Advertisement

18

ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டுஆனால், எல்லாம் தெரியும் என்று  நினைப்பவன் முழு மூடன்.
                             – புத்தர்

       பேச்சின்றி இந்த இடமே அமைதியாய் இருக்க., அறைக்குள் இருந்தவளுக்கு மனம் படபடவென அடித்துக்கொண்டது.

           வினோத் மற்றும் பெரியவர்கள் அனைவரும் அவரவர் தரப்பு பேச்சுகளை பேசும் போதுதான்., தான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறோம் என்பதை உணர்ந்தாள்.,

       ஆனாலும்அவன் அம்மா செய்தது தவறு தானேஎன்று தோன்றவும் தவறவில்லை., ‘அப்போது தான் மீண்டும் ஆட்டோக்காரர் சொன்னது நினைவு வர தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவளுக்கு.,  யாரிடமாவது அறிவுரை கேட்டிருக்கலாமோஎன்று காலம் கடந்த ஞானோதயம் வந்தது.

       அப்போதுமே பெங்களூர் தோழி சொன்னதுஅவசரப்படாம முடிவெடு.,  நிதானமாக கூட ஒருநாள் யோசி..,   அதுக்கப்புறமா முடிவெடு“., என்று சொல்லும் போது கூட.,

        “நீ ஹெல்ப் பண்ணலேன்னா., நான் வேற எங்கேயாவது போயிருவேன்“., என்று சொல்லப் போய் தான் அவளும் சரி வா என்று அழைத்துக் கொண்டாள்.

      இதை இப்போது வரை யாரிடமும் அவளும் சொல்லவில்லை., தானும் சொல்லவில்லை என்பதை யோசித்து கொண்டவள்.,

       ‘ சரி நடப்பதெல்லாம் நன்மைக்கே.,  இதுவரை நடந்தது நடந்து முடிந்துவிட்டது., இனி நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும்‘., என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டே அமைதியாய் உறங்கும் தன் மகனை மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தாள்., அதேநேரம் மீண்டும் வெளியே பேச்சு சத்தம் தொடங்கியது.

      அவளை இத்தனை நாள் பார்த்துக் கொண்ட குடும்பத்தில் அவளால் அண்ணன் என்று அழைக்கப் பட்டவன் தான் பேச்சை தொடங்கினான்.,

       “சரி தம்பி., எல்லாம் முடிஞ்சது முடிஞ்சு போச்சு.,  இனிமேல் பேசி பிரயோஜனம் கிடையாது.., இப்போ உங்க முடிவு என்ன“.,  என்று கேட்டார்.

       வினோத் பேசும் முன் பிரசாத் பேசினான்., “அவள கூட்டிட்டு போகணும் அதுதான் எனக்கு இப்ப முக்கியம்“., என்று சொன்னான்.

        ” கூட்டிட்டு போறது பிரச்சனை இல்ல தம்பி.,  வினோத் தம்பி சொன்ன மாதிரி நீங்க கூட்டிட்டு போனாலும்., நாலு பேரு நாலு கேள்வி கேட்க தான் செய்வாங்க., உங்க மனச எல்லாரும் வேதனைப் படுத்துற மாதிரி தான் இருக்கும்., அதனால தான் கேட்கிறேன்“., என்று சொன்னவன். மீண்டும்

  “நீங்க கண்டிப்பா கூட்டிட்டு போகனும்., ஆனா அதுக்கு பதில் சொல்ல எல்லாம் நீங்க தயாரா இருக்கீங்களா., அதுக்காகத்தான் கேட்கிறேன்“., என்று சொன்னார்.

             அவனும்அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்., இப்போதைக்கு நான் அவளை கோயம்புத்தூர் கூட்டிட்டு போகலை.,  சென்னைக்கு தான்.,

        அது மட்டுமில்லாம.,  நானும் இப்ப எல்லாம் முக்கால்வாசி நாள் சென்னையில் தான் இருக்கேன்., அதனால யாரும் என்னைக் கேள்வி கேட்க மாட்டாங்க.,

      நான் கோயம்புத்தூருக்கு மாசத்துல அஞ்சு நாள் மட்டும் தான் போவேன்., அது எல்லாருக்குமே தெரியும்., மத்தபடி ஊர்ல சொல்லி வைத்திருப்பது அவ சென்னையில் வேலை இருக்கா ன்னு.,
இப்பவும் அங்க தான் ஒர்க் பண்ணிட்டு இருக்கா ன்ற மாதிரி தான் சொல்லி இருக்கேன்“.,  என்று சொன்னான்.

              அங்கு கேட்டுக்கொண்டிருந்த ஹேமாவும்ஆமா இல்ல அன்னைக்கு பேட்டில அப்படித்தானே சொன்னாங்க‘., என்று அவன் பேட்டி ஒளிபரப்பான அன்று அவள் பார்த்ததை நினைத்துக் கொண்டாள்.

