Advertisement

16

அமைதியாய் இருப்பவன்
முட்டாள் என்று எண்ணிவிடாதே.
பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி.
புத்தர்


        பூனேயில்  பின்தொடர்ந்து சென்ற நண்பன்.,  தான் கண்டறிந்த விஷயங்களை உடனே பிரசாத்திற்கு போன் செய்து தெரிவித்தான்.

         “பிரசாத் இங்கே இருக்கிறது.,  ஹேமா தான் இங்க ஒரு ஃபேமிலில ஹஸ்பென்ட் அன்ட் வொய்ப்.,  ரெண்டு குழந்தைங்க இருக்காங்க., அது தவிர ஒரு வயசான அம்மா இருக்காங்க., இவங்களோட தான் இங்க ஹேமா இருக்காங்க.,

     சும்மா பக்கத்துல விசாரிக்கிற மாதிரி விசாரிச்சி தெரிஞ்சுகிட்டேன்“., என்று தகவல் சொன்னவன்.

      அந்த ஏரியாவையும் அதன் அட்ரஸ் ம் கொடுத்தான்.,  “சரி நாங்க வந்துடுவோம்என்று சொல்லும் போதே மாலையை தாண்டி இருந்தது.

           அப்போது வினோத்தும் பிரசாத் மட்டும் கிளம்புவதாக இருக்க., வீட்டினர் ஆளாளுக்கு நான் வருகிறேன்., நான் வருகிறேன்., என்று சொல்லும் போது

      பிரசாத் தான்இல்ல நாங்க  போய் கூட்டிட்டு வறோம்“., என்று சொன்னவன் அவன் அம்மாவை  முறைத்து பார்த்தபடி.,

         அவன் அப்பாவிடம்நான் நேரா சென்னைக்கு வந்துருவேன் பா., சோ நீங்க எல்லாம் சென்னை க்கு வாங்க“.,  என்று சொன்னவன்..,

     ஹேமாவின் வீட்டினர் இடமும்நீங்களும் அங்கே வந்துருங்க.,  அவளை முதல்ல சென்னைக்கு கூட்டிட்டு வர்றேன்., அப்புறமா இங்க  கூட்டிட்டு வரேன்“.,  என்று சொன்னான்.

           அன்றே கிளம்புவதற்கு தயாராகினான்., ஆனால் இரவு நேர பிளைட் டிக்கெட் கிடைக்காததால்.,  அதிகாலை கோயம்புத்தூரில் இருந்து கிளம்பும் ப்ளைட்டிற்கு டிக்கெட் புக் செய்திருந்தான்.,

      அவனும் வினோத்தும்., அதிகாலையில் கிளம்பி அவர்கள் சென்று சேரும் போது மணி ஒன்பதை தாண்டியிருந்தது.,

       சென்றவர்கள் நேராக அவன் கொடுத்த அட்ரஸ் க்கு  செல்லும் போது மணி பத்தை தாண்டி இருந்தது.,

            அன்று வீட்டில் வொர்க் பிரம் ஹோமில் அமர்ந்திருந்தவளுக்கு ஏனோ மனம் படபடப்பு அதிகமாகி கொண்டே இருந்தது.,

    சற்று நேரம் டிவி பார்க்கலாம் என்று நினைத்தவள்.,  ‘பெரியம்மா டிவி பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களே என்னால் தான்  எப்போதாவது பார்க்கிறார்கள் அவர்களை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்‘., என்ற எண்ணத்தோடு அமைதியாக தனக்கென ஒதுக்கிய அறையில் அமர்ந்து வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.,

     ஏனோ நேற்றிலிருந்து அவளின் இதய துடிப்பு காரணம் இல்லாமல் ஏறி இறங்குவதை அவளே உணர தொடங்கி இருந்தாள்.,

           வாழ்க்கை தனக்கென என்ன வைத்திருக்கிறது என்று புரியாமல் குழம்பி போனவள் தான்., மனமே ரிலாக்ஸ் என்று சொல்லிய படி தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள்., வேறு எதுவும்  யோசிக்கவில்லை.,

       ஆனால் இங்கு உள்ளவர்கள் தன்னை தங்கமாக பார்த்துக் கொண்டாலும்., ஏனோ இப்பொழுதெல்லாம் அவளால் சரியாக சாப்பிட முடிவதில்லை., மனதில் இருந்த குற்றஉணர்வு நாளுக்கு நாள் அதிகமாக தொடங்கியிருந்தது., மனதின் வலி காரணமோ என்னவோ., உடலும் மெலிவு கொண்டது., இரவிலும் சரியான தூக்கம் இல்லை.,

          சாப்பிட வேண்டும் என்ற ஒரு கட்டாயத்திற்காக சாப்பிட்டுக் கொண்டாள்.,  தன்னை நம்பி இன்னொரு ஜீவனும் இருக்கிறதே என்ற எண்ணத்தோடு.

