “உறவுகள் என்னைக்குமே விட்டுப் போக போறது கிடையாது“., அவங்களோட வயசான காலத்துல அவங்க உங்கள தான் தேட போறாங்க.,  அப்போ நான் தள்ளி நின்னு வேடிக்கை பார்க்கத்தான் போறேன்., இது நார்மலா எல்லா வீட்டிலும் நடக்கிற ஒரு விஷயம் தான்., என்ன அவங்க சொன்ன வார்த்தைகள் எனக்கு புடிக்கல., அப்போ எனக்கு கோபம் மட்டும் தான் வந்துச்சு.,  சோ வெளியே போனேன்., இப்பவும் எனக்கு அவங்க மேல கோவம் இருக்கு.,  அதுக்காக உறவுகளை முறிச்சுக்க மாட்டேன்.., இவ்வளவுதான் இதைப் பத்தின விஷயம் இதுக்கு மேல இது பற்றி பேச வேண்டாமே ப்ளீஸ்“., என்றாள்.

         அத்தோடு அது பற்றிய பேச்சுகளை விட்டுவிட்டுகுட்டி பையனுக்கு சாப்பாடு ஊட்டி முடிச்சிட்டியா“., என்று கேட்டான்.,

          “இல்ல நீங்களும் வாங்க“., என்று சொன்னவள் அவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டு குழந்தைக்கும் உணவை ஊட்டி முடித்தாள்.,  பின்பு குழந்தையை அவன் கையில் கொடுத்துவிட்டு அவளும் சாப்பிட்டு அனைத்தையும் ஒதுக்கி போட்டு விட்டு அதன்பின்பு அறைக்கு வந்தாள்.

அவன் ஏதோ யோசனையில் இருக்க குழந்தையை வாங்கி  தூங்க வைக்க தொடங்கியிருந்தாள்.

      தூங்க வைத்து விட்டு வருவதற்குள் அவன் அவனிடத்தில் எப்போதும் போல படுத்து  இருந்தான். இப்போதெல்லாம் இவள் தான் அவள் அருகில் சென்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டே படுத்துக் கொள்கிறாள்.

      கண்ணை மூடி படுத்திருந்த இருவருக்கும் ஒரே நினைவு தான்.,

         அவனோநான்  மாற இன்னும் எத்தனை நாள் எடுக்குமோஎன்று அவன் நினைத்தான்.,  இவளோஅவன் மாறும் போது மாறட்டும்., அதுவரை வாழ்க்கை இப்படியே போகட்டும்‘., என்று நினைத்துக்கொண்டாள்.

     அதன் பிறகு நாட்கள் அதன் போக்கில் செல்ல துவங்கி இருந்தது., இருவரும் ஒருவருக்காக ஒருவரை பார்த்துக் கொள்ள தொடங்கியிருந்தனர்.

        இப்பொழுதெல்லாம் அவன் கோபத்தை நிறையவே குறைக்க தொடங்கியிருந்தான். ஆனாலும் சில நேரங்களில் கோபத்தில் வார்த்தைகளை விட்டு விட்டாலும் அவள் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அடுத்த நிமிடமே அவனிடம் வந்து பேச கற்றிருந்தாள்.

        இப்பொழுதெல்லாம் எதையும் பேச தயங்குவது இல்லை இருவருக்குமிடையே சாதாரணமாக பேச்சுவார்த்தை இருக்க.,  குழந்தைக்கு பத்து மாதம் முடியும் தருவாயில் இருந்தது.

        அப்போதுதான் வினோத்திற்கு  ஏற்கனவே பேசி வைத்திருந்த அவன் மாமா மகளை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர்., அதற்காக ஹேமாவை ஊருக்கு வரச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

     அப்போதுதான் தயாளன் எப்படியும் குழந்தையை காக  ஒரு ஃபங்ஷன் வைக்க வேண்டும் என்று சொன்னார்.

        பிரசாத் தான் இன்னும் இரண்டு மாதத்தில் அவனுடைய முதல் பிறந்தநாள் வரும்., அந்த சமயத்தில் அனைவருக்கும் சொல்லி சற்று கிராண்டாக ஒரு ஃபங்ஷன் வைத்துவிடுவோம் என்று சொல்லியிருந்தான்.

       வினோத்தின் திருமணம் கோவிலிலும் வரவேற்பு மண்டபத்திலும் வைப்பதாக இருந்தது., திருமணத்திற்கு நான்கு நாட்கள் முன்பே ஹேமாவை அழைத்துக்கொண்டு பிரசாத் வந்துவிட்டான்., ஹேமாவை அவளது அம்மா வீட்டில் விட்டிருக்க அங்கு வந்த சொந்தங்களோ ஆளாளுக்கு குழந்தை பிறந்தது கூடவா சொல்லக்கூடாது.,

       வெளியூரில் ரெண்டு பேரும் இருந்து விட்டீர்களே., என்று சொல்லி குறை பட்டுக் கொண்டிருந்தனர்.

     சொந்தத்தில் ஒரு பெண்மணிஏம்மா பெரிய இடத்துல  பொண்ணு கொடுத்தா குழந்தை பிறந்ததை கூட சொந்தத்தில் சொல்லக்கூடாதா என்ன“., என்று கேட்டார்.

        யார் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதி காக்க.,

       பாட்டியோகுழந்தை பிறந்த பிறகு ஹேமாவிற்கு சற்று உடல் நலம் சரியில்லாமல் இருந்தது.,  அதனால் தான் யாருக்கும் சொல்லவில்லை“.,  என்று சொல்லி சமாளித்தார்.

             “இப்போ எப்படி இருக்கு“.,  என்று மற்றவர்கள் விசாரிக்க

         “இப்பதான் கொஞ்சம் உடம்பு தேறி வந்து இருக்காஎன்று சொன்னார்.

      ஏற்கனவே சற்று மெலிந்தது போல இருந்ததால் மற்ற உறவுகளும் நம்பிக் கொண்டனர்.

       “அதுக்கென்ன இப்போ  பிறந்தநாள் முடிந்ததுமே மொட்டை போட்டுற பங்ஷன் வைக்கிறோம்., எல்லாரும் வந்துருங்கஎன்று சொல்லிக் கொண்டிருந்தார் பாட்டி.

         வினோத்தின் திருமணம் முடிந்த கையோடு உறவினர்கள் கலைந்திருக்க.,  வீட்டில் முக்கிய சொந்தங்கள் மட்டும் இருந்தனர்.

      

Advertisement