Advertisement

20

       போரில் ஆயிரம் பேரை வெல்வதை
காட்டிலும் சிறந்தது., உன் மனதை நீ வெற்றி கொள்வது.
புத்தர்


           அதிகாலை கண் விழித்தவளுக்கு முதலில் தான் எங்கிருக்கிறோம் என்று புரியவில்லை., பின்பே கட்டிலின் ஓரம் தன் படுத்திருக்க மற்றொரு புறத்தில் அவளுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தான் பிரசாத்.,

       அப்போது தான் இங்கு வந்து விட்டோமே என்ற எண்ணமே வந்தது.,  திரும்பி பார்த்தவளுக்கு தொட்டிலில் குழந்தை தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது., குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தவள்., ‘அவன் இடையே ஒரு முறை தான் அழுதான் பின்பு என்று அழவே இல்லையே.,  எப்போதும் அடிக்கடி பசியில் அழுவான்., ஆனால் இன்று தூங்கி கொண்டிருக்கிறான்என்று தோன்றியது.,

       தனக்கும் சரியான தூக்கம் இல்லாமல் எப்பொழுதும் உருண்டு பிரண்டு கொண்டு தானே இருப்பேன்.,  பின் தானும் எப்படி இவ்வளவு தூங்கினேன் என்ற எண்ணத்தோடு தொட்டிலை பார்த்து  திரும்பிப் படுத்தவள் பார்த்துக் கொண்டே இருந்தாள்.,

          அதேநேரம் குழந்தை லேசாக சினுங்க., அப்போது தான் நேரத்தை பார்த்தாள்.,

          அவன் எழும் நேரத்தை விட ஒரு மணிநேரம் அதிகமாகவே ஆகி இருந்தது.,

       பின்பு அவனை தூக்கிக்கொண்டு திரும்பி வந்தவள் குழந்தையை பசியாற்றி மீண்டும் தொட்டியில் போடவா.,  வேண்டாமா., என்று யோசித்தவள்.,

       இல்லை இனி அவனுக்கு கிடைக்க வேண்டிய சந்தோசங்கள் அத்தனையும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மெதுவாக நகர்ந்து பிரசாத்துக்கு சற்று தள்ளியே குழந்தையை படுக்க வைத்து விட்டு சென்று விட்டாள்.,

       பின்பு காலை கடனை முடித்து  குளித்து வெளியே வர.,  அவள் அம்மாவோபிள்ளை எங்கேஎன்று கேட்டார்.

      “தூங்குகிறான்“., என்று சொல்லிவிட்டு அமர போனாள்.,

      “ஆமா அப்படியே யார் வீட்டுக்கோ  வந்த மாதிரி ஹாயாக உட்கார்ந்துக்கோ.,  குழந்தையா நீ., கிச்சனுக்கு எந்திரிச்சு வா“., என்று சொன்னார்.

          அவளும் எழுந்து பின்னாடியே சென்றாள்.,

      சந்திரசேகருக்கு ஒருபுறம்பிள்ளையை எப்படி திட்டுகிறார்களே.,  என்று தோன்றினாலும் அவள் செய்தது தவறு தானே‘., என்று அமைதியாக இருந்தார்.

        வினோத்திற்கு சிரிப்பு தான் வந்தது.,  முன்னாடி  இப்படி கேட்டால்.,”நான் தான் செய்யணுமா.,  ஏன் காப்பி போட்டு கொடுக்க மாட்டீங்களா“., என்று கேட்பாள்.

       இப்போதுஅவள் தவறு அவளுக்கு புரிய போய் தானே அமைதியாக ஏற்றுக் கொள்கிறாள்என்று நினைத்துக் கொண்டவன் இனியாவது பிரசாத் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்.

