Advertisement

14

ஒரு முட்டாள் நண்பனுடன் சேர்ந்து வாழ்வதை விட
நீ தனியாக வாழ்வதே சிறந்தது.
புத்தர்


       நாட்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களாகவும் ஓட தொடங்கியிருந்தது.,  கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கடந்த நிலையில் சென்னையில் பிரசாத்தின் அரசியல் வாழ்வு மிகப் பிரகாசமாக ஆகிக்கொண்டிருந்தது.

       பார்ப்பவர்கள் எல்லாம் இருந்தால் அவனைப் போல் ஒரு அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்றும்., அவனைப் போல் யாருமில்லை என்றும்., சொல்லும் அளவிலே அவனது நடவடிக்கை இருக்கத் தொடங்கியிருந்தது.,

       பொதுவாக அவன் தொகுதி மக்கள் என்றில்லாமல்., மக்களுக்கு பொதுவான கோரிக்கைகளை ஆளும் கட்சியில் வைக்க தொடங்கியிருந்தான்.,

          ஆளுங்கட்சியினரின் பதிலடியாகஇதே கேள்விகளை இப்போது நீங்கள் எதிர்க் கட்சியாக இருப்பதால் முதல்வரிடம் தைரியமாக சொல்கிறீர்கள்.,  இது ஒரு குறை என்பது போல.,  ஒருவேளை உங்கள் கட்சி ஆளும் கட்சியாக இருந்தால்.., உங்கள் கட்சி தலைவரிடம் இதுபோல கேள்விகளை முன் வைப்பீர்களா“.,  என்று கேட்டனர்.

         “நிச்சயமாக., உங்களிடமாவது ஒரு விண்ணப்பம் போல கேட்டேன்., எங்கள் தலைவராக இருந்தால் செய்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்து இருப்பேன்., நான் மக்களுக்காக தான் அரசியலுக்கு வந்து இருக்கிறேன்., அது எந்த கட்சியாக இருந்தாலும் கேள்விகளை கேட்கத் தான் செய்வேன்“.,  என்று சொல்லியிருந்தான்.,

        அது மட்டும் இல்லாமல் நல்ல நல்ல திட்டங்களை செயல்படுத்தவும் கேள்விகளை கேட்டவன்.,  மற்றவர்களையும் யோசிக்க வைத்து.,  மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்த வைத்தான்., அதன் மூலம் அவன் பெயர் அரசியலில் தனித்துவம் பெற்று இருந்தது.,

       அப்போது தான் ஒருமுறை பிரபலமான தனியார் செய்தி சேனல் பேட்டிக்காக அவனை தொடர்பு கொண்டனர்.

          மிகுந்த யோசனைக்கு பிறகு சம்மதம் தெரிவிக்க., அன்றைய நேர்காணல் லைவ் ஷோவாக ஒளிப்பரப்ப பட்டது.,

       அவனை பேட்டியாளர் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார்.,

        “சொல்லுங்க பிரசாத் சார்., நீங்க எம்எல்ஏவாக வந்ததுக்கு காரணம் உங்க அப்பாவின் கட்டாயத்தினால இல்லை உங்களுக்கு இருந்த ஆர்வமா“.,? என்று கேட்டார்.

        “என்னோட அப்பா எம்பி என்பது எல்லாருக்கும் தெரியும்., சின்ன வயசிலிருந்தே  அரசியல் சூழ்நிலையில் வளர்ந்ததாலோ என்னவோ தெரியல.,  எனக்கு அரசியல் மேல ஈடுபாடு உண்டு.,  அது மட்டும் இல்லாம எந்த இடத்துல நம்ம இருந்தாலும்., நம்ம மக்களுக்காக என்ன செய்யலாம் ன்னு தான் இதுவரைக்கும் நான் யோசித்திருக்கிறேன்., மற்றவற்றை பற்றி யோசித்தது கிடையாது., அது மட்டுமில்லாமல் நினைத்ததை செயல்படுத்தனும் அப்படின்னு நினைத்திருந்தேன்., அதை இப்போ செய்யவும் செய்கிறேன்“., என்று சொன்னான்.

