Advertisement

என் பையன் உன்ன பிடிக்காமல் தான் கல்யாணம் பண்ணினான்.,  அரசியல்ல ஜெயிக்கணும்னா இந்த ஜாதகத்தில் உள்ள பொண்ண கல்யாணம் பண்ணா நல்லா இருக்கும்னு சொன்னாங்க..,  அதுக்கு தான் கல்யாணம் பண்ணினான்.,  நம்பாட்டி அவன் பிரெண்ட் கிட்ட கேளு“.,  என்று சொன்னவர்.,

          ப்ரண்ட் இடம் பேசியதை எல்லாம் சொல்லி விட்டு.,  அவன் மறுபடி மாற்றி பேசியதையும் சொன்னாள்.,

        ஆனாலும்அவர்கள் அப்படி தவறான முயற்சி செய்ய தான்., நான் வெளியே வந்தேன்என்று சொன்னவள்.,

       “என்னால் அந்த குடும்பத்திற்கு எந்த தப்பான பெயரும் வந்து விடக்கூடாது.,  ஒருவேளை அன்று அவர்கள் ஏதாவது செய்து கொண்டிருந்தால்., மற்றவர்கள் என்னை தானே குறை சொல்வார்கள்.,  வீட்டில் வேறு யாரும்  இல்லை அப்படிங்கும்  போது.,  அவர்கள் மகள் அவர்களுக்கு தானே சப்போர்ட் செய்வார்கள்., எங்கம்மா இப்படி போனதுக்கு காரணம் இவ தான்.,

        எங்க அம்மாவா இவ இப்படி பேசினா அப்படி பேசினா ன்னு சொன்ன என்ன ஆகும்.,  அப்படி ஒரு சிட்டுவேஷன் ல்ல அவங்க சொல்றது தான் அங்கே ஏற்றுக் கொள்வாங்க., அது மட்டுமில்லாம ஏழை சொல் அம்பலம் ஏறாது., என்பது எல்லாருக்கும் தெரியும்.,  அவங்க வார்த்தை எப்படினாலும் மாத்தி பேசுவாங்க., பணம் பாதாளம் வரை பாயும்., ,

       இன்னைக்கு இப்படி பேசுறவங்க., நாளைக்கு எப்படினாலும் பேசி அவர்களுக்கு சாதகமாக மாற்ற வாய்ப்பு இருக்கு., அப்படி ஒரு சிச்சுவேஷன் ல்ல நான் இருந்து இருந்தா., அதனால் அவங்க  ஏதும் பண்ணிகிட்டானா., என்னைய விட எங்க அப்பா அம்மா ரொம்ப பாதிக்கப்படுவாங்க.,

      அது மட்டும் இல்லாம., நான் வேண்டாம் தகுதிக்கு மீறிய இடம் பார்க்காதீங்க என்று சொல்லும் போது எங்கப்பா அம்மாவும் கேட்கல இல்ல.,  அந்த கோபம்.,  அது மட்டும் இல்லாம  எனக்கு அவங்க ஜாதகம் பார்த்தது.,  ஜாதகம் பலன் எதுவுமே தெரியாது.,  அட்லீஸ்ட் கல்யாணத்துக்கு அப்புறம் அதை என் ஹஸ்பன்ட் என்கிட்ட சொல்லி இருக்கலாம்., இப்படி இப்படி எல்லாம் சொன்னாங்க ன்னு சொல்லி இருக்கலாம்.,

       சொல்லி இருந்தாங்கன்னா., அட்லீஸ்ட் அவங்க என் முன்னாடி இந்த மாதிரி கேட்கும் போது.,  எனக்கு தெரியுமே ஹஸ்பண்ட் சொல்லிட்டாரு ன்னு.,  ஒரு வார்த்தை தைரியமா பேசியிருப்பேன்.,  ஆனா அவங்க சொல்லும் போது என்னால அந்த ஷாக் இருந்து வெளிய வரவே முடியல..,

      ஏன்னா நான் நினைத்தது.,  இவங்க என்னை புடிச்சு தான் கல்யாணம் பண்ணாங்க ன்னு“., சொல்லி தன் கதைகளை ஏற்கனவே சொல்லி இருந்ததைப் பற்றி  பெரியம்மா சொல்லிக் கொண்டிருந்தார்.,

