Advertisement

சரிங்க தம்பி., நான் போய் அவரை கூட்டிட்டு வருறேன்“., என்று சொல்லி விட்டு சென்றவர் ஆட்டோ டிரைவரை அழைத்து வந்தார்.

        ஆட்டோ டிரைவர் வந்தவர்., “வணக்கம் சார்“., என்று சொல்லியபடி நின்றார்.

       எழுந்து நின்று வரவேற்றவன்.,  “உட்காருங்கஎன்று சொன்னான்.,

   “இல்லைங்க சார்“., என்று சொல்ல., “உட்காருங்கஎன்று கட்டாயப்படுத்தி தன் அருகில் அமர வைத்தான்.,

        “அப்பாஎன்று சொல்லவும்.,

      அவர் கையில் ஒரு டெபாசிட் பத்திரத்தையும்., ஒரு சாவியையும் கொடுத்தார்.,

       “சார் இது என்னது“., என்று கேட்டார்.

          “நீங்க செஞ்ச ஹெல்ப்புக்கு., நான் செய்ற சின்ன கைமாறு நினைச்சுக்கோங்க“., என்று தயாளன் சொன்னார்.

        “ஐயோ சார்.,  நீங்க நினைக்கிற மாதிரி நான் எதுவும் செய்யலை“., என்று சொன்னார்.

    அன்று ஹேமாவிற்கு அவர் சொன்ன அறிவுரையும்., அவர் உணவு வாங்கிக் கொடுத்ததையும் சொன்னார்.

         “அவங்க கிட்ட காசு வாங்கி தான் சார் வாங்கி கொடுத்தேன்., நான் என்ன என் சொந்த காசுலையா வாங்கி கொடுத்தேன்“. என்று அவர் சொன்னார்.

            “சொந்த காசுல வாங்கி கொடுக்கிறீங்களோ., அவங்க காசு வாங்கி கொடுக்கிறீங்களோ., ஆனா உங்களுக்கு அந்த நேரத்தில் அவளுக்கு வாங்கி கொடுக்கனும் தோணுச்சே அதுவே பெருசு., அது மட்டும் இல்லாம அவங்க பத்திரமா இறங்கிட்டாளா  விசாரிச்சு இருக்கீங்க“., என்றான்.

     “சார் யாராவது விசாரிக்குற மாதிரி தெரிஞ்சா நானே., சொல்லியிருப்பேன்.,  ஆனா ஒருவேளை நீங்களே கண்டுபிடிச்சிட்டீங்க அப்படி ன்னு நினைச்சு தான் சார்., நான் சொல்லல“.  என்று சொன்னார்.

        “நான் தான் விசாரிக்க மறுத்துட்டேன்.,  அன்னைக்கே விசாரித்து இருந்தா கண்டுபிடித்து இருப்பேன்“., என்று சொன்னான்.

        “நல்லா இருக்காங்களா சார்என்று கேட்டார்.,

    ” நல்லா இருக்காஎன்று சொன்னவன்  “இந்தாங்கஎன்று கொடுத்தான்.

        “இல்ல சார்., வேண்டாம் சார்“., என்று சொன்னார்.,

           புது ஆட்டோ சாவியும்., அவன் பிள்ளைகளின் படிப்புக்காக என்று சொல்லி அவன் கையில் ஒரு டெபாசிட் பத்திரத்தையும் கொடுக்க.,

       ” ஐயோ அதெல்லாம் வேண்டாம் சார்என்று சொன்னார்.
     
           “நீங்க புள்ளைங்க எல்லாம் நல்லபடியா படிக்க வையுங்க., உங்கள் பிள்ளைகள் படிப்பு செலவுக்கு யூஸ் பண்ணிக்கோங்க“., என்று சொல்லி கட்டாயப்படுத்தி கையில் திணித்தான்.

