Advertisement

அவள் அருகில் வந்த அவள் அப்பா தான்நீ இப்படி பண்ணுவேன்னு அப்பா கொஞ்சம் கூட எதிர்பார்க்கலாமா.,  எதனாலும் வீட்ல பேசி இருக்கணும்., நீ இப்படி பண்ணதுக்கப்புறம்., நாங்க வருத்தப்பட்டு  நினைச்சது நாங்க எங்க பிள்ளையை சரியா வளர்க்கலை ன்னு தான் நினைச்சோம்., அப்படி என்ன கோபம் பொம்பள பிள்ளைக்கு.,  இருக்கட்டுமே பேசினாங்க..,எத  பேசினாலும் இருக்கட்டுமே.,  தப்பா பேசிட்டாங்கனே வச்சுக்கோ.,

      ஏன் அவங்க தப்பா பேசினா., உனக்கு எங்க போச்சு அறிவு., அவரை பார்த்து ஏதும் தப்பா தோணுதா இல்ல இல்ல.,  அவங்க பேசுறதால உனக்கு ஏதும் குறைந்து போகுதா இல்ல இல்ல.,  பேசுறவங்க பேசுறாங்கன்னு கண்டுக்காம போயிட்டே இருக்கணும்.,

       அதுதான் வாழ்க்கை., நம்ம வாழ்க்கைல நம்மள சுத்தி நாலு பேர் நாலுவிதமா பேசத்தான் செய்வாங்க.,  ஆனா அந்த நாலு பேரும்.,  நாளைக்கு நமக்கு எதுவும்னா வந்து நிக்க மாட்டாங்க.,

          இந்த ஒன்றரை வருஷத்துல நீ பட்ட கஷ்டத்தை யாராவது வந்து பங்கு எடுத்துட்டாங்களா., இல்ல உன்னை பேசினவங்க கஷ்டப்பட்டாங்களா.,  இல்ல தானே.,  உனக்கு வேண்டாம் ன்னு.,  தோணுச்சுன்னா நம்ம வீட்டுக்கு வந்து இருக்குமா., இல்லையா.,  உனக்கு என்ன வீடா இல்லை“.,  என்று  சத்தம் போட்டார்.,

      தயாளன் தன் பங்கிற்கு பேசத் துவங்கினார்.,  “நீ பண்ணுனது சரி இல்ல மா“.,  என்று சொல்ல துவங்கவும்., அப்பா என்று பிரசாத் தடுக்க முயல.,

       ” நீ பேசாத டா., இது எனக்கும் என் வீட்டு மருமகளுக்கும் உள்ள பேச்சு.,  உனக்கும் எனக்குமான பேச்சு கிடையாது., எனக்கு அவள திட்டுவதற்க்கு எல்லா உரிமையும் இருக்கு“.,  என்று சொன்னவர்.,

            “நாங்க ரெண்டு பேரு இருக்கோம்.,  உனக்கு  சொர்ணமும் பானும் பேசுறானா.,  நீ உடனே எங்களுக்கு தானே போன் பண்ணி இருக்கனும்., ஏன் எங்க கிட்ட போன் பண்ணி சொல்ல வேண்டியது தானே., சரி அப்போ அந்த நிமிஷத்தில் போன் பண்ண முடியல.,
மறுநாள் புல்லா வீட்ல தானே இருந்திருக்க.,  மறுநாள் போன் பண்ணி என்கிட்ட சொல்லி இருக்கலாம்.,இல்ல அப்படி என்னமா கோபம்.,

       அப்படியே ஆனாலும்  நீ சென்னை கிளம்பி வந்து இருக்க வேண்டியது தானே., சென்னையில் வந்து வேலையை பார்த்து இருக்க வேண்டியது தானே., இங்க உன் வேலை இருந்துச்சு., உன் பிரெண்ட்ஸ் இருந்தாங்க., இதை விடவா உனக்கு பெரிய விஷயம் கிடைக்க போகுது.,  வந்து அவங்க கூட இருந்து இருக்க வேண்டியது தானே., யாரோ என்னமோ சொன்னா., கிளம்பிறனுமா.,

        நீ இருக்கிற இடம் தெரிஞ்சுச்சு சரியா போச்சு., நீ நல்லவங்க கைல கிடைச்ச சரியா போச்சு., உலகத்துல என்ன எல்லாம் நடக்குது.,  எதுக்கெடுத்தாலும் அவசரமா முடிவு பண்ணக்கூடாது மா., இனிமேலாவது யோசித்து நிதானமாக முடிவு பண்ண பழகிக்கோ“.,  என்று சொன்னார்.

