Advertisement

சரி சரி எல்லாத்தையும் எடுத்து வை“., என்று அவரும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

         அப்போது தான் சொர்ணா எதுக்கும் நாளைக்கு சின்னவனுக்கு ஜாதகம் பார்க்கும் போது கல்யாணம் நேரம் கூடி இருக்கா ன்னு கேளுங்க., ஏற்கனவே நம்ம பார்க்கனும்னு சொல்லிட்டுத்தான் இருக்கோம்., இவன் தான் இப்ப வேண்டாம்., இப்ப வேண்டாம் ன்னு தள்ளி போட்டுட்டே இருக்கான்.,  நீங்களும் உங்க அரசியலும்., கொஞ்சம் காலம் ன்னு சொன்னீங்க இல்ல.,   இல்லாட்டி 27 வயசுல முடிஞ்சு இருந்திருக்கலாம்“., என்று சொன்னார்.

         பிரசாத்தோஇப்ப என்ன அவசரம் முடிக்க., நான் அவசரமா முடிச்சுட்டு என்ன பண்ண போறேன்., எனக்கு முதல்ல அப்பா சொல்ற மாதிரி அரசியல்ல நல்ல இடத்துக்கு வந்து., நம்ம பேரை காப்பாற்றனும் ம்மா., அதுக்கு அப்புறம் தான் மத்ததெல்லாம்“., என்று சொல்லிக் கொண்டிருக்கும் பிரசாத்..,

        உண்மையில் எல்லா விஷயத்திலும் தன் பெயர் கெட்டுப் போகக் கூடாது என்பதில் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பவன்.,  நண்பர்களோடு பார்ட்டி என்று எங்கு சென்றாலும்., தன்பெயர் எதிலும் அடிபடாமல் பார்த்துக் கொள்பவன்., 

    பழகும் நண்பர்களையும் அதே போல வைத்துக் கொள்வான்., கெட்ட பழக்கம் என்று எதுவும் கிடையாது.,  எப்போதாவது நண்பர்களோடு சேர்ந்து பார்ட்டி வைக்கும் போது மட்டும்  மற்றவர்கள் அளவுக்கு இல்லை என்றாலும்., லேசாக மது அருந்துவான்.,  ஆனால் மற்ற பெரிய இடத்து பையன்களுக்கு இருக்கும் மற்ற தப்பு தவறான பழக்கங்கள் எதுவும் கிடையாது..,  முக்கியமாக பெண் விஷயத்தில் மிகவும் சுத்தம்.

         அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் எல்லோருமே தகுதி தராதரம் என அவர்களுக்கு சமமாக இருப்பவர்களை மட்டும் தான் கருத்தில் கொள்வார்கள்.,

        மற்றவர்களை தள்ளி வைத்து தான் பழகுவார்கள்., அது போல தான் அனைவருமே என்ன தான் பழக்கம் சொந்தம் என்று இருந்தாலும்., தங்கள் தகுதிக்கு கொஞ்சமும் இறங்கிப் போக மாட்டார்கள்., அதிலும் மிக முக்கியமான ஆள் சொர்ணா., அதன் பிறகு அவரின் வார்ப்பான பிரசாத் அரசியலில் இருப்பதால்., வேறு வழியின்றி இப்போது தான் சற்று அனைவரிடமும் நன்றாகவே பழகுகிறான்.,

        வெளியே மற்றவர்களிடம் ஒரளவுக்கு பழகக்கூடியவராக இருப்பவர் தயாளன் மட்டுமே.,  குடும்பம் என்று வரும் போது தகுதி கௌரவம் என்று பார்த்தாலும்.,

             அரசியல் என்று வரும் போது அனைவரிடமும் சரி சமமாக பழகுவார்.,  நித்தியானந்தனும் அதுபோல தான் குடும்பம் சொந்தம் உறவு என்று வரும் போது கொஞ்சம் பார்த்தாலும்., தனது தொழிற்சாலை வேலை என்று பார்க்கும் போது அனைவரிடமும் நன்றாக பழகக்கூடியவர்களாகவே இருந்தான்.

