Advertisement

19

     ஒருவன் என்னை இகழ்ந்து பேசினான். ஒருவன் என்னை அடித்தான். என்று அடுத்தவனைப் பற்றியே ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தால் அவனுடைய கோபம் ஒரு போதும் தணியாது.
                                  – புத்தர்


         சென்னை வந்து இறங்கியதும் ஏர்போர்ட்டில் இருந்து  லக்கேஜ் எல்லாம் எடுத்துக் கொண்டு வெளியே வரும் போது பிரசாத்தின் கார் வாசலில் நின்றது.,

        சென்னையில் அவனுக்கு என இருக்கும் டிரைவர் காரை எடுத்து வந்திருந்தார்., அவளுடைய பெட்டிகளை வினோத் டிக்கியில் வைத்தான்.

        பிரசாத் வினோத்தோடு ஹேமா குழந்தையை வைத்துக் கொண்டு பின்னால் அமரந்தாள்.,  டிரைவரின் அருகில் அவன் நண்பன் அமர்ந்தான்.

      டிரைவரிடம்வீட்டு சாவி எங்க இருக்கு.,  காரில் இருக்கா“., என்று பிரசாத் கேட்டான்.

      “இல்ல சார்., அப்பா வந்துட்டாங்க அது மட்டுமில்லாம மேடம் வீட்டில் அம்மா அப்பா பாட்டி எல்லாருமே வந்துட்டாங்க.,  அவங்க எல்லாம் வீட்ல இருக்காங்க“.,  என்று சொன்னான்.,

        “ஓஓ.,  வந்துட்டாங்களா“., என்று கேட்டவன் சத்தம் இல்லாமல் அமைதியாக இருந்து கொண்டான்.,

          ஹேமாவிற்கு நீண்ட நாள் கழித்து ஒரு நிம்மதி உணர்வு ஏற்பட்டாலும்.,  மனதிற்குள் குற்ற குறுகுறுப்பு அவளை தவிக்க வைத்துக் கொண்டிருந்தது..,

        அடிக்கடி அவள் செய்தது தவறு என உணர்ந்தாலும்., இப்பொழுது அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட பேசாமல் வரும் பிரசாத்தை நினைத்தால் கஷ்டமாகத் தான் இருந்தது.,

     கிளம்பும் போது., முகத்தை கழுவும் போது பார்த்தாள்., காலையில் வினோத் விட்ட அடியில் கண்ணம் லேசாக வீங்கி இருப்பதும்., அவனின் விரல் தடம் பதிந்து இருப்பதும்., ‘வினோத் அடித்ததிற்கு பதிலாக பிரசாத் அடித்திருந்தால் கூட மனம் ஓரளவு நிம்மதியாக இருந்திருக்குமோ‘.,  என்று தோன்றியது.,

            ‘வினோத் உடன் பிறந்தவன் கோபத்தை காட்டி விட்டான்., இவன் கட்டிய கணவன் தானே இவனுக்கு இல்லாத உரிமையா., ஏன் இவன் கோபத்தை காட்டவில்லை‘., என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவளுக்கும் புரிந்தது.,

         ‘அது குமுறும் எரிமலையாக அவனுக்குள் குமுறிக் கொண்டே தான் இருக்கும்., வெடித்து சிதறுமா அல்லது நெருப்பை கக்குமா., தெரியாது ஆனால் அதற்கு நிச்சயமாக நாள் எடுக்கும்.,

        எத்தனை திட்டுகள் வாங்க வேண்டியது இருக்கிறதோ.,  வார்த்தைகளால் கொல்வதை விட இவன் நாலடி நம்மை அடித்திருக்கலாம்‘, என்று இப்போதே எண்ணத் துவங்கியவளுக்கு புரிந்தது.,

         ‘கண்டிப்பாக அவன்  வார்த்தைகள் தன்னை கொல்லாமல் கொல்லும் என்பது புரிந்தும்., அமைதியாக குழந்தையை வைத்துக் கொண்டிருந்தாள்.