        சாவியை கொடுத்து அவரை கையெடுத்துக் கும்பிட்டான்.,

      “ஐயோ சார் நீங்க போயி“.,  என்று சொன்னான்.,

           நீங்க செய்தது., உங்களைப் பொறுத்தவரை சாதாரணம்., ஆனால் அன்னைக்கு அவளுக்கு அது பெரிய ஆறுதல்., நீங்க செஞ்சது எவ்வளவு பெரிய உதவி தெரியுமா“., என்று சொல்லி அவர் கையில் கட்டாயப்படுத்தி திணித்தான்.,   அவர் வாங்கவே மாட்டேன் என்று சொன்னாலும் கட்டாயப்படுத்தி அவன் கையில் கொடுத்து., இது அதற்காக கொடுத்தது அல்ல..,  எனக்கு மகன் பிறந்த சந்தோஷத்தில் கொடுத்தது என்று சொல்லி கட்டாயப்படுத்தி வாங்க வைத்தான்.,

      “அவ ஊர்ல இருக்கா., இங்க வரல வரும்போது கண்டிப்பா நான் உங்களுக்கு சொல்லி அனுப்புறேன்“., என்று சொன்னான்.,

    “சரிங்க சார் கேட்டேன்னு சொல்லுங்க சார்“.,என்று சொன்னபடி கிளம்பினார்.

        அவரை சந்தோஷமாக வழியனுப்பி வைத்தான்.,

       பின்புசுந்தரி அம்மாஎன்று பிரசாத் அழைக்க., “தம்பிஎன்று வந்து நின்றார்.

          “உங்க வீட்டில அண்ணணை வர சொல்லுங்க“. என்று சொன்னான்.

       அவரும் சற்று நேரத்தில் வந்து நிற்க.,  “அண்ணா 10லிட்டர் கேன் இரண்டு வாங்கிக்கோங்க.,  20 லிட்டர் டீசல் வாங்கிட்டு வாங்க., இந்தாங்க கார் சாவிஎன்று கொடுத்து டீசல் வாங்குவதற்கு பணத்தையும் கொடுத்தான்.

           தம்பி என்று கேள்வியாக நின்றவரிடம்.,  “இப்போ இருபது லிட்டர் புது கேன்ல வாங்கிட்டு வாங்க“.,  என்று சொன்னார்.

        அமைதியாக அனைவரும் அமர்ந்து இருந்தனர்.

         பிரசாத் அவன் அக்காவையும் அம்மாவையும் பார்த்தபடிஅன்னைக்கு டீசலை ஊத்திட்டு அவளை மிரட்டி இருக்கீங்க., நிறைய தேவையில்லாத வார்த்தை யூஸ் பண்ணி இருக்கீங்க.,  இது என்ன உங்க வீடா“., என்று கேட்டான்.

        “என்னடா பேசுற., நான் உங்க அப்பாவை கல்யாணம் பண்ணிட்டு என்னைக்கு இந்த வீட்டுக்குள்ள வந்தேனோ அன்னையிலிருந்து இது  என் வீடு தாண்டா“.,  என்று அதிகாரமாக சொன்னார் சொர்ணம்.

    “அப்படி சொல்றீங்களோ“., என்றவன்அப்போ என்னை கல்யாணம் பண்ணிட்டு என்னைக்கு  இந்த வீட்டுக்குள்ள ஹேமா வந்தாலோ அதிலிருந்து இது அவளுக்கும் வீடு தான்., அவளை வீட்டைவிட்டு  வெளியே போகச் சொல்ல உங்களுக்கு யார் ரைட்ஸ் கொடுத்தா..,

      நீங்களும் இந்த வீட்டுக்கு மருமகளாக வந்தீங்க., அவளும் இந்த  வீட்டுக்கு மருமகளாக வந்திருக்கா., இது எங்க அப்பாவோட அப்பா சொத்து ., எங்க தாத்தா சொத்து., தாத்தா சொத்து பேரனுக்கு தான் சொந்தம்., பேத்திக்கு கூட உரிமை கிடையாது., அவ இன்னொரு வீட்டுக்கு எப்போ கல்யாணம் ஆகி போனாளோ., அப்பவே நீ அடுத்த வீட்டுக்கு போயிட்ட., அப்புறம்  நீ எப்படி என் வீட்ல வந்து உட்கார்ந்து என் பொண்டாட்டிய வெளியே போய் சொல்ல முடியும்.,நீ அம்மாவுக்கு தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிற இல்ல., அம்மாக்கு சப்போர்ட் பண்ணி ஏத்தி விடறியா.,

           இன்னொரு தடவை இப்படி ஏதாவது நடந்தா அக்கா ன்னு கூட பார்க்க மாட்டான்., அறைந்து பல்லை எல்லாம் கலட்டி விடுவேன்“., என்று சொன்னான்.

