Advertisement

இவளும் அவன் முதுகில் கை கொடுத்து., அவன் சட்டையை இறுக்கமாக பிடித்துக் கொண்டவள்.,

      அவன் மார்போடு முகம் புதைக்க., சற்று நேரத்தில் அவள் முதுகு குலுங்குவதை வைத்து மட்டும் அவள் அழுகிறாள்., என்பதை வீட்டினரும் சரி., வினோத்தும் சரி., புரிந்துகொண்டனர்.

          பிரசாத் கண்கலங்கி கண்ணீர் வடித்தாலும் கட்டுப்படுத்தி கொண்டவன்., அவள் முதுகை நிதானமாக தட்டிக் கொடுத்தான்., சற்று நேரம் அழவிட்டவர்கள்., அதன் பிறகு அவள் அழுவதை நிறுத்த சொன்னார்கள்.

      அதே நேரம் வீட்டில்  பெரியம்மா.,  வேகமாக வந்து அவளை முதுகை தடவி., “ஹேமா அங்க பாரு நீ அழக்கூடாது சொல்லி இருக்கேன்ல.,  உன் ஹெல்த் முக்கியம்.,   நீ இப்படி எல்லாம் அழுதா எப்படி.,   தலைவலி வரக் கூடாது சொன்னா கேளு“., என்று சொல்லி முதுகை தடவி கொடுத்த படி இருந்தவர்.,  கொஞ்சம் பொறுங்க.., என்று சொல்லி அவளை இழுத்து ஒரு இருக்கையில் அமர வைத்தார்.,

      அதே நேரம்  வீட்டில் இருந்த அண்ணன் மனைவியிடம் சொல்லி அவளுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வரும்படி சொன்னார்.

           அவள் முகத்தை நிமிர்த்தியவர் துடைத்து விட்டு., கண்ணீர் வர  விடக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்லையா“.,என்றபடி   கன்னத்தில் வினோத் கை தடத்தை பார்த்தவர் ஐஸ் எடுத்து வரச் சொல்லி ஒத்தடம் கொடுத்தபடி., “இப்படியா அடிப்பீங்கஎன்று சொன்னவர்.

       “தம்பி உட்காருங்க பேசலாம்என்று சொன்னார்.

      அதற்குள் அவர்களுக்கும் குடிக்க வர பிரசாத்., அவளை தான் பார்த்துக் கொண்டே இருந்தான்., உடல் நன்றாக மெலிந்திருந்தாள்., முகமும் வெளிரி தான் இருந்தது..,  எப்போதும் இருப்பதை விட சற்று அழகாகவும் தெரிந்தாள்., ஆனால் அந்த மெலிவும் முகமும் மட்டும் தான் வித்தியாசமாக இருந்தது..

        அவளுக்கு என்ன செய்கிறது என்ற எண்ணம்.,  அவனுக்கு படபடப்பை அழித்தாலும் சற்று நேரத்தில் பெரியம்மா அவளுக்கு குடிக்க பாலை  பெரிய டம்ளர் நிறைய கொடுத்தார்.

     குடிச்சிட்டு ரூமுக்கு போ கொஞ்ச நேரம் படு., முதல்ல ஜலதோஷம் பிடித்து விடக்கூடாது., உன் ஆபீஸ்ல பெர்மிஷன் கொடுத்திருக்கிறாங்க தானே., அப்புறம் என்ன ஒர்க்க மெதுவா பாரு., இங்கே நான் பாக்குறேன்“., சொன்னவர்.

          “இந்த அழுகையோட லேப்டாப் கையில் எடுத்தால்., கூட கொஞ்சம் தலைவலி வரும் புரியுதா“., என்று சொல்லி சத்தம் போட்டவர் அவளை  அறைக்குள் அனுப்பினார்..

                அதே நேரம் பெரியம்மாவின் அறையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்கவும்., பெரியம்மா தான் வேகமாக உள்ளே சென்றவர்.

        குழந்தையை தூக்கித் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்துக் கொண்டே வந்தார்.,

       அழுகை அடங்கி சாதாரணமாக சிரித்து விளையாட தொடங்கிய பிறகு பிரசாத்தின் அருகில் வந்தவர்.,

        “இந்தா  பிடிப்பா “., என்று கொடுக்க

  குழந்தையை சற்றே ஆனந்த அதிர்வோடு பார்த்தவன் பெரியம்மாவை பார்த்துக் கொண்டிருந்தான்.

