Advertisement

22

நமது உதடுகளை அரண்மனை வாயிற்
கதவுகளைப் போல பாதுகாக்க வேண்டும்நமது வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் சாந்தமானதாகவும் இதமாகவும் இருக்க வேண்டும்.

                        – புத்தர்


             பிரசாத் வருவதற்குள் பாட்டி பேசிப்பேசியே ஒரு வழி ஆக்கினார்கள் என்றால்., குழலியும் ரதியும் அறிவுரை என்ற பெயரில் ஹேமாவை ஒரு வழி ஆகியிருந்தனர்.,

         ஏற்கனவே தான் செய்தது தவறு என்று எண்ணி கொண்டிருந்தவளுக்கு., தன் மேல் தான் தவறு முழுவதும் என்று எண்ணும் படி அவளை திருப்பி வைத்திருந்தனர்.,

         முகம் மிகவும் சோர்வுற்று இருந்தது.,  அன்று அவன் வந்துவிடுவான் என்று தெரிந்ததால் குழலியும் ரதியும் தங்கள் வேலை முடிந்து அப்படியே தங்கள் வீட்டிற்கு சென்று விடுவதாக சொல்லி விட்டு சென்றனர்.,

       மதியநேரம் மருந்து உணவை தயார் செய்து வைத்திருந்தார்.,  “ஹேமா சாப்பிட்டு படுத்து தூங்கு“.,என்று சொல்லி அதட்டி கொண்டிருந்தார்.,

          “பாட்டி எவ்வளவு நாள் இப்படி மருந்து சாப்பிடனும்“., என்று கேட்டபடியே அமர்ந்திருந்தாள்.

         “உடம்பு தேறுற வரை சாப்பிடு“., என்றவர். “நான் பிள்ளைய பார்த்துக்கிறேன் தூங்கு“., என்றார்.

           வேறு வழியின்றி அவர் கொடுத்த உணவை உண்டு விட்டு கட்டிலில் சென்று படுத்த சற்று நேரத்திற்கெல்லாம் தூங்கியிருந்தாள்.,

          பாட்டியும் மதிய உணவை ஊட்டி குழந்தையை தூங்க வைத்திருத்தார்.,  சரியாக அதே நேரம் பிரசாத் வந்து சேர்ந்தான்.

         உடைமாற்றியவன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்., முகம் வாடி தெரியஆளாளுக்கு வச்சு செஞ்சுட்டாங்க போலியே‘., என்று நினைத்துக் கொண்டவன்., குழந்தையை பார்க்க குழந்தையில்லை என்றவுடன் பாட்டியிடம் கேட்டான்.

      “இந்த ரூம்ல தூங்க வைத்திருக்கிறேன்என்று சொன்னார்.

       அந்த அறையில் சென்று குழந்தையை எட்டிப் பார்த்தவன்., பின்பு மற்றவர்களுக்கு என தயார் செய்திருந்த உணவில் எடுத்து பாட்டி பரிமாறி கொடுத்தார்., 

          அவன் சாப்பிட்டு விட்டு எழுந்து அறைக்குள் சென்றான்., எப்போதும் போல அவளுக்கு எதிர்ப்பக்கமாக படுத்தவன்., தூங்கும் அவளின் முகத்தையே பார்த்த படி..,

       அவள் அன்று குழலியோடு பேசியதை யோசித்து கொண்டிருந்தான்.

           பிரசாத் கோயமுத்தூர் சென்ற நாட்களில் ஒரு நாள் இரவு நேரம் குழந்தையை தூங்க வைத்துவிட்டு ஹாலில் அமர்ந்திருந்தவள்.,

       ஹாலில் யாரும் இல்லாமல் இருக்க.,  தனியே அமர்ந்து ஏதோ யோசனையில் இருந்தது போல அமர்ந்து இருக்கும் போது.,

        குழலி தற்செயலாக வெளியே வருவது போல வந்தாள்.,

      அது மட்டுமல்லாமல் கையில் போனை வைத்திருந்தவள் ஏற்கனவே உள்ளே அறையில் இருக்கும் போதே.,

       ஹேமா இன்னும் தூங்கவில்லை ஹாலில் தான் இருக்கிறாள் என்று பிரசாத் இடம் சொல்லி இருந்தாள்.

