Advertisement

அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தாள்., “ஒரு அறை இட்லியாவது சாப்பிட்டா தான் பசி அடங்கி  நல்ல தூங்குவான்., இடையில் எந்திரிச்சா பால் கொடு“., என்று சத்தமாக சொன்னார்.,

       “பாட்டி“., என்றாள் பல்லை கடித்த படி.,

          “நீ முதல்ல வாய மூடிட்டு போ.,  என்கிட்ட பேசாத., உன்ன பார்த்தாலே எனக்கு கோவம் தான் வருது“., என்று சொன்னார்.,

         எழுந்து சென்று விட்டாள்., அவள் உள்ளே சென்றவுடன்பாட்டி எப்ப பாத்தாலும் திட்டாதிங்க.,  அவளுக்கு மனசு வெறுத்துப் போய்ருவா., ஏற்கனவே அவர் நொந்து போய் தான் இருந்திருப்பா., இன்னும் மேலே மேலே திட்டினா கூட கொஞ்சம் அவளுக்கு கோவம் வரும்“., என்று சொன்னான்.

      “வரட்டுமே., அவளுக்கு கோவம் வரட்டும்., அவள் என்ன பச்சை பிள்ளையா பாரு., என்ன லட்சணத்தில் புள்ள வளத்து வெச்சிருக்கேன்.,  நான் தானே செல்லம் கொடுத்து வச்சுருக்கேன்“., என்று சொன்னார்.

        ” இதைத்தான் நானும் சொன்னேன்.,  நீங்க தான் செல்லம் கொடுத்து கெடுத்து வைக்கிறீங்க ன்னு.,  அப்ப நான் சொன்னதை நீங்க கேட்டீங்களா“.,  என்று இவன் பதிலுக்கு கத்தத் துவங்கியிருந்தான்.,

      “அப்ப நீ சொல்லும் போது நான் கேட்கல., தப்பு தான் அதுக்கு தான் இப்ப எல்லாரும் கேள்வி கேட்குறாங்க இல்ல.,  நாக்க பிடுக்குற மாதிரி இருந்துச்சு., இப்ப தான் தெரியுது  நான் வளர்த்தது தான் தப்புன்னு“., என்று சொல்லி விட்டு குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட விடவும்.,

       ” பாட்டி அவனுக்கு சாப்பாடு ஊட்டும் போது அமைதியாக இருங்க., நீங்க திட்டுறதையே பார்த்துட்டு இருக்கான்.,  விவரம் தெரிஞ்சது., அவங்க அம்மாவ தான் திட்டுறீங்க ன்னு தெரிஞ்சது.,  உங்களுக்கு அடி விழப்போகுது“.,  என்று சொன்னான்.

        “போடா போடா.,  உன்னையே நான் தான் வளர்த்தேன்., நாளைக்கு உன் பிள்ளையும் நான் தான் வளர்ப்பேன்என்று சொன்னவர்.,

        “ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும் டா., என் புருஷன் போனதுக்கப்புறம் நான் எதுக்கு வாழ்ந்தேன்.,  என் பிள்ளைக்கு ஆகவும்.,  என் பேரப் பிள்ளைகளுக்காகவும் இருந்தேன்.,

       இப்போ என் பேரப் பிள்ளைகளோட பிள்ளைகளைப் பார்க்கும் போது மனசுக்கு நிம்மதியா இருக்கும்.,  சந்தோஷமா இருக்கும்., இவ பிள்ளைய எவ்வளவு எதிர்பார்த்து இருந்தோம்.,  இவ இப்படி பண்ணிட்டா  இல்ல., அப்போ எனக்கு இந்த ஆதங்கம் இருக்கத்தானே செய்யும்.,

       என் பேத்தியோட பிள்ளையை நான் தூக்கி வளர்க்கனும் என்று ஆசைப்பட்டது தப்பா., இவ பண்ணுறது மட்டும் சரியா“., என்று கேட்டார்.