           அவன் மனைவி பெரிய குடும்பத்தில் இருந்து வந்த பெண் தான்.,  பிரசாத் எப்போதும் தாயிடம் கொஞ்சிக் கொண்டே அலைபவன்., அதனால் பெரும்பாலும் தாயின் குணங்கள் இருந்தாலும்., இப்போது அரசியல் என்று வரும் போது தந்தையே ஆசானாக கொண்டு கொஞ்சம் மற்றவர்களிடமும் பழகத் தொடங்கியிருக்கிறான். ஆனால் அது ஒரு எல்லைக்கோடு கொண்டே.,

            அங்கு உணவருந்தும் இடத்தில் சொர்ணா திருமணம் பற்றி பேச., பிரசாத்தோஅம்மா., தயவுசெய்து பேசாதீங்க.., எனக்கு கொஞ்ச நாள் நான் அரசியலில்  கால் பதிக்கனும்., அதுக்கு அப்புறம் தான் மத்ததெல்லாம்“., என்று சொன்னான்.

        சொர்ணாவோ., “முடிக்கனும் டா.,  என் வழி சொந்தத்தில் தான் இந்த தடவ பொண்ணு பார்க்கணும்., அப்படி இருக்கும் போது ஏன்டா தள்ளி போடணும்.,  இப்பவே சொல்லி வச்சா தான் நல்ல இடம் கிடைக்கும்., நல்ல பொண்ணா பார்க்கலாம்“., என்று சொன்னார்.,

              பிரசாத்அதெல்லாம் பார்க்கலாமா., இப்ப என்ன உங்களுக்கு அப்பாக்கு போட்டியாக செய்யனும்.,  அப்பா சொந்தத்துல தான் பாக்கணும்னு அண்ணனுக்கு அண்ணியை கொண்டு வந்தாச்சு., இப்ப என்ன உங்களுக்கு உங்க சொந்தத்துல தான் எனக்கு பொண்ணு பார்க்கணும்.,

         அதுக்கு என்ன பார்க்கலாம்., ஆனா நான் வந்து எலக்சன்ல ஜெயிச்ச அப்புறம்தான் அதெல்லாம்.., இல்ல ஓரளவுக்கு கட்சில நல்ல ஒரு இடத்துக்கு வந்ததுக்கு அப்புறம் தான்.., எனக்கு பிசினஸ் அது இதுன்னு இருந்தாலும்..,  இப்ப சொல்ற மாதிரி அரசியல்ல நமக்குனு ஒரு இடத்தை விடக்கூடாது“.,  என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

        அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் மகளான பானுவிடமிருந்து அழைப்பு வர.,  குடும்பத்தினர்., அனைவரும் பேசி வைத்தனர்.,

         ஜாதகம் பார்க்க ஜோஷியரை அழைக்க வேண்டி தயாளன் தனது பி விடம் சொல்லிஜோசியரை நாளைக்கு வர சொல்லுங்கள்“., என்று சொல்லி விட்டு அவருக்கான போன் அழைப்புகளை கவனிக்கச் சென்று விட்டார்.,

          பிரசாத்தின் அம்மா தான் நித்யானந்ததிடம் தங்கள் உறவு முறையில் ஒருவரை சொல்லிஅவங்க வீட்டு பொண்ணு இருக்குடா., டிகிரி முடிச்சு இருக்கு., நாம மட்டும் கேட்டோம் னா.,  சரின்னு சொல்லி உடனே கட்டி கொடுத்திருவாங்க.,  நல்ல வசதி தான் கலா வீட்டு அளவுக்கு வசதியான குடும்பம் தான்.,  மருமகளா வர்றவங்களுக்கு இடையில் எந்த வேறுபாடும் வந்துரக்கூடாது.,  அப்பதான் நாளைக்கு நமக்கு மரியாதை“., என்று சொன்னார்.