       ” உங்களை  பாத்த உடனே எங்களால அடையாளம் கண்டு பிடிக்க முடிஞ்சுச்சு.,  அப்படின்னா காரணம் யாருன்னு நினைக்கிறீங்க., உங்க பையன தவற யாரும் இல்ல., ஏன்னா நாங்க உங்க குடும்பத்துல யாரையுமே பார்த்தது கிடையாது., அவளும் எங்ககிட்ட யாரையும் சொன்னது கிடையாது.,  ஆனால் இந்த தம்பி வந்து ஹேமா என்று கேட்கும் போது கூட..,  இவங்க யாருன்னு நான் யோசிச்சேன்.,

       ஆனா உங்கள பார்த்தவுடன் எங்க குடும்பத்தில் அத்தனை பேருக்கும் அடையாளம் தெரிஞ்சுச்சு“.,என்று சொன்னவர்., “குழந்தைக்கு 8 மாதம் நடந்துட்டு இருக்குஎன்றவர்.,

         அமரச் சொல்லி அவன் கையில் அவனின் மகனை கொடுத்தார்., கிட்டத்தட்ட குழந்தைக்கு 8 மாதம் இவனை பற்றி தெரியாமல்., கையிலிருந்த குழந்தையை பார்த்தவனுக்கு மனமும் வேதனையில் நலுங்கியது.,

             ‘ நான் என்ன பாவம் செய்தேன்., குழந்தை அவள் வயிற்றில் இருக்கும் போது அவளுக்கு எதுவும் செய்து பார்க்க முடியாமல்., குழந்தை பிறந்ததிலிருந்து பார்க்காமல் 8 மாதம் ஆகிறது., அதுவும் தேடி வந்த பிறகு தானே தெரிகிறது., இவளுக்கு சொல்லனும் என்ற எண்ணம் இல்லை தானே‘., என்ற எண்ணத்தில் கோபம் வந்தாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.

      வினோத் சற்றுநேரம் குழந்தையை பார்த்து கொண்டிருந்தவனுக்கு., ‘பிரசாத் மனம் இப்போது என்ன பாடு படும்என்பது புரியதான் செய்தது., அவனிடம் இருந்து குழந்தையை தூக்க முயற்சி செய்ய., குழந்தையோ பிரசாத் மேல் சாய்ந்து கொண்டது.,

             தன்னோடு சேர்த்து பிடித்து கொண்டவன்., மனம் முழுவதும் வேதனையோடு.,

           ‘இத்தனை நாட்கள் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்ல வேண்டும்., என்று கூட அவளுக்கு தோன்றவில்லை தானேஎன்று மனதிற்குள் அவள் மேல் கோபம் வந்தாலும் அவள் உடம்பு மெலிவை பற்றி அவள் உடல்நிலையை பற்றி கேட்க தொடங்கியிருந்தான்.

     “அவளுக்கு என்ன செய்து.,ஏன் இப்படி இருக்குறா“., என்று பிரசாத் முதல் முறையாக வாயை திறந்தான்.

      பெரியம்மா தான்அவளுக்கு டெலிவரி சிசேரியன் தம்பி., அவளுக்கு எப்படி சொல்றது டெலிவரி ஆனதிலிருந்து பிளீடிங் பிராப்ளம் இருந்துக்கிட்டே இருந்துச்சு., யூட்ரஸ் ல் ஏதும் ப்ராப்ளமா இருக்குமோ ன்னு பயந்தோம்., ஆனா அதெல்லாம் எதுவும் இல்லை., கொஞ்ச நாள்ல சரியாயிடுச்சு.,

         ஆனாலும் அவ டென்ஷன் ஆகியே அவளை  வருத்திக்கிறா ன்னு எங்களுக்கு புரிஞ்சிச்சு., நாங்க டெலிவரி டைம்ல அட்ரஸ் குடு அப்படின்னு கேட்டோம்.,  இல்ல வேண்டாம்னு சொல்லிட்டா.,

        மனசுக்குள்ள ஒரு வைராக்கியத்துடன் வேண்டாம் அப்படின்னு சொன்னாலும்.., அவளுக்கு உங்களை தேடுது., அது எங்களுக்கும் புரியுது., ஆனா வாயை திறந்து ஒரு வார்த்தை கூட இதுவரைக்கும் சொல்லல..,  ஏன் இதுவரைக்கும் எங்க முன்னாடி அவ கண்ணு கலங்கி கூட நாங்க பார்த்தது கிடையாது.., பிள்ளைக்கு எதுவும் முடியல அப்படினா  மட்டும் தான் அவன் பதறுவா.,