       “அது தான் ஒரு மாசம் இங்க தான் அப்படி இருக்க போறீங்க., வச்சி செய்யுங்க“., என்று சொன்னான்.

       “போடா“., என்று பேசிக் கொண்டிருந்தார்.

        இவர்கள் பேசுவது உள்ளே அவளுக்கு கேட்டாலும் அவளுக்கும் தோன்றியது., ஒவ்வொரு முறையும்.,  ஒவ்வொரு பேச்சிலும்., தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து கொண்டே இருந்தாள்.

          மற்றவர் அனைவரும் உணவை முடித்துக்கொள்ள குழந்தையை தூங்கிப் போயிருந்தது., அவனை கட்டிலில் படுக்க வைத்து விட்டு பார்த்துக் கொண்டே அமர்ந்து இருக்கும் போது தான்.,

        கலாவும் நித்தியானந்தனும் வந்து சேர்ந்தனர்., வரும் வழியில் எனவே குழந்தையை பற்றி கூறியிருந்ததால்.

        கலா வந்தவுடன் நேராக குழந்தை தான் தேடினாள்.,  “குழந்தை உள்ளே தூங்குகிறான்“., என்று சொன்னவுடன் அறைக்குச் சென்றவள் முதலில் குழந்தையை தான் பார்ப்பாள் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்க.

        அவள் ஆவலாக வேகவேகமாக வீட்டிற்கு வந்ததை கவனித்தவர்கள்.,  குழந்தையை பார்க்க தான் இத்தனை ஆவலாக ஓடி வருகிறாள் என்று நினைத்திருக்க., அனைவரும் அவள் பின்னே சென்று இருக்க.,  அவளோ ஹேமாவை கட்டிக்கொண்டு கதறி கொண்டிருந்தாள்.

         அழுகையின் ஊடேஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாதா“., என்றவள் நான் பார்த்திருக்க மாட்டேனா“., என்று சொன்னாள்.

           “நீங்களும் திட்டுறதா இருந்தா திட்டிருங்க அக்காஎன்று அவளும் கண்ணீர் குரலில் சொன்னாள்.

       அவளோஉன்னை திட்டுவதற்காக நான் ஒன்னும் வரலை“., என்று சொன்னவள்., அவளை தடவி கொடுத்து தலையை தடவிக் கொடுத்து கட்டி பிடித்தவர்., “இப்படியா மெலிந்து போய் இப்படியே இருப்ப“., என்று சொன்ன படி

        “எனக்கு தெரியும் அவங்க வார்த்தைகள் எப்படி பேசுவாங்க ன்னு நான் உன்னை திட்ட எல்லாம் வரல“.,  என்று சொன்னாள்.,

        சற்று நேரம் அவளையே அனைத்து இருந்தவர்., பின்பே கண்ணை துடைத்துக் கொண்டு குழந்தையை கையில் எடுத்தார்.,

        தூங்கிக் கொண்டிருந்த குழந்தை சுகமாக கலாவோடு நெருங்கி கொண்டான்.,  அவனை தன்னோடு சேர்த்து அணைத்தவள்., “ஆனா புள்ள விஷயத்தை நீ என்கிட்ட சொல்லி இருக்கனுமா., இல்லையா“., என்று சொன்னவள்.,

       குழந்தையின் நெற்றியில் முத்தம் வைத்து தன்னோடு அணைத்துக் கொண்டாள்.,

       கலாவின் பிள்ளைகள் இருவரும் போட்டி போட்டபடி வந்து குழந்தையை கொஞ்சினர்., அவள் குழந்தைகளோஅம்மா நேத்து நைட்டு சொன்னீங்களே.,  நம்ம வீட்டுக்கு தம்பி வந்து இருக்காங்க“.,  என்று சொன்னார்கள்.

