Advertisement

2

    வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.

                     – புத்தர்

     
        கோயம்புத்தூரில் மிகப்பெரிய அரசியல் பெரும் புள்ளியான முன்னாள் அமைச்சர் இன்னாள் எம்.பி பதவியில் இருப்பவர் குடும்பத்தில் மாலை வேளையில் அனைவரும் ஹாலில் கூடியிருந்தனர்.

         “கட்சியில் சீட் கேட்டு இருக்கீங்க ன்னு., சொல்றீங்க.,  சரி தான் அதை பேப்பரிலும்  போட்டாச்சு., எத்தனை பேர் சீட்டு கொடுக்கறதுக்கு அகென்ஸ்ட் பேசப் போறாங்களோ ன்னு தெரியலை., ஒரு வேளை கொடுக்காமல் போயிட்டா என்ன செய்வீங்க“.., என்று அவரின்  மனைவி கேட்டார்.

       இவரும்எல்லாம் கட்சித் தலைமையுடன் பேசி தான் ரெடி பண்ணியிருக்கு., எப்படியும் கிடைத்துவிடும் நம்பிக்கை இருக்கு“..,  என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

         அதே நேரம் அவரின் மூத்த மகன் தான் ஊரில் இருக்கும் அவர்களின் தொழில் அனைத்தையும் அவன் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

        அவனும் அவன் அப்பாவிடம்அப்பா எதுக்கும் நல்ல பேசிக்கோங்க., ஏன்னா தம்பி சின்ன வயசு பையன் என்கிறதால அவங்க யோசிக்கக்கூடாது.., இன்னும் கொஞ்சம் பேசினா அவங்க யோசிக்காமல் சீட் கொடுப்பாங்க..,  தம்பிக்கு அரசியல்ல ஈடுபாடு இருந்தாலும்., அரசியல் அனுபவம் பத்தாது.,  என்று சொல்லி கட்சியிலுள்ள மத்தவங்க தட்டிக்கழிக்க தான் காத்துக்கிட்டு இருப்பாங்க.,  அதனால நல்ல யோசிச்சிட்டு முடிவு பண்ணுங்க பா“.,  என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

       “ஏண்ணா.,  நீ வேற பயம் காட்டுறஅங்கே ஏற்கனவே இழுபறியில் தான் இருக்கு.., அப்பா அன்னைக்கு கட்சித் தலைவரை பார்க்க கூட்டிட்டு போய் இருக்கும் போதே.., 

        தலைவர் சொன்னதுரொம்ப சின்ன பையனா இருக்கியே பா.,  அப்படின்னு சொன்னாரு., பார்க்கலாம் அப்படின்னு சொன்னாரு.,  அது மட்டும் இல்லாம நம்ம தொகுதியில் அப்பாக்கு நல்ல பெயர் இருக்கு அப்படிங்கிறதால  ஜெயிக்க வாய்ப்பு இருக்கு..,  இருந்தாலும் சின்ன வயசு கேண்டிடேட் வேற.., நம்பி ஓட்டு போடணும் இல்ல., இதே இது கொஞ்சம் வயசுல மூத்தவங்களாவோ.,  பழைய கேண்டிடேட்  இருந்தா எல்லாருக்கும் தெரியும்.,  சரி பார்க்கலாம் கட்சி நான் மட்டும் முடிவு பண்ண முடியாது இல்லையா..,  கட்சியில எல்லாரையும் கூப்பிட்டு ஆலோசனை பண்ணிட்டு சேர்த்துகிறேன்‘., அப்படின்னு சொன்னாரு.., 

          அதுவே கொஞ்சம் யோசனையா இருக்கு.,  நல்ல யோசிச்சு பார்த்தா நீ சொல்ற மாதிரி தான் யோசிப்பாங்களோ தோணுது“., என்றவன்.

         “அப்பா வேற அந்த கட்சியோட கூட்டணி கட்சியில்  தான் இருக்காரு.,  இந்த முறை சென்ட்ரலில் அப்பா கட்சி வரல., அப்படிங்கிற போது நெக்ஸ்ட் டைம் அவங்க கட்சிக்கான  வாய்ப்புகள் இருக்கு.., ஆனாலும் யோசிப்பாங்க இல்ல.,  இந்த தடவையும் ஆளும் கட்சி மாறும்., அப்படிங்கறது  தான்  நிலைமை..,  ரிசல்ட் எப்படி வருதுன்னு தெரியல.,  அதனால தான் யோசிக்கிறாங்க போல“.,  என்று எலக்சனுக்கு சீட் கேட்டிருக்கும் பிரசாத் பேசிக் கொண்டிருந்தான்.