           அவனும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான் வீட்டில் நடந்தவைகளை யோசித்துக் கொண்டே இருந்தவன்., ‘இதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன்என்ற எண்ணத்தோடு அதன் பிறகுநான் பாத்துக்குறேன்மா.,  கண்டிப்பா இனிமேல் இந்த மாதிரி நடக்க விட மாட்டேன்“., என்று அந்த அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

         மீண்டும் பழைய கதை தொடங்கியது  “நல்லவேளை அவளுக்கு மசக்கை எதுவும் கிடையாது“.,என்றார் பெரியம்மா.,

      ” இல்லாட்டி அவள் மிகவும் கஷ்டப்பட்டு இருப்பாள்., துவண்டு போய் இருப்பாள்.,  ஆனால் டெலிவரி நேரத்தில் அதிகமாகவே திணறி விட்டாள்., என்ன செய்ய முடியும்., எதுவும் செய்ய முடியாத சூழல் அதனால் தான் வேறு வழியில்லாமல் சிசேரியன் பண்ணி குழந்தை எடுத்தோம்., 

      சிசேரியன் முடிஞ்ச பிறகு ரெண்டு மாசம் ரொம்ப கஷ்டப்பட்டா.,  அவளால எந்திரிச்சு சரியா கூட நடக்க முடியாது.,   ஆபிஸ்ல லீவுல தான் இருந்தா., முதல்  ஆறு மாசம் வரைக்கும் லீவுல தான் இருந்தா. நான் இப்ப தான்  ஆபீஸ் வேலையை வீட்டிலிருந்து பார்க்குறா., அதுவும் குழந்தைக்காகத் தான் இல்லாட்டி அவன் விடவே மாட்டான்.,

              என்ன பண்ண அவர்கள் டீம் வொர்க் பாக்கணும்ன்னு சொன்னா., நாம ஏதாவது சொன்னா கேக்க மாட்டா., வேலையில் கரெக்டா இருக்கா“., என்றார் பெரியம்மா.,

          உடனே அவர் மகனோநான் உங்க வீட்ல தங்குவதற்கு சாப்பாட்டு செலவுக்கு நான் தான் தருவேன் ன்னு பேரம் பேசித்தான் இந்த வீட்டுக்குள்ள வந்தா., ரொம்ப சுயமரியாதை பாக்குற பொண்ணு.,

         அப்படி இருக்கும் போது நீங்களும் பாத்துக்கணும்., ஏதோ கெட்ட நேரம் போல., அவளுக்கு உங்களை பற்றின சரியான புரிதல் இருந்திருந்தா., இந்த பிரச்சினை வந்திருக்காது“.,  என்று அந்த அண்ணன் சொன்னார்.

       வினோத்தும் பிரசாத் ம்  அமைதியாக இருந்தனர்., பிரசாத் தான்நான் தான் தப்பு பண்ணிட்டேன் சார்.., அவகிட்ட சொல்லிட்டு போய் இருக்கனும்.,  ஒன்னு நான் இந்த எலக்சன்ல ஜெயிச்ச பிறகாவது., உண்மையை சொல்லி இருக்கணும்., 

       லீவுமுடிஞ்சது தெரிஞ்ச அப்பவே அவளை  கூட்டிட்டு சென்னை போயிருக்கனும்.,  நீ சென்னைல வேலையே கன்டினியூ பண்ணு ன்னு சொல்லி இருக்கணும்., தப்பு பண்ணிட்டேன்., அப்பவே சென்னை வேலையை ஜாயின் பண்ண சொல்லி இருந்தா., நிச்சயமா சென்னைக்கு போய் இருப்பா., வேற எங்கேயும் போயிருந்திருக்க  மாட்டா.., சரி என்கிட்ட பேசல., அவங்க வீட்டுல யார் கிட்டேயும் பேசல., அவ  பிரெண்ட்ஸ் கூட பேசவில்லை“., என்று சொன்னான்.

       “ஆமா தம்பி நானும் கேட்டேன்.,வேற யார்ட்டயாவது சொல்லனுமா“., என்று கேட்டதற்கு அவ சொல்லிட்டா“., “என் ஃப்ரெண்டுக்கு தெரிஞ்ச வீட்டுல உளறிருவாங்க.,  ரதியும் குழலியும்  அப்படித்தான்“., என்று சொன்னாள்.

         “அதனால தான் சொல்லலை ன்னு சொன்னா.., மத்தபடி ஒன்னும் பிரச்சனை இல்லை“., என்று சொல்லி ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தனர்.