        அவன் பேட்டி ஒளிபரப்பான அன்று அவர்கள் பிள்ளையின் பள்ளிக்கு அண்ணியும் அண்ணனும் சென்றிருந்தனர்.,  பெரியம்மா இரவு குழந்தையோடு சேர்ந்து சிறிது நேரம் முழித்து  இருந்ததால் அவர்களும்  உறங்கி விட., இவளையும் தூங்க தான் சொன்னார்கள்.,

       இவள் தான்இல்ல நான் கொஞ்ச நேரம் ஹாலில் இருக்கேன்“., என்று சொல்லி விட்டு ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.,

        அந்த சமயத்தில் தான் அவனின் பேட்டி பிரபலமான தமிழ் சேனல்.,  இங்கிலீஷ் சேனல் என அனைத்திலும் ஒளிபரப்பப்பட்டது., அதை பார்த்துக் கொண்டிருந்த போது தான்இவன் ஏன் இப்படி இருக்கிறான்‘., என்று தோன்றினாலும்.,

      ‘இந்த அன்பை தானே நிராகரித்தோம் என்றும் தோன்றியது‘., இருந்தாலும் அவளுடைய சுய கவுரவம் பார்க்கும் குணம் மட்டும் அவளை அவனிடத்தில் சென்று சேர விடவில்லை.

        அவளது ஒரு மனமும் போன் செய்து பேசினாள் என்ன என்று தோன்றினாலும்., மற்றொரு மனம் இல்லை வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே இருந்தது.

      ‘அவர்கள் அம்மா கடைசியா சொன்ன வார்த்தை., நீ இந்த வீட்டை விட்டு போகலைன்னா.,  நான் என்னை கொளுத்தி விடுவேன்‘., என்று சொன்னதோடு

             இவள்சரி போகிறேன்என்று சொல்லும் போது கூடநீ சீக்கிரம் போய் தொலை.,  நீ தொலைஞ்சி போனா தான்.,  என் பையனுக்கு என் இஷ்டப்படி நான் கல்யாணம் பண்ணி வைக்க முடியும்., நீ கண்ணு முன்னாடி இருந்தா., நான் நினைச்ச எதுவுமே நடக்காது.,  நீ செத்து தொலைஞ்சா கூட நான் கவலைப்பட மாட்டேன்., முதல்ல இந்த வீட்டை விட்டு நீ வெளியே போகனும்., இந்த வீட்டை விட்டு நீ வெளியே போயிட்டாளே.,  என் மகனும் உன்னை மறந்திடுவான்என்று சொல்ல போய் தானே வெளியே வந்தாள்.

        ‘இல்லை என்றால் நிச்சயமாக சென்னை தானே போயிருப்பாள்., சென்னையில் இருந்தால் அவன் பார்ப்பான்., அவனுக்கு தெரியும் என்பதால் தானே சென்னைக்கும் போகாமல்., தாய் வீட்டிற்கு போகாமல்.,  இப்படி தனியே வந்து நிற்பது.,  அப்படிப்பட்டவர்கள்  இருக்கும் இடத்திற்கு போவதா‘., என்று யோசிக்கும் போதே

      அவன்இப்போது சென்னைக்கு தான் அழைத்து செல்ல போகிறேன்என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

       ‘எது எப்படி என்றாலும்., இனி என்ன செய்வது என்பதை தானும் சேர்ந்து தானே முடிவு செய்யவேண்டும்‘., என்ற யோசனையில் குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு தான் செய்த தவறு இன்னும் பெரிதாக தோன்றத் தொடங்கியது.,

            அவன் முகத்தில் வந்து போன மாறுதல்கள்.,அவளுக்கு நினைவுக்கு வந்தது., குழந்தையை கையில் வைத்திருந்தவன் அவளைப் பார்த்த பார்வை அவளை கூறுப்போட்டது.,

        நிச்சயமாக எந்த ஒரு தந்தைக்கும்., தன் பிள்ளையின் வளர்ச்சியை முதலில் இருந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும்., அதில் தான் செய்த தவறு தான் பெரிது என்று தோன்றிய உடனே சரி மன்னிப்பு கேட்போம்.,

       நிச்சயமாக உடனே எல்லாம் மன்னிப்பு கிடைக்காது., மெதுவாகத்தான் வரும்..,  வரும்போது வரட்டும் ஆனால் நிச்சயமாக அவன் சொல்லி காட்டப்போகும் வார்த்தை வாழ்நாள் முழுமைக்கும் நீட்டிக்கும் என்பதை அவளும் அறிந்தவளாய் அமைதியாக அமர்ந்திருந்தாள்.,

       அதே நேரம் வெளியே பிரசாத்நான் பேசிக்கிறேன்., யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க., அது மட்டும் இல்லாம இன்னைக்கு ஈவினிங் பிளைட் டிக்கெட் போடலாம்னு இருக்கேன்“., என்று சொன்னான்.