        உங்களது பெயர் கிட்டத்தட்ட ஒரு நல்ல அரசியல் சூழலில் பிரபலப்படுத்த பட்டு கொண்டிருக்கிறது., அதுமட்டுமல்லாமல்., மற்றவர்கள் உங்களை உதாரணமாக சொல்லும் அளவிற்கு நல்ல பெயர் பெற்று இருக்கிறீர்கள்., இதைப் பற்றி தாங்கள் சொல்ல நினைப்பது என்ன“.,? என்று பத்திரிகையாளர் கேட்டார்.

             இவனோஇதை எப்படி சொல்றதுன்னு தெரியல.,  ஆனா என்னோட வைஃப் க்கு அரசியல் பிடிக்காது., என்னை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே அவங்க என்கிட்ட சொன்னது.,  எனக்கு அரசியல் பிடிக்காது ன்னு தான்., கரெக்டா எலக்சனுக்கு முன்னாடி தான் என்னோட கல்யாணம் நடந்துச்சு., அப்போ நான் என்னோட ஒய்ஃப் வாக்கு கொடுத்து இருந்தேன்., கண்டிப்பா நல்ல அரசியல் வாதியாக இருப்பேன் அப்படின்னு., வெளியே மக்கள் ட்ட ஒரு தவறான பிம்பம் பதிஞ்சி போய் இருக்கு.,  அரசியல்வாதி னா  இப்படித்தான் இருப்பாங்இ அப்படின்னு ஒரு முத்திரை குத்தி வச்சிருக்காங்க., அதை மாற்றி காட்டுகிறேன் அப்படின்னு சொன்னேன்.., அதை தான் இப்பவும் செஞ்சிட்டு இருக்கேன்“.,  என்று சொன்னான்.

          அதைக் கேட்ட பத்திரிக்கையாளர்பிரசாத் சார் உங்க கிட்ட  இன்னொரு கேள்வி.,  இப்ப வரைக்கும் நிறைய பேர் மக்களுக்கு நல்லது செய்யணும் அப்படின்னு சொல்லி தான்.,  அவங்களுக்கு லாபம் சம்பாதிக்க பார்க்கிறாங்க.,  ஆனால் இந்த நிமிஷம் வரைக்கும் நீங்க எந்த பிராப்ர்ட்டியும் வாங்கின மாதிரி தெரியல., உங்க பேர்ல வேற எந்த சொத்தும் இருக்குற மாதிரி தெரியல., பரம்பரையா இருக்குற உங்க சொத்துக்கள்  தவிர எனக்கு தெரிஞ்சு நீங்க வேற சொத்துக்களை வாங்கின மாதிரி தெரியலையே.,  ஏன் மற்ற அரசியல்வாதிகள் மாதிரி சொத்து சேர்க்கணும்னு எண்ணம் இல்லையா.,  இல்ல உங்களுக்கு பரம்பரை  பணம் இருக்கிறதால., அந்த என்னம்மா“.,? என்று கேட்டார்.

        அப்பாவோட சொத்து எப்படியும் அவருடைய பிள்ளைகளுக்கு தான்., அது மட்டும் இல்லாம அப்பாவோட சொத்து நான் ரொம்ப எதிர்பார்க்கவும் இல்லை.,  அது அப்பாவோட பரம்பரையே சொத்து பற்றி பேச தயாரில்லை.,  அப்பாக்கு நான் மட்டும் பிள்ளை இல்ல.,  மூணு பேர் இருக்கிறோம்.., அதுமட்டுமில்லாம பிசினஸ் இருக்கு.,  நான் அரசியலுக்கு வரலை என்றால் கண்டிப்பாக பிசினஸ் தான் பார்த்திருப்பேன்., அது மட்டுமில்லாம மக்களுக்கு சேவை செய்ய தான் இங்கே வந்திருக்கேன்.,  எனக்கு சொத்து சேர்க்க வரலை.,  எனக்கு கவர்மெண்ட் சம்பளம் கொடுக்கும்.,  அரசியல் விட்டு போனாலும் பென்ஷன் கொடுக்குது.., இது போதும் ன்னு நினைக்கிறேன்.