        பிளைட்டில் வரும் போது உள்ளவை ஞாபகத்திற்கு வந்தது ஒவ்வொரு முறைஅவன் குழந்தையை கவனித்துக் கொண்ட விதத்தைப் பார்க்கும் போது தப்பு பண்ணி விட்டோம்‘., என்று அவளை துடியாய் துடிக்க வைத்தது.,

         ப்ளைட் இறங்குவதற்கு முன்னே குழந்தை பசியில் அழும் போது.,  அவள் குழந்தையை பசியாற்றி இருக்க., அவன் அப்போதே தூங்கி விட்டான்.  ‘இப்போது தூக்கத்தில் இருப்பதால் பிரச்சினை இல்லை.,

    வீட்டிற்கு போனவுடன் புது மனிதர்கள் எல்லோரிடமும் எப்படி சேர்ந்து கொள்வான்‘., என்று தெரியவில்லையே என்ற பயம் அவளுக்கும் இருந்தது.

ஏனெனில் காரில் போகும் போதே டிரைவரிடம் இவன் தகவல் சேகரித்துக் கொண்டிருந்தான்.,

     யோசித்துக் கொண்டு தான் இருந்தாள்.,  ஏனெனில்அங்கே வீட்டில் அண்ணன் அண்ணி அம்மா அண்ணன் குழந்தையை தவிர வேறு யாரிடமும் இவன் சேர மாட்டான்., அவர்களை விட்டால் இவள் மட்டும் தான்., இப்போது என்ன செய்யப் போகிறானோ‘., என்று குழந்தையை பார்த்துக் கொண்டே வந்தவளுக்கு ஐயோ வீட்டில் எத்தனை பேர் என்னென்ன திட்டுவதிற்கு காத்திருக்கிறார்களோ., வினோத் அடித்தது போல அம்மா அடிப்பாரா.,  என்று யோசித்துக் கொண்டிருக்க அங்கு எதிர்பாராத விதமாக நடந்தது.

         அவன் தங்கியிருந்த அப்பார்ட்மெண்டில் கீழே வந்து கார் நிற்க.,  முதலில் இறங்கிய வினோத் மறுபக்கமாக வந்து கதவை திறந்து ஹேமா இறங்குவதற்கு உதவி செய்தான்.,

      அதற்குள் இறங்கியிருந்த பிரசாத் ஹேமா கையில் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டவன்., நண்பனையும் வினோத்தையும் வாங்க என்று சொல்லிவிட்டு.,  அவளைப் பார்த்துவா உனக்கு தனி எல்லாம் சொல்ல முடியாதுஎன்று சொல்லி விட்டு சென்றான்.

       ‘சரி ஆரம்பித்துவிட்டது‘.,என்று நினைத்துக் கொண்டே மெதுவாக சென்றாள்.

     அதற்குள் டிரைவரும் வாட்ச்மேனும் சேர்ந்து லக்கேஜ் எல்லாம் எடுத்துக் கொண்டு வர அமைதியாக பார்த்துக் கொண்டு அவர்களுடன் நடந்தாள் இவற்றில் இரண்டாவது மாடியில் வந்து லிப்ட் நிற்க.,

      அவன் குழந்தையுடன் முதலில் வெளியே வந்தவன்., அவள் கையை சேர்த்து பிடித்து தன்னோடு அழைத்து சென்றான்., என்பதை விட அவள் மெதுவாக நடந்ததற்கும்., அவன் வேகமாக நடப்பதற்கும் அவளை இழுத்துச் சென்றது போல தான் இருந்தது.,

     அவளுக்கு கையை பிடித்து இருந்தது வலிக்கவும்., “பிரசாத் கையை விடுங்க“.,  என்று சொன்னாள்.

        “ஏன் அப்படியே இறங்கி திரும்பி போயிடலாம் பார்க்கிறியா“.,  என்று கேட்டான்.