      அவள் அக்காவின் கணவரும் பிரசாத் என்றவர்., அவ புத்திக்கு தான் அவளுக்கு கடவுள் தண்டனை கொடுத்து  வச்சு இருக்காரு., அப்பவும் உங்க அக்காக்கு அறிவு வரல பாத்தியா., நான் ரெண்டு நாளா ஊருக்கு போயிட்டு வந்தேனே.,  எதுக்குங்க.,  குழந்தை தத்து எடுப்பதற்கு குழந்தை தேடி அலைந்துட்டு இருக்கேன்.,  

        நீ மட்டுமில்ல.,  உன் பொண்டாட்டி மனசும்  தங்கம் பார் அதனால தான் நல்லபடியா குழந்தை  கிடைச்சிருக்கு., அக்காக்கு மனசுக்குள்ள எல்லாம் விஷம்.,  இவ்வளவு விஷத்தோட இருந்தா., அப்புறம் குழந்தை எங்க ஜனிக்கும்“.,  என்று சொன்னார்.

பானு அழத் துவங்கினாள்.,  “எங்க வீட்ல எங்க அம்மா கிட்ட ஒரு வார்த்தை நீ பண்ணுறதைப் பற்றி எல்லாம் பேசி இருந்தா.,  அப்புறம் என் வீடு உனக்கு நரகமாய் இருக்கும்., ஒரு வீட்டுக்கு வந்த பொண்ண வாழ விடுங்க., நீங்க மட்டும் போய் புருஷன் வீட்டுல அதிகாரம் பண்ணனும்., புருஷனை கைக்குள்ள வைத்துக்கொள்ள நினைக்கிறீங்க.,

    அந்தப் பொண்ணு என்ன உங்களை வந்து அதிகாரமாக பண்ணிச்சு., அது உண்டு., வேலை உண்டுன்னு இருந்துச்சு அதை கூட இருக்க விடாமல் பண்ணீங்களா“., என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கும் போதே.,

        டீசலோடு வந்து இறங்கியிருந்தார் சுந்தரி அம்மாவின் கணவர்.,

         “அண்ணே கொண்டு வந்து நடுவீட்டில் வையுங்கள்“., என்று சொன்னான்.

           அவரும் வாட்ச்மேனும் சேர்ந்து கேன்களை தூக்கிக்கொண்டு வந்து வைத்தனர்.

        “டீசல் வாங்கிட்டு வந்தாச்சு., யாரு ஊற்றிக் கொழுத்திக்க போறீங்க ன்னு சொல்லுங்க“.,  என்று கேட்டான்.

     சொர்ணம் திகைத்தபடி பார்க்க.,  தயாளனும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.,

        “இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க.,  இந்த டீசல் வந்து பின்னாடி ஜெனரேட்டர் ரூம் தான் இருக்கும்.,  கொளுத்தணும் ன்னு நினைக்கிறவங்க பின்னாடி போய் கொளுத்திட்டு சாவுங்க.,

       இனிமேல் நீங்க யாரும் இருந்தாலும் நான் கேட்க மாட்டேன்.,  செத்தாலும் நான் கேட்க மாட்டேன்.,

       ஆனால் இதே இது அன்னைக்கு அவ நீங்க செத்த செத்துட்டு போங்க ன்னு சொல்லிட்டு இருந்திருந்தா., நான் என்னோட சந்தோஷங்கள் எதையும் இழந்திருக்க மாட்டேன்.,

          என் வொய்ப்க்கு வளைகாப்பு பண்ணி பார்த்திருப்பேன்.,  என் குழந்தை பிறந்த அப்ப நான் கையில வாங்கிருந்து இருப்பேன்.,  என் குழந்தையோட பெயர் வைக்கிற பங்ஷனை கிராண்டா பண்ணியிருப்பேன்., இப்படி எல்லாத்தையும் பண்ணி இருப்பேன்.,

     ஆனால் எதுவுமே பண்ண விடாம பண்ணிட்டீங்க இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லியே ஆகணும்“., என்று கோபமாக பேசினான்.