    அது மட்டுமில்லாம என் மனைவி ஐடி பீல்டு வொர்க் பண்றாங்க., அவங்களோட சலரி இருக்கு.., எங்க ரெண்டு பேரோட சம்பளம் எங்க குடும்பத்துக்கு தாராளம்“.,  என்று சொன்னான்.

       “சார் நீங்க ஒரு அரசியல்வாதியா இல்லாம.,  ஒரு பிசினஸ்மேனாய் இருந்திருந்தா கூட உங்களால் சென்னையில் வீடு வாங்க முடியும்.,  ஆனால் ஏன் சார் சென்னையில் வீடு வாங்கல., இன்னும் வாடகை வீட்டில் தான் இருக்குறீங்க“., என்று கேட்டார்.

            “அது தான் நல்லது நினைக்கிறேன்.,  ஒரு வேளை வீடு வாங்கணும் அப்படின்னு நினைச்சா.,  நானும் என்னோட  வொய்ப் ம்  ஹோம் லோன் போட்டு வாங்குறோம்., மத்தபடி அப்பா சொத்துல கை வைக்கிற அளவிற்கு நான் ஒன்னும் வேலை வெட்டி இல்லாதவன் இல்லையே.,  சோ பார்த்துக்கலாம்“., என்று சொன்னான்.

        “சார்., இது வரைக்கும் உங்க மனைவிய நீங்க எந்த இடத்திலேயும் யாருக்கும் காட்டலை., உங்க திருமணத்துக்கு முன்னாடியே நீங்க சொன்னது., அவளுக்கு ன்னு ஒரு ப்ரைவஸி  வேனும்., அவளை  எந்த இடத்திலேயும் மனைவின்னு காட்டமாட்டேன் சொல்லிருந்தீங்கஇப்பவும் இதுவரைக்கும் நீங்க காட்டல.,  இது பத்தி வேற ஏதாவது“.,? என்று இழுத்த படி கேட்டார்.

         அவளுக்கு எந்த இடத்திலேயும் இன்னாருடைய மனைவி அப்படிங்கிறதால.,  எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது., சாதாரண ஒரு மனுஷியா நிம்மதியா வாழனும் ன்னு., நான் எதிர்பார்க்கிறேன் அதனால தான் இதுவரைக்கும்  அறிமுகப்படுத்தலை.,  ஒரு வேளை அவள் ஆசைப்பட்டு நான் பிரசாத் வொய்ப் தான் அப்படின்னு சொல்ல  நினைச்சா மட்டும் தான் மத்தவங்களுக்கு காட்டித் தருவேன்“. என்றான்.

       “சார் இப்பவே உங்களை எல்லாரும் அரசியல் சுத்தமான நல்ல மனிதன்., மக்களுக்கு உண்மையா செய்யுறவர் ன்னு சொல்றாங்க.,  ஒருவேளை அடுத்த முறை உங்க கட்சி ஆளும் கட்சியாக மாறினா உங்களுக்கான நிலை என்னவா இருக்கும்னு எதிர்பார்க்கிறீர்கள்“., என்று கேட்டார்.

            “நீங்க வேற ஏன் சார்., நான் நானா இருந்துட்டு போறேன்.., நான் இங்க வந்ததே மக்களுக்கு நல்லது செய்ய தான்.,  வேற எதுக்கும் வரல., அவங்க அவங்களுக்கு என்ன தோணுதோ அதை செய்யட்டும்., நம்மளை நம்பி ஓட்டு போட்டவங்களை ஏமாற்ற கூடாது., அது ஒன்னு தான்., எனக்காக என்னை நம்பி ஓட்டு போட்டவங்க.,  நான் நல்லது செய்வேன் நெனச்சி தான் ஓட்டுப் போட்டாங்க.., சோ  அதை இப்ப வரைக்கும் காப்பாத்துறேன்.,  இனிமேலும் காப்பாத்துவேன்“., என்றவன்இதோட முடிச்சுக்கலாம்“., என்று கேட்டுக்கொண்டே எழுந்து கொண்டான்.

