Advertisement

17

மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை.
அவன் தன்னைத் தானே அழித்துக்கொள்கிறான்.
புத்தர்


         மாமியார் சண்டையிட்டு கத்திய பிறகு., அறைக்கு வந்தவளுக்கு அழுகை வந்தாலும்., இனி இருக்கக் கூடாது என்ற எண்ணம் தான் தோன்றியது.,

             முதலில் அவனுக்கு மட்டும் சொல்லி விட்டு இங்கிருந்து சென்னை போய் விடலாம்., அங்கேயே வேலையை கண்டினியு பண்ணலாம்  என்று  யோசித்திருந்தாலும்.,

          மாமியார் சொன்ன வார்த்தைகள்., காதில் ஒலித்து கொண்டே  இருந்தது.,

         “நீ போய்த் தொலைஞ்சா தான்.,  நான் என் பையனுக்கு.,  என் குடும்ப கௌரவத்திற்கு ஏற்றாற் போல  கல்யாணம் பண்ணி விடுவேன்னு“.,  சொன்னார்கள்.,

       “என் மகன் ஒன்னும் உன்ன ரொம்ப விரும்பி எல்லாம் கல்யாணம் பண்ணல“.,  என்று மீண்டும் மீண்டும் சொல்லவே.,

          ‘ஒருவேளை அவனுக்கு விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டானோ‘.,  என்ற எண்ணம் வேறு அவளுக்கு அதிகம் இருந்தது.,

         எனவே தான்சரி என்று கிளம்பி சென்று விடலாம்என்று நினைக்கும் போது தான் பெங்களூரில் இருந்த  கல்லூரித் தோழியின் நினைவு வந்தது.,

         எனவே அங்கு செல்லலாம் என்ற எண்ணத்தோடு தான் சுந்தரி அம்மாவின் போனிலிருந்து அழைத்துப் பேசியவள்.,   அவள் நம்பரை மட்டும் செல்லில் இருந்து எடுத்து  கையில் பேப்பரில் குறித்துக் கொண்டு., தன்னுடைய சிம்மை அப்போதே உடைத்து வீசி எறிந்தாள்.,

      இனி யாரையும் தொடர்பு கொள்ள  வேண்டாம் என்ற எண்ணத்தோடு.


          அங்கிருந்து சுந்தரி அம்மா பிடித்துக் கொடுத்த ஆட்டோவில் தான் கிளம்பி இருந்தாள். அதே தெருவின் முக்கில் எப்போதும் நிற்கும் ஆட்டோ தான் அது.,

              நேராக பஸ் ஸ்டாண்டில் வந்து ஆட்டோ டிரைவர் விட.,  அவருக்கு நன்றி சொல்லி பணம் கொடுத்தாள்.,

       “ஏன் ம்மா எங்க போறீங்க., சார் நேத்து தானே பதவி ஏற்றிருக்காங்க“.,  என்று ஆட்டோ டிரைவர் கேட்டார்.

       “சிரித்தபடி வேலை பார்க்கிற இடத்துக்கு“., என்று மட்டும் சொன்னாள்.

        ஏதோ மத்திம வயதில் இருந்தாலும் ஒரு பெண்ணின் வருத்தங்களை முகம்  பார்த்து அறிந்தவர் போல., இவர்கள் வீடு போன்ற வீட்டிலிருந்து வெளியேறும் ஒரு பெண்., எந்த மனநிலையில் இருப்பாள் என்பதையும் புரிந்தவரால்..,

        முகம் வாடி நின்றவளைப் புரிந்துகொள்ள முடிந்தது., “அம்மா கூட நூறு ரூபாய் சேர்த்து தரீங்களா“., என்று கேட்டார்.,

         அவள் இருந்த மனநிலையில் எதையும் யோசிக்காமல்.,  தன் கையிலிருந்து கூடுதலாக ரூபாய் எடுத்துக் கொடுத்தாள்.