      “ஆமாடா நம்ம தம்பி தான்என்று சொன்னவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான் நித்யானந்தன்.,

            வேறு எதுவும் சொல்லாமல்., “என்ன பிரச்சனை னாலும்.,  என்கிட்ட சொல்லி இருக்கலாம்., ஆனால் அது ஒன்னு தான் எனக்கு வருத்தம்“., என்று சொன்னவன் பிரசாத்தை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.

        பின்பு அனைவரும் சேர்ந்து அமர்ந்து உண்ணும் போது கூட  தூங்கிய குழந்தையை கையிலிருந்து இறக்காமல் வைத்திருந்தாள் கலா.

         அதன் பிறகு வீட்டில் உள்ளவர்கள் எப்போதும் போல பேசிக் கொண்டிருந்தனர்.,  இந்த வாரம் அவன் கோயம்புத்தூர் வருவதாக சொன்னான்.

       நித்தியானந்தம் *நீ ரெண்டு வாரம் கழிச்சு தானே வருவஎன்றான்.

      ” இல்ல இந்த வாரம் ஒரு முக்கியமான வேலை இருக்கு.,  வரணும்“., என்று சொல்லி விட்டு அந்த ஆட்டோகாரரை பற்றி சொல்ல விசாரித்து வைக்கனும்.,  “சுந்தரி அம்மா ட்ட சொல்லி அவர்களை விசாரிப்போம்., கண்டிப்பா நேரில் பாக்கணும்“., என்று பேசிக் கொண்டிருந்தனர்.,

      “நிச்சயமா நிச்சயமா“.,  என்று சொல்லி அவர்களோட பேசிக் கொண்டிருந்தார்  தயாளன்.,

             “அவரை பத்தி ஃபுல் டீடைல் விசாரிக்கச் சொல்லு நித்யானந்தா.,  ஏதாவது நல்லபடியா அவருக்கு பண்ணுவோம்“., என்று சொன்னார்.

        “விசாரிக்கச் சொல்லிட்டேன்“., என்று நித்தியானந்தன் சொன்னான்.

    ஆண்கள் வெளியே பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளே கலாவின் மடியில் தலை வைத்து படுத்திருந்தாள்., அவள் தலையை தடவி கொடுத்தபடி கலா பேசிக்கொண்டிருந்தாள்.

     “புரியுது ஆனா“., என்று சொல்லி அங்கு நடந்த விஷயங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் குழந்தை எழுந்தவுடன் கலாவின் பிள்ளைகள் இருவரும் குழந்தையோடு குழந்தையாக  விளையாட துவங்கினர்.,

         அவனுக்கும் புதிதாக சிறிய உருவங்களை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக சத்தம் வெளிவர தொடங்கியிருந்தது.,

           ஹேமாவிற்கு எத்தனை சந்தோஷங்களை இழந்திருக்கிறேன் என்று மனம் மீண்டும் வருத்ததிற்குள் செல்ல துவங்கியிருந்தது.

        ஹேமா அப்பா., அம்மா., நித்யானந்தம்., குழந்தைகள்., தயாளன்.,  கலா., வினோத் என அனைவரும் கிட்டத்தட்ட ஒரு வாரம் இருந்து எல்லாவற்றையும் செய்து கொடுத்து.,

          அவளுக்கு வீட்டிற்கு தேவையான அனைத்தையும் வாங்கி போட்டு.,  அவளுக்கு மருந்து உணவுகளுக்கு தேவையானது., என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து விட்டு அனைவரும் கிளம்பினர்.,

         அப்போது பிரசாத் தான்., “இன்னும் இரண்டு நாட்களில் தானும் அங்கு வருவேன்“., என்று சொல்லி விட்டு அந்த ஆட்டோக்காரருக்கு செய்ய வேண்டியது பற்றி பேசினான்.

       “எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு., நீ வந்துரு“., என்று சொன்னார்.

