Advertisement

பிரண்டு கிட்ட வச்சு தானே ஜோசியம் பார்த்தார்கள்.,அரசியலுக்கு வருவது தான் உன்னை கல்யாணம் பண்ணினான் என்று சொன்னதால் கூட இருக்கலாம்., அவளுக்கு அந்த கோபத்தில் கூட இருக்கலாம்“., என்று சொன்னான்.

      அவர்களுக்கும் நடந்த பிரச்சனை ஓரளவுக்கு தெரியும் என்பதால் மற்றவர்கள் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

      பாட்டியோ., “ஆமாடா அவங்களுக்கு இது சாதாரணம்., ஆனால் நமக்கு அப்படி இல்ல., அது நம்ம வீட்டு பிள்ளை, நம்ம தான் தேடணும்“., என்று கோபமாக பேசினார்.

       பாட்டின் உடல்நிலையும்  ஹேமாவை நினைத்து வரவர சற்று பலவீனம் ஆகிக் கொண்டிருந்தது.,

      அதையே பாட்டி சொல்லிஎங்க என் பேத்தியை பார்க்காம., நான் போய் சேர்ந்திருவேனோ ன்னு.,  நானே பயந்து கிடக்கேன்., நீங்க ஈஸியா சொல்லுவீங்க.,  எனக்கு தெரியாது., என்ன பண்ணுவீயோ எனக்கு என் பேத்தியை பார்த்தே ஆகணும்“., என்று பிடிவாதமாக நின்றார். ஹேமாவின் பாட்டி.

       சந்திரசேகரும்அவசரப்படாதீங்க ம்மா.,  பொறுமையா தான் இதெல்லாம் பேசணும்“., என்று சொல்ல.,

      “என்னத்தடா பொறுமையா பேசணும்.,  என்ன நான் அவசரப்பட்டு விட்டேன்.,  ஒன்றரை வருஷமா அமைதியா தான் இருக்கேன்., வேற ஒருத்தியா  இருந்தா இந்நேரம் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்து ., மொத்த குடும்பத்தையும் நடுத்தெருவுக்கு இழுத்து இருப்பா., ஆனா நீ என்னன்னா பொறுமையா இருங்கன்னு சொல்லிட்டே இருக்க“.,  என்று சொன்னார்.

        “அவள் ஜாதகமே அப்படி தான் ம்மா இருந்துச்சு.., கல்யாணம் முடிஞ்சு மூணு வருஷத்துக்கு பிரச்சினை தான் வாழ்க்கையில் போகும் ன்னு தானே இருந்துச்சு.., அவங்க வீட்டு நேரமும் அப்படித்தான் இருக்கு.,  நேரம் சரியில்லாததால் என்ன பண்ண முடியும்.,  எல்லாம் கூடி வரும்., அவ நல்லா இருக்கா.,  எங்கேயோ நல்லா இருக்கா ன்னு மட்டும் தெரியும்., நீங்க பேசாம இருங்க“., என்று சொல்லிக் கொண்டிருந்தார் சந்திரசேகர்.

          ஆமாடா அங்க உன் மருமகன்  நல்ல பேட்டி கொடுத்துட்டு இருக்கான்.,  அதை பார்த்துட்டு நீயும் பெரிய எம்எல்ஏ.., நல்ல ஒழுக்கமான எம்எல்ஏ., என் மருமகன் சொல்றதுல நீ பெருமை பட்டுட்டு போ…, ஆனா அங்க என் பேத்தியை காணோம்னு நான் கிடந்து தவிச்சிட்டு இருக்கேன்., என்ன செய்வியோ.,  ஏது செய்வியோ.,  தெரியாது இந்த வாரம் நான் உன் மருமகன் வீட்டுக்கு போயே ஆகணும்.,  என் பேத்தியை பத்தி விசாரிச்சே ஆகணும்., நீ  கூட்டிட்டு போவியா மாட்டியா.., இல்ல நான் போகட்டுமா“., என்று கேட்டார்.

      “சரிமா போன் பண்ணி கேட்டுட்டு கூட்டிட்டு போறேன்“., என்று சொல்லி பேசிக்கொண்டிருந்தார்.