           “ஒரு நிமிஷம் இருங்கம்மா“., என்று சொல்லிவிட்டு வேகமாக சென்றவர்.,

        அவளுக்கான இரவு உணவையும் தண்ணீர் பாட்டிலையும் வாங்கி., அவள் கையில் கொண்டு வந்து கொடுத்து விட்டுபார்த்தா சாப்பிடாத மாதிரி இருக்கீங்க.,  அப்படி எல்லாம் இருக்காதீங்க., வாழ்க்கை என்பது எல்லா இடத்திலேயும் நமக்காக ஒரு பாதையோடு காத்திருக்கும்.,  வாழ தெரிந்தவனுக்கு வாழ்க பக்கத்திலேயே தான் இருக்கும்.,  நீங்க  நம்பிக்கையோட எல்லாத்தையும் செய்ங்க., உங்களுக்கு பிடிச்ச காரியத்தில் இறங்குங்க., எதுவும் உங்களுக்கு தோத்துப் போகாது“., என்று அவள் முகத்தை பார்த்தபடி கூறினார்.,

         அவளும் சிரித்தபடிதேங்க்ஸ் அண்ணா“., என்றாள்.

            “இருக்கட்டும் மா., ஆனால் எந்த விதமான தப்பான முடிவுக்கும் போக மாட்டேன் ன்னு., நீங்க உறுதி சொல்லுங்க“.,  என்று அந்த ஆட்டோ டிரைவர் கேட்டார்.

      அவளோ மனதிலிருந்த கஷ்டத்தோடுஎன்ன பார்த்தா அப்படியா இருக்கு‘., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள்.

     நிச்சயமாகநான் அந்த மாதிரி கண்டிப்பா எதுவும் யோசிக்க மாட்டேன்., நான் வேலை பாக்கிற இடத்துக்கு தான் போறேன்“., என்று சொன்னாள்.

        அவரிடம் சொல்லி அவள் பெங்களூர் பஸ் ஏற போக., பிரசாத் தெருவில் இருந்த ஆட்டோ ஸ்டாண்ட் என்பதால்., “அந்த பொண்ணு மெட்ராஸில் வேலை பார்க்கிற பொண்ணுஎன்று கல்யாணத்தப்ப பேசிக்கொண்டிருந்தது.,

     அவருக்கும் தெரியும் என்பதால்இந்த பொண்ண மெட்ராஸ் பஸ்ல ஏறாம., பெங்களூர் பஸ்ல ஏற போகுதே‘.,  என்ற எண்ணத்தோடு..,

       “ஏம்மா வேலை பாக்குற இடத்துக்கு போறேன்னு சொன்னீயே“., என்று கேட்டார்.

        “வேற வேலைக்கு போறேன்., அதே இடத்தில் வேலை பாக்க முடியாது இல்ல அதனால தான்“.,  என்று சொன்னாள்.

        அவரோஎங்கிருந்தாலும் பத்திரமா இருமா.., பிரச்சினையை கொஞ்ச நாள் கழித்து யோசித்தா  ஒண்ணுமே இல்லாத மாதிரி தெரியும்“., என்று சொன்னவர்.,

           “சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதமா., உன்ன விட வயசுல மூத்தவன்., என்னோட அனுபவத்தில்  நான் சொல்றேன் மா.., வாழ்க்கையில பிரச்சினை என்கிறது ஒரு கல்லு மாதிரி தான்., நீ பக்கத்துல வச்சி பார்க்கும் போது அது உனக்கு பெருசா தெரியும்., அதையே கொஞ்சம் தள்ளி வைத்து பாரேன்.., உனக்கு அதை பிரச்சனை எல்லாம் தூசு மாதிரி தெரியும்.,அப்படித்தான் இதுவும்,

       கல்யாணம் ஆனா குடும்பத்துக்குள்ள பிரச்சினை வரத்தான் செய்யும்., பெரிய இடத்துக்கு கல்யாணம் ஆகி வரும் போது நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது இருக்கதான் செய்யும்.,

       “என் தங்கச்சியா  நினைச்சு தான் அட்வைஸ் பண்ண தப்பா எடுத்துக்காத மாஎன்று அவள் பஸ் ஏறுவதற்கு முன் அவளை நிறுத்தி பேசி இருந்தார் அந்த ஆட்டோ டிரைவர்.,