       ஏனெனில்இவளை கல்யாணம் கட்டி அந்த மனிதன் ஒரு நாள் கூட நிம்மதியாக இருந்தானா என்று கூட தெரியவில்லை.,  எத்தனை சந்தோஷத்தோடு எம்எல்ஏ பதவியை ஏற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து இருப்பார்., அந்த மனிதனுக்கு இவள் கொடுத்த பரிசு தான் என்னஎன்று கோபம் தான் வந்தது.,

          ‘இருந்தாலும் பாவம் தான்., எப்போதும் கோபத்தை காட்டிக்கொண்டே இருந்தால் அவளும் என்ன செய்வாள்என்ற எண்ணத்தோடு அமைதியாகி விட்டான்.

       பாட்டி அவளை உள்ளே கிச்சனில் மிரட்டுவது கேட்டது.,  அவள் அம்மாவும் உள்ளே தான் இருக்கிறாள் என்பதால் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.,

     அவளோ பால் காய வைத்துக் கொண்டிருந்தாள்., அவள் அம்மா தான் பாவம் பார்த்து., “அத்த நம்ம இருக்கிற வரைக்கும் செஞ்சு கொடுப்போம்., 

              அப்புறம் அவ வீட்டு வேலையை அவளே பார்த்துக்கிட்டும்.,  அதனால நாம செய்வோம்“., என்று சொன்னாள்.

     அவளை நகர்த்தி தள்ளி நிறுத்தி விட்டு மாமியாரும் மருமகளும் சேர்ந்து அனைவருக்கும் காபி கலக்கி., அவள் கையில் கொடுத்துஇதை கொண்டு போய் எல்லாருக்கும் கொடு“., என்று பாட்டி சொன்னார்.

           பதிலே பேசாமல் எடுத்துக் கொண்டு சென்றாள்., அனைவருக்கும் காபி கொடுத்து விட்டு அறையை எட்டிப் பார்க்க பிரசாத் முழித்திருந்தான்.

          குழந்தை அவன் அருகில் இருக்க பிரசாத் குழந்தையை பார்த்துக் கொண்டே படுத்து இருப்பது தெரிந்தது.,

     எட்டிப் பார்த்துவிட்டு வெளியே வந்தவளுக்கு பெரிய டம்ளர் நிறைய சத்துமாவு கஞ்சி காத்துக் கொண்டிருந்தது.,

          பாட்டி அவள் கையில்  திணிக்க.,  “பாட்டி என்னால முடியாதுஎன்று சொன்னாள்.
       “குடிச்சு தான் ஆகணும்., உன் பிள்ளை நல்லா இருக்கணும் இல்ல., குடி இன்னும் பால் கொடுத்துட்டு தானே இருக்க“., என்று அத்தனை பேர் முன்னாடியும் கத்தி சொன்னார்.,

       “பாட்டி“., என்று அவளும் கத்தினாள்.

      “அப்ப வாய மூடிட்டு குடி“.,  என்று சொல்லி மிரட்டவும்

        வேறு வழியில்லாமல் கண்ணை மூடிக்கொண்டு குடிக்கத் தொடங்கினாள்.,

         தற்செயலாக குழந்தையோடு வெளியே வந்தவன்., அவள் கண்ணை மூடிக்கொண்டு குடிப்பதையும்.,  பாட்டி இடுப்பில் கையை வைத்துக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருப்பதையும்., பார்த்தவனுக்கு ஒரு புறம் சிரிப்பு வந்தாலும்., இன்னொரு புறம்எப்படியோ அவள் ஹெல்த் நல்லபடியாக ஆகி விட்டாள் போதும்‘., என்ற எண்ணம் மட்டும் இருந்தது.