    “சார் ஒரே ஒரு கேள்வி ப்ளீஸ்“., என்று நிறுத்தியவன்., “சார் நெக்ஸ்ட் எலெக்ஸன் க்கே  உங்களோட வெற்றி கண்முன்னே தெரியுற மாதிரி அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கு“., என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே  குறுக்கிட்டவன்

         சிரித்தபடியே., “ஜெயித்தாலும் இப்படியே தான் இருப்பேன்ஒரு வேளை ஜெயிக்கலை னா ஹவுஸ் ஹஸ்பென்ட் போஸ்ட் ஏற்கனவே ரெடியா தான் இருக்கு“., என்று கண்சிமிட்டிய படி கூறியவன் வணக்கம் சொன்னபடி அங்கிருந்து விலகினான்.

         ஒரு பெருமூச்சோடு அங்கிருந்து வெளியேறியவனுக்கு ஹேமாவின் நினைவு மனதை உறுத்தியது., ‘காலங்கள் கடந்து கொண்டே இருக்க.,அவளின் காலடி சுவடின் அடையாளம் கூட தெரியாமல்., எப்படி இப்படி இருக்கிறேன்என்று யோசித்துக் கொண்டான்.

         டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் தேடிக் கொண்டு தான் இருக்கிறான்., பெங்களூர் வரை ஐபி அட்ரஸ் காட்டுது வேறு எங்கும் அவளுடைய லேப்டாப் ல்  ஐபி அட்ரஸ் காட்டவில்லை.,அவளுடைய போனும் அதன் பிறகு உபயோகிக்கவில்லை.,

        அவள் தோழிகளை தொடர்பு கொள்ளலாம் என்று எதிர்பார்த்தால் தோழிகளின் போன் நம்பருக்கு எந்த போனும் இதுவரை வந்தது போல தெரியவில்லை., அவள் தொடர்பில் இருந்த எல்லாருடைய போனும் டிடெக்டிவ் மூலம் பின்பற்றப்பட்டு கொண்டு தான் இருக்கிறது.,  ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று தேடி தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.,ஆனால் இருக்கும் தடம் எதுவுமே தெரியாத போது அவர்கள் என்ன செய்வார்கள்., அவர்களுக்கு இதுவரை போன் வரவில்லை எனும் போது என்ன செய்ய., அலுவலகத்தில் வேலையை ரிசைன் செய்து விட்டதால் இந்த அலுவலகத்திற்கும் அவளுடைய தகவல்கள் எதுவும் தெரிய வருவதில்லை.,  எப்படி கண்டுபிடிக்கலாம் என்ற எண்ணத்தோடு அலைந்து கொண்டிருந்தான்.

          அந்த வாரம் எப்படியும் அவன் கோயம்புத்தூர் செல்ல வேண்டும்., தான் தங்கியிருந்த  வீட்டிற்கு வந்தவன் தன்னை நிலை இழக்க செய்து கொண்டு இருக்கும் அவள் நினைவுகளோடு எப்போதும் போல  மற்ற வேலைகளையும் கவனிக்க தொடங்கியிருந்தான்.

             கோயம்புத்தூரில் பிரசாத்தின் பேட்டியை பார்த்துக் கொண்டிருந்த இரு குடும்பத்தாரின் மனநிலையும் வேறு வேறு மாதிரி இருந்தது.,

      பிரசாத்தின் குடும்பத்திலோ அவன் அம்மாஉங்க பிள்ளை அரசியலில் நல்ல பெயர் வாங்கி விடுவான்., ஆனால் ஐந்து காசுக்கு பிரயோஜனமில்லை., இவன எலெக்ஸன் க்காக எவ்வளவு செலவு பண்ணுனீங்க., எல்லோரும் போட்ட காசை எடுக்க தான் பார்ப்பாங்க., இவன் என்னென்ன மக்களுக்கு நல்ல செய்யுறேன் ன்னு.,  நம்ம வீட்ல இருப்பதையும் பிடுங்கி கொடுத்திடுவான் போல“., என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