        உண்மைதான் போலும் என்று அடிக்கடி அவள் நினைத்துக் கொள்ளும் வார்த்தை அது.,  அங்கு இருந்த வரை பிரச்சனை பூதாகரமாக மனம் முழுவதும் அழுத்தம் தெரிந்தது..,

        “நான் செய்தது தவறு தானோ., வந்திருக்க கூடாதோ“., என்று யோசிக்கும் மனநிலைக்கு கொண்டு வந்து அவளை விட்டிருந்தது.,

            அதைப் பற்றியும் ஏற்கனவே பெரியம்மாவிடம் சொல்லி இருந்ததால் அதை முதற்கொண்டு சொல்ல வினோத்தும் பிரசாத்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

      “என்னஎன்று பெரியம்மா கேட்டார்.

          “இல்ல நாங்க சுந்தரி அம்மா ட்ட  விசாரிச்சோம்., அவ எப்படி போனா ன்னு.,   சுந்தரி அம்மாவும் சொன்னாங்க..,  ஆட்டோல போனாங்கன்னு., ஆனா நான் அதை விசாரிக்காமல் போயிட்டேன்., ஒருவேளை அன்னைக்கே ஆட்டோ டிரைவரை பிடித்து கேட்டிருந்தால் இவ பெங்களூர் பஸ் ஏறினது தெரிந்திருக்குமோ“., என்று கேட்டுக் கொண்டிருந்தான் பிரசாத்.,

        பெங்களூர் பஸ் ஏறும் முன் ஆட்டோ டிரைவரிடம் போன் வாங்கி மீண்டும் தன் தோழிக்கு அழைத்தவள்., “பஸ் ஏறி விட்டேன்“., என்று சொன்னாள்.

        காலையில் அவள் பஸ் ஸ்டாப்பிற்கு வந்து விடுவதாக சொன்ன பிறகே ஆட்டோ டிரைவரிடம் போனை கொடுத்தாள்.

       மீண்டும் போனை வாங்கி  போனில் நம்பரை டெலிட் செய்ய போகும் போது ஆட்டோ டிரைவர் தான்., “இல்லம்மா இந்த நம்பரை நான் டெலிட் பண்ணிக்கிறேன்.,  நாளை காலைல நீங்க போய் சேர்ந்துட்டீங்களா.,  இல்லையான்னு., நான் கேட்டதுக்கு அப்புறம் டெலிட் பண்ணிக்கிறேன்“., என்று சொன்னார்.

          அவளும் சரி என்று தலையை அசைத்தபடி பஸ்ஸில் ஏறினாள். இரவு உணவுக்காக நிறுத்தும் போது சாப்பிட வேண்டாம் என்று தோன்றினாலும்.,  ஏனோ சாப்பிடவேண்டும் போல பசி அதிகமாக இருக்க., அவர் வாங்கிக் கொடுத்த உணவை உண்ட படி அவர் சொல்லியதை தான் யோசித்துக் கொண்டிருந்தாள்.,

       ‘ஒருவர் முகத்தை பார்த்தே ஒருவரால் எடை போட முடியுமாஎன்று கேட்டால்அது ஒரு சிலரால் முடியும்.,  கஷ்டங்களையும் நல்லது கெட்டதையும் அதிகமாக சந்தித்தவர்களால்  நிச்சயமாக முடியும் போல.,  அவர்கள் முகம் என்ன சொல்கிறது., அவர்கள் குரல் என்ன சொல்கிறது என்று..,   அப்படித்தான் அந்த ஆட்டோ டிரைவரும் கண்டிருப்பார் போலும்‘.., என்று நினைத்துக் கொண்டாள்.

       அது போலவே மறுநாள் காலை பெங்களூரில் வந்து இறங்க.., தோழி காத்திருந்து அவளை அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.

