Advertisement

ஆனால் அது அப்படி இல்ல., நா அங்க இருக்கக்கூடாது அப்படிங்கறத தேவையில்லாத வார்த்தைகள் யூஸ் பண்ணினாங்க., அதனால் தான் நான் போனேன்.,  அதுக்கும் நீங்க எல்லாம் திட்டுறத்துக்கும் கம்பேர் பண்ணாதே.,

       நீங்க எல்லாம் என் மேல இருக்குற அக்கறை அன்பு இதுனால திட்டினீங்க அடிச்சிங்க., அதெல்லாம் நான் ஏத்துக்கிட்டதுக்கு காரணமும் இருக்கு.,

       காரணம் என்ன அப்படின்னா எங்க அண்ணனை பொறுத்தவரைக்கும் என்கிட்ட வெளியே ரொம்ப பாசத்தை காட்டிக்க மாட்டான்.., நார்மலா பார்த்தா எங்க அண்ணனும் நானும் சண்டை போடுற மாதிரி நிறைய நாட்களில் தெரியும்.,  நாங்க ரொம்ப பேசிக்கிட்ட மாதிரி எல்லாம் தெரியாது., ஆனால் நான் அவன்ட்ட  கேட்க  கூட வேண்டாம்., நார்மலா அது நல்லாயிருக்கு அப்படின்னு  சொல்லி ஆச்சுனா  என் முன்னாடி இருக்கும்., எப்படித்தான் கண்டு பிடிப்பானோ., எனக்கு பிடிக்கும் னா கரெக்டா வாங்கிட்டு வந்து தந்தருவான்.,

       அதேநேரம் வேலைக்கு போனதுக்கு அப்புறம் நான் காலேஜ் போறப்ப., என்ன பண்றேன்.,  யார் கூட பேசுறேன் எல்லாமே அவனுக்கு தெரியும்.,

         ஆனாலும் அவன் இதுவரைக்கும் என்ன செய்றேன்., ஒரு நாள் கூட என்ட்ட கேட்டது கிடையாது., எங்க பாட்டி ட்ட தான் ரொம்ப சண்டை போடுவான்., கொஞ்சம் லேட்டா வந்தா கூட கோபப்படுவான்., ஊர் கிடைக்கிற நிலையில் நீ எங்க சுத்திட்டு வர்ற அப்படிம்பான்., இத்தனைக்கும் நான் வெளியே ரொம்ப எல்லாம் போக மாட்டேன்.,  உன் கூட வந்து இருப்பேன் இல்லாட்டி நம்ம எங்கியாவது பிரண்ட்ஸோட போயிருப்போம்.,

        அதுக்குதான் திட்டு விழும்., எங்க பாட்டி கிட்ட சொல்லுவான்.,  நீங்க தான் அவளை செல்லம் கொடுத்து கெடுக்குறீங்க.,  வெளியே எல்லாம் எப்படி இருக்கு தெரியுமா சிட்டுவேஷன்.,

       இப்ப உள்ள பசங்கள பத்தி எங்களுக்கு தான் தெரியும் வெளியே எல்லாம் அப்படி அடிக்கடி  அனுப்பாதீங்க.,  இப்படி அனுப்பாதீங்க ன்னு சொல்லுவான்., 

        ஏதாவது சொன்னா என் மண்டையில் கொட்டு போடுவான்., அந்த மாதிரி நிறைய சண்டை நடந்திருக்கு.,  நான் கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வரதுக்குள்ளே., நான் வரலைன்னா பயப்படுற அண்ணன் கண்டிப்பா இந்த நேரத்தில் எவ்வளவு பயந்திருப்பான்.,  என்னால பீல் பண்ண முடிஞ்சிடுச்சு..,  அதனால தான் அவன் அடிக்கும் போது நான் அமைதியா இருந்தேன்..,

     அதே மாதிரிதான் பாட்டியும்.,  பாட்டிக்கு என்ன இப்ப வரைக்கும் ஒரு குற்றவுணர்ச்சி., நாம தான் இவளை செல்லம் கொடுத்து கெடுத்துட்டமோ.,  இவ கேட்கிறதெல்லாம் வாங்கி கொடுத்து.,  ஆசைப்பட்டதெல்லாம் செஞ்சதால தானே இப்படி ஆயிட்டா.,  அப்படிங்கிற வருத்தம்.,