    அந்த வாரத்தில் பிரசாத் ஊருக்கு வர தயாராகும் போதே., தயாளன் போன் செய்துஹேமா வீட்டிலிருந்து போன் வந்தது“., என்றார்.

         “என்னப்பா எதுவும் முக்கியமான விஷயமா.,  ஹேமா பத்தின விஷயமா“., என்று பதட்டத்தோடு கேட்டான்.

       “தெரியல டா பாட்டி பயங்கர சண்டை போட்டாங்க ன்னு.,  உன் மாமனார் போன் பண்ணியிருந்தார்., கண்டிப்பா பேசியே ஆகணுமாம்., இல்லாட்டி நான் போய் கேட்குறேன் ன்னு சொல்லிட்டு இருக்காங்க ன்னு., சொன்னார்., அதுமட்டுமல்ல.,  நான் போய் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் பண்ணி விடுவேன் ன்னு சொல்லி சண்டை போடுறாங்க.,  என்ன பண்ணனும் தெரியல ன்னு சொல்லுறாங்க., இப்ப நீ தான் முடிவு பண்ணனும்“., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.,

      ” சரி ப்பா பாட்டி வரட்டும் பேசுவோம்என்று சொன்னவன் அங்கிருந்து கிளம்பி ஊர் வந்து சேர்ந்தான்.,

       வீட்டுக்கு வந்தவன்., தன் அறைக்கு சென்று அடைந்து கொண்டான்.

     அன்று தன் தொகுதி மக்களை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்தான்., மனம் கிடந்து அடித்துக்கொண்டது, ஏதோ பிரச்சனை வரப் போவது போலவே மனம் பதற தொடங்கியிருந்தது.,

       எங்கே தான் ஹேமாவை இழந்து விடுவோமோ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது.,  அவள் எங்கிருக்கிறாள் என்று தெரியாமல் இது என்ன கண்ணாமூச்சி ஆட்டம் என்ற கோபமும் இருந்தது.,

     மறுநாள் காலையில் பாட்டி மற்றும் ஹேமாவின் குடும்பத்தினர் வந்து இறங்க வரவேற்று அமர செய்தாலும்., யாருடைய முகத்திலும் சிரிப்பு மருந்துக்கும் இல்லை.

    பாட்டி தான் முதலில் பேச்சை ஆரம்பித்தார். “இங்க பாருங்க தம்பி.,  எனக்கு சுத்தி வளச்சி பேச தெரியாது.,  நேராவே  கேக்குறேன்., எனக்கு என் பேத்தியை பார்த்தே ஆகணும்., என் பேத்தி வந்தே ஆகணும்., நான்  உங்க மரியாதைக்காகவும் குடும்பத்துக்காக ன்னு தான்., இத்தனை நாள் அமைதியா இருந்தேன்.,

         ஆனா எனக்கு வர வர பயம் அதிகமாயிட்டே போகுது., இத்தனை நாள்ல ஒரு சின்ன தகவல் கூட கொடுக்காமல் எப்படி ஒரு பொண்ணால இருக்க முடியும்., அதுமட்டுமில்லாம காணாமல் போனது என் பேத்தி.,  எனக்கு தான் வலிக்கும்..,

       வாழ்க்கையில அவ பிறந்ததிலிருந்து அவளை கல்யாணம் கட்டி உங்க வீட்டுக்கு கொடுத்தது வரைக்கும் சரி., அதற்கு பிறகு காணாமல் போனதற்கு முந்தைய நாள் வரைக்கும் நான் அவட்ட போனில்  பேசிட்டே இருந்திருக்கேன்., ஒரு நாள் கூட  பேசாமல் இருந்ததில்லை..,

       அப்படி இருக்கும் போது போன ஒன்றரை வருஷமா., நான் என் பேத்தியோட குரலை கூட கேட்கல., எனக்கு என் பேத்தியை பார்த்தே ஆகணும்.,  இல்லாட்டி நானே போய் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி விடுறேன்.,  இத்தனை நாளா என் பேத்தியை காணாம போனதுக்கு காரணம்“., என்று சொல்லி வீட்டில் நடந்த சண்டைகள் எல்லாம் சொல்லி பேசினார்.

