Advertisement

15

   அதிகமாக பேசுவதால் மட்டும்
ஒருவன் அறிஞனாகி விட மாட்டான்.
     – புத்தர்


       பாட்டி வந்து கேள்விக்கணைகளை வைத்துவிட்டு சென்ற பிறகு., டிடெக்டிவ் ஏஜென்சிகளை தீவிரமாக அலச சொல்லியிருந்தான்.,

       அது மட்டுமல்லாமல் அவளைப் பற்றிய கல்லூரி கால விஷயங்களிலிருந்து அனைத்தையும் தோண்டித் துருவ தொடங்கியிருந்தான்.,

         கல்லூரியில் படித்த நட்புகளிலிருந்து  தீவிர விசாரணையில் இறங்கியிருந்தது டிடெக்டிவ் ஏஜென்சி., இங்கு குடும்பமே சொர்ணத்தை ஒரு கொலைகாரியை பார்ப்பது போல பார்த்தனர்.

         தயாளன் சுத்தமாக அவளிடம் பேச்சை நிறுத்தியிருந்தார்., அவரோஅந்த கிழவி வந்து சொல்லுச்சுன்னு எல்லாருமா சேர்ந்து என்னை ஒரு மாதிரி பாக்குறீங்களா., என்ன நினைச்சுட்டு இருக்கீங்க., நான் பானுவை வர சொல்லி இருக்கேன்., நாளைக்கு வந்து விடுவா“.,  என்று சொன்னார்.

     நித்யானந்தனோ., “வந்து என்ன செய்வாள்.., வேண்டாம் அசிங்கமா பேசிற போறேன்.,  அவளால ஒன்னும் செய்ய முடியாது., வர சொல்லுங்க டிடெக்டிவ் ஏஜென்சி இருந்து தகவல் வரும் ன்னு சொல்லி இருக்காங்க., உங்க ரெண்டு பேரையும் சேர்த்து போலீஸ்ல புடிச்சுக் கொடுக்க வசதியாக இருக்கும்“., என்று சொன்னான்.

           அங்கு அமர்ந்திருந்த பிரசாத்  கண்ணை மூடி தலையை பின்பக்கமாக சாய்ந்துக் கொண்டான்., அவன் மனம் முழுவதும்எங்கோ ஒரு இடத்தில் இருப்பாய் நிச்சயமாக இருப்பாள்‘., என்று அடித்துக் கொண்டிருந்தது., இத்தனை நாள் இருந்த நம்பிக்கை துளித்துளியாய் குறைவது போல இருந்தது.

       ‘காணாமல் போன அவளை தேடுவதா.,  இல்லை கண்ணீரில் உறைந்து நிற்கும் அவள் குடும்பத்தை பார்ப்பதாஎன்ற எண்ணம் தோன்றியது.

      ‘ஒருபக்கம் மனம் முழுவதும் பதட்டம் இருந்தாலும்., ஏதாவது தகவல் கிடைத்தால் போதும்‘., என்ற எண்ணமும் அவனிடம் அதிகமாக இருந்தது.

      ஆனால் மனம் அடித்து சொல்லியது.,  அவள் எங்கோ  இருக்கிறாள்  என்ற தகவல் மட்டும் கிடைத்தால் போதும்., கடவுளை என்று வேண்டிக் கொண்டிருந்தான்.

       கலாவும் இப்பொழுதெல்லாம்  கடவுளிடம் பலமாக வேண்டிக்கொள்ள தொடங்கியிருந்தாள்.

        பிரசாத் இந்த இரண்டு நாளாக சரியான உணவு இல்லாமல் சோர்ந்து இருந்தான்., அவனுக்கு எப்படியும் அவளை பற்றிய சிறு தகவல் வந்தால் போதும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.,

      அதே நேரம் டிடெக்டிவ் ஏஜென்ஸியில் இருந்து போன் வர..,

        “சொல்லுங்க“., என்றான் பிரசாத் .,

       “சார் அவங்க காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் காண்டாக்ட் பண்ணதுல., ஒரே ஒரு ப்ரண்ட் மட்டும் பெங்களூர்ல இருக்காங்க சார்., அந்த காலேஜ் ஃபரண்ட் தான் அவங்க கடைசியா மீட் பண்ணி இருப்பார்களோ அப்படி ங்கிற சந்தேகம் எங்களுக்கு இருக்கு..,