        “அவரைப் பற்றிய விசாரணை மட்டும் தான் செய்தேன்., அவருக்கு தெரியும் இவள் வந்துவிட்டாள் என்று., அதனால் பயப்படும்படி ஒன்றும் இல்லை ன்னு தெரியும்., அவருக்கு சும்மா பார்க்க தான்  ன்னு சொல்லி இருக்கிறேன்“., என்று சொல்லியிருந்தான் நித்யானந்தன்

              அவர்களை வழியனுப்பிவிட்டு பிரசாத் வீட்டிற்கு வருவதற்குள்., அன்று பாட்டி அவளுக்கு உட்கார்ந்து ஒரு மணிநேரம் அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.

      “பொண்ணானவ அவ புருஷனை அனுசரிச்சு போகனும்.,  மாமியார் சொன்னா ன்னு பொட்டிய தூக்கிட்டு போவாளாஎன்று இழுத்து இழுத்து பேசிக்கொண்டிருந்தார்.

     இவளோபாட்டி அதான் வந்துட்டேன்ல.,  திரும்பத் திரும்ப திட்டாதிங்க“., என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே குழலியும் ரதியும் வந்து பார்த்து விட்டு பேசிக் கொண்டிருந்து விட்டு சென்றனர்.

       பாட்டி தான்இனிமேலாவது புருஷன் கூட பொழைக்கிற வழிய பாரு., அந்த  புள்ளை வாழ்க்கையே வெறுத்துப் போய் சுத்த வச்சிட்ட“., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

        இவளும் ம்ம்ம்., ம்ம்ம் என்று கேட்டுக் கொண்டு இருந்தாளே ஒழிய வேறு எதுவும் சொல்லவில்லை.,

      அதேநேரம் குழந்தைக்கு உணவு ஊட்டி மடியில் போட்டு ஆட்டிக் கொண்டிருக்க.,  அவனும் தூங்கிவிட்டான்.,

      அப்போதுதான் அவர்களை மாலை ப்ளைட் ஏற்ற சென்றவன் இரவு தாமதமாகத்தான் வீட்டுக்கு வந்தான்.,

      என்ன ஆயிற்று என்று கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை.,

       ஏனெனில் அவன் பிளைட் ஏற்றிவிட்ட நேரத்திற்கு அவர்கள் அங்கு போய் சேர்ந்து சேர்ந்து விட்டோம் என்று போன் செய்துவிட்டார்கள்.,

           மாலை 4 மணிக்கு வெளியே சென்றவன் வீட்டிற்கு வரும் போது இரவு எட்டை தாண்டியிருந்தது.,

    அவள் உணவு எடுத்து வைக்க சென்றாள்.,  அவனும் பாட்டி இருக்கிறார்கள் என்ற எண்ணத்தோடு அமைதியாக சாப்பிட்டு விட்டு அறைக்குள் சென்று விட்டான்.,

       தூங்கிய குழந்தையை பார்த்துக் கொண்டே இருந்தான்., அமைதியாக அறையின் பால்கனியில் சென்று அமர்ந்து விட்டான்.

          பாட்டி தான்காலையிலே இனிமேல் எல்லாம் சீக்கிரம் எந்திரிச்சு., உன் வீடு.,  உன் குடும்பம்., உன் புருஷன்., உன் பிள்ளை ன்னு பார்க்க பழகு., உனக்கு சமையல் மட்டும் தான் நான் செய்வேன்.,  மீதி உன் வீட்டுக்கு என்ன வேணும் ன்னு நீ தான் பாக்கணும்., பகல்ல நல்ல தூங்கு.,  நீ தூங்கற நேரம் உன் பிள்ளை அழுதா நான் பார்த்துக்கிறேன்., மத்தபடி வீட்டில் வேலைக்கு ஆள் இருந்தாலும் நீ கூட இருந்து கவனிக்கனும்., என்ன தான்  வேலை செய்றவங்க நல்லவங்களா இருந்தாலும்.,

         ஏமாற்ற தான் பார்ப்பாங்க புரியுதா“.,  என்று சத்தம் போட்டவர்., அதோடு தானும் அறைக்குள் சென்று அடைத்துக் கொண்டார்.