       சொர்ணமோ., “உங்க பேத்தி எங்க போனா ன்னு எங்க கிட்ட கேக்குறீங்க., நீங்க  என்ன லட்சணத்தில் பிள்ளை வளர்த்து இருக்கீங்க., இதுக்கு தான் சொன்னேன் தராதரம் தெரியாம பொண்ணு எடுக்கக்கூடாது“., என்று சொன்னார்.

    “கொஞ்சம் நிறுத்துங்க“., என்று கத்தினான் பிரசாத்.,

         “அப்பா சொல்லி வைங்க., நான் அவங்க  கிட்ட இது வரைக்கும் பேசவே இல்ல., இந்த நிமிஷம் சொல்றேன் இதுக்கு மேல ஒரு வார்த்தை., தேவை இல்லாத வார்த்தை விட்டாலும் நடக்கறதே வேற., யாரும் தேவையில்லாமல் வார்த்தை விடக்கூடாது“., என்று கத்தினான்.

       பாட்டியைப் பார்த்து திரும்பிபாட்டி உங்களுக்கு உங்க பேத்தி எவ்வளவு முக்கியமோ., அதைவிட எனக்கு என் பொண்டாட்டி முக்கியம்., நான் தேடாம  இருக்கேன்னு நினைக்கிறீங்களா.,  அவளை தேடாத இடம் கிடையாது., பெங்களூர் ஃபுல்லா வலைவீசி தேடி கிட்டு இருக்கேன்., உங்களுக்கு தெரியுமா பெங்களூர்ல ஒரு இன்டு இடுக்கு விடாம தேடிட்டேன்.,  ஒரு ஐடி கம்பெனி விடாமல் தேடி ஆச்சு.,

      இந்த ஒன்றரை வருஷத்துல என்னால செய்ய முடிஞ்சது அத்தனையும் பெங்களூரு ஆந்திரா எல்லாம் தேடிட்டேன்., இப்ப கேரளா கூட தேடியாச்சி.,  சுத்தி சுத்தி இந்த இடத்தில் விட்டு எங்கே போயிருப்பா ன்னு.,  தேடிட்டு இருக்கேன்., இதுக்கு மேல நானும் டிடெக்டிவ் ஏஜென்சி., ஒன்றுக்கு இரண்டா ஏஜென்சிசொல்லி வச்சு தேடுறேன்.,  ஒரு சின்ன தகவல் கூட கிடைக்கலை..,

          ஃப்ரெண்ட்ஸ் ட்ட கூட இதுவரைக்கும் அவ பேசல., அந்த அளவுக்கு என் மேல என்ன கோபம்., நான் என்ன தப்பு பண்ணேன்., என் மேல கோவப்படுற அளவுக்கு என்ன வந்துச்சு என்று வருத்தத்துடன் பேசிக் கொண்டிருந்தான்.

   பாட்டி தான் பெரிய குண்டாக தூக்கி பிரசாத்தின் தலையில் மட்டுமல்ல.,  குடும்பத்தினரின் மொத்த தலையிலும் போட்டது.

         “தம்பி எனக்கு ஒரு சந்தேகம்., இது கொஞ்ச நாளா., இப்ப கொஞ்ச நாளா என் மனசுல உறுத்திக் கிட்டு இருக்குற விஷயம் மட்டுமில்ல.,  ஒரு பயமும் கூட ன்னு வையுங்களேன்., நீங்க ஊர்ல இல்ல ஊருக்கு போய்ட்டீங்க.., உங்க அண்ணன் அண்ணன் பொண்டாட்டி ஊருக்கு போயாச்சு.., உங்க அம்மா மட்டும் தான் இருந்திருக்காங்க.,

      என் பேத்தி நீங்க வந்து பாக்குறதுக்கு முதல் நாள் வீட்ல இருந்தாலும்.., உங்க வீட்டு வேலைக்காரர்கள் தான் சொல்றாங்க.., உண்மையிலே என் பேத்தி வீட்டில் இருந்தாளா இல்ல., உங்க அம்மா கல்யாணத்துக்கு போறதுக்கு முன்னாடியே வீட்டில் நடந்த பிரச்சனைல என் பேத்தியை கொன்னுட்டாங்களா.,