         ஆனா அந்த பிரெண்ட் இப்ப இங்க இல்ல.,  அவங்க ஹஸ்பென்ட் கூட வெளிநாடு போயிட்டாங்க.,  பட் அவங்க ஃபேமிலி இங்கே தான் எங்கேயோ இருக்குன்னு சொன்னாங்க.., விசாரிக்கச் சொல்லி இருக்கோம் சார்.,  கூடிய சீக்கிரம் தகவல் கிடைச்சிரும்.,

          அது மட்டும் இல்லாம அவங்க காலேஜ்ல உள்ள ஒரு பிரண்டோட பேஸ்புக் ஐடிய ஹேக் பண்ணி இருக்கோம்., அந்த ஐடி மூலமா பார்க்கும் போது ஹேமா சந்திரசேகர் என்கிற பெயரில் ஐடி கிடைச்சிருக்கு.,  அதை தான் இன்னிக்கு ஹேக் பண்ண சொல்லி இருக்கோம்., ஹேக் பண்ணிட்டு உங்களுக்கு டீடைல்ஸ் தர்றோம்“., என்று சொன்னான்.

            “ம்ம்ம். சரி சீக்கிரம் எனக்கு ஏதாவது தகவல் சொல்லுங்க“., என்று போனை வைத்தவன்.

       ஹேமாவின் அண்ணனை அழைத்தான்., “வினோத் எனக்கு ஒரே ஒரு விஷயம் சொல்லுங்க., ஹேமா வந்து ஃபேஸ்புக்., இன்ஸ்டா., அந்த மாதிரி எதுவும் யூஸ் பண்ற பழக்கம் இருக்கா..,  சமூக வலைதளங்களில் அவளுக்கு எந்த அளவுக்கு பழக்கம் இருக்கு“., என்று கேட்டான்.

          “யூஸ் பண்ணுவா., ஆனா அதிகமா யூஸ் பண்ண மாட்டா.,  எப்பவாவது உன் போஸ்ட் போடுவா., எப்பவாவது கவிதை போடுவா.,  காலேஜ் படிக்கிற டைம் மட்டும் தான்., வேலைக்கு போனதுக்கு அப்புறம் அதெல்லாம் அக்டிவா இருந்தாலா என்னன்னு எனக்கு சரியா தெரியல., நான் அந்த மாதிரி எதிலேயும் இல்ல அப்படிங்கிறதால., எனக்கு சரியா தெரியலை“.,  என்று சொன்னான் வினோத்.

       “அவளோட ஐடி பெயர் ஹேமா சந்திரசேகரா“., என்று கேட்டான்.

     “ஆமாஎன்று சொல்லவும் பெருமூச்சுவிட்டவன்.,

     “ஓகே நான் இப்ப திருப்பி உங்களுக்கு மறுபடி கூப்பிடுறேன்“., என்று சொல்லிவிட்டு மீண்டும் அந்த டிடெக்டிவ் ஏஜென்சிக்கு  கால் செய்துஇமிடியட் அந்த ஹேமா சந்திரசேகர் என்கிற ஐடிய ஹேக் பண்ணுங்க., அதுல என்னென்ன டீடைல்ஸ் இருக்குன்னு பாருங்க“., என்று சொன்னான்.

          “சார் அதே பெயரில் நிறைய ஐடி காட்டுது., ஆனால் ஒரு  ரெண்டு ஐடி மட்டும் கோயம்புத்தூர் காட்டுது., அந்த ரெண்டும் தான் பார்க்க சொல்லி இருக்கேன் சார்., கோயம்புத்தூர் சென்னை ன்னு இடத்தை மட்டும் போட்டுருக்குற ஐடியை மட்டும் பார்க்க சொல்லி இருக்கேன் சார்., இன்னும் கொஞ்ச நேரத்துல பண்ணிடுவோம்., ஹேக் பண்ணிட்டு உங்களுக்குச் சொல்கிறோம்“., என்று சொன்னான்.

          “சரி“, என்றவன்  தகவல் வரும் வரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பது போல இருந்தான்.

          சற்று நேரத்தில் டிடெக்டிவ் ஏஜென்ஸியில் இருந்து போன் வர., “சார் இன்னைக்கு நான் கோயம்புத்தூர் வரேன் சார்“., என்று சொல்லிவிட்டுமுக்கியமான சில தகவல்களோடு வருகிறேன்“., என்று சொன்னவன் போனை வைத்தான்.