          பின்பு பாட்டி அவளை இழுத்துக் கொண்டு சென்றவர்.,  பிரசாத்திற்கு காபியை கலந்து அவள் கை கொடுத்து விட்டார்.,

       அவளும் நல்ல பிள்ளையாக கொண்டு வந்து அவன் கையில் கொடுத்து விட்டு போனாள்., அவளைப் பார்த்ததும் கையை தூக்கி போட்ட குட்டி  பையனை தூக்கிக் கொண்டு நகர போனவளை.,

          “குழந்தையை கொடுமாஎன்று சொல்லி கையை நீட்டி தயாளன் கேட்க., அவரிடம் மறுக்க முடியாமல் குழந்தையை தூக்கி அவர் கையில் கொடுத்து விட்டு நகர்ந்து சென்று விட்டாள்.,

       குழந்தை சற்று நேரம் அவளை தேடி சிணுங்கினாலும் அதன்பின் அவரோடு இருக்க தொடங்கிவிட்டான்., அவனை தன் மடியில் வைத்து பார்த்துக் கொண்டே இருந்தவர்.,

        “சந்திரசேகர் அப்படியே என் புள்ளையை சின்ன வயசுல பாக்குற மாதிரியே இருக்கு., எங்க பிரசாத் இப்படியே தான் இருந்தான்., இப்போ  நித்தியானந்தன் வந்தா இதை தான் சொல்லுவான் பாருங்களேன்., இவன் பிறக்கும் போது நித்யானந்தனுக்கு ஆறு வயசு இருக்கும்., என்று சொல்லி பேசிக்கொண்டிருந்தனர்.,

      கிச்சனில் நின்றவளுக்கும் கேட்டது.,  ‘ஐயோ அத்தனைபேர் சந்தோஷத்தையும் பறித்த பாவியாகி போனேனேஎன்று தோன்றியது.

       இன்னும் சற்று நேரத்தில் அவர்களும் வந்து விடுவார்கள் என்பதால் காலை உணவு சேர்த்தே தயாரிக்க தொடங்கியிருந்தார் பாட்டி.,

       வேலை  செய்ய தொடங்கும் போதே பிரசாத் ஒருவரை அழைத்து வந்து கிச்சன் வாசலில் நிறுத்தினான்., “பாட்டிஎன்றான்.

       “என்னப்பா“., என்று பாட்டி கேட்டார்.

            “இந்த அம்மா ஹெல்ப்புக்கு வந்திருக்காங்க.,  இவங்கள மத்த வேலையெல்லாம் செய்ய சொல்லுங்க.,  உங்களுக்கு வேற ஏதும் ஹெல்ப் பண்ணனும் னா சொல்லுங்க., எல்லாம் செஞ்சு தருவாங்க., காலையில் இருந்து சாயந்திரம் வரைக்கும் வீட்ல இருக்க சொல்லி இருக்கேன்., அதனால முழுக்க முழுக்க வீட்டுல தான் இருப்பாங்க.,

             உங்களுக்கு எல்லா வேலையும் செஞ்சு தருவாங்க., சமையல் கூட நல்ல பண்ணுவாங்க., நான் சமையலுக்கும் சேர்த்து தான் பேசி இருக்கேன்., இப்ப நீங்க எல்லாம் இருக்கிறதால தான்., அதுவும் அவளுக்கு மருந்து சமையல் செய்யனும் ன்னு சொன்னீங்க இல்ல., அதை நீங்க செய்ங்க., மற்றதை  அவங்க கிட்ட சொன்னீங்கன்னா  என்ன செய்றது னாலும்., அவங்க செய்வாங்க.,  மத்த வேலைக்கெல்லாம் வேற ஆள் பார்த்துக்குவோம்“.,  என்று சொன்னான்.

    அந்த அம்மாவோதம்பி நான் இதை விட பெரிய வீட்டையே தனியாக பார்த்து இருக்கேன்., அதனால எனக்கு இது ஒன்னும் பிரச்சனை இல்ல“.,  என்று சொன்னார்.

        பாட்டியோ., “எல்லோரும் இந்த ஒரு வாரம் தான் இருப்பாங்க.,  அப்புறம்  ஊருக்கு போயிருவோம்.,  நான் மட்டும் தான் ஒரு மாசம் இங்க இருப்பேன்., என் பேத்தி உடம்பு தேறும் வரைக்கும் இருப்பேன்.,  அதுக்கப்புறம் என் பேத்தி.,  தம்பி., குழந்தை மூன்று பேர்தான்“.  என்று சொன்னார்.