             அதன்பிறகு அண்ணனின் மனைவிக்காக பூனாவில் இருந்த தாயை அழைத்து., “தன் கல்லூரி தோழியை அங்கே அனுப்புவதாகவும்., அவளுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்த பின்னரே அங்கே அனுப்பி வைப்பதாகவும் சொன்னாள்.,  அது மட்டுமல்லாமல் அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்“., என்று சொன்னவள்.,

        சில கட்டளைகளை பிறப்பித்து இருந்தால்., ஏன் எதற்கு என்று அவள் அம்மா கேட்கும் போது.,

      “அவளின் வீட்டில் மாமியாருக்கும் அவளுக்கும் பிரச்சினை என்றும்., அவள் நம்மைப் போல சாதாரண மிடில்க்ளாஸ் குடும்பம் என்றும்., அவளை திருமணம் செய்து கொடுத்து இருப்பது ஒரு பெரிய குடும்பம் என்றும்., அங்கு அவளுக்கு சில பிரச்சினைகள் இருக்கிறது அதனால் அவளை நீங்கள் பார்த்துக் கொள்ளவேண்டும்“., என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

        ஏனென்றால் அந்த சமயம் தான் தோழி தன் கணவன் வெளிநாட்டில் இருப்பதால்.,  தன் கணவனோடு போய் இருப்பதற்காக விசா எல்லாம் அப்ளை செய்து தயாராக வைத்திருந்தாள்.,

      அது மட்டுமல்லாமல் தோழி கொஞ்சம் பெண்ணியம் பேசுபவள்., யாரும்., யாருக்கும் அடிமை அல்ல என்ற எண்ணத்தில் இருப்பவள்., அதையே நன்றாக ஹேமாவிற்கு உரைக்கும் படி அறிவுரை சொல்லி தான்.., அவளை தன் தாயை வரச் சொல்லி அனுப்பி வைத்தாள்.

      முதல்நாள் பிளைட்டில் வந்து மகளை பிளைட் ஏற்றி அனுப்பிவிட்டு., அதன் பின்பே ஹேமாவை இங்கிருந்து அழைத்துக்கொண்டு சென்றார்.,

         அதற்கிடையில் அவள் பூனாவில் வேலையில் சேர.,  அந்த சமயத்தில் தான் அவள் கருவுற்றிருப்பது தெரிந்ததும்..,  வீட்டில் அவர்கள் நன்றாக பார்த்துக் கொண்டாலும்..,அவர் மனம் அடிக்கடி பிரசாத்தை தேடியதை உணர்ந்தார்கள்.

      அப்போது தான் வீட்டில் சொல்வோமா.,  உன் ஹஸ்பன்ட் க்கு மட்டுமாவது சொல்லுவோமா“., என்று கேட்டார்.,

       மாமியாரின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் எதிரொலிக்க., “வேண்டாம் நானே பாத்துக்கிறேன்., உங்களுக்கு நான் இங்க இருக்குது டிஸ்டர்பன்ஸ் இருந்தா சொல்லுங்க., நான் தனியா ஒரு வீடு எடுத்து கூட பக்கத்துல இருந்துக்கிறேன்“., என்று சொன்னாள்.

        அவள் தோழியின் அண்ணி தான்.,  “உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சு இருக்கு.,  உனக்கு என்ன குறை., நீ எதுக்கு இப்ப போறேன்னு சொல்றே., நைட் உங்க அண்ணன் பேசும் போது சொல்லு., அவங்க சொல்லட்டும்“.,  என்று சத்தமாக சொன்னாள்.,

            “இல்ல., நான் அவங்க வீட்டுக்கு யாருக்கும் எந்த தகவலும் சொல்ல விரும்பல“., என்று சொல்லும் போது தோழியின் அம்மா மீண்டும் கேட்டார்.,

          “இல்லம்மா குழந்தை  விஷயத்தை சொல்லலைன்னா., கண்டிப்பாக ஹஸ்பண்டுக்கு கோபம் வரும்“., என்று சொன்னார்.,

         அவருக்கு கோபம் வரும் தான் மா., ஆனா அவங்க அம்மாக்கு தெரிஞ்சா.,  பிள்ளையை காட்டி என் பையனை மயக்க பார்க்குறீயா ன்னு  தான் சொல்லுவாங்க“.,  என்று சொன்னவள் தான்.,

          அன்று வீட்டில் நடந்த சண்டையை அவர்களுக்கு இலேசாக கோடிட்டு காட்டி  இருந்தாள்.,

    

Advertisement