            யோசனையோடு பிள்ளைகள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.,  மத்தியில் எம்பியாக இருக்கும் பெரியவர் தயாளன்.

        தன் மூத்த மகன் நித்தியானந்தன் சொல்வதையும்.,  இளைய மகன் சொல்வதையும் கேட்டுக்கொண்டே இருந்தார்.,  யோசனை இருந்தாலும் அவர் மனதிலும் சில யோசனைகள் ஓடிக் கொண்டு தான் இருந்தது.,

             மகனிடம்மீண்டும் சொல்லிப் பார்க்கலாம்., டொனேஸன் அதிகம் வேணா தள்ளிப் பார்ப்போம்..,  நல்லபடியா நடக்கும் நம்புவோம்“., என்று சொன்னான்.,

           மூத்த மகனான நித்யானந்தனோ.,  “அப்பா நீங்க சொல்றதெல்லாம் கரெக்ட்டு தான் இல்லன்னு சொல்லல.,  ஆனா ஒரே ஒரு விஷயத்தை யோசிச்சு பார்த்தீங்கன்னா உங்களுக்கே புரியும்.,   மத்தியிலும்  போன தடவை நீங்க அமைச்சராக  இருக்கும் போது அது வேற.,  இல்லன்னு சொல்லல..,

         ஆனா இப்போ நீங்க எம்.பி யா இருந்தாலும்., உங்களுக்கு எவ்வளவு தான் செல்வாக்கு இருந்தாலும்.., இவங்க இந்த தடவையும் உங்க கூட்டணிக் கட்சியா இருக்குறவங்க தான்., இப்பவும் ஜெயிப்பாங்களாங்குறது தெரியாது.., 

           வர்ற எலக்க்ஷன் அவங்க எதிர்க்கட்சியா மாறுவதற்கு வாய்ப்பு இருக்கு.., ஆளும் கட்சியா  இருந்து இப்ப  மாறுது., ஆளும் கட்சி மாறும் போது ஒரு வேளை மக்களோட மனக்கணக்கு படி எப்பவும் ஒரே கட்சியில் உள்ளவங்க ஜெயிக்க மாட்டாங்க இல்லையா.,

          இந்த தடவை இது மாதிரி மாறுச்சினா..,  போச்சு ப்பா.., தம்பி இங்க தொகுதியில் நின்று தோற்றுப் போன மாதிரி ஆகக்கூடாது., முதல் தடவையா தோத்து போனா.,  அடுத்து வரும் தேர்தல்ல நமக்கு சீட் கேட்டா கூட குடுக்குறதுக்கு யோசிப்பாங்க..,

      பழைய ஆட்களை தான் நிப்பாட்டனும் நினைப்பாங்க.., இப்படி எல்லாம் பிரச்சினைகள் இருக்க போய் தான்.,  நாம யோசிக்க வேண்டிய தான் இருக்கு..,  ரொம்ப பிரஷர் கொடுத்து கேட்கணும்னு அப்படிங்கறது இல்ல.., ஒருவேளை கேட்டு கிடைத்து ட்டா  சந்தோஷம் தான்., கிடைக்கலைனா.,  அதுக்காக இதுல வருத்தப்பட ஒன்னும் இல்ல.,  அதனால  ரொம்ப யோசிக்காதீங்க கிடைச்சாலும் கிடைக்கலாம்., அப்படிங்கிற மாதிரி யோசிங்க..,  என்ன டா பிரசாத் நான் சொல்றது சரிதானே“.., என்று தம்பியிடமும் கேட்டான்.

         “நீ சொல்றது சரிதான்.,  ஆனா அப்பா நீங்களே யோசிச்சு பாருங்க கிடைச்சாலும் ஓகே பா.,  கிடைக்காதுன்னு சொன்னாலும் ஓகே பா., ஒன்னும் பிரச்சனை இல்ல நமக்கு..,

           பிசினஸ் இருக்கு., இந்த முறை இல்லைனா என்னப்பா., அடுத்தமுறை  பார்த்துக்கலாம்“., என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