       ஆனா இன்னைக்கு தான் உங்ககிட்ட சாய்ந்து அழுது இருக்கா“.,  என்று சொன்னார்.,

        குழந்தையை நன்னோடு சேர்த்தணைத்த படி அமர்ந்திருந்தவன்.. “அவ அப்ப இருந்து இப்ப வரைக்கும் வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லமாட்டா..,   அதுதான் எனக்கும் குறை“., என்று சொன்னவன்., “நான் அவளை பார்க்கட்டுமாஎன்றான் குழந்தையோடு எழுந்து கொண்டே.,

        “போய் பாருங்க தம்பி., அந்த ரூம்ல தான் இருப்பா“., என்று சொன்னார்.

        அவன் அறைக்குள் நுழைய இங்கு அவர்கள் வினோத்தோடு பேச தொடங்கினர்.,

        வினோத்திற்கு தான்இவர்கள் யார்.,  எப்படி தங்கள் வீட்டில் ஒருத்தியை போல அவளை பார்த்துக் கொள்கிறார்கள்‘.,  என்று யோசனையோடு அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

         அறைக்குள் வந்தவனோ இப்போதும் கண்ணீர் நிற்காமல் வடிய தலையணையில் தலை சாய்த்து அமர்ந்திருந்தவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

            மனம் முழுவதும் வலியோடு கண் மூடி சாய்ந்து இருப்பவளை பார்த்துக் கொண்டே இருந்தான்., ‘பிரிந்து வந்து இவள்  மட்டும் சந்தோஷமாகவா இருக்கிறாள்..,  எதற்கு தேவையில்லாமல் இந்த பிரிவு‘., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.,


      ‘என்னை அவ  நம்பல இல்லஎன்ற கோபம் மட்டும் அவனுக்கு கூடிக்கொண்டே இருந்தது., கையிலிருந்த குழந்தையை தன்னோடு சேர்த்து பிடித்துக் கொண்டவன்., ‘இந்த ஸ்பரிசத்தை இத்தனை நாள் கிடைக்காமல் செய்து விட்டாளே‘., என்ற வருத்தமும் அவனுக்கு அதிகரித்தே இருந்தது.

     ‘வாழ்க்கையில் எந்த இடத்தில் தவறு செய்தோம்‘., என்ற எண்ணம் அதிகமாக அதிகமாக அவன் கோபம் ஏறிக் கொண்டே செல்வதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.,

      ‘இல்லை இது கோபத்தை காட்டும் இடம் இல்லை.,  அவள் ஏற்கனவே உடல் நலம் சரி இல்லாமல் இருக்கிறாள்., அவள் மட்டும் என்ன சந்தோஷமாகவா இருந்திருப்பாள்., இந்த அம்மா வேற என்னெல்லாம் பேசினாங்கன்னு தெரியல‘., தன் அம்மாவையும் மனதில் திட்டி கொண்டவனுக்கு கோபம் அதிகரிக்கத்தான் செய்தது போல இருந்தது.,

         அவன் பார்வையின் வீரியமா., இல்லை எண்ணங்களின் வீரியமோ.,  கண்விழித்து சாய்ந்திருந்தவளிடம் சிறு அசைவு தெரிந்தது., அதே நேரம் குழந்தையும் சத்தம் போட கேட்டு கண் விழித்தாள்.,

        குழந்தையின் சத்தம் கேட்டு கண் விழித்தவள் கையில் குழந்தையுடன் நிற்கும் பிரசாத்தை பார்த்துக் கொண்டே இருந்தாள்.

          அவள் எழுந்து கொள்ள முயலவும் உக்காரு என்று சொன்னவன்., அருகில் போய் அமர்ந்தான்.,

      ஒரு கையில் குழந்தையை பிடித்தபடி அவளை மற்றொரு கைநீட்டி அழைக்க., அவளும் அவனோடு நெருங்கி அமர்ந்து கொண்டவளை., தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்., “ஏன்டி இப்படி பண்ணினே., என்ட்ட சொல்லணும் ன்னு உனக்கு தோணவே இல்ல தானே., அந்த அளவுக்கு நான் உனக்கு வேண்டாதவனா போயிட்டேனா.,

      அத்தனை நாள் வாழ்ந்த நேரத்தில்.,  ஒருநாள் கூட என் அன்பு உனக்கு புரியவே இல்லை இல்ல.,  கடமைக்காக வாழ்ந்தேன்னு  நினைச்சியா“., என்று சொன்னான்.