       இவளும் கதவை பூட்டிவிட்டு அறைக்குள் வர., அவன் அறையில் இல்லை என்று தேடியவள் அவன் பால்கனியில் இருப்பதை பார்த்துவிட்டு.,

    “என்ன ஆச்சு ஏன் லேட்“.,என்று கேட்டாள்.,

         “ஒன்றரை வருஷமா இப்படி தான் சுத்திகிட்டு இருந்தேன்., அப்ப எல்லாம் கேட்க ஆளே கிடையாதுஇப்ப மட்டும் என்ன புதுசா.,  நீ இப்ப தானே வந்திருக்க.,  நீ கேட்ட உடனே நான் பதில் சொல்லணும்னு அவசியம் கிடையாது., இந்த ஒன்றரை வருஷமா என்ன பத்தின சிந்தனை கூட இல்லாமல் பெட்டியை கட்டிட்டு போனவ தானே., உனக்கு பதில் சொல்லனும் ன்னு எந்த கட்டாயமும் கிடையாது“., என்று சொல்லிவிட்டான்.,

        மனம் முழுவதும் வலித்தாலும் எதுவும் சொல்லாமல் வந்து குழந்தையை எடுத்து தொட்டிலில் போட்டு விட்டு படுத்துக்கொண்டாள்.

       சற்றுநேரம் சென்று வந்தவன்.,  அவளின் அருகில் நெருங்கி வந்து படுத்தபடி அவள் மேல் கையை போட்டு தன்னோடு சேர்த்து அணைத்தவன் சற்று நேரம் அமைதியாக இருக்க.,  இவளும் அமைதியாகவே  இருந்ததாள்.,

       அவன் இறுக அணைத்து இருப்பது புரிந்தது.,  இருந்தும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.,  என்ன நினைத்தானோ திடீரென்று அணைப்பை விட்டவன்.,

           அவள் அவனை திரும்பி பார்க்கும் போது ஒன்றரை வருஷம் நீ இல்லாமல்  தானே இருந்தேன் அப்படியே இருந்துக்கிறேன் என்று சொல்லி விட்டு தள்ளி படுத்துக்கொள்ள.,

         அவள் சாரி., சாரி., என்று சொன்னபடி அவன் கையை பிடிக்க போக.,  அவள் கையை உதறியவன்., 

      நீ இல்லாம இருக்க தெரிந்த எனக்கு.,  இப்பவும் இருக்க தெரியும் என்று மீண்டும் மூஞ்சில் அடித்தால் போல் பேச.,  இவளால் அந்த உதாசினத்தை தாங்க முடியவில்லை.,

     அவன் அந்த வார்த்தையை சொல்லும் போது அவன் மனம் நிறைய வலியும் கோபமும் இருப்பதை அவளால் உணர முடிந்தது., அதன் பிறகு லைட் ஆப் செய்து விட்டு தள்ளி சென்று.,  எப்போதும் போல அவளுக்கு முதுகை காட்டி படுத்தவன் உறங்கினானோ என்னவோ.,

       இவளுக்கு தான் சத்தமின்றி கண்ணீர் வழிந்தது., ‘இன்னும் எத்தனை நாட்கள் இந்த வேதனைகள் எல்லாம்என்று மனம் புலம்பத் தொடங்கியது.,

     ஒன்றரை வருடம் அவன் புலம்பியது எல்லாம் எந்த கணக்கில் சேரும் என்று தெரியவில்லை.,


இழுத்து செல்லும்
அலைகளுக்கு
புரிவதில்லை.,
கரையோரம் நிற்கும்
கண்ணீர் துளிகளின்
வலி.,
அதுபோல தான்
விதியோடு சென்ற
மதிக்கு புரிய போவதில்லை
தள்ளி நின்று அழுத
கண்ணீரின் வலி.,

Advertisement