       அவரோஇல்லடா., நான் எதுக்காக யோசிச்சேனா, கண்டிப்பா ஒரு புள்ள அரசியலுக்கு  வருவான்., அப்படின்னு என் ஜாதகத்துல இருக்கு., மூத்தவன் தான் வருவான்னு நினைச்சேன்.., அவன்  பிசினஸ் பார்க்க போறேன்னு சொல்லிட்டான்., சரி உன்னை எப்படியும் அதுக்குள்ள கொண்டு வந்துவிடலாம் அப்படின்னு பார்த்தேன்., இன்னும் அஞ்சு வருஷம் னா., கஷ்டம் தான் எங்க கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எனக்கு அமைச்சர் பதவி கிடைக்குமானு தெரியாது..,

             அமைச்சர் பதவி கிடைத்தாலும்.,  கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த அளவுக்கு சீட் வரும் ன்னு யோசிக்கனும்., ஆளும் கட்சி சீட்டு ன்னு ஆயிரம் காரணம் இருக்கு எல்லாத்தையும் யோசிக்கணும் பத்தியா“.,  என்று சொன்னார்.

        “இப்ப அதுக்கு என்ன பண்ண முடியும்“.,  என்று கேட்டான்.

          “இல்லடா., இந்த தடவை எப்படியாவது வாங்கணும்., உனக்கு வயசு 30 பிறக்கப்போவுது., இந்த வயசுல அரசியலுக்குள் வந்துட்டா., இந்த அஞ்சு வருஷத்துல நல்ல பெயர் வாங்கிட்டா அதுக்கு அடுத்த தேர்தல்ல ஜெயிச்சி வந்தா அமைச்சர் பதவியே வாங்கிடலாம்.,

        அதுக்கு நம்ம கூட்டணி கட்சியில் இருந்து., ஜெயிச்சா எப்படியும் பேசியே  வாங்கிடலாம்.,  அதுதான் யோசிச்சிட்டு இருக்கேன்., அதுக்கப்புறம்  மூணு தடவை நீ எலக்சன்ல ஜெயிச்சா., ஓரளவுக்கு நல்ல பெயரும் வந்துரும்., நல்ல செல்வாக்கு வந்துரும்“., என்று அவர் மனம் பெயரையும்.,  செல்வாக்கையும் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

           பிரசாத்  “நாம எவ்வளவு பிஸ்னஸ் வச்சிருக்கோம்.,  இதுல வராத பணம் இல்ல.,  பரம்பரையா வராத செல்வாக்கா.,  பெயரா“.,  என்று சொன்னான்.

         அவரோஇப்ப தாண்டா நீ சின்ன பையன் மாதிரி பேசுற., பெயரும் செல்வாக்கும் அரசியல் மூலமா வர்றது வேற.,  அதுல வர்ற செல்வாக்கு தனிதான்.,  பணமும் பெயரும் நம்மகிட்ட நிறையவே இருக்கு இல்லன்னு சொல்லல..,  அது இருக்க போய் தான் உனக்கு இந்த வயசுல சீட் கேட்க முடியுது.., அதை தெரிஞ்சுக்கோ“., என்று சொன்னார்.

            “சரிப்பா கிடைச்ச சந்தோஷம் ன்னு  சொல்லியாச்சு விடுங்க., ரொம்ப யோசிக்காதீங்க“., என்று மகன்கள் சொல்லிக் கொண்டிருந்தனர்.,

              இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த தயாளனின் மனைவி சொர்ணம்ஏங்க இதையே பேசிட்டு இருக்கீங்களே., கிடைக்குமா கிடைக்காதா., அதை சொல்லுங்க“., என்று கேட்டார்.,

        அவரோகிடைக்குமா கிடைக்காதா ன்னு தெரியாது  சொர்ணா.,  ஆனால் கிடைச்சுட்டா நல்லா இருக்கும்.,அத தான் நான் எதிர் பார்த்திட்டு இருக்கேன்.., நீ எதுக்கும் சின்னவன் ஜாதகத்தை எடுத்து வை., நாளைக்கு நம்ம ஜோசியரை வரச் சொல்லலாம்.., அவர் வந்து பார்த்து சொல்லட்டுமே., அவர் சொன்னா சரியா இருக்கும்., எனக்கு தெரிஞ்சு ரொம்ப காலமா நம்ம அவர்ட்ட  தான் பார்த்துட்டு இருக்கோம்., இப்பதிக்கு ஜாதகம் பார்க்கவேயில்லை.,  நாளைக்கு ஜோசியர் வரச் சொல்கிறேன் நீ எடுத்து வை“., என்று சொல்லிக்கொண்டே அன்றைய மாலை பேச்சை அத்துடன் முடிவுக்கு கொண்டு வந்தவர்.

