Advertisement

21

      நம் எண்ணங்கள் யாவும், பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது. பிறருக்கு நன்மையையும்  ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும்.
                         – புத்தர்


       காலை நேரம் எப்போதும் போல அவள் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்., அவன் கிளம்பும் நேரம் என்பது தெரிந்ததால் அவனுக்கான உணவுகளை டைனிங் டேபிளில் எடுத்து வைத்தவள்., குழந்தைக்கு பாட்டி சாப்பாடு ஊட்டுவதை பார்த்துக் கொண்டிருந்தாள்.,

       அதேநேரம் உள்ளறையில் இருந்து ஹேமா என்ற சத்தம் கேட்க., ‘கடவுளே இப்ப என்ன சொல்லப் போறாங்களோஎன்ற நினைப்போடு உள்ளே சென்றாள்.

            அவளுக்கு அவன் முகத்தைப் பார்த்தவுடனேயே கஷ்டமாக இருந்தது.,  ஏனெனில் முகம் வாடிப் போயிருந்தவன் சற்று சோர்வாகவே தெரிந்தான்.., இவள் சென்றவுடன்.,

         அமர்ந்திருந்தவன் அவளை இழுத்து அருகில் அமர வைத்தான்., அவள் கையை எடுத்து தன் கைக்குள் பொதிந்து கொண்டான்.,

            “சாரி உன்ன ஹட் பண்ணனும்னு அப்படி பண்ணல., ஆனா எனக்கு உன் பக்கத்துல இருக்கணும்., உன்ன பிடிச்சுக்கனும் அப்படின்னு தோணுது.,  ஆனா பக்கத்துல வந்த உடனே., என்னை நம்பாமல் போனவ தானே அப்படின்னு தோணுது., நீ ஏன்டி என்னை நம்பாம  போன“.,  என்று கேட்டான்.

           என்ன பதில் சொல்வது..என்று தெரியாமல் அமைதி காத்தவள்., “உங்களுக்கு ஏற்கனவே எல்லாம் தெரியும்., இருந்தாலும் எனக்கு என்ன சொல்லன்னு தெரியலை“., என்றாள்.,

         “எனக்கு இன்னும் கோபம் வருத்தம் எல்லாம் இருக்கு., நீ செல்பிஷ் ன்னு தான் தோனுச்சி.,  உன்னோட சந்தோஷம்.,  உன்னோட வருத்தம்., உன்னோட மனசு இதை மட்டும் பார்த்தியே..,  என்ன பத்தி நீ கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை தானே“.,  என்று சொன்னான்.

         அவனை நிமிர்ந்து பார்க்க., அவன் கண்கள் கலங்கி இருப்பது புரிய., அவன் கையோடு இருந்த தன் கையை வைத்து அவன் கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டாள்.,

      ஆனால் அவனோஒரு வார்த்தை கூட உனக்கு என்ட்ட சொல்லனும் தோணலை இல்ல., அட்லீஸ்ட் இந்த குழந்தை வயிற்றில் இருக்கும் போது சொல்லி இருக்கலாம்.,  இல்ல பிறந்ததுக்கு அப்புறம் கூட சொல்லியிருக்கலாம்.,  நான் இங்கே இருக்கிறேன் இன்னும் கொஞ்ச நாளைக்கு டிஸ்டர்ப் பண்ணாதீங்க ன்னு சொல்லியிருந்தால்.,  கூட நான் நிம்மதியா இருந்திருப்பேன்.,

         ஏன்னா நான் உன்னை தேடாத இடம் இல்ல, அந்தளவுக்கு சுத்திகிட்டு இருந்தேன்.,  நீ எங்க இருக்க., எப்படி இருக்க எதுவுமே தெரியாம., இன்னைக்கு உனக்கு நான் சொல்ற சின்ன சின்ன வார்த்தை கூட வலிக்கும்., இவன் அடுத்து என்ன சொல்ல போறான்னு உனக்கு தோணும்.,

        ஆனா அந்த நாளில் நான் கிட்டத்தட்ட பைத்தியக்காரன் மாதிரி ஆயிட்டேன்.,  சத்தியமா அப்ப மட்டும் இந்த எலக்சன்ல அரசியல் சம்பந்தமான வேலை., அது இது ன்னு எதுவும் இல்லாமல் இருந்திருந்தால் நான் செத்து  போய் இருந்திருப்பேனோ என்னவோ“., என்று சொல்லவும்.,

      அவன் கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாள்., நரக வேதனை அந்த நாளெல்லாம்.,  எத்தனை நாள் யோசிச்சிருக்கேன் தெரியுமா., சூசைட் பண்ணிக்கலாம்னு., ஆனால் எப்படியாவது உன்ன கண்டுபிடிச்சி ஏன்டி என்னை விட்டுட்டு போன ன்னு கேட்கணும் ன்னு..,