       இவனும் வினோத்திற்கு அழைத்து விஷயத்தை சொல்ல அன்று மாலை பிரசாத்தின் வீட்டில் அனைவரும் கூடி பேசுவதாக இருந்தது.

    அதுபோல மாலை நேரம் டிடெக்டிவ் ஏஜென்சியில்  உள்ளவர் ஒரு பென்டிரைவை கையோடு எடுத்து வந்து பிரசாத் கையில் கொடுத்தார்.

     “என்னஎன்று கேட்டான்.

       “ஹேமா சந்திரசேகர் அவங்க டி ஹேக் செய்ததில் எடுத்தது“., என்று சொன்னவன்., பிரசாத் அனுமதியோடு அவனுடைய லேப்டாப் ல்  போட.,

       ஹேமாவின் கல்லூரி காலத்தில் நட்புகளோடு இருந்த சில புகைப்படங்கள் இருந்தது., வேறு எதுவும் போஸ்டில் இல்லை.,  நீண்ட இடைவெளிக்கு பிறகு அவ்வப்போது சிறு சிறு வரிகள் மட்டுமே எழுதி போட்டிருந்தாள்.

        சரியாக அவர்களுக்குள் சண்டை வந்த அன்று மாமியார் பிரச்சனை செய்த அன்று போட்டிருந்த கவிதை அனைவருக்கும் வருத்தத்தை அளித்தது என்றால்., பிரசாத் முறைத்து பார்த்த வண்ணமே அமர்ந்து இருந்தான்.,

    இதோ போர்க்களத்தில்
     நிராயுத பாணியாய்.,
     வார்த்தை எனும்
     வாள் எடுக்கலாம்.,
     எதிரில் இருப்பவர்
      யாரோ என்றால்
     ஆனால் என்றேனும்
      முகம் பார்க்க கூடிய
      உறவு எனும் போது.,
      என் வார்த்தை
      எனும் வாள்
      நாக்கு எனும் அம்புறா
      துணியில் ஒய்வெடுக்கட்டும்.,

        அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தான் அவளுடைய பதிவில் போஸ்ட் இருந்தது.,

       அவள் உறவு நட்பு என அனைவரையும் பிளாக் செய்து வைத்திருப்பதை பற்றியும்  டிடெக்டிவ் ஏஜென்சி நபர் சொல்லிக் கொண்டிருந்தார்.,

      அந்த ஒரு வருடத்திற்கு பிறகு தொடர்ந்து ஆறு மாதங்களாக அவ்வப்போது ஒவ்வொரு கவிதை மட்டும்.,

        என் வருகைக்கான
        ஏக்கத்தை அவன்
        கண்களில் காணும்
        போது வாழ்க்கைக்கான
         அர்த்தம் புரிகிறது..,

      அதற்கடுத்த  இருபது நாளில்.,

       அவனின் ஒற்றை புன்னகை
        என் வலிகளின்
         மருந்து.,
        என் வாழ்க்கையின்
         ஜீவன்….

      மீண்டும் சில நாள் கழித்து

        எனக்கான
        அவனின் ஒற்றை
        அழைப்பிற்காக.,
        எனக்கான மொத்த
        உலகத்தையும்
        அடிமை சாசனம்
        இட்டு கொடுத்து
        விடுவேன்.,

      அடுத்த சில நாட்களில்.,

        காதல் உண்மை
           தானோ.,
         என்னவோ, போ.,
         இவனை பார்க்கும்
          போதெல்லாம்.,
          அநியாயமாக
          அவன் மீது என்
          எண்ணம் பாய்கிறது.,
          ஒரு வேளை இதற்கு
           பெயர் தான்
            காதலா.,?

    கடைசியாக மூன்றுநாள் முன்பாக.,

         ஏனடா கொஞ்சம் கொஞ்சமாக
          உயிர் வதைக்கிறாய்.,
         நின் நினைவுகளில்
         நான் வேண்டாம்.,
         உயிரை எல்லாம்
         மொத்தாமாக குத்தகை
         எடுத்துக் கொண்டவனோடு
         வாழ்கிறேன்.,
         நினைவுகளை துறந்து விடு
         நிம்மதியாய் வாழ்ந்து விடு.,

       என்று போட்டிருந்தாள்.,

கிட்டத்தட்ட இந்த கவிதைகளை பார்த்த பிறகு அனைவரின் முகமும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தது., ஏனெனில் அது அவள் எழுதியதாக தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும்..,