         தன் மனைவியிடம் தன் மகளைப் பற்றி விசாரிக்கத் தொடங்கி விட்டார்., “பானு போன் பண்ணினாளா., வரேன்னு சொன்னாளா“., என்று கேட்டார்.

            நித்தியானந்தன் தான் அருகில் இருந்தவன்., “ஏன்பா உங்களுக்கு சும்மாவே இருக்க முடியாதா., அவளை  ஒரு வாரம் கூட மாப்பிள வீட்ல இருக்க விட மாட்டீங்களா., அவதான் பத்து நாளைக்கு ஒரு தடவை வந்துட்டுப் போறாளே., அப்புறம் என்ன பேசாமல் அவ குடும்பத்தோட இருக்க விடுங்கப்பா..,  அவளுக்கும் பொறுப்பு வந்து.,  அவ அவ குடும்பம் ன்னு இருக்கட்டும்“., என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.,

           நித்யானந்தன் மனைவி குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து பேசிக் கொண்டிருப்பவர்கள் இடம் விட்டுவிட்டு அவள் வேலையை பார்க்க சென்றாள்.

        நித்யானந்ததிற்க்கு திருமணம் முடிந்து நான்கு வயதில் ஒரு மகளும்.,  இரண்டு வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். 4 வயது மகள் அங்கு தான் விளையாடிக் கொண்டிருந்தாள்.

      இரண்டு வயது மகளை தான் மாலை நேரத்திற்கான சிறு உணவாக உணவு ஊட்டி வாயைத் துடைத்துக் கொண்டு வந்து பெரியவர்களிடம் விட்டுவிட்டு இரவு உணவு செய்ய., சமையல் செய்பவர்களிடம்  மெனு செல்வதற்காக சென்று கொண்டிருந்தாள்.,

           அவள் செல்வதை பார்த்தவுடன் சொர்ணாவும் எழுந்து செல்ல அவர்களது பேச்சுவார்த்தை அத்தோடு முடிந்து வீட்டில் உள்ளவர்கள் குழந்தைகள் இருவரையும் வைத்து பேசிக்கொண்டிருக்க தொடங்கியிருந்தனர்.

      இரவு உணவு நேரத்தில் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து அமர்ந்து பேசிக் கொண்டிருக்க..,

      வீட்டோடு வேலைக்கு இருக்கும் சுந்தரி அம்மாதான் உணவுகளை எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைத்துக் கொண்டிருந்தார்.,  நித்யானந்ததின் மனைவி கலாவும் அனைவருக்கும் பரிமாறும் விதமாக நடுவில் நகர்த்தி வைத்து தேவையானவற்றை கேட்டு பரிமாறிக் கொண்டிருந்தாள்.,

       சொர்ணா இரண்டு வயது பேத்தியை மடியில் வைத்துக்கொண்டு தன் கணவரிடம் பேச்சுவார்த்தையில் இருந்தார்., சமையல் செய்யும் சுந்தரி அம்மாவின் கணவர் தான் வீட்டில் பாதுகாப்பு பொறுப்பை பார்ப்பது.,

         அவர்களுக்கான வீடு., இவர்கள் வீட்டின் பின்புற தோட்டத்தில் கட்டி கொடுத்திருந்தனர்., அவர் பகலிலும் இரவிலும் யாரும் வருவது., போவது போல் தெரிந்தால் சுற்றி பார்த்துக்கொள்வார்.,

        வாட்ச்மேன் என்று தனியாக இருந்தாலும் இவர் பொறுப்பாக மொத்தத்தையும் பார்த்துக் கொள்பவராக இருந்தார்., அவர்கள் பிள்ளைகளை அருகில் உள்ள பள்ளியில் படிக்க வைத்தனர்., 

           வீட்டு வேலைக்கு சுந்தரி அம்மா காலை எழுந்து வந்து வேலைகளை முடித்துவிட்டு இடையில் வீட்டிற்கு சென்றாலும்., மீண்டும் மாலை வந்து வேலைகளை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு செல்வார்.

         அப்போது தான் சொர்ணா வீட்டுத் தலைவர் தயாளனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்., “ஜாதகம் பாக்குறதுக்கு நாளைக்கு வர சொல்லும் போது எல்லார் ஜாதகத்தையும் ஒரு தடவை பார்த்துருவோம்“., என்று சொன்னார்.

           

Advertisement