         நித்யானந்தம்அம்மா பொண்ணு தம்பிக்கு பிடிச்சு இருக்கான்னு பாருங்க.,  புடிச்சிருந்தா பேசி முடிங்க., மத்த படி  சொல்ல என்ன இருக்கு.., ஆனா அவன் இப்ப வேண்டாம் ன்னு சொல்றான்..,   ஒருவேளை எலக்சன்ல  இந்த தடவை சீட் கிடைச்சுட்டா., நம்ம மேற்கொண்டு பேசலாமா..,  நீங்க பேசாம இருங்க“.., என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

              அம்மாவோஉனக்கு புரியுதா நான் எதுக்கு சொல்றேன்னா.., நாம கலா வீட்டு வசதியில் இருக்கிற மாதிரி பார்த்தா தான் நமக்கும் கௌரவம்.,  சொந்ததில் இன்னும் ஒரு மூணு நாலு பொண்ணு இருக்கு“.., இந்த பொண்ணுக்கு முதலிடம் கொடுக்கனும்.,  இது இல்லனா அடுத்து இரண்டுல ஏதாவது  பார்க்கலாம்“., என்று சொன்னான்.

           “சரி மா பார்த்துருவோம்., இப்ப டென்ஷன் ஆகாம ரிலாக்சா இருங்க.,  அப்பாட்ட இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம்.,  நாளைக்கு ஜோசியர் வீட்டுக்கு தானே வராரு., வந்து பேசும் போது நம்ம பேசிக்கலாம்., அப்ப அவருட்ட  டீடைல்ஸ் சொல்லலாம்.., 

         அவனுக்கு கல்யாண நேரம் கூடி வந்திருச்சினா., எந்த திசையில் இருந்து வரும்., எந்த மாதிரி பொண்ணு வரும் ன்னு ஜோசியரை கேளுங்க.,  நீங்க எதுக்கு பயப்படுறீங்க“., என்று சொல்லி தன் தாயை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தான் நித்தியானந்தம்.,

             இரவு உணவை முடித்து விட்டு அவரவர் அறைக்கு சென்ற பின்னும் சற்று நேரம் மாலை நேரத்தில் பேசிய பேச்சை மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர்.

           தன் அறைக்கு வந்து சேர்ந்த பிரசாத்தும் சற்று நேரம் விட்டத்தை வெறித்து பார்த்து படுத்து இருந்தாலும் தன் நண்பர்களிடம் சற்று முன் அலைபேசியில் பேசியது நினைவுக்கு வந்தது.,

         தன் நண்பர்களிடம் பேசும் போது அவர்கள் மாறிமாறி சொன்னதை நினைத்து சிரித்துக் கொண்டான்.,  ‘அரசியலில் நிச்சயமாக இடம் கிடைக்கும்என்று ஜோசியர் சொல்வதற்கு முன்பே நண்பர்கள் சொன்னார்கள்.

            இவனும்அது எப்படிடா இவ்வளவு ஸ்ட்ராங்கா சொல்றீங்க“.,  என்று கேட்டான்.,  உங்க அப்பா எப்படியாவது சீட்டு வாங்கிருவார்டா., அதனால கவலைப்படாத இந்த தடவை எலக்சன்ல அமோக வெற்றி உனக்கு தான்“., என்று பேசிக் கொண்டிருந்தனர்.

           “பாப்போம் கிடைச்சா ஓகே தான்.,  இல்லாட்டி பிசினஸில் இறங்கவேண்டியது  தான்.,  கொஞ்ச நாளைக்கு அப்புறம் திருப்பி அடுத்த எலக்சன் வரும் போது கேட்போம்..,  இதற்கிடையில் கட்சி வேலையும் பார்த்துட்டே போனா ஓரளவுக்கு அடுத்த எலக்சன்ல கிடைக்க வாய்ப்பு இருக்கிறது“.,  என்றான்.

       “அதெல்லாம் இல்ல டா கண்டிப்பா இந்த தடவை உனக்கு கிடைக்கும்“., என்று நண்பர்கள் சொன்னதோடுடேய் வயசும் 30 பிறக்கப் போகுது.., எங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆயிடுச்சு.,  உங்க வீட்டிலே கண்டிப்பா ஜோசியர் வர்றாருன்னா உங்க அம்மா கண்டிப்பா கல்யாணத்துக்கு பார்ப்பார்கள்“., என்று சொன்னார்கள்.