       உன்னை பார்க்கும் போது உனக்கு மறக்க முடியாத அளவிற்கு அடி விடனும் நினைச்சேன்., ஆனா உன்னை  பார்த்த அப்ப அடிக்கணும் ன்னு தோணல.,  யார் வீட்டிலோ ஒரு வீட்டில உன்னை பார்க்கும்  போது என்னால உன்கிட்ட பேச கூட முடியல.., கத்தனும் போல தோணுச்சி., ஏன் என்னை  நம்பல ன்னு கேட்க தோணுச்சு., அப்ப எந்த நம்பிக்கைல என்னோட வாழ்ந்த ன்னு கேக்கனும்னு தோணிச்சு“., என்று சொன்னவன் அவளை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தான்.,

      அவன் கண் கலங்குவது பொறுக்காமல் எழுந்தவள்., அவனை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.,  அவனோ அமைதியாக அவள் மேல் சாய்ந்து இருந்தானே தவிர.,  அவன் கை அவளை அணைக்க வில்லை அதை உணர்ந்தாலும்., எதுவும் சொல்லாமல் அவன் தலையை தடவி கொடுத்தபடி அமைதியாக நின்றாள்.,

           சற்று நேரம் கழித்து நிதானமாக அவன் நெற்றி முடி ஓதுக்கியவள் அவன் நெற்றியில் அழுத்தமாக முத்தம் ஒன்றை பதித்து விட்டு போனாள்., போகும் அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

          அதன் பிறகு  கடந்த  நாட்களில்  பிரசாத் முடிந்த அளவு தன்னை கட்டுப்பாட்டோடு இருந்தான்.,

          பிரசாத் கோயமுத்தூர் கிளம்பும்  போது., பாட்டியிடம்நான் வர்றதுக்கு மூன்று நாள் ஆகும்.,  அதுவரைக்கும் பார்த்துக்கோங்க.., இவ ஃப்ரண்டு ரெண்டு பேரையும் வர சொல்லி இருக்கேன்.,

        அவங்க ரெண்டு பேரும் காலைல ஆபீஸ் போயிட்டு சாயங்காலம் தான் வருவாங்க.,  அவங்களுக்கு சாப்பாடு  காலையில் ஆள் வந்து சமைச்சிப்பாங்க.,  நீங்க எதுவும் செய்ய வேண்டாம்“., என்று சொன்னான்.

       “நான் பாத்துக்குறேன் தம்பி.,  போயிட்டு வா“., என்று சொன்னார்.

             பாட்டியிடம்  விடை பெற்று விட்டு அவன் அறைக்குள் சென்றான்.,

        இவள் வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்., ‘ஏன் பாட்டியிடம் மட்டும்தான் சொல்லனும்மா‘., என்று சொல்லி நினைத்துக் கொண்டிருக்கும் போதே.,

        “ஹேமா“., என்று உள்ளே இருந்து அழைத்தான்.,

         ஏனெனில்அவன் எப்போதும் அவளை அழைப்பது ஹேம் என்று தானே., ஆனால் இப்போதைக்கு அப்படி அழைக்கவே இல்லையேஎன்ற எண்ணத்தோடு உள்ளே சென்றாள்.

           அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்., இரண்டு நாளாக அவளை நோகடிக்குற மாதிரி பேசா விட்டாலும்., “ரொம்ப வலிக்குதா“.,  என்றான்.

              அவள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க., “நானும் உன்கிட்ட அப்படி எல்லாம் பேசக்கூடாது ன்னு தான் நினைக்கிறேன்., ஆனால் என்னை அறியாமல் கோபம் அப்படி வருது., இப்ப கட்டுப்படுத்த தான் முயற்சி பண்ணுறேன்., கிட்டத்தட்ட இந்த ஒன்றரை வருஷத்துல என்னோட வலி அவ்வளவு.,  உனக்கு புரியாது., நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டேன்., அதெல்லாம் உனக்கு புரியாது“.,  என்று சொன்னான்.

          அவள் அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்., “என்னஎன்றான்.

           “உங்க வலி எப்ப போகுதோ.,  அதுவரைக்கும் திட்டிக்கோங்க.,  இல்ல அடிக்கனும் னாலும் அடிச்சிருங்க., என் அண்ணன் அடிச்சிட்டான்.,  பாட்டி அடிச்சிட்டாங்க., குழலி., ரதி அவங்க பங்க தந்துட்டாங்க.,  கலாக்கா கண்ணீராலே அடிச்சுட்டாங்க., நீங்களும் அடிக்கிறதா இருந்தா அடிச்சுடுங்க“., என்று சொன்னாள்.

         அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்., அருகில் சென்று இழுத்து அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்.,

         “என்னால உன்ன வேதனை படுத்த முடியாது., ஆனால் சில நேரத்துல கோபத்தில் வார்த்தைகள் என்னோட கட்டுப்பாட்டை மீறி கொட்டிட்டா.,  ஏன் அன்னைக்கு கூட நீ என் பக்கத்துல இருக்கணும்நீ என் பக்கத்துல இருக்கிற அந்த நிம்மதி போதும் அப்படி ங்கிற எண்ணத்தில் தான்., உன் பக்கத்துல வந்தேன்., ஆனால் என்னால முடியல.,  எப்போ எனக்கெல்லாம் நார்மலா ஆகுறேனோ., என்னால அப்பதான் உன்னை நெருங்க முடியும்., உன் ட்ட சாதாரணமாக பேச முடியும் நினைக்கிறேன்.,  அது வரைக்கும்  நீ தாங்கித்தான் ஆகணும்“., என்று சொன்னவன்..,

       அவளையே பார்த்தபடி இருந்தவன்.,  “அந்த ஆட்டோ டிரைவருக்கு என்ன செய்யணும் ன்னு நினைக்கிறே“.,  என்று கேட்டான்.,  

         அவன் அணைப்பில் நின்றவளோ.,  அவனை நிமிர்ந்து பார்த்தாள்.,  “உன்ன எவ்வளவு பத்திரமாஅனுப்பி வச்சிருக்காரு.,  நீ பத்திரமா இறங்கிட்டியா ன்னு கேட்டிருக்காரு., இவ்வளவு செஞ்சிருக்கார்., அவருக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணனும் இல்ல., அந்த நேரத்துல நீ எங்க இருக்க ன்னு கூட தெரியாது.., ஆனா அந்த ஆட்டோ டிரைவர் அன்னைக்கே நாங்க விசாரிச்சி இருந்தாகண்டிப்பா எனக்கு போன் நம்பர் கூட கொடுத்திருப்பார்., அந்த போன் நம்பரை உடனே எல்லாம் அவரு டெலிட் பண்ணி இருக்க மாட்டார்.., தெரிஞ்சவங்க யாராவது கேட்போம்.,விசாரிப்போம் எதிர் பார்த்துட்டு இருந்திருப்பாரு., நாங்க விசாரிக்கலை ன்னு., கண்டுக்காம விடிருப்பாங்க ன்னு எனக்கு தோணுது.,  என்னுடைய கெஸ்ஸிங் சரியா இருந்தா இதுதான் உண்மையாக இருக்கும்“., என்று சொன்னவன்., “என்ன செய்யணும்என்று கேட்டான்.,

    ” என்ன செய்யணும் நினைக்கிறீர்களோ., செய்யுங்க“., என்று மட்டும் சொன்னார்., அமைதியாகசரிஎன்று சொன்னபடி கிளம்பியவன்.,

       “உடம்ப பாத்துக்கோ., பாட்டி கொடுக்கிற மருந்து சாப்பாட்டை ஒழுங்கா சாப்பிடு., அது சாப்பிட மாட்டேன் இது சாப்பிட மாட்டேன் ன்னு சொல்லாதே., நான் திட்டுறதை தாங்க உன் மனசுலையும்., உடம்புலையும் ஸ்டன்த் வேணும்.,  அதுக்கு தான் ஒழுங்கா சாப்பிடு.,  பிள்ளை பத்திரமா பாத்துக்கோ“.,  என்று சொன்னவன் அவளை இறுக்கமான அணைப்போடு விட்டவன்.,  தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு கிளம்பினான்.,

          அவளை திட்டிக்கொண்டே இருக்கிறோம் என்பது புரிந்ததாலோ என்னவோ., அவளை அழுத்தமாக அணைத்து இருந்தான்.,

        ஆனால் அவனுக்கு இன்னும் கோபம் இருக்கிறது என்பதை அவன் பேசும் மொழிகளிலும்., அவன் உடல் மொழியிலும் உணர்ந்து கொண்டாள்.

       அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் அமைதியாக அவன்  செல்வதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

        கோயம்புத்தூர் வந்து இறங்கியதும் நேராக வீட்டிற்கு சென்று ஹாலில் அமர்ந்தவன் எதுவும் பேசவில்லை., அன்று தந்தையும் அண்ணணையும் வீட்டில் இருக்க சொல்லியிருந்தான்.

             அது மட்டுமல்லாமல் அவன் அம்மாவிடமும் அக்காவிடமும் பேசவேண்டும் என்று சொல்லி இருந்ததால் அவர்கள் இருவரும் இருந்தனர்.

          அவள் அக்காவும் காலையிலேயே வந்து இருந்தாள்.,  அவள் அக்கா குணமறிந்து இப்போதெல்லாம் அவளின் கூடவே அவள் அக்காவின் கணவரும் வந்திருந்தார்.,

     அவரோகுழந்தை எப்படி இருக்கு பிரசாத்“., என்று கேட்டார்.

      “நல்லா இருக்கான் அத்தான்“., என்று சொன்னான்.

           “நான் வரனும்னு நினைச்சேன்.,  இன்னைக்கு தான் ஊர்ல இருந்து வந்தேன்., வந்தவுடனே இவ இங்க கிளம்புறேன்னு சொல்லவும் நானும் கிளம்பிட்டேன்., நான் ஊருக்கு வந்துட்டு வாரேன்“., என்று சொன்னான்.

        “சரிங்க அத்தான்., வாங்க“., என்று சொன்னவன் மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் சுந்தரி அம்மாவை அழைத்தான்.

             சுந்தரிம்மா தம்பி என்று வந்து நின்றார்.

          “அந்த ஆட்டோ டிரைவர்., அவரை வரச் சொல்லுங்க“., என்று சொன்னான்.

        

Advertisement