      தயாளன் தான்.,  “உன் வேலை எதுவோ., அத மட்டும் பாரு அவன் வீட்டிலிருந்து அஞ்சு பைசா கூட எடுக்க மாட்டான்., கவர்மெண்ட் இருந்து கேட்டு  வாங்கி., கவர்மெண்ட் கொடுக்கிற உதவித்தொகையை வைத்து தான் செஞ்சுகிட்டு இருக்கான்., அவன் எலக்சன்ல ஜெயிச்சு உடனேயே நம்ம கைல இருந்து போட்ட காசை அவங்க கட்சித் தலைவர் குடுத்துட்டாரு., அது மட்டுமில்லாம இப்ப நல்ல பெயர் வாங்கி இருக்கிறது அவங்க கட்சிக்கே பெருமை சேர்க்கும் விஷயமா இருக்குன்னு போன  வாரம் கூட மெனக்கெட்டு போன் பண்ணி பாராட்டினார்., அப்படி இருக்கும் போது தேவை இல்லாத விசயங்களை பேசி., டென்ஷன் பண்ணாத.., அவன் வரும்போது இந்த மாதிரி பேசி வைத்து அவன் கிட்ட திட்டு வாங்காதே“., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

        நித்தியானந்தன் கலாவோடு அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தான்.,

            “நீயும் பிசினஸ் கணக்கு வழக்கெல்லாம் கரெக்ட்டா வச்சிருக்கியா., அவன் பக்கை வாங்கி மக்களுக்கு நல்லது செய்யுறேன் நல்ல பேரு வாங்குறேன்னு வாரி இறைச்சிட்டு போயிறாம“., என்று சொன்னார் சொர்ணம்.

        அவனோஎனக்கு தெரியும் மா., என் தம்பி செய்றதெல்லாம் நல்லதுக்கு தான்.,  வாழ்க்கையில் பணம் மட்டும் போதாது., நிம்மதி வேணும் மனுஷனுக்கு., அவனை  வாழ்க்கையில் நிம்மதியா இருக்க விடாமல் பண்ணிட்டு.,  இப்ப பணத்தை பற்றி வேற பேசுறீங்களா., அதை   பேசுவதற்கு உங்களுக்கு உரிமையே கிடையாது.,

   இந்த பணம் ஃபுல்லா அப்பாவோட அப்பா சம்பாதித்தது., அதை அப்பா பெருக்கினாரு., அப்பாக்கிட்ட இருந்து  நாங்க வாங்கி பெருக்கிட்டு இருக்கோம்.,  நீங்க ஒன்னும் உங்க அப்பா வீட்டில் இருந்து கொண்டு வந்து கொட்டலை தானே., அதனால தேவையில்லாமல் பேசாதீங்க., உங்களுக்கும் கலாக்கும் இந்த சொத்து பத்தி பேசுறதுக்கு எந்த ரைட் ம் கிடையாது“., என்று சொன்னான்.

       சொர்ணமும்ஓஹோ அப்படி போறியா நீ., அப்ப இந்த சொத்து பத்தி பேசுறதுக்கு பானுக்கு உரிமை இருக்கு இல்ல. பானு கேட்கலாம் இல்லை“.,என்று சொன்னார்.

       “எங்க அவளை வந்து என்கிட்ட பேச சொல்லுங்க.., இந்த ஒன்றரை வருஷத்துல இங்கே வராமல் இருக்கா ஏன்னு தெரியுமா.,  ட்ரீட்மெண்ட் எடுக்க வரலைன்னு நீங்க நினைச்சு சொல்லுவீங்க.,  வெளியே இருக்குறவங்களுக்கு தெரியும்., இங்க வந்தா னா கண்டிப்பா என் ட்ட ரைடு வாங்குவா ன்னு., அதேநேரம் பிரசாத் அறையவே செய்வான்., அந்த அளவுக்கு எல்லாரும் கோபத்தில் இருக்கோம்.,  அதனால தான் வரல.,

      அது மட்டும் இல்லாம அவ மாப்பிள்ளை கிட்ட விஷயத்தை சொல்லியாச்சு., அதனால தான்  மாப்பிள்ளை போககூடாது ன்னு சொல்லி வச்சு இருக்காரு., ஏன் தம்பி பொண்டாட்டிய  விரட்டினது பத்தாதா.,  உன் அண்ணன் பொண்டாட்டியும் விரட்ட போறியா ன்னு., கேட்டு தான் பிடித்து வீட்டுக்குள்ளேயே வச்சிருக்காரு.,  என்னமோ ட்ரீட்மென்ட் எடுத்து இருக்கு., அதனால வரல ன்னு நீங்க சொன்னா.,  நாங்க நம்பி விடுவோமா“.., என்று கேட்டான். சொர்ணத்தின் முகம் தான் அஷ்ட கோணல் ஆகியது.