       அப்படி என்றால் ஒரேடியாக இங்கு உள்ளவர்களை மறந்து விட்டாளா என்று யோசனையோடு இருந்தனர்.,


    அவளுடைய ஒவ்வொரு கவிதைகளையும் பார்க்கும் போதே வீட்டில் உள்ளவர்களுக்கு இதயத் துடிப்பு தாறுமாறாக தொடங்கியிருந்தது., என்ன நினைத்து எழுதி இருக்கிறாள்., எதனால் கிட்டத்தட்ட ஒரு வருடம் எதையும் போடாமல் இருந்தவள்., ஏன் இத்தனை பதிந்திருக்கிறாள்.,

      அதுவும் யாரோ ஒருவனை மட்டுமே நினைத்து நினைத்து எழுதியிருக்கிறாளே., இதுதான் காதலா., என்று கேட்டால் என்ன அர்த்தம்., எப்படி இப்படி மாறிப் போனாள்., என்று வீட்டினரும் அதிர்வோடு பார்த்துக்கொண்டிருந்தனர்.

          பாட்டி தான்இல்ல என் பேத்தி வேறு ஏதோ சொல்ல வர்றா., ஆனா என்ன சொல்ல நினைக்கிறாள் ன்னு மத்தவங்களுக்கும் புரியல.,  எனக்கு  புரியல., கண்டிப்பா இதுல ஏதோ ஒன்னு இருக்கு.,  இதுக்கு வேறு ஏதோ அர்த்தம் இருக்கும்“.,  என்று அழுத்தி சொல்லிக் கொண்டிருந்தார்.

        அந்த வரிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பிரசாத்தின் அம்மாவும்.,  அன்றும்  மதியம்தான் வந்திருந்த பிரசாத்தின் அக்காவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

           பிரசாத்தின் அக்கா அம்மாவை தூண்டி விட்டு விட்டு அமைதியாகி கொண்டாள்.

       பிரசாத்தின் அம்மாவும்இதுதான் நீங்க பொண்ணு வளர்த்த லட்சணமா.,  என்ன மாதிரி கவிதை இருக்கு பாருங்க.,  என்ன வரிகள் எழுதி இருக்கா பாருங்க.,  எவனையோ புகழ்ந்து எழுதி இருக்கா.,  இதுதான் காதலா ன்னு எல்லாம் கேட்டு எழுதி இருக்கா.,  இதுதான் அவளை நீங்க வளர்த்த லட்சணமா., அவ இவன் கூட ஓடிப் போயிட்டா.,  கடைசில நீங்க என்னைய குறை சொல்வீங்களா“.,  என்று கத்தினாள்.

         வேகமாக எழுந்த பிரசாத்இனிமேல் தேவையில்லாம பேசினீங்கனா நடக்குறதே வேற., அவளை பற்றி எனக்கு தெரியும்., அவளை நான்  பார்த்து பேசற வரைக்கும் இங்க யாரும் வாயைத் திறந்து அவளை பற்றி ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது.,  எனக்கு தெரியும் என் வொய்ப் பத்தி.,  என் வொய்ப் பத்தி பேசுறதுக்கு முன்னாடி அவங்கவங்க மரியாதையை காப்பாற்றிக்கோங்க., தேவையில்லாம ஒரு வார்த்தை கூட வரக்கூடாது“., என்று சொல்லிக் கொண்டே இருந்தவன்.

      டிடெக்டிவ் ஏஜென்சி நபரிடம் திரும்பிஇந்த ஐடி ஹேக் பண்ணுனீங்க சரி., அந்த ஐடி எந்த ஐபி அட்ரஸ் காட்டுதுன்னு பார்த்தீர்களா“., என்று கேட்டான்.

          “சார் பூனே  ஐபி அட்ரஸ் சார்., விசாரிக்கச் சொல்லி இருக்கேன்“., என்று சொன்னான்.,

    “பூனே வாஎன்று அதிர்வோடு கேட்டான்.,  ஆமா சார் பூனேயில் தான்  ஐபி அட்ரஸ் காட்டுது., விசாரிக்கச் சொல்லி கேட்டிருக்கோம்., கண்டிப்பா உங்களுக்கு கூடிய சீக்கிரம் நல்ல தகவல் கிடைக்கும்“.,  என்று சொல்லி விட்டு அவரும் அவனிடம் விடைபெற்று கிளம்பினார்.