        வீட்டில் உள்ளவர்கள் தான்தம்பி உடனே கூட்டிட்டு போக வேண்டாம்., நாளை கூட்டிட்டு போங்க., அது மட்டும் இல்லாம ஆபீஸ்ல வேற.,  இப்போதைக்கு ஓர்க் பிரம் ஹோம் னாலும்“., என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது தான்..,

      “அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.,  அப்பா வச்சு நான் பேசி ரெடி பண்ணிக்கிறேன்., இவர் திருப்பி வேலை பார்க்கணும்னு ஆசைப்பட்டா சென்னையில் உள்ள ஏதாவது கம்பெனியில் ஜாயின் பண்ணட்டும்.,
இல்ல பழைய கம்பெனியில் ஜாயின் பண்றதா இருந்தா லும் ஜாயின் பண்ணட்டும்., ஆனால் குழந்தை வெச்சுட்டு இவ எப்படி இப்ப வேலைக்கு போக முடியும்.., அப்படியே ஆனாலும்  எவ்வளவு நாள் ஓர்க் ப்ரம் ஹோம் கொடுப்பாங்க., எல்லாத்தையும் யோசிக்க வேண்டியதிருக்கு.,
கொஞ்ச நாளைக்கு வேலைக்கு போக வேண்டாம்“., என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது.,

     வினோத்தும் சரி., அந்த வீட்டின் உரிமையாளரும் சரி., “ஆமா அவங்க சொல்றது சரிதான்., இங்க இருக்கும் போது நீங்க குழந்தையை பார்த்துட்டீங்க.,

     அங்க போனதுக்கப்புறம் அவளுக்கு குழந்தை பார்க்க ஆள் இல்லை., ஆளே  வச்சா கூட., அம்மா பாட்டி ன்னு யார் வந்தாலும்., ஹெல்ப்  பண்ணாலும் அவ இருந்து பாக்குற மாதிரி வராது.,  இப்பவுமே அவளுடைய ஹெல்த்ல  கேர் எடுக்கனும்“., என்று அவள் அண்ணியும் சேர்ந்து சொன்னார்.

    பிறகுசரி எப்போது கிளம்பலாம்என்று கேட்டான் பிரசாத்.,

     “அவள் அலுவலக வேலை“., என்று பெரியம்மா சொன்னார்.

    ” ஒரு நிமிஷம்“., என்று சொன்னவன் தன் தந்தைக்கு அழைத்தான்.,

         அழைத்து அவளது கம்பெனி விபரங்களை அவள் அண்ணன் அண்ணியும் மூலமாக கேட்டு தெரிந்து கொண்டவன்., அவன் தந்தைக்கு தகவல் அனுப்பினான்., “தந்தையோ நான் பேசுகிறேன்., நீ மருமகளோட  கிளம்புற வேலையை மட்டும் பாரு“., என்று சொல்லும் போது கூட குழந்தையைப் பற்றி அவன் ஒரு வார்த்தை சொல்லவில்லை.,

        வினோத் அத்தான்மாமாட்ட குழந்தை சொல்லலையா“., என்று கேட்டான்.

     “ஏன் எல்லாரும் இப்பவே டென்ஷனாகனுமா., அங்க போய் பார்த்துக்கட்டும்.,  இப்பவே சொன்னா எல்லாருக்கும் கூட கொஞ்சம் டென்ஷன் வருத்தம் எல்லாம் இருக்கத்தான் செய்யும்.,  எப்படியும் போய் காமிக்கும் போது இன்னும் கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்யும்., பார்க்காம போய்ட்டோம்., செய்யாமல் போயிட்டோம் ன்னு.,  ஏன் இப்போ உங்க அம்மா பாட்டி வருத்தப்பட மாட்டார்களா., அப்படி தான் ஆனால் என்ன பண்ண., வேற வழி இல்ல.,

         இப்பவே அவங்களுக்கு கஷ்டத்தை கொடுக்கிறது பதிலா போனதுக்கப்புறம் கொடுத்துக்கலாம்“.,  என்று சொல்லி விட்டு அமைதியாகி விட்டான்.

     அதன்பின்பே பெரியம்மாவிடம்நான் ஹேமா ட்ட கொஞ்சம் பேசணும்“., என்று சொன்னான்.

      “சரி தம்பிஎன்று சொல்லும் போதே அந்த வீட்டின் அண்ணியானவள்சாப்பாடு ரெடியா இருக்கு சாப்பிட்டு அப்புறம் பேசுங்கஎன்று சொன்னார்.

    

Advertisement