        அமைதியாக இருந்தவளுக்கு வெளியே மீண்டும் காலிங் பெல் சத்தம் கேட்டது.,

      வினோத் தான் போய் திறந்தான்., குழலியும் ரதியும் வாசலில் நின்றனர்.,

      வினோத்உங்களுக்கு எப்படி“., என்று கேட்டனர்.,

          “பாட்டி காலையில் போன் பண்ணி சொல்லிட்டாங்க., ஆபீஸில் இருந்து நேரா இங்க தான் வர்றோம்“., என்று சொன்னவர்கள்., இருவரும் பேக்கை தூக்கிப் போட்டு விட்டு அருகில் வந்தவர்கள்.,

       ஆளுக்கு ஒரு அடி வைக்க., “எருமை போறவ தான் போற.,  சொல்லிட்டு போய் தொலைஞ்சா என்ன பிசாசே.,  நீ பேசாம சொல்லாமல் கொள்ளாமல் போவ.,  உன்னை தேடி நான் இங்கிருக்கிற  ஒவ்வொரு இடமா தேடனுமா., எத்தனை ஐடி கம்பெனில ஏறி இறங்கி இருப்பேன்.,  தெரியுமா.,

         எத்தனை லேடீஸ் ஹாஸ்டல்ல ஏறி இறங்கி இருப்போம் தெரியுமா.,  சனியன் புடிச்சவளே.,  சொல்லிட்டு போகறதுக்கு என்னடி நாயே“., என்று ரதி அடிக்க.,

குழலியும்உன்னை கொலை பண்ணனும் ன்னு தான் வந்தேன்., இந்தா கையில இருக்கற குழந்தையை பார்த்ததால் தான் அமைதியா இருக்கேன்.,  நீ அன்னைக்கு அங்கயே இருந்து உனக்கு ஏதும் ஆகி இருந்தா கூட அந்த துக்கம் வந்து கொஞ்ச நாள்ல ஆறி போயிரும்., ஆனா நீ காணாமல் போய் உன்னை தேடி அலைஞ்சு கஷ்டம் இருக்கு பாரு.., அது ஜென்ம ஜென்மத்துக்கும் போகாது“.,  என்று சொல்லி ஆளாளுக்கு  பேசியவர்கள்.

      அவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு கண்ணீர் வடிந்தனர்.,

         ஹேமாவுக்கும் கண்ணீர் வடிந்தது ஆனால் தலையை குனிந்தபடி இருந்ததால் அவள் கண்ணீர் அவ்வளவாகத் தெரியவில்லை.,

         ஆனால் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பிரசாத்திற்கு அவள் அழுவது புரிந்தது., 

       “அந்த ரூமுக்கு போங்கஎன்று சொல்லி அவன் அறையை காட்ட., அவளை அழைத்துக் கொண்டு அங்கே சென்ற பின்பு., அனைவரும் ஹாலில் குழந்தையை கையில் வைத்தபடி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.,

       பிரசாத்தின் நண்பனுக்கு தான் அனைவரும் நன்றி சொன்னார்கள்., அவனோஅப்படி இல்ல., நானும் போற இடம் எல்லாம் தேடிட்டு தான் இருந்தேன்.,   ஹேமா மாதிரி யார் இருந்தாலும் கொஞ்சம் தேடித்தான் பாத்தேன்., ஆனா இந்த முறை  கொஞ்சம் ரொம்பவே சிமிளரா தெரிஞ்சது., அதனால தான் பின்னாடியே போனது“., என்று சொல்லி நடந்தவைகளை பேசிக்கொண்டிருந்தனர்.

அதற்குள் அங்கு தங்கியிருந்த வீட்டை பற்றியும் வினோத் சொல்லிக் கொண்டிருந்தான்.