           “பூனே  ஐபி அட்ரஸ்“., என்று சொல்லிவிட்டு ஹேமா வீட்டினரைபூனேயில் தெரிஞ்சவங்க இருக்காங்களா.,  சொந்தக்காரங்க இருக்காங்களா“., என்று கேட்டான்.

          “இல்லையே தம்பி எங்களுக்கு கோயம்புத்தூர் தவிர வேறு எங்கேயும் சொந்தம் கிடையாது“.,  என்று சொன்னார்கள்.

       டிடெக்டிவ் ஏஜென்சி சொன்ன சில தகவல்களை யோசித்து பார்க்க தொடங்கியிருந்தான்.,

     கல்லூரி நட்பு பெங்களூரில் ஒருத்தி இருக்கிறாள்., அவள் இப்போது இங்கே இல்லை ., அவள் வெளிநாடு சென்று விட்டாள், அவள் குடும்பம் இங்கு தான் இருக்கிறது., அவளை விசாரிக்க சொல்லியிருக்கிறார்கள்.,

          அதே நேரம் இவள் பூனேயில் இருக்கிறாள்., எப்படி சென்றாள்.,

       பெங்களூர் சென்றவள் பூனேக்கு எப்படி சென்றாள்., என்ற எண்ணத்தோடு யோசித்துக் கொண்டிருக்கும் போதே பிரசாத்தின் நண்பனொருவன் அழைத்திருந்தான்.

         பிரசாத்சொல்லுடா“., என்று கேட்டான்

       ” நான் டெக்ஸ்டைல் ஷாப் விஷயமா., பூனே வந்தேன்., அங்கே இருந்து தான் பேசுறேன் டா., இங்க உன் வொய்ப் மாதிரியே ஒரு பொண்ண பார்த்தேன்.,  ஆனா அது ஒரு பெரிய குடும்பத்தோட எங்கேயோ கார்ல போறாங்க டா., நான் பின்னாடியே பாலோவ் பண்ணி போயிட்டு இருக்கேன்..,  அது ஹேமா தானா என்னன்னு தெரியல.,

      எனக்கு முகம் பார்க்க ஹேமா மாதிரி இருந்துச்சு., ஆனா இந்த பொண்ணு கொஞ்சம் டிப்பரன்ட் இருக்கு., ஹேமா அளவுக்கு நார்மலா  இல்ல.,  கொஞ்சம் வெளிரி ஒல்லியா தெரியுது., ஆனா ஹேமா தானா ன்னு., தெரியாம பேச முடியாது.,  அதனால பின்னாடியே ஃபாலோ பண்ணி போயிட்டு இருக்கேன்.,

        கண்டிப்பாக ஹேமா தான்னு  தெரிஞ்சா., உனக்கு போன் பண்றேன்.,
உனக்கு ஏதாவது தகவல் கிடைத்ததா.,  ஹேமா வோட  சொந்தக்காரங்க இருக்காங்களான்னு மட்டும் விசாரி“.,  என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

       ” நீ பூனே அட்ரஸ் குடு., நான் பின்னாடியே வர்றேன்“.,  என்று சொல்லி அவன் கிளம்ப தொடங்கினான்.

      வினோத்நானும் வரேன்என்று சொன்னான்.

         “இல்ல வேண்டாம்., நான் மட்டும் போயிட்டு வாரேன்“., என்று சொல்லிக் கொண்டிருந்தான் பிரசாத்.,

          “எதுவா இருந்தாலும் முதல்ல பாத்துக்கலாம்“., என்று சொன்னான்

      அதற்குள் அவன் நண்பனை லைனில் வைத்துக் கொண்டே பேச., “டேய் அவசரப்படாதே., முதலில் ஹேமா தானா ன்னு.,  நான் கன்ஃபார்ம் பண்ணிட்டு சொல்றேன்“.,  என்று சொன்னான்.

      பிரசாத் தான்., “நீ ஹேமா தான் தெரிஞ்சாலும்., போய் பேசாதா., நீ பேசினா.,  நீ பார்த்துட்ட ன்னு தெரிஞ்சா..,  அவ வேற எங்கேயும் போகக்கூடாது., அவ மாதிரி இருக்குறாங்க ன்னு சொல்லுற., கண்டிப்பா அவளா தான் இருக்கும் ன்னு  மனசு சொல்லுது.,  எனக்கு கொஞ்சம் கன்ஃபார்ம் பண்ணிட்டு.,   போன் பண்ணி  கொஞ்சம் சொல்லு..,

        நான் நேரிலே பூனேக்கு வர்றேன்“., என்று சொன்னான்.