            அவன் தான் அவளிடம்பேச்சுக் கொடுத்து என்ன சொல்லுகிறாள்என்று கவனிக்க சொல்லி இருந்தான்.,

      ஏற்கனவே ஊருக்குப் போகும் முன்பேஅவள் மனதிலிருப்பதை  அவள் எப்போதும் வெளியே சொல்வதே கிடையாது., இந்த முறையாவது முடிந்தால் அவள் வாயிலிருந்து என்ன வருகிறது என்று மட்டும் பார்த்து சொல்என்று சொல்லி இருந்தான்.,

     அதையே சாக்காக வைத்துக் கொண்டுஅப்படியே லைன்ல இருங்க அண்ணாஎன்று சொல்லிவிட்டு தான் போனை எடுத்துக் கொண்டு வந்தவள்., போனை ஹேமாவின் அருகில் சாதாரணமாக வைப்பது போல வைத்துவிட்டு அவளருகில் உட்கார்ந்து.,

      “ஏன் தூங்கலையாஎன்று கேட்டாள்.

              ஏதோ யோசனையில் இருந்து  கலைந்தவள் போல எழுந்தவள்.,  “தூங்கணும்என்று சொன்னாள்.

     “குட்டி பையன் தூங்கிட்டானா., அவன் தூங்குற நேரத்தில் தூங்கலாம் இல்ல., பகலில் உன்னை தூங்க விட மாட்டேங்கிறான்“., என்று கேட்டாள்.

      “இல்ல இல்ல., இப்ப எல்லாம் பாட்டி பாத்துக்கிறாங்க.., அவனும் பாட்டி கூட நல்லா செட்டில் ஆயிட்டான்., அதெல்லாம் பிரச்சனை இல்லை, சும்மா உட்கார்ந்து இருந்தேன்.,  கொஞ்ச நேரம் கழிச்சு போய் படுக்கிறேன்“. என்று சொன்னாள்.

          “ஏன்., ஹேமா நீ கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லையே., வீட்டை விட்டு நீ போறதுக்கு முன்னாடி இங்க யார்ட்டையும் ஒன்னும் சொல்லனும் தோணவேயில்லை தானே.,

         அப்பல்லாம் எங்களை யோசிக்கவே இல்லையா., எனக்கு எவ்வளவு கோபம் வந்துச்சு தெரியுமா.,  சரி போகனும்ன்னு முடிவு பண்ணினவ சென்னை வந்திருக்கலாம் இல்ல.,  நாங்க இருக்கிறோம் தானே.,  எங்க கூட இருந்திருக்கலாம் இல்லை“. என்று கேட்டாள்.

       “நான் யாரையும் குறை சொல்ல விரும்பலை., ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நியாயம் இருக்கு., எதையுமே நம்மால சொல்ல முடியாது., ஒரு அம்மாவா ஒரு எம்பி யோட ஒய்ஃப் அவங்களோட தாட் வேற.,

       அவங்களைப் பொறுத்த வரைக்கும்., தன்னோட அந்தஸ்துல  குறைந்த இடத்தில் அவங்க பழகினதே இல்லை போல., அவங்க வீட்ல அன்னைக்கு சொன்ன வார்த்தை  என் வீட்ல வேலை பார்க்கிறவங்க கூட நான் தகுதி பார்த்து தான் எடுப்பேன் அப்படிங்கற மாதிரி சொன்னாங்க.., இத்தனைக்கும் நானும் பிரசாத்தும் லவ் மேரேஜ் எல்லாம் கிடையாது.., அது மட்டும் இல்லாம அவங்க மனசுல என்ன ஒரு தாட்  னா.,

      நான் அவர் கண்ணை விட்டு மறைந்து இருந்தேன் அப்படின்னா., அவர் இரண்டாவது கல்யாணத்துக்கு சம்மதிப்பார் அப்படிங்கிற எண்ணம்.,  அதுதான் திரும்பத் திரும்ப சொன்னாங்க.., அவங்க அன்னைக்கு பேசும் போது அவங்க வாயிலிருந்து ரிப்பீட்ட டா வந்த வார்த்தை இதுதான்.,

        எனக்கு அவங்க உண்மைய சொல்லாம கல்யாணம் பண்ணிட்டாங்க என்கிற கோபம்., ஏன் ஆப்ட்ர் மேரேஜ் கூட  எல்லாம் சொல்லல அப்படிங்கிற கோபம்.,  இது எல்லாமே இருந்துச்சு.,

          அதை தவிர ஒரு இடத்தில ஒருத்தர் திரும்பத் திரும்ப அவமானப்படுத்தும் போது., அந்த இடத்துல நிக்கனுமா அப்படி ன்னு தோணும்.,  அத எப்படி சொல்றது  ஆபீஸா இருந்தாலுமே திரும்பத் திரும்ப நம்மல மட்டம் தட்டி பேசிட்டே இருந்தா.,  அந்த இடத்தில் வேலை பார்ப்பதை விட வெளியே வேற வேலை தேடி பார்க்கலாம் ன்னு  யோசிப்போம்  இல்ல., இதுவும் அப்படித்தான்.,