     அது மட்டுமில்லாம எங்க அம்மா வந்து ஒரு வார்த்தை சொல்லி விடக்கூடாது.., நீங்க வளர்த்ததனால தான் என் பிள்ளை எப்படி இருக்கா.,  ஒருவேளை என் கைக்குள் வைத்து வளர்த்து இருந்தா ஒழுங்கா வளர்த்திருப்பேன்., அப்படி ன்னு எங்க அம்மா ஒரு வார்த்தை சொல்லிட்டா.,  அத பாட்டியால தாங்க முடியாதுன்னு எனக்கு தெரியும்., 

     அதனால தான் எங்க பாட்டி அடிக்கும் போது நான் பேசாம இருந்தேன்.,  இப்ப வரைக்கும் பாட்டி தினம் திட்டுறாங்க., நான் எதுக்கு அமைதியா இருக்கேன்னு நினைக்கிற இதுக்கு தான்.,

     அதே மாதிரி தான் அம்மா அப்பாவுக்கும்., எனக்கு தெரியும் வீட்ல நான் ஒரே பொம்பள புள்ள அப்படின்னு சொல்லிட்டு எல்லாமே எனக்கு அப்படி செஞ்சவங்க., அவங்களுக்குள்ள ஒரு பயம்..,  இவ இப்படி பண்ணிட்டா., அப்படிங்கற கோபம்., அதுமட்டுமில்லாம நாலு பேர் பார்த்து யாரும் கொஸ்டின் கேட்டா.,  என்ன பதில் சொல்றதுன்னு  ஒரு சாதாரண பேரன்டா யோசிச்சு பார்த்தா.,  அவங்களோட கோபம் வருத்தம் நியாயம் புரியுது.,

        ஏன்  நீ அடிக்கும் போது நான் எதுக்கு அமைதியா இருந்தேன்., ஒன்றும் சொல்லாமல் போனது தப்புதான்., அட்ளீஸ் போன் பண்ணி ஒரு வார்த்தை டிஸ்கஸ் பண்ணி இருக்கனும்., இப்படி பிரச்சனை நான் என்ன பண்ணனும்னு கேட்டிருந்தால்.,   நீ அது ஒரு வார்த்தை சொல்லி இருப்ப.., அதையும் நான் செய்யல.,  அதுதான் தப்பு அப்படிங்கறதால எல்லாத்தையும் ஏத்துக்கிட்டேன்.,

         பிரசாத் கோவத்துல திட்றாங்க அவங்க எந்த அளவுக்கு வருத்தப்பட்டு இருப்பாங்க ன்றது என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது., நான் அங்கிருந்து கிளம்பும் போது பிரசாத் மனசுல நான் இல்ல. ஏதோ கடமைக்காக என்னை கல்யாணம் பண்ணி.,  கடமைக்காக ஒரு வாழ்க்கை வாழ்ந்து இருக்காங்க அப்படிங்கற மாதிரி தான்.,  நான் பீல் பண்ணேன்..

       அதனால தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்., அப்பவே உண்மையிலேயே அவங்களுக்கு என்ன பிடிக்கும் அப்படிங்கிறது தெரிஞ்சிருந்தா., வேற மாதிரி இருந்திருக்கும்.,

         அப்பவும் என் மேலதான் தப்பு.,  அவங்க முகத்தை பார்த்து நான் பேச தயங்குவேன்.,அப்ப எல்லாம் சையாவே ஃபீல் பண்ணினேன்.,  அதனால தான் சரியா கவனித்து பார்க்கல., ஒருவேளை இப்ப அவங்க முகத்தை நேருக்கு நேரா பாக்குற மாதிரி., அப்ப பார்த்துட்டு இருந்தேன்னா அவங்களோட அன்பும் எனக்கு புரிஞ்சு இருக்குமோ., என்னவோ..,  இதைத்தான் யோசிச்சிட்டு இருந்தேன்..,

       நம்ம என்ன தப்பு பண்ணுனோம்., என்ன சரியா பண்ணனும் ன்னு  யோசிக்க ஆரம்பிச்சுட்டாளே., உன்னாலே ஓரளவுக்கு எல்லாமே அனலைஸ் பண்ணிக்க முடியும்., அப்படி தான் இப்பவும் நான் என்ன தப்பு பண்ணேன் அப்படிங்கறது எனக்கு இப்போ ஓரளவுக்கு புரியுது., அப்ப தண்டனை ஏத்துகிட்டு தானே ஆகணும்“., என்று சொல்லி அவள் சிரிப்பது போனில் கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு புரிந்தது.,

              ‘இவள் என்முகம் பார்த்தே பேசவில்லையா‘., என்று யோசித்துக் கொண்டிருந்தான்.,

        அதேநேரம் குழலி இங்கே பேசிக் கொண்டிருந்தவளிடம்சரி போய் தூங்கு.,  கதை சொன்னது போதும்“.,என்று சொன்னாள்.