        சொர்ணம்உன் பொண்டாட்டி ஓடிப்போனா அதற்கு நானா பொறுப்புஎன்று சொன்னார்.,

      “பேசாதே என்று சொன்னேன் இல்ல“., என்றார் தயாளன்.,

        “விடுங்க ப்பா இனி இப்படி பேசினா.,  நானே ஊத்தி கொழுத்தி விட்டுட்டு போறேன்., எப்படினாலும் நானோ இல்ல  அண்ணனோ தானே கொல்லி வைக்கனும்., அதை நானே இப்பவே வச்சுட்டு போறேன்“., என்று சொன்னான்.

     தயாளனிடம்இங்க பாருங்க.,  அவன் எப்படி பேசுறான் பாருங்க.,  நீங்க பாத்துட்டு அமைதியா இருக்கீங்க“., என்று சொன்னார்.

        “நீ எல்லாம் மனுசியா., நீ திருந்தவே மாட்டியா., இந்த வீட்டு வாரிசை கூட பார்க்க விடாமல் பண்ணிட்டியே“., என்று கோபமாக பேசியவர்இஷ்டம்னா இரு.,  இல்லாட்டி உன் அண்ணன் வீட்டுக்கு பெட்டியை கட்டு., கிளம்பு நான் போன் பண்ணி  உங்க அண்ணனுக்கு  சொல்லுறேன்.,  போய் கொஞ்ச நாள் அங்க இருந்துட்டு.., உனக்கு எப்ப வரணும் தோணுதோ வா., இல்ல அங்கேயே இருக்குறதானாலும் இருந்துக்கோ போ.,  முதல்ல எடத்த காலி பண்ணு“., என்று சொன்னார்.

         “என்னைய  இப்ப வீட்டை விட்டு வெளியே அனுப்பலாம் ன்னு., பார்த்தீங்களா“., என்று கத்தத் துவங்கினார்.,

        சொர்ணாவோ  “நான் எதுக்கு போகனும்.,  நான் அப்படி எல்லாம் போக மாட்டேன்“., என்று சொன்னார்.
    
        பானுஅம்மாவ எப்படி சொல்லுவீங்கஎன்று பேச தூங்கவும்

       பானுவின் கணவரோவாயை மூடிட்டு நில்லு., இல்லன்னா இப்பவே என் கூட வெளியே வா., இனிமே இந்தப் பக்கமே தலை வைத்து கூட படுக்க கூடாது பார்த்துக்கோ“.,  நான்  தத்து எடுக்க போறஅந்த குழந்தையை தான் நீ வளர்க்குற கெளம்பு எடத்த காலி பண்ணு போவோம்“., என்று சொன்னார்.

அமைதியாக நிற்கவும்அப்படி சத்தமில்லாம நிக்கணும்“., என்று சொல்லி சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

     வாழ்க்கையில் நிறைய நேரம் அவரவர் நடந்து கொள்ளும் முறைகளில் தான் அவரவர் வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகிறது., என்பது புரிவதே இல்லை.,

       ஏதோ தங்கள் நடந்துகொள்ளும் முறையினால் தங்களுக்கு எல்லோரும் அடங்கிப் போகிறார்கள் என்றும்., தாங்கள் சொல்வதை எல்லோரும் கேட்கிறார்கள் என்றும் நினைத்துக் கொள்கிறார்கள்., ஆனால் என்றோ ஒரு நாள் மறுபடி திருப்பி அடி வாங்கும் போது தான் அதன் வலியும் வேதனையும் அனைவருக்கும் புரியும்.

        மறுநாள் வினோத்தோடு வெளியே சென்று விட்டு வந்தவன்., அவன் அப்பாவிடம் வந்து பேசினான்.” இரண்டு நாட்களில் தொகுதி வேலைகளை முடிச்சிட்டு போறேன்., இந்த மாதம் கடைசியில் நான் வருகிறேன் அதுவரை தொகுதியில் ஏதும் வேலை இருந்தால் போன் பண்ணி சொல்லுங்க“., என்று சொன்னவன்., வேலைகளை முடித்துவிட்டு

       வினோத் மூலம் அவள் அம்மா வாங்கிக் கொடுத்த மருந்து உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்பினான் பிரசாத்.

போர்க்களமாக  நினைவுகள்

போராட தெம்பில்லை.,

கொஞ்சம் ஓய்வெடுக்க

வேண்டும்…

உன் மார்பில் சாய்ந்து கொள்ள

அனுமதி கொடேன்

இதயம் அமைதி கொள்ளட்டும்.,

Advertisement