     ஊரிலிருந்து அண்ணனும் தற்சமயம் வந்திருப்பதால்., அண்ணன் அண்ணி குழந்தைகள் என அவர்களோடு இவ்வளவு நேரம்.., நேரத்தை போக்கி விட்டாள்.

         இப்பொழுது தான் வந்து லேப்டாப்பை திறந்து வைத்து இருந்தாள்.,  அதே நேரம் காலிங் பெல் அடிக்க அண்ணன் யார் என கேட்டு விட்டு கதவைத் திறப்பதை அறிந்தவள் அமைதியாக இருந்தாள்.,

     வீட்டிற்குள் வினோத்தின் சத்தம் கேட்க ஒரு நிமிடம் பதறி தான் போனாள்., ‘இது வினோத் குரல் போல் அல்லவா இருக்கிறதுஎன்று நினைத்தவள்.,

        முதலில் வீட்டின் உரிமையாளனாக அண்ணன்யார்“., என்று ஹிந்தியில் கேட்பது தெரிந்தது.,

          அவன் ஆங்கிலத்தில்நீங்க தமிழ் தானே“., என்று கேட்பது தெரிந்தது.,

         அதன் பிறகே அண்ணன் யோசனையோடுஉள்ளே வாங்க“., என்று அழைப்பது தெரிந்தது.,

            அவள் அறையிலேயே அதிர்வோடு அமர்ந்திருந்தாள்.,

     பெரியம்மா தான்., “யாரு தம்பி நீங்கஎன்று கேட்டார்.

       வினோத் ஹேமாவ கூப்பிடுங்க“., என்று சொன்னான்.

          பாட்டியின் கண்களோ பிரசாத்தை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தது.,

       பிரசாத் சுற்றும் முற்றும் பார்த்தானே தவிர வாயை திறந்து பேசாமல் அமைதியாக கவனித்துக் கொண்டே இருந்தான்.,

        அதேநேரம் வீட்டிலிருந்த அண்ணன் ஆராய்ச்சியோடு பார்த்தவன்.,  “ஹேமா இங்க வாடா“.,  என்று கூப்பிட்டான்.

      அதற்குள் அவரின் மனைவியும் வந்துயாருங்க இவங்க எதுக்கு ஹேமா தேடி வந்திருக்காங்க“.,  என்று கேட்டாள்.

         ” உட்காருங்கஎன்று உபசரித்தான் வீட்டின் உரிமையாளனாக.,

          அதேநேரம் பெரியம்மாவும் அவன் மனைவியை பார்த்துவிட்டுஹேமாவுக்கு வேண்டியவங்க., நீ போய் காபி எடுத்துட்டு வா“., என்று சொன்னார்.

     “எங்களை எப்படி உங்களுக்கு தெரியும்“.,  என்று வினோத் கேட்டான்.

          பிரசாத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்., “தம்பி முகத்தை பார்த்தா.,  நாங்க எல்லாருமே அடையாளம் கண்டு பிடித்து விடுவோமே“.,  என்று சொன்னார்.

         வினோத்இவரை தெரியுமா ஹேமாக்கு சொந்தக்காரன்னு சொல்லுறீங்க“., என்று சொன்னான்.,

          “சொல்லனுமா என்ன எங்களுக்கு தெரியும்“.,என்று சொன்னார்.

           வினோத் தான்அவ எப்ப இங்க வந்தா., நீங்களாவது ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்ல“.,  என்று கேட்டான்.

         பொறு தம்பி எல்லாத்தையும் படபடன்னு பேசினா எப்படி.,  நிதானமா பேசுங்க., அவசரஅவசரமாக பேசாதீங்க“.,  என்று சொல்லி அமைதியாக இருக்கும் படி சொல்லி கொண்டிருந்தார்.

      அதேநேரம் ஹேமா அறையை விட்டு வெளியே வந்து அவர்கள் இருக்கும் இடம் நோக்கி நடந்து வரும் போதே.,  வினோத்தை பார்த்து விட்டு பிரசாத்தை மட்டும் தான் பார்த்துக் கொண்டே வந்தாள்.

             பிரசாத் தாடியும் ஆளும் வித்தியாசமாக இருந்ததால் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க.,

    வினோத் வேகமாக அவளை நோக்கி வந்தவன் ஓங்கி ஒரு அறை விட்டான்., தடுமாறியவளை பெரியம்மா தாங்கினார்.,

    தம்பி., என்று அந்த வீட்டு அண்ணன் அதட்ட…, அதற்குள் பேசத் தொடங்கினான்.