        “நீங்க என் கைய டைட்டா பிடித்து இருக்கீங்க“.,  என்று சொல்லவும் தான்.,

          அவன் வேகம் புரிந்து கையின் அழுத்தத்தை குறைத்தான்., அப்போதும் குழந்தை தூங்கிக் கொண்டிருக்க.,  வீட்டு வாசலில் வந்து நின்ற அவன் கதவைத் தட்ட முயற்சிக்க., அதற்குள் வினோத் வந்து கதவை தட்டினான்.,

     இவன் குழந்தையோடும்., அவளோடும் சற்று பின்னால் தள்ளி நிற்க.,

      கதவை திறக்கவும்., பாட்டி., அப்பா அம்மா., மாமா.,  என்று குடும்பமே அங்கு நின்றனர்.,

       அவளைப் பார்த்த அவள் வீட்டினர்திமிருடி உனக்கு“., என்று அவள் அம்மா பேச்சை தொடங்கும் முன்பே.,

       வினோத்சத்தம் போட்டு பேசாதீங்க., வீட்டுக்குள்ள போய் பேசலாம்“., என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிரசாத் கையில் குழந்தையோடு நிற்பதை பார்த்தவர்கள்.,

       “உனக்கு நெஞ்சழுத்தம் ஜாஸ்தி தான்டி., உள்ள வா வச்சிக்கிறேன்“., என்று அவள் அம்மா சத்தமாக சொல்லி விட்டு சென்றார்.,

      பாட்டியோ வாய் மேல் கை வைத்து அதிர்வோடு., குழந்தையோடு நிற்கும் பிரசாத்தையும் அருகில் நிற்கும் ஹேமாவையும்  தான் பார்த்துக் கொண்டிருந்தார்.,

        அதற்குள் பிரசாத்  “உள்ளே வாஎன்றான்.,

        ஹேமாவின் அம்மா தான்தம்பி கொஞ்சம் இருங்க., இந்தா வாரேன்“.,  என்று சொல்லி விட்டு வீட்டிற்குள் சென்று ஆரத்தி கரைக்க எல்லாம் தயார் செய்தார். ஆரத்தி கரைக்க ஒன்றும் இல்லாததால் தண்ணீரில் குங்குமத்தைக் கரைத்து சூடத்தை வைத்து எடுத்து வந்தார்.,
        சுண்ணாம்பு மஞ்சள் என்று கரைப்பார்கள்., ஆனால் இங்கு அது எதுவும் இல்லாததால் குங்குமத்தைக் கரைத்து எடுத்து வந்து ஆரத்தி சுற்றியவர்., அதை டிரைவர் கையில் கொடுத்து வெளியே கொட்டி விட்டு வரும்படி சொல்லிவிட்டு உள்ளே வந்தார்.

      அவன் குழந்தையோடு உள்ளே வந்ததை பார்த்த தயாளன்  “ஏம்மா குழந்தையை பற்றி  கூட எங்க கிட்ட சொல்ல கூடாதா“., என்று வருத்தத்தோடு கேட்டார்.

         ஹேமாவின் அம்மா தான்., நீ நெஞ்சழுத்தம் பிடித்தவளா இருப்பேன்னு எதிர்பார்க்கல.,  ஏன் ஒரு வார்த்தை சொன்னால் என்ன குறைந்தா போய் இருப்பே.,

       சொல்லாம கொள்ளாம போற அளவுக்கு திமிரு., அப்படியே வர்றதா இருந்தா வீட்ல பெத்தவங்க கூட பிறந்தவங்க., ஏன் உனக்கு கல்யாணம் பண்ணிட்டு போன வீட்டில் அவங்க மட்டும் தான் மனுஷங்களா., மத்த யாருமே இல்லையா.,  மொத்தமா யார்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு அப்படி என்ன அகராதி.,

         உனக்கு அப்படி அங்க இருக்க புடிக்கலைன்னா அப்படியே கிளம்பி வீட்டை பார்த்து வர வேண்டி தானே.,  உனக்கு என்ன வீடு இல்லையா“.,  என்று கோபத்தோடு நெருங்கிவர.,