        அதற்குள் குழந்தை தூங்கி இருக்க குழந்தையை தன் மடியில் வைத்திருந்தாள்., அவர்கள் பேச பேச அத்தனையும் அவள் கண்முன் வந்து சென்றது போல இருந்தது.,

        அவளுக்கோஉண்மைதான் அந்த ஆட்டோ அண்ணன் சொன்னது போல, பிரச்சினைகளை தள்ளிவைத்து பார்த்து இருந்தால்., அப்போதே சென்னைக்கு போய் இருப்பேனோ‘., என்று தோன்றியது.

        ‘காலம் கடந்த ஞானோதயத்தால் என்ன பயன்., எல்லாம் முடிந்து போயிற்று.,  இத்தனை நாள் பிரிவுகள் இருவருக்கும் வலி தான்‘., என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே வெளியே வினோத் பேசும் சத்தம் கேட்டது.

        “அது மட்டும் இல்லமா., உண்மையிலே எங்க எல்லாருக்கும் வருத்தம் தான்., ஏன்னா இவ பண்ணுனது அப்படி.,  கோபம் இருக்கும்., வெளியே வரனும் ன்னு  தோன்றினா.,  வீட்டுக்கு வந்து இருக்கனும்., ஒன்னும் இல்லன்னா எங்க யார்ட்டையாவது விஷயத்தை சொல்லி இருக்கணும்.,

        அல்லது சென்னையில் பிரண்ட்ஸ் கூட போயிருக்கணும்., தெரியாத இடத்துக்கு எங்க போனா., என்ன ஆனா ன்னு தெரியாமல்.,  இப்போ உள்ள காலகட்டத்தில் வெளியே யாரை நம்ப முடியுது., நல்ல நேரத்திற்கு இப்ப இங்க பாதுக்காப்பா இருக்கா.,  வரசான பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லாத சிட்டுவேஷன் .,

        இவர் கிளம்பி வந்துட்டா., நாங்க எதுக்குன்னு பயப்படுறது ன்னு சொல்லுங்க., சரி எங்க மேல தானே கோபம் அவளுக்கு., எங்க மேல உள்ள கோவத்தை பாட்டிட்ட ஏன் காட்டனும்.,
அவங்க ட்ட சொல்லி இருக்கலாமே.,

           இவர் என்ன பண்ணாரு“.,என்று பிரசாத்தை காட்டி கேட்டவன்.,  “இவர் மேல பாசம் எல்லாம்  இல்லாம தான் இவ்வளவு நேரம் கட்டி புடிச்சிட்டு அழுதாளாஅந்த பாசம் அவளுக்கு தெரியலையாம்மா., அவர் கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும் தோணலையா..,

        அட்லீஸ்ட் போன் பண்ணி., ஒரு வார்த்தை.,  எனக்கு பிரச்சினையா இருக்கு.,  என்னால இங்கே இருக்க முடியாது.,  நான் போறேன்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்ல.,   நான் சென்னை வரேன்னு சொல்லி இருந்தா., இவர் சென்னையில் தான் இருக்காரு.,  வெயிட் பண்ணி அவளை கூப்பிட்டு அங்கேயே செட்டில் பண்ணி இருப்பாரு இல்ல..,

      அப்படியே இல்லனா உனக்கு போகனும் நினைச்சா.,உன் பிரெண்ட்ஸ் கூட போய் உட்கார்ந்து இருக்க வேண்டியது தானே.,

         அவ யாரை பத்தியும் யோசிக்கலை அதுதான் உண்மை., அவளுக்கு அந்த நேரத்துல அவங்க சொன்ன வார்த்தைகளும்., அவங்க சொன்ன பேசிய தேவையில்லாத விஷயங்கள் மட்டும் தான் பெருசா தெரிஞ்சு இருக்கு..,

            கூட பிறந்தவங்க பெத்தவங்க, யாரையும் இவ  யோசிக்கலையே., இவளை மட்டுமே நினைத்து கல்யாணம் பண்ணிகிட்ட இந்த மனுஷன கூட அவளுக்கு தெரியலை.,

        சரி இதை விட பெரிய விஷயம் ஒன்னும் யோசிக்கணும்., அப்ப தான் இவர் எம்எல்ஏ ஆகி இருக்காரு., அந்த நேரத்தில் இப்படி பண்ணினா.,  பாக்குறாங்க தப்பா சொல்லுவாங்க ன்னு கூடவா ஒரு பொண்ணுக்கு தெரியாது.,  அதை கூட யோசிக்கல பாருங்களேன்.,  அதுதான் எங்களுக்கு எல்லாம் வருத்தம்..,  என்ன சொல்வாங்க..,  இது வரைக்கும் வெளியே தெரியாமல் காப்பாத்திட்டாங்க.,

