Advertisement

இல்ல பேசிட்டு வரேன்என்று சொல்லிக்கொண்டிருந்தான்.,

      “நீங்க உட்காருங்க தம்பி., முதல்ல சாப்பிட்டு அப்பறமா உட்கார்ந்து பேசுங்கள்“., என்று சொன்னார்.

       “இல்லை டிக்கெட் புக் பண்ணனும்.,  அப்பாட்ட சொல்லி இருக்கேன்“., என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே

       வினோத் தான்நான் டிக்கெட் புக் பண்றேன் அத்தான்.,  நீங்க பேசுறீங்களா., சாப்பிடறீங்களா.,  ன்னு முடிவு பண்ணுங்க“., என்று சொன்னான்.

        பெரியம்மா தான்தம்பி பேசணும் சொல்லுறாங்களே., முதல்ல பேசிட்டு வரட்டும்.,  நம்ம எல்லாம் சாப்பிடுவோம்., அப்புறம் தம்பியும் ஹேமாவும் வந்து சாப்பிட்டட்டும்“., என்று சொன்னார்.

        அதுவும் சரிதான் என்று மற்றவர்களுக்கு அவள் பரிமாற தொடங்கினாள்.

          பிரசாத் ஹேமாவின் அறைக்கு சென்றான்., அங்கு மகனை மடியில் போட்டபடி அமர்ந்திருந்தவள் குழந்தையை பார்ப்பதும்., கண்ணை முடுவதுமாக அமர்ந்திருந்தாள்.

        சரியாக குழந்தையை பார்த்து விட்டு கண்ணை மூடி அமர்ந்து இருக்கும் போது தான் அறைக்குள் வந்தவன்., கதவை சாத்தும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

          அவன் நான் கதவை சாத்திவிட்டு அங்கு வந்தவன்., அவள் அருகில் அமர்ந்தான்., அவள் தோளில் கையை போட்டு தன்னோடு சேர்த்து அணைத்தபடி அமர்த்தவன்., சற்று நேரம் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

        அவளுக்கும் அவனிடம் என்னவென்று கேட்க தயக்கமாக இருந்தது.,

       அவளுக்கும் அவனிடம் தோள் சாய வேண்டும் என்று தோன்றினாலும்., இப்போது மட்டும் வந்து சாய்கிறாளே என்று நினைத்து விடுவானோ..,  என்ற எண்ணமும் தோன்றியது.

         ஆனாலும் சற்று அழுதாள் நன்றாக இருக்கும் என்று தோன்ற., வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் அப்படியே அவன் தோளில் சாய்ந்தாள்.,

       அமைதியா இருந்தாலும்., தோள் அவ்வப்போது அசைவதை உணர்ந்தவன்.,  கண் திறந்து அவளைப் பார்க்க., அவள் அழுது கொண்டிருப்பது புரிந்தது.,

          எதுவும் சொல்லாமல் அவள் தோளில் இருந்து கையை எடுத்தவன்., குழந்தையை அவள் மடியில் இருந்து தூக்கவும்.., அவள் பிடிக்கசும்மா இருஎன்று சொன்னவன்.,

            குழந்தையை எடுத்து அவள் அமர்ந்திருந்த கட்டிலில் படுக்க வைத்தவன்., அவளருகே அமர்ந்து அவளை தன்னோடு சேர்த்து அணைத்து பிடித்துக் கொண்டான்.

         “இங்க பாரு நடந்தது நடந்து முடிஞ்சிடுச்சி.,  இனிமேல் எதையும் மாற்ற முடியாது., எனக்கு கோபம் இருக்கு.,  நிறைய இருக்கு., ஆனா உன்கிட்ட காட்டுற நேரம் இது கிடையாது.,

     ஆனா கண்டிப்பா என்னோட கோபம் உன்னை நிறைய நாள்களில் குத்தி கிழிக்க வாய்ப்பு இருக்கு., நான் வார்த்தைகளை விடுவதற்கும் வாய்ப்பு இருக்கு.,  நான் கோபப்பட்டு வார்த்தையை விட்டுட்டேனா., மறுபடியும் பெட்டிய தூக்கிட்டு எங்கேயும் கிளம்பிறாதே.,