         “அப்ப நானே எல்லா வேலையும் பார்த்துடுவேன்“., என்று சொன்னார்.

            உடனே பிரசாத் தும்சரி அப்ப நீங்க பார்த்துக்கோங்க“., என்று சொல்லி விட்டு தான் சென்றான்.,

     அங்கிருந்து பேசும் வரை கூட., பாட்டியிடமும்., அந்த அம்மாவிடமும் பேசியவன் அங்கு நின்று கொண்டிருந்த ஹேமாவை நிமிர்ந்துகூட பார்க்காமல் நகர்ந்து சென்றான்., அதுவே ஹேமாவிற்கு முதல் அடியாக தோன்றியது.

         காலையில் ஏதோ வேலையாக வெளியே அவன் கிளம்ப துவங்கினான்.

        இவளோசாப்டுட்டு போங்க“.,  என்று சொன்னான்.

       அவளை திரும்பி பார்த்தான்., “ஏன்என்று கேட்டான்.

          “இல்ல நீங்க இப்ப போனா.,  எப்ப வருவீங்கன்னு தெரியாது., பாட்டி சொன்னாங்க., அது தான் சாப்பிட்டுட்டு போக சொன்னேன்“., என்றாள்.

         “பாட்டி தான் சொல்லி இருக்காங்க இல்ல., உனக்கு நான் சாப்பிட்டேனா இல்லையா., அது சரி உனக்கு தான் ஒன்றரை வருஷமா அந்த ஞாபகம் இல்லையே., இப்ப மட்டும் என்ன புதுசாவா வர போகுது., இல்லாமல் போன ஞாபகம்“., என்று சொன்னான்.

       அவளுக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.,  இருந்தாலும் எதுவும் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

          அவனோநான் ஏர் போர்ட் தான் போறேன்., அண்ணனும் அண்ணியும் கூட்டிட்டு வந்துட்டு சாப்பிட்டுக்குறேன்.,  அவங்களோட கூட சேர்ந்து சாப்பிடுகிறேன்“., என்று சொல்லி விட்டு நகர அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.,

        “என்ன புதுசா பாக்குற“., என்று சொன்னவன்., “ஆமா உனக்கு அப்படித் தான் பார்க்க தோணும்., ஏன்னா ஒன்றரை வருஷம் ஆயிடுச்சி இல்ல.,  நான் தானா ன்னு., கன்ஃபார்ம் பண்ணிக்கிறயா இல்ல.,  வேற யாருமா ன்னு யோசிக்கிறீயா“., என்று சொல்லும் போதே அவன் பார்வை வாசல் வரை சென்று வந்தது., “இனிமேல் உள்ளே வரும் போதே கதவ பூட்டிட்டு வா., உன்னை திட்டுவதாக இருந்தால் இந்த ரூம்ல தான் திட்டு விழும் போ“.,  என்று சொன்னான்.,

         அமைதியாக வெளியேறி பாட்டியிடம்., அவன் சொன்னதைஅவங்க அண்ணனும் அண்ணியும் கூட்டிட்டு வந்து சாப்பிடுகிறேன் ன்னு சொன்னாங்க“.,  என்று சொன்னாள்.

       குழந்தையோ மாறி மாறி சந்திரசேகர் கையிலும்., தயாளன் கையிலும் மட்டுமே இருந்தான்.

         பாட்டி காலை உணவாக இட்லியை வாயில் திணித்துக் கொண்டிருந்தாள்.,

      ” பாட்டி அவன் காலையில ரொம்ப சாப்பிட மாட்டான்“., என்று இவள் சொன்னாள்.

           “சாப்பிட மாட்டான் ன்னு இல்ல., நீ பழக்கி வச்சது அப்படி., காலைல எட்டு மாச பிள்ளைக்கு இன்னுமா இட்லி கொடுக்காமல் இருக்க., ஒரு இட்லி அது கூட கொடுக்க வேண்டாமா., பிள்ளைய என்ன லட்சணத்தில் வளத்து இருக்கே“., என்று சொன்னாள்.

       

Advertisement