வெளியே தெரிந்தா இவரோட மரியாதை என்ன ஆயிருக்கும்., இப்பவும் இவளை.,  குழந்தையோட அங்க கூட்டிட்டு போனா எல்லாரும் கேப்பாங்க.., ஏன் குழந்தை பிறந்தது கூட சொல்லலை., ஏன் பெயர் வைக்கிற பங்ஷன் சொல்லலை.,  ஏன் வளைகாப்பு நடத்தலை ன்னு கேட்பாங்க.,  என்ன காரணம் சொல்ல முடியும் சொல்லுங்க.., 

      ஒரு பொண்ணு ஒரு வீட்டை விட்டு வெளியே போறா., அப்படினா., அவளுக்குப் பின்னே அவ மட்டும் இல்ல.,  அவளுக்கு பின்னாடி மொத்த குடும்பமும் இருக்கு.,  பொண்ணோ., ஆணோ., யாரா இருந்தாலும் வீட்டை விட்டு வெளியே இறங்குறதுக்கு முன்னாடி.,  தன்னை சுத்தி இருக்க தன் குடும்பத்தை பற்றி ஒரு நிமிஷம் யோசிக்கனும்., கேட்குறவங்களுக்கு என்ன பதில் சொல்லுவாங்க.,  யாருக்கும் ஏதும்னா என்ன செய்ய முடியும் ன்னு.,  யோசித்திருக்க வேண்டாமா..,

        அந்த விதத்தில் நான் எங்க அம்மா அப்பா மேல ரொம்ப வருத்தத்தோட இருக்கேன்.., இவளை வளர்த்த விதம் சரியில்லை.,  ஒரே பொண்ணு செல்லம் குடுத்துட்டாங்க.., அதுக்கு எங்க பாட்டி தான் முழுக்க முழுக்க காரணம்.., இவ கேட்கிறது எல்லாம் வாங்கிக் கொடுக்கறது., அவ இஷ்டப்படி விடுறது எல்லாமே அவங்க தான் இவளுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க..,

ஆனால் பாட்டி ட்ட கூட சொல்லல.,  இவ எதையுமே யோசிக்காமல் இப்படி பண்ணிட்டா.,  இப்ப  பாட்டி க்கு தான் இப்போ உடம்பு சரியில்ல.., பாட்டியோட சமாளிக்க கஷ்டமா இருக்கு., பாட்டி தான் இப்பவும் ரொம்ப தீவிரமா  எனக்கு என் பேத்தியை பார்த்தே ஆகனும் ன்னு., சண்டை பிடிச்சு பயங்கர பிரச்சினை பண்ணி“..,  என்று சொல்லி வீட்டில் நடந்தவைகளை சொன்னான்.

       அனைவரும் பாட்டின் பாசத்தை சற்று வியப்பாக நோக்கினர்.,  “இதே பாட்டி கொஞ்சம் முன்னாடி இந்த பிரச்சினையை பேசி இருந்தா., நாங்க அப்பவே வந்து இருப்போமே ன்னு  இப்போ சில நேரம் ஃபீல் பண்ணி வைக்கிறாங்க“., என்றான்.

      “என்ன பண்ண இப்படி தான் ஆகணும் விதி இருக்கும் போது ஒன்னும் பண்ண முடியாதுஎன்று ஆளாளுக்கு மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

         விதி தன் விளையாட்டை நிறுத்திக்கொண்டதா., தொடர்கிறதா என்பதை தெரியாமலேயே அங்கு வீட்டிலுள்ளவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்..

நிலவு தேய்ந்து வளர்ந்தாலும்
அதே இடத்தில்
அப்படியே தான் இருக்கும்.,
பார்வைக்கு மட்டுமே மறையும் 

அப்படித்தானடி
உன் மீது கொண்ட அன்பும்
மற்றவர் பார்வைக்கு
தேய்வதும் வளர்வதும்
ஆக தெரிந்தாலும்., 
இன்னும் முழுமையாக
அப்படியே இருக்கிறது
மொத்தமாக உனக்கு
மட்டும் சொந்தமாக..,

Advertisement