பிரசாத்தின் அப்பா தான் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொன்னார்., “கண்டிப்பா அதை அவங்க இங்க வரும் போது பார்த்துக்கலாம்.,ன்னு தான் இருக்கேன்., அவங்க பெங்களூரில் செட்டில் ஆகிற மாதிரி ஐடியா தான் இருக்காங்க., அவரும் மிலிட்டரி இருந்து இப்பதான் வந்திருக்காரு போல.,   இனிமேல்தான் பெங்களூரில் இருந்து பிசினஸ் பண்ணணும் இருக்காரு.,  அந்த டைம்ல நம்ம ஏதாவது ஹெல்ப் பண்ணலாம்..,  இப்போ நம்ம ஹெல்ப் பண்ணினா கண்டிப்பா வாங்க மாட்டாங்க“.,  என்று சொல்லி பேசிக்கொண்டிருந்தனர்.,

       பாட்டி தான்இவளுக்கு எப்படி தான் மருந்து குடுத்து கவனிச்சாங்க ன்னு தெரியலையே., ஆபரேஷன் வேற சொல்றாங்க., அதனால சந்திரசேகரா இங்க எங்க புள்ள மருந்து இதெல்லாம் கிடைக்கும் விசாரிச்சு.., வாங்கிட்டு வா.,  அவளுக்கு தேவையானதை எல்லாம் கொஞ்ச நாளைக்கு செஞ்சு போட்டு கவனிக்கனும்“., என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது தான்

         வினோத்தும் அவள் டெலிவரிக்கு அப்புறம் எப்படி இருந்தால் என்பதே அந்த பெரியம்மா சொன்னதை சொல்லிக்கொண்டிருக்க., பிரசாத் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவன்

         பின்பு தன் தந்தையிடம்அப்பா அண்ணா கிட்ட சொன்னீங்களா.,  இல்லையா“., என்று கேட்டான்.

      “காலையில வருவாண்டா“., என்று சொல்லி கொண்டிருந்தார்.,

      குடும்பம் மொத்தமும் சேர்ந்தாலும் சொர்ணத்தைப்பற்றி அங்கு யாரும் பேசவில்லை.,

      உள்ளே குழலியும் ரதியும் அவளை திட்டி தீர்த்து விட்டுஇனியாவது ஒழுங்காக இருக்க கத்துக்கோஎன்று சொல்லி அறிவுரையோடு இரவு உணவை முடித்துக் கொண்ட பிறகு குழலியும் ரதியும் அவர்கள் வீட்டிற்கு செல்ல கிளம்பினர்.

       வினோத்தை கொண்டு விட்டு வர சொன்னார் பாட்டி.,  அவர்களை கொண்டு  விட்டு வந்த பிறகு., 

         முதலில் குழந்தை எழுந்தவுடன் யாரிடமும் சேராமல் இருந்தான்., பின்பு கொஞ்ச நேரத்தில் ஒவ்வொருவரிடமாக சேர்ந்து கொள்ள தொடங்கியிருந்தான்.,

  மடியில் அமர வைத்து அவனை கொஞ்சி கொண்டு இருக்க.,  சற்று நேரத்திலேயே  அனைவரிடமும் சேர்ந்து கொள்ள துவங்கினான்.,

         அவனுக்கு இரவு உணவாக இட்லியை பாலில் நனைத்து மசித்து அவள் பாட்டி ஊட்டிவிட., அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தாள்.

        அப்போது பாட்டி தான் பாதகத்தி பாதகத்தி எல்லாத்தையும் கெடுத்திட்டியே.,  நானென்ன எல்லாம் நினைச்சிருந்தேன்., உனக்கு இப்படி செய்யனும் அப்படி செய்யனும்., எவ்வளவு கனவுகண்டு இருப்பேன் எல்லாத்தையும் கெடுத்தியே.,  நான் என்ன செய்வேன் உனக்கு வளைகாப்பு இப்படி செஞ்சு பார்க்கணும்., உனக்கு பிரசவத்தில் எப்படி பார்க்கணும்.,  உன் பிள்ளையை இப்படி எடுத்து வளக்கணும்., இப்படி எல்லாம் கனவு கண்டேன் எதையும் நடக்கவிடாமல் பண்ணிட்டியே“.  என்று சொல்லியபடியே குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட குழந்தையோ.,  அவர் வாயையே பார்த்துக் கொண்டே அவர் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தது.,

    இவளுக்கு மேலும் குற்ற உணர்ச்சியை தூண்டி கொண்டே இருந்தார்கள்.,  இருந்தாலும் தான் செய்த தவறுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.,

       அப்போதுதான்ஆமா குழந்தையோட பெயர் என்ன“., என்று பாட்டி கேட்டார்.