      “உனக்கு கொழுப்பு டி“., என்று சொல்லி அவளுக்கு ஒரு அடியை போட்டு விட்டுநீயும் போய் தூங்கு போ., நீ காலைல ஆபீஸ் போகனும்“.,  என்று சொன்னாள்.,

     “நானாவது ஆபீஸ்ல கம்ப்யூட்டர் கட்டிட்டு தான் இருக்கனும்., நீ இங்க உன் பையன வச்சிட்டு படாத பாடு படனும்., போ போ“.,  என்று சொல்லி அவளை அனுப்பி விட்டு மெதுவாக போனை எடுத்தவள்., எல்லாம் கேட்டுட்டு  இருந்தீங்களா அண்ணா போதுமா., வேற ஏதும் டீடைல்ஸ் கேட்கணுமா“., என்று கேட்டாள்.

       “இல்லமா போதும்“., என்று சொன்னவன் போனை கட் செய்துவிட்டு யோசனையோடு இருந்தான்.

      அது போலவே கோயம்புத்தூரிலிருந்து கிளம்புவதற்கு முன் நித்தியானந்தனிடம் விஷயத்தை சொல்லியதோடு தன் தந்தையிடம் சொல்லிஅம்மாவை இனியாவது கண்டித்து வையுங்கள்.,

        அதற்காக நான் இங்கே  அவளை அழைத்து வராமல் எல்லாம் இருக்க முடியாது., நிச்சயமாக அழைத்துக் கொண்டு வருவேன்“., என்று சொல்லிவிட்டு தான் அங்கிருந்து கிளம்பி இருந்தான்., அதை நினைத்தபடியே கண்ணயர்ந்து இருந்தான்.

      நீண்ட நாட்களுக்கு பிறகு நிம்மதியான தூக்கம் அன்று பகலில் அவனுக்கு..

        நாட்கள் செல்ல செல்ல அவளின் உடலும் சற்று தேதி இருந்தது., மனமோ அவன் என்ன திட்டினாலும் அமைதியாக வாங்கிக் கொள்ள எண்ணியிருந்தது., அவனுமே கோபத்தை குறைத்திருந்தான்.,  குழந்தையை நன்கு கவனிக்க தொடங்கியிருந்தாள்., இப்போது அவள் வந்து ஒரு மாதம் கடந்து இருந்தது.,  என்று சொன்னால் அவளால் நம்பவே முடியவில்லை.,  நாட்கள் அத்தனை வேகமாக சென்றது போல இருந்தது.,

         அவளுக்கு ஒரு மாதம் இருந்து ஒரளவு அவளை  நன்றாக கவனித்த பிறகு வீட்டில் சமையல் செய்யும் அம்மாவிடம் அவளுக்கு தேவையானதை செய்து கொடுக்கும்படி சொல்லிவிட்டு.,  பாட்டியும் வினோத்தை வரவழைத்து அவனோடு ஊருக்கு  சென்றுவிட்டார்.,
  
       குழந்தை தூங்கும் நேரத்தில் சில வேலைகளை செய்ய தொடங்கியிருந்தாள்.,  மற்றவற்றை சமையல் செய்பவர் பார்த்துக்கொண்டார்.,  அவளும் ஓரளவு தேறி உடல் நலம் நன்றாக மாறியிருந்தது.,

       அவ்வப்போது பூனாவுக்கும் போன் செய்து பேசிக் கொண்டாள்., அவள் தோழியும் வெளிநாட்டிலிருந்து அவளிடம் பேசி நலன்களை விசாரித்து கொண்டாள்.

     கையணைவு போதுமே
      கண் சிமிட்டும் நொடிகளில்
      கவலைகளை கடந்து விட.,
      பாரம் தாங்காமல் தான்
      உன்னிடம் கோபத்தை
      காட்டும் பாவியாகி
      போகிறேன்.,

Advertisement