           “சரிஎன்று சொல்லி அலைபேசி அழைப்பை துண்டித்தான்., அதே நேரம் பூனேயில் யார் இருப்பார்கள் என்ற எண்ணத்தோடு வினோத் அவளின் தோழிகளுக்கு போன் செய்தான்.

      “அண்ணா சொல்லுங்கண்ணா“., என்று குழலி குரல் கேட்டது.

      “நான் கேக்குறதுக்கு மறைக்காம பதில் சொல்லு“.,  என்றான்.

       “கேளுங்க ண்ணாஎன்றாள்

       “ஹேமா பத்தி உனக்கு என்ன தெரியும்“., என்றான்.

      ” நிஜமா எனக்கு தெரியாது ண்ணா.,  தெரிஞ்சா சொல்லியிருக்க மாட்டேனா., உங்க வீட்ல எவ்வளவு தேடுனீங்க.,  ப்ரசாத் அண்ணா எவ்வளவு தேடுறாரு ன்னு எனக்கு தெரியும் ண்ணா., அப்புறம் சொல்லாம இருப்பேனா., நெஜமாவே எனக்கு தெரியாது.., அவளை நாங்க எவ்வளவோ காண்டாக்ட் பண்ண தான் ட்ரை பண்ணுறோம்., எதிலேயும் காண்டாக்ட் பண்ண முடியல“., என்று சொன்னாள்.

          “அவ கூட நீ பேஸ்புக்ல பிரண்டா இருக்கியா“., என்று கேட்டான்.

      “இப்ப  இல்ல ண்ணா.,  எங்க பிரண்ட்ஸ் லிஸ்டில் ஒரு செட் ஆப் பிரண்ட்ஸை இப்ப கொஞ்ச நாளா லாக் பண்ணி வச்சிருக்கா.,  பிளாக் பண்ணிட்டா ., அவ பொதுவா யூஸ் பண்ணவே மாட்டா.,

        இப்போ திடீர்னு  அவ காணாமல் போன மறுநாளிலிருந்து எங்க எல்லாத்தையும் பிளாக் பண்ணி இருக்கா., அதுவரைக்கும்  எப்பவாது போஸ்ட் போடுவா.., இப்போ தான் அவளை  பத்தின எந்த டீடைல்ஸ் ம்ம் என்று தெரியாது.,

       வேற ஏதும் ஐடி வச்சிருக்காளா ன்னு நாங்க தேடி பார்த்தும் எதுவும் இல்லை“., என்று சொன்னார்கள்.

          “பூனே உங்க பிரண்ட்ஸ் யாரும் இருக்காங்களா“.,என்று கேட்டான்.

        “இல்லைன்னா எங்களுக்கு அது வரைக்கும் பிரெண்ட்ஸ் கிடையாது.,  லோக்கல் பிரெண்ட்ஸ் தான்., நாங்க யார்கிட்டயும் ரொம்ப பழக மாட்டோம்.,  ஓரளவுக்கு தள்ளி நிக்க பழகி விட்டோம்“., என்று சொன்னாள்.

           “சரி.,  உனக்கு எதுவும் டீடைல்ஸ் கிடைச்சா மறக்காம எங்களுக்கு சொல்லனும்“.,  என்று சொன்னான்.

       “நிச்சயமாக சொல்லுவேன்., ஆனா எனக்கு எதுவும் தெரியல“.,  என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

      இவை அனைத்தையும் ஸ்பீக்கரில் போட்டு வினோத் பேசினான்.

     பிரசாத் தான் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்., “நிச்சயமாக யாருடைய உதவியோடு தான் பூனே சென்றிருக்கிறாள்., பார்த்துக் கொள்ளலாம்என்று சொன்னான்.

     பூனேயில் இருந்து வரும் போனுக்காக காத்து கொண்டு இருந்தனர்., அது ஹேமா தானா இல்லை வேறு யாருமா என்ற என்று அறிவதற்காக.

உன் நிழலை கூட
விட்டுவிடக்கூடாது
என்று நினைத்துக்
கொண்டிருப்பவன் நான்.,

நீ நிஜமாய் என்
கையில் கிடைத்தால்
விட்டுவிடுவேனா என்ன.,
பொத்தி பாதுகாத்து கொள்கிறேன் 

நிஜமாய் வந்துவிடு
நிழலாய் வாழ்ந்தது போதும்.,

Advertisement