            “லூசா  நீ., அங்க குடும்பம் மொத்தத்தையும் பதற வைத்து விட்டு., இங்க வந்து ஹாயா உட்காந்துட்டு இருக்க..,  கொஞ்சம் கூட  வீட்ல உள்ளவங்க தேடுவாங்க., வீட்டிலுள்ள பெரியலங்க கிட்ட பேசணும் ன்ற., அந்த அறிவு கூட உனக்கு கிடையாதா“.,  என்று கத்தியவன்.,

        அவளை பெரியம்மாவிடம் பிரித்து இழுத்துக் கொண்டு வந்து பிரசாத்தின் முன் நிறுத்தி கொஞ்சமாவதுஇவரை பத்தி யோசிச்சு பார்த்தியா.,  நீ பேசாம கிளம்பி வந்து ட்ட., உன்னை கல்யாணம் பண்ணின தப்பை தவிர., எனக்கு தெரிஞ்சு வேற எந்த தப்பும் பண்ணலைஎங்க எல்லாருக்கும் பிடிச்சிருந்தது., விசாரித்து பார்த்து மாப்பிள்ளை நல்ல டைப்  ன்னு சொல்லி தான் உன்னை கல்யாணம் செய்து கொடுத்தோம்.,

      அவர் உன்னை ஏதாவது கொடுமைப் படுத்தினாரா., இல்ல இல்ல., நோகடிக்குற மாதிரி ஏதாவது பேசினாரா இல்ல இல்ல.,  அப்புறம் ஏன் லூசு இப்படி பண்ணின., உனக்கு கோபம் அப்படின்னா வீட்டுக்கு வர தெரியாதா., அந்த அளவுக்கு நாங்க உனக்கு வேண்டாதவங்க ஆகிவிட்டோமா“.,  என்று கேட்டவன்.

        அவள் ஏதோ சொல்ல வரபேசாத., எனக்கு இருக்க கோவத்துல ஓங்கி கூட  ஒன்னு வச்சுருவேன்என்று சொன்னான்.

     அவளோ ஏற்கனவே ஒரு அறையை வாங்கியிருந்த போதும்., “இல்ல எனக்கு அங்க வர பிடிக்கல..,  அதனால தான் நான் வீட்டுக்கு வரல“., என்று சொன்னாள் .

கோபத்தில் கையை பிடித்து இருந்தவன் அவளை பிடித்து தள்ளியது போல வேகமாக தள்ள..,  அந்த பக்கமாக நின்ற வீட்டின் உரிமையாளரான ஹேமாவால் அண்ணன் என்று அழைக்கப்பட்டவர் வேகமாக ஹேமாவை பிடித்துக்கொண்டார்.

       “என்ன தம்பி இப்படி பண்றீங்க., ஏற்கனவே ஒரு அடி வச்ச அப்பவே நாங்க தடுக்கலைன்ற குற்ற உணர்ச்சி இருக்கு“.,  என்று பெரியம்மா சொன்னவர்.

      “அவளேஎன்று சொல்லத் தொடங்கும் முன் ஹேமா அவரை பார்த்து தலையசைத்து மறுத்தாள்.

        ” நான் தான் சொன்னேன்ல இந்த பிரச்சனை வரும்னு., நான் சொன்னத நீங்க அப்ப கேட்கல.,  அதனால தான் கிளம்பி வந்தேன்., இப்ப  நீங்க வந்து கேட்குறதற்காக.,  நான் எதுவும் பண்ண முடியாது..,

       ஆமா நான் இவங்க ட்ட  சொல்லாம வந்து தப்புதான்..,  ஆனா எனக்கு அந்த நேரத்தில் சொல்லனும்னு தோணலை.,  எல்லார் மேலும் கோபம் இருந்துச்சு., அது மட்டும் இல்லாமல் யாரையும் புடிக்கல அவ்வளவுதான்..,  வார்த்தைகள் சில வார்த்தைகளை  லைஃப்ல மறக்க முடியாது.,  சில வார்த்தைகளை மன்னிக்கவும் முடியாது.,  மறக்கவும் முடியாது.., அந்த மாதிரி வார்த்தைகள் கேட்டேன்.,

         உங்களுக்கு என்ன ஈஸியா சொல்லிடுவீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.,  விட்டுக்கொடுத்து போ ன்னு.,  ஏன் எல்லாரும் வீட்ல நடக்குறது  தானே ன்னு கேட்பீங்க.,  என்னால் அப்படி இருக்க முடியாது“., என்று சொன்னாள்.

      பிரசாத் அவள் அருகில் செல்ல., அவள் அண்ணன் பக்கத்தில் நின்றவளை.,

      “ஒரு நிமிஷம்என்று சொன்னவன்நீ இந்த நிமிஷம் என் கண்ணு முன்னாடி நிற்குற ன்ற இந்த சந்தோஷமே எனக்கு போதும்“., என்றவன் கண்கலங்க அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

     அவனின்  இறுகிய  அணைப்பு சொல்லியது.,  அவன் எந்த அளவு வேதனைப்பட்டு இருப்பான் என்பதை.,

      

Advertisement