     அது வரைக்கும் எல்லோரும் கண்ணா.,  செல்லம்., தங்கம்., என்று கொஞ்சிக் கொண்டே இருந்ததால் யாரும் பெயரை கேட்கவில்லை.,

     அங்கு வைத்து வினோத்தும் பிரசாத் ம் கேட்காததால் இருவரும் அவளை பார்க்க..,

        “என்னடா நீங்க ரெண்டு பேரும் அவளை  பாக்கீங்க.,  உங்களுக்கும் பெயர் தெரியாதாஎன்று கேட்டார்.

      இல்ல அங்க வச்சு கண்ணா கண்ணா ன்னு  பேசியிருந்ததால.,  பேரு கேக்கல., இவள  பார்த்த டென்ஷன் எப்படி இங்க இழுத்துட்டு வரலாம் ன்னு தான் நாங்க  யோசிச்சோம்., குழந்தையை பார்த்து ஷாக் வேற.,  அதனால கேட்கல“. என்று சொன்னான்.

      அதன் பிறகு அவளிடம் கேட்க பிரணவ் என்றாள்.

       “இதுக்கு  ஒன்னும் குறைச்சல் இல்லை“.,என்றார் பாட்டி.

      பாட்டி அப்படி சொல்லியதைக் கேட்டதும் வீட்டில் உள்ளவர்களுக்கு லேசாக சிரிப்பு வர.,

     இவளோ பாட்டியை முறைத்து பார்க்க..,

   “போதும் போதும் நீ முறைத்துப் பார்த்தது.,  போ போய் பிள்ளையை தூங்க வை“., என்று சொல்லிவிட்டுநீயும் தூங்கு ஆள் மாதிரியா இருக்க பாத்தியா.,  காஞ்சி போயிருக்க., இனிமேல் உன்னை தேத்திதான் விடனும்“.,  என்று சொன்னவர்.

      “பேசாம என்கூட கோயம்புத்தூருக்கு கிளம்பி வா.,  நம்ம வீட்ல வந்து ரெண்டு மாசத்துக்கு இரு., அங்க மருந்து சாப்பாடு அது இதுன்னு கொடுக்க வேண்டியது இருக்கு., எல்லாத்தையும் குடுத்து உடம்பை தேத்தி விடுவேன்“.,  என்று சொன்னார்.,

    பிரசாத் தான்இல்ல பாட்டி., நீங்க இங்க இருங்க“.,  என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

      சந்திரசேகரும்ஆமாம்மா நீங்க இங்க இருங்க“., என்று சொன்னார்.,

     அவளின் அம்மாவும்நானும் இங்கேயே இருக்கேன்.,  ஒத்தையில அத்தை மட்டும்  என்ன செய்வாங்க.,  இப்ப பிள்ளையும் வச்சிக்கிட்டு ஒரு வேலையும் செய்ய மாட்டா.,

       இப்படியே பொம்மை மாதிரி உட்கார்ந்து கிட்டு இருந்தா., நாளைக்கு அவ வீட்டு வேலை எல்லாம் யார் செய்வா“., என்று சொன்னார்.

       அவர்களை முறைத்து பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.,

       அதை பார்த்த பிரசாரத்திற்கு ஒருபுறம் சிரிப்பு வந்தாலும்., இத்தனை அருமையான குடும்ப சூழலை இத்தனை நாட்கள் அவளும் இழந்து.,  தானும் இழந்து இது தேவையா“., என்ற எண்ணத்தோடு அமர்ந்து இருந்தவனுக்கு மனமெல்லாம் கோபம் வளர்ந்து கொண்டே இருந்தது..

        அங்கு இருந்த அறைகளில் ஆள் ஆளுக்கு படுத்துக்கொள்ள.,  இவள் குழந்தையோடு அமர்ந்திருந்தாள். பிரசாத் தான்உனக்கு தனியா சொல்லனுமா.., ரூமுக்கு போஎன்றான்.,

     நீரில்லாத மேகம் இல்லை
     நீ இல்லாமல் நானும் இல்லை
    எப்போது புரிந்து கொள்வாய்
     எப்போது உணர்வுகளை
      அறிந்து கொள்வாய்.,

Advertisement