     அங்கு ஹேமா வீட்டிலோ பாட்டி புலம்ப தொடங்கினார்.,

       எப்பவும்போல கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக அவர்கள் வீட்டில் நடக்கும் தினப்படி நிகழ்வு இதுதான்.,

       “எத்தன தடவ சொன்னேன்.,   பொண்ண வசதியான இடத்தில் கொடுக்க வேண்டாம்., நமக்கு தகுந்தாற் போல மாப்பிள்ளை பாரு ன்னு எத்தனை தடவ சொல்லியிருக்கேன்., சொன்னதை கேட்டியா..,  அவசர அவசரமா ஊர்ல உலகத்துல இல்லாத மாப்பிள்ளை கிடைத்துவிட்டான் ன்னு தூக்கி கொடுத்த.,  இப்ப என்ன ஆச்சு காணாம போனது நம்ம பிள்ளை தானே.,  நம்ம பிள்ளை எங்க இருக்கான்னு இதுவரைக்கும் எந்த தகவலும் இல்லை அதைப்பற்றி கொஞ்சமாவது யோசிச்சியா“., என்று கேட்டார் பாட்டி.

      வினோத்தோ., “பாட்டி தேவையில்லாம புலம்பாதிங்க.,  உங்ககிட்ட நானும் இது தினமும் சொல்வது தான்., நீங்களும் தினம் இது தான் சொல்றீங்க.,  நான் தான் சொல்றேன்ல., அவ கண்டிப்பா ஏதோ ஒரு இடத்தில் பத்திரமா இருக்கா.,  இல்ல னா., இதுகுள்ள ஏதாவது தகவல் வந்திருக்கும்.,  அவ பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி இருப்பா., அவ நல்லா இருக்கானு எனக்கு நம்பிக்கை இருக்கு“.,  என்றவன்.,

       “பெங்களூரில் இருந்து தான் அவ வேலை வேண்டாம்ன்னு ரிசைனிங் லெட்டர் அங்கிருந்து அனுப்பி இருக்கா.,  மாப்ளை எல்லாத்தையும் கண்டு பிடிச்சாச்சி.,  அவ கோயம்புத்தூர்ல தான் பழைய சிம்மை தூரப் போட்டிருக்கா.,  பெங்களூரில் போய் ரிசைனிங் லெட்டர் அனுப்பி இருக்கா.,

        பத்தாததுக்கு அவர் ஃபிரண்ட்ஸ் ட்ட கடைசியா பேசினது., அவ கிளம்புவதற்கு முதல் நாள் பேசியிருக்கா., அப்பவும் நார்மலா தான் பேசி இருக்கா.,  வீட்டில் உள்ள எந்த பிரச்சினையும் சொல்லல..

      அப்படி எதுவும் னா  வீட்டிலுள்ள ஆட்கள் கிட்ட சொல்லி இருப்பா.,  அது மட்டுமில்லாம ஹேமா அந்த அளவுக்கு போற பொண்ணு எல்லாம் கிடையாது.., வேணும்னே கூட பண்ணலாம்.., அவளுக்கு வேண்டான்னு சொன்ன கல்யாணத்தை இங்க எல்லாரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி பண்ணி வச்ச., அந்த கோபம் கூட அவளுக்கு இருக்கும்.,

        அதனால கூட தள்ளி இருக்கலாம்.,  மாப்பிள்ளை மேலேயும் ஏதாவது கோபத்தில் கூட இருக்கலாம்.,அதான் சொல்லி இருக்காங்களே.,

         

Advertisement