          ஏன்னா நீங்க எல்லாம் வசதி படைத்தவர்கள் பா.., கொலை பண்ணா கூட வெளியே தெரியாமல் மறைத்து விடுவீங்க.., அப்ப என் பேத்தி என்ன ஆனா ன்னு எனக்கு தெரியணும்..,

        இங்க இருந்து நகை பணம் எதுவும், எடுத்துட்டு போகல., என் பேத்தியுடைய பேக் மட்டும்.,  எடுத்துட்டு போய் இருக்கான்னு சொல்றீங்க., ஆபீஸ்ல உள்ளதை மட்டும் தான் எடுத்துட்டு போய் இருக்கான்னு சொல்றீங்க., வேற எதுவுமே எடுத்துட்டு போகலை.,

          அவளோட பழைய சிம்கார்டு கோயம்புத்தூரில் தான் நிக்குதுன்னு சொல்லுறீங்க.,  அப்ப என் பேத்தி எங்கப்பா“., என்று கேட்டார்.

    அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.,  ஒரு நிமிடம் அதிர்ந்து போயிருந்த பிரசாத்.,

       கலாவையும் நித்தியானந்தனையும் பார்க்க.,  அவர்களும் அதிர்ந்து தான் போயிருந்தார்கள்.,

        பின்புபாட்டி எதுவும் நடக்காது.,  தைரியமா இருங்கநான் உங்களுக்கு இரண்டே நாள்ல நல்ல பதில் சொல்றேன்.,  உங்க பேத்தி எங்க இருக்கா ன்றது தெரியாமல்., நான் இந்த தடவை கோயம்புத்தூர் போகல போதுமா..,

    என் பொண்டாட்டி உயிரோட இருக்கானு எனக்கு தெரியும்.., தயவுசெய்து இப்படி சொல்லாதீங்க“.,  என்று கண்கலங்க சொல்லும் போதே அவன் கண்ணிலிருந்து கண்ணீர் கன்னம் தொட்டது.

        “பாட்டியோ எனக்கும் வேதனை தான் ப்பா., என் பேத்தியை பார்க்கலை ன்கிற வேதனை.,  எனக்கு இந்த சந்தேகம் இப்ப கொஞ்ச நாளா இருக்கு., அதனால தான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணனும்னா சொல்லுங்க., பண்ணிருவோம்.

     அந்த நேரத்துல வீட்டிலிருந்தது., உங்க அம்மாவும்.,  உங்க தங்கச்சியும் வீட்டில் இருந்திருக்காங்க., கூட வேலைக்கார அம்மா மட்டும் தான்.,  எல்லாத்தையும் பிடித்து விசாரித்தால் உண்மை தெரிஞ்சிரும்ல“.,  என்று கேட்டார்.

        சுவரை வெறித்த வண்ணம் இருந்த பிரசாத்., “பாட்டி ரெண்டு நாள் டைம் கொடுங்க., சரியான தகவல் எதுவும் கிடைக்கலைனா., நானே போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணுறேன்“., என்று மட்டும் சொன்னவன் வேகமாக எழுந்து அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

      அவன் அறைக்கு சென்றாலும் அவன் கண்ணில் இருந்து வடிந்த கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை., இத்தனை நாள் எங்கேயோ ஒரு இடத்தில் இருக்கிறாள் என்ற நம்பிக்கையில் தான் இருந்தேன்.,
ஆனா பாட்டி இப்படி சொல்றாங்களே.,  என்ற பயம் வந்த பிறகு அவன் இதயம் தாறுமாறாகத் துடிக்க தொடங்கியிருந்தது.

      மனமோ எங்கோ இருக்கிறாள் என்ற நம்பிக்கையோடு கடவுளிடம் வேண்டுதல் வைத்து கொண்டிருந்தது.

    உன் காலடித் தடமும்
    மூச்சுக்காற்றும்
    உன் சுவாசத்தின் வாசமும்
    எங்கோ நீ இருக்கிறாய்
    என்ற நம்பிக்கையில்
    நான் இருக்க.,

    என்னடி விதி இது.,
    இதயத்துடிப்பின் ஓசை
    தாறுமாறாய் எகிரி போகிறது.,
   வெடித்து விடாமல்
    இறுகப் பற்றிக் கொள்கிறேன்.,
    இதயத்துக்குள் இருக்கும்
     உன்னை..,

Advertisement