        அதை திருப்பி என்னால தாங்குற  அளவுக்கு தெம்பு இல்ல., உன்ன பிரிஞ்சு இருக்கிற அளவுக்கு என் மனசுக்கு தைரியமும் இல்லை., இனிமேல் நீ பிரிந்து போக நினைச்சா., என்னை நீ கொன்னுட்டு போறதுக்கு தான் சமம்.,  அதுக்கப்புறம் நான் இருப்பேன் என்று சொல்ல மாட்டேன்.,  நிச்சயமா இருக்க மாட்டேன்.,

       ஏன்னா இந்த ஒன்றரை வருஷம் நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும்.,  உனக்கு கஷ்டம் இருக்கும் இல்லன்னு சொல்லலை., உனக்கு அந்த கஷ்டத்து க்கு காரணம் தெரியும்., ஆனால் நான் எங்க அம்மா சொன்னது மட்டும் தானா.,  இல்ல உனக்கும் எனக்கும் நடந்த பேச்சு வார்த்தையா.,  என்ன ன்னு நினைச்சு இருப்பேன்.,

       ஆனால் யோசிச்சு பாரு நம்ம ரெண்டு பேருக்குமே எந்த சண்டையும் இதுவரைக்கும் வந்தது கிடையாது., அப்படி இருக்கும் போது.,  நான் உன் கிட்ட சண்டை போட்டது கிடையாது. நீயும் என்று சண்டை போட்டது கிடையாது., உனக்கு பிடிக்கலையோ.., நீ என்கூட நல்லபடியா தானே வாழ்ந்த ன்னு நான் நினைச்சேன்., அது பொய்யோ அப்படின்னு அடிக்கடி நினைத்து வேதனை பட வச்சது.,

        அது மட்டும் இல்லாம நம்ம வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லைன்னு தோணுச்சு., ஏன் அந்த ஒரு மாசத்துல என்னை உனக்கு புரியலையா., எத்தனை நாள் உன் முகத்தை பாத்திட்டே நான் கதை  பேசிட்டு இருந்திருக்கேன்., உன்கிட்ட கதை சொல்லி இருக்கேன்.,

     எத்தனை நாள் என்னுடைய சந்தோஷம்., என்னோடதூக்கம்., என்னோட அரசியல் ஆசை ன்னு எவ்வளவு பேசி இருக்கேன்., அப்போ கூட உன் கிட்ட தானே இதெல்லாம் சொல்றேன்னு உனக்கு புரியலையா“.,  என்று கேட்டான்.

         மேலும் அவனோடு ஒன்றி கொண்டவள் கண்ணீர் மட்டும் நிறுத்தாமல் வடிக்க..,

     “இதைத்தான் சொன்னேன் என்னோட கோபங்கள்., வார்த்தைகள் தான் வெளிப்படும் ன்னு நம்புறேன்., ஏன்னா என்னோட கோபத்தை கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா யார்கிட்டயும் காட்டாம மனசுக்குள்ள., முழு கோபத்துல இருக்கேன்., அது எப்ப வெடிக்கும் ன்னு எனக்கு தெரியாது.,  எங்க அம்மாகிட்ட பேசுறதையே நிறுத்திக்கிறேன் இப்ப வரைக்கும்., அவங்ககிட்ட நான் பேசல.,

      எங்க அப்பா மூலமாதான் இப்ப வரைக்கும் பேசிட்டு இருக்கேன்., எங்க அக்காவ அதுக்கப்புறம் நான் மூஞ்ச கூட பார்த்தது கிடையாது., இப்படி தான் போயிட்டு இருக்கு., இந்த நேரத்துல  நான் உன்னை திட்டினேன் ன்னு.,  மறுபடி கிளம்பிறாத.,  என்னால முடியவே முடியாது“.,  என்று சொல்ல அவன் மார்பில் முகம் புதைத்து இருந்தவள்.,  இல்லை என்னும் படியாக தலையசைத்தாள்.,

     தன்னோடு அழுத்தி பிடித்துக் கொண்டவன்., சற்று நேரம் அமைதியாக இருந்த படி யோசித்துக் கொண்டிருந்தான்.,

    பின்பு அவளிடம்சரி இன்னைக்கு கிளம்பனும் எல்லாம் எடுத்து வை“., என்று சொன்னவன்.,

       அவள்ஆபீஸ்”  என்று சொல்ல.,

      “அதெல்லாம் நான் பார்த்துப்பேன்.,  இனிமேல் நீ குழந்தை வளர்ற வரைக்கும் ஆபீஸ் பற்றி யோசிக்காத.,  அதையும் மீறி உனக்கு வேலைக்கு போகனும் ன்னு தோணுச்சுன்னா.., நான் வேற ஏதாவது ஏற்பாடு பண்ணுகிறேன்., தயவு செய்து பிள்ளையை பாரு., உன் ஹெல்த்தை பாருஎன்று சொன்னவன்.,

     “எந்திரி வா., குழந்தை தூங்கும்  போதே வந்து சாப்பிட்டுட்டு பேக் பண்ண ஆரம்பி“., என்று சொன்னான்.