            மீண்டும் அவள் கண்ணீர் அதிகமாவதை அறிந்தவன்., “ம்பச், ஏன் இப்ப அழுகுற., குழந்தையை என்ட்ட சொல்லலை ன்ற டென்ஷன் நான் தான் உன்ட்ட கோபப்படனும்., டைம் இருக்கு அதுக்கெல்லாம்., இப்ப அழுறதை நிறுத்து“., என்று சொல்லி அவனும் தோளைத் தட்டி கொடுக்க சற்று நேரத்தில் குழந்தை அழத் தொடங்கினான்.

          ” குழந்தையை அவங்ககிட்ட கொடுக்கட்டுமா“.,  என்று கேட்டான்.

      “இல்ல என்ட்ட குடுங்க., நான் ஆபீஸ் வொர்க்ல  இருந்தா மட்டும் தான்., அவங்ககிட்ட கொடுப்பேன்“.,  என்று சொன்னவள் குழந்தையை கையில் வாங்கிக் கொண்டு அவனையே பார்த்தாள்.,

      “என்னஎன்று கேட்டான்.

          “இல்ல கொஞ்ச நேரம் வெளியே இருக்குறீங்களா“., என்று கேட்டகவும்., அங்கிருந்து எழுந்து கொள்ள., “கதவை சாத்திட்டு போங்க“.,  என்று சொன்னாள்.

        “போறேன்., எனக்கு வெளியே பேச வேண்டியது நிறைய இருக்கு.,  சீக்கிரமா  உன்ட்ட வந்து பேசுறேன்“., என்று சொல்லி விட்டு  வெளியே சென்றான்.

            அங்கு சென்று அமர்ந்து பெரியவர்களுடன் பேசத் தொடங்கினான்.

          அவர்கள் குடும்பத்தை பற்றியும் அவனைப் பற்றியும் அதற்குள் வினோத் சொல்லி இருக்க அனைவரும் அவனை மரியாதையோடு பார்த்தனர்., இத்தனை நல்ல பெயரோடு., அரசியலில் இருந்தும் அவளை தேடி அலைந்தது அனைத்தையும் சொல்லி இருந்தது.,

          மரியாதையோடு பார்ப்பது வித்தியாசம் தெரிந்தது., பிரசாத் மனதிற்குள்இவன் எதை சொல்லி வச்சான்னு தெரியலையே‘., என்று யோசனையோடு அவர்களிடம் பேசுவதற்கு தயாரானான்.

       அனைவரும் குடும்பங்கள் பற்றி பேசியதோடு மற்றவற்றை பேச ஆரம்பிப்பது உள்ளே குழந்தைக்கு பசி அமர்த்தி கொண்டிருந்த ஹேமாவிற்கு கேட்டது.

       ‘அவனிடம் சொல்லாமல் இருந்தது., ஏற்கனவே மனதை உறுத்திக் கொண்டிருந்தது., இப்போது மேலும் உறுத்த தொடங்கியது., இதுவரை முகம் காட்டவில்லை என்றாலும்., அவன் வார்த்தையில் தெரியும் வலி.,  நிச்சயம் அவன் இன்னும் கொஞ்ச நாளைக்கு இதே வார்த்தையை தன்னிடம் கேட்டுக்கொண்டே இருப்பான்., எத்தனை தெளிவான பதில் சொன்னாலும் அவனால் தெளிவுக்கு வரமுடியாதுஎன்பதை அவள் உணர்ந்து கொண்டு தான் இருந்தாள்.

        பெரியவர்கள் அங்கே அவள் வந்த கதையை சொல்லத் தொடங்கவும்., இவளும் தான் இங்கு வந்ததை யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

     நினைவுகளோடு நித்தமும்
      போராடி கலைத்து.,
     உன் நிழற்படத்தை
     அணைத்து ஆறுதல் தேடியதை
      எப்படி சொல்வேன்.,
      நிழலோ., நிஜமோ.,
       என் மனம்
      உன்னை மட்டுமே தேடியதை
      அறிவாயா

Advertisement