            “ஆமா., அம்மா அதை பற்றியும் சொன்னாங்க., நான் தான் பொறுங்கன்னு சொல்லி இருக்கேன்“.,  என்று சொல்ல அவர்கள் தங்கள் பழைய விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததும் இப்போது நினைவுக்கு வந்தது.,

      எப்போதும் செல்லும் பார்ட்டி ஒன்றை நடத்தும் ஹோட்டல் போன்ற இடங்களுக்கு செல்லும் போது.., அங்கு வரும் பெண்கள் எத்தனை அழகாக இருந்தாலும் இவன் திரும்பிக் கூட பார்க்க மாட்டான்.,

         அதை பார்த்து நண்பர்கள் எல்லாம்ஏன்டா இப்படி இருக்கிற நாங்களாவது.,  பொண்ணுங்களை சைட் அடிக்கவாவது செய்றோம்.., நீ ஏதோ கல்லையும் மண்ணையும் பார்க்கிற மாதிரி பார்க்கிற“.,  என்று கேட்டனர்.

        இவனும்அதெல்லாம் இல்லடா எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க.., நம்ம தகுதிக்கு குறைஞ்சு பார்க்க கூட கூடாதுன்னு சொல்லுவாங்க..,  அப்படித்தான் வளர்த்தாங்க.,  உங்களுக்குத் தான் தெரியும் இல்ல..,

         ஸ்கூல் படிக்கிற காலத்திலிருந்தே நம்ம லெவலில் இருக்கிற ஃப்ரெண்ட்ஸோட மட்டும் தான் பழகுவேன்.,  யாருகிட்டயும் பேசுறது கூட யோசனை பண்ணுவேன்., அம்மாவைப் பொறுத்த வரைக்கும் அப்படித்தான்..,

      அதனால சில விஷயங்கள் நமக்குத் தகுந்த மாதிரி தான் பார்க்கணும்.., அதுல முக்கியமா கல்யாணம்., நம்ம தகுதிக்கு குறைத்து பார்க்கவே கூடாது..,

           ஏன்னா ஒத்துப்போகாது., நம்முடைய பழக்க வழக்கங்கள் வேற மாதிரி இருக்கும்.., நமக்கு ரொம்ப மேல பார்த்தாலும் தப்பு.., ரொம்ப கீழே பார்க்க கூடாது என ரெண்டு பேரோட பழக்கவழக்கங்கள் எல்லாமே வேற வேற மாதிரி இருக்கும்., அதெல்லாம் சரி வராது“., என்று இவன் சொன்னதை அவர் நண்பர்கள் நினைவுபடுத்தி இருந்தனர்.

      ” மச்சான் நீ அப்பவே அப்படி சொல்லுவ., இப்ப எம்எல்ஏ ஆகிட்டானா இன்னும் உன்னோட லெவல் வேற மாதிரி போகும்.., அப்ப அதுக்கு தான் தகுந்த மாதிரி தான் பார்ப்ப“., என்றனர்.

         “அது தெரியல டா பாக்கலாம்., அம்மா அவங்க வழி சொந்தத்துல தான் பார்க்கணும் கண்டிப்பா சொல்லுவாங்க“.,  என்று சொல்லி வீட்டில் உள்ள விஷயங்களை பேசிக் கொண்டிருந்து விட்டு அலைபேசியை வைத்திருந்தான்.

        அதை இப்போது நினைத்துக் கொண்டே படுத்திருந்தவன் சிரித்த வண்ணம் தூங்கிவிட்டான்.

மறுநாள் காலை வரும் ஜோசியர் இவன் தலையெழுத்தை சொல்வாரா., இல்லை அவனின் தலையெழுத்தை மாற்றி வைப்பாரா அனைத்தும் விதிவசம்

கொல்லாமல் கொல்லும்
நினைவுகள் அனைத்தும்
நீ என இருக்கையில்.,
தேடி தேடி அலைந்தாலும்                                                                                                              நிம்மதி உன்னோடு மட்டுமே                                                                                                              இதை அறியாத
நான் ஜடமாகி போனேனோ“..
     

Advertisement