            ஒரு மாமியாரா இருக்கிறவங்க அம்மா ஸ்தானத்தில் இருந்து பார்த்துக்கணும்., அப்படின்னு தான் எல்லாரும் நினைப்பாங்க., இவங்க அம்மா ஸ்தானத்தில் வேண்டாம் சக மனுஷியா நினைத்து இருந்தால் கூட போதும் தான் தோணுச்சு.,

           கலாக்கா இல்லன்னா., நான் அவங்க  வீட்டில் இருந்து இருக்கவே மாட்டேன்., வீட்டுக்கு போன நாளிலிருந்து நான் அந்த வீட்டை விட்டு வெளியே வருவதற்கு முதல் நாள் வரை எனக்கு ஃபுல் சப்போர்ட் அவங்க தான்., இவருக்கு தேர்தல் பிரச்சாரம் எலக்சன் டைம் வொர்க்.,  அப்படி இப்படின்னு அதுல பிஸியா இருந்ததால.,  இவர் வீட்டில் நடந்தது என்னன்னு யோசித்து இருக்க மாட்டாரு., அதுமட்டுமில்லாம பொதுவா வீட்டு விஷயங்களில்  சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு கூட ஹஸ்பன்ட் ட்ட போய் நிற்கிறது.,  ரொம்ப தப்புனு நான் நினைச்சேன்..,

         ஏன்னா எங்க பாட்டிக்கும்.,  அம்மாவுக்கும் சண்டை வந்துச்சுன்னா உடனே எங்க அம்மா அப்பா கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவாங்க.,  எங்க பாட்டியும் அப்பாட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவாங்க., இரண்டு பேருக்கும் நடுவில்  எங்க அப்பாவை பார்க்க பரிதாபமாக இருக்கும்.,

      அந்த மாதிரி ஒரு சிட்டுவேஷனை நான் பிரசாத்துக்கு கொண்டு வரக் கூடாதுனு நினைச்சேன்., அதனால தான் இதுவரைக்கும் நான் சொன்னதே கிடையாது., எப்படியோ அவங்க காதுக்கு சில நேரங்களில் போய் இருக்கு., அவங்க என்ட்ட கேட்கும் போது கோபப்பட்டு இருக்காங்க., ஏன் இதெல்லாம் நீ என்ட்ட சொல்ல மாட்டியா ன்னு கேட்டு இருக்காங்க.., ஆனா என்னவோ சொல்லனும்னு தோணல“., என்று சொன்னாள்.

           “சரி அவங்க சொன்னாங்க நீ  போயிட்ட சரி.,  இப்ப ஆளாளுக்கு வந்து அடிச்சாச்சி., திட்டியாச்சி., கண்டிப்பா அண்ணா வும் உன்ட்ட கோபத்தை காட்டியிருப்பாங்க.,  எங்க எல்லாருக்குமே தெரியும் அந்த கோபத்தை கடுமையா காட்டுவாங்க ங்கிறது எங்களுக்கும் புரியுது.,

         ஆனா நீ எதுக்கு இவ்வளவு அமைதியா இருக்க.,  இப்ப உன்னோட மானம் ரோசம் சூடு சொரணை எல்லாம் கொடி பிடிச்சிட்டு வரலையா., மாமியார் பேசினதுக்கு மட்டும் அவ்வளவு கோபம் வந்துச்சு“., என்று சொல்லும் போது சத்தமாக சிரித்து விட்டாள் ஹேமா.

    “அடியேய் பேய் மாதிரி சிரிக்காதே., பிள்ளை முழிச்சிற போறான்“.,என்றாள் குழலி.,

              “லூசாடி நீஎன்று சொல்லிவிட்டுமாமியார் அப்படிங்கற கேட்டகிரியில் இருந்து.,  அவங்க நார்மலா நான் எதும் தப்பு பண்ணி என்ன கண்டித்து திட்டி இருந்தா..,  கண்டிப்பா நான் அதை ஏற்றுக் கொண்டு இருப்பேன்., ஏன்னா அப்போ அவங்க ஒரு அம்மா ஸ்தானத்திலே என்னை கண்டிக்கிறாங்க அப்படின்னு நினைச்சு இருப்பேன்., 

       

Advertisement