       எழுந்து அவன் பின்னே சென்றாள்., வெளியே அமர்ந்து இருந்தவர்களுக்கு அவள் அழுது இருப்பது தெரிந்தாலும் யாரும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.,

           அவள் அண்ணியும் உணவு அனைத்தையும் எடுத்து வைத்து விட்டுநீங்க ரெண்டு பேர் தான் சாப்பிடணும்சாப்பிட்டு முடிங்கஎன்று சொன்னார்.

        இருவரும் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருக்க., அவள் உணவின் அளவை பார்த்தவனுக்கு வருத்தமாகத் தான் இருந்தது.,

       ‘இவ்வளவு குறைவாக சாப்பிட்டு எப்படி இருக்கிறாள்என்று தோன்றியது.

       அவள் அதிகமாக சாப்பிட மாட்டாள் என்று தெரியும்., ஆனால் இவ்வளவு குறைவாக.,  அந்த வீட்டின் பெரியம்மா சொன்னது நினைவு வர அமைதியாகிவிட்டான்.

    அதே நேரம் அவள் அண்ணி அவளுக்கு என தனியாக முட்டை ஆம்லெட் செய்து கொண்டு வந்து வைத்தாள்.,

     அவளுக்கு குழந்தை பெற்றவள் என கொஞ்சம்  கறியில் இருந்து அதிகமாக எடுத்து வைத்து.,  “ஒழுங்கா சாப்பிடு பிள்ளைக்கு சத்து வேண்டாமா“., என்று மிரட்டிவிட்டு சென்றார்.,

       பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு இவர்கள் எல்லாம் இல்லாவிட்டால் இவள் நிலைமை என்ன ஆயிருக்கும் என்று தோன்றியது.

        சாப்பிட்டு முடித்து அவள் அண்ணிக்கு அனைத்தையும் ஒதுக்கி போட உதவி செய்யவும்., வீட்டில் வேலைபார்க்கும் அம்மா வந்தார்.,

         அனைவரும் ஹாலுக்கு வந்தனர்.,  அப்போதுஅவளை கூட்டிட்டு கிளம்புறேன்.,  நீங்க கண்டிப்பா சென்னைக்கு வாங்க“., என்று சொன்னான்.,

     சரி என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.,  அவளது சென்னை பயணத்திற்கான டிக்கெட்டை தயார் ஆகி வர..,

    வினோத் தான் அவளுடைய லக்கேஜ் எல்லாம் காரில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்., அதே நேரம் அவர்களுக்கு ஹேமாவை பார்த்து சொன்ன அவனுடைய நண்பனும் வந்து சேர்ந்தான்.,

        ஏனெனில் அவன் இங்கு தான் இருக்கிறான் என்று தெரிந்து தான் வினோத் டிக்கெட் போடும் போது பிரசாத்திடம் கேட்டு அவனுக்கும் சேர்த்து டிக்கெட் பதிவு செய்திருந்தான்.

ஹேமாவை அழைத்துக் கொண்டு பிரசாத்தின் சென்னை பயணம் தொடங்கியது.,

வாழ்ந்து விட தானடி
துடிக்கிறது மனது.,
ஏனோ மனதின் ஓரத்தில்
குவிந்து கிடக்கும்
கோபங்களை
கொஞ்சம் கொஞ்சமாக
கழித்து முடித்து விடுகிறேன்.,
அதன் பிறகு வாழ்க்கை எனும்
பாதையில் சற்றே
கலங்கி இருக்கும் இந்த
நீரோட்டம் தெளியும்
என்று நம்புகிறேன்.,
பொறுத்திரு கோபங்கள்
எல்லாம் துரத்தி விட்டு
வருகிறேன்.,
வாழ்க்கையை வாழத்
தொடங்கலாம்..,

Advertisement