      அவள் அப்பா தான் அவள் அம்மாவை பிடித்துக் கொண்டிருக்கும் போதே.,  அருகில் வந்த பாட்டியோ வினோத் அடித்த கன்னத்திலேயே மீண்டும் ஒரு அடி வைத்து.,  “திமிரு புடிச்சவளே., திமிரு எடுத்தவளே., உன்னை நான் என்ன இப்படியா வளர்த்தேன்.,   அகம் புடிச்ச கழுத.,  உன்னை பார்த்து பார்த்து செல்லம் கொடுத்து வளர்க்கப் போயி தான் உன் திமிர் தனத்துக்கு அளவில்லாமல் போயிட்டு.,

            பிள்ளையை பெத்து எடுத்தவ புள்ளையோட தனியா இத்தனை நாள் இருந்து இருக்கியே., எங்கள எல்லாம் மனுசியா கண்ணு தெரியல இல்ல.,  பிள்ளைய பாக்கும் போது கூடவா உனக்கு உன் புருஷன்., அம்மா அப்பா  வேணும்னு தோணலை., சரி நான் வேண்டாம்.,  வயசானவ செத்துப் போயிட்டேன்னு நினைச்சிக்கோ“.,என்றார்.

      ” பாட்டி“., என்றார்.,

     ” பாட்டின்னு கூப்பிடாதே., எனக்கு இருக்கிற கோவத்துல., உன்ன அடிச்ச கொன்னுருவேன்செத்து போய்ட்டான் ன்னு நினைச்சு தானே., நீ எதுவும் என்கிட்ட சொல்லாம போன.,  உன் இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணுவியா.,

      அப்புறம் என்னத்துக்கு நீ கல்யாணம் பண்ணி குடும்பமா இருக்க போன., தனியா போய் தனிக்காட்டு ராணியாக இருந்திருக்க வேண்டிய தானே.,  உனக்கெல்லாம் எதுக்கு கல்யாணம் உனக்கு குடும்பம் னா என்னன்னு தெரியாம இருந்தியா.,  இல்ல குடும்பமே இப்படித்தான் இருக்கும்னு தெரியாம வளர்ந்தீயா.,  தெரிஞ்சு தானே வளர்ந்த.,

         ஏன் உங்க அப்பாவும்  அம்மாவும் சண்டை போடுவதே கிடையாதா., நானும் உங்க அம்மாவுக்கும் சண்டை போடுவதே கிடையாதா., எத்தனை நாள் கேட்டு இருக்க.,  மாமியாருக்கும் மருமகளுக்கும் வேற வேலையே இல்லையா.,  என்று கேப்பியா இல்லையா.,  அப்படி நினச்சிட்டு போக வேண்டியது தானே., அகம் பிடிச்சவளே“., என்று சொல்லி மீண்டும் அடிக்க போகும் போது வினோத் கையை பிடித்து தடுத்தான்.

         “நான் வேற காலையில அடிச்சிட்டேன்“., என்று சொன்னான்.

      “அடிச்சுக் கொன்ன கூட தப்பே இல்லடா., அவ்வளவு திமிரா இவளுக்கு“.,  என்று பாட்டி மேலும் கத்த துவங்கவும் தான்.,

       அவள் அமைதியாக ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டாள்., திட்டுபவர்கள் எல்லாம் திட்டி முடிக்கட்டும் என்று.,

    ஆனால் அப்போதும் பிரசாத்  வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை.,

       அவள் அம்மாவும்உன்ன பிள்ளையா பெத்ததுக்கு  நான் பிள்ளை பெத்துக்காமேலே இருந்திருக்கலாம்என்று சொன்னாள்.

            அதை கேட்டதும் முதன்முதலாக கண்கலங்கியது., இருந்தாலும் அமைதியாக இருந்தாள்.

      

Advertisement